PDA

View Full Version : bluetooth உதவிதேவை



siva
05-03-2009, 03:53 PM
அனைவருகும் வணக்கம்... எனது கணினி ஏசர் டிராவல்மேட் 4001LCi. புதிதாக வாங்கும்பொழுது விண்டோஸ் எக்ஸ்பி ஹோம் எடிஷன். தற்பொழுது நான் அதனை ப்ராfஎசினல் எடிஷனாக(எஸ். பி. 2) மாற்றி விட்டேன். இதில் என்ன கோளாறு என்றால், தற்பொழுது no bluetooth device என்று வருகின்றது. எப்படி இப்பிரச்சினையை களைவது?

praveen
06-03-2009, 03:40 AM
நீங்கள் உங்கள் ப்ளு டூத் சுவிட்சை ஆன் செய்ய மறந்து விட்டீர்கள். லேப்டாப் சைடில் ப்ளு டூத் என்ற சிம்பல் போட்டு ஒரு சுவிட்ச் இருக்கும் அதனை விண்டோஸ் லோடாகி ப்ராம்ப்ட் கிடைத்த பின் ஆன் செய்தால் அந்த சுவிட்ச் ப்ளு கலரில் ஒளிரும்.

அதற்கும் மேல் பிரச்சினை நீடித்தது, என்றால் ஏசர் விற்பனையாளரிடம் புகார் செய்யுங்கள். அவர் உதவுவார்.

பாரதி
06-03-2009, 06:06 AM
அன்பு நண்பரே,
பிரவீண் கூறியுள்ளபடி முயற்சித்துப்பாருங்கள்.

அப்படி செய்தும் பலனளிக்கவில்லை எனில் விண்டோஸ் எக்ஸ்-பி நிறுவிய பின்னர் "மதர்போர்ட்" டிரைவர்ஸை சரியானபடி நிறுவி இருக்கிறீர்களா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

உங்களுக்கு ப்ளுடூத் டிரைவர் வேண்டுமெனில் ஏசர் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கி நிறுவுங்கள்.

http://www.howtodrivers.com/model519593.html
என்ற சுட்டி உங்களுக்கு ஒருவேளை உதவக்கூடும்.

siva
07-03-2009, 12:09 PM
நான் அந்த சுவிட்ச்சை ஆன் செய்தால் நோ டிவைஸ் என்று வருகிறது. டிரைவர் நிறுவினால் cant find device என்றே வருகிறது. வேறு ஏதாவது வழிகள் உள்ளதா?

praveen
08-03-2009, 04:52 AM
நீங்கள் குறிப்பிட்ட அந்த மாடலில் Specification-ல் ப்ளுடூத் இல்லை. ஆனால் அந்த பட்டனை அவர்கள் அந்த சீரிஸ் சிலவற்றில் ப்ளுடூத் வருவதால் அதில் வைத்திருக்கலாம். ஆனால் உங்கள் பதிலில் முன்னர் வேலை செய்தது, பின்னர் அப்கிரேடு செய்த பின் வேலை செய்வது என்பது போல பதிந்துள்ளீர்கள்.

நீங்கள் வாங்கும் போது அல்லது, முதலில் அப்கிரேடு செய்யும் முன் ப்ளுடூத் அதில் வேலை செய்வதை உறுதி செய்திருக்கிறீர்களா?.

இல்லை என்றால் அந்த மாடலில் ப்ளுடூத் டிவைஸ் மட்டும் உள்ளே சேர்க்கப்படவில்லை என்றே அர்த்தம்.

ஆம் என்றால் ஏசர் விற்பனை செய்த அலுவலகத்தை அனுகுங்குள்.

siva
08-03-2009, 01:02 PM
நன்றி பிரவின். நான் முதலில் வாங்கும் போது அது சரியாக வேலை செய்தது.