PDA

View Full Version : ஈழத்தில் பெற்றோரை விட்டுப் புலத்தில் தவிக்கும் உறவுகளின் உண்மை நிலை..!!



ஓவியன்
02-03-2009, 11:07 AM
ஈழத்தில் தன் பெற்றோரை விட்டு விட்டு, அவர் தம் நினைவுகளின் வலிகளால் வாடுவதிலும் வேறு வழியற்ற ஏதிலியாகிவிட்ட ஒருவரின் (பிரகாஷ் மகாலிங்கம்) உள்ளக்கிடக்கையை மேற்கு அவுஸ்திரேலியாவின் உள்ளூர் பத்திரிகைகளில் ஒன்றான Gosnells Examiner தனது 26-02-2009 தினத்திலான பதிப்பில் Heartbroken by silence என்ற தலைப்பில் முகப்புச் செய்திகளில் ஒன்றாக்கியுள்ளது. நம்மவர்களின் உண்மை நிலைப்பாடுகளை வெளியுலகுக்கு எடுத்துச் (சொ/செ)ல்லும் நடவடிக்கைகளின் சிறு, சிறு வெற்றிகளில் இதுவும் ஒன்று.....

அந்தப் பத்திரிகையின் முகப்பினை வாசிக்க இங்கே (http://www.scribd.com/doc/12917527/ExaminerNewsArticleFrontPageA3) சுட்டுங்கள்..!!

அமரன்
02-03-2009, 11:32 AM
நம்மவர்களின் உண்மை நிலைப்பாடுகளை வெளியுலகுக்கு எடுத்துச் (சொ/செ)ல்லும் நடவடிக்கைகளின் சிறு, சிறு வெற்றிகளில் இதுவும் ஒன்று.....


இதை.. இதைத்தான் நான் எதிர்பார்த்தேன். செய்தவர்களுக்கு தலை வணங்குகிறேன்.

நாடுகளை, தலைவர்களை வசைபாடும் நேரத்தில் இதைச் செய்தால் போதும். விடியல் விரைவில் கிட்டும்.

இந்த சிறுதுளிகள் பெருவெள்ளமாக என்னால் ஆனதை செய்துகொண்டு இருக்கிறேன். நீங்களும் செய்யுங்கள் என்பதுதான் எனது அன்பான கோரிக்கை.

miindum
02-03-2009, 12:31 PM
சரியான பதில் கணை..உண்மைதான்

சிங்கள அரசு தமிழெதிர்ப்பை ஆய்தம் மூலமான போர் அறிக்கைப்போர்,கலாச்சார மூழ்கடிப்பு போர், மீடியா போர் ,பொய்யுரை போர் இப்படி பலவிதமான போர்களை நடத்துகிறது.

இதற்கு பதிலடியாக இப்படி சர்வதேசங்களின் பார்வையை நம் பக்கம் திருப்ப இப்படியான பதிவுகள் தேவை .தொடரட்டும்

தூயவன்
02-03-2009, 02:08 PM
நல்ல விடயம் தெடரட்டும் உண்மை நிலைப்பாடுகளை வெளியுலகுக்கு எடுத்துச் சொல்லும் நடவடிக்கை