PDA

View Full Version : துலுக்காணம்...!!!



சிவா.ஜி
21-03-2009, 11:12 AM
”ஒரு நாளானா நாத்தமில்லாத நாளா கீதா....கஸ்மாலம் பொய்து விடிஞ்சி பொய்து போனா டிச்சிக்குள்ள வுய வேண்டிதாக்குது என்னா பொயப்புடா இது...”

பாதியாய் இருந்த பீடியை ஒரே இழுப்பில் குற்றுயிராக்கி தூக்கி எறிந்தான் துலுக்காணம்.

“அதான் நம்ம பொயப்பு இப்பிடீன்னு ஆயிடிச்சில்ல...இன்னாத்துக்கு சொம்மா கூவூற. கோட்டர் அடிச்சமா, டிச்சிக்குள்ள வுயுந்தமா, வார்னமான்னு இல்லாம இப்ப இன்னாத்துக்கு புச்சா பொலம்பினுக்கீற?”

“அடுத்த வாரம் கல்யாணம். பொண்ணுக்கிட்ட எங்க நைனா வெலாவரியா அல்லாத்தையும் சொல்லிட்டாரு. அதுக்கென்னா ஏதானா ஒண்ணு வேலைன்னு இருந்தா போதுன்னு சொல்லிடிச்சாம். அது சொன்னாலும்...வேலை முடிஞ்சி வூட்டுக்கு போவசொல்லோ கஸ்டமா இருக்குமேடா”

“இதப்பார்றா...அடுத்தவாரம் புது மாப்பிள்ளையா? மச்சான்..சரக்கு கீதுல்ல?”

“அது இல்லாதயா?”

அடுத்த வாரத்தில் துலுக்காணத்தின் கல்யாணம் கொஞ்சமே கொஞ்சம் பேர்களுடன் முப்பாத்தம்மன் கோவிலில் நடந்தது. அவர்கள் வீட்டிலிருந்து ஒரு சந்து தள்ளித்தான் அந்தக் கோவில். திருமணம் முடிந்து ஊர்வலமாக அந்தக்கூட்டம் வந்துகொண்டிருந்தது. துலுக்காணம் முதல்முறையாக நல்ல வெள்ளைவேட்டி, வெள்ளை சட்டையில் ‘கப்பு' இல்லாமல் நடந்து வந்துகொண்டிருந்தான். இரண்டு நாட்களுக்கு முன்பிருந்தே ஒரு நாளைக்கு மூன்று முறைக் குளித்து தன்னை தயார்படுத்தியிருந்தான். பக்கத்தில் இருந்த புது மனைவியை ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டே தெம்பாய் நடந்து வந்துகொண்டிருந்தான். அப்போது திடீரென்று,


“அய்யோ புள்ள டிச்சிக்குள்ள வுழுந்திடிச்சே..”

என்ற அலறல் கேட்டதும் வேட்டியை மடித்துக்கட்டிக்கொண்டு அந்த திசையில் ஓடினான். திறந்திருந்த பாதாளசாக்கடையின் வாயைப் பார்த்ததும் புரிந்துகொண்டான். சற்றும் யோசிக்காமல் அப்படியே அதில் குதித்தான். சில வினாடிகளிலேயே இரண்டு வயது குழந்தை ஒன்றை தூக்கி மேலே போட்டான்.

குழந்தையை கழுவி குடித்த சாக்கடைநீரை வெளியேற்றியதும் விழித்துப்பார்த்து அழத்தொடங்கியது. அதன் அம்மா இவன் கால்களைப் பிடித்துக்கொண்டு அழுதாள். உடனே ஓடிச்சென்று வீட்டுக்குள்ளிருந்து பணத்தை எடுத்துக்கொண்டு வந்து துலுக்காணத்திடம் கொடுத்தாள்.

“அய்யே...இன்னாது இது? காசுக்கு கப்பு வார்றவன் தான் நானு...இத்தினிநாளு இன்னாத்துக்குடா இந்த தொயில செய்றோன்னு கலீஜா இருந்துச்சி. இன்னிக்குதான் ஒரு உசுரக் காப்பாத்த அதே தொயிலு ஒதவுச்சேன்னு சந்தோஷமாக் கீது. நீ காசு குடுத்து இன்னும் கலீஜாக்கிடாத. புள்ளையக் கூட்னு போ”

“நைனா....நீங்கல்லாம் வூட்டுக்கு போங்க நான் பைப்பாண்ட போய் தண்ணி ஊத்திக்கினு வரன்”

சொல்லிவிட்டு நடந்துபோனவனை அவனுடைய புது மனைவி பெருமையுடன் பார்த்தாள்.

ரங்கராஜன்
21-03-2009, 11:30 AM
நல்ல கதை அண்ணா, உங்களுடைய தணி முத்திரையான விவரிப்புடன் இருக்கும் கதை. வசனங்கள் அனைத்து படிக்கும் பொழுது ஒரு நிமிஷம் படிப்பவர் தன்னை துலுக்கானம் என்று நினைத்துக் கொள்வார், அந்த அளவில் சென்னை தமிழில் விளையாடி இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள். எனக்கு இந்த துலுக்கானம், மாசானம், பாவாடை, முனுசாமி, சிலுவ, போன்ற பெயர்களில் எப்பவும் ஒரு வித ஈர்ப்பு உண்டு விளிம்பு நிலை மனிதர்கள் என்ற ஒரே ஒரு காரணம் மட்டும் அதில் இருப்பதாக தெரியவில்லை, உண்மையான காரணமும் தெரியவில்லை. நிறைய முறை இந்த சாக்கடையை சுத்தம் செய்பவர்களை பார்த்து இருக்கிறேன், சாக்கடையை சுத்தம் செய்யும் பொழுது மீத்தேன் வாயூ தாக்கி அவர்கள் இறந்து விட்டார்கள் என்று செய்தியும் படித்து இருக்கிறேன். மனிதனின் கழிவுகளில் இன்னொறு சக மனிதனை சுமக்க வைத்தாலும், அல்லது சுத்தம் செய்ய வைத்தாலும் எதுவாக இருந்தாலும் அது ஒரு வித அகங்கராக புத்தியை காட்டுகிறது. ஒரு மனிதனை இதைவிட அவமானப்படுத்த முடியாது. அவனுடைய தொழில், நிலைமை என்று எந்த காரணம் சொன்னாலும் அது தவறு தான்.

நல்லவேளை இப்பொழுது எல்லாம் சென்னையில் இவர்கள் செய்ய வேண்டிய வேலையை மிஷன்கள் செய்கிறது, கழிவு நீர் சுத்தப்படுத்து லாரி செய்யும்.

நல்ல சமுதாய பிரச்சனையை மையப்படுத்தி நகர்த்திய கதைக்கு வாழ்த்துக்கள்

சிவா.ஜி
21-03-2009, 11:40 AM
பெரிய நகரங்கள்ல மெஷின் வந்துட்டாலும்...அடுத்தநிலை நகரங்கள்ல இன்னும் மனுஷன்தான் சாக்கடை சுத்தம் செய்றான். அவன் செய்யற தொழில அவனுக்குப் பிடிக்காமல்தான் செய்றான்....இருந்தாலும் இந்த மாதிரி நிகச்சியில அவனே பெருமைபட்டுக்கறான். அந்த பெருமையை அவனுக்கு கொடுக்கத்தான் இதை எழுதினேன். வேறு எந்த வெள்ளை வேட்டியும் துணிந்து சாக்கடையில் குதிக்க மாட்டார்கள்.

பாராட்டுக்கு நன்றி தக்ஸ். எப்போதும் முதல் பின்னூட்டம் இட்டு இந்த அண்ணனை பெருமைப்படுத்துகிறாய். அதற்கு பிரத்யேக நன்றிகள்.

ரங்கராஜன்
21-03-2009, 11:50 AM
பெரிய நகரங்கள்ல மெஷின் வந்துட்டாலும்...அடுத்தநிலை நகரங்கள்ல இன்னும் மனுஷன்தான் சாக்கடை சுத்தம் செய்றான். அவன் செய்யற தொழில அவனுக்குப் பிடிக்காமல்தான் செய்றான்....இருந்தாலும் இந்த மாதிரி நிகச்சியில அவனே பெருமைபட்டுக்கறான். அந்த பெருமையை அவனுக்கு கொடுக்கத்தான் இதை எழுதினேன். வேறு எந்த வெள்ளை வேட்டியும் துணிந்து சாக்கடையில் குதிக்க மாட்டார்கள்.

பாராட்டுக்கு நன்றி தக்ஸ். எப்போதும் முதல் பின்னூட்டம் இட்டு இந்த அண்ணனை பெருமைப்படுத்துகிறாய். அதற்கு பிரத்யேக நன்றிகள்.

அப்புறம் சொல்ல மறந்துட்டேன், ஒரே நாளில் இரண்டு கதைகளை போட்டு அசத்தி விட்டீர்கள் அண்ணா, நீங்கள் சிறுகதை எத்தனை எழுதினாலும் கண்டிப்பாக சலிக்காமல் முதல் பின்னூட்டம் போடுவேன் அண்ணா, என்னுடைய கடமை அது.........:icon_b: நோ நோ அழக்கூடாது, control your self

சிவா.ஜி
21-03-2009, 11:55 AM
ஆஹா....கடைசியில வெச்சுட்டியே ஆப்பு....!!! அவ்வ்வ்வ்......!!

அன்புரசிகன்
21-03-2009, 04:20 PM
தம் தொழிலை தெய்வமென நினைத்து வாழ்பவர்களின் கதையின் நிசத்தினை உணர்த்துகிறது... வாழ்த்துக்கள் அண்ணா...

சிவா.ஜி
22-03-2009, 06:37 AM
முதலில் தன் தொழிலை வெறுத்தாலும் அதே தொழில்தான் ஒரு உயிரை காப்பற்றவும் உதவியது எனும்போது அதை மதிக்கிறான். நீங்கள் சொன்னதைப்போல செய்யும் தொழிலே தெய்வம் என்றிருப்பது மிக உயர்ந்தது அன்பு. மிக்க நன்றி.

சசிதரன்
23-03-2009, 02:14 PM
நல்ல கதை சிவா அண்ணா..:) விருப்பமில்லாமல் இந்த தொழில் செய்தேன்... இன்று உயிரை காப்பாற்ற அது உதவியதால் மகிழ்கிறேன் என்று சொன்ன துலுக்கானத்தின் காரக்டருக்கு தலை வணங்குகிறேன்...:)

அக்னி
23-03-2009, 02:22 PM
சிவா.ஜி...
உண்மையைச் சொன்னால், கதை எனக்கு வரிக்குவரி, ஏன் சொல்லுக்குச் சொல்லே
விளங்கிகொள்ளக் கடினமாக இருந்தது.
ஆனால்,
முழுமையாக வாசித்து முடிந்ததும், முழுமையாகக் காட்சியைக் காணப்பெற்றேன்.

இந்தக் கதைக்கு இந்த வார்த்தைகள்தான் மிகப்பொருத்தம்.

நீங்கள் கையாண்ட வார்த்தைகள், எனக்குப் புதிதானவை. பல விளங்காதவை.
ஆனால், முடிவில் முழுமையாக விளக்கும் அளவுக்கு கதையின் நகர்வு சிறப்பாக இருந்தது.

ஒரு முத்திரைக் கதை.


“அய்யே...இன்னாது இது? காசுக்கு கப்பு வார்றவன் தான் நானு...இத்தினிநாளு இன்னாத்துக்குடா இந்த தொயில செய்றோன்னு கலீஜா இருந்துச்சி. இன்னிக்குதான் ஒரு உசுரக் காப்பாத்த அதே தொயிலு ஒதவுச்சேன்னு சந்தோஷமாக் கீது. நீ காசு குடுத்து இன்னும் கலீஜாக்கிடாத. புள்ளையக் கூட்னு போ”
:icon_b:
உயர்ந்த பண்புகளைத், தொழிலும் வறுமையும் என்றுமே தீர்மானிப்பதில்லை.
எந்தத் தொழில் செய்திடுனும், நாம் மனிதத் தன்மையோடு இருந்தால்,
மதிப்பும் சிறப்பும் பெற்றிடலாம் என்பதற்கு துலுக்காணம் ஒரு எடுத்துக்காட்டு.

எந்த ஒரு வார்த்தையும் பேசாமல், மனதில் உயர்ந்துவிடுகின்றாள் துலுக்காணத்தின் மனைவி.
இப்படியான மனைவி கிடைக்கப்பெற்றதால், துலுக்காணத்தின் வாழ்க்கையில் இனி என்றும் நறுமணமே...

பாராட்டுக்கள் சிவா.ஜி...

பாரதி
23-03-2009, 04:00 PM
இராசய்யா போல உங்களது குட்டிக்கதைகளும் சில வரிகளில் சிறப்பான கருத்துகளை உள்ளடக்கி வருகிறது சிவா. எதையும் எதிர்பாராமல் உதவும் நெஞ்சங்கள் இந்த காலத்திலும் இருந்து வருகின்றன என்பதை கூறிய விதம் பாராட்டுக்குரியது.

தொடர்ந்து எழுதுங்கள் சிவா... வாய்ப்பும் நேரமும் கிடைத்தால், தினம் ஒரு கதையை உங்களால் தரமுடியும் என்பது எனக்குத்தெரியும்.

அறிஞர்
23-03-2009, 04:07 PM
நல்ல கதை... மனிதாபிமானத்தோடு... செயல்பட்ட செயல்...
கணவனை எண்ணி பெருமை கொள்ளும் புதுமணப் பெண்...
அருமை சிவா.ஜி...

சிவா.ஜி
23-03-2009, 05:12 PM
நல்ல கதை சிவா அண்ணா..:) விருப்பமில்லாமல் இந்த தொழில் செய்தேன்... இன்று உயிரை காப்பாற்ற அது உதவியதால் மகிழ்கிறேன் என்று சொன்ன துலுக்கானத்தின் காரக்டருக்கு தலை வணங்குகிறேன்...:)

மிக்க நன்றி சசி. உங்கள் கவிதைகளுக்கு ரசிகன் நான். உங்களிடமிருந்து நல்லதொரு பின்னூட்டம் கண்டு மிக்க மகிழ்ச்சி.

சிவா.ஜி
23-03-2009, 05:18 PM
சிவா.ஜி...
உண்மையைச் சொன்னால், கதை எனக்கு வரிக்குவரி, ஏன் சொல்லுக்குச் சொல்லே
விளங்கிகொள்ளக் கடினமாக இருந்தது.


உயர்ந்த பண்புகளைத், தொழிலும் வறுமையும் என்றுமே தீர்மானிப்பதில்லை.
எந்தத் தொழில் செய்திடுனும், நாம் மனிதத் தன்மையோடு இருந்தால்,
மதிப்பும் சிறப்பும் பெற்றிடலாம் என்பதற்கு துலுக்காணம் ஒரு எடுத்துக்காட்டு.



என்னை மன்னியுங்கள் அக்னி. மண்ணின் மைந்தனைக் காட்ட விளைந்ததால் அந்த உரையாடல்கள் அவசியமாகிவிட்டது. ஆனால்...என் ரத்தங்கள் கடல் தாண்டியும் இருப்பதால்....அவர்கள் விளங்கிக் கொள்ள முடியாத வகையில் எழுதியதற்கு வருத்தப்படுகிறேன். அப்படியும் இந்த உறவை விட்டுக்கொடுக்காமல் நீங்கள் கொடுத்த உங்கள் பாராட்டுக்களுக்காக என் மனமார்ந்த நன்றிகள்.

சிவா.ஜி
23-03-2009, 05:20 PM
நல்ல கதை... மனிதாபிமானத்தோடு... செயல்பட்ட செயல்...
கணவனை எண்ணி பெருமை கொள்ளும் புதுமணப் பெண்...
அருமை சிவா.ஜி...

மிக்க நன்றி அறிஞர். குடும்பத்தலைவரால் பாராட்டப்படுவதை மிகப்பெருமையாய் நினைக்கிறேன்.

ஜாக்
23-03-2009, 05:40 PM
சிவா.ஜி அண்ணாத்தே கதை ஹார்ட டச்சு பன்னிடுச்சுபா

யந்த பொயப்பும் கலிஜானது இல்லேனு துலுக்காணம் மூலம் ரொம்ப கரிக்கீட்டா புரியவச்சுடேப்பா

அருமை நண்பரே

அக்னி
23-03-2009, 06:09 PM
என்னை மன்னியுங்கள் அக்னி.
இது தேவையற்றது சிவா.ஜி...

இந்தக் கதைக்கு, வரியமைப்பு இப்படித்தான் இருக்கவேண்டும். இதுதான் இயல்பு.
இல்லாவிட்டால், கதையில் செயற்கைத்தன்மை இழையோடிவிடும்.

தவிர,
இந்த உரையாடல்கள் இந்தப் பேச்சுவழக்குத் தமிழில் வராதிருந்தால்,
கதையின் உயிரோட்டம் குறைந்து போயிருக்கும்.

நான் குறையென்று சொல்லவில்லை.
வார்த்தைகள் புரியவில்லை என்பதைத்தான் குறிப்பிட்டேன்.
உதாரணமாக,
‘டிச்சி’ என்பது பாதாளச்சாக்கடை என்பதை, கதையோடு செல்கையிற்தான் அறிய முடிந்தது.

இவ்வகைக் கதைகளில், கதைக்கு முக்கிய, பேச்சுவழக்குச் சொற்களை கீழே குறிப்பில் தெளிவுபடுத்தலாம்.

இந்நிலை மனிதர்களின் வாழ்வை, அனைவருக்கும் எடுத்துச் செல்வதும் ஒரு சேவைதானே.

அதற்கு விசேட பாராட்டுக்கள் சிவா.ஜி...

அமரன்
24-03-2009, 09:56 AM
என்னை மன்னியுங்கள் அக்னி. மண்ணின் மைந்தனைக் காட்ட விளைந்ததால் அந்த உரையாடல்கள் அவசியமாகிவிட்டது. ஆனால்...என் ரத்தங்கள் கடல் தாண்டியும் இருப்பதால்....அவர்கள் விளங்கிக் கொள்ள முடியாத வகையில் எழுதியதற்கு வருத்தப்படுகிறேன். அப்படியும் இந்த உறவை விட்டுக்கொடுக்காமல் நீங்கள் கொடுத்த உங்கள் பாராட்டுக்களுக்காக என் மனமார்ந்த நன்றிகள்.

அக்னி சொல்ல வேண்டியதை சொல்லி விட்டான். அவன் சொல்லாமல் விட்டதாக எனக்குப் படும் ஒன்றைச் சொல்கிறேன். இந்த மாதிரியான கதைக்களங்களை நீங்கள் பயன்படுத்தும் போதும் வட்டார வழக்குகளை உபயோகிக்கும் போதும் என்னைப் போன்ற இலங்கை என்னும் குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டியவர்களின் இத்தைகைய களங்களில் கதை நகர்த்தும் ஆசையை நிறைவேற்றுவதில் உள்ள கடினம் குறைகிறது. தொடந்து இப்படியும் எழுத என் சார்பிலும் அக்னி சார்பிலும் வேண்டுகிறேன். இல்லையில்லை கட்டளை இடுகிறேன். (நீங்கதானே என்னை பல இடங்களில் பாஸ், தலைவா என்று அழைத்தீர்கள். அதான் பழி வாங்கறேன்)


கூரிய விழிகள் உங்களது. அதனால்த்தான் மிக எளிதாக உள்ளத்தை அறுவைச் சிகிச்சை செய்ய உங்களால் முடிகிறது. கஷ்டப்பட்டு வேலை செய்தவன் இஷ்டப்பட்டு வேலை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டான் என்ற நீங்கள் தெளித்த உன்னதம் பன்னீராக வாசனை தருகிறது.

கதையின் ஒளி மூர்த்தியில் பதித்த விம்பம் கருத்தைக் கவர்கிறது. வேலைவாய்ப்புப் பால் இந்திய மடியில் மட்டுமில்லாது உலக மடிகளில் சுரட்கட்டும். இந்தக் கொடுமைகளுக்கு முடிவு கட்டுவோம் மூர்த்தி.

samuthraselvam
24-03-2009, 10:55 AM
அருமையான கதை.. வாழ்த்துக்கள் அண்ணா...!!
கலீஜ் பாசையில் ஒரு மனிதாபிமான சிறுகதை.

பூமகள்
24-03-2009, 11:03 AM
சின்னக் கதையில் எத்தனை பெரிய செய்தி...

வார்த்தைச் சுருக்கத்திலும்... சிறுகதைக்கான காரம் குன்றவில்லை...

--

இவ்வகை தொழிலாளர்கள் பற்றி பல நாட்கள் எண்ணியதுண்டு.. இவர்கள் வாழ்க்கை என்று விடியும் என்று ஏங்கியதுண்டு..

துலுக்காணத்தின் செயல் மனம் நிறையச் செய்தது... உழைக்கும் வர்க்கத்தவர்களே உள்ளம் வெள்ளையானவர்கள்...

செய்யும் தொழில் எதுவாகினும் ஒன்று போல் பார்த்தல் வேண்டும்.. நம்மில் எத்தனைப் பேர் துலுக்காணம் போன்றோரை மரியாதையுடன் அணுகிறோம்???? யோசிப்போமா இனியேனும்??!!

வேறு வேறு கோணத்தில் யோசிக்க வைத்த குட்டிக் கதை சிவா அண்ணா...

தங்கையானதில் மீண்டும் ஒருமுறை பெருமை படுகிறேன்... :)

சிவா.ஜி
24-03-2009, 03:21 PM
சிவா.ஜி அண்ணாத்தே கதை ஹார்ட டச்சு பன்னிடுச்சுபா

யந்த பொயப்பும் கலிஜானது இல்லேனு துலுக்காணம் மூலம் ரொம்ப கரிக்கீட்டா புரியவச்சுடேப்பா

அருமை நண்பரே

ஜாக்கோட ஹார்ட்ட டச் பண்ணிச்சுன்னா....அது நமக்கும் சந்தோஷம்தானே... ரொம்ப நன்றி ஜாக்.

சிவா.ஜி
24-03-2009, 03:23 PM
ஆஹா அழகு தமிழில் அமரனின்.....இல்ல...இல்ல...பாஸோட பின்னூட்டத்தைப் பாத்து குஜாலாயிடிச்சுபா மன்சு. நன்றி தலீவா.

சிவா.ஜி
24-03-2009, 03:24 PM
அருமையான கதை.. வாழ்த்துக்கள் அண்ணா...!!
கலீஜ் பாசையில் ஒரு மனிதாபிமான சிறுகதை.

தங்கை லீலுமாவுக்கும் கலீஜ் பாஷை புரிஞ்சிருக்கே....சந்தோஷம்மா. ரொம்ப நன்றி.

சிவா.ஜி
25-03-2009, 07:16 AM
இவ்வகை தொழிலாளர்கள் பற்றி பல நாட்கள் எண்ணியதுண்டு.. இவர்கள் வாழ்க்கை என்று விடியும் என்று ஏங்கியதுண்டு..

துலுக்காணத்தின் செயல் மனம் நிறையச் செய்தது... உழைக்கும் வர்க்கத்தவர்களே உள்ளம் வெள்ளையானவர்கள்...

செய்யும் தொழில் எதுவாகினும் ஒன்று போல் பார்த்தல் வேண்டும்.. நம்மில் எத்தனைப் பேர் துலுக்காணம் போன்றோரை மரியாதையுடன் அணுகிறோம்???? யோசிப்போமா இனியேனும்??!!

வேறு வேறு கோணத்தில் யோசிக்க வைத்த குட்டிக் கதை சிவா அண்ணா...



இந்த மென்மையான மனசுதாம்மா உன்கிட்ட எனக்கு ரொம்ப பிடிச்சது. இப்படிப்பட்ட மனிதர்களின் வாழ்வின் விடியலுக்காக ஏங்கும் உன் மனதுக்கு பாராட்டுக்கள் தங்கையே.

என்னைப்பொறுத்தவரை இவர்களை நான் எல்லோரையும்போல சமமாகத்தான் நினைக்கிறேன். என் வீட்டில் ஏதாவது வேலைக்கு வரும்போது அவர்களை மரியாதையுடன் நடத்தி அவர்களுக்குள் இருக்கும் தாழ்வுமனப்பான்மையை சில சதவீதமாவது குறைக்க முயல்கிறேன்.

அருமையான பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி பூம்மா.

பூமகள்
25-03-2009, 07:24 AM
எண்ணம் போல் வாழ்வு என்பது போல... இங்கே அண்ணன் போலவே தங்கையும்....

சிந்தையிலும் செயலிலும் ஒன்று போலவே நாம் சிவா அண்ணா.... நெகிழ்ந்தேன்.... இவ்வகை மாற்றத்தையே எல்லோரிடமும் இக்கதையின் மூலம் நாம் எதிர்பார்ப்பதும்...

நல்ல கதை... புனைந்த உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளும் பாராட்டுகளும். :)

சுகந்தப்ரீதன்
31-03-2009, 01:55 PM
இப்படி நுட்பமாய் வசனங்களை அமைத்து சொல்லவந்ததை சுருங்கசொல்லும் விதம் உங்களுக்கு கைவந்த கலையண்ணா..!!

துலுக்காணம் போன்றவர்களின் எதிர்பார்ப்பு ரொம்ப ரொம்ப குறைவு என்றே சொல்லலாம் அண்ணா... அவர்கள் எப்போதும் எதிர்பார்ப்பது மற்றவர்களிடமிருந்து அன்பும் அனுசரணையை மட்டும்தான்...!! அதனால்தான் தான் மணக்கோலத்தில் இருக்கிறோம் என்ற எண்ணம் ஏதுமின்றி மனிததன்மையோடு மற்றவர்களுக்கு உதவ முன்னின்று முயல்கிறான்...!!

அன்றைக்கு அவனை கால்தொட்டு கும்பிட்ட அந்ததாயோ மற்றவர்களோ மற்றநாளில் அவனைபற்றி எந்த அளவுக்கு சிந்தித்திருப்பார்கள் என்பதும் இங்கே சிந்திக்கவேண்டிய விசயமே...!! (சிவா அண்ணா சிந்திப்பார் என்றுதான் எங்களுக்கு தெரியுமே..!!)

மனிதநேயம்மிக்க அந்த மனிதர்களின் வறுமையை வசப்படுத்தி சிலர் சிலவேளைகளில் அவர்களை கலீஜாக்குவதுதான் மிகவும் வேதனையான விசயம் அண்ணா....!!

துலுக்காணத்துக்கு அவன் புதுமனைவி பார்த்த பார்வை ஒன்றே போதும்...அவனுக்கு வாழ்ந்ததிருப்தி வாய்த்துவிடும் என்று நினைக்கிறேன்...!!

வாழ்த்துக்கள் சிவா அண்ணா... தொடருங்கள்...!!

சிவா.ஜி
31-03-2009, 03:11 PM
நீ சொல்வதும் சரிதான் சுபி. தனக்கு உதவிய போது கையெடுத்து கும்பிடத் தோன்றியவர்கள் மற்ற நாளில் ஒதுங்கிப்போவார்கள். ஆனால் இனி அந்த தாய் என்றைக்குமே அவனைப்போன்றவர்களை ஒதுக்க மாட்டாள்.

நிறைந்த விமர்சனத்துக்கு மிக்க நன்றி சுபி.

இளசு
31-03-2009, 10:04 PM
பாதி பீடி.. ஒரே இழுப்பு.. குற்றுயிர்..

அபார வர்ணனை சிவா.. அசந்தேன்.

வசனங்கள் நேர்த்தி.. ( அக்னிக்கு விளங்கவில்லை என்பதே நேர்த்திக்கு அத்தாட்சி..)

கதைக்கரு - எனக்குப் பிடித்தது..
மனிதம் மேல் இன்னும் நம்பிக்கை வைக்க ஊக்குவது..

துலுக்காணம் - மன வாசனை மிகுந்தவன்..

பாராட்டுகள் சிவா!

சிவா.ஜி
01-04-2009, 12:15 AM
துலுக்காணம் - மன வாசனை மிகுந்தவன்..

உங்களின் இந்த ஒற்றைவரி கதையில் நான் சொல்ல வந்த மொத்தத்தையும் சொல்லிவிட்டது.

வசனங்கள் அந்நியமாகிவிடக்கூடாதே என நான் சில சமயங்களில் உபயோகிக்கும் வார்த்தைகள் அக்னி போன்ற உறவுகளுக்கு புரிவதில்லை. அதற்கு அக்னி சொன்ன கருத்தையே இனி செயல்படுத்த வேண்டும்.

வட்டார வழக்கின் வார்த்தைகளுக்கு அதன் அர்த்தத்தை தனியே எழுதிவிட வேண்டும்.

மிக்க நன்றி இளசு.

ஆதவா
25-04-2009, 10:54 AM
குமுதம், குங்குமம். ஏன் ஆனந்த விகடனில் கூட ஒரு பக்க கதைகள் வரும். உப்பு சப்பற்ற கதைகளைக் கொடுத்திருப்பார்கள். படித்த நமக்கே அலுப்பு தட்டும்.. கிட்டத்தட்ட 'துலுக்கானம்' கதை ஒரு பக்க கதைதான்.. ஆனால் எவ்வளவு சிறப்பாக இருக்கிறது என்பதைப் படித்த பிறகு நன்கு புரிந்து கொள்ளமுடிகிறது. பிரசுரக் கதைகளைக் காட்டிலும் இது மிகவும் நேர்த்தியாக இருக்கிறது...

கழிவறைகள், சாக்கடைகளில் இறங்கி வேலை பார்ப்பவர்களை நானும் கூட ஒருமாதிரியான பார்வையில்தான் பார்க்கிறேன். அது எவ்வளவு தவறென்பது இக்கதையில் தெரிகிறது..

இளசு அண்ணா ரசித்த அதே வரிகள் சட்டென்று மனதிற்கு ஒட்டிக் கொண்டது... கதை நெடுகிலும் பிசகாத சென்னைத் தமிழ் (?) அழகாக கையாளப்பட்டிருக்கிறது.

முன்பே படிக்காத வருத்தம் மட்டுமே மிச்சமிருக்கிறது!!!!!

ஆதவா
25-04-2009, 10:58 AM
வட்டார வழக்கின் வார்த்தைகளுக்கு அதன் அர்த்தத்தை தனியே எழுதிவிட வேண்டும்.

மிக்க நன்றி இளசு.

அப்படியேதும் செய்துவிடாதீர்கள். வார்த்தைகளுக்கு அர்த்தமிட்டு சிறுகதையினை அகராதியாக்கி விடாதீர்கள்!! இயல்புக்குள் ஒட்டாமல் விலகி நின்றுவிடும்!!!