PDA

View Full Version : ஈழத்துப் பாப்பா பாடல்



விகடன்
04-03-2009, 10:30 AM
மின்னஞ்சலினூடாக பெற்றுக்கொண்ட விடயம்.


ஈழத்துப் பாப்பா பாடல்


ஓடி மறைந்துகொள் பாப்பா - நீ
ஒளிந்து வாழப்பழகிக்கொள் பாப்பா
பங்கருக்குள் முடங்கிக்கொள் பாப்பா - நீ
பதுங்கி வாழப்பழகிக்கொள் பாப்பா

சிங்களப் படைகள்வரும் பாப்பா - வானில்
சீறும் விமானம்வரும் பாப்பா
எங்களுக்கெனக் குரல்கொடுக்க உலகில் - மனிதர்
எவரும் இல்லையடி பாப்பா

சினத்தோடு வந்தான் எதிரி பாப்பா - எம்மை
இனத்தோடு அழிக்க நினைத்தான் பாப்பா
வனத்தில் விலங்குகளாய் ஆனோம் பாப்பா -எம்
மனத்தில் சோகங்கள் ஆயிரம் பாப்பா

பகைவனுக்கு வேண்டியது சண்டை - அவன்
வகைவகையாய் வீசினான் குண்டை
புகைமண்டலமாய் ஆனதெம்தேசம் - பார்த்து
நகைக்கிறான் எதிரி பாப்பா

தெய்வமும் மறந்ததடி பாப்பா - வெறி
நாய்கள் சூழ்ந்ததடி பாப்பா
பொய்யும் வெல்லுதடி பாப்பா - இன்று
பேய்களின் ஆட்சியடி பாப்பா

யுத்தத்தில் வாழ்கிறோம் பாப்பா - குண்டின்
சத்தத்தில் மாய்கிறோம் பாப்பா
இரத்ததில் தோய்கிறோம் பாப்பா - நாம்
மொத்தத்தில் பாவிகளடி பாப்பா

காக்கை குருவிஎங்கள் ஜாதி - இவற்றோடு
காட்டில் வாழ்கிறோம் பாப்பா
தேளும் பாம்பும் புடைசூழ - நாம்
நாளும் வாழ்கிறோம் பாப்பா
தமிழராய்ப் பிறந்துவிட்டோம் பாப்பா - நம்
தலைவிதி இதுதான் பாப்பா

அன்புரசிகன்
04-03-2009, 11:36 AM
தலைவிதி தான். வேற என்ன சொல்ல...

நிரன்
04-03-2009, 12:50 PM
ஹிம்..............

பாரதியார் எதை நினைச்சு எழுதினாரோ தெரியல்லை.. இந்த மெட்டு மட்டும் எம் மக்களுக்கும் பாடலியற்ற கைகொடுத்திருக்கு.....

அக்னி
04-03-2009, 11:58 PM
பகிர நினைத்தேன்.

பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி விராடா...

பாரதியார் இன்று வன்னியிலிருந்தால், இப்படித்தான் எழுதியிருப்பாரோ..

samuthraselvam
05-03-2009, 03:06 AM
எப்போதும் இது போலவே இருக்காது நண்பர்களே.!
நமக்கும் ஒரு காலம் வரும்; அப்போது நாம் இழந்ததை வேண்டுமானால் திரும்ப கிடைக்காமல் போகலாம். ஆனால் இழந்ததர்க்கேல்லாம் காலம் பதில் சொல்லும். பாப்பாக்கள் எல்லாம் வீரர்கள் ஆவதுபோல் பாடல் சொல்லிக்கொடுங்கள். பிற்காலத்தில் பயன்படும்.