PDA

View Full Version : பில்கெட்ஸுக்கு ஒரு நகைச்சுவைக் கடிதம்தூயவன்
28-02-2009, 03:19 AM
http://www.chron.com/photos/2008/07/28/12218480/260xStory.jpg

ஐயா பில்கேட்ஸு,

சமீபத்தில் ஒரு கம்ப்யூட்டரும் விண்டோஸ் சாப்ட்வேரும் வாங்கினோம். அதில் சில பல பிழைகள் உள்ளதாக அறிகிறோம். அவற்றை உங்கள் கவனத்திற்கு உடனடியாகக் கொண்டு வருவதில் மிக்க பெருமிதமடைகிறோம்.

1. இண்டெர்நெட் கனெக்ட் செய்தபிறகு, ஹாட்மெயிலில் அக்கவுண்ட் உருவாக்க முயற்சி செய்தோம். ஃபார்மில் எல்லா விபரங்களையும் சரியாகக் கொடுத்துவிட்டோம். ஆனால் பாஸ்வேர்ட் கேட்குமிடத்தில் நாங்கள் என்ன டைப் செய்தாலும் ***** என்று மட்டுமே தெரிகிறது. நாங்கள் இங்கு லோக்கல் சர்வீஸ் எஞ்சினியரிடம் விசாரித்ததில், அவர் கீபோர்டைச் செக் பண்ணிவிட்டு கீபோர்டில் ப்ராப்ளம் இல்லை எனக்கூறிவிட்டார். எனவே இதை விரைந்து சரிசெய்யுங்கள்.

2. விண்டோஸில் "Start" என்னும் பட்டன் உள்ளது. ஆனால் "Stop" பட்டன் இல்லை. அதையும் சேர்த்துவிடுங்கள்.

3. "Run" மெனுவை எனது நண்பர் ஒருவர் தவறுதலாகக் கிளிக் செய்து விட்டதில் அவர் சண்டிகருக்கே ரன் ஆகிவிட்டார். எனவே, அதை "sit" என மாற்றிவிடுங்கள். அப்போதுதான் எங்களால் உட்கார்ந்து வேலை செய்யமுடியும்.

4. "Recycle Bin" என்பதை "Rescooter Bin" என மாற்றவேண்டும். ஏனென்றால் என்னிடம் சைக்கிள் இல்லை, ஸ்கூட்டர்தான் உள்ளது.

5. "Find" பட்டன் சரியாக வேலை செய்யவில்லை என நினைக்கிறேன்.எனது மனைவி அவளது கார் சாவியைத் தொலைத்துவிட்டதால் "Find*" *மெனுவிற்குச் சென்று தேடினோன். ஆனால் கண்டுபிடிக்கமுடியாது என்று கூறிவிட்டது. இது ஒரு எர்ரர் என நினைக்கிறேன். தயவு செய்து அதை சரிசெய்து எனது கீயைக் கண்டுபிடித்துத் தாருங்கள்.

6. தினமும் நான் தூங்கும் போது மவுஸை பூனைக்குப் பயந்து என்னுடன் வைத்துக்கொண்டு தூங்குகிறேன். எனவே Mouse தரும்போது கூடவே ஒரு Dog தரவும், பூனையை விரட்டுவதற்கு.

7. நான் தினமும் "Hearts*" *விளையாடி ஜெயித்துக்கொண்டிருக்கிறேன். எனக்கு எப்போது நான் ஜெயித்த பணத்தைத் தருவீர்கள்? சில நேரங்களில் தோற்றிருக்கிறேன். உங்கள் பணத்தை எப்போது வந்து வாங்கிக்கொள்கிறீர்கள்?

8.என்னுடைய குழந்தை "Microsoft word" கற்று முடித்து விட்டான். நீங்கள் எப்போது "Microsoft sentence" ரிலீஸ் செய்யப்போகிறீர்கள்? என்னுடைய குழந்தை மிகவும் ஆவலாக உள்ளான்.

9. நான் கம்ப்யூட்டர், மானிட்டர், கீபோர்டு, மவுஸ் என அனைத்தையும் விலைகொடுத்து வாங்கியிருக்கிறேன். ஆனால் டெஸ்க்டாப்பில் "My Computer" ஐகான் மட்டும் உள்ளது. மிச்சத்தை எங்கே?

10. என்னுடைய கம்ப்யூட்டரில் "My pictures*"* என்று ஒரு ஃபோல்டர் உள்ளது. அதில் என்னுடைய போட்டோவைக் காணவில்லையே? எப்பொழுது அதைப் போடப்போகிறீர்கள்?

11. "Microsoft Office" இன்ஸ்டால் செய்துவிட்டேன். என்னுடைய மனைவி "Microsoft Home" கேட்கிறாள். நான் என்ன செய்யட்டும்?

நன்றி : தேன்தமிழ்

தூயவன்
28-02-2009, 03:22 AM
தமிழ்மன்றத்திலும் இதே பிழை உள்ளது.பாஸ்வேர்ட் கொடுகுமிடத்தில் நாங்கள் என்ன டைப் செய்தாலும் ***** என்று மட்டுமே தெரிகிறது. :D

samuthraselvam
28-02-2009, 09:04 AM
அருமையான கேள்விகள் இந்தக் கேள்விகளுக்கு பில் கேட்ஸ் நேரில் வந்து பரிசுகளோடு வந்து பதிலளிப்பார். பெரும்பாலும் எல்லோருக்கும் இருக்கும் சந்தேகம் தான் உங்களுக்கும் வந்துள்ளது. இது கணினி உபயோகிப்பவர்களுக்கு வரும் நோய்.

நிரன்
28-02-2009, 09:43 AM
முன்பு ஒரு முறை அப்பிள் நிறுவனம் வெளியிட்ட ஒரு புத்தகமொன்று படித்திருக்கிறேன் அதில் Microsoft வின்டோவில் உள்ள குறைகளை தெளிவாக எழுதியிருந்தார்கள். அதனைப் படிக்கும் பொழுது மிக நகைச்சுவையாக இருந்தது.

முன்னர் 2004 காலப்பகுதி என நினைக்கிறேன் சரியாகத் தெரியவில்லை கனடாவில் உள்ள GM Motors நிறுவனம் வியாபரத்தில் நஸ்டம் ஏற்பட்டுக் கொண்டு போகையில்.

பில்கேட்ஸ் ஒரு உரையில் கூறினார்

பில்கேட்ஸ்: என்னிடம் இம் மோட்டார் கம்பெனியை விற்றார்களெனின், என்னால் இதனை பெரிய உயரத்திற்கு கொண்டு செல்ல முடியும்

GM: ஆமா! இவருட்ட கொடுத்தால் காரில் கோளாறு காரணமாக இடைவெளியில் நின்றால், காரின் உரிமையாளர் online customer care ற்கு கோல் செய்தால் Start>> programs போல காரை start பண்ணத்தான் சொல்லுவார்.

பில்கேட்ஸ் : :shutup:


பகிர்தலுக்கு நன்றி batman

அய்யா
28-02-2009, 10:43 AM
GM: ஆமா! இவருட்ட கொடுத்தால் காரில் கோளாறு காரணமாக இடைவெளியில் நின்றால், காரின் உரிமையாளர் online customer care ற்கு கோல் செய்தால் Start>> programs போல காரை start பண்ணத்தான் சொல்லுவார்.

பில்கேட்ஸ் : :shutup:


அதாவது பரவாயில்லை!

குறுக்கே யாராவது வந்துவிட்டால், சடன் ப்ரேக் போட பெடலை மிதித்தால், "நீங்கள் உண்மையிலேயே வண்டியை நிறுத்த விரும்புகிறீர்க*ளா?" என்றல்லவா கார் கேட்கும்..?

:)

மன்மதன்
28-02-2009, 12:05 PM
அதாவது பரவாயில்லை!

குறுக்கே யாராவது வந்துவிட்டால், சடன் ப்ரேக் போட பெடலை மிதித்தால், "நீங்கள் உண்மையிலேயே வண்டியை நிறுத்த விரும்புகிறீர்க*ளா?" என்றல்லவா கார் கேட்கும்..?

:)

ஹாஹ்ஹா.. கிளாசிக்..:D

நிரன்
28-02-2009, 12:22 PM
அதாவது பரவாயில்லை!

குறுக்கே யாராவது வந்துவிட்டால், சடன் ப்ரேக் போட பெடலை மிதித்தால், "நீங்கள் உண்மையிலேயே வண்டியை நிறுத்த விரும்புகிறீர்க*ளா?" என்றல்லவா கார் கேட்கும்..?

:)

:lachen001::lachen001::lachen001::lachen001::lachen001::lachen001::lachen001::lachen001:
''பிரேக் சிஸ்டம் எரர்'' please check online :D:D:D மெசேச் காட்டாமல் இருந்தால் சரி:D:D:D

தூயவன்
28-02-2009, 12:36 PM
அதாவது பரவாயில்லை!

குறுக்கே யாராவது வந்துவிட்டால், சடன் ப்ரேக் போட பெடலை மிதித்தால், "நீங்கள் உண்மையிலேயே வண்டியை நிறுத்த விரும்புகிறீர்க*ளா?" என்றல்லவா கார் கேட்கும்..?

:)

ஹீ ஹீ ஹீ ....கோவிந்தா தான் :D

subashinii
01-03-2009, 12:37 AM
கடிதம் நன்றாக உள்ளது. கணினி உலகத்திற்கு நல்லது செய்தவரை இப்படி கேள்விகளால் துளைப்பது நியாயமா?

SivaS
02-03-2009, 09:30 AM
அடப்பாவிகளா தீட்டின மரத்துலயே கூர் பாக்குறிங்களா..

னல்ல ஜோக்காக இருந்தது

praveen
02-03-2009, 09:39 AM
இதே பதிவு முன்னரே நமது மன்றத்தில் வந்திருக்கிறதே, நான் அதில் கருத்து பதிந்த நியாபகம் உள்ளது. நேரம் கிடைக்கும் போது சுட்டி தேடி பதிக்கிறேன்.


பின்னர் பதிந்தது


நண்பர்களே, இதற்கு எனக்கு தோன்றிய பதிலை நகைச்சுவைக்காக கொடுத்துள்ளேன். நானும் மைக்ரோசாப்ட்டை சில காரணங்களுக்காக வெறுப்பவன் தான் ஆனால் அதை பயன்படுத்துவதால் அதற்கு பதில் சொல்ல நன்றி கடமைப்பட்டுள்ளேன் :) .


உங்களை மாதிரி ஆட்களுக்கு பதில் போடுவதற்காக தமிழ்நாட்டில் இருந்து சிலரை வைத்துள்ளோம். அவர்கள் உங்கள் கேள்விக்கு பதில் தந்திருக்கிறார் பாருங்கள்.


1.இண்டர்நெட் கனெக்ஷன் வாங்கிய பிறகு ஹாட்மெயிலில் அக்கவுண்ட் உருவாக்க எல்லா விவரங்களை கொடுத்த பிறகு பாஸ்வார்ட் பகுதியில் எதை கொடுத்தாலும் ****** என்றெ வருகிறது.வாங்கிய கடையில் கொடுத்த சோதித்தற்கு கீ போர்டில் எதும் குறையில்லை என்று சொல்லிவிட்டார்கள்.


நீங்கள் உங்கள் ஹாட்மெயில் அக்கவுண்டை இண்டர்நெட் பிரவுசரில், செட்டிங்க்ஸ் சென்று உங்கள் பாஸ்வேர்டை ஆறு ஸ்டாராக மாற்றி விடுங்கள். பிரச்சினை தீர்ந்தது.


2.விண்டொஸில் ஸ்டார்ட் பட்டன் உள்ளது.ஆனால் ஸ்டாப் பட்டன் இல்லை.அதையும் சேர்த்து விடுங்கள்


மைக்ரோசாப்ட் விண்டோஸ் எப்போதும் தொடர்ந்து இயங்காது, அது அடிக்கடி தானே ப்ளு ஸ்கீரின் வந்து அனைந்து போகும் படி வடிவமைத்திருப்பதால் தனியாக அந்த பட்டன் தேவை இல்லை என்று விட்டுவிட்டோம். நீங்கள் உடனே ஸ்டாப் செய்ய வேண்டும் என்றால் கம்ப்யூட்டரில் உள்ள பவர் பட்டனை ஸ்டாப் என்று ஒரு முறை சொல்லி விட்டு பின் அழுத்தவும்.

3.ரீசைக்கிள் பின் என்பதை ரீஸ்கூட்டர் என்று மாற்றுங்கள்.எனென்றால் என்னிடம் ஸ்கூட்டர் தான் உள்ளது.

நீங்கள் ஸ்கூட்டர் வாங்கிய விவரத்தை கம்ப்யூட்டர் வாங்கும்முன் எங்களுக்கு சொல்லாததால் சைக்கிள் என்று வைத்து விட்டோம். அடுத்த பதிப்பான விஸ்டாவில் வைத்துள்ளோம் (அதில் ரிசைக்கிள்பின் என்று தான் இருக்கும் அதை நீங்கள் ரைட்கிளிக் ரீநேம் செய்து கொள்ளலாம்.) அதற்கு ரூ.10,000 கூடுதலாக செலுத்தி பெற்றுக்கொள்ளுங்கள்.


4.பைண்டு பட்டன் வேலை செய்யவில்லை.நான் தொலைத்த கார் சாவியை பைண்டு மெனுவில் தேடினேன்.ஆனால் கண்டு பிடிக்க முடியாது என்று கூறிவிட்டது.இது ஒரு ஏரர்ராக இருக்கும்.
நீங்கள் தொலைத்த சாவியை, தொலைக்கும் முன் அந்த சாவியை எங்கே வைத்திருக்கிறீர்கள் என்று ஒரு டெக்ஸ்ட் பைலில் டைப் செய்து அதை டெஸ்க்டாப்பில் வைத்து பின் கம்ப்யூட்டர் முழுதும் தேடினால் அது சிறிது நேரத்தில் தேடி தரும் என்பதை பணிவுடன் தெரிவித்து கொள்கிறோம்.


5.எம்.எஸ் வேர்ட் கற்ற பிறகு,கற்பதற்கு எம்.எஸ்.செண்டேண்ஸ் என்று எதும் உள்ளதா ?

நீங்கள் புரோகிராம்ஸ்ல் அக்ஸரிஸில் வேர்டு பேடு என்று இருப்பதை பார்க்கவில்லை போலும் அதில் சென்று எனது எம்.எஸ் வேர்டை எம்.எஸ் செண்டன்ஸ் பதிப்பாக நாளை மாற்றி விடு என்று டைப் செய்து, தினமும் அதை திறந்து பார்க்கவும். அதில் என்றைக்கு மாறும் என்று போட்டிருக்கிறதோ அன்று அப்படி மாறி விடும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்.

இன்னும் ஏதாவது இருந்தால் கேளுங்கள், கேளுங்கள் கேட்டுக்கொண்டே இருங்கள். நாங்கள் இதை அடுத்த பஞ்சாப் மாநிலத்திற்கான ஹெல்ப்-ல் சேர்க்க இருக்கிறோம்.

பாலகன்
02-03-2009, 11:25 AM
அடடா முன்னரே வந்துடுச்சா....

பேட்மேன் வித்தியாசமா சிந்தி்குறீஙகளே....

தூயவன்
02-03-2009, 12:06 PM
முன்னரே வந்தது எனக்கு தெரியாது.மன்னிக்கவும்


அடடா முன்னரே வந்துடுச்சா....

பேட்மேன் வித்தியாசமா சிந்தி்குறீஙகளே....

வணக்கமுங்ண்ணா இது எனது சிந்தனை இல்லைங்ண்ணா.:mini023:

tamizhan_chennai
02-03-2009, 02:16 PM
மிக அருமையான கடிதம்,
பில்கேட்ஸ் பார்த்தா ,கம்பெனியையே இழுத்து மூடிடுவார்....