PDA

View Full Version : மலர்களோடு அன்று....!



வசீகரன்
28-02-2009, 03:36 AM
மலர்தேசம் ஒன்று
வரவேற்க்கிறது
வெகு ஆசையுடன் ஆவலுடன்
உள் நுழைகிறேன்.....

திகட்ட திகட்ட திகழ்கிறது
அழகு அங்கே...

திரும்பிய திசையெங்கும்
வனப்பும்
சுகந்தமும் சுவைக்கிறேன்....

எண்ணிலடங்கா மலர்களின்
வண்ணங்களில் என்
எண்ணங்களை இழக்கிறேன்...

அதன் மணம்தனில்
என் நிந்தை மயக்கமுறுகிறேன்....

புதியமலர்கள் உலகமது.....

அள்ள அள்ளக் குறையாமல்
கொள்ளை போகிறேன்
அங்கே நான்....

என் ரசனைக்கு வெகுரசனை
வந்துவிட்டதாக
எண்ணிய போது...

இல்லையென
புதியமலர் ஒன்றை கண்டு
விழிகளை விரிகிறேன்....

அம்மலர் அந்த மலர்வனத்தின்
மொத்த அழகைவிட இப்பொழுது
அழகாக தெரிகிறது எனக்கு

அது அவளின் புன்னகை என்பதை
பின்பு உணர்ந்தேன்....

அந்த புன்னகையில் சிக்கி
சுற்றியுள்ள பூக்களை
மறந்து விட்டேன்...

வைத்த கண் வாங்காமல் ரசிக்கிறேன்...

அந்த புன்னகை இப்போது
சிறியதாகிறது...
அவள் புன்னகைமுகம் முறைக்கவும்
செய்கிறது....

என் சுயம் தப்புகிறது....
குற்ற உணர்வில் என் தலை
வேறு பக்கம் பார்க்கிறது.....

அந்த மலர் என்னை ஓரக்கண்களில்
முறைத்தபடி கடந்து செல்கிறது....

அந்த புன்னகைப்பூ என்னைக்கடந்து
சென்று விடுகிறது
வெகுதூரம்....

மனம் கொள்ளாமல் திரும்பி பார்க்கிறேன்......

அகன்று சென்ற அந்தமலர்
வனத்தை கடந்த தறுவாயில்
இப்போது திரும்பியது

என்னை பார்த்து மெல்லிய
புன்னகைக்கிறது....

நான் மீண்டும் என்னை
மலர்களோடு மலர்களாக
மலர்ந்து போகிறேன்........!!!

samuthraselvam
28-02-2009, 08:42 AM
நல்ல இருக்குங்க... வசீகரமான கவிதை. உங்கள் பெயர் போலவே உங்கள் கவிதையும். எப்படித்தான் இப்படி எல்லோரும் ரசிக்கரமாதிரி எழுதுவான்களோ. நம்மளோடது பெருமூச்சு மட்டும் தான் உம்ம்ம்ம்ம்.....

சுகந்தப்ரீதன்
28-02-2009, 09:00 AM
அட 'சைட்டு' அடிக்கறதைக்கூட இப்படி நீ கவிதையில வடிப்பன்னு நான் நினைச்சிபார்க்கலை மாப்பு..!! சும்மா சொல்லல்லூடாது.. கலக்கிட்ட அப்பு..!!

மென்மையும் உண்மையும் கலந்து மணக்கும் கவிதை.. வாழ்த்துக்கள் வசீ..!!

வசீகரன்
28-02-2009, 11:38 AM
நல்ல இருக்குங்க... வசீகரமான கவிதை. உங்கள் பெயர் போலவே உங்கள் கவிதையும். எப்படித்தான் இப்படி எல்லோரும் ரசிக்கரமாதிரி எழுதுவான்களோ. நம்மளோடது பெருமூச்சு மட்டும் தான் உம்ம்ம்ம்ம்.....

இது பாராட்டா.... இல்ல மனசுக்குள்ள திட்டுறீங்களானே
தெரிலீங்களே செல்வம்..............
இப்படி எல்லாம் எழுதறானுங்களேனு
சொல்லி இருக்கீங்களே.........!!!

வசீகரன்
28-02-2009, 11:44 AM
அட 'சைட்டு' அடிக்கறதைக்கூட இப்படி நீ கவிதையில வடிப்பன்னு நான் நினைச்சிபார்க்கலை மாப்பு..!! சும்மா சொல்லல்லூடாது.. கலக்கிட்ட அப்பு..!!

ஹீ....ஹீ....ஹீ....ஆமாண்டா சுகந்தா அந்த பொண்ணு ரொம்ப அழகா இருந்தா அதான் கவிதையா வாடிச்சிட்டேன்....!



[/QUOTE]மென்மையும் உண்மையும் கலந்து மணக்கும் கவிதை.. வாழ்த்துக்கள் வசீ..!! [/QUOTE]

ரொம்ப நன்றீங்க எசமான்...............!!!

இளசு
01-03-2009, 06:57 PM
கண்தேர்தலில் கன வேட்பாளர்கள்..
இது ஆரம்பக் கட்டம்...

களம் வெல்லும் ஒருவர் வரும்வரை
களை கட்டும் இக்கண்ணாமூச்சி ஆட்டம்!

கண்ணாமூச்சி காட்டியது பட்டாம்பூச்சியாகவும்
கண்ட இடம் பூவனமாகவும் - இருந்தால்
கண்டவன் கவிஞனாவான்..
கவி வசீகரன் போல்!


பாராட்டுகள் வசீ!

பூமகள்
02-03-2009, 05:12 AM
பூக்களின் தோட்டம் கண்டு
அடிக்கும் கொள்ளைக்கும்
ஒரு கவிதை..!!!

காளையர் மனம்
புரிந்தது...

அழகான வர்ணனை.. பாராட்டுகள் வசீ..!

--------------------------------------------------

பெரியண்ணாவுக்கு ஓர் கேள்வி..


களம் வெல்லும் ஒருவர் வரும்வரை
களை கட்டும் இக்கண்ணாமூச்சி ஆட்டம்!
பல இடங்களில்
களம் வென்றாலும்
கண்ணாமூச்சி தொடர்கிறதே
பெரியண்ணா...

என்ன செய்யலாம்??!!! (மகளிர் அணியினரே ஓடியாங்கோ... பெரியண்ணா அருமருந்து கொடுப்பார்..... ரகசியம்...:D)

வசீகரன்
02-03-2009, 07:49 AM
கண்தேர்தலில் கன வேட்பாளர்கள்..
இது ஆரம்பக் கட்டம்...

களம் வெல்லும் ஒருவர் வரும்வரை
களை கட்டும் இக்கண்ணாமூச்சி ஆட்டம்!

கண்ணாமூச்சி காட்டியது பட்டாம்பூச்சியாகவும்
கண்ட இடம் பூவனமாகவும் - இருந்தால்
கண்டவன் கவிஞனாவான்..
கவி வசீகரன் போல்!


பாராட்டுகள் வசீ!

நன்றி அண்ணா... உங்கள் பின்னூடடம்...... வெகு அழகு
அந்த மலர்களை விட...!

வசீகரன்
02-03-2009, 07:55 AM
பூக்களின் தோட்டம் கண்டு
அடிக்கும் கொள்ளைக்கும்
ஒரு கவிதை..!!!

காளையர் மனம்
புரிந்தது...
நீ என்ன சொல்ல வரேனே எனக்கு புரியலயே பூ....!!!
மறுபடி இந்த பக்கம் வந்தா சொல்லுபா.....!

[/QUOTE]அழகான வர்ணனை.. பாராட்டுகள் வசீ..! [/QUOTE]
ரொம்ப தாங்க்ஸ்ங்க அம்மணி...!!!

பூமகள்
02-03-2009, 08:23 AM
நீ என்ன சொல்ல வரேனே எனக்கு புரியலயே பூ....!!!
மறுபடி இந்த பக்கம் வந்தா சொல்லுபா.....!
வசீ..

உங்க கவிதையையும் என் பின்னூட்டத்தையும் நல்லா படிச்சி பாருங்க.. புரியும்..

இன்னும் புரியலையா??

பூக்களை கண்களால் கொள்ளை('சைட்') அடிப்பதற்கும் கவிதை எழுதியாச்சான்னு கேட்டேன்.. :aetsch013:

ஆடவர் மனம் புரிந்தது என்றேன்.... புரிஞ்சிதுங்களா வசீ? :rolleyes: :D:D