PDA

View Full Version : வலி

ஐரேனிபுரம் பால்ராசய்யா
14-03-2009, 11:27 AM
கோவையிலிருந்து மும்பை செல்லும் ரயிலுக்காக பிரயாணிகள் பலரும் காத்திருந்தார்கள். எட்டு வயது சிறுமி பூங்கோதை அங்குமிங்கும் ஓடி விளையாடிக்கொண்டிருந்தாள்.

அவள் காலில் அணிந்திருந்த செருப்பு ஒன்று கழண்டு தண்டவாளத்தில் விழ, அவளது தந்தை தாமோதரன் கோபத்தில் அவள் கன்னத்தில் பளாரென்று அறைந்தார். அடிவாங்கியதும் மொத்த சந்தோஷமும் விலகி கண்களில் கண்ணீர் வந்திறங்க சத்தமில்லாமல் அழுதாள் பூங்கோதை.

தாமோதரன் தண்டவாளத்தில் இறங்கி ஒற்றை செருப்பை எடுத்துக்கொடுத்தார். பத்து நிமிடம் கழிந்து ரயில் வண்டி வர அனைவரும் ஏறி அவரவர் இருக்கையில் அமர்ந்தார்கள்.

ரயில் புறப்பட்டதும் தாமோதரன் சட்டைபாக்கெட்டிலிருந்த பயணச்சீட்டை டிக்கெட் பரிசோதகருக்கு காட்ட வெளியே எடுத்த போது. அது கை தவறி ஜென்னல் வழியாக வெளியே பறந்து போனது .சட்டென்று சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தி பயணச்சீட்டை தேடி எடுத்து வந்தார் தாமோதரன்.

" அப்பா நான் செருப்ப தவற விட்டதுக்கு நீங்க என் கன்னத்துல அறைஞ்சீங்க, நீங்க டிக்கெட்ட தவற விட்டதுக்கு உங்கள யார் வந்து கன்னத்துல அறைவாங்க? விரக்தியாய் அவள் கேட்டபோது தமோதரனுக்கு அது நன்றாகவே வலித்தது.

ரங்கராஜன்
14-03-2009, 05:39 PM
ராசய்யா தப்பாக எடுத்துக் கொள்ள வேண்டாம். வர வர உங்கள் குட்டி கதைகள் சுருங்கி, சின்ன குட்டி கதைகளாக மாறி வருகிறது. தாமோதரன் தொலைத்த பயணச்சீட்டு பின்னாடி வரும் அளவுக்கு கதைகள் எழுதாத வரை சந்தோஷம்.

கருவின் அளவில் எதுவும் இல்லை, ஆழத்தில் தான் இருக்கிறது என்று நீங்கள் சொல்வது என் காதுக்கு கேட்கிறது, அது சரியாக படும் பட்சத்தில் ஒரு நாலு அஞ்சு கதைகளை சேர்த்து போட்டால், ஒரு திரி பார்த்த பயன் முழுமை அடையும்.

தப்பாக எடுத்துக் கொள்ள மாட்டீர்கள் என்ற குருட்டு நம்பிக்கையுடன்.......... நன்றி

பா.ராஜேஷ்
16-03-2009, 05:21 AM
குழந்தைகள் செய்யும் சிறிய தவற்றை பெரிது பண்ண கூடாது என்ற கருத்தை மிக அழகாக எடுத்துரைக்கிறது இந்த கதை. பாராட்டுக்கள்.

ஐரேனிபுரம் பால்ராசய்யா
17-03-2009, 04:54 AM
இனிய தக்ஸ் அவர்களுக்கு,

குட்டிக்கதைகள் வரிகள் குறைந்து வரும் ஹைக்கூ கவிதைகளைப்போல, நறுக்கென்று குட்டுவதுபோலவும் எழுத வேண்டும் என்று தான் வரிகளை சுருக்கி எழுதுகிறேன். மற்றபடி சற்றே பெரிரிரிரிரிய கதைகளும் எழுதாமல் இல்லை. உங்களுக்காகவே வேட்டி சட்டை எனும் கதையை பதிந்திருக்கிறேன். படியுங்கள்.
உங்கள் உணர்வுகளுக்கு நன்றி.

ரங்கராஜன்
17-03-2009, 05:14 AM

நன்றி ராசய்யா
விமர்சனங்களை தவறாக எடுத்துக் கொள்ளாமல் பதில் அளித்ததுக்கு நன்றி ராசய்யா. உங்களின் புதிய கதையை படித்து விமர்சனம் எழுதுகிறேன்.

அமரன்
17-03-2009, 08:46 AM
தண்டனைகளில் மிகப்பெரியது மன்னிப்பு. அதற்கு ஈடானது பூங்கோதைகளின் அறைகள். இதய அறைகளில் புகுந்து வியாபித்து உணர்வுகளைத் தூண்டித் துய்மைப்படுத்தும் தண்டனைகளை விட கண்டிப்புகள் எவ்வகையிலும் உயர்ந்தவை இல்லை. அருமை பால் ராசையா.

இளசு
24-03-2009, 08:01 PM
அழகான கதை.. அருமையான வாழ்வியல் தத்துவம்..

பாராட்டுகள் ஐபாரா அவர்களே..

இதையொட்டிய கருவில் பாரதி ஒரு சிறுகதை நம் மன்றில் தந்த நினைவு..

மதுரை மைந்தன்
25-03-2009, 09:41 AM
சிறிய ஆனால் ஆழமான கதை. புளித்த கருக்களைக் கொண்டு வார்த்தை ஜாலங்கள் செய்து கதாசிரியர் என்று உலா வரும் மன்றத்தில் உங்களது எழுத்துக்கள் கருத்து செறிந்தவை. பாராட்டுக்கள்.

ஆதி
25-03-2009, 10:22 AM
சிறிய ஆனால் ஆழமான கதை. புளித்த கருக்களைக் கொண்டு வார்த்தை ஜாலங்கள் செய்து கதாசிரியர் என்று உலா வரும் மன்றத்தில் உங்களது எழுத்துக்கள் கருத்து செறிந்தவை. பாராட்டுக்கள்.

ஒருத்தரை புகழ இன்னொருத்தரை இகழ்வது சரியில்லை மதுரை ஐயா..

புளிக்காத மது வெறும் பழரசம்..

புளிக்காத கள் வெறும் பதனி..

புளித்தால் தானையா போதை.. :)

மதுரை மைந்தன்
25-03-2009, 10:38 AM
ஒருத்தரை புகழ இன்னொருத்தரை இகழ்வது சரியில்லை மதுரை ஐயா..

புளிக்காத மது வெறும் பழரசம்..

புளிக்காத கள் வெறும் பதனி..

புளித்தால் தானையா போதை.. :)

உங்களது பின்னூட்டம் எனக்கு வேடிக்கையாக இருக்கிறது. எனது நல்ல படைப்புக்களை பாராட்ட தவறினாலும் என் வார்த்தைகளில் உள் அர்த்தம் கண்டு பிடித்து குறை கூறுவது உங்கள் வாடிக்கை ஆகி விட்டது. இதனால் தான் மனறத்திலிருந்து விலகுவது என்றிருந்தேன். அறிஞர் போன்ற இனிமையான நண்பர்களின் ஆதரவால் இன்றும் இணைந்திருக்கிறேன்.

ஆதி
25-03-2009, 10:44 AM

:), என்னங்கையா பொசுக்கு பொசுக்கு னு கோப படுறீங்க..

இந்த பதில் போடும் போது யோசிச்சு யோசிச்சுதான் போட்டேன்..

ஏன்னா நீங்க சட் சட்டு கோபபடுறத கவனிச்சிருக்கேன்..

பொத்தாம் பொதுவா ஒரு சொல்லை எறியிரப்போ.. அது அமைதியான குளத்தில் எறியிற கல்லாதான் போய்டும்..

இதற்கு முன் எங்காவது நான் இப்படி உங்க கிட்ட சொல்லிருக்கனா ? யோசிச்சு பாருங்க.. உங்க பின்னூட்டம் பால்ராஸண்ணாவ ஊக்கப் படுத்தும், ஆனா பலர புண்படுத்தும்.. புரிஞ்சுக்கோங்க ஐயா..

எது நான் செய்வது உங்களுக்கு பிடிக்கலையோ, அதை நீங்க மற்றவங்களுக்கு செய்யாமல் இருக்கலாம் இல்லையா.. ?

ஓவியன்
25-03-2009, 11:06 AM
நமக்கு கீழே உள்ளவர்கள் தப்பு செய்கையில் பட்டென பொங்கி விடும் நாம், நாம் தவறு செய்கையிலெல்லாம் அடக்கி வாசித்திடவே விளைகிறோம்...

குறைந்த வரிகளில் நிறைவான கருவினை எடுத்துக் கூறும் உங்களது முயற்சிகளுக்கு என் மனதார்ந்த பாராட்டுக்கள் பால்ராசையா அவர்களே, தொடர்ந்தும் வித்தியாசமான உங்களது முயற்சிகள் இது போன்ற அழகான வெற்றிகளைப் பெறட்டும்...

ஓவியன்
25-03-2009, 11:18 AM
சிறிய ஆனால் ஆழமான கதை. புளித்த கருக்களைக் கொண்டு வார்த்தை ஜாலங்கள் செய்து கதாசிரியர் என்று உலா வரும் மன்றத்தில் உங்களது எழுத்துக்கள் கருத்து செறிந்தவை. பாராட்டுக்கள்.

அன்பான மதுரைமைந்தன்,

உங்கள் வலிகளைக் கூறலாம் தப்பில்லை...

வலிதந்தவர்களுடன் மோதலாம் அதுவும் தப்பில்லை.....

ஆனால் இது போல பொத்தாம் பொதுவாகப் பலரது மனதினைப் புண்படுத்து வகையில் பதிவிடுவது தப்பில்லையா...??

நீங்கள் பெரியவர், புரிந்து கொள்வீர்களென நினைக்கிறேன்...

புரிதலை எதிர்பார்த்து
-ஓவியன்

ஐரேனிபுரம் பால்ராசய்யா
27-03-2009, 11:55 AM
இனிய நண்பர் மதுரைமைந்தன் அவர்களுக்கு,
புளித்த கருக்களைக் கொண்டு வார்த்தை ஜாலங்கள் செய்து கதாசிரியர் என்று உலா வரும் மன்றத்தில் என்ற வார்த்தையை நீங்கள் பதிவிட்டது நிறைய மனங்களை புண்படுத்திவிட்டது.

நீங்கள் கதையில் இருக்கும் நிறை குறைகளை சுட்டிக்காட்டுங்கள். நிறைகளை பாராட்டும்போது இன்னொருவருடன் ஒப்பிடுவது தவறு.

மன்றத்தில் எல்லோரும் எழுத்தாளர்கள் தான். நாம் அனைவரையும் நட்போடும் அன்போடும் அணுகுவோம்.

அமரன்
27-03-2009, 02:31 PM

இராசய்யா!
உங்கள் உள்ளம் அறிந்து என் உள்ளம் குளுந்தது.
உங்கள் படைப்புகள் ஆழமாக ஊடுருவி அழுத்தமாக அடையாளங்களை பதிக்க வல்லன என்பதில் இம்மியளவும் ஐயமில்லை.
அந்த அடையாளங்களை விட உங்கள் இந்தப் பதிவின் அடையாளம் அழுத்தமாக.

நன்றியுடன்

தாமரை
27-03-2009, 04:32 PM
ரயில் புறப்பட்டதும் தாமோதரன் சட்டைபாக்கெட்டிலிருந்த பயணச்சீட்டை டிக்கெட் பரிசோதகருக்கு காட்ட வெளியே எடுத்த போது. அது கை தவறி ஜென்னல் வழியாக வெளியே பறந்து போனது .சட்டென்று சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தி பயணச்சீட்டை தேடி எடுத்து வந்தார் தாமோதரன்.

" அப்பா நான் செருப்ப தவற விட்டதுக்கு நீங்க என் கன்னத்துல அறைஞ்சீங்க, நீங்க டிக்கெட்ட தவற விட்டதுக்கு உங்கள யார் வந்து கன்னத்துல அறைவாங்க? விரக்தியாய் அவள் கேட்டபோது தமோதரனுக்கு அது நன்றாகவே வலித்தது.

ஓடும் ரயிலில் இருந்து தவற விடப்பட்ட டிக்கட்...

செயின் பிடித்திழுத்து ரயிலை நிறுத்தி இறங்கி ஓடி டிக்கட் எடுத்து வந்து மூச்சு வாங்குது ராசய்யா அவர்களே...

மதுரை மைந்தன்
28-03-2009, 12:30 AM
இனிய நண்பர் மதுரைமைந்தன் அவர்களுக்கு,
புளித்த கருக்களைக் கொண்டு வார்த்தை ஜாலங்கள் செய்து கதாசிரியர் என்று உலா வரும் மன்றத்தில் என்ற வார்த்தையை நீங்கள் பதிவிட்டது நிறைய மனங்களை புண்படுத்திவிட்டது.

நீங்கள் கதையில் இருக்கும் நிறை குறைகளை சுட்டிக்காட்டுங்கள். நிறைகளை பாராட்டும்போது இன்னொருவருடன் ஒப்பிடுவது தவறு.

மன்றத்தில் எல்லோரும் எழுத்தாளர்கள் தான். நாம் அனைவரையும் நட்போடும் அன்போடும் அணுகுவோம்.

இனிய நண்பர் ஐரேனிபுரம் பால்ராசய்யா அவர்களுக்கு,

உங்கள் கதையின் கருத்தைப் பாராட்டி எழுதிய சமயத்தில் நான் கூறிய வார்த்தைகள் யார் மனதையும் புண் படுத்தும் நோக்கத்துடன் அல்ல. அப்படி யாராவது புண் பட்டிருப்பார்களேயானால் அவர்களிடம் நான் மன்னிப்பு கோருகிறேன்.