PDA

View Full Version : சுகி.சிவம் நான் பார்ட்டி..



ஆதவா
01-03-2009, 11:33 AM
பெரும்பாலும் பார்ட்டிகளுக்கெல்லாம் நான் போவது கிடையாது என்று சொன்னேன் என்றால் அதைவிட பெரிய பொய் வேறேதும் இருக்காது. பார்ட்டி என்றவுடன் நீங்கள் நினைக்கலாம்... டிரிங்ஸ் தான் என்று!! ஆமாம் ஆமாம்.... ஆமாஞ்சாமி!!!! மேல் மாடியில் ஏசி ஹால்.. நடுங்கும் குளிர், அங்கங்கே பளிச்சிடும் பெண்கள், குதூகலத்தில் குழந்தைகள்.... வயிற்றைக் கிளறும் பசி என்று அந்த கூட்டமே அதகளமாக இருந்தது!!! என்ன கூட்டம்?? சொல்றேன் இருங்க...

இளநீரிலிருந்து தர்பூசணி, மோர், கரும்புச்சாறு என்று அத்தனை வெயில் அயிட்டங்களையும் உள்ளே தள்ளிவிட்டு, ஹாலுக்குள் நுழைந்தேன்.. மொரட்டு வெயில் போய் காதல் குளிர் ஹாலுக்குள் தெரிந்தது.. ஒரு கோட்டையைப் போன்ற தோரணத்தில் அமைக்கப்பட்டிருந்த அந்த அரங்கத்தின் நடுநாயகமாக சுகி.சிவம் அமர்ந்திருந்தார். இன்னும் பேச்சை ஆரம்பிக்கவில்லை. அப்பாடா என்றிருந்தது. அப்படியே ஹாலை ஒரு ரவுண்ட் சுற்றி வந்தேன்... அழகான ஆன்டிகள், அழகு ததும்பும் குழந்தைகள்.... ஒரே ஒரு ரவுண்ட் தான்.... மனசே இல்லை!!!

கொஞ்சம் நேரத்தில் சுகி.சிவம் பேச்சை ஆரம்பித்தார்... வாழ்க்கையை எப்படி வாழவேண்டும் என்று ஆரம்பித்து அப்படியே யூ டர்ன் போட்டு, சின்னச் சின்ன கதைகளைச் சொல்லி, சிரிக்க வைத்தார். குறிப்பாக, பெண்கள் நன்கு சிரித்தார்கள்.. பின்னே.... கணவனை மட்டுப்படுத்தும் ஜோக்குகளை அள்ளிவிட்டால்///// சிரிக்காம என்ன செய்வார்கள்? மலை மலையாக அழகான கருத்துக்கள் அப்படியே விழுந்து கொண்டே இருந்தது.. கைதட்டல்கள், சிரிப்பலைகள், ஏசி ஹாலின் நடுக்கத்தையும் மீறி எல்லோரும் குதூகலித்தார்கள்.. சுமார் ஒன்றரை மணிநேரம்... விடாமல் பேசி, எல்லாரையும் கட்டி வைத்தார்..

எல்லோரும் வயிறைத் தடவிக் கொண்டிருந்தார்கள். மணி வேறு இரண்டு ஆகிவிட்டது. ஒவ்வொருவராக கிளம்பினார்கள்.. எத்தனை நேரம்தான் சிரிக்க முடியும்??? கீழே (பரிமாறும் ஹால்) வேறு சிக்கன் வாசனையும், வஞ்சரம் மீனும் நம்மை வாவா என்று அழைக்க, பக்கத்து ஹாலில், பெரிசுகளுக்கு விஸ்கி வாடா என்று கூப்பிட..... அழகாக பேச்சை முடித்துக் கொண்டார் சுகி.சிவம்... ரொம்ப ஆச்சரியமாக இருந்தது... அழகாக ரவுண்ட் அடிக்கிறார் (பேச்சுலங்க..) அம்சமாக கரைத்துக் குடித்திருக்கிறார் (பல சுவையான சம்பவங்களுங்க.)

சரி பேச்சு முடிஞ்சு போச்சு... எல்லோரும் சாப்பிட கிளம்பிவிட்டார்கள்.. எனக்கும் வயிறு கிள்ளியது. நான் கிளம்பும் நேரத்தில் சரியாக அவரைப் பிடித்தேன்.. கொஞ்சம் பருமனாக இருந்தார். பட்டு வேஷ்டி, பட்டு சட்டை, நெற்றியில் அக்மார்க் சந்தனப் பொட்டு, குங்குமம்.. அட, நம்மள மாதிரியே கண்ணாடி (ஏம்பா, நான் ஏதோ அவரைப் பார்க்காதமாதிரி சொல்றியேன்னு புலம்பறது கேட்குது!!) புன்னகையும் இளமையும் அவர் முகத்தில் டேரா போட்டிருந்தது.. அருகில் சென்று நலம் விசாரித்தேன்... புன்னகைத்தவாறே நலம் என்றார்.. உங்களை சந்தித்ததில் ரொம்ப சந்தோஷம் என்றேன்... சிரித்துக் கொண்டே இருந்தார்.. அப்பறம் என்ன பேசறது??? ஒண்ணும் புடிபடல... அப்படியே நம்ம மேட்டரை அவுத்துவிடுவோமே!!!

இணைய தளங்கள்ல என்னோட படைப்புகளை எழுதிட்டு வரேன் ஐயா (ஐயான்னு தான் கூப்பிட்டேன்) கதை, கவிதை, கட்டுரைனு எதையும் விட்டு வைக்கலை என்றேன்.

ரொம்ப சந்தோஷம், இன்னும் கடுமையா போராடுங்க, வெற்றி தூரத்தில இருக்கும், எடுத்தவுடனே கிடைக்காது.. என்றார்.. சொல்லும்பொழுதே அவரின் முகத்தில் ஒரு ஊக்கக் களை வந்ததே பாருங்கள்... (அப்பறம் என்னென்னவோ சொன்னாரு.... அதெல்லாம் நம்ம பாழாப்போன மறதியில அடிபட்டுப் போச்சு!!)

கூடிய சீக்கிரம் ஒரு கவிதைத் தொகுப்பும் வெளியிடலாம்னு இருக்கேன் என்றேன்...

ரொம்ப நல்லது... சிறப்பா வருவீங்க என்றார்.

" தமிழ் எனக்கு ரொம்ப பிடிச்ச மொழி.. அதில் எழுதறது எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு என்றேன்... சிரித்தார்....

அப்படியே ஹாலிலிருந்து வெளியே வந்தோம்.. சிறிது நேரம் பேசிவிட்டு, அவர் என்னை விட்டு நீங்கினார்... ஒரு நிகழ்ச்சியின் போது சந்தித்ததால் அதிகம் பேசமுடியவில்லை.....

மெல்ல அவர் நடந்து சென்று கொண்டிருந்தார்... அநேகமாக சாப்பாட்டு ஹாலுக்கு என்று நினைத்து உடன் சென்றேன்... அட, இந்தவாட்டி அவரோட பேச இல்லைங்க... நன்னா கொட்டிக்க.....

அதுசரி.... தலைப்புப் படி பார்த்தா, "பார்ட்டி" என்னாச்சு???

அது சென்ஸார் கட்./

நிரன்
01-03-2009, 12:03 PM
ஐயா அப்பு ராசா ஆதவா இதெல்லாம் கொஞ்சம் ஓவர், மனிசர் இருக்கிற கடுப்பில இதப்படிக்க என்னால முடி.............ல:sauer028:


அப்படியே ஹாலை ஒரு ரவுண்ட் சுற்றி வந்தேன்... அழகான ஆன்டிகள்

ஆன்டிகளை சைட்டடிக்கத்தான் பார்ட்டி போறனீங்களா!!!:D

எங்கே நம்ம தக்ஸ்ண்ணா..... ஏல நாட்டாமையையும் கூப்பிட்டு இதுக்கு ஒரு தீர்வு கண்டாகணும்..




டிரிங்ஸ் தான் என்று!! ஆமாம் ஆமாம்.... ஆமாஞ்சாமி!!!! மேல் மாடியில் ஏசி ஹால்.. நடுங்கும் குளிர், அங்கங்கே பளிச்சிடும் பெண்கள்

:eek: இது வேறயா!!!! கைக் கோட் வரைக்கும் இதை இழுத்துச் செல்வேன். தக்ஸ் அண்ணா வரட்டும் வரட்டும் இன்னிக்கு கருமாதிதான்லே:D

போட்டுக்குடுக்கத் துடிக்கும்
°°நிரன்

ஆதவா
01-03-2009, 12:17 PM
மனிசர் இருக்கிற கடுப்பில இதப்படிக்க என்னால முடி.............ல:sauer028:
ஹாஹா... ஆதவா..... அடுத்தவரைக் கடுப்பேத்தி பார்க்கறதில அத்தன சுகம்டா!!!! கலக்குடா...


ஆன்டிகளை சைட்டடிக்கத்தான் பார்ட்டி போறனீங்களா!!!:D

வேற வேல.... நமக்கு!!!!


ஏல நாட்டாமையையும் கூப்பிட்டு இதுக்கு ஒரு தீர்வு கண்டாகணும்..

நாட்டாமை எப்பவும் சொம்பு மறந்துட்டு வருவாரு... தீர்ப்பு சொல்றதுக்குள்ள அவருக்கு கைகால் எல்லாம் நடுங்கும்... ஏலே நாட்டாமை.... வாய்யா!!!!

இளசு
01-03-2009, 07:50 PM
கலைமாமணி விருதுக்கு வாழ்த்தினாயா ஆதவா?

நிகழ்ச்சியின் பெயர் என்ன? எந்த ஊரில்?

நான் சுகி.சிவம் அவர்களை தொலைக்காட்சியில் மட்டுமே பார்த்திருக்கிறேன்.
உன் வர்ணனை ஒரு புகைப்படம்..

இந்தக் கட்டுரையை அவருக்கு அனுப்பி வையேன்..

பெரியோர்களின் வாழ்த்து பலிக்கும்... !

ஆதவா
02-03-2009, 12:43 AM
வாழ்த்தினேன் அண்ணா... எங்கள் ஊரில் நிகழ்ந்தது.. இக்கட்டுரையை அவருக்கு எப்படி அனுப்ப?

அவரிடம் ஆசி பெற்றுக் கொண்டேன் அண்ணா....

அறிஞர்
03-03-2009, 04:43 PM
அருமை ஆதவா.. புத்தக வெளியீட்டுக்கு வர இயலுமா என அடி போட்டுவிட வேண்டியது தானே..
அவரைப் பற்றி தகவல்கள் நண்பர்கள் தருவார்கள் என நம்புகிறேன்.