PDA

View Full Version : இல்லம்



kavisenthil
02-03-2009, 05:31 AM
இல்லம்

மகனோ தனிகுடித்தனமாய்
ஆனால்
தாயோ கூட்டுக்குடும்பமாய்
முதியோர் இல்லத்தில்.

இப்படிக்கு,
கவிசெந்தில்.

samuthraselvam
02-03-2009, 06:27 AM
ஒரு வலியான உண்மையை அழகான வரிகளில் சொல்லி இருக்கிறீர்கள் கவி.. உங்கள் பெயர் போலவே.. முதல் படைப்பிற்கு வாழ்த்துக்கள்..

poornima
02-03-2009, 07:16 AM
முதியோர் இல்லம் பற்றி இன்னொரு
பார்வையில் விளைந்த கவிதை.பாராட்டுகள்

எத்தனை விதமாய் கவிதை சொன்னாலும்
இந்த வலி கொடுமையானது.

முதியோர் இல்லங்கள் பெருகிக் கொண்டுதான்
இருக்கின்றன.. விலைவாசி போல்

அமரன்
02-03-2009, 08:00 AM
பூத்துச் சிரித்து
அழகு சிந்தினாலும்
இல்லத் தோப்பில்
ஒளிந்திருக்கிறது தனிமை..

இளைமையில் தீர்க்கம் இல்லாதவரை
இந்தவகைக் கவிதைகள் உயிர்த்தெழும்.

பாராட்டுகள் செந்தில்.

இளசு
02-03-2009, 10:09 PM
முகத்திலறையும் முரண் சொற்றொடர்கள் -
தனி Vs கூட்டுக் குடித்தனம்...

பாராட்டுகள் நண்பரே!