PDA

View Full Version : ஒரு ரூபாய்



ரங்கராஜன்
27-02-2009, 04:56 AM
வணக்கம் உறவுகளே
குட்டி கதை புகழ் ஐரேனிபுரம் பால்ராசய்யா வை தொடர்ந்து நானும் ஒரு குட்டி கதையை பதிக்கலாம் என்று முயன்று இருக்கிறேன். பெரிய விஷயத்தை கொஞ்ச வார்த்தைகளில் உணர்த்தும் குட்டி கதைகள் மீது எப்பவும் எனக்கு ஒரு காதல் உண்டு.


ஒரு ரூபாய்

ரமேஷ் தன்னுடைய மதிய உணவை பிரபலமான அந்த ஓட்டலில் சாப்பிட சென்றான். பிரபலமான ஓட்டல் என்றாலே அங்கு வாடிக்கையாளர்களுக்கு மரியாதை இருக்காது, வேண்டா வெறுப்பாக தான் சர்வர்கள் பரிமாறுவார்கள். ரமேஷுக்கு சர்வரின் பார்வை, முறைப்பு எரிச்சலை தந்தது, அடக்கிக் கொண்டு உணவை வேண்டா வெறுப்பாக சாப்பிட்டு முடித்தான். சர்வர் பில்லை எடுத்து கொண்டு வந்து வைத்தான் பில் 299 ரூபாய் ஆனது. ரமேஷ் 500 நோட்டை எடுத்து கொடுத்தான், சர்வர் தெனாவட்டாக எடுத்துக் கொண்டு போய், மீதி தட்டில் 200 (100+50+5x10) ரூபாய் பாக்கி கொண்டு வைத்து திரும்பி பார்க்காமல் நடந்து போனான்

ரமேஷுக்கு எரிச்சல் அதிகமானது, சர்வரை சத்தமாக அழைத்தான். அவன் முகத்தில் எந்த வித உணர்வும் இன்றி என்ன? என்பது போல தலையை ஆட்டினான்.

“என்னங்க 201 ரூபாய்க்கு 200 தரிங்க”

“சில்லரை இல்ல”

“அத சொல்ல வேண்டாமா?”

“நீங்களே புரிஞ்சிக்கனு” ரமேஷுக்கு கோபம் தலைக்கு ஏறியது.

“என்ன ....ர புரிஞ்சிக்கனும், மீதி காசை சாமர்த்தியமா டிப்ஸை எதிர்பார்த்து 5 பத்து ரூபா நோட்டா வைக்க தெரிது இல்ல, அதே மாதிரி சில்லரை ஒழுங்க கொடுக்கனும் அறிவு வேணாம்”

“ஒரு ரூபாய் தான”

“யோவ் அது நாலணாவாக கூட இருக்கட்டும், என்னுடைய காசை நான் வேண்டாம்னு சொல்லலாம், ஆனா நீ எப்படி வேண்டாம்னு முடிவு செய்யலாம்”

”இரு வரேன்” என்று அவசரமாக சென்ற சர்வர், போய் ஒரு ரூபாயை எடுத்துக் கொண்டு வந்து தந்தான். ரமேஷ் வாங்கிக் கொண்டு சர்வரை முறைத்த படியே ஓட்டலை விட்டுச் சென்றான். இன்னொறு சர்வர் வந்து

”என்ன மாமே, என்ன சண்டை”

“ஒண்ணு இல்ல டா ஒரு கஞ்சப்பைய ஒரு ரூபாய்க்கு சண்டை போட்டுட்டு போறான்” என்ற சர்வர் ரமேஷின் பில் வேலட்டை எடுக்க போனான், அதில் ரமேஷ் டிப்ஸாக 10 ரூபாய் வைத்து இருந்தான், கூடவே ஒரு துண்டு காகிதமும் இருந்தது.

அதில் “நீ முகமலர்ச்சியுடன் உன் வேலையை செய்து இருந்தால் 20 ரூபாய் தந்து இருப்பேன்” என்று எழுதி இருந்தது.

அந்த சர்வர் அடுத்த டேபிளுக்கு முகமலர்ச்சியுடன் சென்றான்.

தாமரை
27-02-2009, 07:12 AM
ஒத்தை ரூபா இத்தனை பிரச்சனையை உண்டு பண்ணுதான்னு நம்பாதவங்க

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=17189

இதைப் படிக்கலாம்

samuthraselvam
27-02-2009, 10:33 AM
நல்ல இருக்கு அண்ணா.. அழகான குட்டி கதை.
முக மலர்சியால் எப்போதும் நல்லதே நடக்கும். நான் முன்பே சொன்னது போல் கடினமாக சொள்ளுவத்தைககூட சிரித்த முகத்துடன் சொன்னால் மனம் எளிதாக ஏற்றுக்கொள்ளும்.

பூமகள்
27-02-2009, 11:21 AM
கதையின் கரு எனக்கு பிடித்தமான ஒன்று..

இரு வேறு கருத்துகளை முன் வைக்கிறது ..


1. ஒரு ரூபாய் பற்றியது.

2. பரிமாறுபவரின் முக மலர்ச்சி..


முதலாம் கருத்து.. நடைமுறையில் பலமுறை நான் யோசித்த ஒன்று..

பல மளிகைக் கடைகளில் ஒரு ரூபாய், ஐம்பது பைசாவுக்கு விற்பனையே ஆகாத ஒரு மிட்டாயை/ சாக்லேட்டை வழங்கி அனுப்பிவிடுவார்கள்.. அது எத்தனை நூறுகளுக்கு/ஆயிரங்களுக்கு நாம் பொருட்கள் வாங்கியிருந்தாலும்..


பலமுறை நான் கோபப்பட்டதுண்டு..

இந்த மிட்டாயை சில்லரைக்கு பதில் ஒரு பேருந்திலோ அல்லது அதே மளிகைக் கடையிலோ திரும்ப கொடுத்தாலும் ஏற்றுக் கொள்வார்களா??

ஒரு ரூபாயில்லாட்டியும் கீழே இறக்கி விட்டுவிடுவார்கள் தானே நடத்துனர்கள்...??!!

ஆக, ஒரு ரூபாய் ஆனாலும் அது வேண்டாமென்று முடிவெடுப்பது நம் பொறுப்பு... சூப்பர் கதை.. தக்ஸ்...

சின்ன வயதில் ஜென் கதைகள் படித்திருக்கிறேன்.. அதிலும் பல நல்ல கருத்துகள் சொல்லாமல் சொல்லியிருப்பார்கள்..

குட்டி கதைகளின் தாக்கமே தனி தான்..

நல்லதொரு கதை.. பாராட்டுகள் தக்ஸ்..

அறிஞர்
27-02-2009, 03:14 PM
நல்ல கதை..
சர்வர்கள் முகமலர்ச்சியுடன் பரிமாறினாலே.. டிப்ஸ் அதிகம் கொடுக்கத் தோனும்.

மதி
27-02-2009, 03:39 PM
தக்ஸ்... கலக்கிட்ட தலீவா.. உண்மையிலேயே டிப்ஸ் பெரும் பிரச்சனை தான். அங்கு ஆரம்பிப்பது பெரிய ஊழலில் முடிகிறது.

சுகந்தப்ரீதன்
01-03-2009, 09:56 AM
சூப்பர் தக்ஸ்.. நல்ல முயற்சி...நல்ல கருத்து..!!

ஒரே கல்லில் இருமாங்காய்... வாழ்த்துக்கள்.. தொடருங்கள்..!!

இளசு
01-03-2009, 09:11 PM
பாராட்டுகள் தக்ஸ்..

சின்ன பொறியில் இரு மெழுகுவர்த்திகளைக் கொளுத்திவிட்டீர்கள்..

( எல்லா பிரபல உணவகங்களிலும் சிடுமூஞ்சிகள் என்பதற்கு
நான் அறிந்தவரை சரவணபவன் விதிவிலக்கு...)

அமரன்
02-03-2009, 02:49 PM
காசு கொடுத்து முகமலர்ச்சியை வாங்குவது/கொடுப்பது விபச்சாரத்துக்கு ஒப்பானது.

உழைப்புகுரிய ஊதியம் கொடுத்து முகமலர்வை வாங்குவது/கொடுப்பது உயர்வானது.

உரிய ஊதியம் கிடைத்தும் அதிக ஆசைப்படுவது அழிவுக்கு நிகரானது.

இனாம்களை எதிர்க்கவும் ஆதரிக்கவும் ஒவ்வொரு கருத்துண்டு.

இந்தக் கதையிலும் அந்த இரண்டும் உண்டு. இந்தவகை ஆணிக்கதைகள் மனதை தைக்கவேண்டும். ஆழகான ஆடை அணிந்து பவனி வர வைக்கவேண்டும்.

முகமலர்வு அவசியம் என்பதை ஆணி அடித்த மாதிரி சொன்னமைக்குப் பாராட்டுகள் தக்ஸ். பாராட்டுகள் தக்ஸ்.

அக்னி
28-06-2011, 10:41 AM
சில காலத்திற்கு முன்னரேயே எழுதப்பட்ட கதை, இப்போதுதான் வாசித்தேன்.

கருத்துச் செறிவோடு, திடீர் திருப்பம் கொடுக்கும் இந்த ஒரு பக்க கதைகள் அமரன் கூறியிருந்ததுபோல ஆணிக்கதைகள்தான்.

இன்று ஐ.பா.ரா. அவர்களின் ஒரு பக்கக் கதை ஒன்றை வாசித்திருந்தேன்.
இது அடுத்ததாக...

பூமகளின் பின்னூட்டம், தாமரை அண்ணாவின் சுட்டி என்பன கவனிக்க வேண்டியன.

தக்ஸ்... இதுபோல இன்னும் வருமா உங்களிடமிருந்து...

நாஞ்சில் த.க.ஜெய்
28-06-2011, 10:58 AM
அருமையான அதே நேரத்தில் சிந்திக்கவேண்டிய கதை ..அனாவசியமான செலவுகளை தவிர்க்க வேண்டுமென மறைமுகமாக உணர்த்தும் கதை ...பதிவு பழையதென்றாலும் அது கூறும் கருத்து என்றும் தேவை ..அருமை ..தொடருங்கள் ரங்கராஜன் அவர்களே...

raj7003
28-06-2011, 01:07 PM
ஆக அருமையான கதை:icon_ush:

Mano.G.
29-06-2011, 07:13 AM
சேவை துறையில் பணிபுரிவதால்,
தினமும் சந்திக்க வேண்டிய
சம்பவம் இது,

சேவையில் பனிவும் முகமலர்ச்சியும் வேண்டும்
எனபது தாரக மந்திரம்.

2009 தில் எழுபட்ட பதிவு இது இன்று தான் கண்டேன்
மேலும் பல எதிர்பார்க்கும் அண்ணன்

மனோ.ஜி

aren
29-06-2011, 11:12 AM
சிந்திக்க வைக்கும் அருமையான கதை. முகமலர்ச்சியுடன் வேலை செய்யும்போது கிடைக்கும் சுவையே சுவைதான்.

இன்னும் எழுதுங்கள்.

Ravee
29-06-2011, 08:03 PM
இது போல அருமையான பதிவுகளை தேடி முன்னுக்கு தருபவர்களுக்கு என் முதல் நன்றி ... தகஸ் உங்க எழுத்துக்களையும் கருத்துக்களையும் அதிகமா இழக்கிறோம் ... இடைவெளி விடாமல் வாருங்கள் .... .

innamburan
29-06-2011, 08:42 PM
பாயிண்ட் மேட், ரங்கராஜன். அமெரிக்காவில் பெரிய ஹோட்டல்களிலும் சர்வர்களுக்கு குறைந்த ஊதியம். விழுந்து, விழுந்து உபசரிப்பார்கள். டிப்ஸ் வைக்காமல் வர மன்சு வராது.