PDA

View Full Version : சிறை மீட்டிடு...



இன்பக்கவி
11-03-2009, 03:04 PM
http://www.tamilmantram.com/vb/picture.php?albumid=36&pictureid=200

சிறை மீட்டிடு...

நட்பு
சிறையில் சிக்கி
தனிமையில் தவிக்கின்றேன்...
நான்....

நான் நேசிக்கும்
அனைவரும்-என்னை
நேசிக்க வேண்டும்
என்று-எதிர்பார்ப்பவள்...
நான்...
அந்த எதிர்பார்ப்பின்...
பலம்....குறையும் போது...
என் மனதின்.
பாரம்...அதிகரிக்கிறது....
என்ன செய்வேன் தோழி!!!!!!

நட்புக்குள்
பொய் இல்லை...
பொய் இருந்தால்...
அது நட்பே...இல்லை....

விட்டுக் கொடுப்பது தான்
நட்பாம்....
நானும் விட்டுக் கொடுத்தேன்...
நட்பையே....
நட்புக்காக...

என்னை சிறை மீட்டிடு...
தோழி....
உன்னுடைய...........
உண்மையான...நட்பால்......

கவிதா123

சசிதரன்
11-03-2009, 03:08 PM
நல்ல வரிகள் கவிதா அவர்களே... நட்பில் பொய்கள் மட்டுமல்ல... எதிர்பார்ப்புகளும் கூட இருக்க கூடாதல்லவா... விரைவில் உங்கள் நட்பு பலப்பட வாழ்த்துக்கள்...:)

samuthraselvam
12-03-2009, 04:26 AM
நட்பைப் பற்றிய கவிதை அருமை கவி..


நட்புக்குள்
பொய் இல்லை...
பொய் இருந்தால்...
அது நட்பே...இல்லை....

விட்டுக் கொடுப்பது தான்
நட்பாம்....
நானும் விட்டுக் கொடுத்தேன்...
நட்பையே....
நட்புக்காக...

இந்த வரிகள் நன்றாக உள்ளது..

சுகந்தப்ரீதன்
12-03-2009, 05:41 AM
அந்த எதிர்பார்ப்பின்...
பலம்....குறையும் போது...
என் மனதின்.
பாரம்...அதிகரிக்கிறது....
என்ன செய்வேன் தோழி!!!!!! நீங்களே பதிலை சொல்லிட்டு கடைசியில கேள்வியைக்கேட்டா எப்படிங்க..??:mini023:

வழமையாக எதிர்பார்ப்புகள் கூடும்போது ஏமாற்றங்களும் தானாகவே கூடிவிடும்... இதற்கு ஒரேவழி.. எதிர்பார்ப்புகளை குறைத்துக்கொண்டால் ஏமாற்றங்களை தவிர்த்துக்கொள்ளலாம் என்பதுதான்..!! (தாமரை அண்ணாவுக்கு நன்றி)

வாழ்த்துக்கள் கவிதா123 கவிதைக்கும் சிறைமீள்வதற்க்கும்...!!

வசீகரன்
12-03-2009, 07:36 AM
http://www.tamilmantram.com/vb/picture.php?albumid=36&pictureid=200

விட்டுக் கொடுப்பது தான்
நட்பாம்....
நானும் விட்டுக் கொடுத்தேன்...
நட்பையே....
நட்புக்காக...

என்னை சிறை மீட்டிடு...
தோழி....
உன்னுடைய...........
உண்மையான...நட்பால்......


என் கருத்து..... உண்மை நட்பென்பது ஒருவர் மட்டும் உணர்த்துவது அல்ல...
இரு மனங்களில் சங்கமிக்கும் ஒத்த கருத்துக்களும் விட்டு கொடுத்தலும்.... புரிதலிலும்
உள்ளது சகோதரி....
அதிக உணர்வு மிகுதியில் எழுதி இருக்கிறீர்கள்.........
நல்ல கவிதை கவிதா...... தொடர்ந்து எழுதுங்கள்....!!!

ஆதி
12-03-2009, 10:51 AM
கவிதை அழகு கவிதா அவர்களே.. வாழ்த்துக்கள்..

நட்பு பற்றி வள்ளுவன் சொல்வதையும் பாருங்கள்..

புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
நட்பாங் கிழமை தரும்.

சிவா.ஜி
12-03-2009, 05:06 PM
நட்பைப்போல ஆறுதல் தருவது எதுவுமில்லை. அதேபோல அந்த நட்பு துயரத்தையும் தரும். அதிக எதிர்பார்ர்பில் சுயநலம் மிகுந்துவிடுகிறது. அங்கு நட்புகூட தோற்றுவிடுகிறது. எதிர்பார்ப்பில்லா நட்புதான் என்றும் நிலைக்கும்.

நல்ல வரிகள் கவிதா. வாழ்த்துகள்.

ஷீ-நிசி
13-03-2009, 12:40 AM
நேசிக்கும் நட்பது விலகினால்... நடப்பது எல்லாமே எதிராய்த்தான் தோன்றும்..

விட்டுக் கொடுப்பது தான்
நட்பாம்....
நானும் விட்டுக் கொடுத்தேன்...
நட்பையே....
நட்புக்காக...

ரொம்ப நல்லாருக்கு இந்த வரிகள்!

வாழ்த்துக்கள் கவிதா!

ஆதவா
13-03-2009, 04:48 PM
நட்பை நட்பால் விட்டுத்தர இயலாது... ஏனெனில் விட்டுத் தந்துவிட்ட இரு உள்ளங்களின் உறவே நட்பு!!!

வாழ்த்துக்கள் கவிதா ஒன் டூ த்ரீ

அறிஞர்
20-03-2009, 08:37 PM
அதிக எதிர்பார்ப்புகள்
ஏமாற்றத்தை கொண்டுவரும்..
--------
உண்மையான நட்பில்....
புரிந்துக்கொள்தலும்,
விட்டுக்கொடுத்தலும்...
அதிகம் இருக்கும்..
நட்பு உண்மையாக இருந்தால்
விடுதலையும் நிச்சயம் உண்டு