PDA

View Full Version : முதுகு தகவல்



mgandhi
10-03-2009, 06:19 PM
* இளைய தலைமுறையினருக்கான முதுகவலிக்கு அவர்கள் லைஃப் ஸ்டைல் முதற்கொண்டு பல்வேறு காரணங்கள் இருக்கும். முதியோர்களுக்கான முதுகுவலிக்குப் பெரும்பாலும் எலும்பு தேய்மானம் முக்கியக் காரணம். பெண்களுக்க கால்சியம் சத்துக் குறைபாடு காரணமாக முதுகுவலி அவஸ்தைப்படுத்தலாம்.



* டி.பி. நோய் காரணமாகக்கூட முதுகு வலிக்கலாம். அதனால் வலி கண்டவுடனேயே எலும்பு மருத்துவரை ஆலோசிப்பது நலம். சிக்கலான முதுகுவலிகளை சில சமயம் பொது மருத்துவர்களால் கண்டு கொள்ள முடியாமல் போகலாம்.


* காரணம் கண்டு கொண்டு சிகிச்சை ஆரம்பித்தாலும், அதுவரையிலான எலும்புகளின் தேய்மானத்தைக் குறைக்க முடியாது. ஆனால் வலியைக் குறைக்க முடியும்.


* முதுகை நேராக வைத்திருப்பதற்கு பெல்ட் அணிந்து கொள்ளச் சொன்னால் கௌரவம் பார்க்காமல் கட்டிக் கொள்ளுங்கள். சிலர் சிரிப்பார்.... சிலர் நகைப்பார் என்று தயங்கினால் வலியால் நீங்கள் அழ வேண்டியிருக்கும்.


* குஷன் நாற்காலி, குசன் சோபா, குஷன் மெத்தை எல்லாம் குஷிதான். ஆனால் முதுகுவலிக்கு அவைதான் காரணம் என்றால் குஷன் வேண்வே வேண்டாம்.


* முதுகுவலி சிகிச்சைகளுக்குப் பிறகு உடலை மிகவும் வருத்திக் கொள்ளக்கூடாது. குனிந்து நிமிரும் வேலையை ஒதுக்கி வைப்பது உத்தமம். முதுகுக்கு சிக்கல் இல்லாத வகையில் லைஃப் ஸ்டைலை மாற்றிக் கொள்ள வேண்டும்.


* இளைஞர், இளைஞிகளின் முதுகுவலிகளுக்கு அலுவலகத்தில் அமரும் டூ வீலரில் பயணிக்கும் முறைதான் பெரும்பாலும் காரணமாக இருக்கிறது. கமப்யூட்டர் பணிகளில் இருப்பவர்கள், ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறையேனும் ஐந்து நிமிடங்கள் எழுந்து சின்ன வாக்கிங் போகலாம்.


* இரு சக்கர வாகனத்தில் ஓயாத பயணம் காரணமாக, முதுகு எலும்புகளுக்கு இடையே உள்ள டிஸ்க் விலகுவற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். அதுவும் மேடு பள்ளங்களில் தடாலடியாக ஓட்டுவது முதுகைப் பதம்பார்க்கும் சமாசாரம்.


* முதுகுவலியை மாத்திரைகள் மூலமே குணப்படுத்தப் பார்ப்பார்கள். அப்படியும் வலி குறையவில்லை என்றால் முதுகுத்தண்டில் ஊசி மூலம் மருந்தைச் செலுத்தி குணமாக்க முயல்வார்கள். முதியவர்களுக்கு முடிந்த வரை அறுவை சிகிச்சை மேற்கொள்வதைத் தவிர்த்து விடுவார்கள்.

அய்யா
11-03-2009, 03:06 PM
பயனுள்ள தகவல் களஞ்சியம்!

பகிர்வுக்கு நன்றியண்ணா!!

samuthraselvam
12-03-2009, 04:22 AM
முதுவலியால் அவஸ்தைப் படுவோர்களுக்கு நல்ல ஆலோசனைகள் வழங்கிய காந்திக்கு நன்றி & வாழ்த்துக்கள்...!

ஜாக்
24-03-2009, 11:15 AM
மிக உபயோகாம தகவல்

மேலும் என்னை போல் கணினியில் தொடர்ந்து வேலை பார்க்கும் நண்பர்களுக்கு இந்த டிப்ஸ் உபயோகமாக இருக்கும்

பகிந்து கொண்டமைக்கு நன்றிகள் நண்பரே

xavier_raja
30-03-2009, 06:33 AM
இன்றைய காலகட்டத்தில் பாஸ்ட் பூத் சாப்பிட்டு நாம் வேகமாக வாழ்கையை முடித்து கொள்ளுகிறோம். அதுவும் மென்பொருள் துறையில் வேலை செய்பவர்களை பற்றி கேட்கவேண்டாம். இதை எல்லாம் தவிர்க்க வேண்டும் என்றால் யோகா கூட ஓர் மிக சிறந்த வழி.

தகவலுக்கு நன்றி நண்பரே.

மன்மதன்
30-03-2009, 02:35 PM
முதுகு வலி என்பது பரவலாக காணப்படுகிறது.

அலர்ட்டா இருக்கணும். இல்லையென்றால் அவஸ்தைதான்.

பகிர்தலுக்கு நன்றி காந்தி...

anna
05-04-2009, 10:09 AM
* * முதுகுவலியை மாத்திரைகள் மூலமே குணப்படுத்தப் பார்ப்பார்கள். அப்படியும் வலி குறையவில்லை என்றால் முதுகுத்தண்டில் ஊசி மூலம் மருந்தைச் செலுத்தி குணமாக்க முயல்வார்கள். முதியவர்களுக்கு முடிந்த வரை அறுவை சிகிச்சை மேற்கொள்வதைத் தவிர்த்து விடுவார்கள்.


அட என்ன சார்? நமது முதல்வருக்கு 86 வயது ஆகி விட்டது. போன மாசம் தான் முதுகு எலும்பில் அறுவை சிகிச்சை செய்தனர். சும்மா ஜம்முனு சக்க்ர நாற்காலியிலேயே எல்லா நிகழ்ச்சிலேயும் கலந்து கொள்கிறார். மீண்டும் முன்போலவே வழக்கமான வேலை செய்ய ஆரம்பித்து விட்டார். இது தான் மெடிக்கல் உலகின் மிராக்கிள் என்பதா?

விகடன்
05-04-2009, 10:28 AM
இப்பவும் சக்கர நாற்காலியில்த்தானே...

anna
06-04-2009, 12:43 PM
இப்பவும் சக்கர நாற்காலியில்த்தானே...

இப்பவும் சக்கர நாற்காலி தானே என்றாலும், தற்போது இடுப்பில் போடப்பட்டுள்ள பெல்டை கழட்டிவிட்டனர். நேற்று பார்த்தேன் ஷோபாவில உட்காந்து விட்டார். இன்னும் ஓரிரு நாட்களில் பழைய மாதிரி கையை பிடித்துக்கொண்டே நடந்து விடுவார்.அவருடைய உடலுக்குத்தான் வயசாகிவிட்டதே தவிர் அவரது மனம் இன்னும் இளமையாகத்தான் உள்ளது.

Tamilmagal
08-05-2009, 02:52 PM
பயனுள்ள தகவல் பகிர்தலுக்கு நன்றி. மேலும் இதுபோன்ற தகவல்களைத்தர வாழ்த்துக்கள்.