PDA

View Full Version : இலங்கை கிரிக்கெட் அணி மீதான தாக்குதல்- மேலதிக விஷயங்கள்



loshan
03-03-2009, 05:25 AM
லாகூரில் இடம்பெற்று வந்த டெஸ்ட் போட்டியில் இன்றைய நாள் ஆட்டத்தில் பங்குபற்ற சென்ற இலங்கை அணியின் மீது துப்பாக்கி சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இலங்கை அணியின் வீரர்கள் அறுவர் காயம் அடைந்துள்ளார்கள்.அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கிய 5 போலீஸ் வீரர்கள் மரணித்துள்ளார்கள்.

காயம் அடைந்த வீரர்கள்
திலான் சமரவீர
தரங்க பரணவிதான
குமார் சங்ககார
அஜந்த மென்டிஸ்
அணித் தலைவர் மகெல ஜெயவர்த்தன
மற்றும் உதவி பயிற்றுவிப்பாளர்.

வீரர்களில் இருவர் மாத்திரமே வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், ஏனையோர் பாதுக்காப்பாக இருப்பதாகவும் இலங்கையிலுள்ள தங்கள் உறவினர்களுடன் பேசிய இலங்கை வீரர்கள் தெரிவித்துள்ளனர்.

குமார் சங்ககார,மகெல ஜெயவர்த்தன ஆகியோருக்கு சிறு காயங்களே ஏற்பட்டுள்ளன.

காயமடைந்திருந்த வீரர்கள் எல்லோருமே ஆபத்தான் கட்டத்தை தாண்டியுள்ளதாகவும்,பூரண சுகத்தோடு இருப்பதாகவும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.

இதுவரை கால வரலாற்றில் கிரிக்கெட் வீரர்கள் மீது இவ்வாறான மிலேச்சத்தனமான தாக்குதல் நடத்தப்பட்டதில்லை என்பது குறிப்பிடத் தக்கது.இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த ஒரு அமைப்பும் உரிமை கோரவில்லை என்பதுடன்,இலங்கை கிரிக்கெட் அணியினருக்கு பாதுகாப்பு வழங்கிவந்த போலீசாரையே இந்தத் தாக்குதல் இலக்கு வைத்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

பாகிஸ்தானிய அரச தகவல்களின் அடிப்படியில் முகமூடியணிந்த பேர் இந்தத் தாக்குதல்களில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் இலங்கை அணியினரை உடனடியாக விசேட விமானமொன்றில் இலங்கைக்கு அழைக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.

உலகின் மற்ற எல்லா நாடுகளும் பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் சுற்றுலா செல்ல மறுத்த வேளையில் இலங்கை அணியே அந்த அழைப்பையேற்று பாகிஸ்தான் சென்றது என்பதையும் இங்கே சுட்டிக் காட்ட வேண்டும்.

இந்தியாவின் மும்பையில் இடம்பெற்ற தீவிரவாதிகளின் தாக்குதலை அடுத்து இந்திய அரசு இந்திய அணிக்கு பாகிஸ்தான்செல்வதற்கு தடை விதித்ததை அடுத்தே இலங்கைஅணி பாகிஸ்தானுக்கு உதவுவதற்காக டெஸ்ட் சுற்றுலா மேற்கொண்டு சென்றிருந்தது.

நடைபெற்று வந்த இரண்டாவது டெஸ்ட் போட்டி கைவிடப் பட்டுள்ளது.

http://loshan-loshan.blogspot.com/2009/03/blog-post_03.html

மதி
03-03-2009, 05:53 AM
அதிர்ச்சி தரும் செய்தி இது.. காலையில் பணியிடம் வந்ததும் கேட்டதிர்ந்தேன். தொடர் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அணியினர் திரும்புவார்கள் என்றும் தெரிகிறது.

ஓவியன்
03-03-2009, 05:53 AM
பாகிஸ்தானில் கிரிக்கட் சுற்றுலாவை மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கட் அணியினர் மீது, இன்று ஆயுததாரி ஒருவர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதில் குறைந்தது ஐந்து கிரிக்கட் வீரர்கள் காயமடைந்துள்ளதாக தெரிய வருகிறது...

மேலதிக செய்திகளுக்கு... (http://news.bbc.co.uk/2/hi/south_asia/7920260.stm)

இச்சம்பவத்தில் காயமடைந்த வீரர்கள் திலான் சமரவீர, தாரங்க பரணவித்தான, அஜந்த மெண்டிஸ், குமார் சங்ககார ,மகேல ஜெயவர்தன மற்றும் துணை பயிற்றுவிப்பாளர் ஆகியோர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களில் நான்கு பேர் சிகிச்சை பெற்று திரும்பியதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் இவர்களில் திலான் சமரவீர, துணை பயிற்றுவிப்பாளர் ஆகியோர் தொடர்ந்து வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி - தமிழ்வின்

அன்புரசிகன்
03-03-2009, 05:53 AM
இதென்ன? நம்ப முடியவில்லை. பாக்கிஸ்தான் இலங்கைக்கு இப்படி செய்ததா???

முதலில் நடந்த முடிந்த தொடரின் முடிவில் பாக்.பிரதமர் உரையாற்றும் போது இலங்கை அணியை மிக மிக உயர்வாக பேசியிருந்தார்.

எதுவோ. இதனால் இலங்கை அரசுக்கு பாதகம் இல்லாதபடியால் நட்பு தொடரும்.

தூயவன்
03-03-2009, 05:57 AM
ஹ்ம்ம் என்ன சொல்ல. முரளி தப்பியது மகிழ்ச்சி.

அன்புரசிகன்
03-03-2009, 05:59 AM
http://i701.photobucket.com/albums/ww12/anburasihan/Mantram/1.jpg
Television footage of two gunmen in Lahore.
http://i701.photobucket.com/albums/ww12/anburasihan/Mantram/2.jpg
The gunmen aim their weapons
http://i701.photobucket.com/albums/ww12/anburasihan/Mantram/3.jpg
Pakistani police carry the body of a shot person

நன்றி - http://news.ninemsn.com.au/world/759738/eight-dead-six-cricketers-hurt-in-pakistan-attack

நேசம்
03-03-2009, 06:52 AM
இந்தியாவுக்கு பதிலாக நட்பு அடிப்படையில் சென்ற இலங்கை அணிக்கு இது ஒரு கசப்பான விசயம்.(இது பாகிஸ்தானில் நட்ந்தது ஒன்றும் ஆச்சர்யமில்லை.)

அமரன்
03-03-2009, 07:14 AM
தாக்குதல்தாரிகள் இலக்கு பாதுகாப்புக்குச் சென்ற படையினர் எனக் கருத அதிக நிகழ்தகவு உள்ளது எனினும் உயிரிழப்பு இல்லாத அச்சுறுத்தல் என்றும் கருதலாம். எவ்வாறாயினும் இத்தைகைய தாக்குதல்கள் கண்டிக்கத்தக்கது. விளையாட்டில் அரசியல் புகுத்துவது அருவருக்கத்தக்கது.

நிரன்
03-03-2009, 08:08 AM
உண்மையில் இச்செய்தியை நம்பவே முடியவில்லை!

பாகிஸ்தான் இலங்கையுடன் கைகுலுக்கும் நாடுகளில் ஒன்றுதானே!!!!!

நிரன்
03-03-2009, 08:11 AM
ஆம் அமரன் அண்ணா கூறியது போன்று அரசியலில் போரை நுழைப்பது அநாகரிகமான செயல்

மற்றும் பாகிஸ்தானில் இப்படி நடந்தது என்பதுதான் எனக்கு ஆச்சரியத்தை கொடுக்கிறது, பாகிஸ்தான் இலங்கைக்கு ஆயுதம் மற்றும் பல வழிகளில் உதவி வரும் நாடுதானே விளையாட்டு வீரர்களுக்கு போதியளவு காவல் வளங்கவில்லையா!!!

அன்புரசிகன்
03-03-2009, 08:15 AM
ஆம் அமரன் அண்ணா கூறியது போன்று அரசியலில் போரை நுழைப்பது அநாகரிகமான செயல்

மற்றும் பாகிஸ்தானில் இப்படி நடந்தது என்பதுதான் எனக்கு ஆச்சரியத்தை கொடுக்கிறது, பாகிஸ்தான் இலங்கைக்கு ஆயுதம் மற்றும் பல வழிகளில் உதவி வரும் நாடுதானே விளையாட்டு வீரர்களுக்கு போதியளவு காவல் வளங்கவில்லையா!!!
கொடுத்த ஆயுதங்கள் இப்படித்தான் இயங்கும் என்று ஒரு ட்ரயல் காட்டினாங்களாம். :D இதெல்லாம் பிஸினஸ் ட்ரிக். புரிஞ்சுக்கோங்க...

அக்னி
03-03-2009, 08:50 AM
இந்திய கிரிக்கெட் அணிக்காகத் தயாரிக்கப்பட்ட தாக்குதற் திட்டம்,
இலங்கை அணியின் மீது, அச்சுறுத்தும் நோக்கில் நிகழ்த்தப்பட்டது போலிருக்கின்றது.

திட்டமிட்டதை ஏன் விரயமாக்க வேண்டும் என்று செயலாக்கிவிட்டார்களோ தீவிரவாதிகள்?

விளையாட்டைக்கூட விட்டு வைக்காதோ தீவிரவாதம்...

உயிரிழந்த காவற்துறையினருக்கு அஞ்சலிகள்.

காயமடைந்த ஸ்ரீ லங்கா கிரிக்கெட் வீரர்களும் மற்றோரும், விரைவில் தேறிடப் பிரார்த்தனைகள்.

ஸ்ரீதர்
03-03-2009, 10:02 AM
மிகவும் கண்டிக்கத்தக்க நிகழ்வு இது.

விளையாட்டு வீரர்கள் என்ன பாவம் செய்தார்கள் என்றுதான் தெரியவில்லை. தீவிரவாதிக்கு விளையாட்டு வீரனாவது , சாதாரண மனிதனாவது , எல்லோரும் ஒன்றுதான் என நினைக்கிறேன்.

தீவிரவாதத்தை வளர்த்து விட்டதன் பலனை பாகிஸ்தான் இப்போது அனுபவித்துக்கொண்டிருக்கிறது.

காயமடைந்த இலங்கை விளையாட்டு வீரர்கள் சீக்கிரம் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.

அறிஞர்
03-03-2009, 02:27 PM
இதை எதிர்பார்த்துதான் இந்திய அணி பாகிஸ்தான் பயணத்தை ரத்து செய்தது.

இந்த சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது.

காயமடைந்த வீரர்கள் விரைவில் சுகமடைய பிராத்திக்கிறோம்.

அறிஞர்
03-03-2009, 02:28 PM
இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்திற்கு நல்லதல்ல.

2011 உலக கோப்பை பாகிஸ்தானில் நடப்பது சந்தேகம் தான்.

அன்புரசிகன்
03-03-2009, 02:44 PM
அல்ஜஸீரா இணையசெய்தியில் வெளியிட்ட ஒரு ஒளிக்கோவை...

http://www.youtube.com/watch?v=Y5Q0eleGnVY

இலங்கை டெய்லிமிரர் இணையத்தில் வெளியாகியுள்ள புகைப்படங்கள் காண இங்கே
http://www.dailymirror.lk/DM_BLOG/Sections/frmNewsDetailView.aspx?ARTID=42199

நன்றி டெய்லிமிரர் இணையம்.
http://www.dailymirror.lk

தற்சமயம் அபுதாபியில் சிகிச்சை நடைபெறுகிறதாம்...

loshan
04-03-2009, 04:40 AM
நான்றி அன்புரசிகன்.. நிறைய பிற் சேர்க்கைகள் சேர்த்துள்ளீர்கள்..

தீவிரவாதம் என்பது யார் மீதும் பாயக்கூடிய ஒன்று.
இலங்கையின் பலருக்கும் இப்போது தீவிரவாதம்,பயங்கரவாதம்,விடுதலைப் போராட்டம் என்பவற்றின் வித்தியாசம் புரிந்திருக்கும்.

பாகிஸ்தானின் பிரபல நகருக்குள்ளே வந்து நேரடி தாக்குதலை நடத்தக் கூடிய அளவுக்கு தீவிரவாதத்தை பாகிஸ்தான் வளர விட்டிருக்கிறதே..
பாதுக்காப்பு ஏற்பாடுகள் அற மோசம்.

இனி கிரிக்கெட் பாகிஸ்தானில் முடிந்தது..

அன்புரசிகன்
04-03-2009, 04:53 AM
இங்கு அலுவலகத்தில் வேலைசெய்யும் பாக்கிஸ்தானை சேர்ந்த நண்பர் சொன்ன விடையம். அண்மையில் லாஹூரில் உள்ள ஒரு பொலிஸ் ஐஜி ஐ பதவியிறக்கம் செய்து நவாஷ் ஷெரீப் இன் நம்பிக்கைக்கு உரியவர் ஒருவரை அந்த பதவியில் அமர்த்தினார்களாம். பழையவரின் பழிவாங்கலாக இது இருக்கலாம் என்கிறார். காரணம் அவர் தற்போதய ஐஜிக்கு சவால் விட்டிருக்கிறாராம்.

எது எப்படியோ இதற்கும் விடுதலைப்புலிகளுக்கும் முடிச்சுப்போடுவதில் இலங்கை அரசு தீவிரம் காட்டுகிறது. இந்தியாவுடன் முடிச்சுப்போட பாக் அரசு முயல்கிறது.

gulfnews ல் வெளியாகிய செய்தியில் இலங்கையர்கள் கருத்து பதியும் போது விடுதலைப்புலிகளின் திட்டமிட்ட தாக்குதல் என்று சொல்லியிருக்கிறார்கள்.

என்ன நடக்கவிருக்கிறது என்று பொறுத்துத்தான் பார்க்கவேண்டும்.

நம்ம கெகலிய என்ன சொல்றார்??? அவர் ஏதாச்சும் சொல்லணுமே... இந்த மாத நகைச்சுவை இன்னும் அவர் வெளிவிடவில்லை. :D

loshan
04-03-2009, 04:58 AM
யார் இதன் பின்னணியில் இருந்தாலும் பாதிப்பு பாகிஸ்தானுக்கு மட்டுமல்ல, முழு தெற்காசியாவுக்குமே..
இனி எந்த வெளிநாட்டு அணிகளும் தெற்காசிய நாடுகளுக்கு வரத் தயங்கும்.

பழிபோடுவது சிரமம் என்பதால் இதுவரை மௌனம் தான்.. :)

ஆதி
04-03-2009, 06:36 AM
cricinfo-வில் வெளியாகி இருக்கும் சங்ககாராவின் பேட்டியை கண்ணுற இங்கே சொடுக்கவும் (http://content-usa.cricinfo.com/magazine/content/current/story/393354.html)

raj144
04-03-2009, 09:44 AM
சுத்த காட்டுமிரண்டி தனம்,பகிஸ்தனின் தீவிரவதத்திற்க்கு உலக அளவில் அங்கிகாரம் கிடைக்க தன் தலையில் மண் வாரிப்போட்டுக் கொண்டது.இது பகிஸ்தன் அரசின் இயலமயை காட்டுகிறது.இனி பாகிஸ்தன் நாட்டை ஒரு தீவிரவத, நாடக மாறுவதற்க்கு இச்சம்பவம் ஒரு சாட்சி.இதில் பாதிக்க ப்பட்டவர்கள் விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன்.இனி இது மாதிறி ரிஸ்க் எடுப்பது நல்லதல்ல..

ஓவியன்
04-03-2009, 02:03 PM
விளையாட்டு வீரர்களின் முன்னிலையில் தம் வீரத்தைக் காட்ட முற்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்களது செயல் கடும் கண்டனத்துக்குரியது.....

விளையாட்டு விளையாட்டாகவே இருக்க வேண்டும், விளையாட்டை அரசியலாக்கவோ, விளையாட்டில் அரசியலைக் கலக்கவோ கூடாதென்ற உண்மை இலங்கையில் பலருக்கு உறைக்க வேண்டிய தருணம் இது....

விலைவாசையேற்றம், போர்களப் பின்னடைவுகள், அண்டை நாடுகளின் உதவிகள் போன்ற பல்வேறு அரசியல் பின்னடைவுகளையெல்லாம் சமாளிக்க விளையாட்டு என்ற வலுவான சக்தியைப் பயன்படுத்த நினைத்தமையால் வந்த பிரச்சினை இது என்றும் எடுத்துக் கொள்ளலாம்....

இனியாவது விளையாட்டு விளையாட்டாகவே இருந்த்விட்டுப் போகட்டும்....

அன்புரசிகன்
04-03-2009, 03:21 PM
இலங்கைக்கு வருகைதந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்...

http://www.dailymirror.lk/DM_BLOG/Sections/frmNewsDetailView.aspx?ARTID=42290

நன்றி டெய்லிமிரர்.

அறிஞர்
04-03-2009, 03:29 PM
பத்திரமாக இலங்கை அணி நாடு திரும்பியது சந்தோசம்...

arun
07-03-2009, 02:33 AM
இது முற்றிலும் கண்டிக்கத்தக்க விஷயம்

நல்ல வேளை இந்திய வீரர்கள் பாகிஸ்தான் செல்லவில்லை அப்படி சென்று இருந்தால் கண்டிப்பாக இதை விட பெரிய தாக்குதல்கள் நடந்து இருக்கலாம்

இலங்கை வீரர்கள் பூரண குணம் அடைந்து மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போம்

aren
07-03-2009, 06:46 AM
முத்தையா முரளீதரன் வேறு மாதிரி பேட்டி கொடுத்திருக்கிறார். பாகிஸ்தான் டீம் பஸ்ஸும் இலங்கை டீம் பஸ்ஸும் ஒரே சமயத்தில் கிளம்பவேண்டியது, ஆனால் பாகிஸ்தான் டீம் பஸ் ஐந்து நிமிடம் கழித்து வருகிறோம் என்று சொன்னபடியால் செக்யூரிட்டியில் பாதி பாகிஸ்தான் அணியுடன் இருக்கும்படியாகியது. அது தெரிந்து யாராவது செஸேஜ் கொடுத்திருப்பார்கள் என்று சொன்னார். அப்படி கொடுத்தவர்கள் பாகிஸ்தான் இன்டெலிஜென்ஸின் ஆட்களாகவும் இருக்கலாம் என்றார்.