PDA

View Full Version : துபாய் கணவா....!!!



சிவா.ஜி
04-03-2009, 06:21 PM
நேற்று நண்பரொருவர் எனக்கனுப்பிய மின்னஞ்சலில் இந்தக் கவிதையைக் கண்டதும் பிடித்த வரிகளை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்பினேன்.


மறைந்திருந்து கட்டிப்பிடிப்பாய்... கையிலிருப்பதை தட்டிப்பறிப்பாய்
கெஞ்சுவதும்... மிஞ்சுவதும்...
அழுவதும்... அணைப்பதும்...
கண்டிப்பதும்... கண்ணடிப்பதும்...
இடைகிள்ளி... நகை சொல்லி...
அந்நேரம் சொல்வாயடா "அடி கள்ளி "
ٌ இவையெல்லாம் இரண்டே மாதம் தந்துவிட்டு...
எனை தீ தள்ளி வாழ்வள்ளி சென்றுவிட்டாய்... என் துபாய் கணவா!
ٌ கணவா... - எல்லாமே கனவா.......?


கணவனோடு இரண்டு மாதம்... கனவுகளோடு இருபத்தி இரண்டு மாதமா...?
ٌ 12 வருடமொருமுறை குறிஞ்சிப்பூ ... 5 வருடமொருமுறை ஒலிம்பிக்....


4 வருடமொருமுறை உலககோப்பை கிரிக்கெட்... ...


2 வருடமொருமுறை கணவன் ...


நீளும் பட்டியலோடு நீயும் இணைந்துகொண்டாய்!
ٌ இது வரமா ..? சாபமா..?


பாசாங்கு வாழ்க்கை புளித்துவிட்டது கணவா!


ٌ தவணைமுறையில் வாழ்வதற்கு வாழ்க்கை என்ன வட்டிக்கடையா?
எப்பொழுதாவது வருவதற்கு நீ என்ன பாலை மழையா ?
இல்லை ஓட்டு வாங்கிய அரசியல்வாதியா ?


ٌ விரைவுத்தபாலில் காசோலை வரும் காதல் வருமா ?
பணத்தை தரும்... பாரத வங்கி ! பாசம் தருமா?


ٌ நீ இழுத்து செல்கின்ற பெட்டியோடு ஒட்டியிருக்கிறது என் இதயம்
அனுமதிக்கப்பட்ட எடையோடு அதிகமாகிவிட்டதால் விமான நிலையத்திலேயே விட்டுவிட்டாயோ என் இதயத்தை?


பித்தளையை எனக்கு பரிசளித்துவிட்டு... நீ தங்கம் தேடி துபாய் சென்றாயே?
ٌ பாலையில் நீ வறண்டது என் வாழ்வு!


வாழ்க்கை பட்டமரமாய் போன... பரிதாபம் புரியாமல் ஈச்சமரம் பக்கம் நின்று எடுத்த புகைப்படம் அனுப்புகிறாய்!



உன் துபாய் தேடுதலில்... தொலைந்து போனது - என் வாழ்க்கையல்லவா..?
ٌ விழித்துவிடு கணவா! விழித்து விடு - அந்த கடவுச்சீட்டு வேண்டாம்... கிழித்துவிடு!

-வண்ணத்துப்பூச்சியார்-

அன்புரசிகன்
04-03-2009, 06:33 PM
வாஸ்தவம் தான். ஆனால் எத்தனை நாள் பாசத்துடன் குடும்பத்தினை நடத்துவது.??? பணம் வேண்டுமே... பாசம் சாப்பாடு போடுமா? அங்கே தானே இடிக்கிறது. ஊரில் அன்றாட உழைப்பிற்கு வழி இருக்கும் என்றால் சொர்க்கம் அங்கு தானே.........

இல்லையென்றால் விதியா? இங்கு வந்து மாரடிக்க? இல்லையா சிவாண்ணா...

அறிஞர்
04-03-2009, 06:37 PM
பணமா?? பாசமா?? எனப் பட்டிமன்றமே வைத்துவிடலாம் போல....
பணத்துடன், பாசத்துடன் துபாயில் வாழ வாய்ப்பு கிடைத்தால் சந்தோசமே...
நன்றி சிவா.ஜி.

அன்புரசிகன்
04-03-2009, 07:00 PM
பணமா?? பாசமா?? எனப் பட்டிமன்றமே வைத்துவிடலாம் போல....
பணத்துடன், பாசத்துடன் துபாயில் வாழ வாய்ப்பு கிடைத்தால் சந்தோசமே...
நன்றி சிவா.ஜி.
பணம் தான் அங்கும் நிர்ணயிக்கிறது அண்ணா...

முன்பு 3000 DHS எல்லையாக இருந்த வருமானத்தொகை தற்சமயம் 10000 DHS ஆக ஐ.அ.ரா அரசு மாற்றிவிட்டது. அதுவும் 6 மாத வங்கி விபரணம் காட்டினால் தான் குடும்பத்தினை அழைக்கலாம்...

இங்கு சிறப்பாக வாழ பணம் மற்றும் வேலைசெய்யும் கம்பனிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன...

நான் பார்த்து பொறாமைப்பட்ட நபர் பாரதி அண்ணா... (துபாயில்) கண்பட்டுவிடக்கூடாது... ஆனால் உண்மையில் கொடுத்துவைத்தவர். அவருக்கு துபாயில் இருக்கிற நினைப்பே இருக்காது. :D

Ranjitham
04-03-2009, 10:37 PM
என்னுடைய கணவரின் 15 வருட இரானுவ வாழ்க்கையில் 11 வருடங்கள் அவருடன் இருந்துள்ளேன் 1977-1989. இரண்டு குழந்தைகள் பிரசவத்திற்க்கும் என் தாய் தில்லி மற்றும் பெங்களுர் வந்தார். பலசமயங்களில் ஒரெ அரையில் குடும்பம் நடத்தியுள்ளோம். எல்லையோர ‘குவார்டர்சில் சேரிங்முரையில்’ ஒரெ வசிக்கும் வழி, பலமுரை குடிமாரியுள்ளோம். சிருவயதில் கனவருடன் வசித்த சந்தோசத்தில் மற்ற சிரமங்கள் பெரிதாய் தெரியவில்லை. இன்று நினைத்தாலும் புல்ல்ரிக்கின்றது. இந்த பழாய் போன வருமையின் காரனமாக பிரிந்த கனவனைநினைத்து வந்த கவிதை கண்ணீரை வரவழைத்தது. அவர்கள் சேர்ந்துவாழ வழி இல்லையா? வெளிநாட்டில் 50 ஆயிரம் சம்பாதிப்பதும் உள்நாட்டில் 5 ஆயிரம் போதுமனது, என் கருத்து். கனவன் மனைவி இருவரும் வேலை செய்தால் பிரிவை தவிற்கலாமே.
நன்றியுடன்
இரன்சிதம்

அறிஞர்
04-03-2009, 11:25 PM
என்னுடைய கணவரின் 15 வருட இரானுவ வாழ்க்கையில் 11 வருடங்கள் அவருடன் இருந்துள்ளேன்

இந்த பழாய் போன வருமையின் காரனமாக பிரிந்த கனவனைநினைத்து வந்த கவிதை கண்ணீரை வரவழைத்தது. அவர்கள் சேர்ந்துவாழ வழி இல்லையா? வெளிநாட்டில் 50 ஆயிரம் சம்பாதிப்பதும் உள்நாட்டில் 5 ஆயிரம் போதுமனது, என் கருத்து். கனவன் மனைவி இருவரும் வேலை செய்தால் பிரிவை தவிற்கலாமே.
நன்றியுடன்
இரன்சிதம்
தங்களை போன்று பலர் எண்ணினால் குடும்பங்கள் ஒன்றாய் இணைந்து இன்புறும்.
வறுமையின் கோடு, செழிப்பாக வாழ எண்ணும் எண்ணம்.. சிலரை இந்த சூழ்நிலைக்கு தள்ளுகிறது.

அக்னி
04-03-2009, 11:56 PM
சொந்த நாட்டில் உழைப்பில்லை.
வந்த நாட்டில் உறவில்லை.

வரமா சாபமா என்று வகுத்துக்கொள்ள முடியாத நிலை.

பகிர்வுக்கு நன்றி சிவா.ஜி...

ரங்கராஜன்
05-03-2009, 03:14 AM
சொந்த நாட்டில் உழைப்பில்லை.
வந்த நாட்டில் உறவில்லை.

வரமா சாபமா என்று வகுத்துக்கொள்ள முடியாத நிலை.

பகிர்வுக்கு நன்றி சிவா.ஜி...

அருமையான வரிகள் கண்கள் ஒரு நிமிடம் கலங்கி விட்டன..... பகிர்வுக்கு நன்றி அண்ணா

samuthraselvam
05-03-2009, 03:20 AM
இந்த பழாய் போன வருமையின் காரனமாக பிரிந்த கனவனைநினைத்து வந்த கவிதை கண்ணீரை வரவழைத்தது. அவர்கள் சேர்ந்துவாழ வழி இல்லையா? வெளிநாட்டில் 50 ஆயிரம் சம்பாதிப்பதும் உள்நாட்டில் 5 ஆயிரம் போதுமனது, என் கருத்து். கனவன் மனைவி இருவரும் வேலை செய்தால் பிரிவை தவிற்கலாமே.


ரஞ்சிதம் சொன்னது போல் அந்த 5000 ரூபாயில் கூட அளவுடன் செலவழித்து மிச்சம் பிடிக்கும் குடும்பங்களும் நம் நாட்டில் உள்ளது.

பணம் எவ்வளவு இருந்தாலும் பாசத்தால் கிடைக்கும் நிம்மதி குடும்பத்துடன் இருக்கும்போது மட்டுமே கிடைக்கும். பணம் ஒரு போதை. அது கிடைக்க கிடைக்க இன்னும் அதிகமாக்க வேண்டும் என்று எண்ண வைக்கும் போதை. பெரும்பாலோர்கள் தேவைக்காக பணம் சேர்க்க செல்லுபவர்களே. ஆனால் போதுமான பணம் சேர்த்த பிறகும் அவர்களுக்கு அதன் மீது வரும் ஆசை குடும்ப பிரிவை அதிகமாக்குகிறது.

கவிதை பிரிந்த மனைவியின் மனதை அப்படியே பிரதிபலிக்கிறது அண்ணா... பகிர்ந்தமைக்கு நன்றி அண்ணா....

விகடன்
05-03-2009, 04:30 AM
கிழித்து விடு கணவா... கிழித்துவிடு என்று சொன்னதும் எனக்கு ஞாபகத்துக்கு வந்தது என்னவோ திருமண அத்தாட்சிப் பத்திரம்(தாள்) தான்.

பின்னர்த்தானே விளங்கியது டுபாயிலிருக்கும் கணவனின் பயணச் சீட்டை கிழித்துவிட்டு தொடர்ந்தும் டுபாயிலேயே இருக்கச் சொல்லியிருப்பது...

இதுக்கு மதி அண்ணாதான் பதில் தரணும் :D
ஏன்...
சிவாஜி கூட தரலாம்.

நேசம்
05-03-2009, 07:00 AM
அன்புரசிகன் சொல்வது பணத்துடன் பாசத்துடன் துபையில் வாழ ஓன்றை இழந்தால் தான் ஒன்றை பெறமுடியும்.அதனால் அது சாபமா அல்லது வரமா என்பது அவரவர்களின் மனநிலை பொறுத்தது.

இந்த கவிதை கணவர்களை பிரிந்து வாழும் ஒட்டு மொத்த பெண்களின் குமுறலாக இருக்கிறது. பகிர்தலுக்கு நன்றி சிவாண்னா

arun
06-03-2009, 02:55 AM
ஆம் ஒன்றை இழந்தால் தான் ஒன்றை பெற முடியும் ஆனால் எதை இழக்க வேண்டும் என்பதில் தான் தெளிவாக இருக்க வேண்டும்

கசப்பான உண்மைகளை இந்த வார்த்தைகள் பிரதிபலிக்கின்றன

மன்மதன்
06-03-2009, 03:47 PM
ٌ விழித்துவிடு கணவா! விழித்து விடு - அந்த கடவுச்சீட்டு வேண்டாம்... கிழித்துவிடு!

இப்போதைய துபாயில் நிலவரத்தை பார்த்தால் இந்த வரிகள் ரொம்ப பொருந்தும் என்று நினைக்கிறேன்...

குணமதி
06-02-2010, 06:46 AM
நடைமிறையில் காணும் அவலம்,

நன்றாக வெளிப்படுத்தப் பட்டிருக்கிறது!

பாராட்டு.

sunson
27-04-2010, 05:03 PM
வெளிநாடுகளில் வாழும் பலரின் நிலை இதுதான் .
பெரியவர்கள் சரி நல்வாழ்விற்காக, பணத்திற்காக,
பொருளாதார மேன்மைக்காக, சமுதாய அந்தஸ்த்திற்காக
பிரிந்து வாழலாம், அல்லது வாழ வேண்டிய சூழ்நிலை
என காரணம் சொல்லலாம் . ஆனால் குழந்தைகள்
என்ன தவறு செய்தார்கள் . இந்த குற்ற உணர்வுடனே
இங்கு காலத்தை தள்ள வேண்டியுள்ளது.
கவிதையை படித்த போது கண்ணீர் எட்டிப் பார்த்தது.

எனக்கும் சில வேளைகளில் விடுமுறையில் ஊர்
வரும் போது தோன்றும் , பாஸ்போர்ட்டை கிழித்து
போட்டுவிட்டால் என்ன என்று . .......

aren
28-04-2010, 10:33 AM
பணமே முக்கியமான விஷயமாக ஆகிவிட்டது இன்றைய காலகட்டத்தில், மற்றதெல்லாம் அதற்கு அடுத்தபடிதான், என்ன செய்வது. இதுதான் இன்றைய நிலமை.

ஸ்ரீதர்
29-04-2010, 07:28 AM
மிக அருமையான கவிதை ...

நிதர்சனத்தை அப்பட்டமாக காட்டும் வரிகள்...

எது சரி?? எது தவறு?? என்பது அவர் அவர் சூழ்நிலையை பொறுத்து மாறும்.

ஆனால் இன்றைய மனிதனின் வாழ்வில் பணம் , அதன் தேவை முக்கிய பங்கு வகிக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

ooveyam
07-06-2010, 08:04 AM
பகிர்வுக்கு நன்றி..........

அனவருக்கும் பணம் புகல் தேவை அதற்க்கத்தான் வெளிநாடு வ்ருகேறோம் அனால் அதே வாழ்கை கிடையது குடும்பம் தேவை அதனால் ஒரு கால வரை இருக்க வேண்டும் . பணம்
தேவை நாம் சாகும் வரை இருக்கும் அதை மனதில் வைத்து இருபது நல்லது

ooveyam
07-06-2010, 08:05 AM
அனவருக்கும் பணம் புகல் தேவை அதற்க்கத்தான் வெளிநாடு வ்ருகேறோம் அனால் அதே வாழ்கை கிடையது குடும்பம் தேவை அதனால் ஒரு கால வரை இருக்க வேண்டும் . பணம்
தேவை நாம் சாகும் வரை இருக்கும் அதை மனதில் வைத்து இருபது நல்லது

nambi
07-06-2010, 08:40 AM
பிறக்க ஒரு நாடு பிழைக்க ஒரு நாடு இந்த அவல நிலை மாறவேண்டும். அதுவும் உறவுகளை தவிக்கவிட்டு செல்வது....மிகப்பெரிய பேரிழப்பு. பின் எல்லாம் இருக்கும் உறவுகள் இருக்காது. அப்போது எல்லாமே வெறுமையாக தோன்றும்....வீணாகவும் தோன்றும். சென்று வந்தவர் சொல்ல கேட்டது.

திரைகடலோடியும் திரவியம் தேடு என்று கூறியது இன்றும் தொடருகிறது......

என்ன வளம் இல்லை இத்திருநாட்டில் என்று எண்ணுவதற்கும் வழியில்லை....

இருப்பதை கொண்டு வாழவும் சமூகம் வழிவிடுவதில்லை....

எதையும் இழக்காமல் வாழவே மனித மனம் விரும்பும். நம் பொருட்டு பிறரும் பல விஷயங்களை இழக்கின்றனர், பல இன்பங்களை துறக்கின்றனர்..... என்பதை உணர்ந்தாலே போதும்....

பகிர்வுக்கு நன்றி!

nellai tamilan
07-06-2010, 04:29 PM
அருமையான கவிதை.
படித்ததும் மனதில் ஏதோ ஒரு இனம் புரியாத வலி வந்து படர்ந்தது உண்மைதான்.

காதலும், காதலியும், பிள்ளைகளும் நன்றாக வாழ்வதற்கு ஏதாவது ஒரு தியாகத்தை செய்தாக வேண்டி இருக்கிறது. அதற்கு திரை கடல் ஓட வேண்டியிருக்கிறது.

ஏதாவது ஒன்றை இழந்தால் தான் ஒன்றை பெற முடியும் போலிருக்கிறது என்ன செய்வது அதுதான் வாழ்க்கை.

கணவனின் தியாகம் குடும்பதிற்க்கு விமோற்சனம்

நல்ல கவிதையை பகிர்ந்தமைக்கு நன்றி நண்பா