PDA

View Full Version : என் மகளிர் தின நல்வாழ்த்துக்கள் ....



இன்பக்கவி
07-03-2009, 12:45 PM
http://www.tamilmantram.com/vb/picture.php?albumid=36&pictureid=199




மகளிர் தினம் 2009
வாழ்த்துங்கள் வாழவையுங்கள் உங்கள்
உறவுகளை உங்களை படைத்த
கடவுள்களை
வாழ்த்துங்கள்
நீங்கள் உலகை காண அவர்கள்
உயிரை பணயம் வைத்தார்கள்
அவர்களுக்கு
அவர்களின் உணர்வுகளுக்கு
மதிப்பளிப்போம்

இன்று ஒரு நாள்
மட்டும் மகளியருக்காக
அற்பனிப்பது அர்த்தமற்றது,

"அம்மா"

என்றவளுக்கு

என் வாழ்நாள் முழுவதும்
வாழ்த்தினாலும்
அது ஈடாகாது.
வாழ்த்த வார்த்தையும்
இல்ல
வயதும் இல்லை.



*பெண்மை சிறப்பானது*
*பெண்மை மலைப்பானது*
*பெண்மை உயிர்ப்பானது*

*பெண்மையைப் போற்றுவோம்*

மண்ணின் மங்கைகள் அனைவருக்கும் என் மகளிர் தின நல்வாழ்த்துக்கள் ....

கவிதா123

அக்னி
07-03-2009, 12:52 PM
ஒவ்வொருவரின் வாழ்வின் உருவாக்கத்திலும், செயலாக்கத்திலும்
பெண்களின் பங்கு மிக முக்கியமானது.

அன்னையாகச், சகோதரியாக, நண்பியாகக், காதலியாக, மனைவியாக
என் வாழ்வை மலரவைத்த, மலரவைக்கப்போகின்ற,
அனைத்து மகளிருக்கும் எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்...

தாமரை
07-03-2009, 02:17 PM
மகளிர் தினத்தன்று என்ன செய்வது?

யவனிகா சொன்னது இன்னும் ஞாபகம் இருக்கு..

அதையே செய்யப்போகிறேன்.

அனைத்து மகளிரையும் வணங்கி வாழ்த்துகிறேன்.

பா.ராஜேஷ்
07-03-2009, 02:58 PM
தாயை, தமக்கையை, தாரத்தை மட்டுமல்லாது
தரணியில் உள்ள அனைத்து
தாரகைகளையும் மதித்து போற்றுவோம்

அனைவருக்கும் இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்!!!

சிவா.ஜி
07-03-2009, 06:29 PM
உலகின் மகத்தான சக்தி பெண்மை. அனைத்து உலக மகளிருக்கும் இந்த உலக மகளிர் தினத்தில் என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.

பாரதி
08-03-2009, 12:28 AM
உலக மகளிர் அனைவருக்கும் இனிய வாழ்த்துகள்.

சசிதரன்
08-03-2009, 01:43 PM
அன்பின் மொத்த வடிவம் பெண்கள். இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்...:)

samuthraselvam
09-03-2009, 04:48 AM
கவிதாவுக்கும் இனிய மகளிர்தின வாழ்த்துக்கள்...

அக்னி அண்ணா, தாமரை அண்ணா, பா.ராஜேஷ் அண்ணா, சிவா.ஜி அண்ணா, பாரதி அண்ணா, சசிதரன் அண்ணா
அனைவருக்கும் பெண்களின் சார்பாக நன்றி... !

மங்கையராய் பிறப்பதற்கே
மாதவம் செய்திடல் வேண்டும்மம்மா....
என வேண்டினான் ஒரு மீசைக்கார ஆண் கவி...

பாவம் அவர் அறியவில்லை,

மங்கையராய் பிறந்திட
நாங்கள் செய்த பாவமென்ன?
எனக்கேட்கும் பல
அப்பாவிப் பெண்களின் மனதை..

பெண்களே நம்மை நிலவோடு
ஒப்பிட்டால் பெருமையாய்
ஒத்துக்கொள்ளுங்கள்;
பிறருக்காய் தேய்வதுபோல்;
நமக்காய் வளர்வோம்.