PDA

View Full Version : நீ மட்டும்தான்.... தோழியே....



இன்பக்கவி
01-03-2009, 03:06 PM
நான் நேசித்த அனைவரும்
என்னை நேசிக்க மறந்த போதும்
எங்கோ ஒரு மூலையிருந்து
நீ என்னை நேசித்தாய்...

எனக்கு பிடித்த பொருட்கள் எல்லாம்
கிடைக்காமல் போன போதும்
என்னை உனக்கு பிடிக்கும் என்று,
ஒரு வார்த்தை கூறினாய்...

எனக்காக எல்லோரையும் கேட்டேன்
இறைவனிடம்
ஆனால்...
கேட்காமல் கிடைத்த உறவு...
நீ மட்டும்தான்....
தோழியே....

என்றாவது ஒரு நாள்
நீ என்னை வெறுப்பதாக இருந்தால்..
அதை இன்றே சொல்லி விடு..
இப்போதில் இருந்தே
கற்றுக் கொடுக்கிறேன்...

என்
இதயத்துக்கு....
வலிகளைத் தாங்குவது
எவ்வாறு என்று...

சிவா.ஜி
01-03-2009, 05:47 PM
தோழமை என்பது உள்ள உறவுகளிலேயே உற்ற உறவு. நல்ல தோழமை கிடைப்பதென்பது உலகின் மிகப்பெரும் செல்வம் கிடைப்பதைப்போன்றது. அத்தகைய தோழமையை பேசிய உங்கள் முதல் கவிதைக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் கவிதா. வாழ்த்துகள்.

நிரன்
01-03-2009, 06:00 PM
என்றாவது ஒரு நாள்
நீ என்னை வெறுப்பதாக இருந்தால்..
அதை இன்றே சொல்லி விடு..
இப்போதில் இருந்தே
கற்றுக் கொடுக்கிறேன்...

என்
இதயத்துக்கு....
வலிகளைத் தாங்குவது
எவ்வாறு என்று...


உன்னில் புரிதலுண்டு எனக்கு.
பிரிதலுக்கு அவசியமேது!

உன்னிதயந்தான் வலிக்குமென்றால்,
என்னியதம் என்செய்யுமடி தோழி!

காலங்களின் நடைபாதையில்,
நம் நட்பும் நடைபோடும்.
கலங்காதே உன் கண்துடைக்க நானிருக்கையில்.

நன்றாகவுள்ளது உங்கள் கவிதை... கவிதா அவர்களே!

காதல் கூட சிறு சிறு வார்த்தைகளால் உடைந்து போகபக் கூடும் ஆனால் வார்த்தைகளையும் அர்ந்தங்களையும் புரிவது நட்பு மட்டுந்தான் ஒளிவு மறைவுகள் இல்லாத பட்சத்தில், நட்பிற்கு எல்லையே இல்லை.

வாழ்த்துக்கள்+பாராட்டுக்கள் கவிதா. தொடருங்கள்

இளசு
01-03-2009, 07:02 PM
எதுவும் கடந்து போகும்..
இதுவும் ----

என்ற ஆதியுண்மை இருந்தும்..

அந்தந்த நேர மனச்சித்திர லயிப்பில்
சாசுவதக் கனவைச் சமைப்பதில்தான்
சராசரி வாழ்வின் இனிப்புச் சூட்சுமம் இருக்கிறது!


உங்கள் முதல் படைப்புக்கு மனமார்ந்த வாழ்த்துகள் கவிதா123 அவர்களே!

அமரன்
02-03-2009, 10:03 AM
கஸ்டப்படாமல் கிடைப்பதுக்கு மதிப்பில்லாதது நடப்பு.
அதை உடைத்தது தவமின்றிக் கிடைத்த வரமான நட்பு.

இவ்வுடைப்புப் போதும் உங்கள் நட்பு நிலைத்திருக்க.
ஆனாலும் இடிதாங்கக் கற்றுக் கொடுங்கள் இதயத்துக்கு.
ஏனெனில் இழப்புகள் வாழ்க்கையில் தவிர்க்கப்பட இயலதாவை.

முதல் கவிக்கு பாராட்டுகள்.
தொடர்ந்து படைத்திட வாழ்த்தும் வேண்டுகோளும்.

samuthraselvam
02-03-2009, 10:12 AM
நட்பை கவிதை நடையில் காட்டியதற்கு வாழ்த்துக்கள் கவி...
நண்பர்கள் வேண்டுமானால் பிரியலாம்
நட்பு என்பது எப்போதும் பிரியாது..

நீ சிரிக்கும் ஒவ்வொரு நொடியும் நான் உன் பின்னாடி இருப்பேன். உன் சிரிப்பை ரசிக்க....
நீ ஒவ்வொரு முறை அழும்போதும் உன் முன்னாடி இருப்பேன். உன் கண்ணீரை துடைக்க....
இப்படி நட்பை பற்றி சொல்லிக்கொண்டே போகலாம். நட்பிற்கு எல்லை என்றுமே இல்லை..

ஷீ-நிசி
03-03-2009, 12:19 AM
நட்பின் முறிவு, காதலின் முறிவு இந்த வேதனைகளெல்லாம் உள்ளத்தை இரணமாக்கி கொண்டேயிருக்கும், என்றெல்லாம் அவர்களின் நினைவுகள் தோன்றுகிறதோ...

கிடைத்த நட்பை இறுக பற்றிகொள்வதே சிறந்தது. நல்லதொரு கவிதை! வாழ்த்துக்கள் கவிதா!

ஆதவா
11-03-2009, 05:22 AM
சட்டென்று பிறக்கும் உயிர்களில் நட்பும் உண்டு!!
ஆனால், பெண்கள் அவரவர் நட்பைத் தொடர்வதில் கொஞ்சம் நடைமுறை சிக்கல் இருக்கிறது.. ஆண்களுக்கு அந்த பிரச்சனை இல்லை.

நல்ல கவிதைங்க.