PDA

View Full Version : விடியல்கள் எப்போது!



நிரன்
26-02-2009, 04:05 PM
செத்துப்பிழைத்து, சொந்தவூர் தாண்டி வந்தவிடம் வேறு.
சொத்துக்களும் விட்டு, சொந்தங்களும் பிரிந்து,
வந்தவெம்மை அகதியென அடுக்கிவிட்டார்கள்.

மறு தலைமுறை தழைக்க மறுப்புமிங்கே-விதித்தார்கள்,
நம்மவரை வதைத்தார்கள்.
மறுப்புத் தெரிவித்தவர் பலர் - மறைந்தவர்,
பட்டியலில் மறைத்து விட்டார்கள்.

மாறுமா! இவ் அவலங்கள்.
தீருமா! நம் பிரச்சினைகள்.

மாறலாம்! காலங்கள் ஒரு நாள் மாற்றலாம்,
தீரலாம்! அவை தீர்கப்படலாம்!.
அதுவரை ஆண்டவன் அருள் புரியட்டும்

காலங்கள் வேகமாகச் செல்லட்டும்
புரிந்தும் புரியாத சில
மாந்தர் மனதைப் புரியவைக்கட்டும்,
நம்மில் பூரிப்புண்டாக்கட்டும்.

காத்திருப்போம், என்றும் விழிகள் பூத்திருப்போம்,
நம்மில் வலிகள் மறையட்டும்,
வலிமைகள் மட்டும் வளரட்டும்.

இனி.....
நம்முள் வாழ்வோம் சாவோம் வேண்டாம்,
வாழ்வோம் வெல்வோம் மட்டும் போதும்!



வலி(மை)களுடன்
°°நிரன்.

சிவா.ஜி
26-02-2009, 04:11 PM
வலிமிகுந்த வரிகளை வாசித்து மனம் வலிக்கிறது நிரன். என்று தீரும் நமது சோகமென ஆயாசப்படவைக்கிறது. இருப்பினும் என்றாவது ஒருநாள் தீருமென்ற நம்பிக்கையில் நெஞ்சம் விம்முகிறது.
வாழ்த்துகள் நிரன்.

இளசு
26-02-2009, 08:25 PM
யூதர்களுக்குப் பிறகு
தமிழினம் - ஈழத்தமிழினம்
இப்படி வதைக்கப்படுகிறது..

எல்லா வலிகளும் - இன்னும் வலிமையாக்கவே
பின்னாளில் இதற்கு ஈடாய் அதற்கும் மேலாய்
நன்மைகள் சேர, நல்லவை நடக்கும் என்று
நம்பிக்கையுடன்.....

நானும் காத்திருக்கிறேன்...

உணர்வுகளுக்கு என் வந்தனம் நிரன்!

ஷீ-நிசி
27-02-2009, 12:33 AM
வலி மிகுந்த வரிகள்!

நிரன்
27-02-2009, 01:54 PM
நன்றி சிவாண்ணா, இளசுவண்ணா, மற்றும் ஷீ-நிசி அண்ணா!

நாளும் ஈழத்தமிழினம் அழியும் செய்திகள் பார்க்கும் பொழுது கண்கள் கலங்குகின்றன கூடவே அவை சிவக்கின்றன.

பல்லாண்டு காலமாக விடுதலை விடுதலை என்று அதற்கு பொருள் தேடிக்கொண்டுதான் இருக்கின்றது ஈழத்தமிழினம்.

தேடித் தேடி இதுவரை எந்நவித பலனுமில்லை, இனியும் தேடுவோம் கடைசியொரு ஈழத்தமிழினம் இருக்கும் வரை.

நன்றி