PDA

View Full Version : தொடரும் வெற்றி - இனி பொன்டிங்கின் இளமை அணியின் காலம்loshan
11-03-2009, 12:26 PM
நேற்றைய தென் ஆபிரிக்காவுக்கு எதிரான டேர்பன் டெஸ்ட் வெற்றியுடன் தரப்படுத்தலில் மீண்டும் முதலிடத்துக்கு வந்திருக்கிறது அவுஸ்திரேலியா.நேற்றைய டேர்பன் வெற்றி இருவாரங்களுக்கு முதல் எந்தவொரு அவுஸ்திரேலிய வீரரும் கூட எதிர்பார்த்திருக்கமாட்டார்கள்.

சொந்த மண்ணில் வைத்து அவமானகரமாகத் தொடரை இழந்த பிறகு புதிதாகக் கட்டியெழுப்பப்பட்டு புது இரத்தம் பாய்ச்சப்பட்ட அவுஸ்திரேலியா அணி பெற்ற 3வது தொடர்ச்சியான டெஸ்ட் வெற்றி இது!


நீண்டகாலம் பெருமையுடன் தம் வசம் வைத்திருந்த ICC தரப்படுத்தல் முதலாமிடம் என்ற கிரீடத்தையும் மீண்டும் தக்க வைத்திருப்பதோடு மத்தியூ ஹெய்டன்,கிளென் மக்கிராத்,அன்ட்ரு சைமன்ஸ்,பிரெட் லீ ஆகியோருக்கான தகுந்த,புதிய,இளைய,நீண்டகால முதலீடுகளாக ஃபில் ஹியூஸ்,பிட்டர் சிடில்,மார்க்கஸ் நோர்த்,பென் ஹில்ஃபென்ஹோஸ் என்று நான்கு பேரைத் தயார் செய்துவிட்டார்கள்.

தென்னாபிரிக்காவை அவர்களது சொந்த மண்ணிலேயே முதல் இரு டெஸ்ட் போட்டிகளிலும் துவைத்து கிழித்து தொங்கி விட்டுவிட்டார்கள்.

அதுவும் டேர்பன் டெஸ்ட் போட்டிக்காக தென்னாபிரிக்கா தயார் செய்து வைத்த வேகமான பவுன்சி (Bouncy) ஆடுகளம் அவர்களுக்கே குழி பறித்து தான் வேதனை! 'சொந்த செலவில்' சூனியம் வைப்பது போல வேகமான ஆடுகளத்தைப் பயன்படுத்தி அவுஸ்திரேலியாவின் இளம்புயல்கள் முதலாம் இனிங்சில் தென்னாபிரிக்காவை 138க்குள் சுருட்டிவிட்டார்கள்.

போதாக்குறைக்கு தலைவர் ஸ்மித்தின் கையை மீண்டும் முறித்ததோடு மிச்செல் ஜோன்சன் ஜக்ஸ் கலீஸின் தாடையையும் பெயர்த்தும் பயமுறுத்திவிட்டார்.

ஸ்மித்தினால் மூன்றாம் டெஸ்ட் போட்டியிலும் விளையாட முடியாதுள்ளதால் மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் தோற்று 'WHITE WASH' அவமானத்தைத் தவிர்க்க இறுதி டெஸ்ட் போட்டிக்கு மூன்று மாற்றங்களை நாடவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது தென்னாபிரிக்கா.

அதில் முக்கியமாக தலைவராக கடமையாற்றவுள்ள ஆஷ்வெல் ப்ரின்ஸ்.ஜே.பி.டுமினியின் வரவினால் வெளியேயிருந்த பிரின்ஸ் நேரடியாகத் தலைமைப் பதவியுடன் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர் என்ற மேலதிக சுமையுடன் குதிக்கறார் பாவம்!

அவுஸ்திரேலிய புதுமுக ஆரம்பத் துடுப்பாட்டவீரர் பிலிப் ஹியூஸ் பற்றி நான் முன்னைய பதிவில் இளமையின் வெற்றி - ஆஸ்திரேலியா (http://loshan-loshan.blogspot.com/2009/03/blog-post_04.html)
சொன்னபோது too early என்று சொன்னவர்கள் இந்த டெஸ்டில் அவரது இரு சதங்களையும் பார்த்திருக்கவேண்டும்.

வருங்கால நட்சத்திரம் ஒன்றின் உதயம்! இருபது வயதிலேயே தனது இரண்டாவது டெஸ்டிலேயே இரு இனிங்சிலும் சதங்கள்! இன்னும் தொடரும் இவர் நீண்டபயணம்!

http://4.bp.blogspot.com/_NWU1yvNYa2Y/Sbeokkk861I/AAAAAAAABn8/AlE5W1IzmCU/s320/hughes.jpg

இரட்டை சதம் பெற்ற போட்டியின் நாயகன் ஹியூஸ்


உலகில் பெரும்பான்மை கிரிக்கெட் ரசிகர்கள் (குறிப்பாக தமிழ் பேசுவோர்) அவுஸ்திரேலிய அணியைப் பெரும்பாலும் எதிர்த்தபோதும் (கரித்துக் கொட்டியபோதும்) அலன் போர்டரின் காலத்திலிருந்து நான் அவுஸ்திரேலிய அணியை ரசிப்பவன்!

அவர்களது அராஜகப் போக்கும் கர்வமும் சிலநேரம் எரிச்சல் தந்தாலும் கூட அவர்களது ஆவேசம் - தொழில்சார் அணுகுதுறை (professional approach) வீழ்ச்சியிலிருந்து மீண்டெழும் விதம் ஆகியன எனக்கு எப்போதும் ரசிக்கத் தகுந்தனவாகவும் தனிப்பட்ட ரீதியில் உந்துதல் தருவதாகவும் அமைவதுண்டு.

தென்னாபிரிக்காவில் பெறப்பட்ட இந்த இரு டெஸ்ட் வெற்றிகளுமே பல முக்கிய விஷயங்களை உணர்த்துகின்றன.

அவுஸ்திரேலியாவின் பிராந்திய ரீதியிலான பலமான கிரிக்கெட் கட்டமைப்பு.

இளைய வீரர்கள் திறமையோடும் சாதிக்கும் தாகத்தோடும் காத்திருக்கிறார்கள்.

தென்னாபிரிக்கா அவுஸ்திரேலியாவில் வைத்துத் தொடரை வென்றபின் அளவு கடந்த தன்னம்பிக்கையோடோ அல்லது போதுமான தயார்படுத்தல்களில்லாமலோ இருந்திருக்கிறது.

பெரிதாக அறியப்பட்டிருக்காத அவுஸ்திரேலிய இளம்வீரர்கள்.ஆஸ்திரேலியாவின் ரகசிய ஆயுதங்களாக இந்தத் தொடரை வென்று கொடுத்துள்ளார்கள்.

அதுவும் ஆஸ்திரேலிய அணி இந்தத் தொடரின் இரு டெஸ்ட் போட்டிகளையுமே ஒரு முழுநேர சுழல் பந்து வீச்சாளர் இல்லாமலேயே வென்றிருக்கிறது..

சீனியர்களின் பங்களிப்பு பெரியளவு இல்லாமலேயே இந்த இரு வெற்றிகளும் பெறப்பட்டுள்ளமை உண்மையில் பெரிய விஷயமே..

அடுத்து வரும் ஆஷஸ் தொடருக்கு தற்போது காயமடைந்துள்ள சீனியர்கள் (லீ,கிளார்க், சைமண்ட்ஸ்,டெய்ட்) மீண்டும் அணிக்குள் திரும்ப வேண்டுமானால் ரொம்பவே சிரமப்பட வேண்டி இருக்கும்..

இவ்வளவு நாளும் ஸ்டீவ் வோ தந்த அணியைப் பயன்படுத்தி வெற்றிகண்டு வந்த பொன்டிங்,சிரேஷ்ட வீரர்கள் எல்லோரது ஓய்வுக்கும் பிறகு கடந்த ஒரு வருடத்துள் பத்து புதிய வீரர்களுக்கு ஆஸ்திரேலியா டெஸ்ட் அறிமுகம் கொடுத்துள்ளதன் மூலம், தனது இளமை அணியின் காலத்தை ஆரம்பித்துள்ளார்.

கடந்த ஆஸ்திரேலிய அணி பற்றிய பதிவில் சொன்னது போலவே மீண்டும் சொல்கிறேன்..
இளமையின் வெற்றி - ஆஸ்திரேலியா (http://loshan-loshan.blogspot.com/2009/03/blog-post_04.html)

இளமையின் வேகத்தோடு வெற்றியை ருசிபார்க்கப் புறப்பட்டுள்ள அவுஸ்திரேலியாவின் வெற்றி அலை அடுத்த இரு டெஸ்ட் போட்டிகளிலும் தொடரும் என்றே எதிர்பார்க்கிறேன்.

அனேகமாக மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் தென் ஆபிரிக்கா அடி வாங்கும்.. அவ்வளவு தூரம் பொறி கலங்கிப் போயுள்ளது..

இனிவரும் காலம் பொண்டிங்கின் இளமை அணியின் காலம்..

http://loshan-loshan.blogspot.com/2009/03/blog-post_8909.html

ஆதவா
11-03-2009, 01:18 PM
டெஸ்ட் வெற்றியுடன் தரப்படுத்தலில் மீண்டும் முதலிடத்துக்கு வந்திருக்கிறது அவுஸ்திரேலியா.

அது ஏற்கனவே முதலிடத்தில் தான் இருக்கிறது நண்பரே!

ஒருநாள் போட்டிகளில் தான் இரண்டாம் இடம்...

தங்கள் கட்டுரை இனிது!