PDA

View Full Version : சிறுகதைகளை ஒலி வடிவில் தரரங்கராஜன்
23-03-2009, 04:56 PM
வணக்கம் நிர்வாகிகளே

ரொம்ப நாளாய் இந்த விஷயத்தை பதிக்க வேண்டும் என்று இருந்தேன், நம் மன்றத்தில் ஒலி கோப்புகள் ஒலிக்க தனி ப்ளேயர் வசதி கிடையாது என்று நினைக்கிறேன். யூ டியுபில் ஒலி கோப்புகளை ஏற்றி அதில் கேட்கும் வசதிகள் இருந்தாலும், ஒலி கோப்புகளுக்கு என்று இருக்கின்ற ப்ளேயர்கள் இருந்தால், அதே இடத்தில் கோப்புகளை கேட்டு மகிழலாமே. நல்ல பாடல்கள், இலக்கிய சொற்பொழிவுகள், அறிஞர்களில் பேச்சுகள், காமெடி நாடகங்கள் போன்றவற்றை கேட்டு மகிழலாமே.

அதுவும் இல்லாமல் நான் சிறுகதைகளை ஒலி வடிவில் மன்றத்தில் பதிக்கலாம் என்று யோசித்து இருக்கிறேன். கதைகளில் காட்சிக்கு ஏற்றார் போல பின்னனி இசை சேர்த்து தந்தால், சிறுகதை ஒரு புதிய வடிவம் பெறும் என்ற நம்பிக்கையில். நம் மன்ற உறவுகளுக்கும் இது ஒரு புதுவிதமான அனுபவத்தை தரும் தானே.

அதற்கு மன்றத்தில் ஒலி ப்ளேயர் வசதி இருந்தால் அந்த திரியிலே, சிறுகதையை கேட்டு மகிழலாம், சுட்டியை தந்து வேறு இடத்தில் கேட்பதை விட இது நன்றாக இருக்கும்.

இலவச ப்ளேயர் இந்த தளத்தில் கிடைக்கும்

http://www.mixpod.com/

மன்ற உறவுகளின் மேலான கருத்துகளை எதிர்பாக்கிறேன்

நன்றி

அக்னி
23-03-2009, 06:41 PM
மன்றத்திற் கேட்டு மகிழ்வது தனிச் சுகம்தான்.
நடைமுறைச் சாத்தியங்களை நிர்வாகிதான் ஆராயவேண்டும்.

கூடவே, mp3 வடிவிலும் இருப்பது இன்னும் சிறப்பாக இருக்கும் என நினைக்கின்றேன்.
வேறு யாருக்கேனும் பதிவு செய்து கொடுத்து மகிழ இலகுவாக இருக்கும்.

அறிஞர்
24-03-2009, 12:56 PM
தகவலுக்கு நன்றி மூர்த்தி... விரைவில் அமல்படுத்த முயற்சிக்கிறோம்.

அமரன்
24-03-2009, 03:33 PM
முழு உழைப்பும் அன்புரசிகனுடையது.


முதலில் http://www.4shared.com தளத்தில் இலவச கணக்கொன்றை ஆரம்பியுங்கள்... அவர்கள் 5 GB அளவுள்ள கணக்கொன்று தருவார்கள். பின்னர் அந்த தளத்தில் உங்களது ஒலிக்கோவையை ஏற்றுங்கள்...
பின்னர்..................

http://i701.photobucket.com/albums/ww12/anburasihan/Mantram/addmusic/addmusic1.jpg
படம் 1


http://i701.photobucket.com/albums/ww12/anburasihan/Mantram/addmusic/addmusic2.jpg
படம் 2


http://i701.photobucket.com/albums/ww12/anburasihan/Mantram/addmusic/addmusic3.jpg
படம் 3


http://i701.photobucket.com/albums/ww12/anburasihan/Mantram/addmusic/addmusic4.jpg
படம் 4


படம் 1 ல் பச்சை வட்டத்தினால் காட்டப்பட்டதை சொடுக்கினால் படம் 2 ல் உள்ள பக்கத்திற்கு செல்லும். அங்கு play tab ல் கீழே உள்ளதில் Embed ற்கு கீழுள்ளவ codes ஐ கொப்பி பண்ணவும். அதனை Note pad ல் பிரட்டிவிட்டு (படம் 3) அங்கு தெரிவுசெய்யப்பட்டவற்றை மீண்டும் அள்ளிக்கொள்ளவும். (preview.mp3 வரை). பின்னர் நம் மன்றில்
<அள்ளிய சுட்டி> காட்டப்பட்ட வாறு பிரட்டி கேட்டுமகிழலாம்...


http://dc128.4shared.com/img/94686546/f27ce897/dlink__2Fdownload_2F94686546_2Ff27ce897_2FTamilBeatCom_5F-_5FChinnamma_5FChila.mp3_3Ftsid_3D20090324-092025-e180e962/preview.mp3


http://dc127.4shared.com/img/94711746/aa63b594/dlink__2Fdownload_2F94711746_2Faa63b594_2FAdiyae_5FKolluthae.mp3_3Ftsid_3D20090324-112612-33681749/preview.mp3

ரங்கராஜன்
24-03-2009, 03:55 PM
ஆஹா சூப்பர் தலைவா

ரொம்ப ரொம்ப நன்றிப்பா, ரொம்ப நாளாய் இது எப்படினு தெரியாமல் தவித்துக் கொண்டு இருந்தேன்,,,,,,,,,,,,,, விரைந்து வந்து விவரம் கொடுத்தற்கு நன்றிகள் கோடி................ உங்கள் புண்ணியத்தால் விரைவில் ஒரு ஒலி வடிவிலான சிறுகதை நம் மன்றத்தில் ஒலிக்கப் போகிறது.

நன்றி அன்புரசிகன், நன்றி அமரன்

subashinii
24-03-2009, 04:17 PM
புது தகவல்கள்... நன்றி அன்புரசிகன் அவர்களே..

SathyaThirunavukkarasu
24-03-2009, 04:48 PM
நல்ல தகவல் மிக்க நன்றி அபடியெ கேட்க முடிகிறது அதை download செய்து பாதுகாக்க முடியுமா? தயவு செய்து விபரம் தெரிந்தவர்கள் தெரிவிக்கவும்
நன்றி

ரங்கராஜன்
24-03-2009, 04:55 PM
நல்ல தகவல் மிக்க நன்றி அபடியெ கேட்க முடிகிறது அதை download செய்து பாதுகாக்க முடியுமா? தயவு செய்து விபரம் தெரிந்தவர்கள் தெரிவிக்கவும்
நன்றி


அந்த sound file ஐ உருவாக்கியவர் அதற்கான வசதியை கொடுத்தார் என்றால் அதை நாம் உபயோகப்படுத்த முடியும், அதன் கீழே டவுண்லோட் என்ற பட்டன் இருக்கும்.

பாரதி
24-03-2009, 06:23 PM
புதிய முயற்சிக்கு வாழ்த்து. நமது மன்றத்தில் நண்பர் ஷீ-நிசி தனது கவிதையை ஒலிக்கோப்பாக்கி கொடுத்திருந்தார் என்பதை நினைவூட்ட விரும்புகிறேன். உதவிக்குறிப்பில் இருப்பது போல, பிற தளங்களில் பதிவேற்றி மன்றத்தில் சுட்டி வழங்குவதே சரியானதாக தோன்றுகிறது. இம்முயற்சிகளால் மன்றத்தின் வேகம் குறைய வாய்பிருக்கிறதா என்பதையும் கவனிக்குமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

இராசகுமாரன்
31-03-2009, 10:03 AM
மேலே குறிப்பிட்டது போல ஒலிக்கோவைகளை நமது தளத்தில் நேரடியாக ஒலிக்கச் செய்ய ஏற்கனவே {media] என்ற tag இருந்தாலும், புதிதாக 2 வசதிகள் தற்போது அறிமுகப் படுத்தப் படுகிறது.

1) தளத்தின் மேலே உள்ள மெனு பாரில் Quick Links-னுள் 3-வது இடத்தில் "MP3 Player" வசதியைக் காணலாம். இது தற்போது பரிசோதனையில் உள்ளது, நீங்களும் பரிசோதித்து பார்க்கலாம்.

2) ஆனால், பொதுவாக தனிப் பிரிவாக உள்ள பகுதிகளில் நமது உறுப்பினர்கள் கவனம் செலுத்துவதில்லை. அதனால், நமது மன்றத்தினுள், media tag போல ஒலிக் கோவைகளுக்காக [mp3] என்ற tag இன்று முதல் அறிமுகப் படுத்தப் படுகிறது. இது மிக எளிதானது. எந்த தளத்தில் வேண்டுமானாலும் உங்களது ஒலிக் கோவை இருக்கலாம் அதன் முகவரி .mp3 என்று முடிவதாக இருந்தால் அந்த முகவரியை இங்கே பதித்து அதன் முன்னும் பின்னும் [mp3] address [ /mp3] என்று கொடுத்தால் போதும்.

இதன் மூலம் போட் பரப்பு (podcasting) ஒலிக்கோவைகளையும் இங்கே பதிக்கலாம்.

3) மேலும், இன்று முதல் நமது தளத்தில் ஒலிக் கோவைகளையும் அது பற்றி ஆரம்பிக்கப் பட்ட திரிகளையும் தனியாகப் பிரித்து ஒலி-ஒளிப் பகுதியினுள் ஒரு தனி துணைப் பகுதி ஆரம்பிக்கப் பட்டுள்ளது.

ஓவியன்
31-03-2009, 10:50 AM
கேட்டவுடன் புதிய வசதிகளை மேம்படுத்தி, ஒலிக்கோவைகளுக்கென தனிப் பகுதியொன்று அமைந்து தந்த அண்ணாவுக்கு நன்றிகள் பல...

ரங்கராஜன்
31-03-2009, 10:57 AM
ஆஹா மன்றத்தின் முதல் எழுத்தே, வசதிகளை கேட்டவுடன் செய்து கொடுத்த உங்களுக்கு என்னுடைய நன்றிகள் கோடி

சரண்யா
23-11-2009, 01:57 AM
வேறு தளத்தில் (esnips)பதிவு செய்து அந்த சுட்டியை இங்கு தரும்போது ..நம்ம login ஆகி திறந்து இருந்தால் மட்டுமே ...இங்கே மன்றத்தில் கேட்கலாமா...sign out பண்ணிட்டா...கேட்கமுடியாதா...அப்படி திறந்து வைப்பதால் தவறு ஒன்றுமில்லையா....
சொல்லுவீர்களா...