PDA

View Full Version : கோபால் புரோகிராமை ரண் செய்ய உதவுவீர்களா...??



kalaiselvan2
08-03-2009, 05:39 AM
தயவுசெய்து, கோபால் புரோகிராமை விண்டோஸ் எக்ஸ்பியில் ரண் செய்யவும், இந்த மென்பொருளைத் தரவிறக்கம் செய்ய தரவிறக்கச் சுட்டியையும் தந்து உதவ முடியுமா நண்பர்களே...??


Please any one help me to run COBOL program in windows XP and pls give the URL to download COBOL

அன்புரசிகன்
08-03-2009, 05:52 AM
நண்பரே...

உங்களை அறிமுகப்பகுதியில் முதலில் அறிமுகப்படுத்திக்கொள்ளுங்கள். உங்களை அறிமுகம் செய்து கொள்க. (http://www.tamilmantram.com/vb/forumdisplay.php?f=38)

நம் மன்றத்தின் விதிகளை படித்து அறியுங்கள்.

தமிழ் எழுத்துக்களினாலேயே எங்கள் மன்றில் நீங்கள் பதியவேண்டும்.
தமிழ் எழுத்துரு உதவி. (http://www.tamilmantram.com/vb/forumdisplay.php?f=2)

praveen
08-03-2009, 06:52 AM
கோபால் புரோகிராம்கள் பல வகை உள்ளனவே, உங்களது தேவை எதுவென்று தெளிவாக தமிழில் டைப் செய்து கேளுங்கள்.

எந்த ஒரு டாஸ் புரோகிராமையும் விண்டோஸ் எக்ஸ்பியில் ரண் செய்ய வேண்டும் என்றால் முதலில் டெஸ்க்டாப்-ல் சார்ட்கட் வைத்து அந்த சார்ட்கட்டை ரைட் கிளிக் செய்து காம்பிட்டபிளிடி மோடில் விண்டோஸ் 95/98 ஐ தேர்ந்தெடுத்து இயக்கி பாருங்கள்.

பொதுவாக ஆர்.எம் கோபால் தான் அனைவரும் உபயோகிக்கிறார்கள். அது இலவச பதிப்பில்லை. பணம் கொடுத்து தான் வாங்க வேண்டும். உங்களுக்கு அருகில் உள்ள கம்ப்யூட்டர் சர்வீஸ் செய்பவர்களை அனுகினால் கிடைக்கப்பெறலாம்.

kalaiselvan2
08-03-2009, 02:18 PM
தோழரே தங்களது செயிதியை படித்தேன் மிக்க நன்றி RM COBOL தவிர வேறு ஏதேனும் உள்ளதா இருப்பின் அதைப் பற்றிய செய்திகளை தயவு செய்து தாருங்கள்

kalaiselvan2
09-03-2009, 02:51 PM
ஓவியன் அவர்களே எனது கேள்வியினை தமிழாக்கம் செய்தமைக்கு மிக்க நன்றி.
கலைச்செல்வன்