PDA

View Full Version : கணிணியை பார்மெட் செய்வது எப்படி ?raj144
04-03-2009, 03:12 PM
கணிணியை பார்மெட் செய்வது எப்படி ?

கணிணியை பார்மெட் செய்வது எப்படி? என்பது குறித்து எளிடய முறை (step by step) விளக்கம் கிடத்தால் மிகவும் நல்லது. இதே கேள்வி ஏற்கனவே இருந்தால் தயவய் நீக்கிவிடவும் (சுட்டி எதுவும் இருநால் தறவும் விண்டோ xp க்கு வேண்டி தேவை என்னிடம் சில பழைய தகவல்கள் இருநது இப்போது xp க்கு (p4 desk top) தேவை) நானிருக்குமிடத்தில் கிடைக்கவில்லை.

அன்புரசிகன்
04-03-2009, 03:45 PM
முதலில் உங்கள் கணினியின் சீமோஸ் செட்டப் சென்று உங்கள் கணினியின் boot ஓடரில் சீடி ரொம் இற்கு முதல் priority ஐ கொடுங்கள். பின்னர் சேவ்செய்துவிட்டு exit ஆகுங்கள். உங்கள் கணினியின் ரொம் இல் boot able xp setup cd இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.

பின்னர் boot ஆகும் போது CD யிலிருந்து boot ஆக press any key என்று சொல்லும். சொன்னபடியே செய்யுங்கள். பின்னர் அதுவாகவே ஆடி ஓடி ஒரு கட்டத்திற்கு வந்து அவர்களது agreement ஐ ஏற்க F8 ஐ அழுத்த சொல்லும். செய்யுங்கள்.

பின்னர் fresh installation ஐ தெரியுங்கள்.

பின்னர் எந்த ட்ரைவில் நிறுவவுள்ளீர்கள் என்று கேட்கும். தெரிவுசெய்யுங்கள். அதை போர்மட் செய்யப்போகிறீர்களா என்று கேட்கும். அதுவும் இரண்டுவகை QUICK and Full. மற்றது உங்கள் hard disk ன் file type ஐயும் கூடவே தெரியவேண்டி வரும். (FAT 32 or NTFS)

உங்கள் கணினிக்கு வின்டோ 98 போடாதவரை நீங்கள் எதையும் தெரிவுசெய்யலாம். ஆனால் quick format ஆனது சாதாரணமாக அழிப்பது போன்றது. Full format தான் சிறந்தது.

format செய்யும் முன் உங்கள் அந்த ட்ரைவில் உள்ளவற்றை (உங்களுக்கு தேவையான தகவல்களை) பாதுகாப்பான இடத்திற்கு மாற்றுங்கள்.

பின் அதுவாகவே format செய்து கோப்புக்களை உங்கள் கணினிக்கு கொப்பி செய்யும்.பின்னர் உங்கள் கணினி தானாகவே restart ஆகும். எதுவும் நீங்கள் செய்யவேண்டாம். (மீண்டும் சீடியிலிருந்து பூட் ஆக கேட்கும். அப்படி செய்யவேண்டாம். நீங்கள் ஒன்றும் செய்யாது விட்டால் அது தானாக xp logo உடன் பூட்டாகிவரும்)

பின்னர் எனக்கு அச்சொட்டாக ஞாபகம் இல்லை. உங்கள் கணினியின் time language போன்றவற்றை தெரிய சொல்லும். ஆநேகமாக மாற்றம் தேவையில்லை. பின்னர் CD KEY கேட்கும். கொடுங்கள்.

அத்துடன் தானாகவே அது நிறுவி முடித்துவிடும். நீங்கள் நினைப்பது போல் பெரியவிடையமாக இருக்காது.

ஆனால் உங்கள் கணினியின் வன்பொருட்களுக்கான செயல் மென்பொருட்களை (driver software) அனைத்தும் இருக்கிறதா என்று நிச்சயப்படுத்திக்கொண்டு செயலில் இறங்குங்கள். XP serial number ம் கூட............

மேலதிக சந்தேகம் இருந்தால் கேளுங்கள்.

அன்புரசிகன்
04-03-2009, 03:49 PM
அனைத்து தேவையான கட்டளைகளும் கணினித்தினையின் அடிப்பாகத்தில் தோன்றும். (நீங்கள் எந்த பொத்தான்களை அழுத்தவேண்டும் என்பதை)

சில youtube கோப்புக்கள் இங்கே இணைக்கிறேன். அதையும் பார்த்துவிடுங்கள்.
http://www.youtube.com/watch?v=XSJTgvet9QY
http://www.youtube.com/watch?v=n0cop_am1WM

அன்புரசிகன்
04-03-2009, 03:56 PM
இந்த ஒளிக்கோவைகளில் delete partition ஐ பற்றி சொல்லியிருக்கிறார்கள். அது தேவையில்லாதது. ஆனால் நீங்கள் உங்கள் வன்தட்டினை சிலபாகங்களாக பிரிக்கவேண்டும் என்றால் அது இன்றியமையாதது. எதற்கும் நன்றாக தெளிந்து முயற்சியில் இறங்குங்கள். முக்கியமான கோப்புக்களை தேவையான இடத்திற்கு மாற்றிவிடுங்கள்.

சிவா.ஜி
04-03-2009, 04:01 PM
மிக அருமையான விளக்கம் அன்பு. நான் முன்பே பலமுறை செய்ததுதானென்றாலும் இதுவரை quick format தான் செய்து வந்திருக்கிறேன். ஆனால் full format தான் சிறந்தது என்பது இந்த விளக்கம் வாயிலாகத் தெரிய வந்தது. நன்றி அன்பு.

raj144
04-03-2009, 06:48 PM
எனக்கு வேண்டி இத்தனை சமயம் எடுத்து அதனை தந்தமைக்கு அன்பு ரசிகன் அவர்களுக்கு மிக்க நன்றி நன்றி., நீங்கள் கொடுத்த்ள்ள விடீயோ சிளிப்ஸை அப்படியே காப்பி செய்து வைத்துள்ளேன்.file typeல் (FAT 32 OR NTFS) எது நல்லது 2வது நல்லது வைரஸ் தொல்லை குறைவு என்று கேள்விப்பட்டேன் அது சரிதனா? விளக்கம் அளித்தால் நல்லது .இனி எதுவும் ச்ந்தேகம் இருந்தால் பிறகு கேட்க்கிறேன் நன்றி வணக்கம்

அன்புரசிகன்
04-03-2009, 06:55 PM
NTFS ற்கும் வைரஸிற்கும் என்ன சம்பந்தம் என்று எனக்கு தெரியவில்லை. file and folder permissions, encryption, and file compression ஆகியன NTFS ல் செய்யலாம் FAT 32 ஆக இருந்தால் இவற்றை செய்யமுடியாது...

குறிப்பாக பல பாவனையாளர்கள் இருக்கிமிடத்து அவர்களது அனுமதிகளை கட்டுப்படுத்த NTFS வகை உதவும்...

windows help ல் இரண்டைப்பற்றியும் குறிப்பிட்டுள்ளார்கள்...

----------------------------------
A file system is the underlying structure a computer uses to organize data on a hard disk. If you are installing a new hard disk, you need to partition and format it using a file system before you can begin storing data or programs. In Windows, the three file system options you have to choose from are NTFS, FAT32, and the older and rarely-used FAT (also known as FAT16).
NTFS

NTFS is the preferred file system for this version of Windows. It has many benefits over the earlier FAT32 file system, including:


The capability to recover from some disk-related errors automatically, which FAT32 cannot.
Improved support for larger hard disks.
Better security because you can use permissions and encryption (mshelp://windows/?id=da8256b8-e348-4dc8-9fb0-b8ecb5b037af#gtmt_encryption1_def) to restrict access to specific files to approved users.


FAT32

FAT32, and the lesser-used FAT, were used in earlier versions of Windows operating systems, including Windows 95, Windows 98, and Windows Millennium Edition. FAT32 does not have the security that NTFS provides, so if you have a FAT32 partition (mshelp://windows/?id=75f2da20-91f7-4f31-8e17-798cce2c38c1#gtmt_partition_def) or volume (mshelp://windows/?id=df2c7238-4d51-40e7-97eb-21244c3fd130#gtmt_volume_def) on your computer, any user who has access to your computer can read any file on it. FAT32 also has size limitations. You cannot create a FAT32 partition greater than 32GB in this version of Windows, and you cannot store a file larger than 4GB on a FAT32 partition.
The main reason to use FAT32 is because you have a computer that will sometimes run Windows 95, Windows 98, or Windows Millennium Edition and at other times run this version of Windows, known as a multiboot (mshelp://windows/?id=bf3af83c-4057-4c97-874d-4e2f1482ec8c#gtmt_multiboot_def) configuration. If that is the case, you will need to install the earlier operating system on a FAT32 or FAT partition and ensure that it is a primary partition (mshelp://windows/?id=7cacf2cd-3133-4861-bf1c-e8c3454941e2#gtmt_primary_partition_def) (one that can host an operating system). Any additional partitions you will need to access when using these earlier versions of Windows must also be formatted with FAT32. These earlier versions of Windows can access NTFS partitions or volumes over a network, but not on your computer.
-----------------------------------


மேலதிக விபரங்களை பிரவீன் தருவார் என எதிர்பார்க்கிறேன்.

raj144
04-03-2009, 07:05 PM
உடனுக்குடன்(ஹாட் லைன் போல்) விளக்கம் அளித்ததற்க்கு அன்பு ரசிகன் அவர்களுக்கு மிக்க நன்றி வணக்கம்.

praveen
05-03-2009, 04:07 AM
நமது மன்ற மின்னூல் பதிவிறக்க மையத்தில், நான் கூட ஒரு விண்டோஸ் xP பதிவதற்கான வழிமுறைகளை, தமிழில் PDF வடிவில் கொடுத்திருக்கிறேனே.

raj144
05-03-2009, 07:39 AM
நமது மன்ற மின்னூல் பதிவிறக்க மையத்தில், நான் கூட ஒரு விண்டோஸ் xP பதிவதற்கான வழிமுறைகளை, தமிழில் PDF வடிவில் கொடுத்திருக்கிறேனே.

எனக்கு அங்கு செல்ல அனுமதி இல்லாததால் அதனை பார்க்க முடியவில்லை,அயினும் நான் என்னுடைய திரியில் கூறியிருந்தேன் என்பதை ப்ரவீன் சாருக்கு தெரிவித்து கொள்கிறேன்.அப்படி அங்கு செல்ல அனுமதி கிடைத்த போது பார்க்கிறேன்.நன்றி வணக்கம்.

அக்னி
05-03-2009, 03:38 PM
NTFS, FAT32 இடையேயான வித்தியாசம் - விளக்கம் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=14919)
இத்திரியும் உங்களுக்கு உதவக்கூடும்.

raj144
06-03-2009, 07:17 AM
சுட்டி கொடுத்த அக்கினி அவர்களுக்கு மிக்க நன்றி அதனை விளக்கம் அளித்துள்ள பிரவின் அவர்களுக்கும் மிக்க நன்றி.

sharavan
01-06-2011, 08:39 AM
Thanks sir for your valuable Guide sir

Muzzammill
14-01-2012, 11:05 AM
வணக்கம் அன்பு ரசிகனே !
கணினிக்கு மிகவும் புதியவன் , போர்மட் செய்வதற்கான தங்களின் எளிய முறைகளை எழுதிக் கொண்டேன் . மற்றும் செயல்படுத்தி தங்களிடம் என் நன்றியினை தெரிவிக்கிறேன் .
நன்றி ...... அன்புரசிகன்.

முஸ்ஸம்மில்

rajkulan
15-05-2012, 10:13 AM
அன்பரே தங்களின் வேண்டுகோளுக்கு இணங்க விண்டோஸ் நிறுவுவது எப்படி என முழு விளக்கம் ஒரு திரியில் தந்துள்ளேன். படங்களுடன், இங்கே கிளிக் செய்யவும் (http://www.tamilmantram.com/vb/showthread.php/29160-Windows-Xp-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88).

rajkulan
15-05-2012, 10:22 AM
Thanks sir for your valuable Guide sir

அன்பரே, இது தமிழ் மன்றம். தமிழில் உரையாடுவது நன்று. முயற்சி செய்யுங்கள். நன்றி