PDA

View Full Version : டிவிடியில் திரைப்படம் பதிவது எப்படி?

நிரன்
25-02-2009, 01:27 PM
வணக்கம் நண்பர்களே!

முன்பும் இங்கே ஒரு திரியைக் கண்டேன். டிவிடியை மிகக் குறைந்த MB கோப்பாக சுருக்குவது பற்றி ஆனால் எனக்கு அது கைகொடுக்கவில்லை:confused:

பல டிவிடிகளைப் பார்த்துள்ளேன் 4.7GB அளவுடைய டிவிடியில் 4படங்கள் பதி்ந்திருப்பார்கள். நான் கூகிள் ஆண்டவனிடம் முறையிட்டும் இன்றுவரை கிடைக்கவில்லை கிடைத்தாலும் திரைப்படத்தின் resolution குறைந்து விடுகிறது. தற்பொழுதும் தேடிக் கொண்டிருக்கிறேன் நண்பர்கள் யாராவது இதைப்பற்றித் தெரிந்திருந்தால் கூறுங்கள்.. விலை கொடுத்து வாங்கும் மென்பொருள் என்றாலும் பரவாயில்லை பெயரைக் குறிப்பிடுங்கள்.

அன்புடன்
°° நிரன்

praveen
25-02-2009, 01:58 PM
ரெசல்யூசன் குறையாமல் என்றால் அதனை DIVX ஆக மாற்றுவதன் மூலமே அளவில் சிறிதாகவும், தரத்தில் அதே படத்தையும் பெற முடியும்.

எப்படி நீங்கள் எந்த மென்பொருள் வைத்து ஒரே டிவிடியில் 4 படம் (இந்த மாதிரி DIVX அல்லாது, DVD Shrink என்பது மாதிரி மென்பொருள் உதவியுடம் பதிந்தாலும், (ஏறத்தாழ 8 மனிநேரம் ஓடக்கூடிய வீடியோ) அதன் தரம் மிக குறைந்தே தெரியவரும்.

DIVX மாற்றத்திற்கு நிறைய மென்பொருள் உள்ளது, நம் தளத்திலே நான் 3GP பைல் சம்பந்தமாக பதிந்த ஒரு பதிப்பை கானுங்கள்.

நிரன்
25-02-2009, 02:37 PM
ஆம் DIVX மூலம் அளவைக் குறைத்து தரத்தையும் பேணலாம் ஆனால் டிவிடி பிளேயர் சிலவற்றிற்கு DIVX ஒத்துளைக்காதே!!

மற்றும் Neroவில் எரிக்கும் பொழுது Make DVD- Video என்று கொடுக்கும் பொழுது *.bup , *.vob , *.ifo என்று format மட்டுமே ஏற்றுக் கெள்கிறது இந்த format வீடியோக்கள் சாதரண டிவிடி பிளேயரில் இயங்கும் 3ல் ஏதாவது format ற்கு மாற்றுவதன் மூலம் அளவைக் குறைக்கலாம் என்றாலும் பிரச்சினையில்லை.

நானும் முயற்சி செய்கிறேன். உங்களுக்குத் தெரிந்தாலும் தாருங்கள்.

நன்றி

poornima
02-03-2009, 05:45 AM
உங்களுக்கு என்ன தேவை.. கொஞ்சம் சற்று விவரமாக கேளுங்கள்..

நான்கு படங்களை ஒரே டிவிடியில் பதிய வேண்டுமா (4.7 GB) யில்..

Ulead studio பதிப்பு 3.0 ஐ பயன்படுத்துங்கள்.இதை டோரண்ட்ஸ் போன்ற இடங்களில் இருந்து தரவிறக்கி கொள்ளலாம். நன்றாக இருக்கும்.எளிய மெனு மற்றும் அருமையான வசதிகள்

praveen
02-03-2009, 06:24 AM

4 படம் ஒரு டீவிடியில் என்னும் போதே, அது ஒரு படத்தின் அளவு 1 ஜிபி என மாறி விடும். எனவே தரம் நன்றாக இருக்காது, வேண்டுமானால் DVD 9 எனப்படும் 8 GB கொள்ளளவு உள்ளதில் 4 படம் பதிந்தால் ஒரளவு நீங்கள் நினைப்பது நிறைவேறும்.

மிக சிம்பிளான ஒரு வழி உள்ளது, உங்கள் டீவிடி பிளேயர் MPEG சப்போர்ட் (அப்படியே போல்டராக இட்டால்) செய்யுமா என்று பாருங்கள். அப்படி செய்கிறது என்றால் நீங்கள் KVCD என்ற வடிவில் உள்ள வீடியோ சிடிக்களில் உள்ள MPG யை எக்ஸ்ட்ராக்ட் செய்து ஒரு டீவிடியில் இட்டு வந்தால், 7 படம் ஒரு டீவிடியில் பதிக்கலாம் படமும் ஒரளவு தரமாக இருக்கும்.

KVCD என்றால் அறிந்து கொள்ள வீடியோஹெல்ப் என்ற தளம் அனுகி பாருங்கள்.

அன்புரசிகன்
02-03-2009, 06:28 AM
WIN AVI சிறந்தது. எல்லா படத்தினையும் ஒவ்வொரு avi கோப்பாக மாற்றிவிட்டு பின்னர் அவற்றினை DVD கோப்பாக மாற்றி பின் எரிக்கலாம்... சிறந்த மென்பொருள். ஆனால் இலவசமல்ல...

இதனை எவ்வாறு இலவசமாக பெறுவதென்று சொல்லவேண்டுமா என்ன???

praveen
02-03-2009, 06:46 AM
திரி ஆரம்பித்த நிரன் உங்களுக்கு சரியான தீர்வை கண்டுபிடித்து விட்டேன். KVCD என்று பதிந்த நான் KDVD என்பதை தேடினேன் கிடைத்து விட்டது.

http://forum.videohelp.com/topic263309.html

மேலே கண்ட சுட்டி கண்டு செய்து பார்த்து பதில் போடுங்கள். அந்த சுட்டி காட்டும் இடம் முழுதும் ஆங்கிலத்தில் இருப்பதால் இங்கே பதிக்கவில்லை, மேலும் அதை தமிழ்படுத்தவும் எனக்கு நேரமில்லை.

நிரன்
02-03-2009, 02:08 PM
மிக்க நன்றி பிரவீன் மற்றும் அன்பு அண்ணா!

எல்லாவற்றையும் முயற்சித்துப் பார்க்கிறேன் :)

நிரன்
02-03-2009, 02:13 PM
உங்களுக்கு என்ன தேவை.. கொஞ்சம் சற்று விவரமாக கேளுங்கள்..

நான்கு படங்களை ஒரே டிவிடியில் பதிய வேண்டுமா (4.7 GB) யில்..

Ulead studio பதிப்பு 3.0 ஐ பயன்படுத்துங்கள்.இதை டோரண்ட்ஸ் போன்ற இடங்களில் இருந்து தரவிறக்கி கொள்ளலாம். நன்றாக இருக்கும்.எளிய மெனு மற்றும் அருமையான வசதிகள்

ஒரே டிவிடியில் 4படமென்பது அதிகந்தான் ஆனால் 8GB டிவிடியில் இது சாத்தியமே.

என்னால் 2gb அளவிற்கு நன்றாக தெளிவாக தெரியக்கூடியளவு சுருக்க முடிகிறது பின்பு நீரோவில் சுருக்கிய 2ஃபைல் களை போட்டு எரிக்கையில் please insert correct disc என்று கூறுகிறது(எல்லாம் சரியாகத்தான் போட்டேன் இருந்தும் இப்படிச் சொல்லிப்புட்டுது.) முன்பு ulead movie factory உபயோகித்தேன் ulead studio 3.0 விஸ்டா எடுக்கமாட்டான். அதற்கு மேல் உள்ள பதிப்பை உபயோகித்துப் பார்க்கிறேன்:)

ராசராசன்
12-03-2009, 04:23 PM
"NTI DVD Maker" என்ற மின்பொருள் மிகச்சுலபமாக இவ்வேலையை செய்கிறது. இதில் சாதரணமாக வீடியோ வாடகைக் கடைகளில் கிடைக்கும் டிவிடிகள் ஒரு படத்தை மட்டுமே கொண்டிருந்தால் (8GB) துல்லியமான படத்துடனும் 5.1 டிஜிடல் சேனல்களில் இசையொலியும் வெளித்தோன்றும். ஆனால் இவற்றை அப்படியே மிகச்சிறிய தெளிவு இழப்புடன் 4.7 GB குறுவட்டில் பதிய "4.7 GB DVD fit" என்ற வசதி இம்மென்பொருளில் இருப்பதால் மிகச்சுலபமாக நாம் பதிய முடியும்.

இதில் மிக முக்கியமாக கவனிக்க வேண்டியது யாதெனில், DVDயின் கண்டக் குறியீட்டு பாதுகாப்பு முறையாகும் (Region Code). இவற்றை மிக எளிதாக முறியடிக்க "AnyDVD" என்ற மென்பொருளை உங்கள் கணினியின் மெமரியில் நிறுவினால் போதும். தடைகளின்றி 'டிவிடி'களை (நம் சொந்த உபயோகத்திற்காக மட்டுமே) காப்பியடித்து பயன்பெறலாம்.

பின் குறிப்பு: காப்பியடித்தல் சட்டவிரோதமானது.

நிரன்
12-03-2009, 04:47 PM

நன்றி தேனிசை.

ஒறியினல் CD காப்பி செய்தால் இங்கு பெரும் பிரச்சினைகள் எதிர்நோக்க வேண்டிவரும். எனது நண்பர் ஒருவர் நுாலகத்திலிருந்து கொண்டு வந்த சிடியைக் காப்பி செய்து அதனால் காவல்துறை வரை சென்றிருக்கிறார்:D அவரின் அனுபவம் எனக்கு கை கொடுக்கிறது :D