PDA

View Full Version : உலக கவிதை தினம்... உங்களுக்காக..!



ஆதி
24-03-2009, 02:56 AM
மனிதனிடம் மனிதம் தழைத்தோங்க வழிவகை செய்வதில் இலக்கியத்துக்குப் பெரும் பங்கு உண்டு. அதிலே, அழகியல் மிகுந்து காணப்படும் கவிதையே முன்னிலை வகிக்கிறது என்பது பலரது கருத்து.

ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 21-ம் நாளில் 'உலக கவிதை தினம்' அனுசரிக்கப்படுகிறது.

ஐக்கிய நாடுகளின் அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பான யுனெஸ்கோ நிறுவனத்தால் 1999-ம் ஆண்டில் அறிவிக்கப்பட்டு, உலக நாடுகள் முழுவதும் இந்த உன்னத தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

கவிதைகளைப் படித்தல், படைத்தல், பயிற்றுவித்தல் ஆகியவற்றை ஊக்குவிக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளதே 'உலக கவிதை தினம்'

இந்த தினத்தை முன்னிட்டு யூத்ஃபுல் விகடன் இணைய இதழில் கடந்த ஒரு மாத காலமாக வெளியான கவிதைகளில் குறிப்பிடத்தக்க வரவேற்பைப் பெற்ற படைப்புகளை தேர்ந்தெடுத்து இங்கே உங்கள் பார்வைக்கு வைப்பதில் மகிழ்ச்சி கொள்கிறோம்.

யூத்ஃபுல் விகடன் இணைய இதழுக்கு தொடர்ந்து தங்களது ஆக்கங்களை அனுப்பி வரும் படைப்பாளிகளுக்கும், அவற்றைப் படித்து இன்புறும் வாசகர்களுக்கும் இனிய கவிதை தின வாழ்த்துகள்..!

(முன் குறிப்பு : வசதிக்கேற்பவே தொகுக்கப்பட்டுள்ளதே தவிர, தரநிலையில் அடிப்படையில் அல்ல; அனைத்து படைப்புகளும் சிறந்தவையே!)

1 கைராசிக்காரி
2 முதல் வாசனை
3 வல்லமை தாராயோ!
4 வாழ்க்கை வியப்பானதே..!
5 ஜெய் ஹோ...
6 நான்
7 உனக்கென மட்டும் - ஷெரிப்
8 கவிஞனாக்கிவிட்டாயடி பாவி.. - ஆதவா
9 உன் முத்தத்தின் ஈரத்தில்...
10 பழைய பேப்பர்காரன்
11 ஈழத் தாலாட்டு
12 கவிதை 'கண்ணாமூச்சி'...!!
13 பிரிதலின் நிறங்கள்
14 பெண்ணென்றால்...
15 காதல்... காதல்... காதல்...
16 நடு நிலைக்காதல் - ஆதி
17 இன்னொரு கரை...
18 என்று வருவான்?
19 கற்றதும் மறந்ததும்
20 கருப்பு வெள்ளை நினைவலைகள்...
21 ஏன் இந்த மாற்றம் என்னுள்ளே:)
22 எண்ணங்களின் பயணத்தில்....
23 கிராமம் தேடி
24 ஒரு மழைத்துளியின் போராட்டம்..
25 வெயிலில் வழிந்த காதல்..
26 காதலினால் தோற்றுப் போகும் காதல்

நன்றி:யூத்ஃபுல்.விகடன்.காம் (http://youthful.vikatan.com/youth/poetryday21032009.asp)

இந்த பட்டியலில் நம் மன்ற நண்பர்கள் ஆதவா, ஷெரிப் மற்றும் என்னுடைய கவிதையும் இடம் பெற்றிருக்கிறது என்பதை மகிழ்ச்சியோ தங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்..

ஆதவா மற்றும் ஷெரிப் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்..

samuthraselvam
24-03-2009, 03:51 AM
ஆதி, ஆதவா, ஷெரிப் மற்றும் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்..

மதி
24-03-2009, 04:27 AM
அனைவருக்கும் வாழ்த்துகள்.

ஜாக்
24-03-2009, 04:42 AM
நண்பர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்:icon_b:


ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 21-ம் நாளில் 'உலக கவிதை தினம்' அனுசரிக்கப்படுகிறது
இந்த விஷயம் இதுவரை எனக்கு தெரியாது ஒரு புதிய விஷயத்தை உங்கள் மூலமாக இன்று கற்று கொண்டேன் நன்றிகள் பல*

M.Rishan Shareef
24-03-2009, 06:25 AM
வாழ்த்துக்களைத் தெரிவித்த அனைத்து நண்பர்களுக்கும் எனது நன்றிகள் !
இதனை இங்கு பகிர்ந்துகொண்டவரும் விகடனில் தொடர்ந்து எழுதிவருபவர்களான கவிஞர் ஆதி மற்றும் கவிஞர் ஆதவா அவர்களுக்கும் இனிய வாழ்த்துக்கள் !

என்றும் அன்புடன்,
எம்.ரிஷான் ஷெரிப்

பாரதி
24-03-2009, 07:28 AM
ஆதி, ஆதவா, ரிஷான் ஷெரீப் ஆகியோருக்கும் யூத்ஃபுல் விகடனில் இடம்பெற்ற அனைத்து கலைஞர்களுக்கும் இனிய வாழ்த்துகளும் பாராட்டுகளும். உங்களின் படைப்புகள் பரந்த தளத்திலும் காண்பதைக் கண்டு மகிழ்கிறேன்.

அமரன்
24-03-2009, 08:33 AM
வாழ்த்துக்கள் மன்றம் தந்த சொந்தங்களே. பட்டியலில் இடம்பிடித்த கவிகளும் என் வாழ்த்து மாலை.

உங்கள் தோள்கள் சுமக்கும் மாலைகள் இன்னும் அதிகமாகட்டும்

சிவா.ஜி
24-03-2009, 09:08 AM
பட்டியலில் இடம் பிடித்த நம் மன்ற கவிஞர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். இன்னும் பல உயரங்களை எட்டுவீர்கள் என உறுதியாக நம்புகிறேன்.

பூமகள்
24-03-2009, 10:53 AM
யூத்ஃபுல் விகடனின் பெரும் கவிஞர் சோலையில் முத்துகளாகத் தேர்வானவர்கள் அனைவருக்கும் பாராட்டுகள்.. மேன்மேலும் பெருமை சேர்க்க வாழ்த்துகள்...!!


பகிர்ந்தமைக்கு நன்றிகள் ஆதி... சிறப்பு பாராட்டுகள் ஆதி..! நடு நிலைக்காதல் நன்றாக இருந்தது..

ஷெரிப் மற்றும் ஆதவாவின் கவிதையும் மனம் தொட்டது... பாராட்டுகள்..!

ஆதவா
25-04-2009, 06:33 PM
என்ன கொடுமை இது!!! இப்பொழுதுதான் பார்க்கிறேன்.. (நன்றி ஆதி!!)

நான் அனுப்பியது முதலும் கடைசியுமான கவிதை!!! (அதுக்கப்பறம் அவங்களே நம்மளை தேட ஆரம்பிச்சிட்டாங்க ஹா ஹா)

எப்படியோ வந்ததில் மகிழ்ச்சி!! (என்னைப் பொறுத்தவரையில் அக்கவிதையில் அப்படியொன்றும் பிரமாதமில்லை)


நடுநிலைக்காதலும், உனக்கென மட்டும் உம் சிறப்பானது... வாழ்த்துக்கள் நண்பர்களே!!

Tamilmagal
25-04-2009, 10:35 PM
அனைவருக்கும் எனது வாழ்த்துக்களும் பாராட்டிக்களும்.

கா.ரமேஷ்
27-04-2009, 08:37 AM
வாழ்த்துக்கள் தோழர்களே..!

kavitha
04-05-2009, 09:19 AM
மன்ற நண்பர்களின் பங்களிப்புகளுக்கு பாராட்டுகள்