PDA

View Full Version : குப்பத்து பையன் கோடீஸ்வரன்

மதுரை மைந்தன்
04-03-2009, 10:54 AM
குப்பத்து சிறுவன் ராமு வேர்க்க விறு விறுக்க ஓடி வந்து குடிசைக்குள் நுழைந்தான்.

" தாத்தா தாத்தா மும்பையில ஒரு குப்பத்து பையன் கோடீஸ்வரனாயிருக்கறானாம்.அமெரிக்கா காரங்க அவனுக்கு பரிசெல்லாம் கொடுத்தாங்களாம். கோடீ ரூபாய்னா எவ்வளவு தாத்தா?"

இருமல் சுரத்தில் முனகிக் கொண்டிருந்த தாத்தா தனக்கு கோடி ரூபாய் எவ்வளவு என்று தெரியாது என்பதை சைகையில் காட்ட பையனின் முகம் வாடியது. 2004 சுனாமியில் தனது பெற்றோரை பறி கொடுத்து விட்டு மீனவன் முருகனின் ஆதரவில் வாழ்ந்து வந்தான் ராமு.

ராமுவுக்கும் முருகனுக்கும் இடையே ஒரு ஒட்டுதல். ராமுவிடம் தான் பார்த்த பழைய எம.ஜி.ஆர. படக் கதைகளை விவரிக்க அவன் முகத்தில் ஏற்படும் ஆவலை ரசிப்பான். படகோட்டியாக மீனவ நண்பனாக வந்த எம்.ஜி.ஆரை விவரிக்க ராமுவிடம் ஏற்படும் மாறுதல்களை ரசித்து பின்னாட்களில் அவரைப் போல வருவான் என கனாக் கண்டான் முருகன்.

" தாத்தா அந்த டீ கடைக்காரன் இனிமே கடனுக்கு டீயும் பன்னும் தர முடியாதுன்னுட்டான். ஏற்கனவே பழைய பாக்கி நிறைய ஆயிடுச்சாம்" என்று சொல்லி அங்கலாய்த்தான் ராமு.

"எனக்கு வேற மேலுக்கு சுகமில்லை. இதில் எங்கே மீன் பிடிச்சு அதில் வர காசுல அந்த டீ கடைக்காரன் பாக்கியை அடைச்சு....." என்று எண்ணிக் கொண்டே குடிசையின் இடுக்கில் தூரத்தில் தெரியும் கடலைப் பார்த்தான் முருகன். கடல் அமைதியாக தெரிந்தது. சூரியனும் அவ்வளவாக தகிக்க வில்லை. ராமு கொண்டு வந்திருந்த டீ பன்னில் தானும் சாப்பிட்டு ராமுக்கும் கொடுத்து விட்டு தலையில் ஒரு முண்டாசுடனும் மேல் பகுதியில் தன்னிடமிருந்த கிழிந்த கம்பெளியை போர்த்துக் கொண்டும் மீன் பிடிக்க கிளம்பினான் முருகன்.

" ராமு நான் மீன் பிடிக்கப் போறேன். பெரிய மீனா பிடிச்சு நல்ல விலைக்கு அதை விற்று கடனையெல்லாம் அடைச்சு உன்னை ஸ்கோல்ல சேத்து பெரிய படிப்பு படிக்க வைச்சு அப்துல் கலாம் மாதிரி ஆக்கப் போறேன். நான் வீடு திரும்ப நேரமாகலாம். நீ வீட்டை பாத்துக்கோ".

சாயங்காலம் ஆகி விட்டது. மீன் பிடிக்கச் சென்ற அனைவரும் திரும்பி விட்டனர். தாத்தா வின் வரவை எதிர் நோக்கி காத்திருந்த ராமு அசதியில் கடல்கரை மண்ணில் தூங்கி விட்டான்.

" ஏய் ராமு உங்க தாத்தா திரும்ப வறாரு. அவருடய படகில பெரிய மீன் ஒன்று சிக்கியிருக்கு. அதிர்ஷ்டக்காரன் தான்" என்று எழுப்பப் பட்டான் ராமு. கண்ணுக் கெட்டிய தூரத்தில் தாத்தாவின் படகு தெரிய ராமுவுக்கு உற்சாகம் வந்தது.

படகு மிக அருகில் வந்தவுடன் தான் தெரிந்தது தாத்தா படகிலேயே இறந்து விட்டார் என்று. மனமுடைந்த ராமு முட்டி மோதிக் கொண்டு அழுதான் கதறினான். அங்கு கூடிய கும்பலில் ஒரு வெளிநாட்டவர் படகிலிருந்த மிகப் பெரிய மீனை அதிக விலை கொடத்து வாங்குவதாகவும் ராமுவை தனது பாதுகாப்பில் படிக்க வைக்க போவதாகவும் கூற " ராமுக்கு அதிர்ஷ்டம் அடிச்சு நாளைக்கு கோடீஸ்வரனாகும் வாய்ப்பு உள்ளது" என்று அனைவரும் பேச தாத்தாவின் மறைவால் தனது உலகை இழந்த ராமு அழுது அழுது மயக்கமானான்.

அய்யா
04-03-2009, 11:15 AM
வாங்க மதுரை அண்ணா!

சிறு இடைவெளிக்குப்பின் உங்களைக் காண்பதில் மகிழ்ச்சி!!

கண்ணை விற்று சித்திரம் வாங்கியதுபோல, ராமுவின் பாசக்காரத் தாத்தா போய், பணம் வந்திருக்கிறது!

எல்லாமும் எல்லாருக்கும் எப்போதும் கிடைத்துவிடாது என்பதை உணர்த்திய அருமையான சிறுகதை!

பாராட்டுகள் அண்ணா!

அன்புரசிகன்
04-03-2009, 11:33 AM
ஒன்றை இழந்தால் தான் இன்னொன்று கிட்டும் என்பர். ஆனாலும் பையன் இழந்தது அதிகம்.... எதுவும் பாசத்தின் முன்னால் தூசி தான்... தாத்தாவின் கனவுபோல் அவன் வளர்ந்திடவேண்டும்............

வாழ்த்துக்கள் அண்ணா.

மதுரை மைந்தன்
04-03-2009, 06:35 PM
வாங்க மதுரை அண்ணா!

சிறு இடைவெளிக்குப்பின் உங்களைக் காண்பதில் மகிழ்ச்சி!!

கண்ணை விற்று சித்திரம் வாங்கியதுபோல, ராமுவின் பாசக்காரத் தாத்தா போய், பணம் வந்திருக்கிறது!

எல்லாமும் எல்லாருக்கும் எப்போதும் கிடைத்துவிடாது என்பதை உணர்த்திய அருமையான சிறுகதை!

பாராட்டுகள் அண்ணா!

கதையை இத்தனை அருமையாக பாராட்டியமைக்கு மிக்க நன்றி தம்பி அய்யா. உங்களுக்கு அண்ணன் என்பதில் பெருமைப் படுகிறேன்.

மதுரை மைந்தன்
04-03-2009, 06:41 PM
ஒன்றை இழந்தால் தான் இன்னொன்று கிட்டும் என்பர். ஆனாலும் பையன் இழந்தது அதிகம்.... எதுவும் பாசத்தின் முன்னால் தூசி தான்... தாத்தாவின் கனவுபோல் அவன் வளர்ந்திடவேண்டும்............

வாழ்த்துக்கள் அண்ணா.

சரியாக சொன்னீர்கள் அருமை தம்பி அன்பு ரசிகன். கடவுள் ஒரு கதவை மூடினாலும் மற்றொரு கதவை திறக்கிறார் என்பது உண்மை. நன்றி.

அறிஞர்
04-03-2009, 06:42 PM
"ஸ்லெம்டாக் மில்லியனியர்" பாதிப்பால் உருவானதா இந்த கதை...
குறுங்கதையில்.. சுனாமி பாதிப்பு, பாசமுள்ள தாத்தா, கடின உழைப்பாளின் முடிவு, அதிர்ஷடம்.. என பல அம்சங்கள்..
வாழ்த்துக்கள் மதுரைமைந்தரே..

மதுரை மைந்தன்
04-03-2009, 06:48 PM
"ஸ்லெம்டாக் மில்லியனியர்" பாதிப்பால் உருவானதா இந்த கதை...
குறுங்கதையில்.. சுனாமி பாதிப்பு, பாசமுள்ள தாத்தா, கடின உழைப்பாளின் முடிவு, அதிர்ஷடம்.. என பல அம்சங்கள்..
வாழ்த்துக்கள் மதுரைமைந்தரே..

"ஸ்லெம்டாக் மில்லியனியர்" பாதிப்பால் உருவானதே இந்த கதை...

கதையை பெரிதாக எழுத வாய்ப்புகள் இருந்தாலும் நேரம் பொறுமை இல்லாததால் சுருக்கி விட்டேன். மிக்க நன்றி அறிஞர் நண்பரே

அக்னி
05-03-2009, 12:07 AM
பொதுவாகவே பார்ப்போமானால், இல்லாதவன் தொடர்ந்தும் இழக்கின்றான்.

ஏன் இந்தச் சமநிலைக் குழப்பம் என்பது பெரும் புதிர்தான்.

ராமுவின் தாத்தாபோன்று, உடல் இயலாதபோதும் குடும்பத்திற்காக உழைப்பவர்கள் மேன்மை மிக்கவர்கள்.

எம் உடலின் சோர்வை நீக்கும் அவர்களின் இழப்பு,
எம் உள்ளங்களில் மாறாத சோகத்தைத் தந்துவிடுகின்றது.

பாராட்டுக்கள் மதுரையின் மைந்தரே...

மதுரை மைந்தன்
05-03-2009, 01:33 AM

உங்களின் வார்த்தைகள் அற்புதம். நன்றி நண்பர் அக்னி அவர்களே

மதி
05-03-2009, 02:38 AM
எல்லோரும் சொன்னது போல் எல்லோருக்கும் எல்லாமும் கிடைப்பதில்லை என்றுணர்த்தியுள்ளீர்..
நன்று.

samuthraselvam
05-03-2009, 02:51 AM
ஒன்றை இழந்தால் தான் இன்னொன்று கிட்டும் என்பர். ஆனாலும் பையன் இழந்தது அதிகம்.... எதுவும் பாசத்தின் முன்னால் தூசி தான்... தாத்தாவின் கனவுபோல் அவன் வளர்ந்திடவேண்டும்............

வாழ்த்துக்கள் அண்ணா.

அன்புரசிகன் சொன்னதையே நானும் ஆமோதிக்கிறேன். உலகில் ஒன்றைப் பெற ஒன்றை இழக்க வேண்டும் என்று விதிக்கப்பட்டு இருக்கிறது.

ரங்கராஜன்
05-03-2009, 03:11 AM
கதையில் ஒரு வார்த்தையை கூட வீணடிக்கப்படவில்லை, அழகாக உபயோகப்படுத்தி இருக்கிறீர்கள், பாராட்டுக்கள். கதை நன்றாக இருந்தது மதுரை சார்.

செல்வா
05-03-2009, 05:29 AM
எப்போதும் எல்லாமும் கிடைத்துவிடாது
ஒன்றை இழந்தால் தான் இன்னொன்று...
நிதர்சனம் சொல்லும் கதை....
வாழ்த்துக்கள் அண்ணா... தொடர்ந்து எழுதுங்கள்...

நிரன்
05-03-2009, 11:16 AM
மீண்டும் உங்கள் வரவில் மிக்க மகிழ்ச்சியடைகிறோம்.

சிறு கதை மிக அழகாகவுள்ளது. வரிகள் ஒவ்வென்றும் நன்றே அமைந்துள்ளது.

வாழ்த்துக்கள் அண்ணா.

விகடன்
05-03-2009, 11:40 AM
சிலம்டோக் மில்லியனர் படத்தின் தலைப்பினையே வைத்து ஓர் கவர்ச்சியை உண்டு பண்ணி கதை எழுத முற்பட்டிருக்கிறீர்கள்
முயற்சியை பாராட்டுகிறேன்.

ஐரேனிபுரம் பால்ராசய்யா
06-03-2009, 06:45 AM
ஒரு உயிரின் இழப்பை சொல்லி சிறுவனை நிறைவு படுத்தியிருந்தாலும் கதையில் இழையோடுவது தாத்தாவின் உயிர் தியாகமே! பாராட்டுக்கள்

சிவா.ஜி
06-03-2009, 04:12 PM
கதை ரசிக்கும்படியில்லை நண்பரே. இன்னும் முயற்சியுங்கள் வாழ்த்துக்ள்

மதுரை மைந்தன்
06-03-2009, 09:39 PM
எல்லோரும் சொன்னது போல் எல்லோருக்கும் எல்லாமும் கிடைப்பதில்லை என்றுணர்த்தியுள்ளீர்..
நன்று.

கதையைப் பற்றிய உங்கள் கருத்து அருமை. நன்றி நண்பர் மதி.

மதுரை மைந்தன்
06-03-2009, 09:42 PM
அன்புரசிகன் சொன்னதையே நானும் ஆமோதிக்கிறேன். உலகில் ஒன்றைப் பெற ஒன்றை இழக்க வேண்டும் என்று விதிக்கப்பட்டு இருக்கிறது.

இக்கதைக்கு பின்னூட்டம் போட்டு சிறப்பித்தமைக்கு நன்றி.

மதுரை மைந்தன்
06-03-2009, 09:44 PM
கதையில் ஒரு வார்த்தையை கூட வீணடிக்கப்படவில்லை, அழகாக உபயோகப்படுத்தி இருக்கிறீர்கள், பாராட்டுக்கள். கதை நன்றாக இருந்தது மதுரை சார்.

கதையை மிக அருமையாக பாராட்டி இருக்கிறீர்கள். நன்றி நண்பர் தக்ஸ்.

மதுரை மைந்தன்
06-03-2009, 09:46 PM
எப்போதும் எல்லாமும் கிடைத்துவிடாது
ஒன்றை இழந்தால் தான் இன்னொன்று...
நிதர்சனம் சொல்லும் கதை....
வாழ்த்துக்கள் அண்ணா... தொடர்ந்து எழுதுங்கள்...

மிக்க நன்றி நண்பர் செல்வா.

மதுரை மைந்தன்
06-03-2009, 09:48 PM
மீண்டும் உங்கள் வரவில் மிக்க மகிழ்ச்சியடைகிறோம்.

சிறு கதை மிக அழகாகவுள்ளது. வரிகள் ஒவ்வென்றும் நன்றே அமைந்துள்ளது.

வாழ்த்துக்கள் அண்ணா.

கதையை பாராட்டியமைக்கு மிக்க நன்றி நண்பர் நிரன்

மதுரை மைந்தன்
06-03-2009, 09:55 PM
சிலம்டோக் மில்லியனர் படத்தின் தலைப்பினையே வைத்து ஓர் கவர்ச்சியை உண்டு பண்ணி கதை எழுத முற்பட்டிருக்கிறீர்கள்
முயற்சியை பாராட்டுகிறேன்.

ஸ்லம் டாக் மில்லியனர் தலைப்பை கதைக்கு கொடுத்திருந்தாலும் கதை வேறுபட்டது. சுனாமியில் பெற்றோர்களை பறி கொடுத்து மீனவக் குப்பத்தில் ஒரு வயதானவரின் ஆதரவில் வாழ்ந்து வரும் சிறுவனுக்கும் வயதானவருக்குமிடையே உள்ள பந்தம் விலை மதிப்பற்றது என்பதை இக்கதையில் சொல்ல விழைந்துள்ளேன். நன்றி

மதுரை மைந்தன்
06-03-2009, 09:57 PM
ஒரு உயிரின் இழப்பை சொல்லி சிறுவனை நிறைவு படுத்தியிருந்தாலும் கதையில் இழையோடுவது தாத்தாவின் உயிர் தியாகமே! பாராட்டுக்கள்

கதையின் சாராமசத்தை மிக அருமையாக சொல்லி இருக்கிறீர்கள். நன்றி.

மதுரை மைந்தன்
06-03-2009, 09:58 PM
கதை ரசிக்கும்படியில்லை நண்பரே. இன்னும் முயற்சியுங்கள் வாழ்த்துக்ள்

தங்களது வாழ்த்துக்களுக்கு நன்றி

பா.ராஜேஷ்
07-03-2009, 06:04 AM
வெளி நாட்டு வாழ்க்கை கிடைக்கலாம். ஆனால் இந்தியாவின் பாசம், கலாச்சாரம், பண்பாடு, வாழ்க்கைமுறை அங்கு கிடைக்குமா என்றால் அது கடினம்தான். வேறு என்னதான் கிடைத்தாலும் ஒரு தமிழனுக்கு இந்தியாவின் பாரம்பரியத்தில் வளர்வதுதான் சிறந்தது.

கதையாக கருத்தில் கொண்டால் தங்கள் கதை மிக நன்று அன்பரே. எளிமையான வார்த்தைகள், சொற்றொடர்கள். வாழ்த்துக்கள்

மதுரை மைந்தன்
07-03-2009, 04:39 PM

உங்கள் பாராட்டுக்களுக்கு மிக்க நள்றி நண்பரே

இளசு
09-03-2009, 12:01 AM
கரைமேல் பிறக்கவைத்தான் - இவர்களைக்
கண்ணீரில் பிழைக்கவைத்தான்!

முடிந்தால் முடியும்...
தொடர்ந்தால் தொடரும்...
இதுதான் இவர்கள் வாழ்க்கை!

-----------------------------

நெஞ்சைத் தொட்ட கதை..
கனவுகள் சிலருக்காவது மெய்ப்படட்டும்!

பாராட்டுகள் மதுரைமைந்தன் அவர்களே!
நலந்தானே?

மதுரை மைந்தன்
09-03-2009, 01:41 AM
கரைமேல் பிறக்கவைத்தான் - இவர்களைக்
கண்ணீரில் பிழைக்கவைத்தான்!

முடிந்தால் முடியும்...
தொடர்ந்தால் தொடரும்...
இதுதான் இவர்கள் வாழ்க்கை!

-----------------------------

நெஞ்சைத் தொட்ட கதை..
கனவுகள் சிலருக்காவது மெய்ப்படட்டும்!

பாராட்டுகள் மதுரைமைந்தன் அவர்களே!
நலந்தானே?

படகோட்டி படத்தில் வந்த நெஞசைத் தொட்ட பாட்டை குறிப்பிட்டது மிக அருமை.
தங்களின் பாராட்டுகளுக்கு மிக்க நன்றி நணபர் இளசு.