PDA

View Full Version : வேர்ட் டிப்ஸ்... இரட்டை அடிக்கோடு, வண்ணக்கோடு!!



பா.ராஜேஷ்
19-03-2009, 05:42 AM
வேர்ட் டாகுமெண்ட்டில் டெக்ஸ்ட் செலக்ட் செய்து "U"அழுத்தினால் ஒரு அழுத்தமான கோடு டெக்ஸ்ட் கீழாக அமைக்கப்படும். இந்த கோட்டிற்குப் பதிலாக அலை அலையாய், இரட்டைக் கோடுகளுடனாய், புள்ளிகள் கொண்டதாய் எனப் பல வகைகளில் கோடுகளை அமைக்கலாம் என்று உங்களுக்குத் தெரியுமா? இதற்கு

1. முதலில் எந்த சொற்களுக்கு அடிக்கோடு அமைக்க வேண்டுமோ அவற்றை தேர்ந்தெடுக்கவும்.

2. பின் இதில் ரைட் கிளிக் செய்து "Font" தேர்ந்தெடுக்கவும்.


3. "Font"என்ற பெயருடைய பல டேப்கள் உள்ள விண்டோ கிடைக்கும். இதிலும் "Font" என்ற டேபினைத் தேர்ந்தெடுக்கவும்.


4. பின் "Underline style" என்ற கீழ் விரி மெனுவைத் திறக்கவும். இதில் நீங்கள் விரும்பும் ஸ்டைலான கோட்டினைத் தேர்ந்தெடுக்கவும். இது எப்படி அமையும் என்பதனை அறிய "Preview" பாக்ஸ் பார்க்கவும்.

5. இதில் "Underline color" என்ற கீழ் விரி மெனுவினை விரித்து வண்ணத்தில் கோடுகளை அமைக்கலாம். இதற்கும் "Preview"” பாக்ஸில் கோடு எப்படிப்பட்ட வண்ணத்தில் அமையும் என்று பார்க்கலாம். இதன் பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.

இதில் கீ போர்டினை மட்டும் பயன்படுத்தி சில கோடுகளை உருவாக்கலாம். கண்ட்ரோல் + யு வழக்கமான அடிக்கோடினைத் தரும். கண்ட்ரோல்+ஷிப்ட்+ டி இரண்டு அடிக்கோடினைத் தரும். கண்ட்ரோல் + ஷிப்ட்+டபிள்யூ சொற்களுக்கு மட்டும் அடிக்கோடினைத் தரும். சொற்களுக்கு இடையே உள்ள இடைவெளியான ஸ்பேஸ்களுக்கு அடிக்கோடிடாது. இவ்வாறு இட்ட கோட்டினை நீக்கவும் அதே கீகளைப் பயன்படுத்தலாம். கண்ணடிக்கும், மின்னும் டெக்ஸ்ட்டை நிறுத்தவும்


சில வேளைகளில் நண்பர்கள் அனுப்பும் வேர்ட் டாகுமெண்ட் களில் சில சொற்கள் மின்னும், பளிச் பளிச் என்று எரியும், ஸ்பார்க் தெறிக்கும். கவனத்தை அந்த சொற்களுக்கு ஈர்ப்பதற்காக உங்கள் நண்பர் இந்த கூடுதல் வேலையை செய்திருப்பார். உங்களுக்கோ இது போன்ற எக்ஸ்ட்ரா வேலைகள் பிடிக்காது. இது கவனத்தைத் திருப்பாமல் எரிச்சலை உண்டாக்கும். எனவே இப்படிப்பட்ட டெக்ஸ்ட் கிடைக்கையில் இந்த எக்ஸ்ட்ராக்கள் இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்குமே என்று நீங்கள் விரும்பலாம். இவற்றை ஸ்விட்ச் ஆப் செய்தால் நன்றாக இருக்குமே என நினைக்கலாம். ஆம், இதற்கான ஸ்விட்ச் உள்ளது. அதனை எப்படி செட் செய்வது எனப் பார்க்கலாம்.


1.Tools மெனு சென்று Options தேர்ந்தெடுக்கவும்.

2. Options என்ற பெயரில் பல டேப் கள் கொண்ட விண்டோ கிடைக்கும். இதில் "View" என்னும் டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும்.

3.இதில் "Animated text" என்று இருக்கும் இடத்தில் எதிரே உள்ள டிக் அடையாளத்தை நீக்கவும்.

4. பின் ஓகே கிளிக் செய்து டயலாக் பாக்ஸை மூடவும்.


இனி யார் எந்த ஸ்பார்க்குடன் அனுப்பினாலும் அதெல்லாம் உங்களிடம் எடுபடாது. ஓகேயா !


வேர்ட் தொகுப்பில் எழுத்து ஜாலங்கள்


வேர்ட் 2003 தொகுப்பில் நாம் டாகுமெண்ட்களை உருவாக்குகையில் எழுத்துக்களை விதம் விதமாய் அமைக்கப் பல வசதிகள் தரப்பட்டுள்ளன. இவற்றில் பலவற்றை நாம் பயன்படுத்துவதே இல்லை. அப்படிப்பட்ட சில வசதிகள் குறித்து இங்கு தகவல்களைக் காணலாம்.


அகல எழுத்துக்களுடன் டெக்ஸ்ட்


மற்ற டெக்ஸ்ட் போல இல்லாமல் ஒரு போஸ்டர் போல சற்று அகலமான எழுத்துக்களுடன் வேர்டில் ஒரு டாகுமெண்ட் தயாரிக்க எண்ணுகிறீர்கள். அல்லது தலைப்பு மட்டும் மற்றவற்றிலிருந்து வித்தியாசமாக இருக்க திட்டமிடுகிறீர்கள். சில சொற்களுக்கு அழுத்தம் தர விரும்புகிறீர்கள். என்ன செய்யலாம்? விரும்பும் எழுத்துக்களை சற்று கூடுதல் அகலத்தில் அமைக்க வேர்ட் வழி தருகிறது.இதற்கு


1. முதலில் எந்த எழுத்துக்களை கூடுதல் அகலத்தில் அமைக்க வேண்டுமோ அவற்றைத் தேர்ந்தெடுக்கவும்.

2.பின் இதில் ரைட் கிளிக் செய்து "Font"” தேர்ந்தெடுக்கவும்.

3. "Font" என்ற பெயருடைய பல டேப்கள் உள்ள விண்டோ கிடைக்கும். இதிலும் "Character Spacing "” என்ற டேபினைத் தேர்ந்தெடுக்கவும்.

4. அடுத்து "Scale" என்பதனை அடுத்து 200% என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இது எழுத்துக்களின் வழக்கமான அகலத்தைக் காட்டிலும் இரண்டு மடங்கு அகலமாக ஆக்கும். இதன் கீழாக உள்ள "Preview" என்ற இடத்தில் இவை எப்படி தோன்றும் எனப் பார்க்கலாம். இந்த அகலத்தை 600% கூட உயர்த்தலாம். இந்த அளவைத் தேர்ந்தெடுத்த பின்னர் ஓகே கிளிக் செய்து பின் வெளியேறவும். டாகுமெண்ட்டில் நீங்கள் விருப்பப்பட்ட எழுத்து செட் செய்த அகலத்தில் இருப்பதனைப் பார்க்கலாம்.


நன்றி: தினமலர் கம்ப்யூட்டர் மலர்

அன்புரசிகன்
19-03-2009, 05:49 AM
ஏற்கனவே படித்தது. ஆனாலும் நம் மன்றில் மீண்டும் படித்ததில் மகிழ்ச்சி...

உண்மையில் வேர்ட் இல் ஏராளம் நமக்கு தெரியாது உள்ளது. அவ்வப்போது ஏதாச்சும் செய்யும் போது புதுசு புதுசா தெரியவரும். முன்பெல்லாம் ஒரு பக்கத்தின் நடுப்பகுதிக்கு எழுத்தை வரவைப்பதற்கு என்டர் கீயை அழுத்தி அழுத்தி கண்மட்டத்திற்கு இது நடு என்று தெரிந்ததும் எழுதுவோம். ஆனால் page layout இல் சென்டர் என்ற ஒரு தெரிவு உண்டு. இவ்வாறு நம் பல்கலை வாழ்க்கையை கிளறினால் பல சுவாரசியமான நிகழ்வுகள் கண்முன்னே வரும். சிலவேளை நினைத்தால் சிரிப்பும் வரும்.

பகிர்வுக்கு நன்றிகள்.

அமரன்
19-03-2009, 07:48 AM
அன்றாடம் நாம் பயன்படுத்துவதில கூட புதிய விசயங்கள் ஒளிந்திருக்கின்றன. அதை நிருபணமாக்கும் பயனுள்ள பதிவுப் பகிர்வு. நன்றி ரமேஷ்.

பா.ராஜேஷ்
20-03-2009, 07:01 AM
மிக்க நன்றி அமரன், அன்புரசிகன்

பாரதி
20-03-2009, 11:22 AM
பகிர்ந்ததற்கு நன்றி இராஜேஷ்.

நேசம்
21-03-2009, 08:10 AM
பலராலும் அறியபடாத விசயங்களை மன்ற உறவுகள் தரலாம்.
பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ராஜேஷ்

sakthim
21-03-2009, 09:22 AM
இந்த வசதி உள்ளது எனக்கு இது வரை தெரியாது,தெளிவாக விளக்கிய நண்பருக்கு நன்றிகள்.

இதே போல excel பற்றி இருந்தால் பதியுங்கள்.

பா.ராஜேஷ்
21-03-2009, 09:42 AM
நன்றி பாரதி, நேசம், sakthim.