PDA

View Full Version : சிறுகதை போட்டி



ரங்கராஜன்
18-03-2009, 06:08 PM
அமுதம் மாதஇதழ் மற்றும் தமிழ்நாடு காமராஜர் நற்பணி மன்றம் இணைந்து நடத்தும் சிறுகதை மற்றும் கவிதைப் போட்டி

சிறுகதைப் போட்டி:
முதல் பரிசு ரூ. 1000
2 வது பரிசு ரூ. 500
3 வது பரிசு ரூ. 300
ஆறுதல் பரிசு - 5 ரூ. 100

சமுதாய சிந்தனையுடன் சமூக, வரலாற்று பின்னணி கொண்ட சிறுகதைகள் வரவேற்கப்படுகின்றன. கதைகள் அமுதம் இதழின் மூன்று பக்கங்களுக்கு மிகாது இருக்க வேண்டும்.

கவிதைப் போட்டி:
முதல் பரிசு ரூ. 500
2 வது பரிசு ரூ. 300
3 வது பரிசு ரூ. 200
ஆறுதல் பரிசு - 5 ரூ. 50

கவிதைகள் சமுதாய வளர்ச்சி சிந்தனைகள் கொண்டதாகவும் 20 வரிகளுக்கு மிகாமலும் இருக்கவேண்டும்.

சிறுகதை, கவிதைகள் வந்து சேர வேண்டிய இறுதிநாள். 31-3-2009


அனுப்ப* வேண்டிய* முக*வ*ரி:

Kathai & Kavithai Potti
Editor,
Amudam tamil monthly,
519, Main Road,
Christu nagar,
Nagercoil - 629003
K.K. Dist., TN, India.

அறிஞர்
18-03-2009, 06:58 PM
அறிவிப்புக்கு நன்றி.. மூர்த்தி.

தங்கள் கதைக்கு பரிசு உண்டு என எண்ணுகிறேன்.

பா.ராஜேஷ்
19-03-2009, 05:34 AM
முதல் பரிசு தங்களுடையதாகத்தான் இருக்கும் என்பதில் ஐயமில்லை.
பாராட்டுக்கள்!

ரங்கராஜன்
19-03-2009, 05:38 AM
நன்றி ராஜேஷ் மற்றும் அறிஞர்

நான் இன்னும் அந்த போட்டியில் கலந்துக் கொள்ளவே இல்லை உறவுகளே, அறிவிப்பை பார்த்தவுடன் மன்றத்தில் பதித்து விட்டேன். உங்களின் வார்த்தைகளை பார்த்துவுடன் தான் அனுப்பலாமா என்று யோசிக்கிறேன். உங்களின் ஊக்கமான வார்த்தைகளே எனக்கு பரிசு கிடைத்த திருப்தியை எற்படுத்துகிறது

samuthraselvam
19-03-2009, 05:45 AM
அண்ணா கண்டிப்பா நீங்க கலந்துகிட்ட பரிசு உங்களுக்குத்தான். நல்ல கருவாக தேர்ந்தெடுத்து அருமையாய் கதை படைத்து முதல் பரிசை பெற்று வர வாழ்த்துகிறேன்.

ஆரத்தியுடன் காத்திருக்கும் அன்புத் தங்கை.......

சிவா.ஜி
19-03-2009, 06:59 AM
முதல் பரிசுடன் ஓடி வா தக்ஸ். தங்கையோட ஆரத்தி தட்டுல நீ போடப்போற காசைக் கொத்திக்கிட்டு போக இந்த அண்ணனும் பக்கத்துல இருப்பேன்.:lachen001::lachen001::icon_b:

மதி
19-03-2009, 07:07 AM
அதானே...!

அமரன்
19-03-2009, 07:55 AM
மூர்த்தி..
உங்களை உயரத்துக்கு கொண்டு போகும் உந்து வாசலில் வந்து நிறக ஏறுவதைப் பற்றிக் கவலைபடலாமோ. நாளை நீங்கள் நடந்து வரும்போது என் நண்பன் என்று நான் பெருமை கொள்ள வேண்டாமோ. ஏறிடுங்க.

பூமகள்
19-03-2009, 08:15 AM
தக்ஸ் நீங்க ஜெயித்து வருவீர்கள் என்பதில் இங்கு ஒருவருக்கும் சந்தேகமில்லை... உங்களுக்கேன் இந்த தயக்கம்??

விரைந்து வெற்றியோடு திரும்புங்கள்..

விழா எடுக்க காத்திருக்கிறோம்...... ட்ரீட் வாங்கவும் தான்.... ;) :D :D

ரங்கராஜன்
25-11-2009, 02:53 PM
இந்த போட்டியில் கலந்துக் கொள்ள என்னை ஊக்கப்படுத்திய உறவுகளுக்கு நன்றிகள் எனக்கு போட்டியில் மூன்றாவது பரிசு கிடைத்து இருக்கிறது.............. முதல் முறையாக என் எழுத்து புத்தகத்தில் வந்ததை எண்ணி மகிழ்கிறேன்...........வெற்றியை மன்றத்திற்கு என் உறவுகளாகிய உங்களுக்கும் சமர்பிக்கிறேன்.........

குணமதி
25-11-2009, 03:00 PM
மகிழ்ச்சி.

பாராட்டு!

வாழ்த்து!

அறிஞர்
25-11-2009, 03:01 PM
வாழ்த்துக்கள்... தக்ஸ்....

மன்றத்தில் இணைந்திருந்து.. என்றும் எங்கும் கலக்குங்கள்.

சரண்யா
25-11-2009, 03:18 PM
வாழ்த்துகள்....பரிசு பெற்றதில் மகிழ்ச்சியே...
வளரட்டும் உங்கள்..பணி...

மதி
25-11-2009, 04:03 PM
வாழ்த்துகள் தக்ஸ்.... :)

அமரன்
25-11-2009, 07:13 PM
வாழ்த்துகள் தக்ஸ்.

இன்னும் பல மாலைகள் உங்களைச் சேரட்டும்.

இளசு
25-11-2009, 07:31 PM
வாழ்த்துகள் தக்ஸ்..

இந்த வெற்றி முதற்புள்ளிதான்...

வளரும்...

aren
26-11-2009, 01:35 AM
வாழ்த்துக்கள் தக்ஸ். இன்னும் இன்னும் மேன்மேலும் பல பரிசுகளை நீங்கள் பெற என் வாழ்த்துக்கள்.

இன்னும் பல சாதனைகளை படையுங்கள்.

கா.ரமேஷ்
26-11-2009, 07:49 AM
அடடா மூன்றாவது பரிசா...? எப்படி விட்டீர்கள் முதல் இடத்தை தக்ஸ்.. பரவாயில்லை வாழ்த்துக்கள்...

ஜனகன்
26-11-2009, 10:19 AM
பாராட்டுக்கள் தக்ஸ்! இத்துடன் ஓய்ந்து விடாமல், மேலும் படையுங்கள் பல படைப்புகளை. சிறு சிறு படைப்புகளை இங்கேயும் பதியுங்கள். நன்றி.