PDA

View Full Version : ஞான வாக்கியம்(கரும்பாக்கள்)



Pages : [1] 2 3

நாகரா
23-03-2009, 07:40 AM
மெய்யுள்ளே கடந்து பொய்யுள்ளம் உரிந்து
உள்ளுள்ளே இருத்தல் சுகம்

உயிருள்ள கல்லாய் நின்மெய் இருக்கையில்
உயிரற்ற கல்லுக்கேன் பூசை

கல்மேலே நெய்யூற்றிப் பூசை செய்வாய்நின்
மெய்மேலே ஊற்றுதேபே ரருள்

கல்முன்னே குணுகுணுவெனக் குதப்புவாய் நின்இருதயத்
துள்ளுள்ளே முணுமுணுப்பார் குரு

மூலகுரு கணபதியும் நின்னுளே அவர்தம்பி
பாலகுரு முருகனும் ஊங்கே

மெய்க்கோயிலில் இருதயக் கருவறை உள்ளே
மெய்க்குயிராய் அன்பே சிவம்

சிவந்தான் வலத்தில் சத்தியோ இடத்தில்
தவக்கோன் குருவே நடு

நடுநிலை நாடி குருவோ டிருந்தால்
கடும்பிணி யாவும் போம்

போம்வழி அடைக்கும் குருமொழி உண்டே
ஆம்வழி அடைந்தே வாழ்

வாழ்வா தாரம் உள்ளுறை உத்தமன்
ஆழ்ந்தே சாரங் காண்

ஆதி
23-03-2009, 11:20 AM
அடடா அடடா அடடா என்னை ஏதோ செய்யுதே
அடடா அடடா அடடா மனத்தோலும் தீய்யுதே.. :)

இரு இருவரிகளாய் இன்பநயம் பொங்க இன்ப பேற்றின் வழிகள்..

பொய்யுள்ளம் உடைந்து
மெய்யுள்ளம் அடைய
ஐயுள்ளும் இருந்து
அணைத்திறக்கிறது ஞானத்தேன்..

ஆழ்ந்து சாரம் காண
அளித்த போதனைகளுக்கு
வணக்கம் கலந்த நன்றிகள் ஐயா..

நாகரா
23-03-2009, 11:39 AM
உம் அன்பான அழகான பின்னூட்டத்துக்கு நன்றி ஆதி, இவை வெண்பா இலக்கணம் பற்றிய அக்கறையின்றி எழுதப்பட்டக் கரும்பாக்கள்.

உருவத்தை வழிபடும் வெண்பாவை உதறி
அருவத்தைக் கருதிடுங் கரும்பா

என் கரும்பா
மெய்யாலுமே கரும்பா
என்று காலமே பதில் சொல்லும்!

நாகரா
23-03-2009, 11:40 AM
சச்சி தானந்தம் நின்னியல் என்றே
உச்சி மேல்விளங்கும் பார்

பார்க்கும் இடமெல்லாம் இறைந்த ஒருவனைப்
பார்க்க இருதயமே விழி

விழித்துக் கல்முன்னே உறங்கும் மயக்கை
அழித்து நின்னுள்காண் இறை

இறைந்தெங்கும் யாவும் கடந்த ஒருவனே
நிறைந்துள்ளான் நின்னுள் அறி

அறியாமை நீங்க இருதய அன்பில்
செறிவாயேல் ஈங்கே பரம்

பரமபதம் மெய்க்குள் நாடி இகத்தில்
பெருந்தயவாய் என்றும் இரு

இருசும்மா இருதயத்துள் மனமடங்கி இருந்தாலே
அருளம்மா தருவாரே சுகம்

சுகமாய் என்றும் இருக்க நின்னுள்
அகமாம் ஒன்றை வாசி

வாசியாய் உன்னை உயிர்க்கும் பரலோக
வாசியை உள்ளே வாசி

வாசிக்க வேண்டும் ஒன்றை வாசித்தே
நேசிக்க வேண்டும் யாவும்

நாகரா
24-03-2009, 02:58 AM
தலைமேற் பால்வீதி மெய்க்குள் இறங்க
வலையாம் மாயை அறும்

அறும்வினை நீர்தலைமேல் அருட்தாரை நாடிப்
பெறும்வரம் வாழ்வாங்கு வாழ

வாழலாம் மரணத்தை வென்று அன்பைத்
தாழடைப் புன்மனத்தைப் பிடுங்கு

பிடுங்குபொய்ம் மனச்செருகல் இருதய அன்பில்
ஒடுங்குமெய்க் குருஉருவாய் இரு

இருள்சேர் இருவினை அறுக்கும் உபாயம்
மருள்சேர் மனத்தினைக் கடந்து

கடந்தே யாவும் யாவிலும் இறைந்தானைக்
கடத்தே நாடிக் காண்

காணும் இருவிழிமேல் திருவிழி தாண்டத்
தோணும் ஒருவழிப்பால் இரு

இருப்பது அழியாது இலாதது தோன்றாது
இருப்பதன் மாற்றமே யாவும்

யாவும் அடங்கும் ஒன்றே அன்புசா
நோவும் தீர்க்கும் மருந்து

மருந்தெனப் புன்கண் சுரக்கும் அன்பை
அருந்தெனச் சொன்னான் குரு

நாகரா
25-03-2009, 02:43 AM
குருதீட்சை தேடி ஓடும் மூடரே
குருஉம்நடு ஓடும் திரு

திருவைத் துட்டெனத் துட்டமனஞ் சொல்லும்
அருளை விட்டெது திரு

திருதிருவென விழித்தும் புரியாப் பெரும்பொருள்
தரும்அமுதினைப் புசித்துப் புரி

புரியாத எல்லாம் புரியும் அன்பில்
உரியாத வெங்காயம் உரியும்

உரியும் வெங்காய முடிவில் சட்டெனப்
புரியும் அன்பான கடவுள்

கடவுள் உண்டில்லை விவாதங் கடந்துநின்
கடத்துள் கடவுள்மெய் காண்

காணும் வெறுங்கல்லில் கடவுளென்றால் பரமனவன்
பூணும் உயிர்மெய்யில் ஆர்

ஆர்நீ என்றாய்ந்து எல்லா விடையுந்
தூர்ந்தே நின்றோய நான்

நான்எனத் தான்தன்மேல் பூணும் வெள்ளங்கிநீ
பூண்என உதவுங் கடவுள்

கடவுள் பூணத்தான் தருவதை மறைத்து
கடத்தை ஆளும்பொய்ம் மனம்

நாகரா
26-03-2009, 03:54 AM
மனமெனும் பொய்ச்செருகல் பிடுங்கி உட்குருமொழி
தனமெனும் மெய்வழியைப் பிடி

பிடிபடா மேல்வழிப்பால் நின்மனம் பிடிபடசா
அடிவிழாத் தூய்மைசேர் நிலை

நிலையிலாப் பிழைப்பில் நிலையான வாழ்வின்
கலையினைப் புகட்டும் அருள்

அருள்வள்ளல் பராபரம் தராதலத் தெங்கும்
பொருள்துள்ள இறங்கினார் பார்

பாரெங்கும் படர்ந்திருக்கும் தயாபரப் பெரும்பொருள்மெய்
ஊருன்னில் அடர்ந்திருக்கும் உயிர்

எழுசீர் வெண்பா மெய்யுள் உயிராய்
எழுந்தார் அண்ணலைப் படி

படிகள் ஏழுந் தாண்ட மேலே
வடியும் பாலே அருள்

அருள்விளங்கும் பொருட்டு அன்பாய்க் குருமொழிப்
பொருள்விளங்கும் இருதயத் திரு

என்கிருபை உனக்குப் போதும் என்ற
சற்குருவை நினைந்தே இரு

இருஊங்கே குருவென்னுஞ் சத்திசிவம் ஒன்றும்நடு
அருளோங்கும் திருக்குன்றம் அது

நாகரா
27-03-2009, 03:44 AM
"ஆ"உயிரைக் காமெய்யைப் போற்றி நாசிதாரை
வாசிதனை வாசிக்க உறுதி

அன்பொன்றே நிற்கும் அவனியில் அஃதின்றேல்
எவ்வொன்றும் வீழும் உறுதி

அன்பெனும் அகச்சமய நெறிவிட்டு புறச்சமய
என்பினில் அகப்படுமோ உயிர்

எவர்க்கும் எந்நோயுந் தீர்த்து சுகந்தரும்
சிவமாம் அன்பேதான் மருந்து

மருந்தாக உச்சிமேல் வற்றாது பொழியருளை
அருந்தாது இற்றுவீழ் குருடு

குருடு நீங்க மெய்யுள் உயிராங்
குருவில் தேங்கி இரு

இருமை நோய்தீர அன்பெனும் இருதய
ஒருமைக் கண்தோய்ந் திரு

திருட்டு யமன்கை அகப்படா துயிரைத்
திரட்டுங் குருமெய் தேர்

தேர்மெய் ஓட்டுங் கண்ணனை உயிராகத்
தேர்வாய் பார்த்தன் நீ

நீஉரு நான்அரு நம்மை வேறறப்
பார்குரு ஞானமே நடு

நாகரா
28-03-2009, 02:52 AM
நடுநாடி இடவலம் மேல்கீழ் முன்பின்எனத்
தடுமாறும் இருமை தீர்

எப்பாலும் வெண்பாலாய்த் தப்பாமல் மாற்றும்
அப்பாற்கண் நன்னோக்கம் கொள்

கொள்ள அருளெனும் அமுதிருக்க மருள்நஞ்சுட்
கொள்ளும் அவலமேன் கூறு

கூறுமனமே இருதய அன்பில் நாட்டமின்றி
மாறுபடும் வன்பிலேன் வாட்டம்

வாட்டம் யாவும் நீக்கும் அன்புத்
தோட்டம் இருதயத் திரு

திருவிழிப் பூட்டை உடைத்து மெய்க்குள்
குருவழி காட்டும் அன்பு

அன்பைத் தாழிட ஆர்வலர் நோயெனும்
புன்தீர்ப் பாய்ச்சலே அது

அதுஇது எனச்சுட்ட இயலா இறையவர்
பதுங்கிய நின்இருதய குகை

அசுத்தத்திலே அழுத்தும் சத்துவந் தாண்டி
நசுங்குமுயிரை அன்பிடம் ஏற்று

சுத்தமாய்த் தோன்றும் சத்துவ மயல்நீங்கி
அன்பினை நன்றே விளங்கு

நாகரா
29-03-2009, 04:17 AM
இயங்கா முடக்கமும் அடங்கா இயக்கமும்
மயக்கும் சத்துவ வலை
(இயங்கா முடக்கம்=தாமசம், அடங்கா இயக்கம்=ராஜசம்)

சுத்தமாய்த் தோன்றும் சத்துவ குருமார்
மொத்தமாய் அசுத்தரே அறி

கண்ணுக்குத் தெரியாச் சத்துவப் பிடியில்
மண்ணுக்கு உரமாம் மெய்

மீண்டும் மீண்டும் கருமத்தில் சுழற்றுஞ்சதி
தாண்ட அன்பே கதி
(கருமம்=இருள்சேர் இருவினை)

உச்சியின்மேல் இறுகிய பாறையாம் மாயையை
சல்லடையாய் இளக்கும் அன்பு

சத்துவக் குருடு நீங்கி விழிக்க
மெய்க்குரு அருளை நாடு
(மெய்க்குரு=மெய்க்குள் உட்போதகராய் என்றென்றும் வாழுங் குரு)

முக்குணம் பின்னும் மாய வலையை
வெட்டுமே அன்பை அறி

தொண்டையின் நஞ்சை மண்டைக்குள் சுழற்றி
மீண்டும்மெய்க் கூட்டும் மாயம்
(தொண்டையின் நஞ்சு=இருள்சேர் இருவினைப் பதிவுகள்)

மாயை பிளந்து மாற்றிப் போட
மாயா முதல்"ஐ" யாம்"
(மாயை=மாய் ஐ=யாம் ஐ=ஐ யாம்)

நாகமயல் இராவிடியும் "ஐயாம்" விளக்கம்
தேகமதில் மாயாநிலை காண்

நாகரா
30-03-2009, 04:20 AM
சத்திய நிலைதனை புத்திக்கு மறைக்கும்
சத்துவத் திரையினைக் கிழி

சத்துஞ் சித்தும் ஆனந்தமாம் நிதர்சனம்
முக்குணப் பித்தம் மறைக்கும்

இறைவனோடு நினக்கிருக்கும் நேரடித் தொடர்பை
மறைத்திட்டே நினைமருட்டும் மாயை

சுத்த வெளியில் படியா மாயைக்கு
பித்த மனமே கதி

முக்குணம் நால்வருணம் என்னும் பேதைமை
நின்மனம் ஏற்றியவர் கயவர்

எங்கும் நிறைபொருளை நின்மெய்யின் உயிர்ப்பொருளை
அன்பாய் இறைபொருளை அறி
(பொங்கும் அருட்பொருளை அறி)

நாகத்தின் கரும்பா நஞ்சு மாயைதீர்
யோகத்தின் கசப்பு மருந்து

பிடித்தாட்டும் மாயையைப் பெயர்த்தெறியும் அன்பின்
வடிகாலாய்ப் புவிமிசைநீ இரு

இருப்ப தெல்லாம் அன்பொன்றே சிவமதை
விரும்பி உள்ளே நாடு

நாடுங் கடவுள் நின்மெய்யகம் புறத்தே
தேடும் அவத்தை விடு

நாகரா
19-06-2009, 09:37 AM
இங்கென்றும் அங்கென்றும் கல்லுருக்கள் பலகாட்டி
உங்குன்மெய் தங்குமொன்றை மறைப்பார்

கல்நிறுவன வியாபாரப் பொய்கைவிடு! கடவுளின்
மெய்நிறுவன உடம்பாரைப் பேண்!

கல்லுக்குக் கல்லில்லம் கட்டிக் கடவுள்வாழ்
இல்லென்றால் மெய்யில்லம் ஆர்க்கு

நெற்றியுள் சுடருந்தூ வெண்மையே வெளியே
தொற்றியே படருந்திரு நீறு

நாத நாமத்தில் செம்பொருள் விந்து
நாசி மேல்நீளுங் குறி

பரிசுத்த ஆவி இறக்கமும் பரமபிதா
படர்கையும் குமாரச் சிலுவை

சத்துவத் திமிரைக் கொல்லும்புனி தப்போரே
உத்தமர் நபிஉப தேசம்

நாகரா
19-06-2009, 09:45 AM
http://www.harmonichearts.com/resources/downloads/art/IL_LowRez_8.5x11_72dpi.jpg

ஒளிந்த இருதயம் ஒளிர அன்பில்
களித்து இருத்தல் சுகம்

சுகந்தரும் அன்பைத் தாழிட்டே அடைக்க
இகத்தினில் வந்ததே நோய்

நோய்தீர் மருந்தாய்ப் புன்னுடல் எங்கும்
பாயும் அன்பில் தோய்

அண்டம் யாவும் பிண்டத்தில் அடக்கும்
மண்டல இருதயத் திரு

திருபூமி இருதயம் திறக்கும் மெய்க்குரு
உருவாகி தயவாய் இரு

இருதய மண்டலம் துரிசுகள் எரிக்கும்
அருட்கனல் அமரும் பீடம்

உள்ளே கடந்தால் தலையை விளக்கும்
அன்பாம் இருதய ஒளி

நாகரா
20-06-2009, 03:37 AM
http://www.harmonichearts.com/resources/downloads/art/PIH_LowRez_8.5x11_72dpi.jpg

ஈர இருதயத்தே படரும் பசுமை
பூமி வளம்பெருக்கும் மூலம்

மூலத்தை நினைந்து தியானத்தில் இருக்கத்
தூலத்தே இயற்கை நேசம்

நடுநிலைப் பெரும்பொருளை மனதில் பற்ற
திருநிலை இருதயவாய் திறக்கும்

அன்பே அடர்ந்த இருதயக் காட்டில்
தன்னை இழக்குந் தவம்

விழிமூடி உள்ளே விழிக்க மெய்க்குள்
வழிந்தோடும் பசிய ஈரம்

இருதய ஈரத்தில் மனச்சூடு தணிய
திருபூமிப் பசுமை உணர்வு

நாகரா
21-06-2009, 03:06 AM
http://www.harmonichearts.com/resources/downloads/art/IB_LowRez_8.5x11_72dpi.jpg
திருவிழிப் பூட்டை உடைக்கும் மெய்வாழ்உட்
குருவிழிப் பார்வை பற்று

பற்றும் எல்லாம் பட்டென விட்டுப்
பற்றிய ஒன்றால் ஒளி

அளப்பரிய பெருமை மனப்பதியில் மின்ன
பளபளக்கும் மெய்யாம் உடம்பு

நாகரா
22-06-2009, 02:53 AM
http://www.harmonichearts.com/images/teka_art/WTB_LowRez_8.5x11_72dpi.jpg
இருவிழியில் தெரிவ தெல்லாம் தூயநோக்கத்
திருவிழியில் துரிசு ரியும்

துரிசுரியுந் தூய நோக்கம் நினக்குப்
பரிசளிக்கும் நேசன் குரு

குருமொழி அகத்தே கேட்கத் திறக்குந்
திருவிழித் தூய நோக்கம்

நாகரா
22-06-2009, 02:53 AM
நோயின் இடத்தே நோய்தீர் மருந்தாய்ப்
பாயும் அற்புதம் அன்பு

அன்பெனும் அருமருந்து அங்கையில் இருக்கையில்
இன்பெனும் பெருவாழ்வு உறுதி

உறுதியாய் மெய்தான் உடம்பு சாவெனும்
இறுதியும் பொய்தான் நம்பு

நம்பு மெய்க்குள் உத்தம மருந்து
அன்பு!உய்ந்துள் அருந்து

அருந்தும் நீரில் உண்ணும் உணவில்
மருந்தாய் ஒளிந்த அன்பு

அன்புக்குத் தாழிட இயலாதே முயலும்
வன்புக்கும் வாழிடம் அன்பே

அன்பே சிவமெனத் திருமூலர் உரைத்ததை
உள்ளே தவத்தினில் உணர்

உணர்வாம் உயிரில் அமுதாய்க் கரைந்தே
உளதாம் அன்பே உணவு

உணவின் சுவைபோல் மெய்யில் எங்கும்
உயிர்த்தே உறைக்கும் அன்பு

அன்பின்றேல் என்பும் இற்றுவீழும் உயிர்நிலை
அன்பொன்றே எதற்கும் உறுதி

நாகரா
23-06-2009, 03:36 AM
சரளமாய்ப் பொழியும் வெண்பால் அருளே
பொருளாய் மொழியும் கரும்பா

மெய்யுள் உறங்கும் தெய்வம் விழிக்க
வையத் திருதய வாய்

வாய்பேசா மோனத்தில் செவிமடுப் பாய்உட்குரு
தான்ஓதும் ஞானத்தை நீ

யாவினுள்ளும் வாழுகின்ற ஆதி ஒன்றை
ஆவிசொல்லும் மந்திரத்தில் வாசி

வாசி சமரச நாதம் அதுஇகத்தில்
வாழும் பராபரப் பாதம்

பாதம் பதிய நடக்கும் பராபரம்
பாரில் எதிலும் பார்

பார்க்கும் இடமெல்லாம் இறைந்த பராபரம்
பார்க்க இருதயமே விழி

விழிப்புத் தவங்களே வாழுங் கணங்கள்
சுழிந்துள் நிஜமிதை அறி

அன்பை அறிவிலேற்றி அருள்விளக்கம் உற்றிற(ர)ங்கி
இங்கே இருதய வாய்

அன்பெனும் அழியாச் செம்பொருள் அறிவினில்
உற்றதும் பொழியும் மருந்து

நாகரா
24-06-2009, 04:05 AM
உள்ளே சுழிந்து விழித்திருக்க வழியும்பெருந்
தெய்வத் துண்மை விளங்கும்

ஆதிமுதல் ஒன்றே யாவிலும் வாழும்
சோதியெனும் உண்மை அறி

இகத்தில் பரத்தின் முழுமை வெளிப்பட
இதத்தில் மனத்தை விரி

இதத்தில் நின்மனங் கனிய இருதய
இடத்தில் நிர்மலன் உணர்

ஆதிமுதலை புறத்தே தேடும் அவம்விட்டு
சோதியதனை அகத்தே காண்

பேதங்கள் யாவும் மொத்தமாய் விட்டுக்கேள்
ஆதிமுதல் சமரச நாதம்

யாங்கணும் முழங்கும் சமரச நாதம்
கேட்டதும் உயிர்க்கும் மெய்

ஆதிமுதல் நினக்குள் முழங்கும் சமரச
நாதவொளி தரும்மெய்ஞ் ஞானம்

ஆதிமுதலை நினக்கு உணர்த்தும் மந்திர
வாசியமுதை விரும்பி வாசி

ஆதிமுதல் யாவிலும் சரிசமமாய் விளங்கும்
நாதவொளி மூச்சதில் வாசி

நாகரா
25-06-2009, 03:01 AM
பொய்ம்மனச் செருகல்கள் யாவும் பிடுங்கும்
மெய்க்குரு ஒருவன்தான் "நான்"

"நான்"எனும் தன்ஞான நியதியை விட்டால்
ஆணவ அஞ்ஞான சகதி

அதுஇது அடைகள் யாவும் விட்டு
உதுநடு அடைந்தால் "நான்"

அமைப்புகள் யாவுங் கடந்த ஆதிமுதல்
அடங்கிய வீடே உடம்பு

மதகுருமார் பின்னும் மாயவலை வெட்டி
இருதயவாய் உய்தல் இலக்கு

படத்தில் தொங்கும் தெய்வம் விட்டுன்
உடம்புள் தெய்வம் பிடி

உடம்பாய் உயிர்த்திருக்குந் தெய்வம் விடுத்து
திடக்கல் சிலைக்கெதற்குப் பூசை

உருவத்தில் அருவம் வாழும் பெருமையை
உடம்புக்குள் உணர்த்தும் உயிர்மை

கல்நிறுவன வியாபாரம் தழைக்க மெய்ம்மறைக்குஞ்
சொல்நிறுவனம் விரிப்பாரை விட்டொழி

நாகரா
26-06-2009, 03:07 AM
காலவெளி முதுகின்பின் சுழியக் கண்டத்தில்
சேருஞ்சத்தி தலைக்கூட்டும் செம்பொருள்

(When Time-Space Collapses during Meditation around the Vertical Column of Spinal Cord, Pure Energy is released in the Throat Region(Visuddhi Chakra) which condense into Pure Matter or the Ambrosia, the Elixir of Life in the Brain Center. When this Elixir descends into the Body, You achieve Immortal Life.

Heart-Space-வெளி
Mind-Time-காலம்
Breath-Energy-சத்தி
Body-Matter-(செம்)பொருள்

STEM - Space, Time, Energy, Matter)

தியானத்தில் என் அனுபவம், ஆங்கில விளக்கத்தின் ரத்தினச் சுருக்கமாகத் தமிழ்க் கரும்பா! மனிதம் விரைவில் அடையப் போகும் மாயா நிலை இது!

கால வெளியைச் சுழிய வைப்பதும்
சத்தியாக்கி அதிலிருந்து செம்பொருள் வழிய வைப்பதும்
உம் இருதய நடு அன்பே!
நீவிர் மன இதத்தில் பழுக்கும் ஓர் கணத்தில்
உம்மில் இது நடக்கும் நிச்சயம்!
செம்பொருள் வழிந்த பின் மரணம் மடியும்!
மனிதம் அமர நிலை எய்தும்!

நாகரா
27-06-2009, 03:25 AM
முதுகுத் தண்டில் கழியுங் காலவெளியே
அமுதச் சத்திப் பொருள்

ஞால திடங்கள் யாவும் கருணையாய்
வாழும் சிவத்தின் தடங்கள்

செங்குத்தாய்க் காலவெளி ஒடுங்கும் முதுகுத்
தண்டில்தாய்ச் சத்திதரும் செம்பொருள்

In Vertical Time when past, present and future converge into the Eternal Now, Space Collapses releasing the Primal Energy which in turn gives rise to the Primordial Matter, the Substance of Love

செம்பொருள் அன்பே சத்தியாகிக் காலவெளி
எங்கணும் விரிந்த சிவம்

பரம்பொருள் ஒன்றே சத்தியும் அதுபடைக்கும்
பருவெளி காலம் யாவும்

இருதயப் பழஞ்சுற்றி ஒடுங்கும் காலவெளி
பிழியுதே சத்திச்செம் பொருள்

சத்திச் செம்பொருள் பிழிவை நின்மனம்
உண்ண மெய்யுளே உயிர்மை

இங்குமங்கும் அலையாமல் ஊங்கே மெய்யுள்
செங்குத்தாய் ஓங்குவதை உணர்

செங்குத்தாய் ஓங்குவதை உணர்ந்தே மெய்யுள்
பொங்குந்தேன் உண்டிங்கே இரு

சும்மா வந்துபோகும் மூச்சைக் கவனமாய்ச்
சும்மா குந்தியேநீ வாசி

நாகரா
28-06-2009, 03:41 AM
வாசிக்க விழிசெவி தயவாய் இகத்தை
நாசிக்குள் வழியும் பரம்

காண்பன யாவும் இருதயம் விழுங்க
காண்பவன் நோக்கில் தெளிவு

தெளிவு உன்னில் பிறக்க மனத்தை
ஒளிநீ இருதயத் துள்

துள்ளும் உயிர்ப்பில் இழைந்த சமரசம்
அள்ள மெய்க்கு உறுதி

இருதயத் துள்ளே மனந்தான் ஒடுங்க
பெருந்தயா வெள்ளப் பெருக்கு

பெருக்க அருளொளி வேகத்தின் எண்ணிலி
அடுக்கால் மெய்யை வெளி

உள்ளும் ஊடும் சுற்றிலும் எக்காலும்
துள்ளும் ஊற்றே அன்பு

அன்பைப் பொழியும் இருதயம் நாடு
மெய்யை உயிர்த்து வாழு

தூல இதயத்தே நாட்டம் வைத்து
மூல இருதயம் காண்

காண்பதுங் கேட்பதும் இருதயத்துள் இட்டு
மூச்சதுள் மூழ்கவை மனம்

நாகரா
29-06-2009, 02:48 AM
அருமெய் அருமை புரிய அரிய
உருமெய்க் கருவுள் புகு

உட்குரு வழிப்பட மெய்யுள் நாடு
சத்தியக் கருவதே உயிர்

இருதய அன்பை உணரத் தலைக்கேறும்
அருளது அன்றோ விளக்கம்

துடிக்கும் இதயத்தின் மூலமாம் இருதயம்
வடிக்கும் அமுதத்தைப் புசி

இருதய வாசல் திறந்திருந்தும் பொய்ம்மனச்
செருகலால் நேசம் மறந்தாய்

அன்பே நின்னியல் என்றே விளங்க
இன்பே நின்னுரு வாகும்

உள்ளே உறையும் அன்பெனும் துரையை
உள்ளத் திரைகள் கிழியும்

வேணு கான நாதம் முதுகடி
நாகப் பாம்பை எழுப்பும்

விளக்கம்: வேணு கான நாதம் = உள்ளுறையும் சற்குரு அருண்மொழி(ஒலி தத்துவம்)
நாகப் பாம்பு = குண்டலி சக்தி(ஒளி தத்துவம்-விந்து)

காட்சியுங் கேள்வியும் இருதயத் தொடுங்க
மூச்சினில் அன்பினை உணர்

மன்னிக்க இயலா மனத்தின் இறுக்கம்
துண்டிக்க இருதயத் தொடுங்கு

நாகரா
30-06-2009, 03:00 AM
குழம்பக் குழம்பத் தோன்றும் அமிழ்தம்
விழுங்கித் தெளிவைப் பெறு

பெறுவதுந் தருவதும் அன்பெனும் அரும்பொருள்
திறந்தநின் இருதயத் திருந்து

தூலகுரு தீட்சைக் கோடும்நீ நின்னகம்வாழ்
மூலகுரு நாடி நில்

நில்லாக் கடத்தை நிலைபெறும் பெருவாழ்வில்
பொன்மெய் யாக்கும் உட்குரு

உட்குருவை விட்டு அக்குரு இக்குருப்
பொய்யுருவைப் போற்றுவ தேன்

தேனாய் இனிக்கும் குருமொழி அகத்தே
கேளா தலையும் பேய்மனம்

தூலகுரு நாட்டம் விட்டு நின்னகத்தே
மூலகுரு நாடி இரு

இருக்கும் இடமாம் மெய்யேஉட் குருபீடம்
இருப்பார் அவரே உயிர்ப்பு

உயிர்ப்பாய் உள்ளுறை குருவார் தம்மை
உணர்ந்தால் பொன்னுடல் மெய்

மாயா நிலையைத் திரைகளால் மறைக்கும்
மாயை வெளிக்குரு பீடம்

நாகரா
01-07-2009, 02:01 AM
படங்களில் மாட்டிய உருவங்கள் உயிர்த்திருக்குந்
திடங்களில் மாட்டிய செருகல்

செருகல்கள் பலவுள மனம்மெய் முழுமையும்
உருவுஞ்சற் குருவுளார் நின்னகம்

உய்விப்பார் இக்குரு அக்குரு எனப்பொய்கள்
விற்கும்பார் இச்சக மெங்கும்

உய்விப்பார் உக்குரு ஒருவரே உட்குரு
உய்ந்துள்ளார் இருதயத் தே

தேகத்தில் திறந்திருக்கும் இருதய வாய்தன்னில்
யோகத்தில் விழித்திருப்பாய் நீ

நீயாரென வினவி விடைகளை உதறி
நானேயென ஏகத்தை அடை

அடைவாய் விரிந்திருக்கும் இருதயக் கடையுள்
அடைந்தே கொள்நலங்கள் யாவும்

யாவுங் கடந்தும் யாவிலும் புகுந்த
நேயம் புரிந்தால் நிலை

இருதயத்தே துடிக்கும் நேயத்தை விளக்க
திருக்கடத்தே நடிக்கும் நாயகம்
(நடிக்கும்=நடனமாடும், திருக்கடம்=மெய்யுடம்பு)

தீபத்தே அருட்ஜோதியைச் சுட்டிய வள்ளலைத்
தூலத்தே உருவேற்றலோ பூசை

நாகரா
02-07-2009, 02:08 AM
பூசை கற்களுக்கு வேண்டா நெஞ்சில்
நேசம் உயிர்கள்பால் இருந்தால்

இருந்தாலென் தேகம்மேல் நெய்த வெள்ளங்கி
அருளங்கி வெண்மையை நாடு

நாடு குருவை நின்இருதயத் துள்வெளியே
தேடும் ஓட்டம் விடு

விடுவெளிக் குருநாட்டம் உள்ளுறை மெய்க்குரு
தொடுஇரு தயவீட்டில் இரு

இருதய இருப்பு அன்பெனும் வற்றாப்
பெருக்கினுள் மூழ்கி இரு

இதம்விட்டு இனம்பற்றி பேதங்கள் பேணும்
மனந்தன்னை ஒருமைக்கண் திருப்பு

இனங்கள் யாவுமே ஓர்குல மனிதம்
இருதயம் மேவினால் புரியும்

உயிர்கள் யாவுமே ஓர்குல மென்னும்
உன்னத நோக்கமே வேண்டும்

தோல்நிறந் தாண்டி மெய்யுள் இறங்க
ஆழ்நிலை யார்க்கும் ஒன்றே

ஒன்றே உயிர்ப்பு எல்லா மெய்களின்
உள்ளே உணர்ந்தால் உயர்வு

நாகரா
03-07-2009, 01:44 AM
இயற்கை யுண்மை யாவிலும் ஒன்றே
செயற்கைப் பொய்மை கைவிடு

பிறப்பினால் யாவுஞ் சமமே இவ்வுண்மை
மறந்ததால் பாழும் பேதம்

யாதும் ஊரேயென ஞால முழுமையும்
நேசத் தோடேதழு விடு

யாவருங் கேளிரென மனித குலத்தை
நேசிக்க இருதயத்துள் அடங்கு

நாகரா
04-07-2009, 03:09 AM
அன்றெனக் கடந்தவனே உண்டென இறைந்தவனாம்
தெற்றென விளங்கிடலே ஞானம்

Transcendental Godhead(Father Most High) is the Immanent Godhood(Divine Primordial Mother). Full Realization of this Unity is Wisdom(Gnosis)

கடவுள்(நிர்க்குணப் பிரம்மம்) = இறைவன்(சகுணப் பிரம்மம்)

நாகரா
05-07-2009, 09:49 AM
வீழும் பொய்க்கடமும் பொன்மெய்யாய்த் தான்உயிர்த்து
வாழும் மெய்வழியொன் றுண்டு

ஞான குருமணியே வான்விட் டிறங்கி
தேக உருவெடுத்த நீ

உருவ குருக்களின் காலில் விழாமல்
அருவ குருவினுள் எழு

உருவ குருக்களின் பிடியில் சிக்கி
அருவ குருவினை மறப்பாய்

உருவ குருக்களின் ஈர்ப்பைத் தாண்டி
அருவ குருவினைச் சேர்

குருநபி அருவம் இருதயக் குகையுள்
இருப்பதை உணர்த்துந் தவம்

உருவ குருக்களின் செருகல்கள் உருவ
அருவ குருவருள் துணை

நாகரா
06-07-2009, 02:36 AM
மாயைத் திரைகள் யாவுங் கிழிந்த
மாயா நிலையே முடிவு

முடிவின்றித் தொடரும் மரணம் முடியும்
விடிவொன்று நிச்சயம் உண்டு

உண்டு பிறப்பெனில் உண்டு இறப்பு
ரெண்டுங் கடந்ததே வாழ்வு

வாழ்வெனும் மாயா இருப்பில் கரைந்தே
ஊழ்வினை மாயை தாண்டு

நாகரா
07-07-2009, 02:45 AM
விஞ்ஞானக் கண்ணோட்டம் மெய்ஞ்ஞான அன்போட்டம்
ஒன்றாத புன்னோக்கம் வீண்

அவதேகம் உரிந்து பவமெலாம் எரிந்து
சிவமேனி உயிர்க்கும் நவம்

மாயைப் பொய்த்தோற்றம் மாயும் இருதயத்தே
மாயா மெய்க்கோலம் பூண்

திருபூமி திரிந்த புன்னிலை மாற்றக்
குருநாதர் இற(ர)ங்கும் மெய்வழி

எவ்வொன்றிலும் உறையும் அவ்வொன்றே ஐயாம்
அச்சிவாயம் உயிர்ப்பதை நாடு

நாகரா
08-07-2009, 04:14 AM
தோன்றி மறையும் நிலையிலா உருக்கள்
தாண்டி நிற்கும் அருவம்

அழியும் பொருட்கள் சேரும் அழியா
அருளுள் முழுதா யடங்கு

இருதயத் தடங்கல் இல்லா தொழியவோ
இதமன எழுச்சிக் கே

உருவகுரு காலில்போய் விழுந்தால் போகுமோ
கருமவினை சேர்அருவ குரு

உருவகுரு படம்மாட்டிப் பூசை செய்வாய்
அருவகுரு திடமெய்யுள் உயிர்

உருவகுரு தேடியே ஊரெங்கும் அலைவாய்
அருவகுரு அங்கையில் கனி

உருவகுரு மடத்துக் கோடிப்பொருள் தருவாய்
அருவகுரு மடந்தான் நின்மெய்

நாகரா
09-07-2009, 03:45 AM
கற்கோயில் புதுப்பிக்கப் பொருளுதவி செய்வாய்நின்
மெய்க்கோயில் உயிர்ப்பிப்பார் ஆர்

கற்கோயில் குடமுழுக்கு கற்களுக் கலங்காரம்
மெய்க்கோயில் குருமுழுக்க மறந்தாய்

பாலாலே தேனாலே கல்லுக்கு குளிப்பாட்டு
தாராயேன் ஏழைக்குச் சோறு

யோக்கிய வெளிவேடம் அயோக்கியத் தனம்மூடும்
ஆக்கிய அவன்ஆளா நீ

நாகரா
10-07-2009, 02:50 AM
தயவெனும் ஆன்ம நேய இயக்கம்
தரணியில் ஊன்ற வேநீ

ஒருமைப் பேரொளி சமரச நாதம்
ஒவ்வொரு மூச்சிலும் வாசி

ஒன்றே யாவும் என்றே விளங்கி
அன்பை வாரி இறை

ஆதி மூல சமரச நாதம்
ஞாலத் தோட வேநீ

ஆழ மூழ்க இருதயத் துள்ளே
ஆதி மூல மேநீ

ஆதி மூலத் தூறி இருந்தே
மாசு யாவுங் கரை

ஆதிமூல சமரச நாதங் கேட்டால்
மாயுமேபார் பேதம் யாவும்

நாகரா
11-07-2009, 02:06 AM
ஆதிமூல நாதவிந்துப் பாதம் இரண்டும்
வாசியோடு மேல்பதியும் போதம்

ஆதி மூலம் = First Source
நாதம் = The Word(ஆதியில் எல்லாமே வார்த்தையாய் இருந்தது - புனித யோவான்)
விந்து = Light(நானே உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறேன் - புனித யோவன்)
வாசி = மூச்சு(நானே மெய்வழி ஜீவனாயிருக்கிறேன் - புனித யோவான் - அதாவது மெய்யேனும் உடம்பின் வழியே ஓடும் உயிர்ப்பாய், மூச்சாய் நான் இருக்கிறேன்)

மூச்சை நாம் ஒவ்வொரு முறை உள்ளிழுக்கும் போதும், தேவனின் ஜீவனுள்ள வார்த்தையும்(ஓங்கார நாதம்), அவரது ஞான ஒளியும்(அருட்பெருஞ்ஜோதி) நம் சிர உச்சியில் ஆழப் பதிந்து, நம்மில் மெய்ஞ்ஞான போதத்தை ஏற்படுத்தும்! மூச்சை நாம் ஒவ்வொரு முறையும் வெளி விடும் போதும், "யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்ற அடிப்படையில் இந்த மெய்ஞ்ஞான போதத்தை நாம் ஞால முழுமையும் பகிர்கிறோம்! இறை ஒளி, இறை ஒலி, பரிசுத்த ஆவி(நம்ம மூச்சு தானுங்கோ!) இம்மூன்றின் இரசவாதம் நம்முள் பொங்கும் அமுதம், இந்த அமுதத்தின் திடப்படுதல் அதாவது உறைதல் நம் மெய்யாம் காயம், ஆக நம் மெய்யே திடமான காய கற்பம்! பரிசுத்த ஆவியை அதாவது நம் மூச்சை நமக்கு கவனிக்க நேரமில்லாத போது, இந்த ஞான வாக்கியமும் செவிடன் காதில் ஊதிய சங்கே! நம்ப முடியாத எளிமையாய் நான்மீக மெய்ஞ்ஞானம் இருக்கும் போது, அஞ்ஞான ஆன்மீக வியாபாரம் அமோகமாகத் தான் நடக்கும்!

நாகரா
12-07-2009, 03:32 AM
நாச மாகாமல் நாமிருக்க ஆன்ம
நேய ஒருமையே வழி

புதியதோர் உலகம் செய்வோம் அவதாரப்
புருஷராய் நாமே எழுவோம்

நாகரா
13-07-2009, 04:38 AM
சத்தியே தூலத்தின் மூலம் அடங்கும்
சத்தியும் ஆதிசிவத் துள்

சத்தி = Energy = E = உயிர்
தூலம் = Mass(Matter) = m = மெய்
(E = m x c square, சத்தி = நிறை x ஓளியின் வேகத்தின் வர்க்கம், உயிர்மெய் ஒருமையை நிரூபிக்கும் ஐன்ஸ்டீன் அவர்களின் அருஞ்சூத்திரம்)
ஆதி சிவம் = First Sorce
சத்தி ஆதி சிவத்திலிருந்தே எழும் புனித ஆவி(Energy is Holy Spirit emanation from First Source)

தூல மெய்யுள் ஓடும் சத்தியாம் உயிர்ப்பை மூச்சை வாசியைப் பிடித்தால், அது எழும் ஆதி சிவம் நம் பிடியில்! தூல மெய் சக்தி உயிர்ப்பாய்க் கரைந்து, ஆதி சிவத்தில் அடங்க, மரணமிலாப் பெரு வாழ்வு!

நாகரா
14-07-2009, 06:29 AM
மெய்யுள்ளே சுத்த ஆவியாய் ஓடும்
எந்தையைச் சுட்டுஞ் சுதன்

மனவயப் பட்டாய் எண்ணச் சுழலில்
இருதயம் விட்டாய் நீ

இருதயம் பற்றியே எண்ணச் சுழலை
இருப்பினில் மொத்தமாய்க் கழி

சும்மா இருக்கலாஞ் சுகமாய் இருதயத்
துள்ளே சுருண்டால் மனம்

காலச் சுழற்சியுங் கரும வினையும்
ஞான யோகத்தால் கழியும்

பேதம் போற்றும் மனத்தை இருதய
நேசத் தூன்றித் திருத்து

இசங்களைத் தாண்டி இதத்தில் மனத்தை
இருத்தினால் இருதயந் திறக்கும்

உள்மெய் ஏகமே அநேகமாய் விரிந்தும்
மெய்யுள் ஆடுமோர் உயிர்

நாகரா
15-07-2009, 07:34 AM
விக்கிரக ஆராதனை வெளிக்குரு பூசை
நின்னகம் பாராயோ ஆண்டவர்

எதிலும் இருப்பவனே நின்னகம் இருக்க
எதற்கோ விக்கிரக பூசை

கல்லுருக்கள் வணங்குவாய் மெய்யுருக்கள் யாவிலும்
உண்ணின்ற உயிர்ப்பதே ஆண்டவம்
(உண்ணின்ற = உள் நின்ற)

நாகரா
16-07-2009, 03:09 AM
குணமுங் குற்றமுந் தாண்டி நடுமிகும்
குருவே எல்லோர் நிஜம்

குணஞ்சொல விரியுங் குற்றஞ்சொலக் குவியும்மனப்
பிணக்கினை அறுப்பார் சற்குரு

நாகரா
17-07-2009, 03:27 AM
பொன்னணிகள் அலங்கரித்துக் கல்லுருக்குப் பூசைஏழை
மெய்யுருவின் பசிக்கில்லை சோறு

மெய்யெலாம் ஈரம்மிக கல்லுருமுன் ஓலமிட்டும்
நின்னகச் சாரந்தொடல் அரிது

நெஞ்செலாம் ஈரம்மிக மெய்உயிர்க்கும் வாசிதொட
நின்னகச் சாரந்தொடல் எளிது

(வாசி = மூச்சு, விஞ்ஞானம் பிராண வாயுவை-ஆக்சிஜன்-யும், கரியமில வாயுவையும் அறியும், மெய்ஞ்ஞானம் "சிவா" அவரின், அல்லாவின், பரமபிதாவின் அருட்தாரையை அறியும்!

வாசியில் வாழும் பரலோக வாசியை
வாசிக்க மாயும் மரணம்

மூச்சென்னும் இறைவனின் கொடையை மனிதர் நமக்கு மதிக்க மனமில்லை!

மூச்சே தாண்டா பேச்சு பேசியேஅது
வீணா னாலுயிர் போச்சு

இருதய அன்பை ஞாபகங் கொளல், மூச்சைக் கவனமாய்ப் போற்றுதல், இந்த இரண்டு படிகளை விரும்பி மேற்கொண்டால், எல்லாப் படிகளையுந் தாண்டலாம், நமக்கோ விருப்பம் அறவே இல்லை, எனவே தான் நமது இந்த அவ நிலை!)

நாகரா
18-07-2009, 03:49 AM
தீட்டெனும் மனக்காட்டம் நின்பால் ஆண்டவர்
ஓர்கணம் கொண்டால்நீ பிணம்

மனத்தில் தூய்மையைப் பேணாமல் விட்டு
சனத்தில் பார்ப்பானே தீட்டு

வாழுஞ் சனத்திலே பாழுந் தீண்டாமை
காணும் மனப்பிணி ஒழிக

உயிரில் ஒட்டாத் தீட்டு மெய்யுள்
உய்ந்தது எப்படிக் கூறு

பிறப்பிலொத்தநல் உயிர்களைச் சிறப்பிக்கும் மெய்களைப்
பிடித்ததெப்படிப் பொல்லாத் தீட்டு

காற்றுனைத் தான்தீண்ட மறுத்தால் நின்னுயிர்
போச்சலோ பார்ப்பாயோ தீட்டு

நாகரா
19-07-2009, 01:46 AM
தீமூட்டிப் புகையும்புற வேள்வி எதற்கு
நாபூட்டி அகத்துள்தவ மிரு

தீமூட்டி அவியிட்டு யாகம் குண்டலித்
தீமூலை உறங்கட்டும் பாவம்

நாகரா
20-07-2009, 01:57 AM
ஆரவார மடத்தில் உயர்ந்தோங்கும் பீடத்தில்
ஆணவத்தோ டமர்ந்த பொய்க்குரு

நீயிருக்கும் மெய்யுடம்பில் இருதயநடுத் திருத்தலத்தில்
ஆண்டவத்தின் தன்னடக்கம் மெய்க்குரு

நாகரா
21-07-2009, 12:58 PM
தடபுடலாய் வீட்டில் கணபதி பூசைமெய்
உடம்பகத்தே தூங்கும் மூலை

(மூலை = மூலாதர சக்கரம், முதுகடி, கணபதி மூலாதார சக்கரத்தில் உறங்கும்
சற்குரு தத்துவம், அதை மெய்யுடம்பாம் வீட்டுக்குள் அகத்தவத்தால் எழுப்பி,
நெற்றி நடு ஆக்ஞா சக்கரத்தில் ஆறுமுக பால குரு வடிவம் பெற்று, தலையுச்சி
சஹஸ்ரார சக்கரத்தில் சிவசத்தியோடு ஒன்றும் அகத்தவ சித்தியைக் கோட்டை
விட்டு விட்டு, புரோகிதருக்குத் தட்சணை மேல் தட்சணை கொடுத்துக் கணபதி
ஹோமம் புறத்தே வாழும் வீட்டில் செய்வதால் பெரும்பயன் எதுவும் இல்லை. சதுர
வடிவமாய் யந்திரங்களில் சித்தரிக்கப்படும் மூலாதார சக்கரமே மெய்யான ஹோம
குண்டம், அதில் எழுப்பபடும் குண்டலித் தீயே மெய்யான ஹோம நெருப்பு, இதுவே
புகையாமல் எரியும் நெருப்பு, இருள்சேர் இருவினைகள் கற்பூரமாய்க் கரையும்
நெருப்பு. மூலை = மூல + ஐ = மூலாதாரத்துக்கு அதிபதி = இவரே மெய்யான
கணபதி, வெளியே மஞ்சளில் பிடிப்பதும், களி மண்ணில் வடிப்பதும், கல்லில்
செதுக்குவதும், பஞ்சலோகத்தில் பண்ணுவதும் பொய்க் கணபதி!)

நாகரா
22-07-2009, 04:25 AM
நாமக் கூச்சல் புறத்தே எதற்குப்பர
நாதம் கேள்நீ அகத்தில்

பத்திவேடத் தோடே புறத்தே கூச்சல்சிவ
சத்திகூடும் யோகம் அகத்தில்

நாகரா
23-07-2009, 02:54 AM
நற்கோள்களைச் சுற்றிப் பொய்க்கோள்களைச் சுற்றி
மக்கள்தலை சுற்றித் தளை(சுற்றச் சதி)

நாகரா
24-07-2009, 01:18 AM
அகத்தே கருத்து புறத்தே வெளுத்து
சனத்தைக் கவரும் பொய்க்குரு

அகத்துள் இருப்பார் மெய்யுருக் குயிரார்
அருவாய் ஒளிந்தார் மெய்க்குரு

படத்துள் ஏறி மேலே தொங்குவார்
சனத்தை ஏய்க்கும் பொய்க்குரு

கடத்துள் இறங்கிக் கீழே இருப்பார்
படத்துள் பிடிபடா மெய்க்குரு

காலில் வீழும் சனத்தில் செருகல்
மாட்டித் திருடும் பொய்க்குரு

உச்சி பிளந்துன் உள்ளே பொழியும்
உட்குரு போதகர் மெய்க்குரு

நாகரா
25-07-2009, 01:33 AM
இதத்தில் மனத்தை இருத்தி அன்பின்
பதத்தில் தோயச் சுகம்

மனித நேயம் காணத் தாயின்
புனித நெஞ்சம் வேண்டு

பெண்மை போற்றும் ஆண்மை ஓங்க
மண்ணில் இர(ற)ங்கும் ஆண்டவம்

நாகரா
26-07-2009, 01:40 AM
புகழ்வதால் குளிர்வதும் இகழ்வதால் தகிப்பதும்
மனஇதம் இழந்தஆ ணவம்

தலைக்குள் கனமேறித் தரைமேல் தடுமாறும்
நிலைக்கு நீயஞ்சி அடங்கு

எல்லோரும் சரிநிகர் சமானமெனக் காணும்
நன்னோக்கே வேண்டும் நமக்கு

நாகரா
27-07-2009, 01:30 AM
பெண்ணே மெய்யாவாள் ஆணே உயிராவான்
பெண்ணிலாப் பேயாய்த் திரிவாயோ

ஆணே உயிராவான் பெண்ணே மெய்யாவாள்
ஆணிலாப் பிணமாய்க் கிடப்பாயோ

ஆணுயிரும் பெண்மெய்யும் உயிர்மெய்யாய் வாழும்
ஞாலத்தே ஆண்டவத்தின் நேசம்

ஆணுயிரும் பெண்மெய்யும் எதிரெதிராய்ப் போராடும்
ஞாலத்தே ஆணவத்தின் நாசம்

நாகரா
28-07-2009, 02:40 AM
இஸங்களைத் தாண்டி இதத்தில் மனங்கனிய
வசப்படும் இருதய நிசம்

இஸங்கள் = தீவிரங்கள்
இதம் = நடுநிலை

புறமே நிசமாய்ப் பழகிய பார்வை
அகத்தின் நிசத்தை மறைக்கும்

புறமே நிசம் = ஆண் பெண் என்ற அடிப்படை பேதம், மற்றெல்லா பேதங்களுக்கும்
வித்து.
அகத்தின் நிசம் = சிவ சத்தி ஒருமையை முற்றிலும் உணர்ந்த குரு மெய்

நாகரா
29-07-2009, 01:08 AM
ஆணின்றிப் பெண்ணில்லை பெண்ணின்றி ஆணில்லை
ஆண்பெண் ஒருமையே ஞாலம்

ஆணுக்குள் பெண்ணுண்டு பெண்ணுக்குள் ஆணுண்டு
ஞாலத்தில் ஆண்பெண்சரி சமம்

பேணுந்தயா ரூபம்பெண் ஆளுமறிவு ரூபம்ஆண்
பேரன்பதே இருவரின் மூலம்

நாகரா
30-07-2009, 12:45 AM
ஆணும் பெண்ணும் உலகின் கண்கள்அவை
காணுங் காட்சி ஒன்றே

பெண்முகம் பாராமல் சரீரத்தை வருத்தினும்
உன்மனப் பாறை உருகாது

பெண்ணைப் புணர்ந்தும் யோகத் திருக்கலாம்
கண்ணாம் இருதயந் திறந்து

பெண்ணைக் குத்தி உன்னொரு கண்ணிழக்கும்
ஆணே நினக்கோ பரகதி

ஆணைக் குத்தி உன்னொரு கண்ணிழக்கும்
பெண்ணே நினக்கொ பரகதி

ஆணும் பெண்ணும் கண்போல் போற்றும்
மாந்தன் நினக்கே பரகதி

நாகரா
30-07-2009, 12:46 AM
வேண்டும் நினக்கு இருதய அடக்கம்
வீண்தான் மதப்பிடி வாதம்

நாகரா
31-07-2009, 12:34 AM
தூலத்தை விட்டேநீ சூக்குமந் தேடுவாய்
தூலமே சூக்குமத்தின் வடிவு

சுத்தசிவமும் நற்சத்தியும் வேறற ஒன்றும்
நம்மிருதயம் ஏகாந்த தேசம்

சமாதி என்றால் பிணமாய் விழுவதோ
நல்லாதி யுள்உயிர்த் திரு

சமாதி என்றால் பேயாய்த் திரிவதோ
பகவன் மெய்யாய் இரு

நாகரா
01-08-2009, 04:03 AM
பெண்மெய்யும் ஆணுயிரும் ஒன்றுங் காதலுயிர்
மெய்யன்றி கூடுமோசொல் வாழ்வு

பிணமாய்க் கிடக்காது பேயாய்த் திரியாது
இணங்கு உயிர்மெய் ஒருமையில்

அன்பெனும் ஒன்றில் பிறந்தோம் தயவும்
அறிவுமாய்ச் சேர்ந்தே இயங்குவோம்

நாகரா
02-08-2009, 12:53 AM
காமத்தை அழிக்க தேகத்தை வாட்டும்
காதலை உணராக் கூட்டம்

மெய்யை அழித்தே மெய்சேர் வாயோ
உய்ந்தே குழியில் அழுவாய்

இகத்தை விட்டே பரத்தைத் தேடுவாய்
இகத்தைத் தொட்டே பரம்

மெய்தனை வருத்தி மெய்யைத் தேடும்
பொய்வழி பொருந்தல் அவம்

மெய்தனைப் பேணி மெய்யை அறியும்
மெய்வழி நாடல் தவம்

அருவ ஆண்டவமே ஆணாய்ப் பெண்ணாய்
உருவெ டுத்தஒரே நெறி

உடம்புக்கு மெய்யென்ற பேரேனோ உள்ளாழ்ந்து
உண்ணீராம் அன்புதனை உணர்

உலகைப் பாராமுகம் ஏனோ தயவோடு
உலகைப் "பார்"என்னுந் தமிழ்
(பார்=உலகம், காண்)

நாகரா
03-08-2009, 02:14 AM
ஞாலத்தே ஊனப்புலன் ஞானப்புல னாகமேம்
பாலத்தைத் திறந்தார்உட் குரு

காலஞ் செங்குத்தாய் முதுகேறிக் கழியக்
காயம் மெய்யெனும்உட் குரு

நாறுந் தேகத்தைப் பொன்மெய்யாய் மாற்றும்
ஞான போதகர்உட் குரு

ஈனப்பிறப்பும் இம்மையில் மாயா மறுபிறப்பாய்
மாறும்படிக்கே செய்தார்உட் குரு

ஓலமிட்டழும் பொய்ம்மரணம் யார்க்கும் ஒழிய
சீலமெய்வழி திறந்தார்உட் குரு

நோய்மூலம் நாசமாக மெய்யைப் பிணமாக்கும்
பேய்மாயை ஓட்டினார்உட் குரு

காமத்தைக் காதலன்பில் கரைத்துப் பெண்குலமே
தாயாராய்க் காட்டியஉட் குரு

மெய்யுடம்பைக் குடமுழுக்கும் பாலாறு மேல்திறந்து
உய்வழியை நிறுவும்உட் குரு

மெய்யின் திரிபினைத் திருத்தவே உயிராய்உள்
உய்ந்தே இருப்பார்உட் குரு

மூர்த்திபூசை மாமாயை தீர்த்தே மூலவரைப்
பார்உள்ளே என்றார்உட் குரு

இருதயமாம் ஏகாந்த தேசத்தே மனமடங்கி
இருதயவாய் என்றார்உட் குரு

குருமந்திர தாரணையில் உள்ளாழ்தலே பிரசாரம்
தெருசுற்றல் வீண்எனும்உட் குரு

மெய்யூரே திருச்செந்தூர் உயிராரே ஆண்டவர்எனும்
மெய்ஞ்ஞானந் தந்தார்உட் குரு

நாகரா
04-08-2009, 03:00 AM
நச்சு நாகம் உச்சி ஏற
நல்ல பாம்பாய் மாறும்

விளக்கம்:

நச்சு நாகம் = குண்டலி சத்தி ஏற்றத்தில் அவ்வச்சக்கரங்களில் வெளிப்படும்
கருமத் துரிசுகள், நல்ல பாம்பு = கருமத் துரிசுகள் யாவும் நீங்கிச் சுத்த
சிவத்தோடு கூடும் சித் சக்தி, இந்த சித் சக்தியே மாமாயை மயக்கத்தில்
முதுகடியில் உறங்கும் குண்டலி நாகம், ஆக குண்டலி நாகம் மூலப் பொருள்(raw
material), நல்ல பாம்பு முடிவுப் பொருள்(finished product)

துரிசுகள்
மூலாதாரம், முதுகடி: மரணபயம்
சுவாதிட்டானம், நாபியின் கீழ்: அவகாமம்(காமத்தை அர்த்தப்படுத்தவே
இல்லறம், காம நிறைவு உற்றவர்கள் மேற்கொள்ளுந் துறவறத்தைப் பார்த்து,
அத்தகைய நிறைவு உறாதவர்கள் துறவறம் மேற்கொள்ளுவது, உசிதமல்ல.)
மணி பூரகம், நாபி: ஆணவம்
சூரிய சக்கரம், உதரவிதானம், மார்படி: மருள் மயக்கம்
அனாகதம், நடு மார்பு: குற்றவுணர்வு, பழி தீர்க்கும் மனோபாவம்,
தன்னிரக்கம்
அமுத கலசம், தொண்டையடி, தைமஸ்: பேத பாவம், துவைத உணர்வு
விசுத்தி, தொண்டை: கரும நியதி, இருள் சேர் இரு வினைகளின் கூடாரம்.
கிடங்கு
ஆக்கினை: சுத்த மாயையான ராஜசம்(அடங்கா இயக்கம்-சித்தின் திரிபு) தாமசம்
(இயங்கா முடக்கம்-சத்தின் திரிபு)
சஹஸ்ராரம்: சுத்த மாயையான சத்துவம்(அஞ்ஞானம்-ஆனந்தத்தின் திரிபு)

நாகரா
05-08-2009, 02:55 AM
நல்ல பாம்பின் வாய் திறக்க
மெய்யுள் இற(ர)ங்கும் வழி.

விளக்கம்:
முதுகடியில் உறங்கும் குண்டலி நாகம் எழுந்து சக்கரங்களைக் கடந்து, அவ்வத் துரிசுகள் நீங்கி உச்சியில் நல்ல பாம்பாய் மறு பிறப்பெடுக்க, ஆறாதார மெய்யுடம்புள் ஏழ்நிலை நிராதார உயிர்மை இற(ர)ங்கும்! அதாவது மெய்யுடம்புள் மறைந்திருக்கும் மெய்வழிச் சாலை திறக்கும்! இதுவே அருளின் இரக்கம், அருளின் இறக்கம், இது நடைபெறும் வரை நாம் நடைப் பிணங்கள் தாம்
(இந்த நாகமுந் தான்)!

நாகரா
06-08-2009, 01:17 AM
நமக்குக் காலமில்லை என்றார் வள்ளலார்
நமன்வரு முன்போற்றுவீர் மெய்யை

விளக்கம்:

தாம் ஜோதி ஸ்வரூபத்தில் மறையும் முன் வள்ளல் பிரான் பேருபதேசத்தில், அவசரத்தை வலியுறுத்த இதிகாசப் புராண சாத்திரங்களில் ஓய்வின்றித் தேடும் அவகாசம் இனியும் இல்லையென்றும், பர விசாரம் என்னும் அகத்தவத்தின் அவசியம் பற்றியும் கூறினார், 130 ஆண்டுகளுக்கு மேல் ஓடி விட்ட நிலையில் இப்போது நமக்குக் காலமே இல்லை என்று தான் சொல்ல வேண்டும், எனவே மரணம் நம் மெய்யுடம்பைப் பொய்யாகும் முன் நாம் மெய்யுணர வேண்டும், இகத்தில் நம் மெய்யுடம்புக்குள்ளேயே புதைந்திருக்கும் மெய்யாம் பர உண்மையை அவசரமாக உணர வேண்டிய கட்டாயம் நமக்கு இருக்கிறது, இதில் இன்னொரு பொருளும் உண்டு, காலமும் அதன் விரிவான ஞாலமும், காலங் கடந்த ஓர் அரும்பொருளிலிருந்தே, அருட்பொருளிலிருந்தே உருவாகின்றன. அந்த அரும்பொருளின் அருட்பொருளின் உன்னத வடிவங்களே நாம் என்பதால், நமக்குக் காலமில்லை, நாமும் மெய்யாகவே காலங் கடந்தே இருக்கிறோம், ஆனாலும் நமன் வரும் முன், கால மாயை நம்மைத் தின்னும் முன், நாம் மெய்யுணர வேண்டும், சீக்கிரம், சீக்கிரம், நமக்கு இனியும் அவகாசம் இல்லை, காலமே இல்லை!

நாகரா
07-08-2009, 01:08 AM
மரண பயம் போக மாயாத்
தரத்தை மெய்யுள் எழுப்பு

மாயாத் தரம்: அழிவில்லா மெய்யாம் சுத்த வெளியிலிருந்தே, படிப்படியாகப் பரிமாணங்கள்(multiple dimensions) இறங்கி அதன் தரம் ஒரு சிறிதும் திரியாமல், நாம் காணும் இப்பிரபஞ்சமும், அதில் நிலைபெற்றுள்ள நம் மெய்யும் உருவாகியுள்ளன.

சுத்த வெளி(Great Void)
அடுத்து அருள் ஒளி(Spiritual Light)
அடுத்துப் பரு வெளி(Material Space, பூதாகாசம்)
அடுத்துப் பரு ஒளி(Material Light, தீ)
கடைசியில் பொருள் வெளி(Physical Matter)
எல்லாவற்றுக்கும் மூலம் சுத்த வெளி
அது சுத்தமாயிருக்கக் கீழ் உருவாகும் எதுவும்
அசுத்தமாக வாய்ப்பே இல்லை.
அவ்வாறு அசுத்தமாகத் தோன்றுவதற்கு மூல காரணம்
நம் மனப் பிரமையே!

எனவே நம்ப முடியாவிட்டாலும், மனதளவில் இந்த மாயாத் தரத்தை ஏற்றுக் கொள்வோம், மரண பயம் தானாகவே ஓடி விடும்!

நாகரா
08-08-2009, 02:43 AM
சாந்தி வாலை மோனமே நாக
வார்த்தை வேர் மூலம்

உட்குரு வேணுகானம் எழுப்பும் மூலக்
குண்டலி நாகம்ஏறும் உச்சி

சேரும் சத்திசிவம் குருநடுவில் ஏறும்
நாகம் நல்லபாம்பாய் மாறும்

நாகரா
09-08-2009, 03:35 AM
உட்குருவே எப்போதும் நாட வேணும்
நின்கருத்தை அவர்மேல்வைப் பாய்

வெளிக்குருவால் ஏதும் ஆகாது உட்குரு
ஒளியருளே யாவர் மூலம்

இவனை அவனைப் புகழ்பாட வேண்டாம்
உவனாம் குருவுள் புகு

வெளிக்குரு நாட்டம் தரும்பெரு வாட்டம்
ஒளிக்குருத் தேட்டம் உள்ளே

நாகத்தின் காட்டம் விட்டு சேர்நீ
ஞானத்தின் தோட்டம் உட்குரு

பேரிலே குருகூட்டி ஏமாற்றும் பொய்க்குரு
வேரிலே குருவானார் மெய்க்குள்

மெய்யை வருத்தியே உயிரை விட்டு
மெய்யை அருந்துவாய் எப்படி

காழ்ப்புக் காட்டம் விடாமல் பரமேல்
வாழ்க்கை காணல் அரிது

நாகரா
10-08-2009, 02:14 AM
ஞாலமும் காலமும் ஆதி பகவன்
பாதமே ஞானமெய் தேர்

ஆண்டவன் அளித்தது சுத்த தேகமே
ஆணவந் தந்ததே அசுத்தம்

ஞான அவதாரம் நீஎன்பதை மறந்துஅஞ்
ஞான அபசாரம் செய்கிறாய்

நாகத்தைப் பழிக்கும் ஓலத்தை விட்டு
ஞானத்தால் நல்லபாம் பாக்கு

நோயில்லா வாழ்வில் சாவாமல் நிலைபெற
நாகத்தை நல்லபாம் பாக்கு

வாலைத் தாயைச் சரண்புகுந்தால் காம
நோயைத் தீர்ப்பாள் அவள்

மெய்யின் பொருள்திரித்து பொய்க்குங் கடமாக்கி
மெய்யின் உணர்விலாத மயக்கம்

நாகரா
11-08-2009, 02:20 AM
மூலத் துறங்கும் நாகரவம் உச்சி
ஏற நல்லபாம் பாகும்

காலங் கழியும் சத்தி ஏற்றத்தில்
ஞாலஞ் சுழியச் சிவம்

ஞாலத்தைக் காலத்தைப் பழிக்காமல் உறங்கும்
நாகத்தை நீயெழுப்ப ஞானம்

ஊனப்புலன் மயக்கைத் தெளிவிக்க எழும்நாகம்
ஞானப்புலன் அளிக்கும் உச்சி

காலம் தொலையும் இக்கணத்தில் மாயவலை
மாய ஞாலவுண்மை விளங்கும்

மாசு படிந்த பார்வைப் பிழையே
ஞாலத் துரிசின் காரணம்

தூய ஞாலங் காணக் கண்ணில்
தூசு நீங்க வேண்டும்

காலம் இக்கண விழிப்பில் கழியக்
காயம் என்றும் இளமை

ஞாலக் கால இகத்தில் பராபரத்தின்
தேவக் கோலம் நீ

இகத்தில் விரிந்த பரத்தை உணர்ந்து
இதத்தில் விரிநின் மனத்தை

நாகரா
12-08-2009, 03:27 AM
நாகம் எழுந்து உச்சி தாண்டத்
தேகத் தெழுமே சுத்தம்

நச்சு நாகமது நல்ல பாம்பாகத்
துச்ச தேகமாகும் மெய்

வஞ்ச நாகம் உச்சி தாண்ட
கர்ம நாசம் சித்தி
(குண்டலி ஏற்றத்தில் இருள் சேர் இரு வினைகள் யாவும் நசியும்)

நீபழிக்குந் தேகத்தை மெய்யென்னும் நற்றமிழ்
தூநிலையாம் நேசத்தைச் சேர்

தேக மெய்யைப் பழித்தும் வருத்தியும்
நேச உயிரை அழிப்பாய்

பரவுண்மை இகத்தில் மெய்யாய்த் திரண்டது
வரமதை இகழ்வா யோ

பராபரம் மூலத்தே நாகமாய் உறங்குது
படமெடுத் தேறவே ஞானம்

நாகரா
13-08-2009, 01:47 AM
பிறப்பில் ஒத்த உயிர்களை அஞ்ஞான
மறப்பில் பார்க்க பேதம்

இம்மையை ஈனமெனப் பழிக்க மறுமையின்
செம்மையைக் காணமுடி யாது

ஞானப் பதமொழிக்கும் நாகரவம் நல்ல
பாம்பாய்ப் பரிமாறவே யோகம்

நாகரா
14-08-2009, 01:17 AM
வேணுவைப் போலே காலியாய் இருந்தால்குரு
நாதரின் மூச்சால் நாதம்

வேணுபோல் உட்குரு நாதர் கைபொருந்த
ஊதுவார் மந்திர நாதம்
(பகவான் கிருஷ்ணர் = உட்குரு நாதர், புல்லாங்குழல்(வேணு) = வெளிக்குரு வடிவமாம்
நாம் ஒவ்வொருவரும)

வேணு ஊடே அன்பைப் பாய்ச்சிகுரு
நாதர் ஊதும் ஞானம்

நாகரா
15-08-2009, 01:05 AM
ஆணவம்"தான்" நீங்கி ஆண்டவம்"நான்" ஓங்கக்
காயப்பொய் பொன்மெய் யாகும்

("தான்" என்ற ஆணவம் ஒரு மாயத் தோற்றம் மாத்திரமே, அஞ்ஞானத்தால் தோன்றி மெய்ஞ்ஞானத்தில் கரையும் பனிப் படலம், "தான்" என்பது இன்னவன்(ள்) என்று நம்மை நாமே இறுக்கிக் கொள்ளும் அனந்த அடையாளங்கள், இதனால் பாயும் நீரோட்டம் "நான்" தேங்கிக் குட்டைகளாய் நாற்றமடிக்கிறது, "நான்" எல்லா
அடையாளங்களையும் அனுமதிக்கும் அதே நேரத்தில், எவற்றிலுந் தேங்காத தெள்ளிய அன்பின் நீரோட்டம், அதுவே நம் மெய்யின் உயிரோட்டம்! "நான்" என்பது பேதபாவம் ஒரு சிறிதும் இல்லா ஒருமைப் பேருணர்வு, இதைத் தான் திருமூலர்

"நான்" என்று "தான்" என்று இரண்டில்லை என்பது
"நான்" என்ற ஞான முதல்வனே நல்கினான்

என்று திருமந்திரத்தில் மெய்ஞ்ஞான உறுதியாய்க் கூறுகிறார்! "நான்" என்ற
ஒன்றே தான் நம் அனைவரின், இப்பிரபஞ்சத்தின் நிஜம்! இந்த ஒருமைப்
பேருணர்வு நம் மெய்யுள் ஓங்க நிஜமாகவே அழியா மெய்யாய் அது ஜொலிக்கும்)

நாகரா
16-08-2009, 12:01 AM
கனவு நனவு உறக்கமெனும் மயக்கம்
களைய விழிக்குந் துரியம்

மயக்கம் நீங்கித் துரியத்தே விழிக்க
மனத்தை இருதயத் திருத்து

துரியத்தே துரிசுரியும் துரியா தீதத்தே
தெரியுந்தூ யவொருவனே யாவும்

நாகரா
17-08-2009, 01:23 AM
தேவனாலே கூடாதது ஏதுமில்லை தேகமெய்
மாயாதே கூடவைப்பான் தன்னொடு

நாகரா
18-08-2009, 02:01 AM
ஞாலத்தைப் பழித்தே ஓலக்குரல் எழுப்பாமல்
நாகத்தைத் தவத்தே எழுப்பு

நாதரவம் அகத்தே கேட்குந் தவத்தால்
நாகரவம் எழுந்தே ஏறும்
(நாதரவம் = நாத ஒலி, நாகரவம் = நாகப் பாம்பு)

வாய்மூடி நாபூட்டி விழித்திருக்கக் குண்டலி
யாம்நாகம் எழுந்துச்சி சேரும்

நாகரா
19-08-2009, 02:25 AM
அகமே புறமாய் விரிந்தது விளங்க
அகத்துள் புறமே அடங்கும்

சகமும் இறையும் ஒன்றும் அகத்தில்
இதத்தில் இருக்கும் மனம்

உலகைப் பழிக்கும் கலக மனத்தின்
உளைச்சல் இருதயந் தீர்க்கும்

நாகரா
20-08-2009, 03:35 AM
புலப்படும் யாவும் அடங்கும் ஒன்று
புலப்படும் இருதய மையம்

பரிதி தொட்டுச் சுற்றும் ஆரங்கள்
பதிந்து நிற்கும் மையம்

நாகரா
21-08-2009, 01:29 AM
அதுவே சத்தி சிவமாய்ப் பிரிந்து
நடுவே ஒன்றக் குரு

பேதப் போர்வை ஆணவ மாயை
நேசப் பார்வை மறைக்கும்

தளைகளால் பிணிக்கும் மயக்க நோயைத்
தணிக்கவே உட்குரு மருந்து

எனதென்றும் உனதென்றும் பிரிக்கின்ற செருக்கை
நமதென்னும் பொதுநோக்கில் கரை

நாகரா
22-08-2009, 03:25 AM
சொந்த மென்னும் பந்தங் கடந்தநம்பொதுச்
சொத்து நெஞ்சுள் இறை

பூரண சரணாகதிப் பெருவாழ்வை அளிக்கும்
நேசமாம் வற்றாநதி சேர்க்கும்

உட்குரு நோக்கினால் மெய்வழி திறக்க
உய்ந்திடும் மேனிலை கீழ்

உருவங்கள் தாண்டி ஒருவனைக் காண
இருதயத்தே சேர்நின் மனம்

இருதயத் திருப்பதியில் உய்ந்தே உயிர்த்து
அருளொளி மெய்யுடுத்தி இரு

நாகரா
23-08-2009, 01:25 AM
தீதினைத் திணிக்கும் ஆணவம் நன்மைதரும்
ஆண்டவம் இரண்டும் நின்னுள்
(தீதும் நன்றும் பிறர் தர வாரா - கணியன் பூங்குன்றன் பாடல்)

ஒருதுளி பேதநஞ்சால் சமரச அமுதின்
அருஞ்சுவை நாசமாகும் அறி

நீளும் வாத விவாதப் போரால்
மாளும் நேச இயற்கை

நேச இயற்கை அமுதாய் இனிக்க
பேத செயற்கை நஞ்சேன்

குற்றமே காணும் பேய்மனம் விட்டால்
குணமே காட்டும் இருதயம்

குத்துக் குத்துக்குப் பதில்குத்துக் கருமச்
சுற்றில் புத்தியெட்டா தருமநெறி

நாகரா
24-08-2009, 01:40 AM
முள்ளுக்கு முகஞ்சுளிக்கும் மலருக்கு முகம்மலரும்
உள்ளத்தை அகங்கிடத்தித் திருத்து

நியாயமே ஆயினுஞ் சினம்வயப் பட்டால்
இக்காயத்தின் ஆரோக்கியங் கெடும்
(http://www.heartmath.org (http://www.heartmath.org/) இத்தளத்தில் Science of the Heart படிக்கவும்)

மன்னிக்க முடியாக் குற்றம் ஏதுமில்லை
மன்னிக்க மற(று)க்குமே மனம்

பொய்களை உரித்திங்கே மெய்யை மெய்யாய்க்
கொள்ளவே மெய்யெடுத்த நோக்கம்

பிழையென் றேதுமில்லை ஓயாமல் பெய்யும்
மழைஅன்பில் நனைந்தூறச் சுகம்

நாகரா
25-08-2009, 03:29 AM
புகையாத தவமோன ஓமத்தீ அகத்தே
புகையோடே பெருங்கூச்சல் புறத்தே

அவா வெகுளி மயக்கம் விட்டே
அன்பை விளங்க வேணும்

இருதய வேணு குருநாதர் வாசிக்க
திருநிலை சேரும் நின்னுள்

வேதனை தீரவே வேணு கானம்
நாதனே வாசித்தார் கேள்

நாகரா
26-08-2009, 04:29 AM
இருதயத் துறங்கும் திருபூமி விழிக்க
இச்சகத் துயிர்க்கும் மெய்

வஞ்ச நஞ்சினில் தோய்ந்த மனத்தால்
நெஞ்ச அன்பியல் மறந்தாய்

மன்னிக்கும் மனோபாவம் திறக்கும் இருதயவாய்
உண்ணிற்கும் தயாநாதர் காட்டும்
(உண்ணிற்கும் = உள் நிற்கும்)

பழிக்குப் பழியென உருமுங் கருமனம்மெய்
வழியை மறைக்குந் திரை

நாகரா
27-08-2009, 03:36 AM
கருமவிதிச் சுழலைத் தாண்டிய தருமநெறி
கருமனதை வெளுக்க விளங்கும்

துகளளவும் துரிசற்ற தூய்மையே நின்னியல்
அகமதனை மறந்துற்ற மாயை

திருவிழி மறைக்கும் மாயைப் படலம்
இருதய ஒளியில் கரையும்

நாகரா
28-08-2009, 01:20 AM
கருத்து பேதங்கள் யாவுந் தாண்டி
இருதய நேசத்தில் கனிவோம்

இருதய தேச ராசா *துரை*கை
இசைக்கும் *வேணு* கானம்

அல்லா *துரை*கை *வேணு*வாய் இருந்தால்
எல்லா சுகமும் பெறலாம்
(வேணு=புல்லாங்குழல்,காலியான ஊடகம், நாம் ஒவ்வொருவரும், துரை = "ஐ"யாம்-I AM ஒரே தேவன், காலி ஊடகம் வழியே பாயும் பர நாத வெள்ளம்)

நாகரா
29-08-2009, 03:03 AM
புறத்தை விட்டு அகத்தே புகாமல்
புரியுமோ உம்முள் நிசம்

அகமே புறமாய் விரியும் சூக்குமம்
அறியவே இருதய நாட்டம்

யந்திர இதயத்தை இயக்கும் உத்தம
மந்திர இருதயம் உண்டு

புலப்படும் ஆளில் புகுந்த நியதியைப்
புரிந்தால் ஜோதி உருவம்

நாகரா
31-08-2009, 03:10 AM
அன்பே அறிவில் முழுமையாய் விளங்க
என்பே உருகும் ஒளி

அன்பை அறிவில் விளங்கித் தயவாய்
இங்கே இருக்கவே யாம்

நாகரா
01-09-2009, 02:27 AM
சாவதே விதியென்றக் கருமக் கணக்கைத்
தீர்க்கவே உண்ணிற்குஞ் சற்குரு
(உண்ணிற்கும் = உள் நிற்கும்)

நோவுஞ் சாவும் இல்லாமல் போகவேகுரு
நாதர் ஓங்கும் உள்

நாகரா
02-09-2009, 03:22 AM
மெய்யென்னும் உடம்பை மெய்யென்னும் உண்மையாய்
உய்விக்கும் உயிர்ப்பை நாடு

மெய்யென்னுந் திடத்தைச் சத்தியாய் மாற்ற
அன்பென்னுஞ் சிவத்தில் கரையும்

மெய்யைச் சிதைக்கும் மரணம் வெல்ல
மெய்யை உணர்த்துந் தவம்

நிலையாத உடம்புக்கு மெய்யென்ற பேரேன்உள்
நிறைவாசி உத்தமரை நாடு

பிறப்பெனுங் கனவும் இறப்பெனும் உறக்கமும்
பிழைப்பெனும் நனவுங் கட

கனவும் உறக்கமும் நனவுங் கடந்து
விழிக்குந் துரியமே வாழ்வு

துரியமாம் வாழ்வின் அதீத விழிப்பில்
துரிசிலாத் தூய்மை மெய்

நாகரா
03-09-2009, 02:38 AM
செத்துப் போகவோ மெய்யைப் பெற்றாய்உள்
உற்றுச் சாவினை வெல்

பிரம்மத் தந்தையைப் பிரபஞ்சத் தாயுள்
பிரிவறக் கண்டால்சா வேது

பருப்பொருளைச் சத்தியெனக் காட்டும் விஞ்ஞானம்
பருஉடலை மெய்யாக்கும் மெய்ஞ்ஞானம்
(பருப்பொருள் - m, matter, சத்தி - E, Energy, E = m x square of c, c = ஒளியின் வேகம், 300000 கி.மீ/நொடி)

விஞ்ஞானம் ஏற்று மெய்ஞ்ஞானம் தூற்றும்
அஞ்ஞானத் தாலே சாவு

நாகரா
04-09-2009, 03:01 AM
பருப்பொருளைச் சத்தியாய்ப் பரிமாற்றும் விஞ்ஞானம்
புரிந்துவிளங்கு மெய்ஞ்ஞா னம்

சுத்தவெளி மெய்யே நின்னுடல் மெய்யாய்
இப்புவியில் உயிர்த்த தறி

நாகரா
05-09-2009, 01:44 AM
உயிரைக் கழித்து மெய்யை சிதைக்கும்
உண்மை உணரா மனம்

உயிரைக் கூட்டி மெய்யை வளர்க்கும்
உண்மை உணர்ந்த இருதயம்

இருதய உணர்வில் எண்ணும் மனத்தை
இருத்த உயிர்க்கும் மெய்

நாகரா
06-09-2009, 02:13 AM
நாகரவம் எழுப்பி உச்சிமேல் ஏற்றவீழும்
ஞானரசம் தீர்க்கும் நோய்

பேயாய்த் திரிவதும் பிணமாய் நசிவதும்
நாகம் மேலேற முடியும்

நாகத்தின் நஞ்சை முறிக்கும் ஞான
யோகத்தின் விஞ்ஞை அறி

மூல நாகம் உச்சி மேலேற
ஞான போதம் உறுதி
(மூல=மூலாதார, உச்சி=சஹஸ்ராரம்)

காலனை வெல்லும் ஞானத்தைக் கொள்ள
நாகத்தை உச்சிக் கேற்று

நாகரா
07-09-2009, 01:41 AM
தூற்றலால் துவளாமல் போற்றலால் குதியாமல்
நோற்றலால் குருநாதர் எழுவார்

நாகரா
08-09-2009, 01:11 AM
அருளும் பொருளும் ஒவ்வாவெவ் வேறென்றே
மருட்டும் மனத்தைத் திருத்து
(அருள் = SPIRIT, பொருள் = MATTER)

பரஅருளே இகப்பொருளாய் விரிந்திருக்கும் உண்மை
புரிந்திருநீ இருதயவாய் திறந்து

நாகரா
09-09-2009, 01:57 AM
பரமெய்யே இகத்துய்ந்து கடமெய்யாய் உயிர்த்திருக்குந்
தரமுணர அகத்துள்ளே ஆழ்

நாகரா
10-09-2009, 03:52 AM
அஞ்ஞானச் சகதியில் ஆழ்ந்த மனத்தை
மெய்யோடும் வாசியில் தோய்
(வாசி = உயிர் மூச்சு)

காலடிவரை மெய்ஞ்ஞான போதம் இறங்கக்
காலதில்நிறை தெள்ளமுதை (சு)வாசி
(கால் என்றால் காற்றென்றும் பொருள்)

நாகரா
11-09-2009, 04:14 AM
தூலமெய்த் தேகம் ஞான முதல்வன்
தூயநற் கோலங் காண்

நாகரா
12-09-2009, 03:10 AM
இகத்தைத் தொட்ட பரத்தைத் தொடமன
இதத்தைத் தொற்றி இரு

இளசு
12-09-2009, 05:39 AM
தூற்றலால் துவளாமல் போற்றலால் குதியாமல்
நோற்றலால் குருநாதர் எழுவார்


இந்நிதானம், மனச்சமன், ஆன்ம விசாரணை, துப்புரவு.....

நான் கற்க இருப்பவை ஏராளம்... போகவேண்டிய பயணதூரம் அதீதம்..

இயன்றவரை பின் தொடர்வேன் நாகரா அவர்களே!

உங்கள் ஆன்ம அகழ்வுப் பணிக்கு என் வந்தனம்!

நாகரா
13-09-2009, 09:35 AM
என்றும் இளசாய்க் குன்றாப் பொலிவுடன்
உள்ளுள் இருப்பார் சற்குரு
(இரு மற்றும் பார் என்றும் "இருப்பார்" பொருள் படுவது விஞ்ஞையே!
இருப்பதை இருதயத்தே தொட்டுப் போவதை
வருவதைத் திருவிழியில் பார்)

உம் ஊக்க வரிகளுக்கு நன்றி இளசு

நாகரா
13-09-2009, 09:37 AM
இறைகை வேணுவாய் நல்லிசை முழங்க
உயிர்மை கூடமெய் துள்ளும்
(வேணு = புல்லாங்குழல்)

ஐயறிவில் "ஐ"அறிவை "ஐ"அப்பன் ஊட்ட
ஆறறிவில் ஏழறிவை எட்டு
(ஐயறிவு = மிருகம் ஆறறிவு = மனிதம் ஏழறிவு = தேவம்)

நாகரா
14-09-2009, 03:22 AM
ஐயம் யாவும் நீக்கும் "ஐ"சேர்வழி
வையம் பேணுந் தயவு
(ஐ=தலைமை, ஞான(ல) முதல்வன், ஆதி பகவன்)

நாகரா
15-09-2009, 05:24 AM
பழகிய மடமை விட்டே ஞானம்
பழகிட உய்வோம் உறுதி

நாகரா
16-09-2009, 02:49 AM
மெய்யெனும் உடம்பும் மெய்யெனும் உண்மையும்
ஒன்றென உணர்ந்தே உய்

ஆதி மூலம் மெய்யோ டுயிராய்
ஆன கோலம் அறி

நாகரா
17-09-2009, 03:19 AM
ஞால மெய்யை மறைக்கும் மாயை
ஞானத் தீயில் கரையும்

நானெனும் ஞான முதல்வனை மறைக்கும்
ஆணவ வேடம் அனந்தம்

நாகரா
18-09-2009, 03:40 AM
அருளே பொருளாய் உருவான உண்மை
அறியா மருளால் இருண்மை

உயிர்மை அருண்மை மெய்த்திடப் பொருண்மை
உயிர்மெய் ஒருமை உண்மை

உயிர்மை அருளே மெய்த்திடப் பொருளாய்
உருவா யிருப்ப துண்மை

அருளும் பொருளும் வெவ்வே றெனும்
மருளால் இருண்ட ஞாலம்

நாகரா
19-09-2009, 03:04 AM
உள்ளே அமர்ந்த ஒருவனை உணர்ந்தால்
மெய்யைப் பிரியா உயிர்ப்பு

அருவம் ஒன்றே உருவம் யாவுமாய்
அடர்ந்த ஞால உண்மை

நாகரா
20-09-2009, 08:50 AM
தராதல முழுமையும் நேசிக்கவே பராபர
வரமாய் உயிர்மெய் இருப்பு

நாகரா
21-09-2009, 03:53 AM
ஐயறிவில் உறங்கும் "ஐ"அறிவை எழுப்பவே
ஆமைபோல் ஐம்புல னடக்கம்

நாகரா
22-09-2009, 01:53 AM
மன்னிக்கும் மனோபாவம் கருமத் தளைகள்
துண்டிக்கும் தயாநாதர் வரம்

மன்னிக்க மனமின்றேல் கருமச் சுழலைத்
துண்டிக்க வழியில்லை அறி

பழிக்குப் பழியெனும் கரும விதியை
அழிக்க மன்னிப்பே வழி

கருமவிதி தாண்டி தருமநெறி சேரக்
கருமனத்தை வெளுக்கும் மன்னிப்பு

முதல்வனைச் சேர்ந்தே இகத்தினில் இன்புற
முதற்படி மன்னிப் பே

கோபத் தீச்சிவப்பைத் தணித்தே இளஞ்சிவப்
பாக்கும் மன்னிப்பால் முத்தி

உருமும் மனத்தை மன்னிக்கும் இருதயத்தில்
உருட்டிச் செம்மைப் படுத்து

எதையும் மன்னித்து வெகுளாது அனுமதிக்கும்
சிதையா வெளிபோல்ஒளி(ர்)ந் திரு

மன்னிக்க மன்னிக்க வெங்காயம் உரிந்தே
மெய்யென்னும் நற்காயம் உயிர்க்கும்

உயிரே பிரியும் போதும் மன்னிக்கும்
உணர்வைப் பிரியா திரு
(குரு நாதர் இயேசு கிறிஸ்து உனக்கு உதவுவார்!)

யந்திர மந்திர தந்திரம் யாவும்
விட்டுமன் னிப்பைப் பற்று

மன்னிக்க முடியாப் பாவம் ஏதுமில்லை
அன்பிற்குள் முடியும் யாவும்
___________________________________________________________________________
http://www.ascendpress.org/language-of-light/images/LOL001.gif
#1 - FORGIVENESS
Pink
Nature: Active
Forgiveness is the basis of all unity in that all is allowed; yet all
is healed. In using the vibration of forgiveness, nothing sticks, and
therefore all karma is released. As forgiveness is made a part of the
aura, all interactions become a blessing. Forgiveness made manifest is
the thousand-petal lotus in the heart of the Bodhisattva that projects
joy and compassion upon all.

நாகரா
23-09-2009, 02:02 AM
குற்றமே காணப் பழகிய மனத்தை
மன்னிப் பாலே திருத்து

நஞ்சாய் வஞ்சம் திரிக்கும் மெய்யை
மன்னிப் பமுதால் திருத்து

நாகரா
24-09-2009, 01:49 AM
http://www.picamatic.com/show/2009/08/14/03/37/4734871_216x90.gif
பராபர வெளியும் பராபரை ஒளியும்
பரம்பர அளியும் வாசி

மோன வெளியில் மின்னும் ஒளியே
ஞான குருவின் வார்த்தை

வேணு கானம் நாக ஆட்டம்
ஞான துரையின் தயவால்

இருதய வெளியில் அன்பு ஒளிரும்
கருமனம் வெளுக்கும் வண்ணம்

நாத வெளியில் விந்து ஒளியாய்
ஆடும் அம்மை யப்பன்

பார்க்கப் பார்க்கப் பரவசந் தரும்
நாத ஜோதியைக் கேள்

இருதயந் திறக்குங் குருமொழி ஒளியை
இருவிழி திறந்தே உண்

நாவைப் பூட்டி வாயை மூடி
நாத ஜோதியில் விழி

நாத விந்து கலாதி குருவின்
மோன மந்திர ஒளி

பெருவெளி தன்னைப் புணரும் பேரொளி
குருபரப் பிள்ளைக் காதி
(பிள்ளைக் காதி = பிள்ளைக்கு ஆதி = பிள்ளைக்கு அம்மையப்பன்)

ஞான வாக்கியந்தான் பாயும் பாய்ச்சலைக்குரு
நாதர் கூடியுள்ளே உணர்

இருவிழி காணும் ஒளிமொழி வண்ணம்
திருவிழி திறக்குந் திண்ணம்

சுழலும் ஒளிப்பூ குருமொழியால் கருமச்
சுழலும் ஒழிந்தே போகும்

உட்குரு வள்ளல் உட்கொளத் தந்தான்
உள்ளொளி வண்ண மொழி

நாகரா
25-09-2009, 03:39 AM
http://www.picamatic.com/show/2009/08/14/07/21/4736775_72x72.gifhttp://www.picamatic.com/show/2009/08/14/07/22/4736778_72x72.gifhttp://www.picamatic.com/show/2009/08/14/07/22/4736779_72x72.gif
மன்னிப்பூ உயிர்ப்பூ ஆற்றலாய் இயங்கும்
நல்லன்பூ அமைப்பூ ஒளிப்பூ

http://www.picamatic.com/show/2009/08/14/07/21/4736775_72x72.gif
மன்னிப்பூ = Forgiveness

http://www.picamatic.com/show/2009/08/14/07/22/4736778_72x72.gif
உயிர்பூ அமைப்பூ = Structure(Flower of Life)

http://www.picamatic.com/show/2009/08/14/07/22/4736779_72x72.gif
ஆற்றல் = Power

நல்லன்பூ ஒளிப்பூ = Language of Light (http://www.ascendpress.org/LOLmain.html)(கையொப்பத்தில் ஓடும் அசைபடம்)

நாகரா
26-09-2009, 03:56 AM
http://www.picamatic.com/show/2009/08/14/07/23/4736780_72x72.gif
மெய்யுணர்வு = Consciousness

சிவக்கோளம் வலத்தே சத்தியது இடத்தே
குருக்கோளம் நடுவே முப்பூ

முப்பூ = Triple Sphere Flower Pattern

நாகரா
27-09-2009, 01:37 AM
http://www.picamatic.com/show/2009/08/14/08/02/4736983_72x72.gif
வாசிப்பூ = Breath of Life

வாசிப்பூ வாசம் வாசியாமல் பரலோக
வாசியைச் சேரல் எப்படி

நாகரா
28-09-2009, 01:51 AM
நிபந்தனைகள் ஏதுமற்ற பேரன்பில் தோய்ந்து
பவத்தளைகள் யாவுமற உய்

http://www.picamatic.com/show/2009/08/14/08/13/4737031_72x72.gif
பேரன்பு = Non-conditional Love

நாகரா
29-09-2009, 04:02 AM
http://www.picamatic.com/show/2009/08/14/08/27/4737161_72x72.gif
தயவு, கருணை = Compassion

தயவாய் இருந்து இகத்தில் பரமே
சுயமாய் உணர்க அகத்தில்

நாகரா
30-09-2009, 02:47 AM
http://www.picamatic.com/show/2009/08/14/08/32/4737199_72x72.gif
ஆன்ம நேய ஒருமை = Unity Consciousness

ஒருமையில் ஊன்றி உயிர்களைப் பேணும்
இருதயத்தே தீரும் இரு(ண்)மை

நாகரா
01-10-2009, 04:25 AM
http://www.picamatic.com/show/2009/08/14/08/32/4737195_72x72.gif
முத்தி = Freedom

கரும வினைகள் கரைக்கும் மன்னிப்பால்
தரும நெறிசேர் முத்தி

நாகரா
02-10-2009, 02:31 AM
http://www.picamatic.com/show/2009/08/14/08/32/4737197_72x72.gif
சத்திசிவ ஐக்கியம் = Divine Union

சத்திசிவ ஐக்கியம் உச்சிமேல் உணர்த்தும்
சற்குருவைச் சார்நடு நின்னகம்

நாகரா
03-10-2009, 04:06 AM
http://www.picamatic.com/show/2009/08/14/08/32/4737201_72x72.gif
அருளாட்சி = Non-conditional Governance

அருளாட்சி இற(ர)ங்கும் மெய்வழி நின்னுள்சற்
குருநாதர் திறக்க உயிர்ப்பூ

நாகரா
17-10-2009, 04:14 AM
1. மன்னிப்பு = Forgiveness(Pink)
2. உயிர்ப்பூ அமைப்பு = Structure(Flower of Life)(Lavender)
3. ஆற்றல் = Power(Peach)
4. தயவு, கருணை = Compassion(Turquiose)
5. வாசிப்பூ = Breath of Life(Gold)
6. பேரன்பு = Non-conditionaal Love(Silver)
7. முத்தி = Freedom(Golden White)
8. ஆன்ம நேய ஒருமை = Unity Consciousness(Pale Pink)
9. சத்திசிவ ஐக்கியம் = Divine Union(Pale Lavender)
10. அருளாட்சி = Non-conditional Governance(Ivory, Pale Golden White)

ஒளிப்பூ பத்துமே மெய்க்கு உயிர்ப்பூ
வெளிசேர் மெய்வழி வாசி

நாகரா
18-10-2009, 04:37 AM
http://www.picamatic.com/show/2009/08/14/07/21/4736775_72x72.gifhttp://www.picamatic.com/show/2009/08/14/07/22/4736778_72x72.gif

மன்னிப்பால் கருமத் தளைகள் வெட்டி
மெய்க்குள்பார் உயிர்ப்பூ அமைப்பு

நாகரா
19-10-2009, 03:46 AM
அன்பறிவாற்றல்
http://www.picamatic.com/show/2009/08/14/08/13/4737031_72x72.gifhttp://www.picamatic.com/show/2009/08/14/08/32/4737199_72x72.gifhttp://www.picamatic.com/show/2009/08/14/07/22/4736779_72x72.gif

ஆண்டான் அடிமை ஏற்றத் தாழ்வுகள்
நீக்கும் அன்பறி வாற்றல்

அன்பு
http://www.picamatic.com/show/2009/08/14/08/13/4737031_72x72.gif

அறிவு(ஒருமை உணர்வு, ஆன்ம நேய ஒருமை)
http://www.picamatic.com/show/2009/08/14/08/32/4737199_72x72.gif

ஆற்றல்
http://www.picamatic.com/show/2009/08/14/07/22/4736779_72x72.gif

நாகரா
20-10-2009, 04:04 AM
http://www.picamatic.com/show/2009/08/14/07/21/4736775_72x72.gifhttp://www.picamatic.com/show/2009/08/14/08/27/4737161_72x72.gifhttp://www.picamatic.com/show/2009/08/14/08/13/4737031_72x72.gifhttp://www.picamatic.com/show/2009/08/14/07/22/4736778_72x72.gif

மன்னிப்புந் தயவுமாம் அன்பின் கண்களால்
மெய்யுள்ளே உயிர்ப்பூ காண்

நாகரா
21-10-2009, 05:19 AM
http://www.ascendpress.org/language-of-light/images/LOL005.gif

வாசிப்பூ ஊடேநீ ஒளிப்பூ வாசம்
வாசித்தே வாழ்வாங்கு வாழ்

நாகரா
22-10-2009, 05:28 AM
http://www.ascendpress.org/language-of-light/images/LOL006.gifhttp://www.ascendpress.org/language-of-light/images/LOL009.gifhttp://www.ascendpress.org/language-of-light/images/LOL004.gif
அன்பில் தோய்ந்து ஒருமை உணர்ந்து
என்றும் இருதய வாய்

நாகரா
23-10-2009, 06:39 AM
http://www.ascendpress.org/language-of-light/images/LOL001.gifhttp://www.ascendpress.org/language-of-light/images/LOL004.gifhttp://www.ascendpress.org/language-of-light/images/LOL007.gif
மன்னிப்பால் கருமங்கள் களைந்தே தயவாய்
மண்ணில்நில் தருமத்தால் முத்தி

நாகரா
24-10-2009, 06:09 AM
http://www.ascendpress.org/language-of-light/images/LOL008.gifhttp://www.ascendpress.org/language-of-light/images/LOL010.gif
சற்குரு நடுவேயாம் சத்திசிவ ஐக்கியம்
உற்றதும் அருளாட்சி இற(ர)க்கம்

நாகரா
25-10-2009, 04:36 AM
http://www.ascendpress.org/language-of-light/images/LOL001.gifhttp://www.ascendpress.org/language-of-light/images/LOL002.gifhttp://www.ascendpress.org/language-of-light/images/LOL003.gif
மன்னித்து மேலேறி உயிர்ப்பூ வாசம்
மெய்யுள்ளே வாசிக்க ஆற்றல்

நாகரா
26-10-2009, 10:19 AM
http://www.ascendpress.org/language-of-light/images/LOL001.gif
பழிக்குப் பழியென்னும் கருமச் சுழலை
அழிக்க மன்னிப்பே வழி

கடந்தகாலப் பாதகங்கள் இனியுந் தொடராமல்
கழுவும்வழி மன்னிப்பே அறி

http://www.ascendpress.org/language-of-light/images/LOL006.gif
அன்றின் பதிவுகள் இன்றுந் தொடராமல்
அன்பில் பதியவை மனம்

நாகரா
27-10-2009, 04:22 AM
http://www.ascendpress.org/language-of-light/images/LOL002.gif
பரஞ்ஜோதி அளிக்கும் ஒளிப்பூ வாசம்
பரவதேக மெய்க்குள் உயிர்ப்பூ

நாகரா
28-10-2009, 03:48 AM
பருப்பொருளின் மெய்ப்பொருளாய் வாழும் அருளைஉட்
குருஒளிப்பூ மொழியால் அறி

பருப்பொருள் = matter
மெய்ப்பொருள் = true meaning
ஒளிப்பூ = language of light

நாகரா
29-10-2009, 05:10 AM
http://www.ascendpress.org/language-of-light/images/LOL002.gif
வெட்ட வெளியே தன்மெய் யுணரக்
கொட்டும் ஒளியே உயிர்ப்பூ

கருமச் சுழலை உயிர்ப்பூச் சுழலில்
கரைக்க மெய்யே ஒளிப்பூ

நாகரா
31-10-2009, 02:52 AM
http://www.ascendpress.org/language-of-light/images/LOL001.gifhttp://www.ascendpress.org/language-of-light/images/LOL002.gif
மன்னிப்பூ வின்றி மெய்க்கேது உயிர்ப்பூ
உன்னிப்பார் உள்ளே நீ

நாகரா
02-11-2009, 02:49 AM
http://www.ascendpress.org/language-of-light/images/LOL001.gif
இறந்தகால இருள்சேர் இருவினை சேராமல்
இக்கணத்தை மீட்கவே மன்னிப்பு

பவக்கடல் தாண்ட ஆண்டவனின் மின்விசைப்
படகெனும் மன்னிப் பேறு

நாகரா
04-11-2009, 03:26 AM
மேல்படிகள் ஒன்பதும் மெய்யுள் ஒன்றக்
கீழ்விடியும் பார்அரு ளாட்சி

மேல் படிகள் ஒன்பது

மன்னிப்பு - மூலாதாரம் - முதுகடி http://www.ascendpress.org/language-of-light/images/LOL001.gif
உயிர்ப்பூ அமைப்பு - சுவாதிட்டானம் - நாபியடி http://www.ascendpress.org/language-of-light/images/LOL002.gif
ஆற்றல் - மணிபூரகம் - நாபி http://www.ascendpress.org/language-of-light/images/LOL003.gif
வாசிப்பூ - சூரிய சக்கரம் - மார்படி, உதரவிதானம் http://www.ascendpress.org/language-of-light/images/LOL005.gif
பேரன்பு - அனாகதம் - நடு மார்பு http://www.ascendpress.org/language-of-light/images/LOL006.gif
ஆன்ம நேய ஒருமை, ஒருமையுணர்வு - அமுத கலசம் - தொண்டையடி http://www.ascendpress.org/language-of-light/images/LOL009.gif
தயவு, கருணை - விசுத்தி - தொண்டை http://www.ascendpress.org/language-of-light/images/LOL004.gif
முத்தி - ஆக்கினை - நெற்றி நடு http://www.ascendpress.org/language-of-light/images/LOL007.gif
சத்திசிவ ஐக்கியம் - சஹஸ்ராரம் - தலையுச்சி http://www.ascendpress.org/language-of-light/images/LOL008.gif

அருளாட்சி - பத்தாம் படி http://www.ascendpress.org/language-of-light/images/LOL010.gif

நாகரா
05-11-2009, 03:42 AM
பீடம் மேலமர்ந்த பொய்க்குரு அறியாச்
சீடர் மேல்செருகும் கொக்கி

இருதயத் துள்ளமர்ந்த மெய்க்குரு உயிர்களின்
திருக்கட மெய்யலர்ந்த ஒளிப்பூ

நாகரா
06-11-2009, 05:01 AM
திருத்தச் சுட்டுஞ் சற்குரு ஞானம்
வருத்துங் கர்மந் தீர்க்கும்

திருத்தச் சுட்டுஞ் சற்குரு ஞானம்
வருத்திக் குத்தும் கருமம்

(கர்மம், கருமம் = இருள்சேர் இருவினை)

நாகரா
07-11-2009, 02:23 AM
பிறப்புக்கும் இறப்புக்கும் இடையே ஊசலாடும்
பிழைப்புக்கு அப்பால்தான் வாழ்வு

பிறப்பிறப்புச் சுழலில் சிக்கிப் பெருவாழ்வை
மறந்துழன்றுப் பழகிய மாந்தர்

கருமவிதி தாண்டித் தருமநெறி பற்ற
வருத்தாது சாக்கா டு

மூல அருளில் பொருளாம் மெய்தான்
ஏறப் பெருவாழ் வு

மெய்யுளே குருவேந்தன் அரசோச்சும் இருதயத்தே
நின்மனம் இருக்கட்டும் அடங்கி

நாகரா
08-11-2009, 02:15 AM
மாயமே நிஜமாய் விதித்தது யாரோசதி
சாயவே உண்மை உணர்

செத்துப் பிறக்கும் மாயச் சுழலின்
அப்பால் மாயா வாழ்வு

பேச்சில் பிடிபடா ஆதி அரும்பொருள்(பகவன்)
மூச்சில் பிடிபட ஞானம்

பேசாமல் நாவை வாயில் பூட்டி
வாசிமேல் வைப்பாய் கவனம்
(வாசி = மூச்சு)

நாகரா
09-11-2009, 01:33 AM
மன்னித்துக் கடந்த காலக் கருமங்கள்
வெட்டிட்டுத் தருமந் தொடு

பேதம் விட்டு நேசந் தொட்டு
ஞாலத் திருதய வாய்

வேற்றுமை பேணுங் கருமனம் வெளுக்கவே
ஊற்றிடும் நேசத் தூறு

வீழுங் கடத்தை ஆன்ம நேயம்
வாழுந் திடமெய் யாக்கும்

மரண மாயை மாய்த்தே மாயாத்
தரம்மெய்க் கூட்டும் உயிர்ப்பூ

சுழலும் உயிர்ப்பூக் கோள உணர்வில்
எழமெய் விளக்கும் ஞானம்

உள்மெய் விளங்கி உன்மெய் யுடம்பின்
உண்மை உயிர்க்க வாழ்

ஏமாற்றா தேமாறா தோங்கும் தருமநெறி
நீயேற்றால் நாசமாகுங் கருமவிதி

நாகரா
10-11-2009, 03:18 AM
மெய்க்கோயில் உள்ளே இருதயக் கருவறையில்
உய்ந்தேகாண் உயிர்மூல அன்பு

நிராதார அருட்பாலால் மெய்க்கோயில் குடமுழுக்கு
சுகாதாரந் தருமேபார் உயிர்க்கு

வாசியே சோறாய் உண்ணுவம் பக்குவம்
வேண்டியே சேர்வாய் சற்குரு

நாகரா
11-11-2009, 04:00 AM
பற்றெனும் பேரில் மனஇதம் விட்டுப்
பற்றிடும் வெறியை விடு

எல்லா மொழிகளுந் தாய்மொழி போலே
நன்றாய் மதித்திடக் கல்

மோனமே பேசும் மொழிகள் யாவுக்கும்
ஆதியாம் தாயென் றறி

சாந்தி வாலை மொழியும் ஞானம்
ஊன்றி நெஞ்சுள் கேள்

இனமதம் விட்டே மனஇதம் பற்றி
இருதயந் தொட்டே இரு

ஆங்கு இலமென ஆங்கிலம் சொல்லும்
சூக்கு மமதனை அறி
(ஆங்கிலம் = ஆங்கு+இலம், "நின்னகத்தே ஊங்கு யாம் உள்ளோம்" என்று
எதிர்மறையாய்ச் சொல்லும் ஆண்டவ உபதேசம்)

தேடியே அலைவாய் ஆங்கிலம் யாம்நின்னகம்
நாடியே அடங்கி னோம்

அகத்தே ஒளிரும் விளக்கை மூடிய
அனந்த திரைகளைக் கிழி

மூடிய திரைகள் கிழிய ஒளிரும்
ஜோதியில் மறையும் இருண்மை

இருதய இணையத்தில் அன்பின் வலைகளை
இதமனம் இல்லாமலோ உணர்வாய்

இருதயத் தளத்தில் அலர்ந்த ஒளிப்பூநின்
இருண்மை நீக்கும் மருந்து

இகத்தில் இருந்து தயவாய்ப் பார்க்கும்மன
இதத்தில் திறக்கும் இருதயம்

நாகரா
11-11-2009, 03:41 PM
இன்று

11/11/2009

2009ல் எண்களைக் கூட்ட 11

பதினொன்று மேலுங் கீழுந் திறந்த ஊடகம், மேலிருந்து சிவம் இறங்கவும், கீழிருந்து சத்தி ஏறவும் வழி விடும் மெய் வழியே நாம் ஒவ்வொருவரும்!

11ன் அதிர்வு மேலோங்கியிருக்கும் இன்று, சிவத்தின் ஊடகமாய்(11), சத்தியின் ஊடகமாய்(11), சற்குருவின் ஊடகமாய் நாம் நம்மை உணர உகந்த நன்னாள்!

பதியொன்றைப் பதியொன்றாம் பதினொன்றாய்த் திறந்திருந்துப்
பதிமண்ணில் பதிமெய்வாய் நீ

பதியொன்றை = பதியான திரித்துவ ஒருமையை
பதியொன்றாம் = பதிக்கின்ற ஒன்றாம்
பதினொன்றாய்த் திறந்திருந்து = ஊடகமாய்க் குழாயாய்த் திறந்திருந்து
பதிமண்ணில் = பதியான திரித்துவ ஒருமையை இப்பூமியில்
பதிமெய்வாய் நீ = பதிகின்ற மெய்வழியே நீ

நாகரா
12-11-2009, 02:25 AM
http://www.picamatic.com/show/2009/08/26/08/06/4855928_452x290.jpg
கரும்புழுவாய் நெளிந்தேன்யான் அகத்தவக் கூட்டில்
திருஉருவாய்ப் பரிமாற முத்தி

சுகந்தப்ரீதன்
12-11-2009, 09:15 AM
பிறப்புக்கும் இறப்புக்கும் இடையே ஊசலாடும்
பிழைப்புக்கு அப்பால்தான் வாழ்வு

பிறப்பிறப்புச் சுழலில் சிக்கிப் பெருவாழ்வை
மறந்துழன்றுப் பழகிய மாந்தர்


பற்றெனும் பேரில் மனஇதம் விட்டுப்
பற்றிடும் வெறியை விடு

எல்லா மொழிகளுந் தாய்மொழி போலே
நன்றாய் மதித்திடக் கல்

மோனமே பேசும் மொழிகள் யாவுக்கும்
ஆதியாம் தாயென் றறி

சாந்தி வாலை மொழியும் ஞானம்
ஊன்றி நெஞ்சுள் கேள்

இனமதம் விட்டே மனஇதம் பற்றி
இருதயந் தொட்டே இரு

மெய்ஞானத்தை கொண்டு அஞ்ஞானத்தை அகற்றும் முயற்சி..!! பக்தி இலக்கியத்தில் புத்தியையும் உபயோகிக்க சொல்லும் உங்களின் யுக்தி..!!

மெய்ஞான அறிவோடு தங்களின் தமிழறிவும் உலகறிவும் எம்மை வியக்க வைத்து மெய்மறக்க செய்கிறது..!!

எந்தவொரு எதிர்பார்ப்புமின்றி இயல்பாக பயணிக்கும் இந்த மெய்ஞானத்தொடர் இன்னும் பல உள்ளங்களில் வெளிச்சத்தை கொண்டு வர வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு...!!

வாழ்த்துக்கள் நாகரா அண்ணா..!! தொடருங்கள்..!!

நாகரா
12-11-2009, 11:31 AM
உம் வாழ்த்துக்களுக்குந் தொடரச் சொல்லிய ஊக்குவிப்புக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் சுகந்தத் தம்பி

ஞான வாக்கிய நீள்தொடர் வண்டி
ஓட வைத்தவுட் குருவாழி

உட்குரு வண்டி ஓடுது பாருஞானம்
உட்கொள உள்ளே ஏறு

உள்ளே உய்ந்து மேலே ஏறு
அன்பை மொண்டு இறங்கு

இறங்கு யார்க்கும் அன்பைப் பகிரத்
திறநின் தூய நெஞ்சை

தூய நெஞ்சைத் துஞ்ச வைக்கும்
மாய நஞ்சை முறி

நாகரா
13-11-2009, 02:50 AM
http://www.picamatic.com/show/2009/08/26/08/08/4855935_484x362.jpg
ஊர்ந்த புழுயான் அகத்தவக் கூட்டில்
சேர்ந்தே தேனுணப் பறந்தேன்
___________________________________________________________
ஞான வாக்கியம்(கரும்பாத் தொகுப்பு)-pdf புத்தகம் (http://www.4shared.com/file/151190025/a919965a/jnaana_vaakkiyam.html)

நாகரா
14-11-2009, 02:42 AM
http://www.picamatic.com/show/2009/08/26/08/09/4855939_484x362.jpg
கருமனப் புழுயான் இருதயக் கூட்டில்
உருப்பரி மாறவே முத்தி

நாகரா
15-11-2009, 02:23 AM
http://www.picamatic.com/show/2009/08/26/08/13/4855943_485x364.jpg
கருமை நெளிவைப் பறக்கும் வண்ணம்
திருமெய் யாக்குந் தவம்

நாகரா
16-11-2009, 01:34 AM
ஒன்றிலா வெளியே ஒன்றெனும் ஒளியாய்
வந்துதான் விரிந்ததே ஞாலம்

ஒளிந்த வெளியுள் ஒளிரும் விளக்கையுள்
ஒளிந்துத் தெளிய வாசி

நாகரா
17-11-2009, 04:01 AM
இருந்தாய் இருக்கிறாய் இருப்பாய் மெய்யுணரும்
இருதயந் திறந்திட உயிர்ப்பூ

உயிர்ப்பூ வாசம் நுகரும் இருதயவாய்
உனக்குள் திறந்தால் ஞானம்

பிறந்தோ மில்லை இறப்போ மில்லை
மறந்தோ மதனால் மயக்கம்

அல்லாவே மெய்யெடுத்தார் அருளம்மை உயிரானார்
நல்லாராம் நபியானார் மனம்

சாவுத் துயில்பிறவி நனவுமாயைக் கனவு
தாவி துரியத்தில் விழி

ஆவி வழிஆதி தருந்தாய்ப் பாலைப்
பாவி மனம்பருக மறுக்கும்

குருநம்பிக் கைப்பற்றி மெய்ஞ்ஞானத் தைப்பெற்று
உருமெய்யை அருமெய்யாய் உயிர்ப்பி

நாகரா
18-11-2009, 03:48 AM
நல்லெண்ணம் மனந்தன்னில் அன்புணர்வு இருதயத்தில்
இன்சொற்கள் நன்னாவில் ஏந்து

தேடும் வீடுபேறு தேக மெய்யுள்
நாடுந் தேவனேநின் உயிர்ப்பூ

அன்பூ அறிவெனுங் காயாகித் தயவாய்
உன்னுட் கனிந்திடும் உயிர்ப்பூ

தாயுந் தந்தையுஞ் ஞானப் பிள்ளையும்
பாயும் விந்தை மெய்வழி

நாகரா
19-11-2009, 03:54 AM
96

வழிந்தி கத்தே திடமான பரத்தைச்
சுழிந்த கத்தே வாசி
(9 = வெளியே வழிதலின் குறியீடு, 6 = உள்ளே சுழிதலின் குறியீடு)

நாகரா
20-11-2009, 04:33 AM
அன்பூ அறிவெனுங் காயாகித் தயவாய்
உன்னுட் கனிந்திடும் உயிர்ப்பூ

நாகரா
21-11-2009, 02:43 AM
தாயுந் தந்தையுஞ் ஞானப் பிள்ளையும்
பாயும் விந்தை மெய்வழி

குணமதி
21-11-2009, 02:41 PM
ஒவ்வொன்றிற்கும் விளக்கமும் தந்து எழுதினால் எளிதில் புரியக்கூடும்!

நாகரா
22-11-2009, 04:06 AM
நேரங் கிடைக்கும் போது நிச்சயம் விளக்கமுந் தருவேன், நன்றி குணமதி

நாகரா
22-11-2009, 04:14 AM
ஒரு வெளிப்பாடு(A Revelation)

Open the Heart and Connect to the TAO Within, Remember, Retrieve, & Embody Your Original Truth!
Your Original Truth = Truth at the Point of Your Origin from Tao Within

This is a Macro Command I AM Giving Myself, the TAO that has become the ALL, You, Me & Every One, This is the End Time Bell I AM sounding to ALL LIFE, the Mineral, Plant, Animal, Oceanic and Human Kingdoms, calling ALL to Return Home to the TAO!

தமிழில் "தாவ்"வின் Macro Command

நெஞ்சைத் திறந்து ஆதியுள் தாவுநின்
மெய்ம்மை உயிர்க்க வாழு

ஆதிமூலத் தோங்கும் நினதுண்மை உணர்ந்தே
நாசமாகா வாழ்வில் ஏறு

இருதயந் திறந்துநீ ஆதி முதலைத்
திருக்கடத் திறக்கநின் மெய்ம்மை

மெய்ம்மை உயிர்க்க இருதயந் திறந்துள்
உய்ந்தே ஆதியைத் தொடு

நின்மூல மெய்ம்மை நின்தூல உடம்பில்
நின்றோங்க நெஞ்சைத் திற

மெய்ம்மையை ஞாபகங்கொள் மெய்ம்மையை மீட்டெடு
மெய்ம்மையைத் தூலமெங்கும் இறக்கு

(திருக்கடம் = தூல உடம்பு;
மெய்ம்மை, நின் மூல மெய்ம்மை = Your Original Truth;
ஆதி, ஆதி முதல் = TAO, First Source, முழுமுதற் பரம்பொருள்;
தூலம் = புலப்படுந் திடம்)

நமது எல்லாப் பிரச்சினைகளுக்கும் மூல காரணம் ஆதி மூலத்தில் உதித்த நமது உத்தமமான உண்மையை மறந்து போனதே, கால வெளி உரு(space, time, form) கடந்த சீன மொழியில் "தாவ்" என்று அழைக்கப்படும் ஆதி மூலம் நம் ஒவ்வொருவாருக்கும் வழங்கிய உத்தம உண்மையை நாம் மீட்டுக் கொள்ளும் போது, எல்லாப் பிரச்சினைகளும் தீர்ந்து விடும்!

தினமும் பல முறை இந்த மேக்ரோ கமேண்டை நினைவு கூறுவதன் மூலம், ஆதி மூலத் "தாவ்"வின் இறுதி சங்க நாதத்தை முழங்கும்(TAO's End Time Bell) ஊடகமாகிறோம் நாம்! இது உமக்கும் எல்லோருக்கும் எல்லாவற்றுக்கும் சங்கூதும் ஆதி மூல ஆணை! உமக்கு இசைவிருக்கும் பட்சத்தில்(if you are resonant to the message and its vibration) ஆணை முழங்கிப் பயன்பெறுவீர்! நன்றி

நாகரா
23-11-2009, 01:21 AM
http://www.stridvall.se/flowers/albums/album15/686_22.sized.jpg
ஈரப் பசுமையும் வீரச் செம்மையும்
சேர உடம்பூவுள் உயிர்ப்பூ
(உடம்பூ = உடம்பு, உயிர்ப்பூ = உயிர்ப்பு, Flower of Life, ஈரப் பசுமை = சிவம், வீரச் செம்மை = சத்தி, சிவசத்தி ஒருமையே உயிர்மெய் ஒருமை, சிவசத்தி ஒருமையை உணராத வரை, உடம்பில் உயிர் ஊசலாடிக் கொண்டு தானிருக்கும், படத்திலுள்ள பூவைப் போல் பசுமை சுற்றிப் படர்ந்த செம்மை போல், உடம்பெங்கும் உயிர் படரும் கோள உணர்வு நமக்கு வாய்க்காது, பூவில் பசுமைச்செம்மைக் கோளத்தை கவனிக்கவும், தியானிக்கவும்)

அன்பெனும் பசுமை ஈன்ற தயாபரச்
செம்பொருள் விஞ்ஞை நீ

நாகரா
24-11-2009, 03:43 AM
வெள்ளங்கி நாயகரை உள்ளுள்ளே காண
பொய்யங்கி தேகமாகும் மெய்

சத்தியுஞ் சிவமும் வேறற ஒன்ற
சற்குரு எழுவார் உள்ளே

வெள்ளங்கி போர்த்திய நாயக வள்ளல்
மண்ணுள்ளே வார்த்தார் அருள்

உறங்கும் நாயகனை உன்னுள்ளே எழுப்ப
இறப்பும் பிறப்பும் இல்

சத்தியுஞ் சிவமுஞ் ஞானகுருவில் ஞால
மொத்தமும் அடக்கம் அறி

தாயின் தூய நெஞ்சில் ஞானகுருச்
சேயின் தீர்க்கப் பார்வை

வெள்ளங்கி நாயகரை நெஞ்சுள்ளே எழுப்ப
மெய்யோங்கும் மாயா நிலையம்

நாகரா
25-11-2009, 01:29 AM
http://www.waratahsoftware.com.au/images/flora/fi_pinkflannel_p1010029.jpg

இருதயந் திறக்குது அன்பூ விரியுது
பருவுடல் மணக்குது உயிர்ப்பூ

உயிர்ப்பூ வாசம் மெய்யுள் பரவ
உணர்வில் நேசம் விழிக்கும்

நாகரா
26-11-2009, 02:50 AM
http://heartofnatureapothecary.com/images/plants-00171.jpg
பாறைத் தலைபிளந்து பூத்த இருதயப்
பூவை நுகரமெய்க்குள் உயிர்ப்பூ

பாறை காட்டும் இருதயப்பூ பார்த்தும்
வாரா தோசொல் மனஇதம்

தேகப் பாறைச் சடந்தான் உயிர்க்க
நேசப் பூதான் மலரும்
(சடம்=ஜடம், உயிரற்றது)

கல்புல் காட்டும் செம்பூ இருதயம்
மெய்யுள் காண உயிர்ப்பூ

கன்னெஞ்சம் மலர அன்பூ வாசம்
மெய்யெங்கும் பரவ உயிர்ப்பூ
(கன்னெஞ்சம் = கல் நெஞ்சம்)

நாகரா
27-11-2009, 04:17 AM
http://heartofnatureapothecary.com/images/921510_1_.jpg
இருதய அன்பூக் கோப்பைக் கவிழ
பருவுட லெங்கும் உயிர்மை
(கோப்பையில் நிறைந்திருக்கும் உயிராகிய மை தூல உடம்பில் கொட்டுதே! கொட்டுதே! கொட்டுதே! உயிர் மையின் போதை தலை வரை முட்டுதே! முட்டுதே! முட்டுதே! எட்டலாகாப் பரஞானம் கிட்டுதே! கிட்டுதே! கிட்டுதே!)

நாகரா
28-11-2009, 04:01 AM
http://www.flowerwonders.com/wp-content/uploads/photos/110/Red_lily.jpg
தூய நெஞ்சில் பூத்த அருட்பூ
பாப நாச நெருப்பூ

நாகரா
29-11-2009, 05:20 AM
http://www.flowerwonders.com/wp-content/uploads/photos/105/whiteblue_iris2.jpg
மெய்யுடம் பூவுள் தூய உயிர்ப்பூ
நெஞ்சகந் தாவிப் பார்
(நீலம் = உடம்பூ, வெண்மை = உயிர்ப்பூ)

நாகரா
30-11-2009, 04:02 AM
மூலத்தே அமர்ந்த யானை முகத்தோன்
ஆதியாந் துரையின் சாட்சி

(யானை முகத்தோன் = "யான் ஐ" என்றே அகத்தே உணர்ந்த ஞான முகத்தோன், சகுணப் பிரம்மம்; ஐ = தயா நாயகப் பரம்பொருள், அல்லா; ஆதியாந் துரை = ஐ = வெட்ட வெளி = நிர்க்குணப் பிரம்மம்)

நாகரா
01-12-2009, 03:15 AM
நச்சு நாகம் விழித்தெழுந் தேறி
நல்ல பாம்பாய் இறங்கும்

(நச்சு நாகம் விழித்தெழுந் தேறி = குண்டலி ஏற்றம்; நல்ல பாம்பாய் இறங்கும் = பரா குண்டலி அதாவது நிராதார இறக்கம்)

நாகரா
25-01-2010, 05:19 AM
ஆணவம் நசிக்கும் நடராஜ தாண்டவம்
ஆண்டவம் அருளும் வரம்

ஆணவங் கரைக்கும் அருட்தீப் பிழம்பை
நாபியில் மூட்டும் ஆண்டவம்

ஆணவம் = ஆண்+அவம்
ஆண்டவம் = ஆண்+தவம்
அவ நிலையிலிருந்து, தவ நிலைக்கு ஏறவே அகத் தவம், தியானம்

நாபி அவ நிலையில் ஆணவத்தையும்
தவ நிலையில் ஆண்டவத்தையுங் குறிக்கிறது

ஆணவம் நசிதலே நம் மறு பிறப்பு ஆண்டவத்துள்

நடராஜ தாண்டவம் நம் சத்திய தரிசனத்தின் குறியீடு

ஆணவக் கம்பளிப் புழு
கூட்டுப் புழுவாக அகத்தவத்தில் அடங்கும் போது
தவச் சூட்டால்
பட்டாம் பூச்சியாய்ப் பரிமாறுகிறது!

கம்பளிப் புழுவின்
மறு பிறப்பே
பட்டாம் பூச்சி

கூட்டுப் புழுவுக்குள்
நிகழும் நடராஜ தாண்டவத்தால்(அகத்தவச் சூடு)
முடிவில் பட்டாம் பூச்சியாய்
நாம் பறக்கிறோம்

நாகரா
31-01-2010, 02:42 PM
இருகரங் குவியுந் திருத்தல இருதயந்
திருநிறைச் செல்வன் இருப்பிடம்

ஆண்டவம் அச்சிட்ட ஜீவனுள்ள வார்த்தைகள்
பூதல மெங்கும்வா சி

குருமந்திர வேணு கானம் முழங்கும்
அருந்தந்திரர் நாய கம்

திருவிழி திறக்க ஒளிப்பூ மலர
திருக்கடத் துயிர்க்கும் மெய்ம்மை

சத்திசிவ மொன்றும் உச்சிவெளி வீதியில்
சுத்தசிவம் நடமா டும்

ஒன்பதும் ஒன்றுங் குருவின் திருமேனி
கண்டதும் மாயா நிலை

ஒன்பது வெளிவட்டஞ் சுற்றும் நடுவட்டம்
அன்பது வரைந்திட்டக் கோலம்

நவகுண்ட நடுவே தவக்குன்றாய் எழுந்தார்
சிவசத்தி சமேத சற்குரு
(ஒன்பது, நவ குண்டம் = சூக்கும உடம்பின் சக்கரங்கள்)

நாகரா
01-02-2010, 06:37 AM
நிர்க்குண வெளியில் சகுண ஒளியாய்
நின்றுள நெறியே நான்

சுத்த இருப்பில் மெய்யதன் உணர்வாய்
நின்ற நெருப்பே நான்

வெட்ட வெளியைச் சுட்டும் ஒளியாய்
உள்ளேன் களித்தே நான்

ஒன்று மில்லா சூன்யம் ஈன்ற
நல்லப் பிள்ளை நான்

அசையா வெளியில் அசையும் ஒளியாம்
அணையா விளக்கம் நான்

பொருளேது மில்லாப் பெருவெளி தன்னில்மெய்ப்
பொருளாக உள்ளேன் நான்

தனையறியா அன்பிற்குத் தனையறியும் இன்பூட்டித்
தயாஅருளாய்ச் செய்விக்கும் நான்

அலியானப் பெருவெளியே ஆண்டவனாய் ஆண்டாளாய்
பிரியாமல் புணர்ந்ததனால் நான்
(ஆண்டவன் = ஆண்+தவன், ஆண்டாள் = ஆண்+தாள் = ஆணின் வேராகிய பெண்)

நாகரா
02-02-2010, 03:35 AM
ஞான வாக்கியம் = ஞான்+அவாக்கியம்

ஞான் அவாக்கியம் = "ஞான்" என்னும் நான் வாக்கியந் தாண்டியப் பேருணர்வு = "நான்" என்பது வெற்று வார்த்தையல்ல, வெட்ட வெளியில் வெடித்தப் பேரிடி

ஞான வாக்கியந் திறப்பவன் நின்னகம்
நானென் றோங்கிய முதல்வன்
_________________________________________________________________________
ஞான வாக்கியம்(கரும்பாத் தொகுப்பு)-pdf புத்தகம் (http://www.4shared.com/file/151190025/a919965a/jnaana_vaakkiyam.html)

நாகரா
03-02-2010, 10:01 AM
இலக்கணங் கருதாக் கரும்பா வாக்கிய
இலட்சியக் கருவே ஞானம்

வெண்பா ஈந்தப்பா வேந்தன் வள்ளுவன்
அன்பே நற்கரும்பா மூலம்

வெண்பா கரும்பா ஏதுமே வேண்டாம்
அன்பை உணர்ந்தால் போதுமே

இன்றே நன்னாளென நெஞ்சம் மலரவேநீ
அன்பே காசெனமறு பிறப்பு

அன்பை உணராதப் புன்னிலை இருக்கு
மட்டும் புரியாது ஞானம்

நாகரா
10-02-2010, 05:45 AM
சாப்பாடு நீக்கும் சாப்பாடு உண்ண
நாபூட்டு அண்ணத் தோடு

(முதல்)சாப்பாடு = சாவின் பாடு
(2ம்)சாப்பாடு = அமுத உணவு
அண்ணம் = வாயின் மேற்பகுதி

நாகரா
11-02-2010, 04:00 AM
அகர முதலை உணர்ந்தே உய்ய
உகர தலத்தில் அமர்

அகர முதல் = ஆதி மூலப் பரம்பொருள், மூலவர்
உகர தலம் = மெய்யுடம்பாலயத்தில் இருதயக் கருவறை
அனுமார் தன் மார்பைத் திறந்து காட்டியதன் சூக்குமம் புரி
உகரம் = தமிழுக்கே உரித்தான உகரச் சுட்டு, சுட்ட முடியாப் பரம்பொருளைச் சுட்டப் பயன்படும் குறியீடு உகரம்

அக்கரம் இக்கரம் நாடாதே ஆண்டவர்
உக்கரம் மெய்யகங் காண்

அவர் இவர் என்னும் மனிதக் கரங்களை நாடுவதை விட்டு, சுட்ட முடியாத உவராம் ஆண்டவர் அருட்கரத்தை நின் மெய்யுடம்புள் அகத்தவத்தில் உணர்வாயாக!

நாகரா
12-02-2010, 04:14 AM
வருவதும் போவதும் வாடிக்கை யான
இருவினைக் கணக்கை முடி

பிறப்பதும் இறப்பதுமாகிய சுழலே வழக்கமாவதற்கு மூல காரணமான இருள் சேர் கரும வினைகளை அகத்தவத்தில் குண்டலிக் கனலை எழுப்பிக் கரை!

வந்து போகும் வாசியை உணர
வெந்து சாதல் இல்

மூச்சில் உணர்வின்றி அனிச்சையாய் சுவாசிக்கும் பழக்க தோஷத்தைக் கை விட்டு மூச்சின் மேல் உணர்வோடு(அது ஆண்டவரின் பரிசுத்த ஆவியே என்ற மரியாதை கலந்த பக்தியோடு) விழிப்போடு சுவாசிக்கப் பழகு. இது தம்படிக்கும் உதவாத யோகம் என்று கேலி செய்தால், தம்படிக்கும் உதவாது பிணமாய் விரைவில் விழுவாய்.(காட்டமான வார்த்தைகளுக்கு மன்னிக்கவும்)

நாகரா
18-02-2010, 06:22 AM
அண்ணம்மேல் நாவுநுனி வைத்து மூச்சின்மேல்
எண்ணம்வை படிகமாகும் மூளை

அண்ணம் = வாயின் மேற்புறம்
படிகமாகும் மூளை = மூளை படிகம் போல் தூயதாகும்

ஆற்றில் ஒருகால் சேற்றில் இருகால்
ஊன்றி இருந்தால் சுகம்

ஆற்றில் ஒருகால் = அண்ணம்மேல் நாவுநுனி(பரத்தின் மேல் கவனத்தின் குறியீடு)
சேற்றில் இருகால் = பூமியில் பதிந்த கால்கள்(இகத்தில் தயவாய் இருத்தலின் குறியீடு)

நாகரா
19-02-2010, 02:27 PM
புறத்தே கசியும் உயிர்மை மீட்டு
அகத்தே புசிமெய் உயிர்க்கும்

உடம்பு மெய்யென்ற மாயா நிலையமாய் உயிர்க்க, வெளியில் விரயமாகும் சத்தியை மீட்டு(வெளிக்குரு நாட்டம், கற்தெய்வ மோகம் மற்றும் பற்பல சமய சம்பிரதாய சமுதாய அரசியல் சடங்குகளில் உன் உயிர்ச் சத்தி வீணாகிறது) அகத்தவத்தில் அதை உண்பாயாக!

நாகரா
05-03-2010, 10:03 AM
அம்மை யப்பன் சமேத சற்குருநின்
நெஞ்சுக் குள்ளே பார்

நெஞ்சுக் குள்ளே பாராமல் சாமியார்
வஞ்சத் துக்கேன் விழுகிறாய்

பிரபஞ்சம் விரியும் இருதயப் பிளவில்
சிவசத்தி சமேத சற்குரு

தம்படிச் செலவின்றி சற்குரு சேராமல்
வம்படிக் கலகத்தில் மயக்கம்

தேடிப் பணங்கொடுத்து வீணே ஓடிப்பின்
நாடி எலாம்ஒடுங்கி வீழ்வாய்

தேடி வரும்அன்பைச் சுவாசிக்க மனமிலைப்பொய்
வீசும் வலையுள்சிக் குவாய்

போலிச் சாமியார் அறியார் சாமி*யார்?
காவி போர்த்தியே ஏய்ப்பார்

உண்மைச் சாமியார் அறிவார் சாமி*யார்?
அன்பே ரூபமாய்த் திரிவார்

போலிச் சாமியார் காம நோயினார்
காவி யாலதை மூடுவார்

உண்மைச் சாமியார் அன்பு நெஞ்சினார்ப்
பெண்ணை வாலை என்பார்
(வாலை = ஞானத் தாய்)

நாகரா
06-03-2010, 09:52 AM
சித்தங் கலங்கிடா திருக்க வேணும்
பித்த மலமெலா மொழிய வேணும்
சுத்த மனமதன் அடக்கம் வேணும்
நெஞ்ச விழிதிறப் பீரே

மெய்யை மறவாது நானிருக்க வேணும்
வாய்மை பேசவேயென் நாவிருக்க வேணும்
பொய்ம்மைக் கண்நான்போ காதிருக்க வேணும்
நெஞ்ச விழிநீர்திறப் பீரே

நித்தியப் பெருவாழ்வெனும் வரமெவர்க்கும் வேணும்
சத்திய ஞானக்களி யெவர்க்குந்தர வேணும்
புத்தியில் நேசநெறி விளங்கிவிட வேணும்
நெஞ்சினில் விழியைத்திறப் பீரே

நிர்மலத் துரையுமை நான்காண வேணும்
அற்புதக் குருமொழி நான்பேச வேணும்
சின்மயத் திருவுரு நான்பூண வேணும்
நெஞ்சினில் விழிதிறப் பீரே

அன்பெனும் உயிர்நிலை எவ்வுயிர்க்கும் வேணும்
மெய்யெனுந் திருக்கடம் எல்லோர்க்கும் வேணும்
பொய்யெனும் இருள்விலக் கும்மெய்யருள் வேணும்
நெஞ்சினில் விழிதிறப் பீரே

பொய்க்குரு மடங்களின் மயக்கொழிய வேணும்
மெய்க்குரு மடங்களெம் மெய்தெளிய வேணும்
உய்ந்துளே உயிர்ப்புமை யாம்உணர வேணும்
நெஞ்சினில் விழிதிறப் பீரே

சற்குரு வடிவினில் யாம்விடிய வேணும்
இச்சக முதலவர் தாள்புரிய வேணும்
உத்தமர் அருவவர் மெய்யுணர வேணும்
நெஞ்சினில் விழிதிறப் பீரே

உச்சி திறந்துளே அருள்விழ வேணும்
மண்டைச் சுழிமுனை அவிழ்ந்திட வேணும்
நெற்றித் திருவிழித் திறந்திட வேணும்
நெஞ்ச விழிதிறப் பீரே

கண்டத் தடைக்கரு வினைக்கரைய வேணும்
தொண்டைக் குளேகுரு மொழிமுழங்க வேணும்
உண்ணா முலைப்பொழி வமுதுண்ண வேணும்
நெஞ்ச விழிதிறப் பீரே

உள்ளக் கருவறைக் குள்ளேக வேணும்
உள்ள ஒருவனை நான்காண வேணும்
உள்ள னயாவினுண் மைதேர வேணும்
நெஞ்ச விழிதிறப் பீரே

உந்திமேல் இருள்வாய் தான்விடிய வேணும்
உந்தியுள் பொருண்மைத் தரிசனம் வேணும்
தொந்தியுள் அருண்மை அற்புதம் வேணும்
நெஞ்ச விழிதிறப் பீரே

மின்னும் பொன்மெய் ஒளியுரு வேணும்
சுத்த விண்ணுள் ஒளிந்திட வேணும்
மொத்த மண்ணுங் களிப்புற வேணும்
நெஞ்ச விழிதிறப் பீரே

உண்ணும் உணவு அமுதாக வேணும்
எம்பொய் உடம்பு மெய்யாக வேணும்
மண்ணில் தயவாய் யாம்வாழ வேணும்
நெஞ்ச விழிதிறப் பீரே

கண்கா திரண்டில் அருள்நாட்டம் வேணும்
கைகா லிரண்டில் தயவோட்டம் வேணும்
நன்னா சிவாய்மெய்க் குருகாக்க வேணும்
நெஞ்ச விழிதிறப் பீரே

மின்னல் ஒளியெம் உடையாக வேணும்
சுத்த வெளியெம் உடம்பாக வேணும்
நல்ல ருளேயெம் உயிர்ப்பாக வேணும்
நெஞ்ச விழிதிறப் பீரே

வெளியுளே நடராஜன் ஒளிகாண வேணும்
அளிகடக் கல்பட்டு மெய்யாக வேணும்
இரணியன் நரசிம்ம னுருவேற வேணும்
இருதய விழிதிறப் பீரே

சங்கர சிவவுரு அன்பாக வேணும்
மங்கள ஜெயத்திரு அருள்பாய வேணும்
சற்குரு மயநடு நிலைசேர வேணும்
நெஞ்சினில் விழிதிறப் பீரே

இறைகை வேணுவாய் நானிருக்க வேணும்
துரையவர் நாதமென் னூடதிர வேணும்
மறைப்பெலாம் நீங்கியே நான்தெளிய வேணும்
இருதய விழிதிறப் பீரே

பொருளதன் மூலம் அருள்காண வேணும்
இருளதன் மூலம் மருள்தீர வேணும்
இருவினை சேரா இறைசேர வேணும்
இருதய விழிதிறப் பீரே
(மருள் = மயக்கம், மப்பு)

உலகைப் பழிக்கும் மனம்மாய வேணும்
உயிரை அழிக்குஞ் சினஞ்சாய வேணும்
இருட்கண் விழிக்குந் தவந்தோய வேணும்
இருதய விழிதிறப் பீரே
(இருட்கண் விழிக்குந் தவந்தோய வேணும் = இருளைப் பொருட்படுத்தாது அதன் ஆழத்தில் புகுந்து மயங்காமல் விழித்திருக்குந் தவம் வாய்க்க வேண்டும், புலியின் குகைக்குள் புகுந்து புலியை வீழ்த்தும் வீரமல்லவா நமக்கு வேண்டும்)

வன்பின் தீவிரந் தணியும்வரம் வேணும்
அன்பின் தீவிரக் கனல்பரவ வேணும்
என்பு தோற்கடத் தன்புயிர்க்க வேணும்
நெஞ்ச விழிதிறப் பீரே

கொல்லும் நோய்தீரவே அன்புணர வேணும்
புன்கண் பாய்நீரதை மெய்யுண்ண வேணும்
மெய்தன் உள்(ண்)மையாம் அன்புயிர்க்க வேணும்
நெஞ்ச விழிதிறப் பீரே

அருவமாந் துரையவர் உருவில்வர வேணும்
உருவமாம் வேணுவை அருவாக்க வேணும்
அருஉரு ஒருமைத் திருவோங்க வேணும்
இருதய விழிதிறப் பீரே

திருவாம் உத்தமரை உள்ளுணர வேணும்
கருநா கநஞ்சுதான் முறிந்திடவே வேணும்
கருநா அதிராத மோனமே வேணும்
இருதய விழிதிறப் பீரே

உயர்பொருள் அன்பெனும் உயிர்நிலை வேணும்
உயிர்கொலும் வன்பெனும் மருள்தீர வேணும்
கருத்தினில் சற்குருப் பொருள்தோய வெணும்
இருதய விழிதிறப் பீரே

சாதரும் வேதனை தான்தீர வேணும்
யாவருந் தேவராய்த் தாம்ஓங்க வேணும்
பூமியில் ஆதியின் ஆளுமை வேணும்
மார்பினில் விழிதிறப் பீரே
(ஆதியின் ஆளுமை = பராபரமாம் ஆதி மூலத்தின் அருளாட்சி)

முதல்நடு முடிவை யாம்உணர வேணும்
சிதறிய முழுமை மீட்டெடுக்க வேணும்
எம்வினா பதிலைப் பீரேதர வேணும்
நெஞ்சினில் விழிதிறப் பீரே
(பீரேதர வேணும் = உட்குருவாம் பீரவர்களே எம்முள்ளிருந்து தர வேண்டும்)

கரும்பாத் தலைக்கனந் தான்தீர வேணும்
கரும்பாய் அருளினைத் தான்சுவைக்க வேணும்
வெண்பா லன்பினை மெய்யுண்ண வேணும்
நெஞ்ச விழிதிறப் பீரே

பேசியே வாசிதீரா திருக்க வேணும்
ஊசியாம் மேனாசி திறக்க வேணும்
மூவாறு கூடிஆசி இறங்க வேணும்
மார்புநடு விழிதிறப் பீரே
(ஊசியாம் மேனாசி = ஊசித் துளை போன்று சிறுத்த உச்சித் துவாரம்; மூவாறு கூடி ஆசி = உச்சித் துளையில் வாசி, நெற்றி விழியில் விந்து, பிடரிக் கண்ணில்-செவியில்- நாதம் ஆகிய இம்மூன்று நதிகளுஞ் சங்கமிக்கும் மண்டை நடுச் சுழி அமுத தாரை)

உச்சியில் பரஞான போதம் வேணும்
நெற்றியில் தூயநன் னோக்கம் வேணும்
தொண்டையில் குருமொழி நாதம் வேணும்
என்னகத் தமர்ந்திருப் பீரே

நெஞ்சிடைத் திருபூமி காண வேணும்
உந்தியில் சத்திய தரிசனம் வேணும்
தொந்தியில் அற்புதம் நிகழ வேணும்
என்னகத் தமர்ந்திருப் பீரே

பொய்ம்மயப் பருவுடல் திருந்த வேணும்
பொன்மயத் திருவுரு பொருந்த வேணும்
இச்சகம் பயனுற இருக்க வேணும்
என்னகத் தமர்ந்திருப் பீரே

நெஞ்ச நடுநிலை எக்காலும் வேணும்
வஞ்ச மனத்திடை சிக்காமை வேணும்
நஞ்சு முறிந்திடும் விஞ்ஞையும் வேணும்
என்னுள் ளமர்ந்திருப் பீரே

அன்பதை நெஞ்சிலே உணர வேணும்
புந்தியில் அன்பது ஏற வேணும்
உற்றநல் லறிவது இற(ர)ங்க வேணும்
என்னகத் தமர்த்திருப் பீரே
(புந்தி = புத்தி)

அன்பதே உயிர்நிலை விளங்க வேணும்
என்புதோற் கூடுமெய் யாக வேணும்
மண்மிசை தயவாய் இருக்க வேணும்
என்னகத் தமர்த்திருப் பீரே

அன்பே சிவமெனத் தேர வேணும்
சத்தித் திருஉரு பூண வேணும்
சத்தி சிவகுரு வாக வேணும்
நெஞ்சுட் குடியிருப் பீரே

நாகரா
07-03-2010, 10:22 AM
அன்பே நாத மான பீஜம்
அன்பே ஜோதி யான ரூபம்
அன்பே வாசி யான போதம்
அன்பே காண்மெய்ஞ் ஞானம்
(பீஜம் = மூல வித்து)

அன்பே கூடும் மூவ ராகும்
அன்பே தேவ நீர தாகும்
அன்பே தூய தேக மாகும்
அன்பே காண்மெய்ஞ் ஞானம்
(மூவர் = நாதம், ஜோதி, வாசி; தேவ நீர் = அமிழ்தம்)

அன்பே ஓம தான ஏகம்
அன்பே யாம தான கோலம்
அன்பே தான மான ஞாலம்
அன்பே காண்மெய்ஞ் ஞானம்
(ஓமதான = "ஓம்" அது ஆன; யாமதான = "யாம்" அது ஆன; தானமான = தானம் ஆன, கொடையாகிய

அன்பே நாலு மான வேதம்
அன்பே தேவி வாம பாகம்
அன்பே காம மான போகம்
அன்பே காண்மெய்ஞ் ஞானம்

அன்பே வேணு கான மாகும்
அன்பே நாக மாக ஆடும்
அன்பே ஊதும் நாத ராகும்
அன்பே காண்மெய்ஞ் ஞானம்

அன்பே யாவு மான மூலம்
அன்பே மேலை வாசி யாகும்
அன்பே நாத ஜோதி பாதம்
அன்பே காண்மெய்ஞ் ஞானம்

அன்பே ஆதி மூல மாகும்
அன்பே கால ஞாலக் கோலம்
அன்பே தூல மான தேகம்
அன்பே காண்மெய்ஞ் ஞானம்

அன்பே ஆளும் ஆண தாகும்
அன்பே பேணுந் தாய தாகும்
அன்பே ஆண்பெண் ஓர்மை யாகும்
அன்பே காண்மெய்ஞ் ஞானம்
(ஓர்மை = ஒருமை)

அன்பே பேத பாவ நாசம்
அன்பே வேத மூல மோனம்
அன்பே ஞான வாக்ய மாகும்
அன்பே காண்மெய்ஞ் ஞானம்

அன்பே ஆதி நாதர் யோகம்
அன்பே போதி நான தாகும்
அன்பே தீதி லாத யாகம்
அன்பே காண்மெய்ஞ் ஞானம்
(நான தாகும் = நான் அது ஆகும்)

அன்பே வான ராஜ்ய மாகும்
அன்பே பூமிக் கோள மாகும்
அன்பே காணும் யாவு மாகும்
அன்பே காண்மெய்ஞ் ஞானம்

அன்பே தான தான சூன்யம்
அன்பே நான தான ஏகம்
அன்பே யாவு மான பூர்ணம்
அன்பே காண்மெய்ஞ் ஞானம்
(தானதான = "தான்" அது ஆன; நானதான = "நான்" அது ஆன)

அன்பே மாயை மாய்க்குஞ் சூலம்
அன்பே நாச மாகா மூலம்
அன்பே மாயா தோங்கும் யோகம்
அன்பே காண்மெய்ஞ் ஞானம்

அன்பே ஞான போத மாகும்(உச்சி)
அன்பே தூய நோக்க மாகும்(நெற்றி)
அன்பே நாத தீக்கை யாகும்(தொண்டை)
அன்பே காண்மெய்ஞ் ஞானம்
(தீக்கை = தீட்சை, Initiation)

அன்பே தூய பூமி யாகும்(இருதயம்)
அன்பே வாய்மைத் தோற்ற மாகும்(நாபி)
அன்பே பாயும் மாற்ற மாகும்(நாபியடி)
அன்பே காண்மெய்ஞ் ஞானம்

அன்பே ஜோதி ரூப மாகும்(முதுகடி)
அன்பே தேவன் ராஜ்ய மாகும்(முழந்தாள்)
அன்பே பூர்ண ஞான மாகும்(பாதங்கள்)
அன்பே காண்மெய்ஞ் ஞானம்

அன்பே சத்து ஏக மாகும்
அன்பே சித்து பாக மாகும்
அன்பே இன்ப வேக மாகும்
அன்பே காண்மெய்ஞ் ஞானம்

அன்பே சத்துத் தந்தை யாகும்
அன்பே சித்து அம்மை யாகும்
அன்பே இன்பப் பிள்ளை யாகும்
அன்பே காண்மெய்ஞ் ஞானம்

அன்பே சுத்த சிவம தாகும்
அன்பே சத்தி அருள தாகும்
அன்பே நந்தி குருவ தாகும்
அன்பே காண்மெய்ஞ் ஞானம்

அன்பே அல்லா அருவ மாகும்
அன்பே எல்லா உருவ மாகும்
அன்பே நல்லார் நபிக ளாகும்
அன்பே காண்மெய்ஞ் ஞானம்

அன்பே மெக்கா மெய்ய தாகும்
அன்பே காபா நெஞ்ச தாகும்
அன்பே பீராம் முகம தாகும்
அன்பே காண்மெய்ஞ் ஞானம்

அன்பே சத்து அகம தாகும்
அன்பே சித்து முகம தாகும்
அன்பே இன்ப சைய தாகும்
அன்பே காண்மெய்ஞ் ஞானம்

அன்பே எந்தை தேவ னாகும்
அன்பே சுத்த ஆவி யாகும்
அன்பே பிள்ளை ஏசு வாகும்
அன்பே காண்மெய்ஞ் ஞானம்

அன்பே ஆதி புத்த ராகும்
அன்பே போதி சத்த ராகும்
அன்பே யாவின் சங்க மாகும்
அன்பே காண்மெய்ஞ் ஞானம்

அன்பே மைய நெறிய தாகும்
அன்பே மேலே அறிவ தாகும்
அன்பே கீழே தயவ தாகும்
அன்பே காண்மெய்ஞ் ஞானம்

அன்பே வலத்தில் சிவம தாகும்
அன்பே இடத்தில் சத்தி யாகும்
அன்பே நடுவில் குருவ தாகும்
அன்பே காண்மெய்ஞ் ஞானம்

அன்பே முன்னே உருவ மாகும்
அன்பே பின்னே அருவ மாகும்
அன்பே மையத் திருவ தாகும்
அன்பே காண்மெய்ஞ் ஞானம்

அன்பே உள்ளத் தூய்மை யாகும்
அன்பே புத்திக் கூர்மை யாகும்
அன்பே சுத்தந் தோய்மெய் யாகும்
அன்பே காண்மெய்ஞ் ஞானம்

அன்பே என்றும் ஓர்மை யாகும்
அன்பே நெஞ்சின் நீர்மை யாகும்
அன்பே வெல்லும் வாய்மை யாகும்
அன்பே காண்மெய்ஞ் ஞானம்

அன்பே வாழ்வின் மூல மாகும்
அன்பே யாவின் ஆதி யாகும்
அன்பே தேகத் தாவி யாகும்
அன்பே காண்மெய்ஞ் ஞானம்

அன்பே தாழுடை வெள்ள மாகும்
அன்பே நோய்தீர்க் கற்ப மாகும்
அன்பே வாய்மைச் செம்மை யாகும்
அன்பே காண்மெய்ஞ் ஞானம்

நாகரா
08-03-2010, 05:41 AM
இருகரங் கூப்பி இருதயத் தழுத்தித்
திருஉரு யாவும் வணங்கு

உயிர்கள் யாவுமே, எவ்வடிவில் அவை இருந்தாலும் வணக்கத்திற்குரியனவே என்பதை உணர இந்த "நமஸ்தே" வணக்க முத்திரை

இருதயத் தழுத்தி = நடு மார்பில் சுரணையேறுமாறு வலிய அழுத்தி

"நமஸ்தே" என்ற லெமூரிய மொழி வாக்கியத்திற்கு "எனக்குள்ளிருக்கும் அம்மையப்பன் உனக்குள்ளிருக்கும் அம்மையப்பனை வணங்குகிறது" என்று பொருள்!(God-Goddess Within Me Salutes the God-Goddess Within You)

நாகரா
09-03-2010, 03:33 AM
தூலப் பருப்பொருள் சூக்குமப் பரம்பொருளின்
தூய உரு!மருள் அகற்று

Physical Matter is the Pure Solidification or Form of Non-physical Spirit! Transcend the ignorance that sees otherwise!

மருள் = மயக்கம்

பருப்பொருள் வேறு பரம்பொருள் வேறு என்று பழகிய மயக்கப் பார்வையை அகற்றித் தூய நன்னோக்கத்தைப் பழகப் பருப்பொருள் ஒவ்வொன்றும் பரம்பொருளின் தெய்வீக வடிவமே என்ற மெய்ஞ்ஞானம் விளங்கும்!

திரிந்து தெரியும் தோற்றப் பிழைகள்
திருத்திப் புரிக தூய்மை

நாகரா
10-03-2010, 04:11 AM
மெய்யுடம்பே குருமடம் நெஞ்சகமே குருபீடம்
உய்ந்திடவே நினக்கேன் தயக்கம்

பொய்ம்மடக் குருக்களின் வஞ்சகப் பீடம்
உய்ந்திட நினக்கேன் அவசரம்

ஆயிரந்தலைப் பாம்புச்சியில் சீடர்தலை கொத்த
ஆணவமடத் தேறிஏய்க்கும் பொய்க்குரு
(ஆயிரம் என்பது அனந்தம், எண்ணிலியின் குறியீடு)

எங்கே இருக்கிறாய் அலையாமல் மெய்யுள்
உய்ந்தால் இருதய நிரந்தரம்

நாகரா
11-03-2010, 04:55 AM
ஆதியின் திருஉருவாய் யாவுமே காணும்
போதியாம் இருதயவாய்க் கண்

நாகரா
12-03-2010, 03:42 AM
நின்பேர் நீயோ நீஅகமென உணர
எல்லா முகங்களுங் கழற்று
(அகம் = அஹம் = நான்)

நிரந்தர முகவரி இருதய அகமறி
வரம்நிறைத் தலமுள மெய்யுணர்

Your Permanent Residential Address is the Sacred & Immaculate Heart! Feel and Know that Blessed Place Right WIthin Your Body!

முன்பின் இடவலம் மேல்கீழ் அலையாமல்
நெஞ்ச நடுத்தலத் துய்

God is not found to your left nor right, front nor back, above you nor below you, cease wandering & reach your Center where the Heart is! There God is found!

நாகரா
13-03-2010, 04:11 AM
இங்குளன் அங்குளன் என்றே மருட்டுவார்
விட்டுநின் நெஞ்சகங் காண்
(மருட்டுவார் = மயக்குவார் )

மூல கணபதி ஆதி மூலக்
கோல மாய்அமர் முதுகடி
(ஆதி மூலமாம் பரம்பொருளின் தெய்வீக வடிவாய்க் கணபதி மூலாதார சக்கரமுள்ள நின் முதுகடியில் அமர்ந்துள்ளார்.)

நாகரா
14-03-2010, 05:22 AM
மெய்யென்னும் உடம்பை பொய்யாக்கும் மரணம்
வென்றென்றும் வாழவே செய்தவம்

தவமெனும் அகவேள்வி மெய்க்குண்டத் தியற்று
அவமெனும் புறவேள்வி அகற்று
(புறவேள்வி = சடங்கு சம்பிரதாயச் சழக்குகள்)

அகற்று மெய்தொற்றி உயிர்மை உறிஞ்சும்
அனந்தப் பற்றுண்மை பற்று

பற்றிப் படர்ந்தக் கர்ம வினைகள்
பற்றி எரியத் தவஞ்செய்

தவஞ்செய் அகத்தே குவிந்து குண்டலி
சிவத்தைப் புணர வழிசெய்

செய்வாய் தவத்தை மெய்க்குள் உய்ந்து
நெஞ்சக் குகைவாய் புகுந்து

புகுந்த கோயில் அனந்தம் மெய்ம்மறந்து
புரண்ட பிறவி அனேகம்

அனேகப் பிறவிச் சுழலைத் தாண்ட
சினேகங் கொள்ளகத் தீசன்

ஈசனை மெய்யுளே நெஞ்சகங் காட்டும்
நாதனே சற்குரு நாயகம்

நாயகம் முகமது அகமது வாயுணருந்
தாயகம் இருதய குகை
(முகமது = முகம்+அது, அகமது = அகம்+அது,
நாயகமே நின் முகமாய் அகமாய் உணர இருதயமே வழி)

நாகரா
15-03-2010, 05:36 AM
குகைபல தேடி மலைகளில் திரிவாய்
குகையகம் நாட மறந்தாய்

மறந்தாய் மெய்யை அஞ்ஞான மயக்கில்
துறந்தே நெஞ்சைத் திரிந்தாய்

திரிந்தாய்த் துரிசே வடிவாய்ப் பிறந்தே
மரிக்குஞ் சுழலே கதியாய்
(துரிசு = மாசு)

கதியாய் உட்குரு பற்றிக் கரும
விதியை வென்றிடக் கல்

கல்லாய்க் கிடந்தாய் மனிதனாய்ப் பரிணமித்தாய்
தெய்வ மகவாய் உருமாறு

நாகரா
16-03-2010, 05:19 AM
மாறும் உருக்களில் மாறா அருவம்
ஆடுந் திருநடம் பார்

பார்வை கேள்வி மூச்சு மூன்றின்
கோர்வை ஊற்றில் களி
(பார்வை = பரவிந்து ஒளி தத்துவம், கேள்வி = பரநாத வெளி தத்துவம், மூச்சு = பரவாசி வளி தத்துவம், இம்மூன்றின் கோர்வை சிர நடுச் சுழியில் ஊற்றும் பர அமுத அளி தத்துவம், இவ்வளியின் திடப்படுதலே பரமானந்தக் களி(மண்)யால் ஆன இத்தேக மெய்! இந்த மெய்ஞ்ஞானம் புரியாமல் சாவதே விதியென்று ஏனோ உழல்கிறாய்!)

நாகரா
17-03-2010, 06:04 AM
களிமண் தேகமெய் ஒளிவிண் வளிபெய்யும்
அளிசெய் போதமெய் யுணர்
(விண் = பரநாத வெளி, ஒளி = பரவிந்து ஒளி, வளி = பரவாசி வளி(மூச்சு), அளி = பர அமுத அளி, களிமண் தேகமெய் = பர அமுத அளியின் திடமாம பரமானந்தக் களியே மண்ணாக, அம்மண்ணிலிருந்து உருவாக்கப்பட்ட மெய்யான தேகம், மண் என்றால் உனக்கு இளக்காரமா? ஏளனமா? மண்ணின் மெய்ப்பொருள் உணர்ந்தால், தேகம் மெய்யெனப் புரியும், தேகத்துக்கு மெய் என்று பேர் வைத்த அருந்தமிழின் அருமை புரியும்?)

நாகரா
19-03-2010, 04:50 AM
உணராமல் வாலைத் தாயை மெய்யகம்
உயிரேது நினக்கு மனிதா
(வாலை = வால் + ஐ = "ஐ"யாம் நாயகன் வால் அவள், வால் என்றால் தூய்மை, அத்தூய்மையாம் ஆண்டாளே ஆண்(டவன்) தாளே நின் உயிர் என்று நீ உணராத வரை மனிதா உன் ஆறறிவால் என்ன பயன்?)

நாகரா
20-03-2010, 09:22 AM
மனிதா மமதையால் ஆறையும் இழந்தாய்
இனிதே அகத்தேநீ அடங்கு
(ஆறு = ஆறறிவு, மமதை = ஆணவம், அகம் = இருதயம்)

அடங்கச் சொன்னார் வள்ளுவர் பேய்மன
மடங்க நெஞ்சைத் திற

நாகரா
21-03-2010, 07:41 AM
வாலைச் சத்தி நினைவில் இருக்கப்
பாலாய்க் கொட்டும் அருள்

ஜோதி வாலை ஆதிப் பராபரங்
கூட ஆனாய் நீ

நாகரா
22-03-2010, 09:06 AM
அல்லா நின்மூச்சாம் அருளம்மை நின்மெய்யாம்
நல்லார் நபிகள்தாம் நின்மனம்

அல்லா உன் மூச்சாகி உன்னை வாழ்விக்கிறார்!
புனித "ரு"(அரபி மொழியில் Ruh)வாம் அருளம்மை உன் உடம்பாகி உனக்கு வாழ்விடந் தருகிறாள்!
நபிகள் நாயகம் உன் மனமாகி உயிராந் தந்தையின் மெய்யாந் தாயின் என்றும் இணை பிரியா உயிர்மெய் ஒருமையை உனக்கு உணர வைக்கிறார்!
உயிர் மூச்சைக் கவனமாய் வாசி!
உடம்பை மெய்யெனப் பூசி!
மனத்தை உயிர்மெய் உணர்வாய் நேசி!

நாகரா
23-03-2010, 07:32 AM
இல்லார் அருவாய் உள்ளார் உருவாய்
நல்லார் அல்லா ஒருவரே

அருவமாய்த் தோற்றத்தில் இல்லாதவர்
அனந்த உருவங்களாய்த் தோற்றத்தில் உள்ளவர்
அல்லா ஒருவரே தான்!

அன்பே சிவமாய் அல்லா மலாரோ
அல்லா அகத்தே உணர்

அல்லா மலாரோ = அல்லாமல் ஆரோ = அல்லாமல் ஆரோ

அன்பே சிவமாய் உள்ளவரே அல்லா, இவ்வுண்மையை அகத்தே தவத்தில் நின்று
உணர்வாயாக!

நாகரா
24-03-2010, 05:11 AM
அளவிட அலகிலா அன்பினை அறிந்திட
அகந்தனை அகழ்ந்திடல் அவசியம்

அலகு = Unit of measurement like cm, kg etc.
அகழ்ந்திடல் = ஆழத் தோண்டுதல்

அகமெனும் இருதயத்தின் மீது கான்க்ரீட் போல் இறுகியிருக்கும் மாசுகளை, இருள்சேர் இருவினைகளை அகழ்வதற்கே அகத்தவம்! அகழ அகழ இருதயத் தாமரையின் அனந்த மடல்கள் ஒவ்வொன்றாய்த் திறக்க அன்பின் போதை தலைக்கேற மெய்ஞ்ஞான போதம்! அன்பின் அறிதலே புரிதலே மெய்ஞ்ஞானம்! மெய்ஞ்ஞானத்தில் விளைவாய் அருளின் இறக்கம், இரக்கம், இயக்கம் அதாவது தயவு, கருணை! அன்பு இருக்கிறது, ஆனால் பெரும்பாலும் அறியப் படாமல் இருக்கிறது, எனவே தான் அன்பெனும் பெருவல்லபம் இருந்தும் நமக்கு இலாபமில்லாமல் போகிறது! அன்பின் இருப்பை அறிந்தால் நமக்கு இலாபம், அதை நம்மால் பயன்படுத்த முடிகிறது!

நாகரா
03-04-2010, 06:20 AM
அல்லா நாமம் முதல்நடு முடிவாம்
வல்லார் மூலர் நாதம்

அல்லாஹ், அகரம் = முதல், லகர மெய் = நடு, ஹகர மெய் = முடிவு, அசபை அட்சரம் (அதி சூக்கும மெய், ஸகர மெய் இதற்கு முந்தியது).

ஹகரம் மாயாத் தமிழின், சமஸ்கிருதத்தின் கடைசி அட்சரம். லகரம் ஆறாதாரத்துக்கும் நிராதாரத்துக்கும் நடுவே இவ்விரண்டும் ஒன்ற வழி வகுக்கும் உச்சி மேல் பாலம், நிராதார மேம்பாலம். ஹகரம் நிராதாரம் ஆறாதாரத்தில் முழுமையாய்ப் பொருந்த முடிவான ஜோதி ஸ்வரூபம், வாழ்க மாயாத் தமிழ், வளர்க மாயா நிலையம்!

லா இலாஹா இல்லல்லாஹ்(மூச்சு வெளி விடும் போது மனதில் உச்சரிக்க வேண்டும்)
மொஹம்மதுர் ரசூலல்லாஹ்(மூச்சை உள்ளிழுக்கும் போது மனதில் உச்சரிக்க வேண்டும்)

மூச்சை வெளிவிடும் போது அல்லாவில் இறக்கிறாய், இறத்தல் என்றால் அருந்தமிழில் கடத்தல் என்ற பொருளும் உண்டு! மூச்சை உள்ளிழுக்கும் போது நபிகளாய்ப் பிறக்கிறாய்! இதுவே சூஃபி ஞானியரின் வாசி யோகம்!

"லலிதா" என்ற அருளம்மையின் பேரில் "அல்லா" அடங்கி இருக்கிறார்! LALITHAA = ALLAAH+IT(anagram, rearranging the letters) = அல்லாவே இது!

மதம் பிடித்தத் தீவிரவாத மூடர்கள் இதை விளங்கிக் கொள்ள விரும்புவதில்லை! என்னை இகத்தில் ஈன்றெடுத்து இறை எய்தி விட்ட அன்னையின் பெயர் "லலிதா"! இக்கரும்பாவை அவருக்கு அர்ப்பணிக்கிறேன்!

நாகரா
07-04-2010, 02:58 PM
நெஞ்சகம் முழங்கும் ஞான வாக்கியம்
உட்குரு வழங்கும் போதம்

ஞான வாக்கியத்தின் மெய்யான வரி வடிவம் = உம் இருதயத்தே ஒளிரும் பர விந்து
ஞான வாக்கியத்தின் மெய்யான ஒலி வடிவம் = உம் இருதயத்தே ஒலிக்கும் பர நாதம்

பர நாத உயிரும்(சிவம்) பர விந்து மெய்யும்(சத்தி) வேற்ற ஒன்றியிருக்கும் உயிர்மெய் ஒருமையே இருதய நடுப் பரலோக வாசியாம் உட்குரு, சற்குரு! சந்தேகந் தீர மார்பைப் பிளந்து காட்டும் அனுமாரைத் தியானிக்கவும்! அல்லது அன்னை மரியின் இயேசு நாதரின் தூய புனித நெஞ்சைத் தியானிக்கவும்! இஞ்ஞானியர் ஞான வாக்கிய மெய் வடிவை உம்முள் உணர நிச்சயம் உதவுவர்!

நாகவாய் வீச்சோ ஞான வாக்கியம்
போதவாய் நெஞ்சின் சாரம்

நாகரா
08-04-2010, 10:13 AM
மனப்பாறைப் பிளந்தெழுந்த இருதயச் செடியில்
கனக்குங்கனி யோஞான வாக்கியம்

கைவசம் அன்பே யன்றிப் பொருளேது
ஐயனின் சொல்லைப் புரி

ஞான சற்குரு ஓதும் வாக்கியம்
தூல நெஞ்சகங் கேள்

கேள்விபோல் அமர்ந்த யோகியார் பதிலாய்
ஊற்றுவார் ஐயா துரை

ஞான வாளால் மாயை மாய்க்குங்குரு
நாதன் வாழ்வார் நின்னகம்

அகமெனும் நானெழும் ஓமெனும் இருப்பில்
சகமெலாம் அகமதின் பாதம்

பாதம் பதிந்தார் பராபரம் சிரமேல்
பாதை திறந்தார் மெய்யகம்

மெய்யகம் உறங்குஞ் சற்குரு நாதன்யான்
உய்ந்திட விழிக்குந் தவங்கண்

நாகரா
09-04-2010, 06:08 AM
நெற்றி நடுவிழிப் பிடரி நடுச்செவி
உச்சி வழிசேர் முச்சுழி

நெற்றித் துவாரம் வழியே பரவிந்து ஒளியும்(பினியல் சுரப்பியோடு தொடர்புடையது)
பிடரித் துவாரம் வழியே பரநாத ஒலியும்(பிட்யூட்டரி சுரப்பியோடு தொடர்புடையது)
உச்சித் துவாரம் வழியே பரவாசி மூச்சும்(ஹைப்போதேலமஸ் சுரப்பியோடு தொடர்புடையது)
ஆகிய மூன்று தாரைகள் மண்டை நடுவில் சேரும் திரிவேணி சங்கமமே முச்சுழி(முச்சுழி அமுதம் தொண்டை வழியே மெய்க்குள் இறங்கத் தைமஸ் சுரப்பி அமுத கலசமாகிறது)

இருவழி தாண்டி ஒருவழி ஊடே
அருண்மொழி தாரை வாசி

இருவழி = இரு விழி, இரு செவி, நாசித் துவாரங்கள் இரண்டு
ஒருவழி = நெற்றி நடு விழி, பிடரி நடுச் செவி, உச்சி மேல் வழி
அருண்மொழி தாரை = விந்து, நாத, வாசித் திரிவேணி சங்கமம்

விந்துவரி நாதவொலி வாசிஉயிர் வடிவாய்ச்
சிந்துமொழி ஊன்றியுணர் அகத்தே

மெய்ப்பொருளே உயிர்ப்பாய்ப் பொதிந்த வரி, ஒலி வடிவங் கொண்டப் பர வாக்கை இருதயத் தலத்தில் ஆழ்ந்து உணர்வாயாக!

நாகரா
16-04-2010, 11:07 AM
அருளே பொருளென்று நீர்அறிந்தாலே மயக்கும்
மருளாம் இருமைநோய் தீருமே!

பொருளைப் பார்ப்பாய் பொருள்மூலம் அருள்பாராய்
மருளில் வாழ்வாய் ஏனோ!

புலப்படா அரும்பொருள் ஒன்றேதான் ஞாலத்தில்
புலப்படும் பருப்பொருள் காண்!

நாகரா
17-04-2010, 05:38 AM
தேடும் ஆண்டவனார் புகுந்துள மெய்வீடு
நாடு அகத்தவரைக் கூடு

நீ புறத்தே தேடும் கடவுள் உன் மெய்யுடம்பாம் வீட்டில் குடியிருக்கிறார். அவரை நாடி நின்னகமாம் இருதயத்தே அவரைக் கூடுவாயாக!

பரம விழுப்பொருள் இகத்தில் விழும்அருள்
சிரமேல் ஒழுக்கதே உயிர்மை

அதி உன்னதமான பரம்பொருளே இகத்தில் அருளாகி விழுகிறது, சிர உச்சி மீதில் ஒழுகி மெய் வழியே இறங்கும் அவ் அருளே நின் உயிர் மையாம் உயிர்ப்பு!

உச்சிமேல் ஒழுக்கை உயிர்மை அருளை
மெய்தான் விழுங்குந் தவத்திரு

சிர உச்சி மீதில் ஒழுகிக் கொண்டிருக்கும் நின் உயிர் மையாம் உயிர்ப்பாம் அருளை, நின் மெய் விழுங்கிப் பெரு வாழ்வில் நிலைக்க வசதியாக நீ அகத் தவத்தில் இருப்பாயாக!

ஒழுக்கை = ஒழுக்க + "ஐ" = ஒழுகி உலகைப் பேணுந் தலைமை நெறி

தேடாமல் புறத்தே கூடாயோ அகத்தே
வீடாம்மெய் யுடம்பில் ஆண்டவர்

வெளியில் வீணே தேடி அலையாமல், மெய்யுடம்பாம் உன் வீட்டில், அகமாம் இருதயத்தே வாழும் ஆண்டவரைக் கூட மாட்டாயோ?!

நாகரா
19-04-2010, 06:37 AM
வாழட்டும் எவ்வுயிரும் வாழ்விக்கும் பரம்பொருளில்
ஆழட்டும் அன்புருவில் ஏறட்டும்

நாகரா
19-05-2010, 04:08 PM
புன்னோய் மூப்புஞ் சாவுந் தீர்க்கும்
அன்பை மூச்சில் உணர்

உணர்வில் விழிக்கும் உயிர்நிலை அன்பால்
உடம்பில் இறங்கும் மெய்ம்மை

மெய்ம்மை யாதெனில் ஆதிமூலத் துதித்தநின்
உண்மை ஞாபகங் கொள்

ஞாபகங் கொள்வாய் மெய்ம்மையை மீட்பாய்நின்
தேகமெய்க் குள்ளே சேர்ப்பாய்

பாயும் உயிர்மை அன்பின் சாலை
தேகம் புகவே மெய்வழி

மெய்வழிச் சாலை தேகத்தே திறக்க
உய்ந்திடு வாயே நெஞ்சகம்

நெஞ்சகந் திறந்தே அன்பை உணர்வாய்
இச்சகத் திருந்தே உய்வாய்

உய்வாய் இருதயந் திறந்து வஞ்சகப்
பொய்வாய் இழுத்து மூடு
(உய்வாய் இருதயம் = உய்கின்ற வழியான இருதயம்)

மூடுவாய் மூடி நாடுவாய் நாடிக்
கூடுவாய் மூலத் தை
(மூட வேண்டியப் பொய் வாயை மூடி, நாட வேண்டிய மெய் வாயான இருதயத்தை நாடி, அங்கே ஆதி மூலத்தோடு நீ கூடுவாயாக!

மூலத்தைக் கூடியே நேயமே ஞானமாய்
ஞாலத்தே வாழுவாய்த் தயவாய்

நாகரா
13-06-2010, 02:49 PM
தயவாய் இருவென இரத்தினச் சுருக்கமாய்
நயமாய்க் குருபரன் மொழிந்தார்

மொழிந்தார் இருசொல் ஏழாந் திருமுறைப்
பிழிவாய்த் திறந்தார் இருதயம்

இருதயமாம் ஆதி மூல இருப்பிடமே
திருத்தலமாம் பூமிக் காதி

ஆதி மூல நாத ஜோதி
ஆடும் வாசி வாசி
(வாசி = மூச்சு, கவனமாய்ப் படி)

வாசி வாசி பூசி நேசிமே
னாசி ஆசி சுவாசி
(மேனாசி = தலையுச்சித் துவாரம்)

சுவாசி நேச தாரை வாசி
சிவாசு வாமி நீயே

நீயே நானென நானே நீயெனத்
தாயாம் நாதனில் கரை

கரையுங் கற்பூர வாசமாய்த் தேகமெய்
மறையும் நற்றீப ருள்

உள்ளீடாம் மெய்ம்மையை உண்ணாடி ஞாபகங்
கொள்ளீரோ பொய்ம்மாயை வெல்லீரோ

ஓங்கும் மெய்ம்மையை நெஞ்சகந் திறந்துஉள்
வாங்கி மெய்யுயிர்க்க இறக்கு

நாகரா
14-06-2010, 05:14 AM
குவலயம் உய்யக் குருமொழி பெய்யுந்
தவலயத் துள்ளே இரு

இருமை இருண்மை மாயை கரைக்கும்
ஒருமை அருண்மை உணர்

நாகரா
15-06-2010, 05:23 AM
கூறுகள் பலவாய்ப் பிளந்தநீ தவங்கண்
கூட்டிட அவற்றை முழுமை

முழுமையை மறந்ததால் இருமையாம் இருட்கண்
விழுந்தாய்நீ சிதறினக் கூறுகள்

கூறுகள் கூட்டும் அகத்தவம் நாடி
ஏறுநீ கூடும் முழுமை

முழுமை நழுவும் அஞ்ஞான மயக்கம்
முழுதே தழுவும் அவம்

அவமாம் அஞ்ஞான மயக்கந் தெளியத்
தவமாங் குன்றேற வேண்டும்

வேண்டும் முழுமையை அடையுஞ் ஞானம்
தோண்டி அகத்தேயதைக் காண்

ஆண்டவ ஞாபகம் இருதய ஆழத்தில்
ஆணவத் தோலினை உரி

உரியும் வெங்காயம் போல்தோல் உரிய
உரிய இல்லைநின் ஆணவம்

ஆணவத் தோல்களெலாம் உரிய சிதறியநின்
கூறுகள் எலாங்கூடநீ ஆண்டவம்

ஆண்டவம் தாமென ஏமாற்றும் ஆணவத்
தாண்டவம் ஆடுவோர் அனந்தம்

அனந்தமாய் ஆடுகின்ற ஆணவக் கோலங்கள்
அனைத்துமே மாய்க்கவேசெய் தவம்

தவமலால் உபாயம் வேறில்லை அன்பே
சிவமதாம் முழுமை சேர

அன்பே சிவமதாம் முழுமை சேர
நெஞ்சே வழியதாம் தேர்

தேர்வாய் மெய்வழி மெய்யுள்ளே உய்ந்து
ஆழ்வாய் நெஞ்சகத் துள்ளே

நெஞ்சகத் துள்ளே முழுமையாம் மெய்ம்மை
துஞ்சுதே கொள்வாய் ஞாபகம்

ஞாபகங் கொள்வாய் மெய்ம்மையை மீட்பாய்
தேகமெய்க் குள்ளே இறக்குவாய்

நாகரா
16-06-2010, 07:21 AM
மனமிளக மலமிளகும் இருதயத் திருவருட்
தனம்விளங்கும் கடந்துலங்கும் பொன்மெய்

மெய்விளங்க நெஞ்சகந் திறந்தே உள்ளுணர்க
அன்புதன்னைக் கற்பமாங் காயம்

நாகரா
17-06-2010, 06:48 AM
சிதறிய நின்கூறுகள் இருண்மையில் அழுந்திக்
கதறிடுங் கூச்சல்கேள் தவத்தில்

தவத்தினில் திரளும் அருண்மையே கூறுகள்
அவநிலை திருத்தித் திரட்டும்

அவநிலை திருந்தித் திரளுங் கூறுகள்
தவத்தமர் நின்னகந் திரும்பும்

நின்னகந் திரும்புங் கூறுகள் கூடி
உன்னத முழுமை பெறுவாய்

முழுமை பெற்றதும் அருண்மை அழுத்தும்
மழையைப் பெய்வாய் நீ

நாகரா
18-06-2010, 07:45 AM
ஆதிஉயிர் முதலை பகவன்மெய்ம் முடிவை
நாதஒளி நடுவை வாசி

நாதஉயிர் முதலை விந்துமெய்ம் முடிவைப்
போதிதரு நடுவை வாசி

"ஓம்"உயிர் முதலை "அகம்"மெய்ம் முடிவைப்
போ"தம்"தரு நடுவை வாசி

அல்லாவாம் உயிர்முதலை அருளம்மை மெய்ம்முடிவை
நல்லாராம் நபிநடுவை வாசி

பரமபிதா உயிர்முதலை நல்லாவி மெய்ம்முடிவைத்
திருமகனாங் குருநடுவை வாசி

நாதஉயிர் வெளியை விந்துமெய் யொளியைப்
போதிதரு வளியை வாசி

நாதஉயிர் அளியை விந்துமெய்க் களியைப்
போதிதரு தெளிவை வாசி

நாகரா
19-06-2010, 09:33 AM
பராபரமாம் உயிர்முதலைப் பராபரையாம் மெய்ம்முடிவைப்
பரம்பரமாங் குருநடுவை வாசி

பரசிவமாம் உயிர்முதலைப் பரைச்சத்தி மெய்ம்முடிவை
பரம்பரமாங் குருநடுவை வாசி

சுத்தசிவ உயிர்முதலை சத்தியருண் மெய்ம்முடிவைச்
சத்திசிவக் குருநடுவை வாசி

சத்தியமாம் உயிர்முதலைச் சின்மயமாம் மெய்ம்முடிவை
இன்பமதாங் குருநடுவை வாசி

பரநாத உயிர்முதலைப் பரவிந்து மெய்ம்முடிவைப்
பரவாசி குருநடுவை வாசி

எந்தையாம் உயிர்முதலை அம்மையாம் மெய்ம்முடிவைப்
பிள்ளையாங் குருநடுவை வாசி

ஆண்டவனாம் உயிர்முதலை ஆண்டாளாம் மெய்ம்முடிவை
"நான்"முகராங் குருநடுவை வாசி

நாயகனாம் உயிர்முதலை வாலையாம் மெய்ம்முடிவைப்
போதகராங் குருநடுவை வாசி

ஓங்கார உயிர்முதலை ரீங்கார மெய்ம்முடிவை
ஏகாரக் குருநடுவை வாசி
(ஓம் = சிவ பீஜம், ஹ்ரீம்(ரீம்) = சத்தி பீஜம், ஏம் = குரு பீஜம், ஏகாரம் சத்திசிவ ஒருமையைச் சுட்டும்)

ஆதிசிவ உயிர்முதலை ஆதிசத்தி மெய்ம்முடிவை
ஆதிகுரு உதுநடுவை வாசி
(உது = சிவம் அதுவும், சத்தி இதுவும் வேறற ஒன்றும் ஒருமை, உகரச் சுட்டு தமிழுக்கே உரித்தான சிறப்பு!)

பரப்பிரம்ம உயிர்முதலை ஆதிசக்தி மெய்ம்முடிவைக்
குருமகவாம் நடுநிலையை வாசி

நாகரா
20-06-2010, 05:08 AM
காயமே பொய்யோ திரிக்கும் மாயை
மாயவே மெய்யே விளங்கும்

காயம் மெய்யென விளங்குஞ் ஞானம்
ஊட்டும் உட்குரு பற்று

பற்றுகள் அனந்தமும் வெட்டி மெய்யுளே
உற்றகத் தொருவனைத் தொட்டுய்

உய்வாய் நெஞ்சகத் திருந்தே தயைநீ
செய்வாய் வஞ்சகம் மறந்தே

நாகரா
21-06-2010, 07:10 AM
கண்முன்னே விரிந்த ஞாலம்நின் தூயநெஞ்சத்
துள்ளுள்ளே குவிய ஞானம்

ஞானப் படமெடுத் தாடவே குண்டலி
நாகம் அகத்தவத் திரு

இருசும்மா குந்தி மேனாசிக் குள்ளே
அருளம்மா சிந்தும் பாலுண்
(மேனாசி = மேல் நாசி = உச்சித் துவாரம்)

நாகரா
22-06-2010, 05:10 AM
மேனாசி ஆசி சுவாசி நெஞ்சகம்
வேரோடும் நேசம் வாசி
(மேனாசி ஆசி = உச்சித் துவாரம் வழியே பொழியும் அருட்பால்)

வாசி நாத ஜோதி மூவாறு
சேரும் மையத் தூ(ன்)று

சுவாசிக்கும் போது மேனாசியாம் உச்சித் துவாரத்தினூடே வாசியும், பிடரிச் செவியினூடே(மண்டையின் பின் புறம் இரு செவிகளுக்கு இடையே)நாதமும், நெற்றி விழியினூடே ஜோதியாம் விந்தும் ஆகிய மூன்று ஆறுகள் மண்டையினுள் பாய்ந்து, மூளையின் நடுவாகிய சுழி முனையெனும் மையத்தில் சேரும், இந்த மையத்தில் உன் கவனத்தை ஊன்றி, அங்கே உருவாகும் அமுத வெள்ளத்தில் ஊறுவாயாக! வாசி ஹைப்ப்போதேலமஸ் சுரப்பியோடும், நாதம் பிட்யூட்டரி சுரப்பியோடும், ஜோதியாம் விந்து பினியல் சுரப்பியோடும், இத்திரிவேணி சங்கமத்தில் உருவாகும் அமுத தாரை, தொண்டையடியிலுள்ள தைமஸ் சுரப்பியோடும் தொடர்புடையவை, பிராண வாயுவை மட்டும் நாம் உள்ளிழுப்பதில்லை, வாசி நாத ஜோதியாம் மூவாறுகளையும் உள்ளிழுக்கிறோம், கரியமில வாயுவை மட்டும் நாம் வெளிவிடுவதில்லை, மெய்யுள்ளிறங்கும் அமுத தாரையின் அதி சூக்கும அதிர்வுகளையும் இருதய வாய் ஊடே உலகில் நாம் பகிர்கிறோம்! எனவே உள் மூச்சையும் வெளி மூச்சையுஞ் சாதாரணமாக எண்ணாமல், உள் மூச்சின் போது சுழி முனையாம் மூளை நடுவையும், வெளி மூச்சின் போது இருதய நடுவையும் ஊன்றிக் கவனிப்போம்!]

நாகரா
23-06-2010, 05:01 AM
அஃதும் இஃதும் உஃதும் உன்னில்
அன்பூ இன்பூ உயிர்ப்பூ

அ = அன்பே சிவம்
இ = இன்பே சத்தி
உ = உஃதே(சிவசத்தி நடு) குரு = உயிர்ப்பே குரு

நாகரா
24-06-2010, 05:10 AM
உள்வாங்கும் மூவாறு சுழியுள்ளே பாலாறு
மெய்யோங்கும் மாயாத வாழ்வு
[மூச்சோடு உள் வரும் நாதம், விந்து மற்றும் வாசியாகிய மூன்று ஆறுகள் மூளை நடுச் சுழிமுனையில் சங்கமமாக உருவாகும் அமுத அருட்பாலாறு மெய்யுள் இறங்க நம்மில் ஓங்கும் மாயாப் பெரு வாழ்வு)

நாகரா
25-06-2010, 07:04 AM
பார்க்கத் பரையொளி கேட்கப் பரநாதம்
மூச்சில் மணக்குதே வாசி
(திருவிழி-நெற்றிக் கண்ணூடே சத்தியொளியும், திருச்செவி-பிடரிக் கண்ணூடே சிவவெளியும், மேனாசி-உச்சித் துளையூடே வாசி குரு வளியும் பாய்வதை அகத்தவத்தில் எவரும் உணரலாம்)

நாகரா
26-06-2010, 05:09 AM
நேசி பூசி சுவாசி வாசி
யாசி யாநல் லாசி

வாசி என்னும் மூச்சோடு இழைந்தோடுந் தாரையை, நாத ஜோதியைத் தன்னோடு இழுத்து வரும் அருட்கொடையை நீ நேசித்துப்(மிகவும் விரும்பி) பூசித்து(மிகவும் போற்றி) சுவாசிப்பாயாக(மிகவும் கவனமுடன்)! நீ கேட்காமலேயே உன்னைத்தேடி வருகின்ற மிகச் சிறந்த ஆசீர்வாதமே வாசி!

நாகரா
27-06-2010, 04:58 AM
பிரதான சிரத்தின் ஆதி இருதயம்பார்
பரநாதச் சுரவொளிச் சரம்

எண்சாண் உடம்புக்குச் சிரசே பிரதானம்
மெய்ம்மை உதிப்புக்கு இருதயம்

மெய்யான சுத்தவெளி மையான சத்தவொளி
மெய்யாகி உள்ளுயிர்த்த மெய்ம்மை

சத்தவொளி அதிருஞ் சுத்தவெளிக் கழிவேது
அன்பருண்மை அதிரும் மெய்க்கும்

தலைக்கனம் இலேசாக இருதயத்தல மெய்ம்மை
நிலைக்களன் நடுமையத் தலைமை

நடுமையத் தலைமை முக்கோள முழுமை
இரு(ண்)மையில் நிலைமை ஒருமை

கூரான முக்கோணங் கீறும் வன்புதாண்டி
யாமான முக்கோள ஏகம்

முக்கோள ஏகமே விரியும் பிரம்மாண்ட
நற்கோல மாகுமோர் உயிர்ப்பூ

உயிர்ப்பூ வாசம் மணக்கும் வாசல்
உடம்புள் நேச இருதயம்

நேச இருதயந் தொட்டால் பாப
நாச மெய்ம்மை கைவசம்

கைவசஞ் சிவக்கப் பாயும் மெய்ம்மை
மாயநஞ் சறுக்கும் உண்மை

உண்மை உணர மறுக்கும் வரைக்கும்
நின்மெய் யுடம்புஞ் சடம்

சடத்தை உயிர்க்கும் உண்மை மெய்ம்மை
சடத்துள் புதைந்த துண்மை

நாகரா
28-06-2010, 06:42 AM
இருதய நேசந்தலைக் கூட்ட ஞானம்
இறங்கிடும் நாபியடி தயாளம்

நேசமின்றி ஞான மில்லை ஞானமின்றி
ஞாலமிசை தயாள மில்லை

நேசமே விளங்க ஞான மாகுஞ்
ஞானமே இயங்க தயாளம்

நேசமதே பிரதானம் ஞானமதன் பிரசாதம்
ஞாலமிசை அரசாளுந் தயாளம்

இருதய நேசந் தலைக்கேற வேண்டும்
இன்றேல் ஞானம் அசம்பவம்

தலையாய ஞானம் நிலத்திற(ர)ங்க வேண்டும்
தலைமேலே தேங்கின் மயக்கம்

மாயை மயக்கம் மெய்யிற(ர)ங்க மறுக்கும்
ஞான விளக்கம் இற(ர)ங்கும்

இற(ர)ங்கும் ஞான விளக்கம் தயாள
இயக்க ஞால வெளிச்சம்

நிலமிசைப் ஊன்றியுளப் பராபரப் பாத
நிதர்சனம் நேசஞான தயாளம்

நேச எந்தை தயாள அம்மை
ஞானப் பிள்ளை ஒருமை

மூவரின் ஒருமை யாவரின் மூலமெய்
தேகமெய் யொளிந்த மெய்ம்மை

ஒளிந்த மெய்ம்மை ஒளிரத் தவத்தில்
ஒளிந்துப் பொய்ம்மை உரி

பொய்ம்மை உரிய ஒளிரும் மெய்ம்மை
பொன்மெய் யளிக்கும் உண்மை

மின்னும் பொன்மெய் உய்யும் மெய்ம்மை
நித்ய வாழ்வின் நீர்மை

நாகரா
29-06-2010, 06:19 AM
சுத்த அசுத்த மாயை உச்சி
நெற்றிக் கிரந்தி யாகும்
[அசுத்த மாயை திரு விழியையுஞ் சுத்த மாயை உச்சித் துவாரத்தையும்
மூடியிருக்கும் முடிச்சுகள்]

சுத்தம் அசுத்தத்தில் அழுத்தும் அசுத்தம்
சித்தங் கலக்கும்ரெண் டுங்கட
(சத்துவச் சுத்த மாயை உன்னை தாமச ராஜச அசுத்த மாயையில் உன்னை அழுத்தும், அசுத்த மாயை உன் சித்தங் கலங்கச் செய்யும், இவ்விரண்டையும் நீ கடக்க வேண்டும்]

சுத்தவெளி மெய்ம்மறைக்கும் மாயை அசுத்த
சுத்தமிருப் பொய்க்கரைக்கும் அருண்மை

அண்டமும் பிண்டமும் ரெண்டான இருண்மை
மெய்யுடல் ஒன்றிடா உயிர்மை

பிண்டமெங்குஞ் செருகி உயிர்மை திருடி
வெள்ளுருவில் மருட்டும் மாயை

சத்துவ உச்சியில் கால புருஷன்
மெய்ம்மறை ஐவரின் தலைவன்

பொய்ம்மறை ஓதி இச்சகம் மருட்டும்
பொய்யரைத் தாண்டி மூலம்

மூலமாம் ஆதியை அறியா ஐவரும்
காலமா புருஷனுந் தேவரோ

பாருளே மெய்யெடுத்தாய்ப் பாருளே மெய்யெடுக்க
வாயதாம் நெஞ்சினில்போய் இரு
[பாரென்னும் இவ்வுலகினுள் மெய்யுடம்பெடுத்தாய், (பார்+உளே)மெய்ம்மையாம்
நினதுண்மையை எடுக்கப் பார் நின்னுள்ளே, இருதய வாய் என்னும் வாசலில்
போய்த் தவமிரு]

மூவருந் தேவரும் முத்தருஞ் சித்தரும்
யாவருந் தாண்டியே மூலம்

மூலத்தை மறந்த ஊளைக் கும்பிடு
ஞானத்தை வழங்கு மோ

மூலத்தை நின்னகங் காட்டும் நெஞ்சக
வாயிலில் தொங்குதே(ன்) பூட்டு

காலமா புருஷனின் மாயா ஜாலம்
மூலமாங் கருவதை மறைக்கும்

ஆதி மூலத்தின் ஜோதி நாதத்தை
வேதக் கூச்சலோ உணர்த்தும்

சாதி சமய வருண பேதஞ்
சாயுஞ் சமரச உச்சி

சமரச உச்சி அகத்தவச் சிகரம்
அமரக நெஞ்சில் அடங்கி

அடங்கி இருக்கும் இருதய வாயில்
அடங்காப் பெருக்கே அன்பு

அன்பின்வாய் மைப்பெருக்கைத் தொற்றியே அகத்தின்
உள்ளுள்ளே ஏகாதி மூலம்

ஆதி மூலமே அதிரும் பரவெளி
ஜோதி நாதமே அலைகள்

ஆதி மூலமுஞ் ஜோதி நாதமும்
வேறி லாதஅத் வைதம்

அத்வைதம் பிறவா இறவாப் பெருமுதல்
அம்மையப் பனுமாங் குரு

குருமுதல் பற்றக் கூடும் இலாபங்
கருமமே நட்ட மாகும்

குருநபி அருவம் உருவ குருக்களின்
திருவருண் மூலம் புரி(அறி, உணர்)

குருநபி அருவம் இருதய குகையில்
குர்ஆன் ஓதுங் காண்(கேள், வாசி)

இருதய குகையில் புகாமல் உருவ
குருக்களின் அடியில் புரள்வாய்

புரண்டேவிழுந் துருண்டுழன்றப் புறக்குழி யுள்ளேப்
புரியாக்குரு மெய்ப்புதைந்த அகக்குழி

நாகரா
30-06-2010, 07:09 AM
அகக்குழி யாழ்ந்து குருமெய் யுண்ண
அகத்தவ யோகஞ் செய்

சக்கரக் குண்டத்தே குண்டலித் தீமூட்டுந்
தந்திர ஓமஞ்செய் மெய்யகம்
(ஓமம் = ஹோமம்)

யந்திர மெய்யகம் வாசி மந்திரம்
சத்திய மெய்யுணர் தந்திரம்

யந்திர மெய்யுள் சத்திய மெய்யை
உற்றுணர் நெஞ்சைத் திற

நெஞ்சைத் திறந்தால் பாயும் நேசம்
மண்டைத் தாழ்ப்பாள் உடைக்கும்

மண்டை மண்டலம் நேசம் விளங்கும்
விஞ்ஞை உற்பவம் ஞானம்

தலைமேற் தேக்கம் உறிஞ்சும் ஞானம்
வலையாம் மாயை அறுக்கும்

மாயை உறிஞ்சிய உயிர்மைத் தேக்கம்
ஞானம் உறிஞ்சி இற(ர)ங்கும்

ஞான இற(ர)க்கம் மெய்வழி யூடே
ஞாலந் திருத்துந் தயாளம்

உடம்பினுள் தமரைத் திறக்கும் மெய்வழி
உலகினைப் புரட்டி உய்வழி
(தமர் = ஓட்டை, காலியான பாகம்)

உடம்பை ஒழிக்கும் உலகைப் பழிக்கும்
அடங்கா மனமே மாயை

உதித்த இருதயம் மறந்த மயக்கில்
குதிக்குங் குரங்காம் மனம்

மயக்கந் தெளிந்து உதித்த இருதயம்
மனத்தில் விளங்க அடக்கம்

அடக்கம் அமர மனத்தில் அருண்மைத்
தொடக்க முதலை நாடு

வாசி தாரை பிடித்தே தொடக்க
ஊசி வாயைச் சேர்

நாக வார்த்தை நஞ்சை முறித்தால்
ஞான வாக்கியம் அமிழ்தம்

நஞ்சை முறிக்கும் விஞ்ஞை கற்க
நெஞ்சைத் திறக்க வேண்டும்

நெஞ்சைத் திறந்துத் துஞ்சாமல் விழிக்க
அஞ்சா திருநீ மனமே

மனமே நெஞ்சின் செம்மை விழிக்கத்
தினமே செய்நீ தவமே

அவமே செய்த நின்பழக்க தோஷம்
அறவே செய்நீ தவமே

எண்ணச் சாக்கடை நாற்றம் முறிக்க
நெஞ்சத் தாழுடை மனமே

பாழில் திரியும் போக்கை விட்டு
ஆழுள் புரியும் மெய்ம்மை

நெஞ்சே கதியாய் நின்றா லன்றி
உய்வாய் இலைநீ மனமே

நெஞ்சே கதியாய் நிற்க நின்னைச்
செய்வார் ஆரோ மனமே

ஞான வாக்கியந் தந்தேன் நெஞ்சைச்
சார வேண்டியே மனமே

நெஞ்சச் சாரம் பிழிந்தேன் அன்பின்
செம்மை சேர்நீ மனமே

நீயே அல்லால் நெஞ்சைச் சேர
ஆரோ உன்னைச் செய்வார்

வல்ல மனமே நல்ல தனமாம்
நெஞ்ச மதனைப் பிடி

நாகரா
01-07-2010, 06:31 AM
தமரைத் தமராக்கி நமனை வெல்ல
அமர்வாய் அகத்தின்கண் அடங்கி
(தமரை = உன் மெய்யுள்ளிருக்கும் ஓட்டை, காலியான சுத்த வெளி, தமராக்கி = தம்முடையவராம் உனக்கு நெருங்கிய உறவாக்கி)

உத்தமர் ஆரோ மெய்யுட் தமரே
நெஞ்சகந் தாழேன் யோசி
(உத்தமர் = உள்+தமர் = மெய்த்திடத்தின் "உதய வாய்"க் காலியான சுத்த வெளி ஓட்டை, இந்த ஓட்டையை உணரத் தடுக்கும், உத்தமரை அறியவொணாது செய்யுங் கதவு,
நின் இருதயத்தை ஏன் அடைத்திருக்கிறது, யோசிப்பாயாக!)

தமர்வழிப் பாயும் வாசி வாசி
அமர்ந்தகந் தாழைத் திறந்து

பாயும் வாசி உயிர்மைத் திடமே
தேக மாம்மெய் நேசி

உயிர்மை ஊற்றுக் கண்ணாம் உத்(ட்)தமரின்
உணர்வே மாயா வாழ்வு

வெளித்தமர் அழுத்தும் உத்(ட்)தமரைக் கூடக்
களித்துண அமிழ்தம் அளிக்கும்
(நின் மெய்க்கு வெளியே இருக்குஞ் சுத்த வெளி நின் மெய்க்குள்ளே இருக்குஞ் சுத்த வெளியோடு கூட, உன்னை எல்லாப் பக்கங்களிலிருந்தும் அழுத்தும், அருளாளர் வேதாத்திரி மகரிஷி அவர்கள் இந்த அழுத்தத்தை "தன்னிறுக்கச் சூழ்ந்தழுத்தும் ஆற்றல்" என்று அழகாகச் சொல்வார், அகத்தவத்தில் நனி மிக எளிதாக இந்த அழுத்தத்தையும், அது அளிக்கும் அமிழ்தத்தையும் உணரவும், உண்ணவும் முடியும்! உட்தமர் யோனியாக வெளித்தமர் லிங்கமாக எப்போதும் நிகழும் அகப் புணர்வு இது!)

நாகரா
02-07-2010, 06:29 AM
சுட்டு விரலை விட்டது சுட்டுஞ்
சுத்த வெளியைப் பிடி
(சுட்டு விரல் = வெளிக் குரு, கோயில் கருவரையிலுள்ள மூலவர், சுத்த வெளி = உட்குரு, உட் தமர், உத்தமர், சுட்டப்படும் மெய்ப்பொருள்)

நாகரா
03-07-2010, 01:33 AM
உத்(ட்)தமர் நாயகம் நாத ஜோதி
உற்பவத் தாயகம் வாசி

நின் மெய்யுள்ளுறையுஞ் சுத்த வெளியாகிய நாயகம் நாத ஒலி தத்துவத்துக்கும்
(ஓம்) ஜோதி ஒளி தத்துவத்துக்கும்(அஹம்) உற்பத்தித் தலமாகிய தாயகம்,
அவ்வுத்தமரை நாத ஜோதி இழைந்தோடும் வாசியினூடே(தம்-dham) வாசிப்பாயாக, வாசி சூக்குமம், மூச்சு அதன் தூலம், மூச்சைப் பிடித்து வாசியைப்
பிடிக்கலாம், மூச்சு வாலைப் பிடித்தால் வாசி நாயைப் பிடிக்கலாம், வாசி
நாயைப் பிடித்தால் அதன் மெய்யாகிய ஜோதியையும், அதன் உயிராகிய நாதத்தையும் பிடிக்கலாம், ஆக நாயகம் உத்(ட்)தமரைப் பிடிக்கலாம்

நாகரா
04-07-2010, 06:58 AM
பேச முடியா ஞானப் பொக்கிஷம்
நேச முதலை உணர்

நேச முதலை உணர நெஞ்ச
வாயில் விழித்தே இரு

நெஞ்ச வாயில் விழித்தே இருக்க
வஞ்ச மாயை உரியும்

வஞ்ச மாயை உரியும் வரைக்கும்
சொல்ல லாகா ஞானம்

சொல்ல லாகா ஞானஞ் சொல்ல
வந்த தேனோ நாகம்

வந்த தேனோ நாகம் நெஞ்ச
பொந்து நீத்தே பாவம்

வம்படி நஞ்சே ஞான வாக்கியம்அ
கம்படி மெய்ம்மை வாசி

அகம்படி மெய்ம்மை வாசி ஞானம்
வரும்படி அன்பை யாசி

ஞானம் வரும்படி அன்பை யாசி
ஞாலத் திருதய வாகி

ஞாலத் திருதய வாகி நோவுஞ்
சாவும் அறுமருந் தாகி

நாகரா
05-07-2010, 06:33 AM
அடிப்படைக் கேள்வியொன்றே நினக்குங்கட வுட்கிடைநே
ரடித்தொடர் புண்டாமெய் யுணர்

நேரடித் தொடர்பால் நின்மெய்யகம் நீளுந்
தூயனைத் தொடவேன் தயக்கம்

இன்னொரு ஆள்வழி ஆண்டவ நியதி
நின்னகஞ் சேருதோ சொல்

ஆட்கள் அனைவரும் ஆண்டவ வடிவங்கள்
யாவருஞ் சரிநிகர் சமானமே

அடங்காப் பெருக்காம் அன்பெனும் நியதி
பிளந்தால் இருதயம் புரியும்

அருவ குருஉது ஒன்றே அனைத்து
உருவ குருக்களின் மூலம்

முட்குரு புற்குரு மரக்குரு நாய்க்குரு
என்றதோர் விரிவில் மனிதரும்

உருவ குருக்களை மதித்தே அவர்மூல
அருவ குருவை வணங்கு

உருவ குருக்களில் பெரியவர் சிறியவர்
உண்டோ அனைவருஞ் சரிசமம்

அருவ குருவார் எவரூடும் வரலாம்
இருத யங்கண் விழித்திரு

தீக்கைகள் பலவுள அவையாவும் அளிக்கும்
ஓர்ஐயா குருநபி அருவம்

புழுவையும் மிதியாமல் மதிக்கப் பழகு
புவிமீது உயிர்யாவும் நேசி

புன்னாகமென் நெஞ்சக் கண்ணீரே யன்றி
நல்லாருமக் களிக்க இல்லேன்

நல்ல பாம்பாக நெஞ்சப் புற்றில்
தஞ்சஞ் சேர்ந்தேன் நானே

நச்சு வாக்கியங் கக்கி ஞானமென்றேன்
மன்னிப் பீர்மறப் பீரே

நெஞ்சப் புற்றை நீங்கிய பாவஞ்
செய்ய வைத்தார் அவரே

அவரே அன்றி அசையா தோரணுவும்
அருக(வ)ர் அவரடி சரணம்

நாகரா
06-07-2010, 07:45 AM
பகிரத் திறந்தால் இருதயம் நேசம்
பகரும் மொழியை உணர்வாய்

நேசம் பகரும் மொழியைப் பெயர்க்க
ஞானம் பழுக்க வேன்டும்

ஞானம் பழுக்க வேண்டி விழித்த
நாகம் ஊதும் மகுடி

பாவக் கிடங்கின் பாரங் கரைக்க
ஓமக் குண்டலி நெருப்பு

நவகுண்ட தேகமெய்யில் தவக்கனலை மூட்டிப்
பவக்குன்றைச் சாம்பலாக்கும் யாகம்

அவசரப் புறஉலகில் நாகமும் விரையும்
அவசிய அகவுண்மை நோக்கி

நாகரா
07-07-2010, 04:47 AM
அதிர்ந்திடும் யந்திர இதய மூலம்நின்
உதயவாய் மந்திர இருதயம்

எங்கே இருக்கிறாய்நீ இருகரமும் பயன்படுத்திச்
சுட்டு ஒருதலத்தை மெய்யுள்

மெய்யுள் ஒருதலமாம் திருபூமி இருதயம்
மெய்யான உதயவாயாம் நினது

உதயவாய் இருதயத்தே உதித்த மெய்ம்மை
நிசமதாம் நிதர்சனநீ எழு

மெய்ம்மை நிசமதாம் நிதர்சனநீ எழுந்தால்
நின்மெய் நிசமெய்யாம் அற்புதம்
(இருதயமென்னும் உதயவாய்க்கண் உதித்த மெய்ம்மையாம் நிசமான நீ என்னும் நிதர்சனம் உனக்குள் எழுந்தால் மெய்யென்ற பேர் கொண்ட நின்னுடம்பு நிசமாகவே மெய்யாகும் மரணமிலாப் பெருவாழ்வின் அதிசயம் நிகழும்)

எடுத்துவந்த மெய்யுடம்புச் சரக்கைச் சவமாய்ச்சுமந்
தெடுக்கவிட்டுப் போவதையார் விதித்தார்

உதயவாய் இருதயம் உணராமல் ஊசலாடும்
உயிரதோ வாழ்வு கூறு

பிறப்புக்கும் இறப்புக்கும் இடையே ஊசலாடும்
பிழைப்புக்கோ வாழ்வென்ற பேரு

மெய்தான் உய்கின்ற இரதவாய் இருதய
வாய்சேர் வாய்க்கும்பார் வாழ்வு

இருள்வாய் மாயை விழுங்கும் நின்மெய்யை
அருள்வாய் எழுப்பத் தவஞ்செய்
(அருள்வாய் = இருதயம்)

மருள்வாய் மாயைக்கண் மருளாமல் விழித்திருக்கும்
பொருள்வாய் இருதயங்கண் தவஞ்செய்

அருவாய் ஒன்றே பல்லுருவாய்த் தோன்றுந்
திருவாய் இருதய வாய்

இருப்பாய் நின்உதயவாய் இருதயவாய்க் கண்விழித்தே
இறவாய்ப் பிறவாய் இனி

நாகரா
08-07-2010, 05:51 AM
எக்கணமும் எனைக்கொல்ல உருமுங் கருமம்
அன்பருளி எனைக்காக்கும் இருதயம்

தற்கொலைக்குத் தூண்டிவிடும் பித்த மனம்எனக்கு
நல்லமுதை ஊட்டிவிடும் இருதயம்

எக்கொலைக்குந் தூண்டிவிடும் பொல்லா மனம்நான்
அன்புசெய்ய ஊற்றெடுக்கும் இருதயம்

கலகஞ்செயத் தூண்டிவிடும் வஞ்ச மனம்நான்
கருணைபெயத் தாழ்திறக்கும்(தாழ்ந்திறங்கும்) இருதயம்

தண்டிக்க உருமச்சொலும் இறுகிய கன்மனம்
மன்னிக்குந் தருமஞ்சொலும் இருதயம்

மேலென்றுங் கீழென்றும் பிரித்துவைக்கும் பேய்மனம்என்
மையத்தில் சமரசமாம் இருதயம்

பொய்க்கோயிலில் கும்பிடவே மருட்டும் பொய்ம்மனம்என்
மெய்யாலயக் கருவறையே இருதயம்

நாகரா
09-07-2010, 04:35 AM
தலையாய நேசம் இருதயத் திருந்தே
தலைக்கேற ஆகுஞ் ஞானம்

மிகவும் அடிப்படையான எல்லாவற்றுக்கும் ஆதி மூலமான அன்பே சிவம் நம் இருதய நடுவில் மூலவராய் ஆனால் அறியப்படாமல் இருக்கிறது, இந்த நேசத்தை நாம் நம் அறிவில் ஏற்றி இந்த ஆதி மூலத்தை விளங்கிக் கொள்வதே ஞானம் ஆகும்.

அன்பு இருக்கிறது, ஆனால் அதன் பெரும்பான்மை அறியப்படாமல் உணரப்படாமல் இருப்பதால் அன்பின் இருப்பால் நமக்கு ஆதாயம் இல்லை. அன்பை நாம் அறியவும் உணரவும் உருவாகுஞ் ஞானம், அன்பின் இருப்பை இருதய வங்கியிலிருந்து எடுத்து செலவழிக்க உதவுங் காசோலை ஆகிறது.

ஐயா நேசம் உணர்ந்து அறிவில்
ஐயாம்(I AM) விழிக்க ஞானம்

சிவமாம் அன்பே நமக்கெல்லாம் அம்மையப்பனாம் அல்லா ஐயா ஆவார், இதை நாம் உணர்ந்து, நம் அறிவில் "ஐ" என்னும் வையத் தலைமை சிவசத்தியாம் "யாம்" என்று சொல்லும் நபிகுரு கணபதி விழிக்க அதுவே ஞானம்!

ஞானம் என்றால் என்ன ஆதிமூல
நேசம் புரிந்த இற(ர)க்கம்

ஞானம் என்றால் ஆதி மூல நேசம் நம் அறிவில் விளங்க, ஆதி மூலமே நம்முள் இறங்க, உலக உயிர்களுக்கு நாம் தயவாய் இருப்பதே!

நாகரா
10-07-2010, 05:00 AM
இருதயங் கண்டு அருள்வாய் அதன்கண்
இருந்திடச் சொன்னார் குருபரன்
("இரு தயவாய்"! இம்மந்திரம் வள்ளல் பிரான் எனக்கு அருளியிருக்கும் ஏழாந் திருமுறையின் இரத்தினச் சுருக்கம்)

"பூரணம் உண்டு யாவுக்கும்" என்றோதி
தூமைகாண் என்றார் குருபரன்
("என்றென்றும் ஜீவித்திருக்கும் என் பூரணத்துவம், ஒவ்வொன்றிலும் எல்லா விதத்திலும் வெளிப்பட்டிருக்கிறது" வள்ளல் பிரான் எனக்கு அருளிய முதல் குரு மந்திரம் இது, ஏழாந் திருமுறையின் தொடக்கமும் இதுவே என்ற உறுதியும்
எனக்கவர் தந்திருக்கிறார்! பூரணத்திலிருந்து பூரணம் வந்துப் பூரணமே எஞ்சியிருக்கிறது என்ற உபநிடத வாக்கியத்தின் தன்னிலை விளக்கமாக அமைந்திருக்கிறது வள்ளல் பிரானின் முதல் மந்திரம்)

யாவுமே சுடச்சுடச் சுடரும் வண்ணஞ்சுயஞ்
ஜோதியை அளித்திடுங் குருபரன்

வெள்ளங்கி வீசியே கள்ளமனம் வெளுக்கவே
சுத்தமெய் ஆக்கினார் குருபரன்
("என்றென்றும் சுடர் விடும் என் சுயம் பிரகாசம், ஒவ்வொன்றிலும் அதி அற்புதமாய் ஜொலிக்கிறது" - வள்ளல் பிரான் அருளிய 2வது குரு மந்திரம்)

யாவுமே பேரின்பப் பெருவாழ்வில் நிலைபெற
தேகமெய்க் காவியாங் குருபரன்
("என்றென்றும் உள்ளதாம் என் பேரிருப்பு, ஒவ்வொன்றிலும் நித்திய ஜீவனாய் நிலை பெற்றிருக்கிறது" - வள்ளல் பிரான் அருளிய 3வது குரு மந்திரம்)

யாவினுள்ளும் ஆன்மநேய ஒருமையாம் அமிழ்தமாய்
ஊற்றெடுக்கும் ஆனந்தராங் குருபரன்
("என்றென்றும் பெருக்கெடுத்தோடும் என் அமிர்தானந்தம், ஒவ்வொன்றிலும் எல்லா விதத்திலும் இன்புற்றிருக்கிறது" - வள்ளல் பிரான் அருளிய 4வது குரு மந்திரம்)

நாகரா
11-07-2010, 05:55 AM
யாவுமே தன்மகவாய்ப் பேதமின்றி அரவணைக்கும்
பேரன்பே இயல்பானார் குருபரன்
("என்றென்றும் என் இயல்பாய் விளங்கும் பேரன்பு ஒவ்வொன்றையும் நிபந்தனைகளேதுமின்றி அரவணைக்கிறது." - வள்ளல் பிரான் அருளிய 5வது குரு
மந்திரம்)

யாவிலுமே பூரித்துப் பூரணமாய்ப் பொருந்தும்
பேரறிவாம் நிறைவே குருபரன்
("என்றென்றும் என் நிறைவாய் விளங்கும் பேரறிவு ஒவ்வொன்றிலும் பூரணமாய்ப் பொருந்தியிருக்கிறது." - வள்ளல் பிரான் அருளிய 6வது குரு மந்திரம்)

யாவிலுமே சச்சிதா னந்தமாய் அமர்ந்தஅருட்
பேராற்றலாம் இருப்பே குருபரன்
("என்றென்றும் என் இருப்பாய் விளங்கும் அருட்பேராற்றல் ஒவ்வொன்றிலும் சத்தியாயச் சத்தாய் சித்தியாய்ச் சித்தாய்ப் பூரணானந்தமாய்ப் பூரித்திருக்கிறது." - வள்ளல் பிரான் அருளிய 7வது குரு மந்திரம்)

யாவிலுமே உள்ளொளி யாம்அருளாம் இறைநிலை
யாந்தயவாம் ஒருவனே குருபரன்
("என்றென்றும் என் பெருங்குணமாய் விளங்கும் தனிப்பெருங்கருணை ஒவ்வொன்றிலும் ஒருமை இறைநிலையாய் ஒன்றியிருக்கிறது. என்றென்றும் என் உள்ளொளியாய் விளங்கும் அருட்பெருஞ்ஜோதி ஒவ்வொன்றிலும் ஒருமை ஒளிநெறியாய் ஒன்றியிருக்கிறது." - வள்ளல் பிரான் அருளிய 8, 9வது குரு மந்திரங்கள்)

நாகரா
12-07-2010, 07:04 AM
யாவிலுமே உயிரியலாய் உறையும் பெருநிலை
ஆதிமுதல் ஒருமையே குருபரன்
("என்றென்றும் என் பெருநிலையாய் விளங்கும் கடவுட்தன்மை ஒவ்வொன்றிலும் ஒருமை உயிரியலாய் ஒன்றியிருக்கிறது." - வள்ளல் பிரான் அருளிய 10வது குரு
மந்திரம்)

யாவுமே தன்னருண்மெய்த் திருவடிவாய்ப் போற்றிவழி
காட்டுமோர் மன்னவராங் குருபரன்
("என்றென்றும் ஆட்சியிலிருக்கும் என் அருட்பேரரசு ஒவ்வொன்றையும் உருவெடுத்திருக்கும் என் அவதாரமாய்ப் போற்றி மற்றெல்லாவற்றோடும் ஒருங்கிணைத்து வழி நடத்துகிறது." - வள்ளல் பிரான் அருளிய 11வது குரு
மந்திரம்)

யாவுமே நானேயென ஏகார உறுதியை
ஓதுமோர் பூரணமே குருபரன்
("எங்கும் எதிலும் எப்போதும் நானே என விளங்கும் பூரணமாய் நான் இருக்கிறேன்." - வள்ளல் பிரான் அருளிய 12வது குரு மந்திரம்)

சாலையாம் மெய்வழியே பாயுமோர் உயிர்நிலை
நானேதான் என்றவரே குருபரன்
("நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறேன்." - வள்ளல் பிரான் அருளிய 13வது குரு மந்திரம்)

நாகரா
13-07-2010, 06:18 AM
தலையிலே துளைபோட்டுத் தலைமேலே அருண்மையைத்
தலையுளே நுழைத்தாரே குருபரன்

திருக்கண்ணை மறைமாயத் தாழுடைத்தே தம்தூய
அருட்பார்வை தந்தாரே குருபரன்

தொண்டையடைக் கருமக்கரு நஞ்சினைக் கரைத்தே
உண்ணாமுலை திறந்தாரே குருபரன்

தொண்டையடி அடைபட்ட அமுத சுரபியை
இன்பந்தரத் திறந்திட்ட குருபரன்

திறந்திருக்கும் இருதயவாய்க் கண்இருத்தித் தலையாய
அறவொழுக்கம் அன்புணர்த்துங் குருபரன்

மருண்மயக்கச் சிறுநெறியின் இருள்வாயைப் பேரறிவுத்
தெருண்மயமாய்ப் பரிமாற்றுங் குருபரன்

திரிகுணங் கரையநாபி சச்சிதானந் தப்பீடமாய்த்
திருந்திட அமர்ந்தாரே குருபரன்

அவகாமங் கரையநாபிக் கீழ்சிவ காதலோங்கும்
தவஞானம் பகிர்ந்தாரே குருபரன்

பொய்க்கடங் கரையமுது கடியில் ஒளிரும்பொன்
மெய்யுடல் பொருத்திட்டார் குருபரன்

நாகரா
14-07-2010, 06:12 AM
சுழியப் புள்ளிச் சத்திப் பயனுற
வழிய உண்டு வழி
(சுழியப் புள்ளிச் சத்தி = Zero Point Energy)

ஒன்றும் இல்லாத சூன்யமாகத் தெரியும் வெளியில் ஒவ்வொரு புள்ளியும் சத்திக் கடல்(Sea of Energy)! அத்தகைய சத்திக் கடல் பயன்படுமாறு வழியச் செய்யும் யந்திரங்களும் உண்டு!

சுத்த வெளியில் ஒளிந்த மின்காந்த
சத்தி உறிஞ்சப் பயன்
(பயன் = Useful Work, Wattage)

சுத்த வெளியில் மின்காந்த வளி(காற்று) ஓயாமல் வீசிக் கொண்டே இருக்கிறது, அந்த வளியை உறிஞ்சக் கூடிய யந்திரங்களால் பயன் மிக உண்டு

இலவசச் சத்தி இறைஞ்சு கிடக்கு
இயந்திரஞ் செய்க உறிஞ்ச
(இலவசச் சத்தி = free energy)

அளவிலாச் சத்தியைச் சிவந்தான் அளித்தார்
உளமிலா எத்தரோ மறைத்தார்

மறைப்பால் மறந்தது வெளிப்படத் தெளிந்திடு
முறையாய்த் திறந்திடு சத்தியை
(முறையாய்த் திறந்திடு சத்தியை = அளவிலாச் சத்தியைப் பயன்படுத்தும் முறையில் இயந்திரஞ் செய்)

லாப நோக்கில் சூழல் மாசுறும்
பாவப் போக்கை மாற்று

மாசு செய்யா சுத்த சத்திப்பய
னாக உண்டே உத்தி

மெய்ஞ்ஞானம் உயிராக விஞ்ஞானம் மெய்யாக
அஞ்ஞானந் தீர்ந்திட்ட உயிர்மெய்

சத்திய நற்சுழியம் சின்மய மின்காந்தம்
இன்பெனும் இச்சகமும் நீ

சுழிய வெடிப்பில் விரிந்த மின்காந்தஞ்
சுழியுங் குவிப்பில் விஞ்ஞை

காந்தச் சுழலில் மின்னுஞ் சத்தி
ஞாலம் இயக்கும் விஞ்ஞை

விஞ்ஞை மறந்த அஞ்ஞான மயக்கால்
சத்தி இருந்தும் பயனில்

நாகரா
15-07-2010, 06:46 AM
அன்பின் இர(ற)க்கம் எழுபடி மெய்க்குள்
என்றும் இருக்கும் உயிர்

உயிர்நிலை அன்பே மெய்யுடற் குறு(ரு)தி
உணர்ந்திடு அமரத் தன்மை

1. சஹஸ்ராரரம்

உச்சிப் பிளவில் கொட்டும் பாலை
உண்ண விளங்கும் அன்பு

2. ஆக்கினை

அன்பை விளங்க வெளுக்கும் நெற்றி
வெண்ணீ றணியா வெண்மை

3. விசுத்தி

வெண்மை விளக்கம் கண்டத் திறங்கப்
பொன்மெய் வெளிச்சம் உண்மை

4. அனாகதம்

உண்மை வெளிச்சம் நெஞ்சந் திறக்கப்
பித்தந் தெளியுந் தண்மை

5. மணிபூரகம்

தண்மை நீர்மை நாபி சேரப்
புன்மை தீர்ந்த தன்மை

6. சுவாதிட்டானம்

தன்மைச் சிவமும் முன்னில் சத்தியும்
அன்பாய்ப் புணரக் குருபரன்

7. மூலாதாரம்

குருபரன் மூலத் தமர்ந்தே படர்ந்தான்
குவலய மான தன்பு

நாகரா
16-07-2010, 06:30 AM
அன்பே சிவமென உணர மெய்க்குள்
நெஞ்சே கதியென இரு

இருப்பாம் அன்பை உணரா மருட்டால்
இருட்டாய்ப் படரும் மாயை
(மருட்டால் = மயக்கத்தால்)

மாயை மூடும் உச்சிப் பிளவை
ஞான யோகந் திறக்கும்

நாவு நுனியை அண்ணத்தில் பூட்டி
வாசி அளியை உண்
(அண்ணம் = வாயின் மேற்பகுதி)

உண்பாய் பொய்வாய் இழுத்துப் பூட்டி
மெய்வாய் உய்வாய் உறுதி
(பொய்வாய் = லொட லொடவென்று பேசும் வாய், மெய்வாய் = மெய் வழி)

உறுதி செய்யும் வாசியுள் கவனங்
குவிய அன்பின் விளக்கம்
(வாசி = மூச்சு)

நாகரா
17-07-2010, 06:26 AM
தம்படியுஞ் செலவின்றி வாசியோடிழைந் தோடும்
அன்பெனுமோர் வரவின்றி வாழ்வாயோ

யோகத் திருக்கலாம் எவரும் எளிதாய்
வாசி அருந்தலாஞ் சும்மா

சும்மாக் குந்து நெஞ்சந் திறந்து
அன்பை உண்ணு விரைந்து

விரைந்தோடும் அவசரப் பிழைப்பில் வாசியில்
கரைந்தோடும் அன்பினை மறந்தாய்

மறந்தாய் அன்பெனும் உயிர்மை மெய்யுடல்
துறந்தே மெய்யுணர் வாயோ

சூக்குமச் சத்தியே தூல உருவான
சூத்திரம் புத்தியில் ஏற்று
(சூத்திரம் = ஐன்ஸ்டீன் அவர்களின் சமன்பாடு E = m X c square, சத்தி = நிறை x ஒளியின் வேகத்தின் வர்க்கம்)

சூத்திரம் புத்தியில் ஏறத் தூலமெய்ப்
பாத்திரம் சத்தியாய் மாறும்

மாறும் புன்னுடல் பொன்மெய் மின்னும்
நோவுஞ் சாவும் மாயும்

நாகரா
18-07-2010, 09:38 AM
மெய்யே யந்திரம் மூச்சே மந்திரம்
அன்பே தந்திரம் ஆச்சு

பிரதான சிரந்தாண்டி மேம்பாலம் முட்டி
நிராதாரஞ் சிரங்கீழே இறக்கு

மனமெனும் சேட்டைக் காரன் இருதய
வனத்துய ஆண்டவன் அவனே

தன்னை மறந்த சேட்டைகள் யாவும்
தன்னை உணரத் தீரும்

மனக்குரங்கே தேவ குமாரன் இருதய
வனம்புகுந்தால் யாவும் புரியும்

நாகராஜ சேட்டைக் காரனை நல்ல
பாம்பாக்கத் தேவை யோகம்

நாகரா
19-07-2010, 06:54 AM
அன்பை விளங்க அன்பே இறைக்கும்
அமுத வளியை வாசி

மேனாசி ஊசி திறக்கும் அமுத
மேலாசி தாரை வாசி
(மேனாசி ஊசி = உச்சித் துவாரம்)

இருளில் விழித்து ஒழிவிலா தொழுகும்
அருளை விரும்பி வாசி

நாகரா
20-07-2010, 06:16 AM
ஒன்று மில்லார் சுத்த வெளியில்
பொன்றா துள்ளாள் சத்தி
(பொன்றாது = அழிவின்றி, குறைவின்றி)

உள்ளாள் சத்தி சூன்யச் சிவத்துள்
நல்லாள் செய்ததே ஞாலம்

சத்திப் பெண்ணாள் ஆண்டவன் சிவத்துள்
ஒன்றி உள்ளாள் ஊன்றி

சத்தி சிவத்துள் அடங்குஞ் சத்தியம்
பித்த மனத்துக் கெட்டா

பித்த மனத்தின் மொத்த பிரமையே
சுத்த அசுத்த மாயை

ஞாலமாஞ் சத்தியும் ஆதியாஞ் சிவமும்
பேதமாய்த் தோன்றிடல் மாயை

தோற்றப் பிழையை நிவர்த்தி செய்யத்
தோற்றுப் போகும் மாயை

திரிந்து தெரியுஞ் சத்தியின் தோற்றம்
திருந்த உரியும் மாயை

சத்தியே மாயை யென்னும் பொய்யால்
சத்தியம் மாயு மோ

வெட்ட வெளியில் பட்டப் பகலொளி
சத்தி சிவஐக் கியம்

சத்தி சிவஐக் கியத்தில் உண்டானப்
பிள்ளை குருவே ஞானம்

ஞான குருவார் பேதம் முறிக்க
ஆதி சிவமே ஞாலம்

ஞால ஊரினில் மெய்யுடற் கோயிலில்
ஆதி மூலவர்க் கருவறை

கருவறை இருதயம் காட்டுங் குருபரன்
அருவமாய் உருவுனுள் உயிர்த்துளான்

உயிர்த்துள குருவே அன்பே சிவமாம்
அருளெனுஞ் சத்தியாம் ஒருவன்

ஒருவனை உள்ளே உணரவே ஒடுங்கு
இருதயத் துள்ளே நீ

நாகரா
21-07-2010, 07:11 AM
கரும்பா நோயை மருந்தாய்த் தந்தான்
கருமா நோயே முறிய
(கருமா = கருமம், இருள் சேர் இரு வினை, கரும்பா = வெண்பா இலக்கணம் பற்றிய அக்கறையின்றி எழுதப்படும் எழு சீர் அமைப்பு)

நாகரா
23-07-2010, 06:19 AM
அக(ம்)மது குகையில் முக(ம்)மது தவவொளி
சகமது உய்ந்திடச் செய்யது(சையது)

நாகரா
24-07-2010, 07:28 AM
இரகசியம் ஏதுமின்றி உனைச்சுற்றி அழுத்தும்
பகிரங்கம் ஆதிசிவம் அன்பே

அன்பே வெளியாகி நின்மெய் யழுத்தும்
உண்மை ஒளிவிலா பகிரங்கம்

மேல்கீழ் இடவலம் முன்பின் எப்பாலும்
பாய்ந்தே நடுவுனைச் சேரன்பு

சேரன்பை உணரா சோம்பலை உதறி
ஊருன்மெய் உயிர்க்க விழி

விழித்திரு விழுங்கிடு அன்பைப் பகிரப்
பொழிந்திடும் இருதயந் திறந்திடு

திறந்திடு இருதயம் இருந்திடு தயவாய்
அறுந்திடுங் கருவினை யாவும்

யாவும் ஒன்றென பேதம் விட்டே
நேசம் பற்றிட வீடு

நாகரா
25-07-2010, 06:26 AM
மெய்யேதான் உடம்பு அன்பேதான் உயிர்ப்புப்
பொய்க்கூற்றைக் குதித்தே எழு
(கூற்று = மரண*ம்)

எழுபடி மேல்விழும் எழுபடிப் பாலை
விழுங்கிட மேலெழுந் தேகம்
(எழுபடி = ஏழு சக்கரங்கள், எழுபடிப் பால் = நிராதார எழ்நிலை, மேலெழுந் தேகம் = தேகம் ஜோதி மெய்யுருவாகும்)

நாகரா
26-07-2010, 06:28 AM
அன்பே சிவமென என்பும் அறியும்
உண்மை உணராக் கன்மனம்

கன்மனக் கற்பூரமாய்த் தவக்கனற் தீபத்தே
கரைந்திட அன்பேதான் மணக்கும்