PDA

View Full Version : சுகந்தனூர் (சிறுகதை-32) இறுதி பாகம்.ரங்கராஜன்
09-03-2009, 03:27 PM
சுகந்தனூர்

சுகந்தனூர் கடலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம். இது ஒரு சபிக்கப்பட்ட கிராமாம். காரணம்??????? அதை சொல்லி விட்டால் இந்த வரியுடன் கதை முடிந்து விடும். அதனால் அதை கடைசியில் சொல்கிறேன். சரி சுகந்தனூரை பற்றி கொஞ்சம் பார்ப்போம். மிகப்பழமையான ஒரு ஊர், 4 ஆம் நூற்றாண்டில் இருந்து 10 ஆம் நூற்றாண்டு வரை மக்கள் செழிப்புடன் வாழ்ந்து வந்தார்கள். அதன் பின் ஏற்பட்ட இயற்கை சீற்றத்தில் இந்த ஊரையும் சேர்த்து பல ஊர்கள் கடலுக்குள் சென்றுவிட்டது, இல்லை இல்லை கடல் கரை தாண்டிவிட்டது. (அப்பாடா தாமரை அண்ணாவிடம் இருந்து தப்பித்தேன்). அப்புறம் திரும்பவும் 13 ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட இயற்கை சீற்றத்தால் கடல் உள்வாங்கி தேவனாம்பட்டினம் என்ற கிராமமும், சுகந்தனூர் என்ற கிராமமும் வெளியில் தெரிந்தது. அதன் பின் இந்த நூற்றாண்டு வரை அந்த கிராமம் செழிப்பான மர்மங்களுடன் இருக்கிறது. கடலில் இருந்து இந்த கிராமம் மீண்ட பிறகு நடந்த எதோ ஒரு நிகழ்ச்சியால் கிராமமே சாபத்திற்கு உள்ளாகியுள்ளது. என்ன சம்பவம் அது??

ராம்கோ தன்னுடைய பெரிய மூட்டை முடிச்சிகளுடன் அந்த சுகந்தனூர் என்னும் கடல்கரை கிராமத்திற்கு காரில் பயணமானான். உப்பு காற்று பூமி, எப்பொழுதும் காற்றில் ஈரப்பசையும், கவுச்சு வாடையும் சேர்ந்தே வீசும். கார் ஊருக்குள் நுழைந்தது, எங்கு பார்த்தாலும்
வயதானவர்கள். கைகளில் தடியுடன் நடக்க முடியாமல் நடந்துக் கொண்டும், மூலையில் சாய்ந்துக் கொண்டும், மண்னை விட அழுக்கான துணிகளை உடுத்திக் கொண்டும், உடலே நடுங்கிக் கொண்டும், உயிர் இருக்கிறதா? இல்லை பிணமா? என்று
எண்ணும் விதமாக சிலரும் சலனம் இல்லாமல் படுத்து இருந்தனர். ராம்கோ இதை அனைத்தையும் ஆச்சர்யமாக பார்த்தான். டிரைவரிடம் இதை பற்றி கேட்டான்.

“சார் இந்த ஊருக்கு வெளியாட்கள் .........” என்று டிரைவர் சொல்லி முடிப்பதற்குள்.

“வெளியாட்கள் யாராவது வந்தா செத்துடுவாங்க, அதானே........ஏய் கமான் மேன்” என்று சலித்துக் கொண்டு சிரித்தான் ராம்கோ.

“ச்சே இல்ல சார், இந்த ஊருக்கு வரும் வெளியூர் ஆட்கள் எல்லாரையும் நான் தான் சார் இங்க கூட்டினு வருவேன், எல்லாரும் இங்க வந்ததும் என்னை கேட்கற முதல் கேள்வி இது தான், ஏன் இப்படி இருக்கு இந்த கிராமம்”

“நீ என்ன பதில் சொல்லுவாய்”

“கடல் கிராமம்னா இப்படி தான் இருக்கும்னு சொல்வேன், உங்கள மாதிரி அமெரிக்காவில் இருக்கறவங்களுக்கு இது புரியாதுனு சொல்வேன்”

“நான் லண்டன்”

“எங்களுக்கு வெளிநாடு ன்னாளே அமெரிக்காதான்” என்றான் டிரைவர். ராம்கோவும் சிரித்துக் கொண்டு காரின் கண்ணாடி வழியாக கடலையே பார்த்துக் கொண்டு வந்தான். கார் கடலை ஒட்டிய அந்த வீட்டை அடைந்தது. வீட்டுக்கு வெளியே ஒரு 4 வயது குழந்தை மணலில் விளையாடிக் கொண்டு இருந்தது, ராம்கோ வீட்டு வாசலில் போய் கதவை தட்டினான். உள்ளே இருந்து ஒரு 6 வயது குட்டி பெண் ஓடிவந்தாள்.

“யாரு வேணும் உங்களுக்கு”

“நான் ராம்கோ அமெரிக்காவில் இரு..... ச்சே, சாரி லண்டனில் இருந்து வருகிறேன். நீலகண்ட சாஸ்திரிகள் இருக்காரா?”

“தாத்தா உன்ன பார்க்க யாரோ வந்து இருக்கா” என்ற அந்த பாவாடை சட்டை குட்டி தெருவில் விளையாட பறந்தது. உள்ளே இருந்து ஒரு வயதான முதியவர் ஒரு கையால் இடுப்பை பிடித்துக் கொண்டு
மறுக்கையால் தடியை பிடித்துக் கொண்டு

“ஆரு, ஆரு வந்துருக்கேள் என்னை பாக்க” என்று அங்கு போடப்பட்டு இருந்த நாற்காலியில் வந்து அமர்ந்தார், 100 வயசு இருக்கும், முகம் முழுவதும் கையில் இருக்கும் ரேகை போல இருந்தது.

“நான் லண்டனில் இருந்து வரேன் தாத்தா, உங்களை பார்க்க தான் வந்தேன்” என்றான் சத்தமாக.

“உன் பேரு என்னடா அம்பி” என்றார் கையை நெற்றியில் வைத்து கண்களை சுருக்கியபடி.

“ராம்கோ தாத்தா, உள்ளே வரலாமா?” என்று காலை உள்ளே வைப்பதற்குள்,

“உன் முழுப் பேரு என்னடா” என்றார் கோபமாக.

திடுக்கிட்டவன் “ராம்கோ தான், ஏன்” என்றான்.

“உன் அப்பா பெயர் என்ன” என்றார் கண்களை சுருக்கியபடியே.

“மீனாட்சி ஐயர்”

“நம்ம பையன் தானா, வா உள்ளே” பெரியவர் முகத்தில் சற்று கரிசனம் தென்பட்டது. ராம்கோ உள்ளே சென்றான் தன்னை அறிமுகப்படுத்தி கொண்டான்.

“ஓ சிவகாமி ஐயரின் கொள்ளு பேரனா நீ” என்றார் புன்முறுவலுடன்.

“ஆமாம் தாத்தா அவரு உங்ககிட்ட இந்த லேட்டரை கொடுக்கச் சொன்னார்.

“ஏண்டா அம்பி என்னோட கண்ணுக்கு நீயே சுமாரா தான் தெரியற, நான் எங்க லேட்டரை படிப்பதது. என்ன விஷயம் நீ படித்து சொல்” என்றார் தலையை ஆட்டிய படியே.

“ஒண்ணும் இல்ல தாத்தா, நாம்ம ஊரை பற்றி ஒரு டாக்குமெண்டரி எடுக்கலாம்னு வந்தேன், நான் டிஸ்கவரி சேனல் ந்னு ஒரு பெரிய டிவி யில வேலை செய்றேன்...”

“அது என்னடா பெரிய டிவி, சன் டிவியை விட பெரிய டிவியா” என்றார் பெரியவர்.

“அந்த அளவுக்கு இல்ல தாத்தா, எதோ உலகத்தில் இருக்கும் அத்தனை நாடுகளிலும் தெரியும் அவ்வளவு தான்” என்றான் நக்கலாக.

“எங்க ஊர்ல தெரியலையே, சரி அத விடு விஷயத்துக்கு வா” என்றார் கண்களை மூடிக் கொண்டு.

“நம்ம ஊரில் பல மர்மங்கள், புதை........” என்று அவன் முடிப்பதற்குள்

“புதையலும் இருக்கு, போய் எடுத்துனு வானு சொன்னானா சிவகாமி, கெழட்டு கம்முநாட்டி ஊரை விட்டு ஊர் போனாலும் பணத்தாசை போகமாட்டுது” என்றார் கோபமாக, ராம்கோவுக்கு முகமாறியது.

“இல்ல தாத்தா, உங்களுக்கு இந்த ஊரை பற்றி நல்லா தெரியும் சொன்னாரு அதனால தான், புதைய......”

“புதையலோ புடலங்காயோ, எனக்கு ஒண்ணும் தெரியாது எல்லாம் என் அப்பாவுக்கு தான் தெரியும்”

“இல்லையே அவர் நீலகண்ட சாஸ்திரிகளுக்கு தான் எல்லாம் தெரியும் சொன்னாரே”

“நானும் அதான் சொல்றேன், எங்க அப்பாவுக்கு தான் எல்லாம் தெரியும்”

“நீலகண்ட சாஸ்திரி நீங்க இல்லையா, உங்க அப்பாவா இவ்வளவு தூரம் நான் வந்தது வேஸ்டா” என்று தன்னுடைய செல்லை எடுத்து எதோ ஒரு நம்பருக்கு அழுத்தினான்.

“ஹாய் டாமி நான் தான், நாம வந்தது டோட்டல் வேஸ்டு. நம்ம சூட்டிங் குரூப்பை நாளைக்கு ஃப்ளைடு ஏற வேண்டாம் என்று சொல். நான் சொல்றவரை நீயும் சென்னையை விட்டு இங்கு கிளம்ப வேண்டாம்
நாம தேடிவந்தவர் இப்போ உயிருடன் இல்லை, அவருடைய மகன் மட்டும் தான் இருக்கார்”

“ஏன் இல்லை” என்றார் பக்கத்தில் இருந்த பெரியவர். ராம்கோ அவரின் வார்த்தையை கேட்டு திரும்பினான்

“என்ன தாத்தா சொன்னீங்க, உங்க அப்பா இருக்காரா” என்றான் புருவத்தை உயர்த்தி. பெரியவர் சிரித்துக் கொண்டே உள்ளே எழுந்துச் சென்றார். ராம்கோவும் செல்லில் பேசியபடியே “ஒரு நிமிஷம் இரு டாமி, தாத்தா எதோ சொல்றார்” என்று பெரியவரை பின் தொடர்ந்தான். இருட்டு அறைக்குள் சென்ற பெரியவர் விளக்கை போட்டார். ராம்கோ

“என்ன தாத்தா எதுக்கு உள்ளே என்னை கூப்பிடீங்க” என்றான் அங்கு இருந்த கட்டிலை பார்த்த படியே, அங்கு தலையணைகள் நான்கு பக்கமும் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது, நடுவில் ஒரு துணி இருந்தது.

“நீ தானடா அம்பி என் அப்பவை பார்க்கனும் சொன்ன” என்றார். ராம்கோ தன்னுடைய கண்களை நன்றாக துடைத்து விட்டு பார்த்தான்

“அண்பிலிவபுல்.........” என்று பெருமூச்சு விட்டான். அதற்குள் தன்னுடைய செல் போனில் இருந்து

“ஹலோ ஹலோ ராம்கோ ராம்கோ வாட் ஹேப்பன் மேன், ராம்கோ...”

“டாமி யூ ஆர் நாட் கோயிங் டூ பிலிவ் இட், நாம் தேடிவந்த ஆள் இருக்கார். அவருக்கு வயது 125 இருக்கலாம்”

“138 வயது” என்றார் பக்கத்தில் நின்றுக் கொண்டு இருந்த மகன் பெரியவர்.

“டாமி சாரி டா, 138 ஆம்”. செல்போனில் இருந்து டாமி

“என்னடா கிரிக்கெட் ஸ்கோர் மாதிரி சொல்ற, நிஜமாவா................ மனிதர்கள் 109 வயதை தாண்டுவதே அபூர்வம், ஜப்பான்லையே.........”

“டேய் அதெல்லாம் நேர்ல பேசிக்கலாம் நீ இப்பவே கிளம்பி கடலூருக்கு வா” என்று செல்லை ஆஃப் செய்தான் அவசரமாக.

“யாருடன் பேசிக் கொண்டு இருக்கிறாய்” என்றார் மகன் பெரியவர். ராம்கோ அந்த கட்டிலில் இருந்த தந்தை பெரியவரை பார்த்தபடியே “என் நண்பனுடன் தாத்தா, சரி ஏன் இப்படி இவரை இருட்டில் போட்டு வைச்சி இருக்கீங்க” என்று ஜன்னலை திறக்கப்போனான்.

“அவன் பேரு என்ன” என்றார் நடுங்கிய குரலில் ம.பெரியவர்.

“டாமி” என்று ஜன்னலை திறக்கப்போனான், அது அழுத்தி மூடி இருந்தது.

“அவங்க அப்பா பேரு என்ன” என்றார்

“ஐய்யோ ஐய்யோ அவனும் நம்ம ஆள் தான் தாத்தா” என்றான் சலிப்புடன்.

“ஐய்யோ சொல்லக்கூடாது டா பிரஹத்தி, நம்ம வம்சத்துல பிறந்துட்டு இதுகூட தெரி” என்று பேசிக் கொண்டே ராம்கோவை பார்த்தார், அவன் ஜன்னலை திறக்க அதை ஓங்கி தள்ளிக் கொண்டு இருந்தான்.

“அதை திறக்காதே டா அம்பி” என்று பெரியவர் சொல்வதற்கும், படார் என்று ஜன்னல் திறப்பதற்கும் சரியாக இருந்தது, வெளிச்சம் உள்ளே வந்தது, அப்புறம் கடல் அலையின் சத்தம், அப்புறம் உப்பு காற்று.

படுக்கையில் இருந்த அந்த நீலகண்ட சாஸ்திரியின் உடம்பு நடுங்க ஆரம்பித்தது. ?????????????.

ரங்கராஜன்
09-03-2009, 03:28 PM
தொடரும்..........

சிவா.ஜி
09-03-2009, 04:15 PM
ஆஹா....தக்ஸ்...கலக்கலான முதல்பாகம். சிறுகதையா தொடர்கதையா? எதுவா இருந்தாலும் களம் நல்லாருக்கு. கடலுக்குள்போன கிராமம்... மீண்டுவந்த கிராமம், 138 வயசு பெரியவர்....சபிக்கப்பட்ட கடலோர ஊர்...அசத்தலா இருக்கு.

தொடரு...தக்ஸ். வாழ்த்துகள்.

ரங்கராஜன்
09-03-2009, 05:04 PM
ஆஹா....தக்ஸ்...கலக்கலான முதல்பாகம். சிறுகதையா தொடர்கதையா? எதுவா இருந்தாலும் களம் நல்லாருக்கு. கடலுக்குள்போன கிராமம்... மீண்டுவந்த கிராமம், 138 வயசு பெரியவர்....சபிக்கப்பட்ட கடலோர ஊர்...அசத்தலா இருக்கு.

தொடரு...தக்ஸ். வாழ்த்துகள்.

நன்றி அண்ணா
அடுத்த பாகத்தில் முடிந்து விடும், சற்று பெரிய சிறுகதை அண்ணா, ஆனால் புத்தகத்தில் படித்தால் இது தான் சிறுகதையின் சரியான அளவு. ஆனால் நம் மன்றத்தை பொருத்த வரை இது சற்று பெரிய சிறுகதை, காரணம் கணிணியில் படிக்க அலுப்பு தட்டும் அதனால் தான், இரண்டு பாகமாக தருகிறேன். ஒரு வாசகனாய் எனக்கு பொறுமை குறைவு, அதனாலே நான் தொடர்கதைகளை எழுதுவது கிடையாது, முடிவு தெரியாவிட்டால் எனக்கு மண்டை வெடித்து விடும், அந்த அளவுக்கு கதையுடன் ஒன்றி விடுவேன். ஆனால் இந்த கதையில் வாசகனுக்கு அலுப்பு தட்டி விடக்கூடாது என்பதால் தான் வேறு வழி இன்றி இரண்டு பாகமாய் தந்தேன். கண்டிப்பாக அடுத்த பாகத்தில் முடித்து விடுவேன். (மதி மற்றும் உங்களின் தொடர்கதைகளில் கூட மூன்று பாகம் எழுதி முடித்தவுடன் தான் படிப்பேன், மூன்று மூன்றாக தான் படிப்பேன், காரணம் இருவரும் சரியான இடத்தில் வந்து நிறுத்திவிடுவீர்கள். அதன்பின் நான், முடிவு இதுவாக இருக்குமோ, அதுவாக இருக்குமோ என்று யோசித்தே முடி கொட்டி விடுகிறது, என் கஷ்டம் உங்களுக்கு புரியும் தானே, இதில் எதுவும் டபிள் மீனிங் இல்லப்பா:aetsch013::aetsch013:

அக்னி
09-03-2009, 05:11 PM
கதை பற்றி அப்புறம்...

இப்போ இந்த முக்கியமான விடயம்...

அதுவாக இருக்குமோ என்று யோசித்தே முடி கொட்டி விடுகிறது, என் கஷ்டம் உங்களுக்கு புரியும் தானே, இதில் எதுவும் டபிள் மீனிங் இல்லப்பா:aetsch013::aetsch013:
உங்க தடித்த எழுத்தில் டபிள் மீனிங் இல்லைன்னு,
யார் நம்பாவிட்டாலும் நான் நம்பறேன்...

அதனால... அதனால...

அதுவாக இருக்குமோ என்று யோசித்தே முடி கொட்டி விடுகிறது, என் கஷ்டம் உங்களுக்கு புரியும் தானே, இதில் எதுவும் டபிள் மீனிங் இல்லப்பா:aetsch013::aetsch013:
அதை எடுத்துட்டுப் பார்த்தால்...
டபிள் மீனிங் எதுவும் இல்லைன்னு நம்புறேன்...

எல்லாருமே நம்பணுமில்லையா... அதான் எடுத்துக்காட்டி இருக்கேன்...

:rolleyes:

ரங்கராஜன்
09-03-2009, 05:18 PM
அக்னி இப்படி என்னை மாட்டிவிடலாமா? நான் எவ்வளவு அழகாக இலை மறைவு காயாக சொன்னேன். இப்படி என்னை மாட்டி விட்டுட்டீங்களே. ச்சே ச்சே

இப்ப நானே இந்த பதிலைப் போட்டு ஊர்ஜீதம் பண்ணிவிட்டேன். ஒருவேளை அக்னியின் கமெண்டுக்கு பதில் போட்டு இருக்ககூடாதோ. பாருங்க அக்னி இப்படி தான் நான் மாட்டிக் கொள்வது..........

சிவா.ஜி
09-03-2009, 06:19 PM
நடத்துங்கப்பா நடத்துங்க.....என்ன அக்னி பொழிப்புரையா குடுக்கறீங்க....குடுங்க.

ரங்கராஜன்
09-03-2009, 06:53 PM
நடத்துங்கப்பா நடத்துங்க.....என்ன அக்னி பொழிப்புரையா குடுக்கறீங்க....குடுங்க.

அண்ணா தப்பாக எடுத்துக் கொள்ளாதீர்கள், சும்மா உரிமையுடன் விளையாடினேன்...... விளையாடினோம்

சிவா.ஜி
09-03-2009, 06:56 PM
அட போப்பா நீ ஒண்ணு. சும்மா பூந்து விளையாடுங்க. நானாவது தப்பா எடுத்துக்கறதாவது...!!!

மதி
10-03-2009, 02:20 PM
அதானே சிவா அண்ணனாவது கோவிச்சுக்கறதாவது....???

தக்ஸ்... நல்லா கொண்டு போறீரு பாஸ்... திகில் இன்னும் அப்படியே இருக்கு.. அடுத்த பாகத்துக்காக வெயிட்டிங்... :)

ரங்கராஜன்
11-03-2009, 04:44 AM
அதானே சிவா அண்ணனாவது கோவிச்சுக்கறதாவது....???

தக்ஸ்... நல்லா கொண்டு போறீரு பாஸ்... திகில் இன்னும் அப்படியே இருக்கு.. அடுத்த பாகத்துக்காக வெயிட்டிங்... :)

நன்றி மதி
இன்று இறுதி பாகம் போட்டு விடுவேன். தாமதத்திற்கு மன்னிக்கவும்.

samuthraselvam
11-03-2009, 09:29 AM
வாழ்த்துக்கள் அண்ணா...!
கதை நன்றாக உள்ளது.. அடுத்த பாகத்தை விரைவில் எதிர்பார்க்கிறேன்.

தாமரை
11-03-2009, 11:36 AM
ஆரஞ்சில் ஆரம்பித்து அடர் நீலத்தில் முடியும் வானம்..

இங்கிருந்துதான் வண்ணம் உதயம் என்பது போல மறையும் சூரியன் டார்ச்சடித்து தன்னைக் காட்டிக் கொண்டிருக்க..

சிவப்புக் கரை கொண்ட வெண்பட்டாடைகள் அங்கங்கு சிதறிக் கிடப்பது போல மேகங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் இருந்தன..

சில பெண் காக்கைகள் குஞ்சுகளுக்கு பெட் டைம் ஸ்டோரி கரைந்து கொண்டிருக்க,, ஆண்காக்கைகள் தங்களுடைய அன்றைய அனுபவங்களை ஒன்றுக்கொன்று சொல்லிக் கொண்டதால் ஒரே இரைச்சல்.

வி வடிவமாக யார் விட்ட அம்பாகவோ நாரைக்கூட்டங்கள் ஏதோ ஒரு இலக்கு நோக்கி பறந்து கொண்டிருந்தன,,

இது மாதிரி ஒரு பேக் ட்ராப்பை மட்டும் சொல்லிட்டு விமர்சனத்திற்கு காத்திருக்கார்...

என்ன செய்யறது...?

கதையை நகர்த்துங்க தக்ஸ்..

சிவகாமி மீனாட்சி அப்படின்னு பேர்வச்சிருக்கறது கொஞ்சம் விவகாரமாப் படுது,


அப்புறம் வேற என்ன..

கதையைச் சொல்லுங்கப்பா!

ரங்கராஜன்
11-03-2009, 04:59 PM
நன்றி தாமரை
உங்களின் பார்வையை சொன்னதற்கு நன்றிகள் கோடி........ எழுத மூடு வர மாட்டுது அண்ணா, இறுதி பாகத்தை சீக்கிரம் போட்டு விடுகிறேன். நன்றி

ரங்கராஜன்
12-03-2009, 10:25 AM
இறுதி பாகம்.

நீலகண்ட சாஸ்திரிகளின் உடல் நடுங்க ஆரம்பித்தது, மகன் பெரியவர் அந்த வயதிலும் ஓடிச் சென்று ஜன்னலை அசுர வேகத்தில் சாத்தினார். அந்த இடைப்பட்ட நேரத்தில் கிடைத்த நல்ல வெளிச்சத்தில் ராம்கோ அந்த 138 வயது பெரியவரை பார்த்தான். உடல் மிகவும் சுருங்கி 5 வயது குழந்தை போல இருந்தது, முதலில் அவரை எதோ துணி கட்டிலில் கிடக்கிறது என்று நினைத்தது நியாயமாக தான் இருந்தது. அவரை கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டு இருந்தான். முகத்தில் இருக்கும் உறுப்புகள் சரியாக தெரியவில்லை. எது காது, எது மூக்கு, எது வாய், எது விரல் சாரி விரல் நெற்றியில் இருக்காது இல்ல, எது நெற்றி என்று தெரியவில்லை. அனைத்திலும் ஒரே கோடு கோடாக இருந்தது. மூச்சு கஷ்டப்பட்டு அந்த உடல் கூட்டுக்குள் இருந்து வெளியே வந்துக் கொண்டு இருந்தது, அவர் உயிருடன் இருக்கிறார் என்பதற்கு ஆதாரம், அவரின் மூக்கு இருக்கும் இடத்தில் விரல் வைத்து பார்த்தால் பட்டாம்பூச்சியின் இறகு அடிக்கும் பொழுது வரும் காற்றை விட மெலிதாக காற்று வந்துக் கொண்டு இருக்கும். இவர் மூச்சு விடுவதற்கே 2 லீட்டர் பால் குடிக்க வேண்டும், அவ்வளவு பலவீனமாக இருந்தார். ராம்கோவுக்கு என்னவோ போல இருந்தது,

“தாத்தா இவரு என்ன சாப்பிடுவாரு”

“இவரு சாப்பிட்டு இன்னையோட 20 வருஷம் ஆகறது டா அம்பி”

“வாட் தி ஃப்..., என்ன தாத்தா சொல்றீங்க. ஒரு மனுஷனால சாப்பிடாமல் இவ்வளவு நாள் உயிருடன் இருக்க முடியாது”

“அது பத்தி எனக்கு தெரியாது, இவர் என்னுடன் தான் இருக்கிறார், எனக்கு தெரியாமல் இவர் எழுந்து போய் சாப்பிடவும் வாய்ப்பு இல்லை”

“உங்களுக்கு தெரியாமல் இருக்கலாம், சரி உங்க வீட்டுல இருக்குற பொம்பளைங்களை கேளுங்க”

“என்னை தவிர இந்த அறைக்குள் யாரும் வர மாட்டாங்க, அதுவும் இல்லாம இந்த ஆத்துல பொம்பளைங்களே கிடையாது”

“பொம்பளைங்க இல்லாம எப்படி தாத்தா சந்ததி எல்லாம், குழப்புறீங்க தாத்தா”

“குழந்தையை பெத்தவுடன் பொம்பளைங்க செத்துடுவாங்க இந்த கிராமத்தோட இரண்டு சாபத்துல இதுவும் ஒண்ணு”

“மை காட், இன்னொன்னு என்ன தாத்தா”

“நீ கூடி சீக்கிரத்துல தெரிஞ்சிப்பே டா அம்பி”

“சரி உங்க பசங்க எல்லாம் எங்க தாத்தா காணும்”

“எல்லாரும் மீன் பிடிக்க கடலுக்கு போய் இருக்காங்க”

“என்னது மீன் பிடிக்கவா, என்ன தாத்தா நம்பளவங்க இந்த தொழில் செய்ய மாட்...”

“மீன் சாப்பிடதான் கூடாது பிடிக்கலாம் இல்லையா அதுவும் ஒரு தொழில் தானே டா, இந்த கிராமமே ஒரு அதிசய கிராமம் டா அம்பி”

“நான் உங்க அப்பாகிட்ட சில விஷயங்கள் கேட்டு தெரிஞ்சிக்கனும் வந்து இருக்கேன்”

“நானே பல விஷயங்களை தெரிஞ்சிக்கனும் நு பல வருடங்களா காத்து இருக்கிறேன். ஆனா அவர் ஒரு வார்த்தை பேச மாட்றாரே”

“தாத்தா நீங்க கவலைப்படாதீங்க, இதுக்குனே ஒரு தனி மெஷின் இருக்கு நம்ம நினைவுகளையும், எண்ணங்களையும் இந்த மெஷின் படம் போட்டு காட்டிவிடும், Steven Hawking நு ஒரு சைண்டிஸ்டு இதண்படி.......”

“அவங்க அப்பா பேர் என்ன”

“தாத்தா அவர் நம் ஆள் இல்லை, விடுங்கள்”

“அப்ப வேண்டாம் அவனை பற்றி, சரி ஏன் உன்னுடைய முடியை இப்படி பெரிசாக சுருட்டை சுருட்டையாக வளர்த்து வச்சினு இருக்கறடா அம்பி”

ராம்கோ சிரித்துக் கொண்டு “ஸ்டையில் தாத்தா எப்படி இருக்கு” என்றான்.

“ஆம்படையான் சாவுக்கு வந்து அழுவுற மனைவி மாதிரி இருக்கு உன்னுடைய முடி ஸ்டைலுடா அம்பி” என்றார் சிரிக்காமல். ராம்கோவுக்கு என்னமோ போல ஆகிவிட்டது.

“சரி தாத்தா, உங்களுக்கு தெரிந்த இந்த கிராமத்தோட கதையை பற்றி கொஞ்சம் சொல்லுங்கள் தாத்தா”

“எனக்கு முழுசும் தெரியாது டா அம்பி என்னுடைய அப்பா தான் இந்த சமுத்திரேஸ்வரன் கோயிலில் அர்ச்சகராக இருந்தார், அவருக்கு தான் இந்த கிராமத்தை பற்றி எல்லாம் நன்றாக தெரியும், 80 வருடத்திற்கு முன் அந்த கோவில் கடலுக்குள் மறைந்து விட்டது, அதுவும் ஒரே நாளில்!!!!!. அதில் இருந்து என்னுடைய அப்பாவுக்கு கடல் ஓசை என்றால் ஆகாது. கோவில் உள்ளே போனதற்கு என்ன காரணமுனு தெரியவில்லை. அதில் இருந்து பயந்த கிராமத்து மக்கள் எல்லாம் தனி தனியாக பிரிந்து வேறு ஊருக்கு பரதேசம் போனார்கள், அப்படி போனவர்களில் ஒன்று தான் உங்க குடும்பம், பல பேர் வெளிநாட்டில் இருந்து வந்து அவங்களோட மீதி உள்ள குடும்பத்தை பார்த்து விட்டு போவார்கள் எப்பொழுதாவது”

“சரி தாத்தா அந்த சாபத்தை பற்றி சொல்லுங்கள்”

“எனக்கு முழுசா தெரியாது டா, கொஞ்சம் தான் தெரியும் (பெருமூச்சுடன் பேச ஆரம்பித்தார்). இந்த சமுத்திரேஸ்வரன் கோயிலில் கற்பகிரஹத்தில் கடலை குடிப்பது போல உள்ள ஈஸ்வரனின் சிலைக்கு அடியில் மலை மலையாக தங்க கட்டிகள் இருந்தன”

“யார் அங்கு தங்கத்தை மறைத்து வைத்தது ராஜாக்களா?”

“இல்லடா அம்பி, உனக்கு எப்படி புரியவைப்பது நு தெரியவில்லை, இப்ப கட்டும் கோயில்கள் எல்லாம் சுயநலத்திற்கு உபயம் என்ற பெயர் போடவேண்டுமே என்று கட்டுகிறார்கள், ஆனால் கோயிலை கட்டுவதற்கு என்று கட்டிட சாஸ்திரங்கள் இருக்கிறது, பழங்காலத்து கோயில்கள் எல்லாம்
இந்த முறைபடி தான் கட்டினார்கள், ஒவ்வொரு கற்பகிரஹத்து சிலைகளுக்கு அடியிலும் தங்கம், வெள்ளி அல்லது வெங்களம் போன்ற குட் கண்டக்டர்கள் (good conductor) இருக்கும், அவர் அவர் வசதிக்கு பொருத்த மாதிரி சிலைக்கு அடியில் தாதுக்களை போடுவார்கள் ராஜாக்கள்”

“ஏன் சிலைக்கு அடியில் வைக்க வேண்டும்”

“நீ ஏன் சாமியை கோயிலில் போய் கும்பிடுகிறாய், சாமி தான் எங்கும் இருப்பவர் ஆயிற்றே”

“சில பொருட்கள் சில இடத்தில் இருந்தால் தான் மரியாதை”

“தெளிவான காரணத்தை சொல், தெரியுமா தெரியாதா?”

“சரி தெரியாது, நீங்களே சொல்லுங்களே”

“கற்பகிரஹத்தில் எப்பொழுதும் சூடாக தான் இருக்கும், காரணம்...........”

“இல்லையே சில கோயில்களில் ஏ.சி போட்டு சாமியை கூலாக வைத்து இருக்கிறார்களே” என்று சிரித்தான்.

“அது சாமிக்காக இல்லை, வைர மோதிரம், வைர கடுக்கன், தங்கம் இழைத்த பூணுல் அணிந்து பூஜை செய்யும் அர்ச்சகர்களுக்காக அவர்களே போட்டுக் கொண்டது,....... சரி விஷயத்துக்கு வருவோம், அந்த இடம் எப்பொழுதும் சூடாக இருக்கும் என்ன தான் பெரிய கோயிலாக இருந்தாலும் சிலை கல்லில் தான் இருக்கும், காரணம் கல் என்பது சூட்டின் குட் கண்டக்டர் (good conductor), சிலைக்கு கீழே இருக்கும் தங்கமோ, வெள்ளியோ, வெங்களமோ பூமிக்கு அடியில் இருந்து சூட்டை அந்த சிலைக்கு அனுப்பும். அந்த சிலை அந்த சூட்டை கற்பகிரஹத்துக்குள் பரப்பும், நீ டி.வி யில் தானே வேலை செய்கிறாய், அப்போ உனக்கு புரியற மாதிரி சொல்கிறேன். டிராஸ்மிட்டிங் ஸ்டேஷன் (transmitting station) தான் கற்பகிரஹம், எல்லா கோயில்களுக்கு மேலே இருக்கும் முக்கோண வடிவம் அல்லது கோன் வடிவமான கட்டிடம் தான் ஆன்டினா (antenna), அதன் மேல் இருக்கும் கலசம் தான் ரிஸிவர், கற்பகிரஹத்தில் இருந்து கலசத்தின் வழியாக வெளிப்படும் சூட்டின் உதவியுடன் வானத்தில் உள்ள காஸ்மிக் எனர்ஜீயை அது கிரகித்து கீழே மறுபடியும் கற்பகிரஹத்துக்குள் விடுகிறது, அப்பொழுது அது ரிஸிவிங் ஸ்டேஷனாக (recieving station) வேலை செய்கிறது. நாம் கற்பகிரஹத்துக்குள் சென்று நம்முடைய கையை ஒன்று சேர்த்து, அதாவது கேத்தோட் வலது கை, ஏனோட் இடது கை இரண்டையும் நெற்றிக்கு நேராக வைத்தால், நம்முடைய மூன்றாம் கண் திறந்துக் கொள்ளும். நம்மை சுற்றி காஸ்மிக் எனர்ஜீ ஒரு வட்டம் போல உண்டாகும். அவை உடம்புக்கும் மனதுக்கும் அறிவுக்கு புத்துணர்ச்சியை கொடுக்கும். ஆன்மீகமும் அறிவியலும் ஒன்று தான். அறிவியலிலும் ஆன்மீகம் இருக்கிறது. ஆன்மீகத்திலும் அறிவியல் இருக்கிறது”

“அப்ப சாமி கும்பிட்டா, நல்லது, வெற்றி, பரீட்சையில் பாஸ் எல்லாம் செய்து வைக்கமாட்டாரா?” என்றான் சிரித்துக் கொண்டு.

“இப்படி எடக்கு மடக்கு செய்வதுக்கு தான் நீங்கள் உதவுவீர்கள். எல்லாத்திலும் ஒரு குறுக்கு கேள்வி, சுயநல விளம்பரம், விரும்பிய சாதகமான தப்பான அர்த்தத்தை புரிந்துக் கொள்வது. மமதியுடன் பேசுவது. இதை தவிர நீங்கள் சாதித்தது என்ன????? (என்றார் பெரியவர் கோபமாக, ராம்கோவின் முகம் மாறியதை கண்டு, திரும்பவும் சகஜநிலைக்கு வந்து பேச ஆரம்பித்தார்). கற்பகிரஹத்தில் கிடைக்கும் அந்த புத்துணர்ச்சியுடன் நீ தான் உன் காரியங்களை செய்துக் கொள்ள வேண்டும், வீட்டுல் பெரியவங்க உனக்கு கல்யாணம் மட்டும் தான் செய்து வைக்க முடியும், மத்தது எல்லாம் நீ தான் பார்த்துக் கொள்ள வேண்டும்” என்று சிரித்தார்.

ராம்கோவும் சகஜநிலைக்கு திரும்பி “தாத்தா ............ இதில் எதுவும் டபிள் மீனிங் இல்லையே,(சிரித்தான்) சரி நீங்க எதுவரை படித்து இருக்கீங்க”

“நான் படிச்சது எல்லாம் வேதம் மட்டும் தான்”

“பின்ன எப்படி கேத்தோட், ரிஸிவர் எல்லாத்தையும் பற்றி பேசறீங்க”

“வேதத்தில் அடுத்த நூற்றாண்டில் வரப்போகும் நானோ டெக்னாலஜி, குளோனிங் பற்றி எல்லாமே இருக்குதுடா அம்பி”

“சரி சரி தாத்தா விஷயத்தை மறந்து விட்டோமே, அந்த தங்கத்துக்கு ஆசைபட்டு யார் அதை கொள்ளை அடிச்சா.”

“ஆ......... அந்த கற்பகிரஹத்துக்கு அடியில் இருக்கும் தங்கத்துக்கு ஆசைபட்டு, பல வெளிநாட்டு மன்னர்கள் எல்லாம் படை எடுத்து வந்தனர், ஆனால் தோற்று விட்டனர். நம்முடைய கோயிலின் பெருமையை கேள்வி பட்டு, கடல் வழியாக ஒரு சீன நாட்டு நொண்டி மன்னன் வந்து கோயிலை அழித்து விட்டு, தங்கத்தை திருடிக் கொண்டு சென்று விட்டான். அதுக்கு உடந்தையாக இருந்ததாக எண்ணி அப்பாவி கோயில் காவலாளியையும் அவன் மனைவியையும் நம் முன்னோர்கள், கோயிலில் வைத்து தண்டித்து விட்டனர். அந்த காவலாளியின் மனைவி எதோ சொல்லி விட்டு செத்தாலாம். அதுதான் சாபமானது, அவள் என்ன சொன்னாள் தெரி.....” என்று ம.பெரியவர் சொல்லிக் கொண்டு இருக்கும் பொழுது படுக்கையில் இருந்த பெரியவர் எதோ பொறுமையாக மொனகினார்

“பெளர்ணமி பெளர்ணமி” என்றார். இவர்கள் இருவருக்கும் அவர் என்ன சொல்கிறார் என்று புரியவில்லை. இருவரும் பெரியவருக்கு இடஞ்சலாக இருக்க வேண்டாம் என்று அந்த அறையை விட்டு வெளியே போனார்கள். அந்த த.பெரியவர் அதுவரை இவர்கள் இருவரும் பேசுவதை கேட்டுக் கொண்டு இருந்தார். த.பெரியவர் மூளையில் அவரின் முன்னோர்கள் சொன்ன அந்த கதையின் தொடர்ச்சி நினைவுகளாக தோன்றியது

“300 ஆண்டுக்கு முன் சாதாரண தண்டனையா கொடுத்தார்கள் நம் முன்னோர்கள் அந்த காவலாளிக்கும் அவன் மனைவிக்கும். கோயிலின் நடுவில் அந்த காவலாளியையும் அவன் மனைவியையும் அமணமாக தலை கீழாக கட்டி வைத்து கற்கலால் அடித்து, ஈட்டிகளால் குத்தி, அவர்கள் மீது மிளகு பொடிகளை தூவி, முள்படுக்கையில் படுக்க வைத்து, அந்த காவலாளியின் மனைவி நிறை மாத கற்பம். இருவரையும் பாறை மீது படுக்க வைத்து வெயிலில் காயவைத்தனர் இருவரின் உடலிலும் உயிர் கொஞ்சம் ஒட்டி இருந்தது, மாலை முள் கட்டைகளை வைத்து எரித்தனர். காவலாளியின் மனைவி சாகும் பொழுது கூடி நின்ற மக்களை பார்த்து

“தீர்க்க ஆயிசுடன் வாழ்க” என்று சொல்லி விட்டு இறந்தாள். அவள் இறந்த சில வினாடிகளிலே அவள் உடலில் இருந்து குழந்தை அந்த எரியும் நெருப்பில் பிறந்தது, பிறக்கும் பொழுதே அதுவும் தீயில் கருகி இறந்தது........... படுக்கையில் படுத்து இருந்த பெரியவரின் கண்களில் இருந்து கண்ணீர் கசிந்தது. ராம்கோவும் ம.பெரியவரும் தங்கள் வீட்டு மாடியில் ஏறினார்கள் மணி மாலை 6 ஆகி இருந்தது, நல்ல இருட்டு பெரியவர் பேச ஆரம்பித்தார்.

“பல பேர் அந்த தங்க புதையலுக்காக இங்கு வந்து பல ஆராய்ச்சிகள் செய்தனர், ஆனால் யாராலும் தங்கத்தை கண்டுபிடிக்க முடியவில்லை”

“அதான் சீன மன்னன் எடுத்துனு போய்விட்டானே” என்று கூறிவிட்டு மேலே பார்த்தான் ராம்கோ முழு நிலா வானத்தில் ஜொலித்தது.

“ஹா ஹா, சமுத்திரேஸ்வரனின் சொத்தை திருடுக் கொண்டு அவன் மீதே பயணம் செய்ய முடியுமா என்ன?” என்று மாடியில் இருந்து எதிரே இருக்கும் கடலை காட்டினார் பெரியவர். ராம்கோவும் கடலை பார்த்தான் அமைதியாக இருந்தது, ஒன்று தெரியவில்லையே என்று பெரியவரை திரும்பி கேட்டான்.

“கடற்கரையை பார்” என்றார் பெரியவர். ராம்கோவும் பார்த்தான், ஒன்றும் தெரியவில்லை அவனுக்கு, நன்றாக உற்று பார்த்தான். ஆச்சர்யத்தில் வாயை பிளந்தான், அந்த மொத்த கடற்கரை மணலும் மின்னியது.

“ஆஆஆஆஆ தாத்தா என்ன தாத்தா அது” என்றான் ஆச்சர்யத்துடன்.

“எல்லாம் தங்கம் தான் டா அம்பி, நம்முடைய சமுத்திரேஸ்வரரின் தங்கம் தான் இது, அனைத்து மண்ணுடன் கலந்து இருக்கிறது. எப்படி மணலைவிட சிறிய துகளாக ஆனது என்று தெரியவில்லை, மலை மலையாக இருந்த தங்கம் எப்படி இப்படி மணலாக மாறியதுனு தெரியவில்லை. இந்த கடற்கரை மணல்கள் முழுவதும் தங்கம் கலந்து இருக்கிறது. இந்த ரகசியம் நம்ம சந்ததியில் சிலருக்கு மட்டும் தான் தெரியும். அந்த தங்கத்தை மணலைவிட்டு பிரிக்கவும் முடியாது. இந்த தங்கம் சமுத்திரஸ்வரனுக்கு உகந்த பெளர்ணமியில் மட்டும் தான் தெரியும். இந்த கடற்கரையே தங்கத்தில் மின்னும்” என்று அமைதியாக ராம்கோவை பார்த்தார்.

“அப்ப கடவுள் இருக்கிறார்னு சொல்றீங்களா?”

“நம்பறவங்களுக்கு எப்பொழுதும் மனதில் இருப்பார்னு சொல்றேன்”

“நம்பாதவங்களுக்கு”

“மூளையில் இருப்பார்”

“ம்ம்ம், சரி இந்த கிராமத்தின் இரண்டு சாபத்தில் ஒன்னு சொல்லிட்டீங்க, இன்னொன்று சொல்லவில்லையே”

“அதான் சொன்னேனே, அந்த காவலாளியின் மனைவி சொன்னாளே “தீர்க்க ஆயிசுடன் வாழ்கனு””

“என்ன தாத்தா அது வாழ்த்து தானே”

“அடப்பாவி முதுமையை விட ஒரு கொடிய சாபம் இருக்க முடியுமாடா, உன்னுடைய உடலில் நடக்கும் வெளிப்புற மாற்றங்கள் உனக்கு
தெரியாமல் இருப்பது எவ்வளவு பெரிய தண்டனை தெரியுமா, உன்னுடைய கழிவுகளிலே நீ செயலற்று கிடப்பது எவ்வளவு பெரிய சாபம் தெரியுமா? உயிர் போய் விட்டு போய் விட்டு வருவது, மூச்சு விட கூட பாரமாக இருப்பது தலை முடி கூட கனமாக இருப்பது, வேகமாக காற்று அடித்தாலே உன்னுடைய தோல் கிழிந்து விடுவது இதை விட கொடூர சாபம் என்னவாக இருக்க முடியும் சொல். அந்த காவலாளியும் அவன் மனைவியும் பட்ட தண்டனை ஒரே நாள் தான் ஆனால் இந்த தண்டனை வருடங்களாக தொடரும்” என்றார் கண் கலங்கிய படியே.

“தாத்தா எனக்கு புரியுது தாத்தா உங்க நிலைமை, நீங்களும் இந்த துன்பத்தை அனுபவிக்க வேண்டும் என்று நினைத்து தானே கஷ்டப்படுகிறீர்கள், என்னை மதித்து இவ்வளவும் சொன்னீர்களே நன்றி தாத்தா”

“அம்பி உனக்கும் இதே நிலைமை தான், நம் சந்ததியில் பிறந்த அனைவருக்கும் ஆயுசு எவ்வளவு தெரியுமா 150 வருடம், இந்த கிராமத்தில் எல்லார் வீட்டிலும் இப்படி ஒரு ஆண் உயிர் உள்ள பிணமாக இருட்டு அறையில் கிடக்கிறார்கள். உனக்கு இந்த நிலைதான் அதனால் தான் எல்லா கதையும் சொன்னேன் உன் தாத்தாவிடமும் விஷயத்தை சொல் அவனுக்கே விஷயம் தெரியாதே” என்றார் அந்த பெரியவர். ராம்கோ அப்படியே தலையில் கைவைத்த படி தரையில் அமர்ந்தான்.

இளசு
24-03-2009, 09:17 PM
தக்ஸ்,

உன் மனவளத்தின் இன்னொரு பரிமாணம் இக்கதை..

தங்கக்கடற்கரை என நீ சிருஷ்டித்த தேவனாம்பட்டினக் கடற்கரையின்
இன்னொரு நிஜப்பெயர் - சில்வர் பீச்... வெள்ளியங்கரை!!!! ஹாஹாஹா!

முதுமக்கள் தாழியில் விடப்பட்டோர் என மொகாஞ்சாதரோ பாடங்களில் படிப்போமே -
அப்படி ஒரு மகாமுதியவர் பற்றிய வர்ணைனைகள் இக்கதையின் உச்சம்..

பூசாரி மனைவியின் இறுதி வலிகள் - எனக்கும் வலித்தன.. உன் எழுத்து வன்மைக்கு சபாஷ்!

இரு ஊர்களின் பெயர்கள் தேவையில்லையோ கதைக்கு???

சில சுவையான உரையாடல்களுக்கு உதவியதைத் ( ஸ்டீவன் ஹாகிங் அப்பா பேர் - சூப்பர்!) தவிர குறிப்பிட்ட சமூகக்குறியீடும் ஒரு கவனச்சிதறலோ?

அமானுஷ்ய வகை முயற்சிக் கதையிலும் அபார வெற்றி கண்ட
உன் திறமைக்கு என் வந்தனம் தக்ஸ்!

பாரதி
25-03-2009, 01:55 AM
நன்றாக கதையை கொண்டு சென்றிருக்கிறீர்கள் மூர்த்தி! கதையின் இறுதி வரை முடிச்சை அவிழ்க்காமல் சென்றதற்கு பாராட்டுகிறேன். ஆங்காங்கே சுஜாதாவின் சாயலும் தென்படுகிறது.உங்களின் படைப்புத்திறனுக்கு மேலும் ஒரு சான்று இக்கதை. மனதார வாழ்த்துகிறேன்.

ரங்கராஜன்
25-03-2009, 05:01 AM
நன்றி இளசு அண்ணா & பாரதி அண்ணா

உங்களின் விமர்சனங்களை கண்டு மகிழந்தேன், இந்த கதையில் பல ஓட்டைகள் இருப்பது போல எனக்கு தோன்றுகிறது. காரணம் கதையை எதோ எழுத வேண்டும் என்று ஆரம்பித்தேன், எதோ சொல்லவந்து குழம்பி, அப்புறம் கதையை முடிக்க தெரியவில்லை, சிறுகதையாக எழுத விரும்பினேன். அதன் நீளம் வளர்ந்துக் கொண்டே சென்றது, கதையின் போக்கு எனக்கு ஏற்றார் போல இல்லை, வேறு வழியில்லாமல் தொடரும் போட்டு விட்டேன். அப்புறம் இறுதி பாகம் எழுதும் பொழுது சுத்தமாக கதையில் ஒரு நாட்டம் இல்லாமல் போய்விட்டது. முடிக்க வேண்டுமே என்று முடித்து வைத்தேன். கதையை இன்னும் நன்றாக எழுதி இருக்கலாமோ என்று எண்ணுகிறேன்

மதுரை மைந்தன்
25-03-2009, 10:37 AM
கதையை அழகாக கொண்டு சென்றிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

சுகந்தப்ரீதன்
31-03-2009, 08:47 AM
தக்ஸ்.... இத்தனைநாளாக இந்த கதையை பார்க்காமல் விட்டதற்க்கு முதலில் மன்னிப்பு கேட்டுகொள்கிறேன்..(பின்ன... கதைக்கு பேரே என்னோட பேரை வச்சிதான் வச்சேன்னு சொல்லியிருக்கிங்களே..)

பழைய பாரம்பரிங்களிலும் நம்பிக்கைகளிலும் உள்ளீடாக எப்போதும் ஒரு அறிவார்ந்த பொருள் பொதிந்திருக்கும்... ஆனால் அதன் அர்த்தம் புரியாமலும்.. புரிந்து கொள்ள முயலாமலும் அதை பின்பன்றும்போதுதான் அதை மூடநம்பிக்கை என்று மூர்க்கத்தனமாய் எதிர்க்க வேண்டியிருக்கிறது...!! கருவறைகள் அமைக்கப்பட்டிருப்பதின் அறிவியல் பிண்ணனியை நீங்கள் விவரித்தவிதம்.... எனக்கு வியப்பை தந்தது... உங்களிடம் எழுத்துதிறமை உண்டென்று எனக்கு தெரியும்... ஆனால் இவ்வளவு திறமை உண்டென்று சத்தியமாய் நான் நினைக்கவேயில்லை...!!

வரலாறையும் அறிவியலையும் இணைத்து கற்பனையில் படைத்த இந்த படைப்பு உன் திறமைக்கான எடுத்துக்காட்டு... வாழ்த்துக்கள் தக்ஸ்... தொடருங்கள்...!!:icon_b: