PDA

View Full Version : பெற்றோருக்காக



இன்பக்கவி
08-03-2009, 09:16 AM
பற்றையும் வரவையும்
பண்போடு சேர்த்து
வளர்த்து வந்தோம்
நம் காதலை...
நசுக்கப்படும் காதலுக்கு
மத்தியில்...
நம் காதல் நலமாகட்டும்!!!!
ஒதுக்கப்படும் காதலுக்கு
மத்தியில்...
நம் காதல்
ஓங்கி வளரட்டும்....
பெற்றோர்,
உடன்பிறப்பும்
நேசிக்கட்டும்
நம் காதலை...
அது வரை
பிரிந்திருப்போம்...
சில காலம்....

கவிதா123

நிரன்
08-03-2009, 11:29 AM
பிரிவதனால் காதல் புரிவதில்லை
புரிந்த காதல்கள் என்றும் பிரிவதில்லை.

சிலரைப் புரியவைக்க சில காதல்கள் பிரிவதுண்டு
அந்தப் பரிவும், புரிவும் சில உள்ளங்களில் மட்டுமே.

பிரிந்ததிருக்கும் காதல் சேர என் வாழ்த்துக்கள். வரியைக் கொஞ்சம் பிரிக்க வேண்டாம் என நினைக்கிறேன். சில வரிகள் பிரிந்து இருப்பதால் படிக்கும் பொழுது கடினமாகவுள்ளது.


கவிதை நன்றாகவுள்ளது.பாராட்டுக்கள் கவிதா123

இளசு
08-03-2009, 11:48 PM
காதலுக்கு மரியாதை செய்யும் கவிதை!

வாழ்த்துகள்!

samuthraselvam
09-03-2009, 03:37 AM
வாழ்த்துக்கள் கவி... காதலுக்கு மரியாதை பிரிவதால் கிடைப்பதில்லை, அடுத்தவர்கள் புரிவதால் கிடைக்கிறது.

ஆதவா
11-03-2009, 07:30 AM
இளசு அண்ணாவை வழி மொழிகிறேன்...

பாராட்டுக்கள்.. இன்னும் வெவ்வேறு பாதைகளில் பயணியுங்கள்.

அமரன்
11-03-2009, 08:03 AM
ஆரோக்கியமான கருவில் பிறந்த குழதையாக கவிதை. அண்ணனின் வழியே காதலர்கள் சொந்தங்களின் நெஞ்சம் மென்மையாக இருக்கட்டும் என்ற வழிபாட்டுடன்.
வாழ்த்துகள் கவிதா.