PDA

View Full Version : என்னுள் இருக்கும் உனக்கு...!!!!



இன்பக்கவி
07-03-2009, 12:56 PM
எழுதுகிறேன் ஒரு கவி
உனக்காக இல்லை
உன்னால் என் மனதில்
ஏற்பட்ட காயத்தால்..!!

உன்னிடத்தில்
எதை நான் கேட்டேன் ..
எதை எதிர் பார்த்தேன்
உன் அன்பை மட்டுமே ...!!!

அன்புக்கு தான்
நான் அடிமை
அதிலும் நட்பு
தரும் அன்பை
நான் நேசிப்பவள்
அதை சுவாசிப்பவலும்
நானே ..

எல்லாத்தையும்
அள்ளி கொடுத்தாய்
அன்று ஆனால் இன்று
எதுவும் தெரியாதவனாய்....

என் கண்ணீர்
துளிகளால் வடிக்கிறேன்
இக்கவியை
சந்தோசமடைந்த அந்த
அனுதாப நாட்களை
சொல்ல மொழி
தெரியாது அடக்கி
வைத்த நாள் இது ..!!!

சிறு சிட்டு குருவிகளாய்
நீங்கள் சிறகடித்த
நாளும் இது தான்

காயம் பட்ட மனம்
இது வலி ஆறது துடிக்கிறது
காயங்களின் வலியது
எல்லோருக்கும்
புரிவது இல்லை..!!

என் பல இரவுகள்
பகலாய் போனதும் உண்டு
உங்களால் ..!!

நீங்கள் தந்த நேசத்தின்
வலியை என் பாசத்தால்
மறைக்கிறேன்
ஏழை இவளை
புரிந்து கொள்

நீ வாய் திறத்து
தான் பேச வில்லை
அதனாலே வலியது
தங்க வில்லை..!!

இது நீடித்தால்
விபரிதம் அது தோன்றும்
துடிக்கிறது என்
இதயம் துயரம் தாங்காமல்..!!

ஆயிரம் ஆசைகளுடன்
கட்டிய என் மாளிகை
நேற்று பெய்த மழையால்
இன்று நீரனதும் ஏன்...!!!

அக்னி
07-03-2009, 01:17 PM
சந்தோஷமடைந்த நாட்களையும்,,
அனுதாப நாட்களாக்குவதும்..,

மனதிற் காயம் தந்தவரை,
மனதிற் காவவைப்பதுவும்..,

காதலில்தான்...

சுகமானாலும் சுமை... சுமையானாலும் சுகம்...

பாராட்டுக்கள் கவிதா123 அவர்களே...

ஆங்காங்கே எழுத்துப்பிழைகள்... ஆங்காங்கே இடம்நகர்ந்த சொற்கள்...
கவனத்திற் கொள்ளுங்கள்...

சிவா.ஜி
07-03-2009, 06:33 PM
காதல்வலி அது கொடியது. வார்த்தைகளில் அந்த வலி தெரிகிறது. வாழ்த்துகள்

(இன்னும் கொஞ்சம் சீரமைக்கப்பட்டால் நன்றாக இருக்கும். நீங்கள், நீயாகிறது. ஒருமை பண்மை கலந்து வருகிறது. மேலும் அக்னி சொன்னதைப்போல நிறைய எழுத்துபிழைகள். சரியாக்கப்பட்டால் இன்னும் அழகாகும்)

நிரன்
08-03-2009, 11:42 AM
வடிக்கும் கண்ணீர் அவன் பாதம் நனைக்கட்டும்
துடிக்கும் இதயமது அவனைத் தட்டியெழுப்பட்டும்.
பகலாய்ப் போன இரவுகளில் - அவன் மனம்
வெளிச்சமாகட்டும். அங்கே காதல்கள் பூக்கட்டும்..

ஒரு பாடல் வரி ''அந்த நேரம் வந்தால் அழுத காயம் மாறும்'' இந்நிலைதான் காதலில் சோகங்கள் அனைத்தும் மனதை அரவனைக்கட்டும் அவை காதலில் சுகமானவையே... சேரும் காலம் வருககையில் மனதில் காதல் காயங்களுக்கு அன்பே மருந்திடும். அப்போது மனதில் அவை மறைந்திடும்.


நன்றாக உள்ளது கவிதா பாராட்டுக்கள்.

கவிதையில் ''நீங்கள்'' போன்ற வார்த்தைகள் சேர்ப்பதனால் காதலில் ஒரு இடைவெளி தோன்றும் ''நீ'' என்ற சொல் பாவிக்கப்படுகையில் அவை இருக்கமான காதல் மற்றும் நெருக்கம் என்பதைக் காட்டும். கவிதைக்கும் அதுவே அழகு என நினைக்கிறேன்.

samuthraselvam
09-03-2009, 05:09 AM
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும்.
ஆனால் ஆயுள் முடியும்போதுகூட திகட்டாத ஒன்று;
நீயும் உன்னுடைய நினைவுகளும் மட்டுமே.....

ஆயுள் முடியும்போதாவது
என்னைப் பார்க்க வருவாயா?
அல்லது அது முடிந்தபின்
இறுதி ஊர்வலத்தில்
உடன் வருவாயா?


அருமை கவிதா..
அக்னி, சிவா அண்ணா, நிரன் அவர்கள் கூறியதுபோல் ஒருமையில் அழைத்தால் நெருக்கம் அதிகரிக்கரித்து கவிதையை அழகு படுத்தும்.

இளசு
09-03-2009, 08:02 AM
காதல் கவிதைக்கு வாழ்த்துகள் கவிதா123 அவர்களே..


சிவா
நீ , நீங்கள் என ஒருமை, பன்மை கலப்பதால் நெருடுவதை நீங்கள் சொன்னதும்
கங்கை அமரனின் திரைப்பாடல் ஒன்று என் நினைவாடலில் -

'' வாங்களேன் நேரம் பாத்து
வந்து எனைக் காப்பாத்து''


சந்தவெட்டால் வந்த நெருடல்..

அதேபோல் செய்திகளில் இப்படிச் சொல்வார்கள் -
அவர் தன் அறிக்கையில் இப்படி சொன்னார்...

அவர் தம் அறிக்கையில் எனச் சொல்லவேண்டும்..

பன்மை வந்தால் அது இறுதிவரை நிலைக்கவேண்டும் ..