PDA

View Full Version : இலங்கை தமிழர்களுக்காக ஜெயலலிதா உண்ணாவிரதப் போராட்டம்தூயவன்
05-03-2009, 02:46 PM
இலங்கை தமிழர்களுக்காக உண்டியல் மூலம் நிதி திரட்ட அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை

இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்காத மத்திய அரசு மற்றும் அதற்கு உறுதுணையாக இருந்து வரும் தி.மு.க. அரசைக்கண்டித்தும், இலங்கையில் உடனடி போர் நிறுத்தம் ஏற்பட நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியும், அதிமுக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் 10 ந்தேதி செவ்வாய்க்கிழமை அன்று காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறும்.

சென்னையில் நடைபெறும் உண்ணாவிதப் போராட்டத்திற்கு நான் தலைமை ஏற்கிறேன்.

மற்ற மாவட்டத் தலைநகரங்களில் நடைபெற உள்ள உண்ணாவிரத அறப்போராட்டத்தில் தலைமைக் கழக நிர்வாகிகள் பங்கேற்பார்கள். ஒவ்வொரு மேடையிலும் இலங்கைத் தமிழர்களுக்காக நிதி திரட்ட உண்டியல் வைக்கப்படும்.

சென்னை உண்ணா விரதப்பந்தலில் வைக்கப்படும் உண்டியலில் முதலில் எனது சார்பில் இலங்கைத் தமிழர்களுக்கு நிதியை அளித்து தொடங்கி வைக்க உள்ளேன். கழக உடன்பிறப்புகள் அவரவர் சக்திக்கு ஏற்ப தங்களால் முடிந்த நிதியுதவியை அந்த உண்டியலில் செலுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

அந்தந்த மாவட்டங்களில் வைக்கப்படும் உண்டியலில் செலுத்தப்படும் நிதிகளை சம்பந்தப்பட்ட மாவட்டக் கழகச் செயலாளர்கள் பின்னர் தலைமைக் கழகத்தில் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி : தமிழ்வின்

என்ன கொடுமை சார் இது :traurig001:

குறிப்பு : நண்பர்களின் மனதை பாதிக்காதவாறு கருத்துகளை கூறவும்.
ஒத்துலைப்புக்கு
நன்றி

அன்புரசிகன்
05-03-2009, 03:34 PM
எப்போது பொதுத்தேர்தல்???

நிரன்
05-03-2009, 03:51 PM
நெருங்கிவிட்டது பொதுத் தேர்தல்... என்பதனை எடுத்துக் காட்டுகிறது

arun
06-03-2009, 02:37 AM
ஆகா என்ன ஒரு அக்கறை ஓ தேர்தல் வருதோ ... :icon_rollout: :icon_rollout:

ஓவியன்
06-03-2009, 04:25 AM
என்ன செய்வது ஒவ்வொருவருடைய முன்னைய நடவடிக்கைகள், அவர்கள் பிற்காலத்தில் நல்ல விடயங்களைச் செய்தாலும் தப்பான கோணத்தில் வைத்து ஆராய வைத்து விடுகிறதே....

நல்ல எண்ணத்துடன் ஜெயலலிதா இந்த உண்ணாவிரதத்தை மேற்கொள்கிறார் என்ற நம்பிக்கையுடன், இவ்வாறான செயற்பாடுகள் வன்னியில் அல்லறும் நம் மக்களின் துயரங்களைத் தீர்க்காதாவென நானும் அங்கலாய்க்கின்றேன்....

aren
06-03-2009, 05:31 AM
இது இலங்கை தமிழர்களுக்குக்காக மேற்க்கொள்ளப்படும் உண்ணாவிரதம் என்று யாரும் நினைக்கவேண்டாம். அடுத்த மாதம் தேர்தல் வருகிறது. அதற்குத்தான்.

பாவம் இலங்கைத்தமிழர்கள், இங்கேயும் பந்தாடப்படுகிறார்கள் என்பது வேதனையே.

இந்த உண்ணாவிரதத்தை தேர்தல் முடிந்தபின் அறிவித்திருக்கலாமே.

எல்லா இடத்திலும் அரசியல் என்பது தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது.

பாவம் தமிழர்கள். இதை புரிந்துகொள்வார்களா?

praveen
06-03-2009, 05:49 AM
தூள் படத்திலே அமைச்சர் காளைப்பாண்டியன் என்பவர் கடைசியில் இப்படி செய்வார். அதற்கு பிறகு அவர் நினைத்தது நிறைவேறாது என்பது வேறு விசயம்.

அப்பட்டமான அரசியல்.

ஆதி
06-03-2009, 05:54 AM
//அதிமுக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் 10 ந்தேதி செவ்வாய்க்கிழமை அன்று காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறும்.
//

உண்ணாவிரதம் 9-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுவிட்டது..

இதே அம்மா 2 மாதத்துக்கு முந்தி, கலைஞர் இத்தனை முறை முதல்வராய் இருந்தும் அவருக்கு சட்டம் தெரியலை, இந்திய அரசுக்கு இலங்கை போரில் தலையிட எந்த உரிமையுமில்லை அப்படினு சொன்னாங்க..

திமுக போர்நிறுத்தத்தை வலியுறுதி சட்டபையில் தீர்மானம் நிறைவேற்றிய போது, திமுகவின் நோக்கம் இலங்கை தமிழர்களை பாதுகாக்க நினைக்கவில்லை புலிகளை காப்பாற்றவே போராடுகிறது னு சொன்னாங்க..

போர் நடந்த மக்கள் சாகத்தான் செய்வாங்க இதில் என்ன இருக்கு னு இதே அம்மா மனசாட்சி இல்லாம கேட்டாங்க..

இப்ப உண்ணாவிரதம் இருக்க போறாங்களாம்..

கா.ரமேஷ்
06-03-2009, 05:55 AM
போர் நடைபெரும் பொழுது பொதுமக்கள் கொல்லப்படுவதும் ... துன்பபடுவதும் இயல்பானது என சொன்ன அரசியல் நாடக கோமாளி இன்று அடுத்த வேடம் புனைய ஆரம்பித்திருக்குறது தேர்தலுக்காக.........

ஓவியன்
06-03-2009, 06:08 AM
என்ன செய்வது, அவரவர் தத்தம் இருக்கைகளைத் தக்க வைப்பதற்காகப் பிரயத்தனப் படுகிறார்கள்...

ஆனால் என்ன செய்தாவது, தம் உயிருக்காகப் போராடும் ஈழ மக்களுக்காக ஒரு வெளிச்சக் கீற்று எங்கிருந்தாவது உதிக்காதா என்பது என் எண்ணம்...

அது, அப்பட்டமான அரசியலாக இருந்தாலும் அதனை நல்ல வழியில் பயன்படுத்த முடியுமா, அதன் மூலம் அப்பாவிப் பொதுமக்களின் உயிர்களில் கொஞ்சமேனும் காப்பாற்றப் படுமா...??

என்று சிந்திக்க வேண்டிய நிலையில் நாமிருப்பதாக நான் எண்ணுகிறேன்....

அறிஞர்
06-03-2009, 02:10 PM
நடக்கும் சம்பவங்களை.. தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள்.. அரசியல்வாதிகள். இதில் நாம் சொல்ல என்ன இருக்கிறது.

மன்மதன்
06-03-2009, 03:44 PM
தேர்தல் நிதி எப்படியெல்லாம் திரட்டப்படுகிறது..

skrishsam
08-03-2009, 02:19 PM
முன்பு கருணாநிதி உண்ணாவிரதம் அறிவித்தபோது நகைத்தவர், இப்போது தானும்..இந்த கொடுமையெல்லாம் இன்னும் எத்தனை நாள் தாங்குவது?

அய்யா
08-03-2009, 02:50 PM
தேர்தல் காற்று அடித்தால் ஆலமரங்கள்கூட ஆட்டம்காணத் துவங்குகின்றன!