PDA

View Full Version : இந்திய கிரிக்கெட் அணிக்குப் புதிய வியாதி!loshan
17-03-2009, 07:37 AM
M.S.தோனியின் இந்திய அணிக்கு – முன்னர் மார்க்டெய்லர்,ஸ்டீவ்வோவின் அவுஸ்திரேலியா அணிக்கு இருந்த அதே வியாதி பீடித்துள்ளது. COMPLACENCY..


தொடரை வென்றவுடன் தொடர் முடிவில் மாற்றமேதும் ஏற்படுத்தாத கடைசிப்போட்டியை Dead rubber/Dead match என்று அழைப்பார்கள். இப்போதைய அவுஸ்திரேலிய அணி வெற்றியொன்றைப் பெறவே தட்டுத்தடுமாறி வந்து இப்போதுதான் வெற்றிகளைத் தொடர்ந்து சுவைக்க ஆரம்பித்துள்ள அணி. எனினும் முன்னைய சம்பியன் அவுஸ்திரேலிய அணி ஆஷஸ் போன்ற தொடர்களில் வரிசையாக எல்லாப் போட்டிகளையும் வென்றபின்னர்,தொடர் தமது வசமான பின்னர்,கடைசிப் போட்டியில் கொஞ்சம் கவனயீனமாக அல்லது அக்கறையில்லாமல் விளையாடித தோற்பது வழமையானது.

இதனால் அவுஸ்திரேலியா white wash செய்யாமல் விட்ட தொடர் பலப்பல! எனினும் வேறு பெரிய இழப்புக்கள் ஏற்படவில்லை!

ஆனால் இந்திய அணி அண்மையில் இரண்டு dead rubberகளை இழந்தது. இலங்கையில் வைத்து முதல் நான்கு ஒருநாள் சர்வதேசப் போட்டிகளை வென்றபின்னர் ஐந்தாவது போட்டியில் தோற்றது. அந்தப் போட்டியை வென்றிருந்தால் ICC ஒருநாள் தரப்படுத்தலில் முதலாமிடத்தைப் பிடித்திருக்கலாம்.

அதுமட்டுமல்லாமல் தொடர்ச்சியாகப் பத்தாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் வெற்றி பெற்ற மைக்கல்லையும் கோட்டை விட்டார்கள்.


இலங்கையில் வைத்து White wash அடிப்படையில் ஒருநாள் தொடரை முதல் தடவையாக வென்ற பெருமையையும் பெறமுடியாமல் போனது.

இப்போது மீண்டும் நியூசிலாந்தில் ஒரு போட்டி மழையினால் கைவிடப்பட்டு மீதி எல்லாப் போட்டிகளிலும் இந்தியா வென்றபின்னர் இறுதியாக இடம்பெற்ற ஐந்தாவது போட்டியில் நியூசிலாந்திடம் கோட்டை விட்டது.

இதனால் இம்முறை இந்தியா இழந்திருப்பது ICC யின் தரப்படுத்தலில் முதலாம் ஸ்தானத்தை மட்டுமல்ல – பெறுமதிவாய்ந்த பணப்பரிசையும் தான்!

இவ்வருடம் ஏப்ரல் மாதத்தில் நிறைவடைந்துள்ள ஒராண்டுக் காலக்கட்டத்தில் டெஸ்ட்,ஒருநாள் தரப்படுத்தல்களில் முதலிடம் பெறும் அணிகளுக்கும் பெரும் பணப்பரிசு வழங்கப்படவுள்ளது.

சனிக்கிழமை இடம்பெற்ற போட்டியில் தோல்வியுற்றதுடன் இந்தியாவுக்கு இன்னமும் எஞ்சியுள்ள ஒருமாதத்துக்குள்ளே முதலிடத்தைப் பெறும் வாய்ப்பு இல்லாமல் போயுள்ளது. 3இடம் தான்!

முதலிடத்துக்கான பணப்பரிசு இனி அவுஸ்திரேலியாவுக்கு அல்லது தென் ஆபிரிக்காவுக்குத் தான்1

தொடர்ந்து வெற்றிகளை சுவைத்து வரும் இளமையும் துடிப்பும் மிக்க இந்திய கிரிக்கட் அணியிடம் complacency என்பது இல்லை என்று அடிக்கடி தோனி சொல்லி வருகிறார். ஒவ்வொரு போட்டியுமே வெல்லப்படவேண்டியவை என்றும் வலியுறுத்தி வருகிறார்.

நியூசிலாந்திடம் தோற்றுப்போன போட்டியிலும் கூட தினேஷ் கார்த்திக்,ப்ரக்யான் ஒஜ்ஹா,இர்பான் பதான் போன்றோருக்கான பயிற்சி வாய்ப்புக்கள் கூட வழங்கப்படாமல் முழுமையான அணியே விளையாடிருந்தது. சச்சின் டெண்டுல்கர் உபாதை
காரணமாக விளையாடவில்லை.

தோல்வியும் வெற்றியும் சகஜமே.ஆனாலும் கூட இவ்வாறான முக்கியமான,வெல்லப்பட வேண்டிய போட்டிகளில் தோற்பது அதுவும் தொடர்ச்சியாகத் தோற்பது ஒரு தொடர் வியாதியாகிவிடக் கூடாது.

முன்பு ஒருகாலம் இந்திய கிரிக்கட் அணிக்கு ஒரு வியாதி இருந்தது.சிறப்பாக விளையாடி வந்தாலும் எந்தவொரு தொடரினதும் இறுதிப்போட்டியில் (final) தோற்றுவிடும். (இங்கிலாந்தின் Nat west cup,1998 ஷார்ஜா கிண்ணம்,2002 மினி உலகக் கிண்ணப் போட்டிகளில் மட்டுமே வென்றிருந்தது.)

M.S.தோனியின் தலைமை அதை மாற்றியமைத்து,உத்வேகமான எந்த சவாலையும் எதிர்கொண்டு எந்த அணிக்கெதிராகவும் எந்த சூழ்நிலையிலும் எங்கேயும் வெற்றி பெறும் ஒரு அணியாக மாற்றியிருந்தாலும்,இப்போது தொடங்கியுள்ள இந்த COMPLACENCY வியாதி பயங்கரமானது அணியின் எதிர்காலத்தை சிதைத்துவிடக் கூடியது.

கிரிக்கட் ஒரு உளவியல் சம்பந்தப்பட்ட விளையாட்டு என்பதனால் இந்த வியாதியை ஆரம்பித்திலேயே குணப்படுத்தாவிட்டால் பின்னர் விளைவுகள் குணப்படுத்த முடியாமல் பல தோல்விகளைத் தந்துவிடும்!

http://loshan-loshan.blogspot.com/2009/03/blog-post_7542.html

நேசம்
17-03-2009, 07:50 AM
இந்தியா அணிக்கு ஒரு உத்வேகத்தை கொடுத்த கங்குலி தலைமையில் கூட பல இறுதிப்போட்டிகளில் தோற்று போனது.ஒருவேலை புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுத்து தோற்று இருந்தாலும் ஏற்று கொள்ளலாம்.இந்த வியாதி மாற்றப்பட வேண்டிய விசயம் தான்.

ஓவியன்
17-03-2009, 07:53 AM
வித்தியாசமான கோணத்தில் நல்லதொரு அலசல் அண்ணா :icon_b:, dead rubber போட்டிகளை இழப்பது பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தாதென பலர் வாதாடினாலும் முதன்மை அணியாக தம் இடத்தினை தக்க வைக்க அவை நன்கு பயன்படுத்தப் பட வேண்டியவையே...

அப்படியே புதிய, மற்றும் ஃபோர்மில் இல்லாதிருந்து மீண்டும் ஃபோர்முக்கு வந்த வீரர்களைப் பரீட்சிக்கும் களமாகவும் பயன்படுத்தலாம், இறுதிப் போட்டியில் ரோஹித் சர்மாவுக்கு பதில் தினேஸ் கார்த்திக்கை இந்திய அணி இறக்கிப் பார்த்திருக்கலாம்.

பரஞ்சோதி
17-03-2009, 07:58 AM
அருமையான அலசல்.

மன்றத்தில் நிறைய கிரிக்கெட் ரசிகர்கள் இருப்பது மகிழ்ச்சியை கொடுக்கிறது.

இன்றைய காலக்கட்டத்தில் நிறைய போட்டிகளின் முடிவு முன்னமே தீர்மானிக்க்ப்படுகிறது. அதற்கு காரணம் பணம், உள்ளூர் மக்களை மீண்டும் மைதானத்திற்கு வரவழைப்பது, தொலைக்காட்சியில் பார்க்க வைப்பது போன்றவை.

இந்திய அணிக்கு இரண்டாவது, மூன்றாவது இடமே போதும் என்று முடிவு செய்திருப்பாங்க. ஐசிசி கொடுக்கும் காசு எல்லாம் சும்மா, பிசாத்து காசுன்னு நினைச்சிருப்பாங்க.

ஓவியன்
17-03-2009, 08:03 AM
இந்திய அணிக்கு இரண்டாவது, மூன்றாவது இடமே போதும் என்று முடிவு செய்திருப்பாங்க. ஐசிசி கொடுக்கும் காசு எல்லாம் சும்மா, பிசாத்து காசுன்னு நினைச்சிருப்பாங்க.

ஆமா, இப்படியும் இருக்குமோ.......!! :rolleyes:

aren
17-03-2009, 08:09 AM
தொடரை வென்றவுடன் பெஞ்சில் இருக்கும் ஆட்டக்காரர்களுக்கும் சந்தர்பம் கொடுக்கவேண்டும் என்று நினைப்பினாலும், தொடர்ந்து ஆடிக்கொண்டிருக்கும் முன்னனி ஆட்டக்காரர்களுக்கு கொஞ்சம் ஓய்வு கொடுக்கவேண்டும் என்ற நினைப்பினாலும் நம்மால் தொடர்ந்து வெல்லமுடியாமல் போய்விடுகிறது. ஆனாலும் இப்படி பெஞ்சில் இருக்கும் ஆட்டக்காரர்களுக்கும் சந்தர்பம் கொடுத்தால் நன்றாக ஆடுபவர்களால் ஏதாவது ஒரு சமயத்தில் ஆட முடியாமல் போனால் பெஞ்சில் இருக்கும் ஆட்டக்காரர்கள் மேட்ச் ஃபிட்டுடன் இருப்பார்கள் என்பதால் இது ஒரு நல்லதற்கே.

அமரன்
17-03-2009, 08:29 AM
சிறப்பான அலசல்:icon_ush:. இந்தியா அணிமீதான என் நம்பிக்கைக்கு இன்னும் காலம் வரவேண்டும்.


ஆரென் அண்ணா..
பெஞ்சில் இருக்கும் ஆட்டக்காரர்களை இப்படியான போட்டிகளங்களில் இறக்க வேண்டும். அணியில் இடம்பிடிக்க வேண்டும், தம்மை நிரூபிக்க வேண்டும் என்ற உந்துதால் சிறப்பாக விளையாடுவார்கள். அதைப் பார்த்த ஓய்வு வீரர்கள் தங்கள் இடத்துக்கு ஆபத்து என்ற எண்ணம் மேலிட இன்னும் சிறப்பாக ஆடுவார்கள். இவர்களை இப்படி பயமுறுத்தினால்தான். பெஞ்சு மேலெ ஏற்றிப் பயமுறுத்த முடியாதே.

மன்மதன்
17-03-2009, 09:22 AM
நல்ல அலசல். பாராட்டுகள்..

பரஞ்சோதி
17-03-2009, 09:47 AM
சிறப்பான அலசல்:icon_ush:. இந்தியா அணிமீதான என் நம்பிக்கைக்கு இன்னும் காலம் வரவேண்டும்.


ஆரென் அண்ணா..
பெஞ்சில் இருக்கும் ஆட்டக்காரர்களை இப்படியான போட்டிகளங்களில் இறக்க வேண்டும். அணியில் இடம்பிடிக்க வேண்டும், தம்மை நிரூபிக்க வேண்டும் என்ற உந்துதால் சிறப்பாக விளையாடுவார்கள். அதைப் பார்த்த ஓய்வு வீரர்கள் தங்கள் இடத்துக்கு ஆபத்து என்ற எண்ணம் மேலிட இன்னும் சிறப்பாக ஆடுவார்கள். இவர்களை இப்படி பயமுறுத்தினால்தான். பெஞ்சு மேலெ ஏற்றிப் பயமுறுத்த முடியாதே.


சரியாக சொன்னீங்க அமரன்,

இது போன்ற போட்டிகளில் இதுவரை துணைத்தலைவராக இருந்தவரை அணியின் தலைமையேற்க சொல்ல வேண்டும்.

வாய்ப்புக்காக காத்திருக்கும் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும், அப்படி கொடுக்கும் போது இதுவரை ஆடாத அனைவருக்கும் கொடுப்பது நல்லது.

இதுவே வருங்காலங்களில் சிறந்த அணியை உருவாக்க உதவும், தர வரிசை எல்லாம் ஓடும் மேகத்தின் தூறல் மாதிரி, அது மாறிட்டே இருக்கும். அது நமக்கு தேவையில்லை தான்.

subashinii
17-03-2009, 01:02 PM
உள்ளூரில் ஒரு அணியை ரொம்ப நோகவைத்தால் பாவமில்லையா??? அதான்..

ஜாக்
24-03-2009, 05:55 AM
M.S.தோனியின் இந்திய அணிக்கு – முன்னர் மார்க்டெய்லர்,ஸ்டீவ்வோவின் அவுஸ்திரேலியா அணிக்கு இருந்த அதே வியாதி பீடித்துள்ளது. COMPLACENCY..
மிக சரியாக சொன்னிங்க இந்திய அணியினருக்கு KILLING INSTINCT எதிரணியை கடைசி வரை புரட்டி எடுப்பது இல்லை என்றே சொல்ல வேண்டும் இது தொடர்களில் வெற்றி பெருவதில் மட்டுமில்லை சில சுலபாம ஜெயிக்க வேண்டிய ஆட்டங்களை கடைசி நேர வரை இழுத்தடித்து உச்ச கட்ட* டென்சசனை எகிர செய்துவிடுகிறார்கள்:sprachlos020:

இப்போது மீண்டும் நியூசிலாந்தில் ஒரு போட்டி மழையினால் கைவிடப்பட்டு மீதி எல்லாப் போட்டிகளிலும் இந்தியா வென்றபின்னர் இறுதியாக இடம்பெற்ற ஐந்தாவது போட்டியில் நியூசிலாந்திடம் கோட்டை விட்டது.

இது கொஞ்சம் பரிதாபமான நிலை

இலங்கையில் உதியோருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் வின்னிங்க் காம்னேஷனை மாற்றி அமைத்து படு தோல்வி கண்டார்கள்

அதே போல் நீயுசிலாந்தில் நடக்க கூடாது என்று முழு தெம்புடன் களம் இறங்கினார்கள் ஆனால் அதிலும் தோல்வி

கரணம் தொடர்தான் நம்ம கைக்கு வந்துவிட்டதே என்ற மெத்தனம்

கிரிக்கட் ஒரு உளவியல் சம்பந்தப்பட்ட விளையாட்டு என்பதனால் இந்த வியாதியை ஆரம்பித்திலேயே குணப்படுத்தாவிட்டால் பின்னர் விளைவுகள் குணப்படுத்த முடியாமல் பல தோல்விகளைத் தந்துவிடும்!
ஆமாம் இந்த வியதியை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் ஒவ்வரு போட்டிடையும் இறுதி போட்டியாக நினைத்து விளையாட வேண்டும் அப்போதுதான் எல்லா போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்கிற எண்ணம் மேலோங்கும்

இந்திய அணிக்கு இரண்டாவது, மூன்றாவது இடமே போதும் என்று முடிவு செய்திருப்பாங்க. ஐசிசி கொடுக்கும் காசு எல்லாம் சும்மா, பிசாத்து காசுன்னு நினைச்சிருப்பாங்க.
பொதுவாகவே போதும் என்ற மனமே... இந்தியர்களுக்கு மேலோங்கி இருக்கும் அத்வும் ஒரு காரணமாக இருக்கலாம்:)

இன்பா
24-03-2009, 06:16 AM
பாவம்க விட்டோரியின் முகத்தை பார்க சகிக்கலை...!
இறக்கம் காட்டின் தோணியை இப்படி சொல்றீங்களே..!

தோணி நீ ரொம்ப நல்ல..................................வேம்பா :D

சுட்டிபையன்
24-03-2009, 06:45 AM
வணக்கம் லோசன் அண்ணா, வித்தியாசமான ஒரு ஆய்வு. இந்திய அணிக்கு எப்போதும் ஓர் பலவீனம் இருந்து கொண்டே இருக்கும். ஒன்றில் தொடர்ந்து தோற்றுக் கொண்டே இருப்பார்கள், இல்லை சிறப்பாக விளையடி கடைசியில் இறுதிப் போட்டிகளில் வந்து தோற்று விடுவார்கள். அதே போல் இது இந்திய அணியின் லேட்டஸ்ட் பலவீனம். இலங்கை அணியை பாகிஸ்தான் அணி 2006ம் ஆண்டு இலங்கையில் வைத்து வைட் வோஷ் பண்ணியொருக்கிரார்கள் முதல் தடவையாக ஒரு நாள் போட்டிகளில்

தாமரை
24-03-2009, 07:04 AM
1. தொடரை ஜெயித்து விட்டுதான் ஓய்வெடுப்பது என்று தீர்மானத்துடன் இதுவரை இந்தியா ஆடியதில்லை. தற்பொழுது அந்த பழக்கம் வந்து விட்டிருக்கிறது. இதுவே மிகப்பெரிய மாற்றம்.

2. எல்லா மேட்சுகளையும் வென்றால் அப்புறம் அந்த நாடுகளில் கிரிக்கெட்டுக்கு வரவேற்பு இல்லாமல் போய்விடும். அப்புறம் அந்த நாட்டுப் பணம் கிரிக்கெட் மூலமாக இந்தியாவிற்கு எப்படி வரும்?? :D ;D :D

3. இவங்களை அடுத்த முறை வென்றுவிடலாம் என்ற ஒரு சின்ன நம்பிக்கையை எதிரி அணியின் மனதில் உருவாக்குவதன் மூலம், அடுத்த தொடருக்கு அச்சாரம் போட்டு விடலாம். இல்லையென்றால் அடுத்த முறை நம்மோட விளையாட மாட்டாங்க இல்லையா? :D :D :D

4. அடிச்சா வலிக்காத மாதிரி அடிக்கணும். வலிச்சதுன்னா அந்த அணிக்கு ரோஷம் வந்திடும். அப்புறம் அவங்க தீவிர பயிற்சியெல்லாம் எடுத்து நம்மளை துவைச்சு எடுத்திடுவாங்க. அதிரடி மாற்றமெல்லாம் செய்வாங்க. இதெல்லாம் தேவையா?

5. எப்பவுமே டாப்பில் இருக்கறவங்களை பல பேர் குறைசொல்லிகிட்டே இருப்பாங்க. பொறாமை நிறைய இருக்கும். அரசியல் அதிகமா விளையாடும். அதனால கொஞ்சம் அடக்கி வாசிச்சா, நல்ல பேர் கிடைக்குமில்ல..
இப்போ ஆஸ்திரேலியா இந்தியாவை ஜெயிச்சா அது செய்தி.. இந்தியா ஆஸ்திரேலியாவை ஜெயிச்சா அது வரலாறு. எதுக்கு அதிக விளம்பரம் கிடைக்கும் யோசிச்சுப் பாருங்க.

6. இப்போ ஆஸ்திரேலியா நம்பர் 1 என்றால் இந்தியா ஆஸ்திரேலியா மேட்ச் நடக்கறப்ப ஆஸ்திரேலியா தோக்கணும் என்பதற்காக இந்தியாவுக்கு சப்போர்ட் பண்ண மத்தவங்க வருவாங்க. பரிசுகளை அள்ளி வீசுவாங்க. அவங்களைப் பொறுத்தவரை இந்திய அணிதான் கதாநாயகன். ஏன்னா மத்த அணிகளை புழுமாதிரி நசுக்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரா சரிசமமா ஆடி ஜெயிக்குது. அதே இந்தியா எல்லா அணிகளையும் நசுக்கினா அப்போ இந்தியா வில்லனாகிடுமே. அப்புறம் சப்போர்ட்டெல்லாம் ஆஸ்திரேலியா பக்கம் போயிடும்.

இப்படி பல நல்ல வாதங்கள் இருக்கு. பேசிப்பார்ப்பமா லோஷன்.

ஜாக்
24-03-2009, 07:26 AM
அடடா தாமரை நாங்க ஒரு திசையில் யோசித்த நீங்க ஒரு திசையில் யோசிக்கிரிங்களே :sprachlos020:

ஆனா எல்லா பயிண்டுகளையும் படித்து முடிக்கும் போது சிரிப்பை அடக்க முடியவில்லை என்பது உண்மை:lachen001:

தாமரை
24-03-2009, 12:45 PM
இன்னும் நிறைய பாயிண்டுகள் இருக்கு

1. இன்னார்தான் ஜெயிப்பாங்க அப்படின்னு தெரிஞ்சு பார்க்கிற போட்டி போர்

2. இப்படி எல்லா டீமும் கொலை வெறியோட (கில்லர் இன்ஸ்டிங்க்ட்???) விளையாடினா எப்படி கென்யா, பங்களாதேஷ், ஸ்காட்லாண்ட், நெதர்லேண்ட், நமீபியா, கனடா, அமெரிக்கா, சிங்கப்பூர், அமீரகம் இப்படிப் பலப் பல புது அணிகளை வளர்ப்பது? தோல்விகள் அவங்களைத் துவளச் செய்யாதா? அப்புறம் கிரிக்கெட் எப்படி மத்த நாடுகளில் வளரும்?

3. வெற்றியே சலிச்சுப் போயிடும் தோல்வி இல்லாவிட்டால். அப்புறம் சோம்பேறித்தனம் வந்திடும்.

4. ஜெயிச்சுகிட்டே இருந்தா அரசியல் உள்ளே நுழையும். நம்ம மக்களைப் பற்றிதான் தெரியுமே.. ஜால்ரா போடறவங்களை அணியில் நிலைக்க வைக்கவும், எதிர்கருத்துள்ளவங்களை ஒதுக்கவும், களத்தில் ஆடாம அறையில் ஆடுறவங்க ஆட்டம் ஆரம்பமாகும். அப்புறம் அடுத்த தலைமுறை அணியை எப்படி உண்டாக்கறது?

5. கிரிக்கெட் விளையாட்டை விட பெட்டிங்லதான் அதிக பணப்புழக்கம் இருக்கு. அப்பப்போ தோக்காட்டி அப்புறம் இப்படி இருக்கிற ஒரு தொழிலே நசுங்கி பொருளாதாரம் நசுங்கிடாதா? :D :D :D :D

6. ஹார்த்தே ஹார்த்தே ஜீத்னே வாலேக்கோ பாஜிகர் கஹதேஹேன்..அப்படின்னு ஒரு டயலாக் இருக்கு. தோல்வியின் மூலம் வெற்றி பெறுபவன் தான் பாஜிகர் என்று அர்த்தம். (பாஜிகர் அப்படின்னா என்னப்பா? ஹிந்தி நல்லா தெரிஞ்சவங்க சொல்லுங்களேன்).. இந்த மாதிரி சில தோல்விகளை பெருந்தன்மையா ஏற்றுக் கொள்ளுதலை விட்டுக் கொடுத்தல் அப்படின்னு சொல்வாங்க. இந்தப் பொன்னான மனசை புரிந்து கொள்ள வேண்டும்.

.

அறிஞர்
24-03-2009, 01:03 PM
தாமரையின் பதில்கள்.. சிரிப்புடன் சிந்திக்க வைக்கிறது...
ஜாக், லோஷன்.. உங்க பங்குக்கு இன்னும் கொஞ்சம் எடுத்துவிடுங்க..

ஓவியன்
24-03-2009, 01:17 PM
ஆஹா செல்வண்ணா, முடிவா இந்தியா திட்டமிட்டே இறுதிப் போட்டிகலில் தோல்வியைத் தழுவுகிறது என்று சொல்லுறீங்க போல... :D:D:D

ஜாக்
24-03-2009, 01:53 PM
இன்னும் நிறைய பாயிண்டுகள் இருக்கு.
முடியல:eek::eek::traurig001: (வடிவேலு பானியில் படிக்கவும்)

1. இன்னார்தான் ஜெயிப்பாங்க அப்படின்னு தெரிஞ்சு பார்க்கிற போட்டி போர்.
எப்போதும் ஜெயிக்கிர இன்னாரை இந்த போட்டியிலாவது ஜெயிப்பாங்களா என்று ஆவத்துடன் அதிக மக்கள் ஆர்வத்துடன் பர்ப்பாங்க:confused:

2. இப்படி எல்லா டீமும் கொலை வெறியோட (கில்லர் இன்ஸ்டிங்க்ட்???) விளையாடினா எப்படி கென்யா, பங்களாதேஷ், ஸ்காட்லாண்ட், நெதர்லேண்ட், நமீபியா, கனடா, அமெரிக்கா, சிங்கப்பூர், அமீரகம் இப்படிப் பலப் பல புது அணிகளை வளர்ப்பது? தோல்விகள் அவங்களைத் துவளச் செய்யாதா? அப்புறம் கிரிக்கெட் எப்படி மத்த நாடுகளில் வளரும்?.
வெற்றியை தூக்கி போடு தோல்விய பந்தாடு என்கிற பொன் மொழியை அனவரது மனதிலும் பதிய வைக்கலாம் ஆகையால் எவ்வளவு தோத்தாலும் அவர்கள் மனம் நோகாது ஏன்னா அவங்க ரொம்ப நல்லவங்க:D

3. வெற்றியே சலிச்சுப் போயிடும் தோல்வி இல்லாவிட்டால். அப்புறம் சோம்பேறித்தனம் வந்திடும்..
இல்லை தொடர்ந்து வெற்றி பெரும் நிலைய எபடி தக்க வைத்து கொள்வது என்ற துடிப்பான எண்ணமே மேலோங்கி இருக்கும்

5. கிரிக்கெட் விளையாட்டை விட பெட்டிங்லதான் அதிக பணப்புழக்கம் இருக்கு. அப்பப்போ தோக்காட்டி அப்புறம் இப்படி இருக்கிற ஒரு தொழிலே நசுங்கி பொருளாதாரம் நசுங்கிடாதா? :D :D :D :D.
பெட்டிங் தொழிலால் பல குடும்பங்கள் அழிந்து வரும் நேரத்தில் தொடர் வெற்றி மூலம் அந்த பெட்டிங் தொழிலுக்கு முற்று புள்ளி வைக்கலாம்:D மற்றவர்கள் திறமை நம்பி வீணாக பணம் கட்டி ஏமாறுபவர்கள் வேறு ஏதாவது நல்ல தொழில் தொடங்க வாய்ப்பு இருக்கு ஆகையால் நாட்டின் பொருளாதாரம் மேலும் பன்மடங்க வளரும்:icon_b:


6.இந்த மாதிரி சில தோல்விகளை பெருந்தன்மையா ஏற்றுக் கொள்ளுதலை விட்டுக் கொடுத்தல் அப்படின்னு சொல்வாங்க. இந்தப் பொன்னான மனசை புரிந்து கொள்ள வேண்டும்..
முடியாது முடியாது முடியாது தேவையற்ற தோல்விகளை ஏற்று கொள்ளவே முடியாது

என்னால முடிஞ்ச வரைக்கும் சமாலித்து பதில் சொல்லி இருக்கேன் யாராவது உதவிக்கு வாங்களேன்

ஓவியன்
24-03-2009, 02:03 PM
யாராவது உதவிக்கு வாங்களேன்

ம்ஹூம் முடியாது, ஏன்னா நம்ம உடம்பு தாங்காது... :D:D:D

தாமரை
24-03-2009, 02:57 PM
1. விளையாட்டை விளையாட்டா எடுத்துக்கணும். ஜெயிக்கணும் என்கிற சீரியஸ்னஸ் எதுக்கு?

2. கடைசிப் பந்தில ஹார்ட் அட்டாக் வந்து ரசிகர்கள் அவுட் ஆகி இருக்காங்க. அப்படி இருக்க, கொலைவெறி எதுக்கு?


3. நம்மிடம் மீண்டும் மீண்டும் தோற்பவர்களை மீண்டும் மீண்டும் தோற்கடிச்சா நம்ம வீரத்திற்கு என்ன மரியாதை? நீ அடிச்சது ஒரு புள்ளைபூச்சியை என்று வடிவேலு மாதிரி டயலாக் பேசமாட்ட்ங்களா?

4. ஏற்கனவே டஃப் ஃபைட் குடுக்கறப்ப, அவர் குரங்குன்னு சொன்னார், இவர் முறைத்தார், இவர் கைதட்டினார் அப்படின்னு எக்கச்சக்க கோள்மூட்டல்கள். இதில மத்தவங்க கைஜாலம் காட்ட வாய்ப்ப்பளிக்கலன்னா, வாய்ஜாலம் இன்னும் அதிகமாகிடாதா?

5. இஃப் அண்ட் பட்ஸ்.. அதாவது அப்படி நடந்திருந்தா இப்படி நடந்திருந்தா அப்படிங்கற சுவாரஸ்யமான விவாதங்களுக்கு வழியே இல்லாம போயிட்டா அப்புறம் நாங்க எதைத்தான் வச்சு டைம்பாஸ் பண்ணறது?

6. இந்தியா மட்டும் நியூசிலாந்துடன் கடைசி ஒரு நாள் போட்டியைத் தோக்கலைன்னா இப்படிப்பட்ட வாதங்களை நாம் யோசிச்சுதான் இருப்போமா?

7. நம்மால ஜெயிக்க முடியும் என்கிற நம்பிக்கைதான் வளர்ச்சியின் வேர்.. அந்த நம்பிக்கையை அத்தனை அணிகளுக்கும் இந்திய அணி தருவதால் ஒட்டு மொத்த கிரிக்கெட் விளையாட்டுக்கே நன்மைதானே

8. ஐ.பி.எல் ஆடறதால பணம் கொழிக்குது. ஐ.பி.எல் ஆடறதால இந்திய அணி கூட விளையாடறப்ப காம்ப்ரமைஸ் பண்ணிக்கிறாங்க என்ற அவப்பெயர் வீரர்களுக்கு வராம தடுக்குது இல்லையா? இந்திய அணியினருக்கு மத்தவங்களோட பலவீனம் தெரிஞ்சிட்டது. இனிமே வெளிநாட்டு வீரர்கள் ஐ.பி.எல் -லில் விளையாடக் கூடாது அப்படின்னு யாராவது குரல் கொடுத்தா என்னாவது?

9. பழைய சாதனைகளால் டீமில் அசைக்க முடியாத சக்தி படைத்தவர்களை ஆட்டிப் பார்க்க வழி வேணாமா?

10. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.. அப்புறம் வெற்றி மட்டும் எப்படி நல்ல விஷயமா இருக்க முடியும்?


ஹி ஹி லோஷன் கோவிச்சுக்காதீங்க.. இது ஃபுல் அண்ட் ஃபுல் காமெடிதான். :D :D :D

ஜாக்
25-03-2009, 06:32 AM
ஹி ஹி லோஷன் கோவிச்சுக்காதீங்க.. இது ஃபுல் அண்ட் ஃபுல் காமெடிதான். :D :D :D
போதும் விட்ருங்க இல்லே அழுதுருவேன் அங்வ்வ்வ்வ்:traurig001::traurig001:

பரஞ்சோதி
25-03-2009, 11:05 AM
ஆஹா! தாமரையாரே!

இது எல்லாம் எப்படிங்க, ரூம் போட்டு தான் யோசிப்பீங்களோ?

- பல்லவா பக்கத்திலிருக்கும் பெட்டி கடையிலிருந்து

தாமரை
26-03-2009, 04:07 AM
ஆஹா! தாமரையாரே!

இது எல்லாம் எப்படிங்க, ரூம் போட்டு தான் யோசிப்பீங்களோ?

- பல்லவா பக்கத்திலிருக்கும் பெட்டி கடையிலிருந்து

இன்னுமா பெட்டிக்கடையில நிக்கிறீர்?

தலை ரிடர்ன் டிக்கட் எடுத்துக் கொடுக்கலையா?

ஆனாலும் பெட்டிக் கடையில் கூட இண்டர்நெட் பிரௌஸிங் பண்ணற அளவுக்கு தமிழ்நாடு முன்னேறியதை பார்த்து ரொம்ப சந்தோஷம்

பரம்ஸ்.. நீங்க உள்ள இருக்கீங்களா இல்ல வெளியவா?

அதாவது...

கடைக்கு முன்னால யாருக்காகவோ தேவுடு காக்கறீங்களா இல்லை கடையை நீங்களே ஆரம்பிச்சீட்டீங்களா?

சந்தேகத்துடன்

பரஞ்சோதி
26-03-2009, 04:25 PM
ஹி ஹி

வெளியெ தான் நிற்கிறேன்.

காத்திருந்தது ஒருவருக்காக, கண் கொத்தியாக பார்த்திட்டே காத்திருந்தது பலருக்காக :)

தாமரை
22-04-2009, 07:07 AM
தல ஏன் இந்தத் திரியை இதுவரைப் பார்க்கலைன்னு தெரியலியே.. :D :D :D

mania
23-04-2009, 04:21 AM
தல ஏன் இந்தத் திரியை இதுவரைப் பார்க்கலைன்னு தெரியலியே.. :D :D :D

நீ சொல்லவே இல்லையே....!!!!:rolleyes::D:D:D
அன்புடன்
மணியா
(படித்துவிட்டு வருகிறேன்...)

தாமரை
28-04-2009, 05:30 AM
ஹி ஹி இந்தத் திரியை தோனிக்கு யாரோ படிச்சு சொல்லிட்டாங்க போல இருக்கு..