PDA

View Full Version : அகர வரிசையில் அன்பு காதலிக்கு...



க.கமலக்கண்ணன்
24-03-2009, 12:10 PM
அன்பே உன் காண
ஆயிரம் கோடி கண்கள் வேண்டுமடி
இத்தனை அழகை படைத்த இறைவன்
ஈடு இல்லா அறிவையும் புத்தியையும் அளித்து
உலகை வலம் வர வைத்து
ஊடாக என்ன புண்ணியம் செய்தேனோ
என்னையும் சேர்த்து அன்பால்
ஏற்று மறக்க முடியாத வாழ்க்கை என்பதில்
ஐயம் இல்லையடி பெண்ணே
ஒப்பில்லா உன்னை இந்த வாழ்க்கையில் வண்ண
ஓவியமாய் இணைத்திட்ட கடவுளுக்கு
ஒளவ்வையின் அழகுத் தமிழில்
அஃகஞ் சுருக்கமாக நன்றியுடன்

பா.ராஜேஷ்
24-03-2009, 01:10 PM
அருமை நண்பரே!
ஆரம்பம் முதலே
இனிமையும்
ஈர்ப்பும்
உடைய
ஊரை
எளிதில்
ஏற்க வைக்கும் கவிதை என்பதில்
ஐயம் இல்லை!
ஒவ்வொருவரும் இதை
ஓதி
ஔவ்வை தமிழில் உங்களை வாழ்த்துவர்
அஃதே எனது வாழ்த்துக்களும் ;)

க.கமலக்கண்ணன்
25-03-2009, 08:24 AM
நன்றி பா. ராஜேஷ் உங்களுக்கு... அருமையாக அசத்தி விட்டடீர்கள்...

பரஞ்சோதி
25-03-2009, 11:18 AM
கமலக்கண்ணன் ஒருமுடிவோடு தான் கவிதை எழுதியிருக்கீங்க.

நல்லா இருக்குதுல்ல, நாங்களும் ரசித்தோம்.

சுகந்தப்ரீதன்
25-03-2009, 12:25 PM
ஆமாம்... கமலண்ணா.. இந்த கவிதையை அண்ணிக்கிட்ட காட்டுனீங்களா இல்லியா...??:fragend005:

உங்களோட ட்ரேட்மார்க் அகரவரிசையில் காதலையும் இல்லறத்தையும் அழகா இணைச்சி கவிதையில கலக்கிட்டீங்க.... வாழ்த்துக்கள்...!!:icon_b:

க.கமலக்கண்ணன்
25-03-2009, 12:40 PM
ஒருமுடிவோடு தான் கவிதை எழுதியிருக்கீங்க.


ஆமாம் பரஞ்சோதி நீங்கள் ரசித்தமைக்கும் நன்றி...


ஆமாம்... கமலண்ணா.. இந்த கவிதையை அண்ணிக்கிட்ட காட்டுனீங்களா இல்லியா...??:fragend005:

காட்டினேன் சுகந்தப்ரீத்தன் அன்பு பரிசாக நிறைய முத்தங்கள் கிடைத்தது...

ஜாக்
25-03-2009, 12:49 PM
மிக அருமையாக எழுதி இருக்கிங்க:) உங்களை போலவே அகர வரியில் பின்னூட்டம் போட முயற்ச்சித்தேன் ம்ஹும் முடியல:mini023:

உங்கள் திறமைக்கு எனது பாராட்டுகள்:)

க.கமலக்கண்ணன்
25-03-2009, 03:04 PM
மிக்க நன்றி ஜாக் உங்களின் பாராட்டுக்களுக்கு....