PDA

View Full Version : சூரியன்கள் உதயமானது (சிறுகதை-30)



ரங்கராஜன்
27-02-2009, 03:51 PM
\kjwe'igj24'pjgp

இளசு
27-02-2009, 06:52 PM
ஒவ்வொரு மதத்தையும் எப்படி பல வகைகளில் பின் வந்த மக்கள் Interpret செய்து ஒழுகினார்களோ..
அதே போல் தனி மனிதர்களும் தம் அனுபவம் பட்டறிவில் உரசி
இப்படி atheism என்னும் முடிவுக்கு வருகிறார்கள்..

இந்த atheism -ம் ஒரு மதம்போல் குருட்டாம்போக்கில் பரவாத வரை...சரி!

மணிக்கு என் வாழ்த்துகள்!

வேறோரு சூழலில் வேறொரு Interpretation-க்கு மணி மாறினாலும்
அதற்கும் என் முன் வாழ்த்துகள்..

அந்தந்த நேர மன அறிவுக்குரல் சொல்லி
அடுத்தவரை நோகடிக்காமல் நடக்கும்
அனைத்து மனிதருக்கும் வாழ்த்துகள்!

----------------------------------

பாராட்டுகள் தக்ஸ்!

பாரதி
28-02-2009, 12:54 AM
தீட்டு என்று சொல்லித் திட்டுபவர்களுக்கு சரியான வேட்டு.
அபாரம் மூர்த்தி!!!
இப்படியான சூரியன்கள் எல்லா இடங்களிலும் முளைத்து சூனியங்களை நிரப்பட்டும்.
எனக்கு இந்தக்கதை மிகவும் பிடித்திருக்கிறது. இனிய வாழ்த்து.

ரங்கராஜன்
28-02-2009, 02:08 AM
நன்றி இளசு அண்ணா
நீங்கள் கூறிய படி ஒரு மனிதனை ஆத்திகன் ஆக்குவதும் நாத்திகன் ஆக்குவதும் மற்ற மனிதர்கள் தான், இந்த சூழ்நிலையில் சுத்தமான நாத்திகன் ஆவது மணியின் பின் வரும் நிகழ்வுகளை பொறுத்து தான் இருக்கிறது.

இல்லை அவனுக்கு வேலை கிடைக்க சாமிக்கு தேங்காய் உடைத்து வேலை கிடைத்து விட்டால், அடுத்த முறை அவனுடைய வேண்டுதல் ஆடு வேட்டுவதாக மாறும், நிகழ்வுகளை பொறுத்ததே மனித மனதின் மாற்றங்கள்.

பகுத்தறிவு பற்றி நம் தாமரை அண்ணா ஒரு திரியே போட்டு விளக்கி இருக்கார், என்னை பொறுத்தவரை பகுத்தறிவு என்பது ஒரு செயலில் இரு பக்கமும் பார்த்து அலசி, செயலின் எல்லா சாத்திய கூறுகளையும் ஆராய்ந்து பார்ப்பது தான் பகுத்தறிவு.

எல்லா மனிதர்களிடமும் இருக்கும் insecurity feeling தான் தன்னை விட ஒரு பெரிய சக்தி அல்லது வேறு யாராவது ஒருவரை சார்ந்து இருக்க வைக்கிறது. மணி பகுத்தறிவுடன் இருந்தால் போதும் ஆத்திகனாக இருந்தால் என்ன? நாத்திகனாக இருந்தால் என்ன? மனிதனாக இருந்தால் போதும். என்ன அண்ணா சொல்றீங்க.

ரங்கராஜன்
28-02-2009, 02:12 AM
தீட்டு என்று சொல்லித் திட்டுபவர்களுக்கு சரியான வேட்டு.
அபாரம் மூர்த்தி!!!
இப்படியான சூரியன்கள் எல்லா இடங்களிலும் முளைத்து சூனியங்களை நிரப்பட்டும்.
எனக்கு இந்தக்கதை மிகவும் பிடித்திருக்கிறது. இனிய வாழ்த்து.

நன்றி பாரதி அண்ணா
உங்களுக்கு பிடித்து இருக்கிறது என்ற வார்த்தையை கேட்க சந்தோஷமாக தான் இருக்கிறது, நீங்கள் கூறுவது போல பகுத்தறிவு சூரியன் எல்லா இடங்களிளும் முளைக்க வேண்டும், நன்றி அண்ணா

மதி
28-02-2009, 02:51 AM
சூப்பர் கதை தக்ஸ்.. சொல்ல வந்ததை தெளிவாக சொல்லிவிட்டீர்கள். வாழ்த்துகள்

samuthraselvam
28-02-2009, 07:44 AM
இது மாதிரி பகுத்தறிவு பகலவன்களின் உதயம் அவர்களின் வாழ்க்கையின் நடக்கும் நிகழ்ச்சிகளை வைத்தே நடக்கும். மத வெறி பிடித்த மதி அற்றவர்களை திருத்தவே முடியாது. கதை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது அண்ணா..

30 அல்ல இன்னும் 300-க்கும் மேல் உங்களின் சிறுகதை படைப்புகள் பெருகட்டும்.

வாழ்த்துக்கள் அன்பு அண்ணா....

ரங்கராஜன்
01-03-2009, 02:34 PM
நன்றி மதி மற்றும் பாசமலரே, கதையை புரிந்துக் கொண்டு வாழ்த்தியமைக்கு நன்றி

தாமரை
01-03-2009, 04:20 PM
தக்ஸ்,

இந்த தீட்டு சம்பிரதாயம் போன்றவற்றை ஒரு ஆதிக்க உணர்வா உபயோகிப்பவங்க சிலபேர்..

மூடநம்பிக்கையா உபயோகிப்பவங்க சிலபேர்...

தன் முன்னோர்களுக்கு கொடுக்கும் மரியாதையா பார்ப்பவர்கள் சிலபேர்..

நம்பியும் நம்பாமல் கடைபிடிப்போர் சிலபேர்..

எப்படியாவது நியாயப்படுத்த எதாவது ஒத்துப்போகும் விஷயம் கிடைத்தால் அதை முட்டுக் கொடுத்து சப்பைக் கட்டு கட்டுவோர் சிலபேர்..

இப்படிப் பலவகையினர் இருக்காங்க...

ஒரு பழைய நினைவு...

அப்பா ஒரு பேனா வாங்கி கொடுத்தா அவருக்கே திருப்பிக் கொடுப்பது நல்லா இருக்குமா?

இல்லை அதை வைத்து ஒரு பரீட்சை, படைப்பு கொடுத்து அந்தப் புகழை சமர்ப்பித்தால் நல்லா இருக்குமா?

கடவுள் கொடுத்ததை அவருக்கே கொடுப்போம் என்பது சரியா? இல்லை அதை சரியான விதத்தில் உபயோகிப்போம் என்பது சரியா?

கொடுத்த பரிசை திரும்பக் கொடுத்தல் என்பது கொடுப்பவனை அவமானப்படுத்தல் ஆகும். ஆகவே இறைவன் கொடுத்ததை சரியாக பயன்படுத்துவதால் மட்டுமே இறைவனை நாம் மரியாதை செய்யமுடியும்.


மூட நம்பிக்கை கொண்டவனுள்ளும் ஒரு வெளிச்சத்தை பரப்பும் சிந்தனையைத் தூண்டும் கேள்வி.

இதைச் சொன்ன பொழுது எதிர்ப்பு எழவில்லை. உதாசீனம் எழவில்லை. உண்மைதான் என குடம் குடமாய் கொட்டுவது குறைந்தது

நம்பிக்கைகள் உரசப்படும் பொழுது தீ உண்டாகிறது.

நெருப்பு என்பது விளக்காக வெளிச்சமும் கொடுக்கலாம். அடுப்பாக உணவும் சமைக்கலாம்.. தீயாக ஊரையும் பொசுக்கலாம்.

சிந்திக்கத் தூண்டும் கேள்விகளுக்கும், உணர்ச்சியைத் தூண்டும் கேள்விகளுக்கும் வித்தியாசம் இருக்கிறது. முதலாவது கேள்வி வெளிச்சம் கொடுக்கும் தீவகை.. இரண்டாவது ஊரைப்பொசுக்கும் தீவகை.

இங்கிருப்பதோ கேள்விகள் ஓடும் விதமும், விதண்டாவாதம் என தீ எரிய ஆரம்பிக்கும்போது உடனே விறகை இழுத்து எரிச்சலைக் குறைத்து தீய்ந்து போகாமல் பக்குவமா சமைத்த ஒரு நல்ல உணவு..

சூரிய வெளிச்சம் பரவுவதை தடுக்க முடியாது... ஆனால் இங்கு சாமி (?) விழித்தாரா தெரியாது... அதனால் இந்தத் தீயை வெளிச்சம் கொடுக்கும் தீயா பார்க்கமுடியலை.

பக்குவப்படுத்தி ஒரு நல்ல சிந்தனை உணவை சமைத்த தீயாத்தான் பார்க்கமுடியுது. விருப்பமுள்ளவர்கள் சாப்பிடலாம்.. சிலர் ஒதுக்கியும் போகலாம்..

சசிதரன்
01-03-2009, 04:24 PM
நல்ல கதை தக்ஸ்.... தாமரை அண்ணாவின் விமர்சனம் அழகு... தன் கருத்தை மிக அழகாக சொல்லியிருக்கிறார்...:)

ரங்கராஜன்
01-03-2009, 04:45 PM
தாமரை அண்ணா

சசி சொன்னது போல உங்களின் விமர்சனம் அழகு, இந்த கதையின் முடிவில் பகுத்தறிவு சூரியன் உதயமாக தொடங்கி உள்ளது அது ஜோலிப்பதும், மறைவதும், மணியின் வாழ்க்கையில் பின் வரும் சம்பவங்களே முடிவு செய்யும்......................

நன்றி

சிவா.ஜி
01-03-2009, 05:03 PM
பாதி வழியிலேயே சாமான்களை வைத்துவிட்டு போகாமல், கோவில் வரை கொண்டு வந்து கொடுத்த மணியிடம் சாம்பு சொல்கிறார்

“ஆண்டவன் உன்னை எப்பவும் கைவிட மாட்டான் டா மணி, அவரை நம்பினா அவர் உன்னை எப்பவும் கைவிட மாட்டார் டா,.......................”

ஆனா...அந்த நேரத்துல ஆண்டவன் செய்யாததை மணி செஞ்சிருக்கான். அவனை நம்பிய சாம்பு சாமியை அவன் கைவிடவில்லை.

தாமரை அளித்த விளக்கத்துக்கு மேல் என்ன சொல்ல?

தீட்டு என்பதும் தீண்டத்தகாதவர்களென்பதும் வழக்கொழிந்து வரும் காலக்கட்டத்தில் நாம் இருந்தாலும், விடாப்பிடியாய் பிடித்து வைத்துக்கொண்டிருக்கும் இந்த ‘சாமி'யைப்போன்றவர்கள் திருந்த மணியைப்போல பலர் வேண்டும்.

நல்ல கதை. தெளிவா இருக்கு. அடுத்தடுத்தக் கட்டத்துக்கு பயணிக்கும் உனக்கு என் அன்பான வாழ்த்துகள்.

ரங்கராஜன்
01-03-2009, 05:18 PM
ஆனா...அந்த நேரத்துல ஆண்டவன் செய்யாததை மணி செஞ்சிருக்கான். அவனை நம்பிய சாம்பு சாமியை அவன் கைவிடவில்லை.

.

நன்றி அண்ணா
யாரும் அதை கவனிக்கவில்லை என்று நினைத்தேன், மனசாட்சிக்கு பயப்படறவன் தான் சிறந்த மனிதன், மணி சிறந்த மனிதன். என்ன அண்ணா சொல்றீங்க!!!!!!!!!!!!!!!!!!

சிவா.ஜி
01-03-2009, 05:38 PM
நன்றி அண்ணா
யாரும் அதை கவனிக்கவில்லை என்று நினைத்தேன், மனசாட்சிக்கு பயப்படறவன் தான் சிறந்த மனிதன், மணி சிறந்த மனிதன். என்ன அண்ணா சொல்றீங்க!!!!!!!!!!!!!!!!!!

கண்டிப்பா மணி ஒரு சிறந்த மனிதன்தான். இந்த சமுதாயம் மறுபடி அவனை மாற்றாம இருக்கட்டும்.

அக்னி
01-03-2009, 05:45 PM
‘தீண்டாமை’ என்பது கொடுமையான விடயம்.
அது இன்னமும் நம் மத்தியில் புரையோடிப் போயிருப்பதுதான் வேதனை.

இங்கு,
மணியின் வினாக்களிலேயே விளக்கங்களைப் பொருத்தியது கதாசிரியரின் சிறப்பான எழுத்தாற்றலுக்கு எடுத்துக்காட்டு.

வாழ்க்கையை ஒழுங்குபடுத்தத்தான் மதங்கள்.
அது மனிதரை வகைப்படுத்த என்றானது சாபமே.

கதையின் கருவை, செல்வரின் சிவந்த வரிகள் அழகாகக் கூறிவிட்டன.

இளசு, சிவா.ஜி அண்ணல்களின் பின்னூட்டங்கள் தனிச்சிறப்பு.

daks...
மன்றம் வந்த பின்னர்தான், கதைகளைப் படைக்கத் தொடங்கினீர்கள் என்பதைப் பொய்ப்பிக்கின்றது உங்கள் எழுத்தின் ஆளுமை.
மிகுந்த பாராட்டுக்கள்...

தாமரை
01-03-2009, 06:08 PM
தாமரை அண்ணா

சசி சொன்னது போல உங்களின் விமர்சனம் அழகு, இந்த கதையின் முடிவில் பகுத்தறிவு சூரியன் உதயமாக தொடங்கி உள்ளது அது ஜோலிப்பதும், மறைவதும், மணியின் வாழ்க்கையில் பின் வரும் சம்பவங்களே முடிவு செய்யும்......................

நன்றி

உதிப்பது சூரியன்தான் என்பதில் எப்பொழுதுமே சந்தேகம் வருவதில்லை.. தக்ஸ்.

எல்லா நாத்திகர்களும் பகுத்தறிவு பகலவன் இல்லை என்பதை எல்லோரும் ஒப்புக் கொள்கிறோம்...

நான் சொல்ல வந்தது உங்களுக்கு சரியாகப் புரிந்திருக்கும். இருந்தாலும் இன்னும் தெளிவாக..

சிலைகளுக்கு செருப்பு மாலை இப்படி மனம் நோகடித்து போராடுவது ஒருவகை.. ஊரைப் பொசுக்கும் தீ.

நான் தொட்டால் தீட்டாகும் என கருதப்படுகிற பாலே நான் கறந்ததுதான் என்பது இரண்டாம் வகை.. அந்தப் பாலைக் கொட்டிவிட்டு அன்று அபிஷேகமே செய்யாமல் விடலாம். அந்தச் சாமியே(!) ஒரு பசு வாங்கி பால்கறந்து அபிஷேகம் செய்யலாம். அதனால் இத்தனை நாள் இருந்த அந்த விஷயமும் அற்றுப் போகலாம்.. அதனால்தான் அடுப்புத் தீ என்றேன். சமைக்கப்பட்ட உணவு வீணாகவும் போகலாம். சாமியின் மனதில் வெளிச்சம் தோன்றியதா என்பது புரியவில்லை, அவர் மாறவும் ஆரம்பித்திருக்கலாம். அல்லது மணியை விதண்டாவாதம் பிடித்தவன் என்று ஒதுக்கியும் இருக்கலாம்.

மூன்றாம் வகை நான் கொடுத்த உதாரண வகை. மறுக்க மனம் வராது...உண்மையை ஒத்துக் கொண்டு மனத்தை வெளிச்சமாக்கும். அந்த வகை பகுத்தறிவை மட்டுமே சூரிய உதயம் என்று ஒப்புக் கொள்ள என் மனம் பழகி இருக்கிறது.

என் பார்வையை மட்டுமே விளக்கி இருக்கிறேன். இது இன்றைய நிலையில் என் பார்வை.. நாளைக்கே கூட மாறலாம்..

ஏற்கனவே பாலாபிஷேகப் பாலை குழந்தைக்கு கொடுப்பதை தடுக்கும் வார்த்தைகளை மறுத்து விழிக்க வைத்த வாதங்களைத் தான் அங்கு காட்டினேன்..

அங்கு சாமி ஒப்புக் கொண்டார்.. வெளிச்சம் பரவியது..

இங்கு மணி ஏற்கனவே பகுத்தறிவு சூரிய வெளிச்சத்தில் தான் இருக்கிறான். வேலையைப் பாதியில் விடாமல், சண்டை போடாமல் செல்வதே அவன் வெளிச்சத்தில் இருக்கிறான் என்பதைக் காட்டுவதாகும்.

அப்படியானால் உதயம் என்பது எங்கு ஏற்பட்டிருக்க வேண்டும்.. இன்னொரு இருள்சூழ்ந்த இடத்தில். அப்படி இருந்த இடம் அந்த பூசாரியின் மனம்.. ஆனால் அங்கு சிறிதாவது வெளிச்சம் வந்தது என்பதை.. காட்ட சின்ன ஒரு மாற்றம் அந்த சாமியிடம் ஒரு வார்த்தை காட்டியிருக்கலாம்..

உதயம் என்ற ஒரு வார்த்தையின் கனம் அப்படி. :D :D :D

யாரை / எதை சூரியன் என்கிறோம் எங்கு விடியல் என்கிறோம் என்ற ஒரே ஒரு தெளிவை உண்டாக்கினால் கதை மிக நிறைவாக இருக்கும்.

தாமரை
01-03-2009, 06:13 PM
பாதி வழியிலேயே சாமான்களை வைத்துவிட்டு போகாமல், கோவில் வரை கொண்டு வந்து கொடுத்த மணியிடம் சாம்பு சொல்கிறார்

“ஆண்டவன் உன்னை எப்பவும் கைவிட மாட்டான் டா மணி, அவரை நம்பினா அவர் உன்னை எப்பவும் கைவிட மாட்டார் டா,.......................”

ஆனா...அந்த நேரத்துல ஆண்டவன் செய்யாததை மணி செஞ்சிருக்கான். அவனை நம்பிய சாம்பு சாமியை அவன் கைவிடவில்லை.

.


நன்றி அண்ணா
யாரும் அதை கவனிக்கவில்லை என்று நினைத்தேன், மனசாட்சிக்கு பயப்படறவன் தான் சிறந்த மனிதன், மணி சிறந்த மனிதன். என்ன அண்ணா சொல்றீங்க!!!!!!!!!!!!!!!!!!

அப்படி நினைக்காதீங்க.. அதையெல்லாம் கவனிச்சுத்தான் உதயம் எங்கே என்ற கேள்வியே உதயமாச்சு :D

அக்னி
01-03-2009, 06:15 PM
தாமரை அண்ணாவின் பார்வையில் வியக்கின்றேன்...

ரங்கராஜன்
02-03-2009, 03:05 AM
நன்றி அண்ணா உங்கள் அலசல்கள் அபாரம், எதோ ஒரு கதை என்று விட்டு விடாமல் அதில் இருக்கும் கருத்துகளை, அதுவும் கதைசொல்லி புகுத்திய கருத்துகளை சரியாக அடையாளம் கண்டு கொண்டு எழுதுகிறீர்களே அதுவே எனக்கு அதிசயமாக இருக்கு. நன்றி ஆச்சர்யத்துடன் நன்றி

யாரை / எதை சூரியன் என்கிறோம் எங்கு விடியல் என்கிறோம் என்ற ஒரே ஒரு தெளிவை உண்டாக்கினால் கதை மிக நிறைவாக இருக்கும்.

நீங்கள் சொல்வதுக்கு எதிர்த்து பேசுகிறேன் என்று நினைக்காதீர்கள் அண்ணா, உங்களுடைய கருத்தை நான் முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன்..

இந்த கதையை படிக்கும் வாசகர்களின் பார்வை வேறுபடும், ஒவ்வொருவரும் தங்களின் பார்வையில் இருந்து கதையை பார்ப்பார்கள். சிலர் அந்த சாஸ்திரிகளாக, சிலர் மணியாக, சிலர் நம்பி ஏமாந்து போன அப்பாவாக. நான் கடைசியில் சூரியன் இருளை கிழித்துக் கொண்டு உதயமானது என்று சொன்னேன். யார் என்று குறிப்பிடவில்லை, அதனால் கதை முழுமை அடையவில்லை என்று அர்த்தம் இல்லை அண்ணா. இது ஒரு வகையாக கதை எழுதுவது. அதாவது முடிவை வாசகனின் கையிலே விட்டு விடுவது, என்னுடைய வார்த்தைகளில் flexilibity வைத்து இருந்தேன். அவர் அவர்கள் பார்வையில் சிலர் நல்லவர்கள், அதே போல sequence of incidents தான் ஒருவனுக்கு பகுத்தறிவை தருமே தவிர, ஒரே பிரச்சனையில் மனம் மாறுவது என்பது சும்மா பொய் அந்த நிமிடத்திற்கு மட்டும் வரும் கோபம். அதனால் மணிக்கு உள்ளே இருந்த பகுத்தறிவு கொஞ்சம் வெளிப்பட்டு இருக்கு, அது தொடருமா? என்று முடிவு செய்வது அவனுடைய பின் வரும் சம்பவங்கள்.

அதே போல தான் சாஸ்திரிகள் வாழையடி வாழையாக வந்த விதிமுறைகளை அவர் சொன்னார், அவரின் முன்னோர்கள் சொல்லி தந்ததை அவர் சொல்கிறார். மணி சொன்னவுடன் அவர் மனமாறுவது என்பது போல இருந்தால் அது இயற்கையாக இருந்து இருக்காது அண்ணா, சாஸ்திரிகளே நினைத்தால் மட்டும் தான் அவரின் எண்ணங்களை மாற்ற முடியும், காரணம் அவருக்கு வயது 40 மேல், பரம்பரை பரம்பரையாக வந்த விஷயத்தை ஒரு சின்ன பையன் சொல்கிறான் என்பதால் மாற்றிக் கொள்ள அவரால் முடியாது. ஒருவேளை தன்னுடைய தவறை அவர் உணர்ந்தாலே அது பெரிய விஷயம் அண்ணா.

சாஸ்திரிகளுக்கு மணியின் வார்த்தைகளில் உண்மை இருக்கு என்று தெரிந்தாலும் மனம் வருந்தினாலும், அவர் தன்னுடைய தீட்டு சம்பிரதாயங்களை விடப்போவது இல்லை, ஆனால் அந்த சம்பிரதாயங்களை தன்னுடைய மகனுக்கு சொல்லி கொடுக்க மாட்டார்.

என்னை பொறுத்தவரை எதிர்கால தலைமுறைக்கு தப்பான வழிகாட்டுதலே தீட்டு ஆகும்.

நன்றி

நன்றி

தாமரை
02-03-2009, 05:08 AM
ஆமாம் தக்ஸ்...

இந்தக் காட்சியை ஒரு திரைப்படமாக எடுக்கும் பொழுது மணியின் கடைசி வார்த்தைச் சொடுக்கு.... சாமியின் சிந்தனை முகம், சூரியன் உதிப்பது மூன்றையும் காட்டினால். இங்கு சூரியன் மணி போகும் திசைக்கு எதிராக உதிக்க வேண்டும். அதாவது மணியின் வார்த்தைகள் சூரியனாகி சாமி மனதில் வெளிச்சம் பரப்புகின்றன.
சாமி சிந்திக்க ஆரம்பிக்கிறார் என்று பொருள்படும்.

அதுவே மணியின் வார்த்தைச் சொடுக்கு அவனது நிமிர்ந்த நடை அவன் பின்னால் உதிக்கும் சூரியன், ஒரு புது பகுத்தறிவு பகலவன் உதிக்கிறான் என்று பொருள்படுத்தும்.. சாமி பற்றி கவலையில்லை, மணி என்னும் பகுத்தறிவு பகலவன் உதிக்கிறான்.. இனி வெளிச்சம் பரப்பப் போகிறான் எனக்காட்ட

இதையே இதை நான்கு பேர்கள் வேடிக்கைப் பார்ப்பதாக காட்டி பக்க வாட்டில் சூரியனை உதிக்க வைத்தால் சமுதாய விழிப்புணர்ச்சி உதிக்கிறது எனக் காட்டலாம்..அதாவது சொன்னவன் ஒருவன்.. கேட்டவன் இன்னொருவன்.. அதைப் பார்த்துக் கொண்டிருக்கும் சமுதாயத்தில் வெளிச்சம் பரவுகிறது.

ஆனால் கதை என்று வரும்பொழுது இத்தனை சாத்தியக்கூறுகளையும் திறந்து வைக்கலாம் தான். ஆனால் அந்தச் சிந்தனைக்களத்தை ஒரு ஃப்ரோசன் ஷாட் போல..

ஒரு இலை துளிர்த்தது என்பது போல இது.

அந்த இடத்தில் வாசகனின் கருத்துக்கு விட வேண்டுமானால்

அவனுடைய பகுத்தறிவும்தான்.

இந்த இரண்டு வார்த்தைகள் தேவையில்லை..

அன்று இரண்டு சூரியன்கள் உதித்தன..அல்லது உதயமாகின என பன்மையில் எழுத வேண்டும். உதயமானது என்பது ஒருமை.

அவனுடைய பகுத்தறிவும்தான் என்ற இருவார்த்தைகள் முடிவை வாசகனின் கையிலே விட்டு விடுவது என்பதற்குத் தடையாய் அமைந்து விடுகின்றன,

உணர்வுகளுக்கும் அறிவுக்கும் வித்தியாசம் உண்டு... உணர்வின் பால் நடந்த வாக்குவாதமாக சாமியின் பக்கம் இருந்து பார்த்தால் தெரிகிறது. அறிவின் பால் நடந்த உரையாடலாக மணியின் பக்கம் இருந்து பார்த்தால் தெரிகிறது.

தெளிவான சிந்தனை. அமைதியான அலசல், அடுத்தவர் உணர்வை மனப்பான்மை இவை மூன்றும் மணியின் வார்த்தைகளில் வெளிப்படுகின்றன, அதனால்தான் அவனுள் ஏற்கனவே தெளிவின் உதயம் நிகழ்ந்து விட்டது எனக் கணிக்கச் சொல்கிறது.. அவன் மனம் ஒளி நிறைந்ததாய் இருக்கிறது. அவனுள் இல்லை உதயம். அவனே உதிக்கிறான்.. முதன்முறையாக தன் ஒளியை வெளிப்படுத்துகிறான் என்று வேண்டுமானால் கொள்ளலாம், அதற்கு தடையாய் இருப்பது அந்த இரு வார்த்தைப் பூட்டுகள்.

போன முறை நடந்த உரையாடலில் கூட சொல்லி இருக்கிறேன் என்று நினைக்கிறேன். இங்கு கரு தவறு முடிவு தவறு என்று நாம் விவாதிக்கவில்லை,

நீங்கள் சொல்ல நினைத்தது மிகச்சரியாக இதைப் படிக்கும் ஒவ்வொருவருக்கும் போய்ச்சேர செய்யும் சின்ன ஆய்வு அவ்வளவுதான்,

விமர்சனங்களைக் கூர்ந்து கவனித்தாலே வார்த்தைகள் எப்படி வாசகன் பார்வையை மாற்றுகின்றன எனப் புரியும்.

மணியின் சலிப்பு நிறைந்த

"சாமி சின்ன வயசுல இருந்து என்னுடைய நைனா இந்த மலை சாமிக்கு தான் எல்லா வேலையும் செய்தார், அதுக்கு பதிலா தான் அந்த சாமி அவருக்கு கேன்ஸரை குடுத்தது, அவர் ஆண்டவனை ரொம்ப நம்பினார், போன மாதம்
சாகும் பொழுது கூட அவர ஆண்டவன் காப்பாற்றுவார்னு நம்பினு இருந்தார், என் கிட்டயும் சொன்னார். ஆனால் இந்த சாமி அவரை ஏமாத்திடுச்சி"

இங்கேயே மனம் புரண்டு நாத்திகம் - ஆத்திகம் பற்றி மணி மனதில் உண்டான மாற்றம் என ஆரம்பித்து

பகவானை பகைச்சிக்காதே வாழ்க்கையே நாசமாகிடும்

இப்ப மட்டும் என்ன பெரியவரே வாழுது, இரண்டு வேலை தான் சாப்பாடு

என்ன டா சாமினு மரியாதையா கூப்பிடுவ, இப்ப திடீர்னு பெரியவரேனு சொல்ற

சாமியே இல்லைனு ஆயிடுச்சு, அப்புறம் என்ன?. உங்க வயசுக்கு மட்டும் தான் மரியாதை உங்க தொழிலுக்கு இல்லை என்று கூறிவிட்டு கீழே நோக்கி நடக்க ஆரம்பித்தான் மணி

என்பதில் உள்ள சலிப்பு நிறைந்த வார்த்தைகள் கடவுள் மறுப்பு அல்ல என்பது தெளிவாக தெரிகிறது, அதனால் இளசு,

ஒவ்வொரு மதத்தையும் எப்படி பல வகைகளில் பின் வந்த மக்கள் Interpret செய்து ஒழுகினார்களோ.. அதே போல் தனி மனிதர்களும் தம் அனுபவம் பட்டறிவில் உரசி
இப்படி atheism என்னும் முடிவுக்கு வருகிறார்கள்..

வேறோரு சூழலில் வேறொரு Interpretation-க்கு மணி மாறினாலும்
அதற்கும் என் முன் வாழ்த்துகள்..

அந்தந்த நேர மன அறிவுக்குரல் சொல்லி
அடுத்தவரை நோகடிக்காமல் நடக்கும்
அனைத்து மனிதருக்கும் வாழ்த்துகள்!

என்கிறார். தெளிவான உள்வாங்கல்.

இங்கே 16 வயதில் தகப்பனை புற்று நோய்க்கு பறிகொடுத்து முதல் நாள் தகப்பனின் பணியை செய்ய வரும் மணி... (இடைப்பட்ட காலத்தில் யாரோ சுமந்திருப்பார்கள். எதிர் காலத்தில் யாரோ சுமக்கப் போகிறார்கள்.) தந்தையை இழந்த வேதனை பழக்கப்பட்டுப் போய், கடவுளின் மேல் வெறுப்பு என்பது கோபத்துடன் வெளிப்படாமல்

நான் தொட்டா தீட்டு ஆயிடும்னு நினைச்சா அந்த கடவுளே எனக்கு வேண்டாம் சாமி. எது நடக்குமோ அது நடந்து தான் தீரும், கடவுளுக்கு லஞ்சம் கொடுத்து எதையும் மாத்த முடியாது.

என்று பக்குவமாய் வெளிப்படுகிறது.

மணி கடவுளை நம்புகிறானா இல்லையா என்பதல்ல இங்கு பிரச்சனை. கடவுள்
பற்றிய ஒரு தெளிவு இல்லாவிட்டாலும், ஒரு சின்ன வரையறை இருக்கிறது. அது இளசு சொல்லுவது மாதிரி அனுபவங்களால் மாறும்.

இந்த வயதில் உணர்வுகளை ஒதுக்கி அறிவுப்பூர்வமாய் சிந்திக்கிறானே என வியக்க வைக்கிறது..

இங்கே ஒரு உருவகம் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. இன்னுமொரு உதயம் இன்று என்று...

சூரிய உதயம் என்ற உருவகம் உபயோகப்படுத்தும் பொழுது

அது தொடருமா? என்று முடிவு செய்வது அவனுடைய பின் வரும் சம்பவங்கள். என்று நாம் சொல்வது தவறாகும்.

மின்னலடித்து மழை வராமல் போகலாம்.. ஆனால் சூரியன் உதித்து ஒளி வராமல் போகாது. உதித்த சூரியன் உடனே ரிவர்ஸ் கியரில் போய் மறைந்து விடாது..

ஆக உறுதியான ஒரு தொடக்கத்தை உதயம் என்கிறோம்.

அப்படி உபயோகிப்பது தெளிவாக இருக்கும் எனக் கருதுகிறேன்.

ரங்கராஜன்
02-03-2009, 05:42 AM
உங்களின் காட்சி விவரிப்பு அருமை அண்ணா.

16 வயது பையனிடம் எந்த அளவுக்கு மனோதிடத்தை எதிர்பாக்க முடியுமோ அதை தான் அண்ணா நாம் எதிர்பார்க்க முடியும் அண்ணா. மணியின் வார்த்தைகளில் இருக்கும் ஏற்ற இறக்க, முரண்பாடுகள், காரணமாய் தான் வைத்தது. அவன் ஒரு தாழ்த்தப்பட்ட குலத்தில் பிறந்தவன் வெளி அறிவு தெரியாதவன். தன்னுடைய தந்தையின் இறப்பை சமிபத்தில் அனுபவித்தவன். சாமி தான் எல்லாம் என்று தன்னுடைய தோளில் இருந்து பூஜை சாமானை இறக்கி வைக்கும் வரை நம்பி இருந்தவன். ஆனால் அதன் பின் ஏற்படும் உரையாடல்களில் இருந்து பாராபட்சம் காட்டும் ஆண்டவனை வெறுக்க ஆரம்பிக்கிறான், அதுவும் அந்த சாஸ்திரிகளால், அவரின் வார்த்தைகளால்.

நாத்திகர்கள் எல்லாம் இறைவன் மீது கோபமோ, நம்பிக்கையில்லாமல் போனதற்கு இறைவன் காரணாம் அல்ல, சக ஆத்திகர்கள் தான். அவர் கண்ணுக்கு எதிரில் இருக்கும் மனிதர்களை மதிக்காமல் கண்ணுக்கு தெரியாமல் இருக்கும் இறைவனை தூக்கி வைப்பது தான், நாத்திகத்தின் முதல் படியாக மாறுகிறது.

அதுபோல 16 வயது ஆகும் மணியின் மேல் நீங்கள் வைத்து இருக்கும் நம்பிக்கை பாராட்டுக்குரியது, ஆனால் யதார்த்தமாக பார்த்தால் நீங்கள் சொல்லவது போல ஆணித்தரமாக மணிக்கு பகுத்தறிவு அந்த ஒரு சம்பவத்தால் வளர்ந்து விட்டது என்று சொல்ல முடியாது.

எந்த அளவுக்கு ஒரு விஷயம் நடக்க சாத்தியக்கூறு உண்டோ அந்த அளவு அது நடக்காமல் போகவும் சாத்தியக்கூறு உண்டு, இது ஒரு விதி. இந்த விதியின் படி நாளைக்கே குடும்பமே பட்டினி கடக்கும் சூழ்நிலையில் மணி திரும்பவும் கோயிலுக்கு வேளைக்கு போகலாம், ஆண்டவனே எல்லாம் என்று சரணடையலாம். மனிதர்களின் மனோதத்துவரீதியான மாற்றத்துக்கு காரணம் அவர்களுக்கு நடக்கும் சம்பவங்களே. இது தான் என்னுடைய ஆணித்தரமான வாதம்.

நன்றி

தாமரை
02-03-2009, 07:29 AM
உன்னுடைய வாதத்தைப் 4 பதிவுகளுக்கு முன்பே புரிந்து கொண்டேன் தக்ஸ்.

ஞாபகம் இருக்கலாம். சென்னை சந்திப்பின் போது கவிஞர்கள் உருவகம் உப்யோகிக்கும் பொழுது என்ன தவறு செய்கிறார்கள் என்று சொன்னேன் ஞாபகம் இருக்கிறதா?

உதயம் என்ற உருவகம் தரும் விளக்கம் என்ன என்பதை ஆராய்ந்தால் நான் சொல்ல வருவது புரியும்,

சூரிய உதயத்தின் குணாதிசயங்கள் என்னென்ன?

வெளிச்சம் கூடும். பனித்திரை விலகும். மேகங்கள் வரலாம் சூரியனை மறைக்க. இருந்தாலும் வெளிச்சம் அதிகமாகத்தான் இருக்கும். பூரண சூரிய கிரஹணம் ஏற்பட்டால் ஒழிய இருளிருக்காது. அந்த கிரஹண இருளும் சில வினாடிகளுக்குத்தான், சூரியன் உச்சிக்கு போய் பொழுது சாயும் வரை ஒளி இருக்கும்.

தெளிவு உண்டானது.. வெளிச்சம் தெரிகிறது.. என்பது மட்டுமல்ல, அடுத்து இன்னும் இது மேலும் ஒளிபெறும் என்பதை உதயம் என்னும் உருவகம் சொல்லுகிறது.

ஆனால் உங்கள் வாதப்படி உங்கள் நம்பிக்கை அதுவல்ல. இது உதயம் அல்ல. ஒரு விளக்கு ஏற்றப்படுகிறது..அது பாதையும் காட்டலாம். காற்றடித்தால் அணைந்தும் விடலாம் என்ற சாத்தியக்கூறு அங்கேதான் உண்டு. சூரியனுக்கு அந்தச் சாத்தியக் கூறு கிடையாது.

உதயம் என்ற உருவகம் கதையின் முடிவை இப்படியாக குறிப்பு காட்டுகிறது, இதுதான் கதாசிரியனின் பார்வை என்று கோடிட்டு காட்டுகிறது.

கதாசிரியன் அதை அறியாமல் எழுதும் பட்சத்தில் கதாசிரியனின் கருத்தாக வேறு கருத்துக்கள் கருதப்படுகின்றன.


பாரதி லீலூமா ஆகியோரின் பின்னூட்டங்களைக் கவனித்தீர்கள் அல்லவா? உதயம் என்ற வார்த்தை எப்படி அவர்களை ஒர் பக்கம் இழுத்திருக்கிறது என்று புரிந்து கொண்டிருப்பீர்கள்,

சம்பவத்தை மட்டும் விவரித்து இருந்தால் பல முடிவுகள் சாத்தியம். அன்று இரு சூரியன்கள் உதித்தன என்ற வார்த்தை கதாசிரியனின் கருத்தாக எதிர்காலம் காட்டும் குறிப்பாக அமைகிறது.

ரங்கராஜன்
06-10-2012, 01:44 PM
என்னை பொறுத்தவரை எதிர்கால தலைமுறைக்கு தப்பான வழிகாட்டுதலே தீட்டு ஆகும்.

நன்றி