PDA

View Full Version : கதைசொல்லிகள் ஜாக்கிரதை...



சசிதரன்
26-02-2009, 09:38 AM
பயணம் போக எதிர்பார்த்திருந்தேன்...
திட்டமிடல் ஏதுமின்றி...
திசைகள் பற்றி கவலையின்றி...

காற்றின் திசையோடு...
பறக்கும் மனதோடு...
வாழ்வின் பயணம் பற்றி யோசித்திருந்தேன்.

பயணம் சென்று வந்ததாய்...
வந்து நின்றான் ஒருவன்.
கேட்க எனக்கு விருப்பமில்லை என்றாலும்...
அனுபவம் சொல்வது கடமையென்றான்.

பூக்கள் சூழ்ந்த தோட்டத்தில்
வானவில்லின் துணையோடு
பட்டாம்பூச்சியின் வழிகாட்டுதலோடு
இனிதாய் தொடங்கிற்று பயணமென்றான்.

போகும் பாதையெங்கும்
புன்னகை பரிசளிக்கும் குழந்தைகள்
இதமாய் தாலாட்டும் தென்றல்
இதயம் வரை நனைக்கும் மழை

விருப்பமின்றி கேட்க தொடங்கியவன்...
பாதையின் அற்புதத்தில் மூழ்கி போனேன்.
கனவுகளில் மூழ்கிய என்னை..
நினைவுக்கு இழுத்தான் சின்ன விசும்பலில்.

காரணம் புரியாமல் குழம்பி நின்றேன்...
தயங்கியபடியே சொல்ல தொடங்கினான்.

நீடிக்காத மகிழ்ச்சியானது...
சூழ்ந்திருந்த பூக்கள் சருகாகி உதிர்ந்தன.
துணை வந்த வானவில்...
துண்டு துண்டாய் உடைந்து விழுந்தது.
வழிகாட்டிய பட்டாம்பூச்சிகள்..
சிறகு பிய்த்து இறந்து கிடந்தன.

புன்னகை பரிசளித்த குழந்தைகளை...
கண்முன் பலி கொடுத்து ஓர் கூட்டம்.
தாலாட்டிய இளம் தென்றல்..
புயலென புழுதி கிளப்பியது.
இதயம் நனைத்த மழை ஏனோ...
அமிலமாய் கொட்டி தீர்த்தது.

நடுக்கம் குறையாமல் அவன் சொல்ல...
பேச வார்த்தைகளற்று கேட்டு கொண்டிருந்தேன்.
மெல்ல மெல்ல என் பயணம் பற்றி...
என்னவாகும் என் பாதை என்பதாய் யோசித்திருந்தேன்.

பயணம் முடிக்காமல் பாதியில் திரும்பியவன்..
விடை சொல்லி புறப்பட்டான்...
என் பயணத்திற்கு வாழ்த்து சொல்லியபடி.
இனி அது என்னுடைய பயணமாய் இருக்காது...

சிவா.ஜி
26-02-2009, 10:20 AM
வரிகளின் வசீகரம் வியக்கவைக்கிறது.
கவிதை சொல்லும் உண்மையோ....வருந்த வைக்கிறது.
வாசித்து முடித்தபின் சிந்திக்க வைக்கிறது.

திட்டமிடாத தன் பயணத்தைப் பற்றின பயமுணர்ந்தவன்....இனி எந்த எதிர்பார்ப்புமில்லாமல் தன் பயணத்தை தொட்ர வேண்டும்.

வாழ்க்கை பயணம் எதிர்பாராத பல திருப்பங்களை தன்னகத்தே வைத்திருக்கிறது. தடுமாறாமல் சென்றால் இடர்களை இனிதாய் எதிர்கொள்ளலாம்.

வாழ்த்துகள் சசி.

ஷீ-நிசி
27-02-2009, 12:44 AM
என்ன சொல்ல வருகிறீர்கள் என்பது விளங்கவில்லை சசி!

பூமகள்
27-02-2009, 01:01 AM
பயணக் கதை
சொல்லிகள்..

பயணம் தொடங்கும்
முன் திடுக்கிடும்
புதுப் பயணி..

வாழ்க்கையின் வேர்கள்
தேடும் ஓட்டத்தில்..

அனுபவப் பாடங்களாக
திணிக்கப்படும்
அறிவுரைகள்..

சென்ற ஓர் பாதை
கதை பேசி..
ஆயிரமாயிரம் பாதைகளின்
மர்மம் அறியாத
கதைசொல்லிகள்..

வசந்த வாசம்..
பாலையான கதை..

சிரிப்பளித்த குழந்தைகள்..
பரவசப்படுத்திய பட்டாம்பூச்சிகள்..

யாவும்
வாழ்க்கையின் அடுக்குகளில்
இடுக்கியிருக்கும் சில
நிகழ்வுகளாக மனக்கண்ணில்..

எதிர்பார்ப்பற்ற
பயணத் தேடலில்..
எதிர்பாராமல்
சிக்கியது..
அடுத்தவருக்கான பயணம்..

உண்மை தான்..

என் பயணத்தில்
இனி அவன் பயணச் சாயலும்
வந்து சேரலாம்...

____________________________________________

அழகான கவிதை... ஏனோ பல பரிமாணங்களில் யோசிக்க வைத்தது.. மனம் நிறைந்த பாராட்டுகள் சசி.

கவிதையில் பெரும் எதிர்காலம் உங்களுக்கு காத்திருக்கிறது..

வாழ்த்துகள் சசி. தொடர்ந்து எழுதுங்கள்.

சசிதரன்
27-02-2009, 02:47 PM
வரிகளின் வசீகரம் வியக்கவைக்கிறது.
கவிதை சொல்லும் உண்மையோ....வருந்த வைக்கிறது.
வாசித்து முடித்தபின் சிந்திக்க வைக்கிறது.

திட்டமிடாத தன் பயணத்தைப் பற்றின பயமுணர்ந்தவன்....இனி எந்த எதிர்பார்ப்புமில்லாமல் தன் பயணத்தை தொட்ர வேண்டும்.

வாழ்க்கை பயணம் எதிர்பாராத பல திருப்பங்களை தன்னகத்தே வைத்திருக்கிறது. தடுமாறாமல் சென்றால் இடர்களை இனிதாய் எதிர்கொள்ளலாம்.

வாழ்த்துகள் சசி.
உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு மிக்க நன்றி சிவா அண்ணா...:)

சசிதரன்
27-02-2009, 02:51 PM
என்ன சொல்ல வருகிறீர்கள் என்பது விளங்கவில்லை சசி!

நான் சொல்ல வந்ததை... மிக எளிமையான பூமகளின் தெளிவான பின்னூட்டம் விளக்கி இருக்கும் என்று நம்புகிறேன் ஷீ-நிசி... :)

சசிதரன்
27-02-2009, 02:53 PM
பயணக் கதை
சொல்லிகள்..

பயணம் தொடங்கும்
முன் திடுக்கிடும்
புதுப் பயணி..

வாழ்க்கையின் வேர்கள்
தேடும் ஓட்டத்தில்..

அனுபவப் பாடங்களாக
திணிக்கப்படும்
அறிவுரைகள்..

சென்ற ஓர் பாதை
கதை பேசி..
ஆயிரமாயிரம் பாதைகளின்
மர்மம் அறியாத
கதைசொல்லிகள்..

வசந்த வாசம்..
பாலையான கதை..

சிரிப்பளித்த குழந்தைகள்..
பரவசப்படுத்திய பட்டாம்பூச்சிகள்..

யாவும்
வாழ்க்கையின் அடுக்குகளில்
இடுக்கியிருக்கும் சில
நிகழ்வுகளாக மனக்கண்ணில்..

எதிர்பார்ப்பற்ற
பயணத் தேடலில்..
எதிர்பாராமல்
சிக்கியது..
அடுத்தவருக்கான பயணம்..

உண்மை தான்..

என் பயணத்தில்
இனி அவன் பயணச் சாயலும்
வந்து சேரலாம்...

____________________________________________

அழகான கவிதை... ஏனோ பல பரிமாணங்களில் யோசிக்க வைத்தது.. மனம் நிறைந்த பாராட்டுகள் சசி.

கவிதையில் பெரும் எதிர்காலம் உங்களுக்கு காத்திருக்கிறது..

வாழ்த்துகள் சசி. தொடர்ந்து எழுதுங்கள்.

மிக தெளிவாக பின்னூட்டமிட்டு சிறப்பித்தமைக்கு நன்றி பூமகள்...:)

இளசு
27-02-2009, 06:40 PM
வாழ்த்துகள் சசி.. வசீகர வரிகள் அருமை..
பாமகளின் புரிந்துணர்வுக் கவிதை தேனோடு பால்!

--------------------------------

நான் .....
நான் மட்டுமா?
பெற்றவர் உற்றவர் -அனுபவங்கள்..அறிவுரைகள்
ஆசான்கள்.. குருக்கள்- உபதேசங்கள்.. போதனைகள்..
நூல்கள், ஏடுகள் -கட்டுரைகள் கவியாக்கங்கள்..
நட்புகள், வட்டங்கள் - பாடங்கள் , பிம்பங்கள்...

இத்தனை நூல்கண்டுகள் சுற்றப்பட்ட மரப்பாச்சி மனமுள்ள
நான் -
நான் மட்டுமா?

அறுக்கலாம்தான் அத்தனை நூல்களையும்..
தற்காலிகமாகவேனும்..

ஆனாலும் நூல் சுற்றா வெறும் பொம்மை
பிறந்த போதிருந்த அந்தக் கணம் மட்டுமே..

வசீகரன்
28-02-2009, 04:11 AM
கதை சொல்லிகள் ஜாக்கிரதை......!
உண்மையிலேயே இந்த கவிதையும் அற்புதமாக கதை படிப்பதுபோல் இருந்தது...
பயணத்தில் எதிர்ப்பார்ப்புகளை விட அனுபவங்கள்தான் பயணத்தை
உண்மையாக தீர்மானிக்கின்றன....
வர்ணனை சொல்லிய கவிதை விதம் மிக அருமை சசி...
தேர்ந்த கவிதை லாவகம்.... தொடர்ந்த இன்னுமொரு அற்புத கவிதை
சசியிடமிருந்து......................
வாழ்த்துக்கள்... பாராட்டுக்கள்..!!!

samuthraselvam
28-02-2009, 05:38 AM
அருமையான கவிதை நடையில் உண்மையை அழகாக சொல்லியிருக்கிறீர்கள்.

மற்றவரின் அனுபவத்தில் உள்ள துன்பங்கள் நம் இலக்கு நோக்கி போகும்போது நமக்கு இன்பங்களாக மாற்றிக்கொள்ள உதவும். அதுபோலவே இன்பங்களின் அனுபவம் நமக்கு புத்துணர்வோடு பயணத்தை துவக்க உதவும். இத்தனை சரியாக புரிந்து கொண்டு சரியான வழியில் சென்று சாதனை புரிவதில் சாதித்தவர்களின் சாயல் இருந்தாலும் அதில் தவறில்லை.

வாழ்த்துக்கள் சசி..