PDA

View Full Version : உலகின் 10 மோசமான பாஸ்வேர்ட்கள்

Honeytamil
23-03-2009, 12:00 PM
கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்கள் குறிப்பாக இ-மெயில் பயன்படுத்துபவர்கள் தங்களது கணக்குகளை பயன்படுத்த பாஸ்வேர்ட் எனப்படும் கடவுச் சொற்களைப் பயன்படுத்துவது அவசியம்.

இந்த பாஸ்வேர்ட்கள் குறித்து சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் அதிக அளவில் பயன்படுத்தப்படும் பாஸ்வேர்ட்கள் என்ன என்று ஆராயப்பட்டது.

இதில் `123456' என்ற எண்கள் தான் அதிக அளவில் பாஸ்வேர்ட்டாக பயன்படுத்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக பாஸ்வேர்ட் என்ற பெயரே அதிக அளவில் பாஸ்வேர்ட்டாக பயன்படுத்தப்படுகிறது.

மேலும் தங்களது முதல் பெயர் மற்றும் ஒரே சொல்லை பலமுறை பயன்படுத்துவது ஆகியவையும் அதிக அளவில் பாஸ்வேர்ட்டாக பயன்படுத்துகின்றனர்.

`பாண்ட்007', `கோகோகோலா' போன்ற சொற்கள் அதிக அளவில் பாஸ்வேர்ட்டாக பயன்படுத்தப்பட்டு வருவதும் தெரியவந்துள்ளது.

முதல் 10 இடங்களில் உள்ள பாஸ்வேர்ட்களை ஒன்பதில் ஒருவரும், முதல் இருபது இடங்களில் உள்ள பாஸ்வேர்ட் பட்டியலில் உள்ளவற்றை 50ல் ஒருவரும் பயன்படுத்துவதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

ஒரு நபர் அதிக பட்சமாக 15 பாஸ்வேர்ட்கள் வரை நினைவில் வைத்துக் கொள்கின்றனர் என்றும், 61 சதவிகிதம் பேர் பல்வேறு கணக்குகளுக்கும் ஒரே பாஸ்வேர்ட்டை வைத்துக் கொள்கின்றனர் என்றும் தெரியவந்துள்ளது.

-நிகழ்வுகள் -

தாமரை
23-03-2009, 12:10 PM
பாஸ் வேர்ட் இப்படி ஃபெயில் வேர்டா பூட்டுதே...

மதி
23-03-2009, 12:35 PM
பாஸ் வேர்ட் இப்படி ஃபெயில் வேர்டா பூட்டுதே...
:D:D:D:D

அறிஞர்
23-03-2009, 01:24 PM
எளிதில் நியாபகம் வைக்க... பலரும் இப்படிதான்...
சோம்பேறித்தனம் பாராமல் நல்ல பாஸ்வேர்ட் வைத்தால்.. கணக்கை சரியாக பார்த்துக்கொள்ளலாம்.

அக்னி
23-03-2009, 01:33 PM
மிக வலுவான கடவுச்சொல்லை வைத்து ஒரு மின்னஞ்சலைப் பிரத்தியோகமாக வைத்திருக்கவேண்டும்.
மற்றைய மின்னஞ்சல், மற்றும் கடவுச்சொல் என்பவற்றுக்கான முக்கிய மின்னஞ்சலாக இதனை வைத்துக்கொண்டால்,
மறந்தாலும் தொலைந்தாலும் பெற்றுக்கொள்ளலாம்.

இந்தத் தனிப்பட்ட மின்னஞ்சலை, வேறெதற்கும் (வெளிப்படுத்திப்) பயன்படுத்தாது வைத்துக்கொண்டால்,
பாதுகாப்பை, மற்ற வழிமுறைகளிலும் பார்க்க உறுதியாகப் பேணலாம்.

மன்மதன்
23-03-2009, 01:47 PM

சரியான யோசனை.. :icon_b:

நேசம்
23-03-2009, 04:14 PM
எளிதில் ஞாபகம் வைத்து கொள்ள தான் இந்த் போன்ற கடவுச்சொல்லை பயன்படுத்துகிறார்கள்.சரியான கலவையில் வைத்து கொண்டால் நல்லது.அக்னியார் சொல்லும் வழியை பயன்படுத்தலாம்.

subashinii
23-03-2009, 04:29 PM
மிக வலுவான கடவுச்சொல்லை வைத்து ஒரு மின்னஞ்சலைப் பிரத்தியோகமாக வைத்திருக்கவேண்டும்.
மற்றைய மின்னஞ்சல், மற்றும் கடவுச்சொல் என்பவற்றுக்கான முக்கிய மின்னஞ்சலாக இதனை வைத்துக்கொண்டால்,
மறந்தாலும் தொலைந்தாலும் பெற்றுக்கொள்ளலாம்.

இந்தத் தனிப்பட்ட மின்னஞ்சலை, வேறெதற்கும் (வெளிப்படுத்திப்) பயன்படுத்தாது வைத்துக்கொண்டால்,
பாதுகாப்பை, மற்ற வழிமுறைகளிலும் பார்க்க உறுதியாகப் பேணலாம். பாதுகாப்பான.. மின்னஞ்சல் கடவு சொல் மறந்துவிட்டால், திருடப்பட்டுவிட்டால்.. கஷ்டம்தான்..

anna
24-03-2009, 10:25 AM
உண்மையிலே பாஸ்வேர்டை நினைவில் கொள்வது என்பது மிக பெரிய கஷ்டமான வேலை தான் என்னை பொறுத்தவரையில் ஆதாலால் என்னுடைய பாஸ்வேர்ட் எல்லாவற்றையும் ஒரே பெயர் கொண்டு அமைத்துள்ளேன்.

ஜாக்
24-03-2009, 10:58 AM
பாஸ்வேர் என்பது மிக முக்கியமான ஒன்று அதில் அலுப்பு பார்க்காமல் கொஞ்சம் கஷ்ட்டமான பாஸ்வேர்டை அமைத்து கொண்டால் நமக்குதான் நன்மை ஆரம்பத்தில் இந்த மாதிரி பாஸ்வேர்ட்களை டை செய்வதற்க்கு கஷ்ட்டமாக இருந்தாலும் கால போக்கில் பழகிவிட்டால் கண்ணை மூடி கொண்டு டைப் செய்திடலாம்

ஆதி
24-03-2009, 11:15 AM
பொதுவாக பாஸ்வேர்ட் தேர்ந்தெடுக்கும் போது வார்த்தையாக தேர்ந்தெடுக்காமல் வரியாக தேர்ந்தெடுப்பது நல்லது..

உதாரணத்திற்கு.. "How to keep my account information safe ?" h2kM@i$

இதுபோல அதன் முதல் எழுத்தை மட்டும் தேர்ந்து கொண்டால் "Password Guess" என்பதற்கு வாய்ப்பு மிக குறைவு..

உங்களுடைய கணினிக்கு பாஸ்வேர்ட் வைக்குறீர்கள் என்று வைத்து கொள்வோம்..

"My Home pc login keyword is"

இவ்வாறு தேர்ந்து பிறகு, வசித்திக்கு ஏற்ப சுருக்கி கொள்வது நலம்.. "m0p1Ki"

Password Guessing செய்வது மிக எளிது..

இந்த கட்டுரையில் உள்ளது போல Password, test, 123456..

இன்னும் எளிதாய் சிலர்..

Username : test
Password : test

என்றே வைத்திருப்பார்கள்.. லினக்ஸ் உபயோகிப்பவர்கள் பலர்..

Username : Redhat

Password : Password

என்றே வைத்திருப்பார்கள்.. இது போதாத நமக்கு கணினியை தகர்க்க..

முன்பு நான் வேலை பார்த்த அலுவலகம் ஒன்றி இதே போல ஒருத்தர் ஒரு இந்தர்நெட் சர்வருக்கு..

Username : root

Password : redhat

என்று வைத்திருந்தார்.. அவர் நல்ல காலம் அது என் கண்ணில் பட்டது, ஊடுருவி விட்டேன் :)..

பாஸ்வேர்டையும் மாற்றி விட்டேன்..

பொதுவாக யுனிஸ் கணினிகளில் தவறான பாஸ்வேர்ட் கொடுத்தால் "Bad Password" என்று பிழை தெறிக்கும், அதனை பின்வரும் செய்தியாக மாற்றிவிட்டேன்..

"Since your password is not secure, i have chnaged it. Please contact me -(என் பெயர்)"

இரு வாரம் கழித்தே அவர் இதனை கண்டு கொண்டார்.. அப்புரம் சரி செய்தோம்..

பெரும்பாலும் ஹேக்கர்கள் Password Dictornary எனும் toolஐ பயன்படுத்தியே நம் கணினியின் பாஸ்வேர்டை கெஸ் செய்ய முயலுவர்..

அதனால் வார்த்தையாக பாஸ்வேர்டை வைக்காமல் வரியாக எழுதி அதை சுருக்கி கொள்ளுதல் நலம்..

பாஸ்வேர்டின் நடுவில், Numeric and wild charecters சேர்த்து கொள்ளுவதும் நல்லது..

Password என்றே பாஸ்வேர்ட் வைத்தாலும்.. p@s$w0rD இப்படி வைத்தால் கண்டு பிடிப்பது கொஞ்சம் சிரமம் தான்..

s பதிலாக $, a பதிலாக @, o பதிலாக 0, h பதிலாக #, l பதிலாக 1, i பதிலாக !, c பதிலாக (, v பதிலாக >

இந்த wild charecters பயன் படுத்துதலும் பாதுகாப்பானதே..

ஜாக்
24-03-2009, 11:20 AM
h2kM@i$
s பதிலாக $, a பதிலாக @, o பதிலாக 0, h பதிலாக #, l பதிலாக 1, i பதிலாக !, c பதிலாக (, v பதிலாக >
இந்த wild charecters பயன் படுத்துதலும் பாதுகாப்பானதே..
மிக சரியான சொன்னிங்க இந்த மாதிரி ஷ்பெசல் குறியிடுகளை பாஸ்வேட்களில் இனைத்து கொண்டால் எந்த நாளும் நமது அக்கவுன்ட் நமது கன்ட்ரோலியே இருக்கும்:icon_b:

praveen
24-03-2009, 12:31 PM
எல்லோரும் ஒரு விசயத்தை சொல்ல மறந்து விட்டீர்கள், அது நீளம்

பொதுவாக நீளமான பாஸ்வேர்டை திருடுவதற்கு வாய்ப்பு குறைவு, குறைந்தது 6 எழுத்து அதிகபட்சம் 18 எழுத்து என்றிருந்தால் நாம் 6 அல்லது 8 எழுத்துக்குள்ளே வைத்து கொள்கிறோம், இதனை சற்று மாற்றி இரண்டுமுறை அதே வார்த்தையை 123456123456 என்று கூட வைத்து கொண்டால் பாஸ்வேர்டை மென்பொருள் மூலம் நிரடி பார்ப்பவர் மீட்டெடுக்க அதிக நேரம் பிடிக்கும், எனவே சிரமம் பார்க்காமல் அதிக எழுத்துக்களில் பாஸ்வேர்டு வைப்பது தான் புத்திசாலித்தனம்.

நான் பாஸ்வேர்டு டைப் செய்வதை பார்த்து சில நண்பர்கள் சலித்து கொள்வார்கள், "யோவ் போதுமய்யா, விட்டால் கீ போர்டில் இருக்கும் எல்லா எழுத்தையும் ஒருமுறை அழுத்தி விடுவாய் போல" என்று :)

எனவே பாஸ்வேர்டு லாங்க்வேர்டாக இருந்தால் ஒரு பயலும் நம் கணக்கை அனுக முடியாது.

ஆனால் கீ லாஃக்கர் எனப்படும் புரோகிராம் மூலம் நாம் டைப் செய்யும் பாஸ்வேர்டை பொதுக்கனினியிலோ அல்லது அடுத்தவர் கனினியிலோ கண்டு பிடிக்க கூடும் இதனை தவிர்க்க அந்த பாஸ்வேர்டை டைப் செய்வதற்கு பதில், விண்டோஸில் அக்ஸசரிஸில் இருக்கும் அக்ஸசபிளிட்டியில் இருக்கும் ஆன் ஸ்கிரின் கீ போர்டில் சென்று மவுசால் முழ்துமோ அல்லது ஒரு சில கீ அழுத்தி பின் கீ போர்டில் தொடரலாம் இது ரெம்ப சேப்டி.

பா.ராஜேஷ்
24-03-2009, 01:15 PM
பயனுள்ள தகவல் ஆதி, பிரவீன். நன்றி!

ஜாக்
24-03-2009, 01:29 PM
எல்லோரும் ஒரு விசயத்தை சொல்ல மறந்து விட்டீர்கள், அது நீளம்.
இநத யோசனை புதுசாவும் இருக்கு நல்லாவும் இருக்கு:icon_b:

ஓவியன்
24-03-2009, 01:38 PM
நல்ல தகவல்களைப் பகிர்ந்து கொண்ட தேந்தமிழ், ஆதி, பிரவீன் மற்றும் அக்னிக்கு நன்றிகள் பல...

முடிவாக, நீளமாகவும், எழுத்துக்களுடன் இலக்கங்களையும் விசேட குறியீடுகளையும் கொண்ட கடவுச் சொல் பாதுகாப்பானதெனப் புரிந்து கொண்டேன்...

Narathar
25-03-2009, 11:25 AM
கவலையை விடுங்க...................
உங்க பாஸ்வேர்ட்களை எனக்கு PM செய்துடுங்க.
அதை நீங்க எப்ப மறந்தாலுமென்கிட்ட PM செய்து கேட்டீங்கன்னா உடனே கொடுத்துட்டு போறேன்......;)

முக்கியமா வங்கிக்கணக்குகளோட பாஸ்வேர்ட்டை நான்
"பத்திரமா பாத்துக்குவேன்" :D

ஆதி
25-03-2009, 11:29 AM

இந்த ஐடியா நல்லா இருக்கே..

பாஸ்வேர்ட் லாக்கர் ஆரம்பிக்கலாம்.. நானும் உங்க கூட பாட்னரா சேர்ந்துக்கிறேன்.. :)

இன்பா
25-03-2009, 11:34 AM
கடினமான பாஸ்வேர்டு வைப்பது சிறந்தது, சிறப்பு குறியீடுகளை பயன்படுத்துவதும் சிறப்பு. ஆனால் இன்னொரு விசயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

ஆரம்ப காலத்தில் '123456' என்று வைத்தவன் தான், பாஸ்வேர்டு திருட்டு பற்றியும் பாதுகாப்பு பற்றியும் படித்து, அதிமேதாவித்தனமாக வைத்தேன், சில நாட்கள் அந்த அந்த கணக்கை பயன்படுத்தாமல் விட்டு, ஒரு முக்கிய தகவலுக்காக அந்த கணக்கை திறக்க முயற்சிக்க நான் கொடுத்து கடவுச் சொல் எனக்கே மறந்துப் போய் நான் பட்டபாடு இருக்கிறது அப்பப்பா...!!!

பிறகு ஒரு வழியை கண்டுபிடித்தேன், அதாவது எனக்குள்ளாக ஒரு அல்கார்தம் வைத்துக்கொண்டேன்,

அதாவது என் பாஸ்வேர்டு எப்போதும் எதிலும் இந்த காம்பினேசனில் தான் இருக்க வேண்டும் என்று.

உதாரணம் ஓர் அல்கர்தம்

நான் பிறந்த வருடம் 22-Sep-1984

D22MSY84
22DSM84Y
84YMS22D
MS84Y22D
.
.
.
எவ்வளவு ப்ராபபலிட்டி இருக்கிறது அவ்வளவு...

பாதுகாப்பு எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு நியாபகம் வைத்துக்கொள்ளுதலும் முக்கியம்.

இந்த கடவுச்சொல் பயன்படுத்தி யாரும் என் கணக்கை முயலாதீர்கள் ஓகே :D....

ஆதி
25-03-2009, 11:44 AM

வரிப்புலியண்ணா இது கூட சரியான் வழியில்லை.. பாஸ்வேர்ட் கெஸ்ஸ்ஸிங்கில் இதையும் யோசித்திப்போமாக்கும்..

உலகின் மிக பெரிய பெரிய Firewall Softwareகளை எழுதினதே ஹேக்கர்கள் தான்.. :)

புகழ் பெற்ற நாவல்களின் புகழ் பெற்ற வசனம், டேட் ஆப் பெர்த்.. இப்படி பல விடயம் இருக்கு.. பாஸ்வேர்ட் கெஸ்ஸிங்கில்..

இன்னும் சொல்லனும் னா, பாஸ்வேர்ட் கெஸ்ஸிங்குக்கு தனி அகராதியே வைச்சிருக்கோம்.. :)

ப்ரவின் அண்ணா சொன்னது போல் நீளமான பாஸ்வேர்டை உடைப்பது மிக மிக மிக மிக சிரமமானது.. அதை செய்யலாம்..

இன்பா
25-03-2009, 11:53 AM
டேட்-ஆஃப்-பர்த் உதாரணத்துக்கு சொன்னேன்பா...!, விளக்க எளிமையாக இருக்குமே என்று.

காம்ப்லிகேட்டடாக கொடுத்து பிறகு கடவுச் சொல்லை நாமே மறந்துப் போனால் பெரிய காமெடி தானே :)

வரிப்புலியண்ணா இது கூட சரியான் வழியில்லை.. பாஸ்வேர்ட் கெஸ்ஸ்ஸிங்கில் இதையும் யோசித்திப்போமாக்கும்..

உலகின் மிக பெரிய பெரிய Firewall Softwareகளை எழுதினதே ஹேக்கர்கள் தான்.. :)

புகழ் பெற்ற நாவல்களின் புகழ் பெற்ற வசனம், டேட் ஆப் பெர்த்.. இப்படி பல விடயம் இருக்கு.. பாஸ்வேர்ட் கெஸ்ஸிங்கில்..

இன்னும் சொல்லனும் னா, பாஸ்வேர்ட் கெஸ்ஸிங்குக்கு தனி அகராதியே வைச்சிருக்கோம்.. :)

ப்ரவின் அண்ணா சொன்னது போல் நீளமான பாஸ்வேர்டை உடைப்பது மிக மிக மிக மிக சிரமமானது.. அதை செய்யலாம்..

ஓவியன்
25-03-2009, 11:58 AM
இன்னும் சொல்லனும் னா, பாஸ்வேர்ட் கெஸ்ஸிங்குக்கு தனி அகராதியே வைச்சிருக்கோம்.. :).

ஒரு தொழிலாகவே செய்யுறாங்க போல....!! :D:D:D

இன்பா
25-03-2009, 12:02 PM
ஒரு தொழிலாகவே செய்யுறாங்க போல....!! :D:D:D

அப்படி ஏன் நினைக்குறீங்க,

திருடனை பிடிக்க வேண்டுமென்றால் திருட தெரிந்திருக்கனும் என்பதுப் போல, ஆதி ஃப்யர்வால் மென்பொருள்கள் எழுத வேண்டுமா...? :D

வில்லங்கமாகவே யோசித்தால் எப்படி :D

Mathu
27-03-2009, 05:37 PM
ஆரோக்கியமான தகவல் பகிர்ந்துகொண்ட அனைவருக்கும் நன்றி.

ஆதி அப்படியே இதை எல்லாம் எப்படி உடைப்பது என்பதையும் சொல்லி கொடுங்களேன்.

விகடன்
29-03-2009, 11:04 AM
முக்கியமாக அனைவரும் அறிந்திருக்க வேண்டிய விடயம். அதற்கமைந்தாற் போல ஒவ்வொருவரும் தத்தமது இரகசிய குறியீட்டுத்தொகுதியை மாற்றி அமைத்துக்கொள்ள வேண்டும். தகவலை பகிர்ந்து கொண்ட அனைவரிற்கும் நன்றிகள்

பழக்கம் என்றொன்றில்லை.
எல்லாம் பழகிக் கொள்வதுதானே.