PDA

View Full Version : யூனிவர்சிட்டி போன முதல் நாள்



அகத்தியன்
23-03-2009, 03:00 PM
போறதுக்கு முன்பே இவனுகள் எல்லாம் சேர்ந்து மாச்சிங் பழக்கி ஒளிக்கப்பழக்கி..... சில வேள யோசிப்பன் நாம போகப்போறது கேம்புக்கா இல்ல கெம்பசிக்கா எண்டு.....

அப்பா அந்த நாளும் வந்தது... அஸ்கரும் நானும் பஸ்ஸில் ஏறிவிட்டோம். பாக்கிற பக்கமெல்லாம் சீனியர் பயம். கண்டக்டர் கூட ஒரு தரம் சீனியர் மாதிரி தெரிஞ்சதாக பின்னொருநாள் சொன்னான்.

பாலத்தடிய இறங்கினதும் கண்ணுக்குள்ள கறுப்பு கறுப்புக்கறுப்பா படம் ஓடுது..... அஸ்கர திரும்பி பார்க்கன். அவன் யூனிவர்சிட்டிக்கு எதிர்ப்பக்கமா இருக்கிற வயல நோக்கி நடக்கான். என்னடா இவன் இஞ்சால நடக்கான்? இது வெட்டு சீசனும் இல்லையே எண்டு யோசிச்சுக்கொண்டு, டேய் எங்க போறாய்? என்ற என் ஈனக்குரலுக்கு, திரும்பாமல், கெதியா வா அங்கால மூணு பேர் நம்மள கைய காட்டி கூப்பிடுறானுகள். என்று கலங்கிய வயிற்றினுள் மேலும் புளி கரைத்தான்.

ஓரக்கண்ணால் பார்த்தேன் ஆமாம்... அதுவும் எங்களை நோக்கி ஓட்டமும் நடையுமாக வாரானுகள். ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம். இன்னிக்கி சட்னிதாண்டி....

பல்லி மாதிரி மருத மரத்தில் ஒட்டிக்கொண்டு...... அக்கரைப்பற்றுக்கு ஒரு சைக்கிளையாவது கடவுள் இவனுகள் வருமுன் அனுப்பமாட்டானா என நேர ஆரம்பிக்கும் போது எல்லாம் முடிந்து விட்டது. கிட்ட வந்துட்டானுகள். இனி ஒண்டும் நடக்காது. சலாம் வரிசைதான் என எண்ணி திரும்பினால்.................

அட! நம்ம ஜாதி...... சே! அப்பாடா!...ம்...போடாங்.... மனசுக்குள் ஆயிரம் பீலிங்க்ஸ் ஓடி மறைந்தது..
நீங்களும் பெஸ்ட் இயரா? நாங்களும்தான்.. உள்ள தனிய போக பயமா இருக்கு அதான் உங்கள கூப்பிட வந்தம்.. என்றான் வந்தவர்களில் ஒருவன் ( அவன்தான் சம்மாந்துறை சறூக்- பிற்காலங்களில் எனது வலது கை இடது கை. எல்லாம். பிற்காலங்களில் கென்ரீனில் சாப்பிட எதுவும் இல்லை என்றால் அவனை கொறிப்போம்)

அஸ்கரினை பார்த்தேன்.... தற்காலிக நிம்மதி .........

பக்கத்தில் இருந்த ஆட்டோவினை வாடகைக்கு அமர்த்தி உள்ளே போனோம்.

பாரதி
23-03-2009, 03:43 PM
அப்போதே ஆட்டோ தேடிய அகத்தியரா நீங்கள்? ம்ம்.. சுவாரஸ்யம்தான்.

அமரன்
24-03-2009, 08:56 AM
வாங்க அகத்தியன்.
வெலைப்பளுவுக்கு நடுவில் தனிமை உங்களை அடிக்கடி அண்டி இம்சிக்கிறது போலும். இப்படி அசை போடுதல்களை கிளறி விட்டுப் வேடிக்கை பார்ப்பது தனிமைக்குப் பிடித்த கலை.

மட்டு வட்டாரத்துக்கு அழகு கொட்டும் வண்ண நிற மீன்கள், வாவிப் பெண்களின் அழகினை உங்கள் எழுத்தினில் கண்டேன். கொஞ்சும் எழுத்தும் மிஞ்சும் உணர்வும் உள்ளுக்குள் இழுத்து கல்லூரி முதல்நாள் அனுபவத்தை ஆழமாகப் பதிந்துவிடுகிறன.

முதல்நாளில் தொடங்கும் கலாட்டா கைமீறிப் போய் கலவரத்தில் முடிவதும் கட்டுக்குள் இருந்து தொடர்ந்து நெஞ்சாக்கூட்டினை நிறைப்பதுமாக இருவேறு துருவ அனுபவங்களை செதுக்கும் சிற்பக்கூடம் பல்கலைக்கழகம். எங்களுக்காக மீண்டும் அந்த வாழ்க்கையை தொடருங்கள் அகத்தியன்.

சிவா.ஜி
24-03-2009, 09:00 AM
ரொம்ப நாளைக்கு பிறகு நல்ல அனுபவ கட்டுரையோடு வந்திருக்கிறீர்கள். இலங்கை தமிழில் வாசிக்கும்போது சுகமாக இருக்கிறது. வாழ்த்துகள் அகத்தியன்.

விகடன்
12-04-2009, 01:20 PM
யூனிக்கு வாற முதல்நாளே ஆட்டோவா???
வாங்க வாங்க. உங்களை நல்ல மாதிரித்தான் கவனிக்கவேணும்.