PDA

View Full Version : கருணா - இணை அமைச்சர்அறிஞர்
10-03-2009, 06:22 PM
இலங்கையில் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து 2004-ம் ஆண்டு பிரிந்து சென்ற கருணா, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் என்ற பெயரில் புதிய இயக்கம் தொடங்கினார். அதிபர் ராஜபக்சேவுக்கு ஆதரவாக செயல்பட்டார். சமீபத்தில் எம்.பி.யாக நியமிக்கப்பட்டார். தனது ஆதரவாளர்கள் 2 ஆயிரம் பேருடன் ராஜபக்சேவை நேற்று சந்தித்த கருணா, அவரது ஸ்ரீலங்கா சுதந்திரா கட்சியில் இணைந்தார். இதைத் தொடர்ந்து இலங்கையின் தேசிய ஒருமைப்பாட்டுத் துறை இணை அமைச்சராக கருணா நியமிக்கப்பட்டார். கொழும்பில் நடந்த பதவியேற்பு விழாவில் கருணாவுக்கு கைகுலுக்கி வாழ்த்து தெரிவிக்கிறார் ராஜபக்சே.

நன்றி-தினகரன்

அறிஞர்
10-03-2009, 06:24 PM
இது ஜீரணிக்க இயலாத செய்தி...

வளர்த்த கடா நெஞ்சில் பாய்வது போல் இருக்கிறது.

அக்னி
10-03-2009, 06:48 PM
அந்த இரண்டாயிரம் பேர்களும்,
மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களிலிருந்து,
வலுக்கட்டாயமாக அழைத்துவரப்பட்டதாகத் தகவல்கள் உலாவுகின்றன.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து,
கருணா விலக்கப்பட்டபின்னர்,
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் என்னும் அமைப்பை ஸ்தாபித்தார்.

அந்த அமைப்பும்,
கருணா தலைமையில் ஒரு குழுவாகவும்,
பிள்ளையான் தலைமையில் இன்னுமொரு குழுவாகவும்,
பிளவுபட்டது.

பிரதேசவாதம் கூறிப் விடுதலைப்போராட்டத்தைக் கொச்சைப்படுத்திப் பிரிந்தவர்கள்,
தமக்குள்ளாவது ஒற்றுமையாக இருந்திருக்கலாம்.
பதவி வெறியும், பணத்தாசையும் இவர்களுக்குள்ளும் பிளவை ஏற்படுத்தியது.

உண்மையானவர்களாக இருந்திருந்தால், தென் தமிழீழ மக்களின் நலனைக் கருத்திற் கொண்டவர்களாக இருந்திருந்தால்,
அவர்களிடையே ஏன் இந்தப் பிளவு..?

இந்தக் கேள்வி,
மக்கள் மத்தியில், இவர்களின் முகமூடியைக் கிழிக்கின்றது.

praveen
11-03-2009, 05:01 AM
பேய் ஆட்சி செய்யும் போது தூரோகிகளுக்கு மந்திரி பதவி கிடைப்பதில் ஆச்சர்யம் என்ன?.

aren
11-03-2009, 05:18 AM
பணம் பாதாளம்வரை பாயும் என்பார்கள். அதுதானா இது?

அன்புரசிகன்
11-03-2009, 05:37 AM
புலிகள் இருக்கும் வரை தான் பிள்ளையான் மற்றும் கருணாவிற்கு மதிப்பு.... அப்புறம் கடவாவை வாங்கிய உரிமையாளரே கறியாக்கி ஏப்பம் விட்டிடுவார். ஆகவே இரண்டும் நடக்காது. புலிகளை அழிப்பது .......................:rolleyes:

தற்போது பல வெற்றிச்செய்திகள் புலிகளால் மறைக்கப்படுகின்றன. கூட்டிக்கழித்து பார்த்தால் எல்லாம் சரியாக இருக்கும்...

ஓவியன்
11-03-2009, 06:37 AM
ஜனநாயகத்திற்கு என் வாழ்த்துக்களும்....

அமரன்
11-03-2009, 08:09 AM
கருணாவுக்கு வாழ்த்தும் பாராட்டும்- தான் நம்பியவர்கள் ஏமாற்றினாலும் தன்னை நம்பிய சிலருக்காக காசு காய்க்கும் மந்தி(ரி) மரத்தில் ஏறியமைக்கு.

தூயவன்
11-03-2009, 09:29 AM
இந்த கண்றாவியை நானும் TV யில் பார்த்தேன்.

அய்யா
11-03-2009, 03:11 PM
உண்மையானவர்களாக இருந்திருந்தால், தென் தமிழீழ மக்களின் நலனைக் கருத்திற் கொண்டவர்களாக இருந்திருந்தால்,
அவர்களிடையே ஏன் இந்தப் பிளவு..?

இந்தக் கேள்வி,
மக்கள் மத்தியில், இவர்களின் முகமூடியைக் கிழிக்கின்றது.

பொருள் பொதிந்த கேள்வி!

:aetsch013::icon_b::aetsch013:

செழியன்
14-03-2009, 12:52 PM
துரோகிகளுக்கு பட்டமளிப்பு விழா இதை தொலைக்காட்சியில் பார்த்தப்பின் மனசெல்லாம் வலியாகவே இருக்கின்றது.

தூயவன்
14-03-2009, 02:41 PM
இன்று பார்த்திர்களா தனது பாடசாலை வாழ்கை பற்றி பேட்டி.
தனக்கு கலை மேல் ஆர்வமாம்.
தனக்கு பிடித்த நடிகர் கமலாம்.
பிடித்த படம் வறுமையின் நிறம் சிவப்பாம்.
மைக் கிடைச்சா எப்படி எல்லாம் அவுடு விடுறாங்கப்பா

leomohan
15-03-2009, 06:25 AM
கொள்கைகள் ஒத்துவராவிட்டால் அணிகள் மாறுவதில் தவறில்லை என்பதே என் கருத்து. மேலும் உலகமே சுயநலமாக மாறிவரும் போது பொதுவாழ்கையில் ஈடுபடுவர்களிடன் சுயநலமற்ற நிலைபாட்டை எதிர்பார்ப்பது வீண்.

தூயவன்
15-03-2009, 11:20 AM
கொள்கைகள் ஒத்துவராவிட்டால் அணிகள் மாறுவதில் தவறில்லை என்பதே என் கருத்து. மேலும் உலகமே சுயநலமாக மாறிவரும் போது பொதுவாழ்கையில் ஈடுபடுவர்களிடன் சுயநலமற்ற நிலைபாட்டை எதிர்பார்ப்பது வீண்.

இங்கு யாரை பொதுவாழ்கையில் ஈடுபடுவர்கள் என்று கூறுகிறிர்கள் ?:confused:

அறிஞர்
16-03-2009, 01:36 PM
இங்கு யாரை பொதுவாழ்கையில் ஈடுபடுவர்கள் என்று கூறுகிறிர்கள் ?:confused:
சுயநலத்திற்காக பொதுவாழ்க்கையில் ஈடுபடுபவர்களை/ஈடுபடுவது போல் நடிப்பவர்களை பற்றி கூறுகிறார்...

பரஞ்சோதி
16-03-2009, 02:28 PM
கருணாவின் பெயர் எட்டப்பர்களின் வரிசையில் இடம் பெறும்.