PDA

View Full Version : காதல்...



இன்பக்கவி
03-03-2009, 12:41 PM
கண்ணிரிலே வாழ்கிறேன்
கனவாகிப் போனவனே
உன்னை நினைத்து...

மரணத்தில் உன்னை
மறக்கலாம் என நினைத்தேன்
என்னைக் கொல்ல
எனக்கு துணிவில்லை

தூக்கத்தில் உன்னை
மறக்கலாம் என நினைத்தேன்
உன்னோடு கைகோர்த்து திரிந்த
காலங்கள் கனவில் வந்தது

தோற்றாலும் விருப்பப்படும்
இந்த
தெய்வீக காதலை மறப்பதெப்படி
சிலுவைகளாய்
உன் நினைவுகளை
சுமந்து கொண்டு
நான் உயிரோடு..
இறந்து விட்டேன்...

கவிதா123

வசீகரன்
07-03-2009, 11:23 AM
தூக்கத்தில் உன்னை
மறக்கலாம் என நினைத்தேன்
உன்னோடு கைகோர்த்து திரிந்த
காலங்கள் கனவில் வந்தது

மிக உணர்வுகள் மிகுந்த.... மனதை என்னமோ
செய்கிறது இந்த வ(லி)ரிகள்...........!



சிலுவைகளாய்
உன் நினைவுகளை
சுமந்து கொண்டு
நான் உயிரோடு..
இறந்து விட்டேன்...
கவிதா123

நடைபிணமாய் எனது வாழ்க்கை....!

உண்மை காதலின் உணர்வுகளை சொல்லும் கவிதை...!
என் ஆறுதல்களும் சகோதரியே....!

அக்னி
07-03-2009, 11:57 AM
காதல் இழக்கப்பட்டாலும்,
இழக்கப்படுவதில்லை காதல்,
என்பது காதலின் முரண்...

தூங்காத விழிகளுக்குள்,
துலங்கும் கனவுகளும்,
காதலில் முரணே...

இனிமை நினைவுகளும்
சிலுவைச் சுமைகளாய்க்
கனப்பது என்பதுவும்,
காதலின் முரண்...

பாராட்டுக்கள் கவிதா123 அவர்களே...

ஆதவா
11-03-2009, 05:42 AM
மறத்தலும் அல்லது மறக்காத நினைவுகளோடு வாழ்தலும் காதலே...

சிலசமயம்
மறத்தலைக் காட்டிலும் அதனோடு வாழ்வதே நன்றாக இருக்கும்... ஏனெனில் எந்த காதலும் மறப்பதற்காக காதலிக்கப்படுவதில்லை.

பூமகள்
17-03-2009, 10:38 AM
காதல் தோற்பதில்லை..

உண்மைக் காதல்.. சரியான இடம் சேருகையில் வெல்கிறது.. அவ்வகை இடம் விரைவில் வந்தடைய கவிதை நாயகிக்கு வாழ்த்துகளும் பிராத்தனைகளும்..

பாராட்டுகள் கவிதா.

subashinii
17-03-2009, 08:44 PM
காதலால் உருவான நடைபிணங்கள்... நன்றாக உள்ளது கவிதா..

பூமகள்
18-03-2009, 03:06 AM
பொறுப்பாளர் கவனத்துக்கு,

இக்கவிதை காதல் பற்றியதாக இருப்பதால் காதல் கவிதைகள் பகுதிக்கு நகர்த்தினால் நலமென நினைக்கிறேன்..

--

கவிதை பகுதிகள் தனித்தனியே பகுக்கப்பட்டுள்ளதால் அந்தந்த பகுதியில் கவிதைகளைப் பதிக்குமாறு புதிய பதிவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்..

ஓவியன்
18-03-2009, 03:12 AM
இதில் கடுமையான பின்பற்றுதல்கள் கொஞ்சம் கடினமாக இருக்கிறது பூமகள், காதல்கவிதையாயினும் அது புதிய கவிதைதானே என்று எண்ணினால் தப்பென்று கூற முடியாதே....

இருந்தாலும் காதல் கவிதைகளுக்குத் தனிப்பகுதி இருப்பதனால் அங்கேயே காதல் கவிதைகளைப் பதிவிடுவது சிறப்பு.....

கவிதையை காதல் கவிதைகள் பகுதிக்கு நகர்த்துகிறேன்...

பூமகள்
18-03-2009, 04:14 AM
உண்மை தான்... ஆனால் எழுதப்படும் எல்லா கவிதைகளும் புதிய கவிதைகள் என்று எடுத்துக் கொண்டால் மற்ற பகுதிகளுக்கு அவசியமே இல்லையே ஓவியன் அண்ணா...

அறிஞர்
18-03-2009, 10:12 PM
கண்ணிரிலே வாழ்கிறேன்
கனவாகிப் போனவனே
உன்னை நினைத்து...

தோற்றாலும் விருப்பப்படும்
இந்த
தெய்வீக காதலை மறப்பதெப்படி
சிலுவைகளாய்
உன் நினைவுகளை
சுமந்து கொண்டு
நான் உயிரோடு..
இறந்து விட்டேன்...

கவிதா123 கண்ணீர்...
ஆனந்த கண்ணீராக மாறட்டும்...
வாழ்த்துக்கள் கவிதா

ஆன்டனி ஜானி
17-12-2010, 10:37 AM
காதலனை மரணத்தில் மட்டும் இல்ல
உறக்கத்திலும் மட்டும் அல்ல
எந்த நேரத்திலும் காதலன் தான்
கண்முன் நிற்கின்றான்

உங்கள் காதல் என்றும் நிற்க்க என்றும் ஜெய்க்க
என்னுடய ஆனந்த கண்ணிருடன் அஞ்சலி வாழ்த்து தெரிவித்து கொள்கிறேன்