PDA

View Full Version : எம் மண்



M.Rishan Shareef
03-03-2009, 04:55 AM
நடந்து நடந்து பாதங்கள் வெடித்தன
வாழ்விடம் குறித்த கனவுகள் பெருகி
ஏக்கங்கள்
தாண்டும் பொழுதுகளிலெல்லாம் வழியலாயிற்று
சொந்தத் தரை மண்ணிட்டுப்
போற்றி வளர்க்கும் செடியொன்றின்
கிளைப் பூக்களுக்கு அவாவி
எல்லா இடர்களுக்குள்ளும்
எம் சுவடுகள் திரிகின்றன

நிலவும் பார்த்திற்று சூரியன் கொண்டுபோன
நீர்த்துகளும் பார்த்திற்று
இன்னும் அனைத்தும் பார்த்திட
வாழ்வின் அறுவடைக்கு முன்னர்
விடியலைத்தான் காணவில்லை

'வரிசை வரிசையாய் மனிதர்கள்
ஆயுதங்கள் கொண்டு
இடையில் கோடுகிழித்துச் சலனங்களை
ஏற்படுத்து
சுமைகளை அந்தரத்தில் விட்டு
திசைக்கொன்றாய்ச் சிதறி ஓடிப்போகட்டும்
மனிதர்கள் எறும்பல்லவே
ஒன்றுகூடுதல் ஆபத்து
அவர்களுக்குள் மொழி இருக்க
தேசம் பற்றிய இலட்சியங்கள் இருக்க
தாய்மண் தந்த வீரம் வழிநடத்துகிறது'
எனக் குறிப்புகளெடுத்து
அப்பாவி ஜீவன்களின் உயிரெடுத்தல் குறித்துப்
பாடங்கள் நடத்து

தாய்மண் குறித்த
நம்பிக்கைகள் வழிநடத்த
சாவுக்கொன்றும் பயந்தவர்களில்லை நாங்கள்
உன்னைப் போல

- எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.

நன்றி - யுகமாயினி ( பெப்ரவரி, 2009 )

இளசு
09-03-2009, 09:57 PM
சில சதுரமைல்களில்
சில லட்சம் மக்கள்..

வாழ்வாதாரம் பிடுங்கப்பட்ட
வாடிய செடிகளாய்..

அடைமழை குண்டுகள்..
தேடிக்கொல்லும் படைகள்..

எத்தனை பேர் மிஞ்சுவர்?
அதில் எத்தனை பேர் முழுமையாய்??????

எத்தனை தலைமுறை ஆகும்..
இந்த வெந்த செடிகள் மறுபடி தழைக்க????????????????


என்ன எழுத...
எப்படிச் சொல்ல..??????????????????????

என்று முடியும் இந்த
இனப்படுகொலை கோரத்தாண்டவம்?????????????????

M.Rishan Shareef
22-03-2009, 06:51 AM
அன்பின் நண்பர் இளசு,
//சில சதுரமைல்களில்
சில லட்சம் மக்கள்..

வாழ்வாதாரம் பிடுங்கப்பட்ட
வாடிய செடிகளாய்..

அடைமழை குண்டுகள்..
தேடிக்கொல்லும் படைகள்..

எத்தனை பேர் மிஞ்சுவர்?
அதில் எத்தனை பேர் முழுமையாய்??????

எத்தனை தலைமுறை ஆகும்..
இந்த வெந்த செடிகள் மறுபடி தழைக்க????????????????


என்ன எழுத...
எப்படிச் சொல்ல..??????????????????????

என்று முடியும் இந்த
இனப்படுகொலை கோரத்தாண்டவம்?????????????????//

உங்களது கேள்விகளைப் போன்றே அனேகமானவை நல்ல இதயங்களில் தொடர்ந்தும் வழிந்துகொண்டே இருக்கின்றன..விடைகள்தான் தெரியவில்லை :(

கருத்துக்கு நன்றி நண்பரே !