PDA

View Full Version : காதல்னா சும்மாவா? - இறுதி பாகம்மதி
24-02-2009, 04:04 PM
(முன்குறிப்பு: நீண்ட நாட்கள் கழித்து எழுதப்பழகுகிறேன். வழக்கமான பாணியில் மொக்கையாக இருக்கும் என நம்புகிறேன். ஆயினும் இந்தக் கதைத் தொடரை முடிப்பேன் என்று நம்பிக்கை இல்லை.:D:D)


பரபரப்பான பெங்களூர் நகரம். வாரநாட்களில் ஒரு நாள். காலையில் வழக்கம் போல் ஏகத்துக்கும் போக்குவரத்து நெரிசல். எரிச்சலுடன் ஊரிலுள்ள கெட்டவார்த்தையை எல்லாம் ஞாபகப்படுத்தி போற வழிக்கு இடைஞ்சலா இருக்கறவனைத் திட்டுகிற லாரி, ஆட்டோ ஓட்டுநர்கள். பெட்ரோலியப் புகையை மட்டுமே பிராணவாயுவாய் சுவாசிக்கும் மக்கள், வீட்டிலிருந்து குளித்து புத்துணர்ச்சியோடு கிளம்பினால் அலுவலகம் செல்வதற்குள் மூன்று அல்லது நான்கு முறை முகத்திற்கு மேக்கப் போட்டுவிடும் புழுதியை கிளப்பிவிடும் சாலைகள். இப்படி எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டு மாதந்தோறும் பேங்க் அக்கவுண்டில் போடப்படும் பணத்திற்காக காலை முதல் மாலை வரை பலியாடு மாதிரி வேலைப்பார்க்கும் ஐ.டி கம்பெனியினர்.


அந்தச் சாலை முழுதும் ஏகப்பட்ட ஐ.டி. கம்பெனிகளை பதுக்கியபடி விண்ணுயர்ந்து நிற்கும் கட்டிடங்கள். கண்ணாடிகள் பதிக்கப்பட்ட சுவர்கள் உஷ்ணத்தை வெளியே பரப்பிக்கொண்டிருந்தது. அதில் மூன்றாவது கட்டிடத்துள் நுழைகையில் வரவேற்பறையில் ஒட்ட வைத்த சிரிப்போடு பெண். பக்கத்தில் செக்யூரிட்ட்ய் ஆபிஸர். சம்பிரதாய சடங்குகள் முடிந்து இதோ நம்மை உள்ளே விட்டுவிட்டனர். வளைந்து சென்ற பாதை முடிவில் இதோ லிப்ட். நிறைய மக்கள் காத்திருப்பதனால் நாமும் கொஞ்சம் பொறுப்போம்.
ஒருவழியா லிப்டுள் நுழைந்தாகிவிட்டது. என்ன இது? டைட்டானிக் பாட்டு மெல்லிய இசையாய் வழிந்தது. மூச்சு திணறுவதற்குள் சேர வேண்டிய ஆறாம் மாடி வந்துவிட்டது. இங்கு நமக்கு வேலையில்லை. நாம் போக வேண்டியது ஏழாம் மாடி. ஏழாம் மாடிக்கு லிஃப்ட் இல்லை. படியில் ஏறி தான் செல்ல வேண்டும். ஏறியாகிவிட்டது. இடப்புறமா வலப்புறமா. அதையும் நான் தான் சொல்லியாக வேண்டுமோ? இடப்பக்கம் விஸ்தாரணமான உணவகம். சாப்பிடலாம். சாட்டலாம். வலப்புறம் சென்றால் ஆங்காங்கே தடுக்கப்பட்டு பொறியாளர்கள் உட்கார க்யூபிக்கல். அதில் மூன்றாவது ஆளாய் உட்கார்ந்திருக்கிறானே அவனைப் பார்க்கத் தான் வந்தோம். அவன் தான் அருண். (அடடா.. எம்மாம் பெரிய பில்டப்பு)….“ஆண்பிள்ளைகள் எல்லாம் மரத்தின் மேலிருக்கும் ஆப்பிள் பழம் மாதிரி. சிறந்த பழங்கள் எல்லாம் மரத்தின் உச்சியில் இருக்கும். பெண்கள் அதிக உயரத்திற்கு ஏற மாட்டார்கள். ஏனென்றால் விழுந்தால் அடி பலமாக இருக்கும் என்ற பயம். அதனால் வீணாய் போன தரையில் கிடக்கும் அழுகியஆப்பிள் பழங்களை எடுத்துக் கொள்வார்கள். இதைப் பார்த்து மர உச்சியில் இருக்கும் ஆப்பிள்கள் தன்மேல் தான் ஏதோ தவறிருப்பதாய் எண்ணிக் கொள்ளும். ஆனால் உண்மையில் அவர்கள் சிறந்தவர்கள். சிறந்த ஆண்களைத் தேடும் பெண் மரத்தில் ஏறி உச்சிக்குச் சென்று நல்ல ஆப்பிளை பறிப்பாள். அதற்கான நேரம் வரும். வெகு சீக்கிரத்திலேயே…”கம்ப்யூட்டர் திரையில் தனக்கு வந்த ஒரு ஃபார்வேர்ட் மெயிலை படித்து பெருமிதம் கொண்டது அவன் முகத்தில் அப்பட்டமாய் தெரிந்தது. முகத்தில் சின்ன புன்முறுவல். இந்நேரம் தெரிந்திருக்குமே அவனும் மர உச்சியில் உள்ள ஆப்பிள் தான் என்று. அநேகமாய் அவன் தான் அதிக உயரத்தில் இருக்கிறான் போலும். எந்தப் பெண்ணும் அவ்வளவு தூரம் ஏறுவேனா என்கிறாள். இதோ பாருங்க, இதை இன்னும் நாலு பேருக்கு ஃபார்வேர்ட் செய்யப்போகிறான். கேர்ள் ப்ரண்ட் இல்லாத நண்பர்கள் எல்லோருக்கும் அனுப்பப்போகிறான். அதற்குள் அவனைப்பற்றி பார்த்திடுவோமா?


அருண். நல்ல பெயர். அதிகம் வைக்கப்படும் பெயர். அதனாலேயே அவன் தனித்துத் தெரியவில்லையோ என்னவோ. அடச்சே. எப்ப பார்த்தாலும் அவன் மேல் பாவப்படுவதும் பச்சாதாபப்படுவதும். கிட்டத்தட்ட ஆறடி உயரம். உயரத்திற்கேற்ற உடம்பு. அழகாக நறுக்கப்பட்ட மீசை. கன்னத்தில் சின்னதாய் பரவியிருக்கும் கிருதா. படியவாரிய தலை. லேசாய் சதைப் போட்ட கன்னங்கள். இதே கம்பெனியில் நீண்ட நாளாய் தூர் வாரிக்கொண்டிருக்கிறான். இன்னும் புதையலை எடுத்த பாடில்லை. சாஃப்ட்வேருமில்லாமல் ஹார்ட்வேருமில்லாமல் யாருக்குமே புரியாத மாதிரி வேலை பார்க்கிறான். அதனால் அவனுக்கு உண்மையிலேயே வேலை இருக்கா இல்லையா என்று நிறைய பேருக்கு நீண்ட நாட்களாய் சந்தேகம்.
வயசாயிட்டே போகுதுன்னு வீட்டில் பெண் பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். ஆனாலும் காதல் பண்ணியே தீரணும்னு ஏனோ ஒரு வைராக்கியம்.


நேரம் காலை ஒன்பது மணியாகப் போகிறது. மனசுக்குள் சின்ன குதூகலம். இனம் புரியாத ஒரு சந்தோஷம்.இதுவரை இப்படி ஆனதில்லை. இன்று மட்டும் இப்படி. இருக்கு காரணம் இருக்கு. இத்தனை வருஷங்களுக்கு அப்புறம் ஒரு பெண்ணைப் பார்த்ததும் மனதை தொலைத்து விட்டான். அவளைப் பார்க்கப் போகிறான். அதான் இப்படி.


‘இந்த கணேஷும் ஹரீஷும் வந்து சேரமாட்டாங்களா? வெட்டிப்பயலுக. காலாகாலத்துக்கு கம்பெனிக்கு வர வேண்டியது தானே. தூங்குமூஞ்சிப் பயலுவ.’ இப்படி திட்டிக் கொண்டே இந்தக் கதைக்கு முக்கியமான அந்த இரு நபர்களை எதிர்நோக்கியிருந்தான். நேரம் ஆக ஆக அவன் படபடப்பு கூடிக்கொண்டே போனது.


கணேஷும் ஹரீஷூம் அந்த நேரத்தில்….

ரங்கராஜன்
24-02-2009, 04:14 PM
மதி உண்மையில் சொன்னா உன்னுடைய நடை சூப்பர், இத்தனை நாள் எங்கு ஒளித்து வைத்திருந்தாய் இந்த நடையை, கூடவே வாசகனும் பயணிப்பது போல இருக்கிறது மதி, இந்த கதையில் நானும் சாலையில் நடந்து வந்து, லிஃப்டு ஏறி, மெயிலை பார்த்து சிரித்து அருமை அருமை என்ன சொல்ல, கதையை சீக்கிரம் தொடர், எனக்கு தொடர் கதைகளில் பொறுமை இல்லை, ஏனென்றால் முடிவை தெரிந்து கொள்ள பயங்கரமா யோசிப்பேன் மண்டை வெடித்து விடும், அதனாலே தொடர் கதை பக்கம் போவது இல்லை, எழுதுவதும் இல்லை. பாதியில் விட்டு விடாதே சூப்பரா இருக்கு, இந்த டெம்போவிலே கொண்டு செல், மதி ஆச்சர்யமான வாழ்த்துக்கள்

செல்வா
24-02-2009, 04:25 PM
ஆயினும் இந்தக் கதைத் தொடரை முடிப்பேன் என்று நம்பிக்கை இல்லை
எனக்கு புரிஞ்சுப் போச்சு ... அது தானே..... :D :D :D
எப்பவும்போல கலக்கலா... ஆரம்பிச்சிருக்கீங்க......
ஆருணுக்கு குடுக்கிற வர்ணனை எல்லாம் பார்த்தா நான் சமீபத்தில சந்திச்ச ஒருத்தருக்கு மிகச்சரியாப் பொருந்துது.....
தொடருங்க...

arun
24-02-2009, 04:30 PM
ஆகா அருமையாக ஒரு கதையை கொடுக்க தொடங்கி உள்ளீர்கள் எதார்த்தமான அதே நேரம் தங்களுக்கே உரித்தான மொக்கையுடம் படைத்து உள்ளீர்கள்

எங்களது நம்பிக்கையை குலைக்காமல் முழு கதையை படைக்க எனது வாழ்த்துக்கள்

மதி
24-02-2009, 04:36 PM
அடடா அதுக்குள்ள இவ்வளவு நல்ல உள்ளங்கள் இதைப் படிச்சாச்சா..? நன்றி.. நன்றி...

அறிஞர்
24-02-2009, 05:02 PM
ஆஹா மதி காதல் கதையெழுத ஆரம்பித்து கலக்குகிறார்..
ஹீரோ பற்றி பில்டப் சூப்பர்.
ஹீரோ.. நீங்க தானா...

செல்வா
24-02-2009, 07:35 PM
ஹீரோ.. நீங்க தானா...
அப்போ மதியப் பாத்தா ஹீரோ மாதிரி தெரியலியா உங்களுக்கு?

மதி
25-02-2009, 12:13 AM
ஆஹா மதி காதல் கதையெழுத ஆரம்பித்து கலக்குகிறார்..
ஹீரோ பற்றி பில்டப் சூப்பர்.
ஹீரோ.. நீங்க தானா...
டைட்டில்ல மட்டும் தான் காதல் இருக்கு.. ஆனா இது காதல் கதையான்னே தெரியல.. :D:D.


அப்போ மதியப் பாத்தா ஹீரோ மாதிரி தெரியலியா உங்களுக்கு?
கிளம்பிட்டாங்கைய்யா.. கிளம்பிட்டாங்க....
அண்ணே... எழுதறது ஒரு தப்பா...பீதிய கிளப்பறதுக்குன்னே அலையறாங்கப்பா...
அவ்ங்க்க்க்க்க்க்க்க்க்க்க்:traurig001::traurig001::traurig001:

samuthraselvam
25-02-2009, 03:03 AM
கதையை அருமையா ஆரபிச்சு அழகா கொண்டு போறீங்க ... இடையிடையே கதாப்பாத்திரத்தை பற்றிய அறிமுகம் நல்ல இருக்கு. பாதியிலே நிறுத்தாம "கணேஷும் ஹரீஷூம் அந்த நேரத்தில் என்ன செய்தார்கள்? அருண் எப்போ அவரின் தேவதையை சந்திசார்? " சீக்கரமா சொல்லுங்க.

மதி
25-02-2009, 03:29 AM
நன்றி லீலுமா....
அடுத்த பாகம் இனிமே தான் எழுதணும்.. கணேஷும் ஹரீஷும் என்ன செய்தாங்கன்னு அவங்ககிட்ட தான் கேட்கணும்.. :)

சிவா.ஜி
25-02-2009, 05:48 AM
மதி...............சூ..................ப்பர். அசத்திட்டீங்க. அருமையான நடை. கலக்கலான விவரணங்கள்.

அந்த உச்சி ஆப்பிளில் உங்களைத்தான் பார்க்கிறேன்...ஹி..ஹி...

”சப் குச் டீக் சல்த்தாய்க்கா?”

புரிந்திருக்குமென்று நினைக்கிறேன்.

வாழ்த்துகள்.

எதிர்பார்ப்புக்களோடு............

மதி
25-02-2009, 06:49 AM
சிவாண்ணா... நீங்க என்ன சொல்றீங்கன்னே புரியல..:)

சிவா.ஜி
25-02-2009, 09:02 AM
சிவாண்ணா... நீங்க என்ன சொல்றீங்கன்னே புரியல..:)

என்ன மதி இது...? இதுக்குள்ள ஹிந்தி கத்துக்கிட்டிருப்பீங்கன்னு நெனைச்சேன்....கத்துக்கலையா?

எல்லாம் நல்லா போயிக்கிட்டிருக்கில்ல....
இதைத்தான் ஹிந்தியிலக் கேட்டேன்.

சுகந்தப்ரீதன்
25-02-2009, 09:28 AM
மதி நான் உன்னை பாராட்ட வரலை.. அந்த பார்வேட் மெயிலை பார்மேட் பண்ணுனவனைத்தான் பாராட்ட வந்தேன்...!! ஆனா அவன் உச்சியில உட்காந்துக்கிட்டு "இத்தனைநாளா என் பக்கத்துல உட்காந்துருந்த மதியை யாரோ தட்டிப் பறிச்சிட்டாங்கன்னு" சொல்லி ஒப்பாரி வக்கிறாம்ப்பா..!!

என்ன இருந்தாலும் அவனை நீ அம்போன்னு விட்டுட்டு போனது எனக்கு நியாயமபடலீங்கோ..!! சரி.. சரி... பார்ப்போம் கணேஷூம் ஹரீஸூமாவது அவனுக்கு துணைக்கு இருக்காங்களான்னு...?!

மதி
27-02-2009, 05:54 AM
ஜெயநகர். பெங்களூர் நகரின் மையப்பகுதி. முக்கியப் பிரமுகர்கள் நிறைய பேர் வசிக்கும் இடம். அங்கே அமைதியான ஒரு தெருவின் நான்காவது வீடு. பழங்காலத்து வீடு. வெளியே தோட்டத்தில் வரிசையாக வைக்கப்பட்ட பூச்செடிகள். நீண்டுயர்ந்த தென்னை மரங்கள். மட்டைகள் கீழே விழுந்து விடாமல் இருக்க ஒன்றோடு ஒன்று கயிறால் கட்டப்பட்டிருந்தன. வீட்டுக்குள் நுழைந்தால் தென்படும் வரவேற்பறையில் இருந்த டீபாயில் வீட்டுத் தலைவர் விசிறிவிட்டுச் சென்றிருந்த செய்தித் தாள்கள். உள்நுழைந்து இடப்பக்கம் சென்றால் பூஜையை முடித்துவிட்டு பரபரப்பாய் இயங்குகிற பாட்டி. எண்பது வயதிலேயும் அயராது உழைப்பவர். அப்படியே இன்னும் சற்று உள்ளே போனால் தெரிவது கணேஷின் அறை. அங்கே குளித்து முடித்து ஆபிஸுக்கு அவசர அவசரமாய் கிளம்பும் நிலையில் கணேஷின் தாயார் அவனுடன் போராடிக் கொண்டிருந்தார்.

“டேய் கணேஷா.. எந்திரிடா.. மணி எட்டாகுது. ஆபிஸுக்கு கிளம்ப வேண்டாம். இந்த பாழா போன லேப்டாப்ப எப்ப பாத்தாலும் வச்சுக்கிட்டு ராத்திரி ரெண்டு மணி வரைக்கும் விளையாட வேண்டியது. உன்னல்லாம் ஆபிஸ்ல என்ன ஏதுன்னு கேக்க மாட்டாங்களா..? உன்னைய சொல்லி குத்தமில்லை. உன் கூட்டாளிங்கள சொல்லணும்…”

எதற்கும் அசையாமல் கணேஷ் புரண்டு படுக்க…

“டேய்.. இதோ பாருடா.. உன் கேர்ள் பிரண்ட் போட்டோ பேப்பர்ல வந்துருக்கு. அவ மொகத்துலாவது சீக்கிரம் முழிடா…”

அதுவரை அசையாமல் இருந்த கணேஷ் சட்டென எழுந்தான். அம்மா சொன்னது சரி தான். டைம்ஸ் ஆஃப் இண்டியாவின் கடைசிப் பக்கத்தில் அவன் கேர்ள் ப்ரண்ட் போட்டோ தான். அதாங்க ஜெனிஃபர் அனிஸ்டன். ஃப்ரண்ட்ஸ் சீரியல் பார்த்ததிலிருந்து அதில் அனிஸ்டன் நடித்த பாத்திரமான ரேச்சல் ரேச்சல்னு அலைபவன். அந்த நடிகைக்கு நாப்பது வயசாயிடுச்சுன்னா ஸோ வாட்னு கேட்கும் தீவிர ரசிகன். இவன் இம்சை தாங்காமல் இவன் அம்மா கூட அவன் கேர்ள் ப்ரண்ட் என்றே கூப்பிட ஆரம்பித்துவிட்டார்.

பல்லே விளக்காமல் பெட் காஃபி குடித்துக் கொண்டே பேப்பரில் ஜெனிஃபரின் தரிசனம் முடித்து ஆபிஸுக்கு கிளம்பத் தாயாராகி கொண்டிருக்கிறான். அதற்கு முன் அவனைப் பற்றி.

கணேஷ் பேருக்கேற்ற மாதிரியே விநாயகரைப் போலிருப்பான். ஐந்தேமுக்கால் அடி உயரம். இந்தக் கதையின் நாயகன் அருண் வேலை பார்க்கும் அதே கம்பெனியில் நான்கு வருடமாய் வேலை பார்க்கிறான். பூர்வீகம் தஞ்சை. ஆனா பிறந்து வளர்ந்ததெல்லாம் பெங்களூர். அதனால் தமிழ் பேச மட்டும் தான் தெரியும். எழுதப் படிக்கத் தெரியாத தமிழன். பெங்களூரிலேயே இருந்தாலும் இவனுக்கும் ஒரு கேர்ள் ப்ரண்ட் கூட இல்லை. இவனும் தூர்வாரும் முயற்சியில் இருக்கிறான். அநேகமாய் அப்துல் கலாம் சொன்ன மாதிரி 2020-ல் இந்தியா வல்லரசான பிறகு தான் வேறு வேலை தேடலாம் என்ற உத்தேசத்தில் இருக்கிறான். மெக்கானிக்கல் இஞ்சினீயர். அதற்கே உரிய குசும்புத்தனங்களும் வால் தனமும். அருணும் இவனும் மொக்கை நண்பர்கள். ஒரே வயதுக்காரர்கள். அவர்கள் சீட்டிலிருந்த நேரத்தை விட காஃபிடேரியாவில் இருந்த நேரமே அதிகம். இப்போ புரிந்திருக்குமே ஏன் இவன் எடை மட்டும் தொண்ணூற்றியைந்துக்கு மேல் போய் கொண்டிருக்கிறது என்று. இன்னும் இவனுக்கு பல சிறப்புகள் இருக்கு. ஒன்று மட்டும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள; இவனுக்கு இன்னொரு பேர் “இண்ட்யூஷன் கணேஷ்”. இதோ அவன் குளித்து முடித்து சாமி கும்பிடாமல் கிளம்பியதற்காக பாட்டியிடம் திட்டு வாங்கிக்கொண்டு கிளம்பிவிட்டான் தன் அரதபழசான கைனடிக் ஹோண்டாவில். எப்படியும் போய் சேர பதினைந்து நிமிஷத்துக்கு மேலாயிடும். அதற்குள் ஹரீஷ் என்ன பண்றான்னு பார்க்கலாம்.

பெங்களூரின் மறுகோடியில் இருக்கிறது ஹரீஷின் வீடு. அது வீடென்றாலும் ரூம் என்று சொல்லியே பழக்கப்பட்டுவிட்டனர். இவன் தான் மொக்கை கூட்டத்தின் மூன்றாவது ஆள். அருணையும் கனேஷையும் விட இரண்டு வயது சிறியவன். இரவெல்லாம் கேர்ள் ப்ரண்டோட கடலை போடுவது மாதிரி கனவு கண்டு அசந்து தூங்குகிறான். இவனுக்கு கேர்ள் ப்ரண்ட் சமாச்சாரம் கானல் நீர் மாதிரி. பார்க்கும் பொண்ணுங்களையெல்லாம் கேர்ள் ப்ரண்டாக்கிக்கத் தோன்றும். ஆனா என்ன செய்வது.. இந்தப் பாழாப் போன தயக்கம் தான் இடிக்குது. அலாரம் எட்டடிக்கத் தொடங்கியதும் பரபரவென்று எழுந்தான்.

ரூமில் எல்லோரும் கிளம்பிக்கொண்டிருந்தனர். அவன் அறைத் தோழர்கள் எல்லோரும் வெவ்வேறு கம்பெனியில் வேலை பார்ப்பவர்கள். கல்லூரித் தோழர்கள். அதனால் வீட்டில் இன்னமும் ‘மச்சான், மாப்ளே’..இத்யாதி, இத்யாதி.. ஆகிய சொற்கள் அதிகம் ஒலித்துக் கொண்டே இருக்கும்.

கம்பெனியில் லோன் போட்டு ஹீரோ ஹோண்டா பைக் வாங்கிவிட்டான். இப்போது அதில் தான் புறப்பட்டு கொண்டிருக்கிறான். காதில் இயர்போனை மாட்டிக் கொண்டு. அலைபாயுதே வந்ததற்குப் பிறகு இப்படி பாட்டுக் கேட்டுக் கொண்டே வண்டி ஓட்டுவது ஸ்டைலாகிவிட்டது. பாவம். இவ்வளவு ஸ்டண்ட் விட்டும் இன்னும் ஷாலினி தான் கிடைத்தப்பாடில்லை. இப்போ தெரிந்திருக்குமே அருணால் அந்த ஆப்பிள் ஃபார்வேர்ட் அனுப்பப்பட்ட நான்கு பேரில் இவர்கள் இரண்டு பேர் என்று.
ஒரு ஐந்து நிமிட இடைவெளியிலேயே ஹரீஷூம் கணேஷும் வந்து சேர்ந்துவிட்டனர். இவர்களை எதிர்நோக்கிக் காத்திருந்த அருண் சடாரென எழுந்தான்.

“வாங்கடா.. வாங்க. எவ்வளவு நேரமா காத்திருக்கறது.. பசிக்குதுடா..”

“டேய்.. கொஞ்ச நேரம். இந்த மெயிலை மட்டும் செக் பண்ணிட்டு வந்துடறேன். கஸ்டமர் கடங்காரன் என்ன எழவையாவது எழுதி தொலைச்சிருக்கப் போறான்…”

“சரி… சீக்கிரம் வா.. டேய்..ஹரீஷ். நீயாச்சும் வாடா…”

அவசர அவசரமாக பாத்ரூமுக்குள் சென்று மறக்காமல் தலை வாரிக் கொண்டான். கொஞ்ச நாட்களாகவே அலங்காரமெல்லாம் பலமாகத் தானிருக்கிறது. எல்லாம் காதல் படுத்தும் பாடு. இன்னும் மற்ற மொக்கையர்களுக்கு இந்த விஷயம் தெரியாது. இன்று தான் சொல்லப் போகிறான்.

இதோ அதே தளத்தில் இருக்கும் காஃபிடேரியாவிற்கு ஹரீஷுடன் செல்கிறான். ஒரு நிமிஷம். நிற்க. ஆங். இப்போ தான் கொஞ்சம் தெளிவா கேட்குது. பின்னணியில் ஆஸ்கார் புயல் ஏ.ஆர். ரஹ்மான் இன்னிசையில் பாபா ஸ்டைலில் ப்ளேஸ் பாடும் ராப் சாங்.‘V டு த E டு த T டு த I… VETI… இவன் தான் VETI….தேடறான் குட்டி…’


இந்த பின்னணியிலேயே காஃபிட்டேரியாவிற்குள் இருவரும் நுழைந்தனர். வரிசையில் நிற்கும் போது கண்களால் அலசினான். கண்கள் விரிந்தது. அதோ முதல் டேபிளில் அவன் தேவதை. அழகு தேவதை. வெள்ளைச் சுடிதாரில் பட்டாம் பூச்சியாய். அதுவரை அமைதியாய் இருந்த மனம் பட்பட்டென்று தெரிக்க ஆரம்பித்தது. இதைத் தான் மனதில் பட்டாம்பூச்சி பறந்ததென்று சொல்வார்களோ?
வழக்கமான இட்லி வடை வாங்கிக் கொண்டு அவள் உட்கார்ந்திருந்த டேபிளுக்கு முன் சென்று உட்கார்ந்து காத்திருக்கலானான். தோசை வாங்கிக் கொண்டு வந்த ஹரீஷ் இவன் பக்கத்தில் உட்கார்ந்தான். எல்லா பக்கமும் கண்களைச் சுழற்றிய அருணால் அவள் இருந்த பக்கம் மட்டும் பார்க்க முடியவில்லை. ஒருவித பயம் கலந்த தயக்கம். அமைதியாக சாப்பிட்டுக் கொண்டிருக்கையில் காஃபி எடுத்துக் கொண்டு கணேஷும் வந்து சேர்ந்தான். வந்தவுடனேயே உற்சாகமாய் பேச ஆரம்பித்தான்.

“மச்சான்… சொல்ல மறந்துட்டேனே.. இன்னிக்கு லிஃப்ட்ல வரும் போது ஒரு பொண்ண பாத்தேன்டா. சும்மா சொல்லக் கூடாது செமையா இருந்தா. இங்க தான் வேலைப் பாக்கறான்னு தெரியாம போச்சேன்னு தோணுச்சு.. அவ லிஃப்ஸ் இருக்கே அப்படியே ரோஸி லிப்ஸ்.. அவ்ளோ அழகா இருந்தா.. பை த பை.. அந்த பொண்ணு இங்க தான் இருக்கா… அதோ அந்த முத டேபிள்ல ஒரு சப்ப ஃபிகர்க்கு எதுத்தாப்புல உட்கார்ந்திருக்கே வெள்ளைக் கலர் சுடிதார்ல அந்த பொண்ணு தான்…”

அருண் மனதில் சின்னதாய் ஒரு பூகம்பம் ஏற்பட்டது.

SureshAMI
27-02-2009, 09:28 AM
நல்லா

samuthraselvam
27-02-2009, 10:20 AM
சஸ்பென்சில முடிக்கிறீங்களே.....!

இளசு
01-03-2009, 09:02 PM
மதி

இந்த நடையும் வர்ணனையும் அதிநவீன வாழ்க்கைச் சித்திரம் தீட்டி சொக்க வைக்கிறது..

எப்பாடு பட்டாவது தொடரை முடிச்சுடுப்பா...

என் பூமனசு சஸ்பென்ஸ் என்னும் பூகம்பம் தாங்காது!


( தென்னை ஓலைகளைக் கட்டி வைப்பது - புதிதாய்க் கற்றேன்.. நன்றி!)

சிவா.ஜி
01-03-2009, 09:11 PM
அடப்பாவிங்களா...எல்லாம் ஃபிகர் வேட்டையிலத்தானா? இன்னும் ஒண்ணும் மாட்டலையா? இப்ப... இருக்குற ஒரு ஃபிகருக்கு அடிதடியா....நல்லாருக்கு!!

சூப்பர் நடை மதி. எங்கப்பா வெச்சிருந்தே இதையெல்லாம் இத்தனைநாள்? அசத்தலான வேகத்துல கதை போய்க்கிட்டிருக்கு தொடர்ந்து நல்லபையனா எழுதி முடிச்சிடனும். கணேஷ் மாதிரி 2020க்கு காத்துக்கிட்டிருக்கக்கூடாது. ஓக்கேவா?

மதி
04-03-2009, 05:11 PM
அட.. இன்னுமா இந்தத் தொடர்கதைய எல்லோரும் படிக்கறீங்க...?? :)
கண்டிப்பா அடுத்தப் பகுதிய நாளைக்கு எழுதிடறேன். :)

மொக்கைக் கதையானாலும் படிக்கும் அனைவருக்கும் நன்றி..

samuthraselvam
05-03-2009, 03:32 AM
என்ன பண்ணுறது? இது மாதிரி மொக்கையைத் தானே மனசு ஆர்வமா படிக்கச் சொல்லுது. சொம்மா சொன்னேன் மதி. எல்லோரும் ஆர்வமா படிக்கிறாங்க என்றால் இந்தக் கதை அனைவரையும் கவர்கிறது என்று தானே அர்த்தம். நீங்க கலக்குங்க... வாழ்த்துக்கள்..

ரங்கராஜன்
05-03-2009, 04:00 AM
மதி நீ பெங்களூரில் இருப்பதால் கதையின் ஓட்டத்திற்கு பெரிதும் உதவுது, நல்லா இருக்கு மதி, நீ பகுதியை முடிக்கிற இடம் ஒரு சஸ்பண்சோட நல்லா இருக்கு

மதி
05-03-2009, 07:34 AM
கண்கள் இருண்டது. அருணுக்கு ஒன்றுமே தெரியவில்லை. புரியவில்லை. எங்கிருந்தோ மெல்லியதாய் இஞ்சின் உறுமும் சத்தம். திடீரென வெளிச்சமாகியது. சற்று நேரம் கழித்து தான் அருண் தெளிவானான். அடச்சே.. பவர் கட்.

இன்னமும் அவன் காதில் கணேஷ் சொன்னது எதிரொலித்தது.

‘மச்சான்.. செமையா இருந்தாடா….!’

சடாரென எழுந்தான். எங்கிருக்கிறோம் என்பதையே மறந்தான். கணேஷின் கன்னத்தில் பளாரென ஒன்று விழுந்தது. நிலைக்குலைந்தான் கணேஷ். சத்தியமாய் இதை அவன் எதிர்பார்க்கவில்லை.

‘ஒருவேளை அவனுக்கு சொந்தக்காரப் பொண்ணாய் இருப்பாளோ..’
என்னவென்று தெரியாமல் குழம்பினான். கண்களில் நெருப்பைக் கக்கிக் கொண்டு சுற்றிலும் அதிர்ச்சியில் உறைந்து நின்ற சகப் பணியாளர்களையும் மறந்து அமில வார்த்தைகளைக் கொட்டினான் அருண்.

“துரோகீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ…. அவ நான் பாத்துட்டு இருக்கற பொண்ணுடா.. என்ன தைரியம் இருந்தா என்கிட்டேயே வந்து அவள பத்தி வர்ணிப்ப… உன்னல்லாம் ஃப்ரண்டுன்னு சொல்லிக்கவே வெக்கமா இருக்கு… சீ… போடா.. வந்துட்டானுங்க ஃப்ரண்டுன்னு சொல்லிக்கிட்டு கழுத்தறுக்கறதுக்கு…”

வேகவேகமாக அந்த இடத்தைவிட்டு நகர முயன்றான். அவன் செயலையும் பேச்சையும் இதுவரை கேட்டுக் கொண்டிருந்த அவனது வெள்ளைச் சுடிதார் தேவதை முகத்தைச் சுழித்தாள்.

சிந்தனை கலைந்து அருண் வெப்ப பெருமூச்சை வெளியேற்றினான். எதிரில் கண்களில் குதூகலத்துடன் கணேஷ். வினாடிகளுக்குள் நிகழ்ந்த தன் எண்ண ஓட்டத்தினை எண்ணிக்கொண்டே கணேஷை அழைத்தான்.

“மச்சான்.. அவ தான் டா நான் பாத்துட்டு இருக்கற பொண்ணு. ரெண்டு நாளா தான் பாத்தேன். ரெண்டு நாள் நீங்க ரெண்டு பேரும் அந்த கேம்பஸுக்கு போனீங்கல்ல.. அதான் சொல்லல.. கடைசீல பாத்தா உனக்கும் அந்த பொண்ண புடிச்சிருக்கு. கடைசியா இந்த பொண்ணு மேட்டர்லியா நம்ம டேஸ்ட் ஒத்துப் போகணும்…”

அதற்கும் காரணம் இருக்கு. கணேஷின் ரசனை என்றும் வித்தியாசமானது. அவன் ஒரு பெண்ணைப் பார்த்து சூப்பர் ஃபிகர்டான்னு சொன்னா ஒன்று அந்த பெண்ணுக்கு நிறைய வயசாயிருக்கும் இல்லேன்னா கல்யாணமாகி குழந்தையிருக்கும். கடைசியா இந்தப் பொண்ணைப் பார்த்து தான் சூப்பர்ன்னு சொல்லி இருக்கான். ஒரு வேளை அவளுக்கும் கல்யாணமாகி இருந்தா..!

“சூப்பர்டா.. உனக்கு செம மேட்ச். நல்ல உயரம். களையான முகம். இப்போலேர்ந்து அந்தப் பொண்ணு எனக்கு அண்ணி.”

சடாரென கட்சித் தாவினான் கணேஷ். இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த ஹரீஷ்,

“ஆமாங்க. நல்லா இருக்காங்க. உங்களுக்கும் பொண்ணு பாக்கறாங்கல்ல.. நீங்க ஏன் அந்த பொண்ணுக்கிட்ட போய் ஐ லவ் யூ சொல்லக் கூடாது”

“நல்லா இருங்கடா.. இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே ரணகளமாக்கிடுவீங்களே.. இன்னுமாடா என்னையெல்லாம் நம்புறீங்க. நானெல்லாம் தூர நின்னு பாத்து சினிமா ஹீரோ முரளி மாதிரி பெருமூச்சு மட்டும் தான் விடறது. ஏதாச்சும் நம்ம பக்கம் பாத்துச்சுன்னு தெரிஞ்சா ஒரே ஓட்டம் தான்…. இதுல போறதாம் ப்ரபோஸ் பண்றதாம்… வேலையப் பாருங்கப்பா…”

இப்படியாக இரண்டு நாட்கள் சென்றது. தினமும் காலை அதே நேரத்திற்கு அந்தப் பெண் தன் தோழியோடு வருவாள். வட இந்திய பெண்கள் போல் சுடிதார் அணிந்திருப்பாள். எளிமையான தோற்றம். மேக்கப் இல்லாத பளிச்சென்ற முகம். தென்னிந்திய முகம். அவ்வளவு லட்சணம். எவ்வளவு அழகுன்னா அதை வர்ணிக்க தமிழில் இன்னும் வார்த்தைகளே இல்லை. அவ்வளவு அழகு. கண்களின் ஓரங்களில் இட்டிருக்கும் மை முகத்தை பிரமாதப்படுத்தும்.

அன்று ஒரு நாள், பச்சை வர்ண சுடிதாரில் அதே தேவதை. இளம் மயில் தோகைவிரித்தாடுவது போல். அவள் மயிலாய் இருந்தாலும் கார்மேகத்தைக் கண்டது போல் ஆடியது இவன் மனம். வழக்கம் போல் சாப்பிட்டுவிட்டு கிளம்பிவிட்டாள் அந்தப் பெண். சட்டென ஏதோ தோன்றியது அருணுக்கு. அவள் கிளம்பிய சில நொடிகளில் கிளம்பிவிட்டான்.

‘எங்கிருக்கிறாள் என்று எப்படி தெரிந்து கொள்வது…’ சட்டென ஆறாம் மாடியிலிருந்து எட்டிப் பார்த்தான். அவள் கீழே லிஃப்டில் இருந்து வெளியேறி செல்வது தெரிந்தது. ‘ அப்போ இந்த ஃபில்டிங் இல்லே’.
லிஃப்டுக்கு கூட காத்திராமல் படியிறங்கினான். தடதடவென்று இவன் காலணிகள் போட்ட சத்தத்தில் எல்லோரும் இவனைத் திரும்பிப் பார்த்தனர். எதையும் கண்டுக் கொள்ளும் மனநிலையும் இவன் இருந்தால் தானே. எல்லாம் காதல் படுத்தும் பாடு. வெளியே வந்தவுடன் சற்று தொலைவில் அவள் செல்வது தெரிந்ததும் பின் தொடர்ந்தான். அந்த ஃபில்டிங்கிலிருந்து மூன்றாவது ஃபில்டிங்குள் அவள் சென்றாள். சளைக்கவில்லை. லிஃப்ட் பொத்தானை அழுத்திவிட்டு அவள் காத்திருக்கையில் இவனை பார்த்துவிட்டாள். கண்களில் சின்ன சலனம். ‘அங்கே பார்த்த இவன் இப்போது இங்கேயும்…’ போன்றதொரு பார்வை.

ஒரு கணம் தடுமாறிய அருண் சட்டென சுதாரித்து தன்னை நோக்கி வந்துக் கொண்டிருந்த ராம்ஜியைப் பார்த்து

“ஹாய் ராம்ஜி.. எப்படி இருக்கீங்க..?”

முகம் மலர்ந்த ராம்ஜி..

“ஹாய் அருண். நல்லா இருக்கேன். என்ன இந்தப் பக்கம்?”

“உங்கள பார்க்கத் தான் வந்தேன். அந்த ப்ராஜக்ட் சம்பந்தமா.. அதான். என்ன பிஸியா..?”

“ஓ.. ரொம்ப வேலையெல்லாம் இல்லே. நாம வேணா மத்தியானம் பேசலாமா?”

அட்ரா..அட்ரா.. பல்ட்டிய எல்லோரும் பார்த்திருக்கலாம். ஆனால் அருண் அடித்தது அந்தர்பல்ட்டி. இத்தனை வருஷமா தூர்வாரியதில் கிடைத்த புண்ணியம் கம்பெனி முழுக்க ஆட்களை தெரிந்து வைத்திருப்பது தான்.

மீண்டும் தன் இடத்திற்கு அவள் நினைவாகவே திரும்பினான். நண்பர்கள் சீண்டல்களுடன் அன்றைய பொழுது போய்க் கொண்டிருந்தது.

மதியம். உணவு நேரம். வழக்கத்திற்கு மாறாக பன்னிரண்டரை மணிக்கே காஃபிடேரியா போய்விட்டான் அருண். துணைக்கு நண்பர்கள் வேறு. போதாதா அராஜகம் பண்ண? சற்று நேரத்தில் அவன் தேவதை வருவது தெரிந்தது. அனைத்து புலன்களும் சுறுசுறுப்பாய் அவளைக் கவனிக்க ஆரம்பித்தது. அங்கு அவ்வளவு இடமிருந்தும் அவள் தனக்கு எதிர் மேசையில் வந்து உட்கார்ந்தது அருணுள் குறுகுறுப்பை ஏற்படுத்தியது. நேருக்கு நேராய் பார்க்க முடியாமல் தடுமாறினான். ஒரு வழியாய் திக்கித் திணறி சாப்பிட்டுவிட்டு அவள் கிளம்புவதற்காய் காத்திருந்தான். ‘சரியான சிக்கனப் பேர்வழி போலும். இவ்வளவு கம்மியாக சாப்பிடுகிறாள். உடம்பு என்னத்துக்கு ஆகறது?’ அதீத கவலைப்பட்டான். அவள் கைகழுவிவிட்டு சென்றதும் பின் தொடர்ந்து சென்றான். அட. அன்றைக்கு டெஸர்ட் கோன் ஐஸ்க்ரீம்.

உலகமே மெதுவாய் சுழல்வது போல் தோன்றியது அருணுக்கு. தன் பொன்னான கைகளில் அந்தக் கோனை ஏந்துகையில் கோனாய் நானிருந்திருக்கலாமோ என்றுத் தோன்றியது. தத்துபித்தென்று காதல் உணர்வு வார்த்தைகளாய் ஜனித்தன. மெதுவாய் தன் இடம் நோக்கி நடக்கையில் அவளைக் கடந்து செல்கையில் அவளின் நுனிநாக்கு தன் இடத்திலிருந்து வெளியே வந்து கோனின் உச்சியிலிருந்த ஐஸ்க்ரீமை தொட்டபோது இவனுக்கு சிலிர்த்தது.

ஃப்ளோருக்குள் நுழைந்ததும் கணேஷிடம்,

“மச்சான்.. சூப்பரா ஒரு கவிதை தோணுதடா…”

“என்னாது.. கவிதை.. அதெல்லாம் உனக்கு வருமா… ஏதாச்சும் மொக்கையா சொன்னே பிச்சுப்புடுவேன்..”

“இல்லேடா… இது கொஞ்சம் நல்லாயிருக்கும்னு தோணுது. நானும் கவிஞனாடா…?”

“மொதல்ல கவிதைய சொல்லு. அப்புறம் முடிவெடுக்கலாம்.. நீ கவிஞனா.. இல்லையான்னு..”

“இதோ.. நீ கேளேன்..என்னவள் என்ன அவ்வளவுகுளிர்ச்சியா என்ன..?அவளின் நுனிநாக்கு பட்டதும்ஐஸ்க்ரீமுக்கும் குளிர்கிறதே!!”“அட..அட.. அட.. கவித.. கவித.. டேய்.. பாத்து. நீ பக்கத்துல போனா ஃப்ரீஸ் ஆயிட போற.. ஆனாலும் கவித நல்லாருக்கு.. அதுசரி. அந்த பொண்ணு உன்ன அந்தளவுக்கா பாதிச்சுட்டா…? அவ பேர் என்னடா…”

அப்போது தான் அருணுக்கு உறைத்தது தன் வாழ்வில் வில்லங்கமாய் விளையாடப் போகும் அவள் பேரே இன்னும் தனக்குத் தெரியாதென.

ரங்கராஜன்
05-03-2009, 07:54 AM
என்னவள் என்ன அவ்வளவு
குளிர்ச்சியா என்ன..?
அவளின் நுனிநாக்கு பட்டதும்
ஐஸ்க்ரீமுக்கும் குளிர்கிறதே!!”

என்னமா எழுதறாங்கய்யா, கவிதை கவிதை மேல படி..............

samuthraselvam
05-03-2009, 08:17 AM
ஒரு நாவலை எடுத்த ஒரே மூச்சா படிச்சு முடுசிட்டுதான் மறு வேலையே பார்ப்பேன். ஆனால் உங்களின் கதையைப் படித்தவுடன் பொறுமை மிக அவசியம் என்று தெரிகிறது. சீக்கிரமா அடுத்த பகுதியை போடுங்க..
இதெல்லாம் அனுபவம் மாதிரி அழகா கதை எழுதியிருக்கிறீர்கள்.
கவிதை நல்ல இருக்குங்க மதி.

மதி
05-03-2009, 08:23 AM
என்னவள் என்ன அவ்வளவு
குளிர்ச்சியா என்ன..?
அவளின் நுனிநாக்கு பட்டதும்
ஐஸ்க்ரீமுக்கும் குளிர்கிறதே!!”

என்னமா எழுதறாங்கய்யா, கவிதை கவிதை மேல படி..............
அட.. ஆமால்ல... எப்படியெல்லாம் எழுதறாங்க.. கவிதை...
:D:D:D:D:D:D

மதி
05-03-2009, 08:26 AM
ஒரு நாவலை எடுத்த ஒரே மூச்சா படிச்சு முடுசிட்டுதான் மறு வேலையே பார்ப்பேன். ஆனால் உங்களின் கதையைப் படித்தவுடன் பொறுமை மிக அவசியம் என்று தெரிகிறது. சீக்கிரமா அடுத்த பகுதியை போடுங்க..
இதெல்லாம் அனுபவம் மாதிரி அழகா கதை எழுதியிருக்கிறீர்கள்.
கவிதை நல்ல இருக்குங்க மதி.
நன்றி லீலுமா...
பொறுமை மிக மிக அவசியம்.. ஏன்னா.. நான் ஒரு பாகத்தை எழுதிவுடனே பதிச்சுடறேன். அதனால அடுத்த பகுதி எழுதிற வரைக்கும் காத்திருக்கணும். இந்த பாகமே நாலஞ்சு நாளா கஷ்டப்பட்டு இன்னிக்கு தான் எழுத முடிஞ்சது..

கவிதையைப் பற்றி... எனக்கு அவ்வளவா தெரியாது... :D:D

samuthraselvam
05-03-2009, 09:30 AM
அட.. ஆமால்ல... எப்படியெல்லாம் எழுதறாங்க.. கவிதை...
:D:D:D:D:D:D

அப்படின்னா இது......இது......இது......இது......:062802photo_prv:

இப்படி தன்னடக்கம் இருக்கக்கூடாதுங்க...:medium-smiley-041:

புல்லரிக்குது. :icon_wacko:

மதி
05-03-2009, 09:45 AM
அப்படின்னா இது......இது......இது......இது......:062802photo_prv:

இப்படி தன்னடக்கம் இருக்கக்கூடாதுங்க...:medium-smiley-041:

புல்லரிக்குது. :icon_wacko:
சத்தியமா காப்பியடிச்சது இல்லே.. சொந்தமா யோசிச்சு சிச்சுவேஷனுக்கு தக்கவாறு எழுதினேன்.. மொக்கைத்தனமா..:D

samuthraselvam
05-03-2009, 10:15 AM
சரி சரி மொக்கைன்னா அது மதி...

arun
11-03-2009, 04:20 AM
முழு மூச்சில் இரண்டு பாகத்தையும் படித்தேன் ரொம்ப எதார்த்தமா சொல்லி இருக்கீங்க கண்டிப்பா இது உங்க கதையோ அல்லது உங்க ஆபீஸ்ல நடக்குற கதையா தான் இருக்கும்னு நினைக்கிறேன் அல்லது அதோட பாதிப்பா கூட இருக்கலாம்

கதை சூப்பர் பொறுமையாக அடுத்த பாகத்துக்காக காத்திருக்கிறேன் ஆனால் கண்டிப்பாக கதையை தொடருங்கள்

மதி
11-03-2009, 04:41 AM
நன்றி அருண்.. எழுத தான் நேரம் பிடிக்குது.. என்ன பண்ண..??

மதி
13-03-2009, 04:37 PM
அவசர அவசரமாக கிளம்பிக் கொண்டிருந்தான் அருண். பத்து மணி வண்டியை பிடித்தாக வேண்டும்.

“மச்சான்.. இங்கேயே இருடா… நீ போயிட்டா மொக்கைப் போட ஆள் இல்லாம போயிடும். இப்போ அவசியமா அங்க போகணுமா என்ன..?”

கெஞ்சிக் கொண்டிருந்தான் கணேஷ். எதுவுமே காதில் வாங்கிக் கொள்ளாதவனாய் லேப்டாப்பை எடுத்து பையில் வைத்துக் கொண்டிருந்தான் அருண். அவன் கிளம்புவதற்கும் காரணம் இருக்கிறது. உண்மையிலேயே இவர்களின் இடம் அந்த கட்டிடத்தில் இல்லை. அவர்கள் வேலை பார்க்கும் டீம் வேறொரு கட்டிடத்தில் பத்து கி.மீக்கு அப்பால் உள்ளது. பெங்களூரின் காலை நேர சாலை எரிச்சலில் பயணப்பட பயந்து இவர்கள் மூன்று பேரும் இந்த அலுவலகத்திலிருந்து வேலை செய்கிறார்கள். அவ்வப்பொழுது அங்கு சென்று டீம் மெம்பர்களை குசலம் விசாரித்து வருவார்கள். மற்ற நேரமெல்லாம் தொலைப்பேசியிலேயே வேலையை முடித்து விடுவார்கள். அன்று அருண் ஒரு முக்கிய மீட்டிங்க்கு செல்ல வேண்டியிருந்தது. போகாவிட்டால் யாரேனும் பிரச்சனையைக் கிளப்பக் கூடும். அதனால் கிளம்பிக் கொண்டிருந்தான். பாழாய் போன ரிஷஸன் அருணையும் பயமுறுத்திக் கொண்டிருந்தது.

“ஆமாங்க.. போன்லேயே விஷயத்தை பேசி முடிச்சிக்கக் கூடாதா… அவசியமா அங்க போய் தான் ஆகணுமா. போனா எப்படியும் ரெண்டு மணி நேரம் வேஸ்டாயிடும். வேலை பாக்கற மூடும் போயிடும். “

வக்காலத்து வாங்கினான் ஹரீஷ். “நல்லா யோசிச்சுக்கங்க. அப்புறம் மதியம் சாப்பிடும் போது அந்தப் பொண்ண பாக்க முடியாது… காலைல வேற அந்தப் பொண்ணு வரல”

சட்டென நின்றான் அருண். ஹரீஷின் கடைசி வார்த்தைகள் அவனைக் கட்டிப் போட்டது. உடனே தன் டீம் லீட்க்கு தொலைப்பேசினான்.

“பாஸ்.. அரை மணிநேர மீட்டிங் தானே. இங்கிருந்தே எடுத்துக்கறேன். ஓ.. அந்த ரிப்போர்ட்டா..? சரி.. இன்னும் ஒரு மணிநேரத்துல முடிச்சு அனுப்பிடறேன். இப்போ அங்க கிளம்பி வந்தா தேவையில்லாம நேரம் வேஸ்டாகும்… ம்ம்ம்.. சரி…”

பேசி முடித்துவிட்டு பெருமூச்சுவிட்டு அமர்ந்தான் அருண். அர்த்தப்புஷ்டி பார்வையை பரிமாறிக் கொண்டனர் கணேஷும் ஹரீஷும்.

“என்ன மச்சான்.. போகல.. ஏதோ அவசரமா போகணும்னே..?”

“ஆமாண்டா… கடைசீல யோசிச்சேன்.. நீ வேற இங்கேயே இருக்க சொன்னியா.. தேவையில்லாம ரெண்டு மணி நேரம் போக வர.. அதான் இங்கிருந்தே டெலிகான் எடுத்துக்கலாம்னு…”

“டேய்.. டேய்.. போதும்.. வழியறத தொட. அவ்ளோ சொல்லியும் கேட்காதவன் அந்தப் பொண்ணப் பத்தி சொன்னதும் நின்னுட்ட… ம்ம்.. லவ் வேவ்ஸ் ஓட ஆரம்பிச்சுடுச்சுனு நினைக்கிறேன்… நடத்து ராசா நடத்து… சரி.. நேத்து கேட்டேனே அந்த பொண்ணு பேரு என்ன?”

சுருக்கென்றது மறுபடியும். இன்னும் தெரியவில்லையே.

“மச்சான் தெரியலடா. எப்படியும் கண்டுபுடிக்கணும். அவ போட்டிருக்கற ஐடி கார்ட்டை வச்சு தான் கண்டுபுடிக்கணும். ஆனா அவ கழுத்துல தொங்கவிட்டிருக்கறதால உத்து பாத்தா தப்பா நினைப்பாங்களே… எப்படிடா..?”

“வேற வழியில்ல.. எப்படியாச்சும் கண்டுபுடிக்க வேண்டியது தான்…ம் என்னடா சொல்ற ஹரீஷ்..?” வினவினான் கணேஷ்.

“ஆமாங்க. எப்படியாச்சும் ஒன்னு சேத்துடணும். எனக்கென்னவோ இவருக்கு இந்தப் பொண்ணு செட்டாகும்னு தோணுது. பாக்க தமிழ் பொண்ணோ ஆந்திரா பொண்ணோ மாதிரி தெரியுது.. பேசி முடிச்சுடலாம்..”

“சாமிகளா.. வாழ்க்கைல குழப்பத்தை ஏற்படுத்திடாதீங்க. முதல்ல பேர கண்டுபிடிப்போம்” ஆவலுடன் மதிய உணவு இடைவேளைக்காக காத்திருக்கலானான் அருண்.

உணவு இடைவேளை. சரியாக அந்தப் பெண் வரும் நேரத்திற்கு ஐந்து நிமிடம் முன்னதாகவே சென்றது மூவரணி. நல்லா வசதியாக நடுவில் ஒரு இடம் பிடித்து அமர்ந்த பொழுது தேவதையின் தரிசனம். வழக்கம் போல் தன் தோழியுடன். வெள்ளைநிற சுடிதாருக்கு வான்நீல வண்ண துப்பட்டா. வைத்தக் கண் வாங்காமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் அருண். ‘சே.. என்ன ஒரு முகம்! பார்த்துக்கிட்டே இருக்கலாம் போல இருக்கே..!’

“மச்சான்.. போதும். வந்த வேலைய பார்ப்போம்..” எச்சரித்தான் கணேஷ்.

கொஞ்சம் தெளிந்து எங்கேயோ பார்க்கிற மாதிரி நடித்து திரும்பினான் அருண்.

“ம்ம்.. எப்படிடா பாக்குறது?”

“வழி கிடைக்காமலா போயிடும்… கொஞ்சம் வெயிட் பண்ணு..”

இவர்கள் அதிர்ஷ்டம். அன்று அந்தப் பெண் தன் தோழியுடன் இவர்கள் இருக்கும் இடத்திற்கு இரு இருக்கைகள் தள்ளி அமர்ந்தாள். சுற்றிப் பார்க்கிற மாதிரி நடித்து ஒரு வழியாக ஐடி கார்ட்டை பார்த்தனர் கணேஷும் ஹரீஷும்.

“மச்சான்.. என்னடா.. இவ்ளோ பக்கத்துல வந்து உக்கார்ந்திருக்கா. அநேகமா அவளும் உன்ன பாக்கறான்னு நெனக்கிறேன்…” கிசுகிசுத்தான் கணேஷ்.

“டேய்… சும்மா இருடா…” அதட்டிய அருண் ஓரக் கண்ணால் அவளை விழுங்கியவாறே சாதத்தை மென்றான். சாப்பிட்டுவிட்டு வெளியேறிய மூவர் கூட்டணி அவர்கள் க்யூபிக்கலில் மறுபடி கூடியது.

“டேய்.. அவ பேர் பாத்தீங்களாடா.. எந்த ஊருன்னு கண்டுபுடிக்க முடிஞ்சதா..??” ஆர்வத்தோடு கேட்டான் அருண்.

“முழுசா பாக்க முடியலீங்க.. எவனாவது எக்குத் தப்பா பாத்து பின்னீட்டான்னா.. ஆனாலும் முத ரெண்டு எழுத்து பாத்துட்டேன்…” பம்மினான் ஹரீஷ்.

“அட நீயாச்சும் பாத்தியாடா…” ஏக்கத்துடன் கணேஷை ஏறிட்டான்.

“நானும் முழுசா பாக்கலேடா.. ஆனா கடைசி எழுத்தை மட்டும் பாத்தேன்..”

“அடப்பாவிகளா.. முழு பேரையும் பாக்கலியா.. இப்ப என்னடா பண்றது…”

உதவிக்கு வந்தான் ஹரீஷ். “அட விடுங்க.. இதுக்குப் போய். நம்ம கம்பெனி இண்ட்ராநெட்ல தேடிட்டா போச்சு. அதான் அவங்க எந்த பில்டிங்ல இருக்காங்கன்னு தெரியுமே.. ஒவ்வொரு ப்ளோரா போய் தேடிட்டாப் போச்சு…”

முகம் மலர்ந்தான் அருண். “மச்சான் இன்னொரு விஷயம்டா…! ஐடி கார்ட்ல பச்சைக் கலர் பட்டை வேற இருந்துச்சு. ஒரு வேளை ப்ராஜக்ட் பண்ண வந்த பொண்ணா இருக்கலாம்..”

உண்மை தான். அவர்கள் வேலை செய்த கம்பெனியில் இப்படி ஐடிகார்ட்டில் பல அடையாளங்கள் உண்டு.

“சரி.. அவ பேர்ல முத ரெண்டு எழுத்து என்னடா…?”

“அது…. S.. அப்புறம்.. h.. “

“கணேஷ்.. கடைசி எழுத்தை சொல்லு..”

“a”

“சூப்பர்.. ஈசியா புடிச்சுடலாம். ப்ராஜக்ட் ட்ரெயினி வேற.. ம்ம். ஹரிஷ்.. நம்ம கம்பெனி வெப்சைட்ட ஓபன் பண்ணுடா.. தேடிப் பார்க்கலாம்!”

கம்பெனி வெப்சைட்டில் ஊழியர் அனைவரின் தகவல்களும் புகைப்படத்துடன் இருக்கும். அதில் ஒவ்வொரு தளமாய் தேர்வு செய்து தேடினார்கள். முதலிரண்டு தளங்களிலும் ஆளில்லை.
மூன்றாவது தளத்தில் சிக்கியது அந்தப் பெயர். போட்டோ ஒத்து வரவில்லை.

நான்காவது தளத்தில் இரண்டு பேர். ஐந்தாவது தளத்தில் ஒருவர்.
அவ்வளவு தான். இதில் யாருமில்லை. கடைசியாய் இருப்பது ஆறாவது தளம். படபடப்புடன் தேடினார்கள். கிடைத்த பெயர் Shrada Sinha. டெசிக்னேஷன் ட்ரெயினி என்றிருந்தது. ஆனால் புகைப்படம் இருக்கும் இடத்தில் ‘x’ குறி இருந்தது. அப்போ இவள் தான். இந்தப் பெண் தான்.

ஆனால் Sinha-ஆவா?? நெற்றியில் சுருக்கங்களுடன் அருண் யோசிக்க ஆரம்பித்திருந்த போது அந்த உலகலாவிய பிரச்சனையை கிளப்பினான் கணேஷ்.

“மச்சான். வடநாட்டுப் பொண்ணுடா.. ஆமா எப்படி ஹிந்திப் பேசி குடும்பம் நடத்திடுவியா…?”

பாரதி
08-04-2009, 05:09 AM
“மச்சான். வடநாட்டுப் பொண்ணுடா.. ஆமா எப்படி ஹிந்திப் பேசி குடும்பம் நடத்திடுவியா…?”


ம்ம்... அப்புறம்...? என்ன ஆச்சு மதி.. சொல்லுங்க.

மதி
09-04-2009, 02:58 PM
மன்னிக்கவும். அருணைப் பிடிப்பது கஷ்டமாக உள்ளதால் அவரிடமிருந்து மேற்கொண்டு எந்தத் தகவலும் இல்லை. இன்னும் ஓரிரண்டு நாட்களில் எப்படியும் மீதிக்கதையை வாங்கி பதிக்கிறேன்.

சிவா.ஜி
09-04-2009, 03:06 PM
சரளமா கொண்டு போறீங்க மதி. ரொம்ப எதார்த்தமான உரையாடல் அமைப்பு, கதையைப் படிக்க சுவாரசியமா இருக்கு. நேரம் கிடைக்கும்போது அருணைப் பிடித்து மீதிக்கதையை வாஙுற வழியைப் பாருங்க.

மதுரை மைந்தன்
09-04-2009, 06:57 PM
பெங்களூர் பிண்ணனியில் ஒரு காதல் கதை. நன்றாக இருக்கிறது. தொடர்ந்து படிக்க ஆவலாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.

பாரதி
10-04-2009, 04:43 AM
மன்னிக்கவும். அருணைப் பிடிப்பது கஷ்டமாக உள்ளதால் அவரிடமிருந்து மேற்கொண்டு எந்தத் தகவலும் இல்லை. இன்னும் ஓரிரண்டு நாட்களில் எப்படியும் மீதிக்கதையை வாங்கி பதிக்கிறேன்.

மிக்க நன்றி மதி.

மதி
21-04-2009, 12:44 PM
இதுவரை படித்து வந்த எல்லோருக்கும் மிக்க நன்றி. ஒருவழியா அருணை பிடித்து அவனிடம் விஷயங்களை வாங்கியாச்சு. மொத்த கதையும் எழுதியாச்சு. இன்னும் மூன்று பாகங்கள் தான். அலுக்காம சலிக்காம படிச்சிடுங்கோ..

மறக்காம குட்டத் தவறாதீர்கள்..

மதி
21-04-2009, 12:47 PM
“என்னடா.. சொல்ற.. என்னாச்சு அருணுக்கு?”

ஆச்சர்யமாய் கேட்டான் கணேஷ்.

“ஆமாங்க.. இன்னிக்கு ஆஃப் டே லீவாம். சொல்ல சொன்னார். உடம்பு சரியில்லையான்னு கேட்டதுக்கு ஒன்னும் பதிலே சொல்லல. வருவார்ல கேட்டுடலாம்..”

“ம்ம்…” சிந்தனைவயப்பட்டவனாய் கணேஷ். நடக்கும் விஷயங்கள் எதுவும் அவனுக்குப் புரியாத புதிராய் இருந்தது. இப்போ தான் ஏதோ காலேஜில் சேர்ந்து கூத்தடிப்பாய் தோன்றிற்று. இதுவரை நல்லா இருந்த அருண் நேற்று சாயந்திரத்திலிருந்தே சரியில்லை. அவன் சந்தோஷமாய் இருக்க முயற்சித்தாலும் ஏதோ அவனை பாதித்திருந்தது. அந்த பொண்ணு மேட்டரா இருக்குமோ.. பலவாறாய் குழம்பினான்.

அன்றைய பொழுது போய்க் கொண்டிருந்தது. நண்பகல் பன்னிரண்டு மணியளவில் அருண் வந்து சேர்ந்தான். முகமெல்லாம் பூரிப்பு. எதிர்பார்த்த முகபாவமில்லையே…!
“ஹே.. அருண். என்னடா ஆச்சு. ஆஃப் டே லீவ் போட்டுட்டே…?”

“ம்ம்.. எல்லாம் காரணமா தான் டா. ஒரு சின்ன வேலை வெளியே இருந்துச்சு. அதான். சொல்றேன். கண்டிப்பா சொல்றேன்.” நமுட்டுச் சிரிப்புடன் அருண்.

“போடாங்.. சஸ்பென்ஸாம்.. சொல்லித் தொலைடா. என்ன ஏதுன்னு புரியாம முழிச்சிட்டு இருக்கோம். இதுல இவருக்கு சிரிப்பு வேற….” அடிக்க வந்தான் கணேஷ். நடப்பது எதுவும் புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தான் ஹரீஷ்.

“அதுவா…. அதுவா… நானும் ரொம்ப நாளா சொல்லிட்டு இருந்தேன்ல. ஏதாச்சும் கத்துக்கணும்.. கத்துக்கணும்னு.. அதான்… ஹிந்தி கத்துக்கலாம். சின்ன வயசுலேயே படிக்க சொன்னாங்க. படிக்கல.. அதான் இப்ப கத்துக்கலாம்னு ட்யூசன் பத்தி விசாரிச்சுட்டு சேர்ந்துட்டேன். அதுக்காக தான் இன்னிக்கு லீவ்”

“அடப்பாவி… டே… என்னடா பண்ற.. அஞ்சு வருஷமா இங்க இருக்க.. இதுவரை கத்துக்காத விஷயங்கள இப்போ தான் கத்துக்கறியாம். சொல்லு. என்னாச்சி.. அந்தளவுக்கு நீ கவுந்திட்டியான்னே…”

ரொம்பவே கஷ்டப்பட்டு வழிசலாய் வெட்கப்பட்டான் அருண்.

“சரி போதும். வாய்ல இருந்து வர வாட்டர் ஃபால்ஸ மூடு… நீ தேய்க்கறதுல கீழ இருக்கற கார்பெட்டே… கிழிஞ்சுட போகுது.. நல்லா யோசிச்சு தான் முடிவெடுத்தியா…டா?”

“ஆமா டா. நீயே சொல்லு. இத்தினி வருஷம் இந்தக் கம்பெனியில இருந்திருக்கேன். ஏதாச்சும் பொண்ண பாத்திருக்கேனா. இல்லே யார பத்தியாச்சும் பேசியிருக்கேனா…? ஏனோ தெரியல டா. நேத்து ராத்திரி முழுக்க யோசிச்சேன். அப்புறமா அப்ரோச் பண்ணினா என்னன்னு தோணுச்சு. அதுக்காக தான் ஃபுல் எக்யுப்டா இருக்கணும்ல. அதான் முதல் காரியமா ஹிந்தி கத்துக்கலாம்னு..”

“சபாஷ்டா.. உன்ன நெனச்சா பெருமையா இருக்கு. ப்ரபோஸ் பண்றதுக்கு முன்னாடியே இவ்ளோ கஷ்டப்படறியே.. ப்ரபோஸ் பண்ணி ஓக்கேயாச்சுனா எவ்ளோ கஷ்டப்படப்போறியோ..?? மவனே சனி உச்சத்துல இருந்து ஆடறான். நீயும் ஆடற..”

“அட.. ஆமாடா.. இப்போ ஏழரை சனி நடந்துட்டு இருக்காம். அம்மா சொன்னாங்க..?”

“அடப்பாவி.. ஆமா எல்லாத்துக்கும் அம்மா.. அப்பானு சொல்லுவியே.. இதப் பத்தி நீ உன் அப்பா அம்மாக்கிட்ட பேசினியா.. அவங்கள எப்படிடா சமாளிப்ப. உனக்கு வேற பொண்ணு பாத்துட்டு இருக்காங்க?”

சுருக்கென்றது அருணுக்கு. ‘இதுவரை எல்லா விஷயத்தையும் அப்பா அம்மாக்கிட்ட சொல்லுவ, இப்போ மட்டும் உன் இஷ்டத்துக்கு நீயே முடிவெடுக்கற’ அவன் மனசாட்சி தாறுமாறாய் திட்டியது.
அம்மா செல்பேசிக்கு டயலினான். இந்த இடத்தில் அருண் குடும்பத்தைப் பத்தி சொல்லியாக வேண்டும். அருண் வீட்டுக்கு ஒரே பையன். அதனால ஏக செல்லம். அப்பா ரிடையர்ட் ஆகி தனியா பிஸினெஸ் பண்ணிட்டு இருக்கார். அம்மா வீட்டு நிர்வாகி. ஏகத்துக்கும் கலாட்டா குடும்பம்.

“அம்மா…”

“சொல்லுப்பா.. என்ன இந்த நேரத்துல… சாப்டியா…”

“இல்லே.. இனிமே தான் சாப்ட போணும்.. அப்புறம் அங்க சமையலாச்சா..?”

“ம்ம்.. நடந்துட்டு இருக்கு. அப்பா ஏதோ வெளியே போகணும்னு சொல்லிட்டு இருந்தார். அதான் சீக்கிரமா சமைச்சுக்கிட்டு இருக்கேன்.”

“ஓ.. சரி..”

“வேலையெல்லாம் எப்படி போகுது.. நிறைய இருக்கா..?”

கவலைதோய்ந்த குரலில் அம்மா. ‘இந்த ரிஷஸன்ல எவனுக்கு உருப்படியா வேலை இருக்கு..’

“அதெல்லாம் இல்லேம்மா.. வழக்கம் போல தான் வெட்டி..”

“ஓ. பாத்துப்பா.. பேப்பர்ல ஐ.டி. கம்பெனி பத்தியெல்லாம் என்னன்னமோ வருது. உங்க கம்பெனியில ஒன்னும் பிரச்சனை இல்லியே.”

“இல்லேம்மா. இங்க எங்கள விட்டா வேற ஆளில்ல.. சரி. ஒரு விஷயம்..”
“ம்ம். சொல்லு..”

“அது… ஒரு பொண்ண நான் பாத்துட்டு இருக்கேன்.. அதான் உங்ககிட்ட சொல்லலாம்னு..”

“யார்டா அது.. உங்க கம்பெனியில வேல பாக்கற பொண்ணா..??”
சந்தேகத் தொனி தெளிவாய் தெரிந்தது.

“ஆமாம்மா… இங்க தான் இருக்கிறா. ஆனா ஒரு சின்ன பிரச்சனை…”

“என்னடா..?”

“நீங்க ஹிந்தி கத்துக்கணும். அந்த பொண்ண கல்யாணம் பண்ணிக்கிட்டா அப்புறம் எப்படி பேசுவீங்க. அந்த பொண்ணு ஹிந்திப் பொண்ணும்மா..”

“அடப்பாவி.. பாக்கறதும் தான் பாக்கற. ஒரு தமிழ்பொண்ணா பாக்கக்கூடாதா..?”

“என்னம்மா பண்றது. நிலைமை இப்படி யிருக்கே. இதுவரைக்கும் நான் அந்தப் பொண்ணுக் கூட பேசினதில்லை. குத்துமதிப்பா தான் ஹிந்திப் பொண்ணுனு சொல்றேன்.”

“சுத்தம்.. அதுக்குள்ள என்னைய ஹிந்தி கத்துக்க சொல்றியா..? இதெல்லாம் தேவையா.. இந்தா உங்க அப்பாக்கிட்ட பேசு.. உண்மையா பேசுறியா விளையாட்டுக்கு பேசறியான்னே தெரியல”

சலிப்புடன் அப்பாவிடம் போனது போன்.

“என்னப்பா.. அம்மாக்கிட்ட என்ன பிரச்சனை?”

“இல்லேப்பா. ஒரு பொண்ண பாக்கறேன். அதான் அம்மாக்கிட்ட சொல்லிட்டு இருந்தேன்.”

“இருக்கட்டும். அம்மாக்கிட்டேயே கேட்டு தெரிஞ்சுக்கறேன். இல்லாட்டி உன்கிட்ட ஒருதடவ..உன் அம்மாக்கிட்ட ஒரு தடவைன்னு ஒரே விஷயத்த ரெண்டு தடவை கேக்கணும்.”

தெளிவாய் பேசினார் அருணின் அப்பா.

“இங்க பாருப்பா. நீ பேசினத கேட்டுட்டு தான் இருந்தேன். முதல்ல அந்த பொண்ணு எந்த ஊர் பொண்ணுன்னு கண்டுபுடி. இன்னிக்கு ஹிந்திம்பே. நாளைக்கு கன்னடம்பே. தெளிவா சொல்லு. முதல்ல பேசு. உங்க அம்மா always driven by need. கல்யாணமானா தான் ஹிந்தி கத்துப்பா. நாளைக்கே வேற பொண்ண விரும்பறேன்னு சொன்னா. எல்லா மொழியும் கத்துக்க முடியாதுல்ல.”

கேட்க கேட்க கண்ணைக் கட்டியது அருணுக்கு.

தாமரை
21-04-2009, 03:01 PM
வீட்ல எல்லோரும் இந்தி கத்துக்கணும்னு உண்ணாவிரதம். போராட்டம் ஆர்பாட்டம் அப்படின்னு ஆரம்பிக்காத வரை சரி...

மதி
21-04-2009, 03:10 PM
வீட்ல எல்லோரும் இந்தி கத்துக்கணும்னு உண்ணாவிரதம். போராட்டம் ஆர்பாட்டம் அப்படின்னு ஆரம்பிக்காத வரை சரி...
தெரியல. அருணிடம் தான் கேட்கணும். அவர் சொன்னதை அப்படியே எழுதினதோட சரி. ஆங்காங்கே என் மொக்கை டச் (அப்படின்னு ஒன்னு இருக்குதா என்ன)..

samuthraselvam
22-04-2009, 06:25 AM
அருணுக்கு மட்டும் இப்படி ஒரு நல்ல அப்பா, அம்மாவா?

ம்ம்ம்ம்ம்ம்.........கொடுத்து வைத்தவர் அருண்.

கதை அழகாக நகர்கிறது... வாழ்த்துக்கள்....

சிவா.ஜி
22-04-2009, 06:42 AM
நல்லா கொண்டுபோறீங்க மதி. போறபோக்கப்பாத்தா..கணேஷ், ஹரீஷ்ன்னு எல்லாரையும் ஹிந்தி கத்துக்க சொல்லுவான் போலருக்கு.

எப்படியோ ஒரு புது விஷயம் கத்துக்கறதுக்கு காதல் உதவுதே. வாழ்க காதல்.

தாமரை
22-04-2009, 07:01 AM
அருணுக்கு மட்டும் இப்படி ஒரு நல்ல அப்பா, அம்மாவா?
ம்ம்ம்ம்ம்ம்.........கொடுத்து வைத்தவர் அருண்.

கதை அழகாக நகர்கிறது... வாழ்த்துக்கள்....

கொஞ்சம் யோசிக்க வேண்டிய விஷயம்.

அருணைக் கேட்டாதானே தெரியும்.:lachen001::lachen001::lachen001:

மதி
22-04-2009, 07:18 AM
நன்றி லீலுமா மற்றும் சிவாண்ணா...
இன்னும் சற்று நேரத்தில் அடுத்த பாகத்தையும் பதிவேற்றிவிடுகிறேன்.

இன்னும் இரண்டு பாகங்களில் முடியும்.

மதி
22-04-2009, 07:19 AM
அருணுக்கு மட்டும் இப்படி ஒரு நல்ல அப்பா, அம்மாவா?

ம்ம்ம்ம்ம்ம்.........கொடுத்து வைத்தவர் அருண்.

கதை அழகாக நகர்கிறது... வாழ்த்துக்கள்....
அருணிடம் சொல்கிறேன்...

மதி
22-04-2009, 07:28 AM
“எப்படிடா போகுது உன் ஹிந்தி க்ளாஸெல்லாம்?”

அதிசயமாய் கேட்டான் கணேஷ். காலநேரமெல்லாம் நம்மை கேட்டுவிட்டா வேலை செய்கிறது. அது போல தான் இதுவும். அன்று நடந்த அந்த உரையாடலுக்குப்பின் கணேஷ் ப்ராஜக்ட் சம்பந்தமா ஹைதராபாத் சென்றிருந்தான். ஹரீஷும் வேலையில் பிஸியாக இருந்ததால் ஒருவாரகாலமாக மொக்கைக் கூட்டணி கூடியிருக்கவில்லை. அன்று காலை தான் கணேஷ் ஆபிஸுக்கு வந்தான். ஹரீஷ் அன்று பணிநிமித்தமாய் வேறொரு அலுவலகத்தில்.

காலை பதினொரு மணி காஃபியில் தான் இந்தக் கேள்வி.

“ம்ம்.. அது பாட்டுக்கு போகுதுடா..? எப்படி தான் ஹிந்தி கத்துக்கறாங்கன்னே தெரியல. 'ஏக் காவ் மேன்' பாத்துட்டு அப்படி சிரிச்சேன். இப்போ நான் பேசறத பாத்துட்டு அங்க இருக்கறவங்க எல்லாம் சிரிக்கறாங்க.”

“காதல்னா சும்மாவா கண்ணா.. எல்லாம் உனக்குத் தேவையா என்ன..?”

“இல்லேடா. ப்ரப்போஸ் பண்றதே கொஞ்சம் வித்தியாசமா பண்ணனும்னு தோணுச்சு. அதான். இதெல்லாம் கஷ்டமில்லேடா”

பேச்சில் சலிப்பிருந்தாலும் கண்களின் மின்னல். திரும்பிப்பார்த்தான் கணேஷ். அருணின் தேவதை.

‘உண்மையிலே இவனுக்கு ஏத்தப் பெண் தான். ஆனா அந்தப் பொண்ணுக்கிட்ட போய் பேசாம பைத்தியக்காரத்தனமா ஹிந்தி கத்துக்கிட்டு இருக்கானே. இவனுக்கு எதுக்கு வேண்டாத வேலை’. மனதுக்குள் புலம்பினாலும் அமைதியாக இருந்தான்.

“ஹே.. மச்சான். எப்படி கரெக்டா வரா பாத்தியா? ஒரு வேளை நாம வர்றது தெரிஞ்சே வர்றாளோ?” ஆவலில் அருண்.

“நெனப்பு தான் பொழப்ப கெடுக்கும்னு சும்மாவா சொன்னாங்க. அங்க பாரு அந்த ஆண்ட்டி கூட தான் தினமும் பதினோரு மணிக்கு காஃபி குடிக்க வருது. அதுக்காக உன் மேல ஒரு இது இருக்குனு ஆயிடுமா…?” நக்கலுடன் கணேஷ்

“ஏன் நீயும் தான் வர்ற. ஒரு வேளை உன்னை பாக்க வந்திருந்தா. நீ வேற ஒரு மாதிரி..”

“டேய்….” முறைத்தான் கணேஷ்.

கணேஷுக்கு ஒரு பிரச்சனை. ஜெனிஃபர் அனிஸ்டன் பார்த்தாலாவது பரவாயில்லை. கொஞ்ச காலமாய் அவன் நல்லாயிருக்கு என்று சொன்ன பெண்கள் எல்லோருக்கும் ஏற்கனவே கல்யாணமாகியிருந்தது. எல்லாம் அவன் நேரம். அதனாலேயே அவனும் தனக்கு ஏதோ பெரிய பிரச்சனை இருப்பதாக நினைத்து டாக்டரை பார்க்க இருந்தான். அந்த நேரத்தில் இப்படி சொன்னால் கோபம் வராதா என்ன?

இதற்கிடையில் காஃபி எடுத்தக் கையுடன் அருணின் தேவதை அவனுக்கு இரு நாற்காலிகள் தள்ளி உட்கார்ந்தாள். ஏ.சியிலும் இவனுக்குள் வியர்வை. மனசுக்குள் படபடப்பு. தப்பாய் ஏதாச்சும் நினைத்துக் கொள்வாளோ என பயந்தான். ‘எத்தனையோ பெண்களை பார்த்திருக்கிறேன். இதுவரை இப்படி ஆனதில்லை’ என வியந்தான்.

அந்தப் பெண்ணும் அவள் தோழியும் ஏதோ பேசிக்கொண்டிருந்தார்கள். கேட்க முயன்றான். ம்ஹூம். கேட்கவில்லை. ஏதோ ரகசியம் போலும். இனியும் இருந்தால் நெஞ்சில் பறக்கும் பட்டாம்பூச்சிகளின் வேகம் அதிகரித்து மாரடைப்பு வந்தாலும் வந்துவிடுமென்று கிளம்பிவிட்டான்.

“மச்சான் ஏன் டா அதுக்குள்ள கிளம்பற.. இருந்துட்டு போலாமே?” இது கணேஷ்.

“டே.. வாடா. இருக்க முடியல. ஒரே டென்சனா இருக்கு. அந்த பொண்ணு ஏதாச்சும் தப்பா நினைச்சுகிட்டா . ஏதோ நாம அது பின்னாடி அலையறோம்னு?”

“வாடா…வா.. நாமளா.. மகனே. அது நீ மட்டும் தான் டா. ஏதேது போற போக்குல அடி வாங்கினாலும் மாட்டிவிட்டுவ போலருக்கே.. உன் சங்காத்தமே வேண்டாம்ப்பா.”

“டேய் டேய் என்னடா. நண்பனுக்காக இதைக்கூட செய்ய மாட்டியா என்ன? சரி வா போலாம்”

வழக்கம் போல தமிழில் பேசிவிட்டுகிளம்பினார்கள். சென்றமர்ந்த ஐந்து நிமிடத்திலேயே அருண் கூப்பிட்டான்.

“டேய் கணேஷ். லைப்ரரி போகணும். வர்றியா..?”

“என்னடா..”

“மேட்லாப் பத்தி புக் எடுக்கணும். அதான். வர்றியா..?”

“ம்ம்.. சரி போகலாம்.”

ஆறாம் மாடிக்கு இறங்கி வந்தார்கள். திக்கென்றிருந்தது. அவளும் அவள் தோழியும்.

‘இவங்க இப்போ தான் கிளம்பறாங்களா…சுத்தம்’ அருண் மனசு தன்னைத் தானே திட்டிக் கொண்டது. அவர்களும் அமைதியாக இருந்தார்கள். நால்வரும் ஒரே லிஃப்ட்டில் ஏறிக்கொண்டதும் லிஃப்ட் இறங்க ஆரம்பித்தது. அப்படியொரு மயான அமைதி. யாரும் பேசவில்லை. கணேஷ் சிரிப்பை அடக்க முகம் திருப்பிக் கொண்டான். அருணுக்கோ மறுபடி பயம். அந்த முப்பது விநாடிகளும் முப்பது வருஷங்களாய்த் தோன்றியது. தரைதளத்திற்கு வந்ததும் தான் ‘அப்பாடா’ என்றிருந்தது. வேகவேகமாக வெளியே வந்தான். பின்னாடியே கணேஷ்.

“மச்சான். எப்படிடா கரெக்டா வருவாங்கன்னு தெரிஞ்சு தான் கூப்பிட்டியா..?”

“வாய மூடிட்டு வாடா…”

“அதெப்படி உள்ள அவங்களும் பேசல. அப்போ அவங்களும் உன்னை கவனிக்க ஆரம்பிச்சாச்சா.. நடத்து மகனே. நடத்து”

“வந்துத் தொலைடா..”

குற்றமுள்ள நெஞ்சு போல குறுகுறுத்தாலும் கணேஷ் சொன்னது அருணுக்கு இனிக்கத் தான் செய்தது. ‘ஒரு வேளை அந்தப் பொண்ணும் பாக்கறாளோ?’

“என்னமோ போ அவனவனுக்கு நான் லிப் சிங்க் பாத்திருக்கேன். உனக்குத் தான் டா லிஃப்ட் சிங்க் ஆகுது. நடத்து ராஜா.. நடத்து”

“ஹ்ம்ம்..”

என்னமோ தெரியல. நடப்பதெல்லாம் நல்லதுக்கா இல்லை கெட்டதுக்கா என்று புரியாத மனநிலையில் இருந்தான் அருண். ‘எது நடந்தாலும் நடக்கட்டும். எல்லாம் விதி’

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக இந்தத் திருவிளையாடல் தொடர்ந்தது. ஷ்ரதா என்ற பேரை சாட் மெசெஞ்சரில் தேடி “Away” ஸ்டேடஸ் பார்த்து வரும் நேரம் போய் உட்கார்ந்து பெருமூச்சு விட்டு கிளம்பி வருவது, பார்ப்பவரிடமெல்லாம் புலம்புவது, தவறாமல் ஹிந்தி ட்யூசன் போவது – இவை தான் அருணின் அன்றாட செயல்களாயின. ஒருவாறாக இரண்டு வாரம் கழிந்திருந்தது.

அன்று வெள்ளிக் கிழமை. எதிர்பாராதவிதமாக யாரோ செய்த சிபாரிசினால் ஏதோ விருது கிடைத்திருக்கிறது என்று மனிதவள மேலாளர் சொன்னதுக்கேற்ப புகைப்படம் எடுப்பதற்காக அன்று ஃபுல் ஃபார்மல்ஸில் கிளம்பிக் கொண்டிருந்தான் அருண்.

தன் வண்டியை கிளப்பும் போது அவன் அறிந்திருக்கவில்லை அந்த நாள் அவன் வாழ்க்கையில் மிக முக்கியமான நாளாகப் போகிறதென்று.

samuthraselvam
22-04-2009, 08:57 AM
ஆஹா... கதை விறுவிறுப்பா போகுது.... முடிவு? சீக்கிரமா அடுத்த பாகத்தையும் போடுங்க அறிவு....!!??:lachen001:

மதி
22-04-2009, 09:01 AM
அக்கா கொஞ்சம் பொறுங்க. முடிவெல்லாம் நேத்தே எழுதியாச்சி... நாளைக்கு எங்கூர்ல லீவ். தேர்தலாம். நாளைக்கே பதியறேன். :)

உண்மைய சொல்லணும்னா.. உருப்படியா தொடர்கதைன்னு ஆரம்பிச்சு... ஒருவழியா முடிச்ச கதை இதான்.... ஹீஹி..

அமரன்
22-04-2009, 09:31 AM
மதி..
கதை நல்லா இருக்கு. உங்களைச் சுத்தி நடப்பவற்றை ஆங்காங்கே தெளித்திருப்பது கதையுடனான அந்நியத்தை அகற்றி அன்னியோன்யத்தைத் தருகிறது. சும்மா ஒரு காதல் வரிசைகள் அதிகமாக இருக்கும் காலத்தில் காதல்னா சும்மாவா கவர்கிறது.

முதல் பாகத்தில் அருண் லிஃப்டில் ஏறும் போது டைட்டானிக் பாடல் ஒலிப்பதும், அருணுக்கு மூச்சுத் திணறுவதும் அடுத்த பாகங்களைப் படிக்கும் போது ஞாபகத்துக்கு வந்து முடிவை ஊகிக்க வைக்கிறது.

அதிலும் அடித்த அருண், அடிவாங்கிய கணேஷ், பார்த்து முகம் சுழித்த வெள்ளாடைத் தேவதை (பாரதிராஜா படம் விருப்பமோ) என மூன்று புள்ளிகளின் நடுவில் எரியும் நெருப்பாக காதலும், முடிவு (தா)ஆக்கமும் இருக்குமோ.

எதிர்பார்ப்புகளை உடைத்துஉணர்வுகளை உசுப்பி விடக்கூடிய முடிவுகளில் படைப்புகளின் வெற்றி தங்கி உள்ளது. அப்படி ஏதாவது நிகழ்ந்தால் (நிகழும் என்கிறானே ஹரிஸ்) நானும் நிமிர்வேன்.

அன்புரசிகன்
22-04-2009, 09:51 AM
இதுவரையானதை ஒரே மூச்சில் பதிந்தேன். எனக்கு என்னமோ அந்த ”ஷ்ரதா” தான் அந்த பெண்ணோ என்று நினைக்க தோன்றுகிறது... s - h - a??? :D

மீதியை படிக்கும் ஆவலில்..................

மதி
22-04-2009, 09:59 AM
அமரன் மற்றும் அன்பு... உங்கள் மேலான பின்னூட்டங்களுக்கு மிக்க நன்றி...
எனக்கு ஏனோ முடிவு தெரிந்துவிட்டதால் ஏனோ அவ்வளவு சுவாரஸ்யமில்லை.. :):)

அமரண்ணே.. உங்க முடிவு என்னவென்று சொன்னால் அதற்குத் தகுந்தவாறு முடிவு மாற்றி இறுதிப்பாகம் போட்டுடுவேன்..ஹிஹி

மதி
23-04-2009, 05:07 AM
“அட்ரா… அட்ரா.. அட்ரா…”

கத்தினான் கணேஷ். அன்று கணேஷும் ஹரீஷும் அந்த கேம்பஸுக்கு வந்திருந்தனர். டிப்டாப்பாய் வந்திருந்த அருணைப் பார்த்து தான் கணேஷ் கத்தினான்.

“மச்சான். கலக்கலா இருக்கடா. ஏன் நீ வாரத்துக்கு ரெண்டு நாளாவது ஃபார்மல்ஸ்ல வரக்கூடாது. சும்மா சொல்லக்கூடாது. நல்லாவே இருக்க”

“தாங்க்ஸ் டா மச்சான். இவனுங்க இதுல தான் வரணும்னு மெயில் பண்ணிட்டாங்க. நல்ல நாள்லேயே நான் ஃபார்மல்ஸில வர்றதில்ல. வெள்ளிக்கிழமை அதுவுமா.. எல்லாம் ஒரு மாதிரி பாத்தாங்கடா.”

வெட்கப்பட்டு சலிப்புற்றான் அருண்.

“இன்னிக்கு மட்டும் அந்தப் பொண்ணு உன்னைப்பார்க்கட்டும். அவ்ளோ தான். நீ ஹிந்தி கத்துக்க வேண்டிய கவலையே இல்லே. அவளே வந்து ப்ரப்போஸ் பண்ணினாலும் ஆச்சர்யப்படுறதுக்கு இல்லே”

“அப்படியா சொல்ற..” வழிந்தான் அருண்.

“சரி சரி..வாங்க சாப்ட போலாம். பசிக்குது. அங்க போய் பேசலாம்”

எல்லோரையும் தள்ளிக் கொண்டு காஃபிடேரியா போனான் ஹரீஷ். நுழைந்து ஆளுக்கொரு தோசை வாங்கி அமர்ந்த பத்தாவது நிமிஷத்தில் தேவதை ஆஜர். இன்று அந்தியில் தெரியும் வான நிறத்தில் தங்கப்பதுமையாய் காட்சி அளித்தாள். பிரகாசமான முகத்தில், அழகான மீன் போன்ற கண்கள். பார்த்துக்கொண்டே இருந்தான் அருண். வழக்கம் போல் அவளுடன் தோழி.

“டேய் போதும். எவ்ளோ நாள் தான் இப்படியே பார்த்துட்டு இருப்பே. சரி. இப்போ ஹிந்தில்லாம் எந்த லெவல்ல இருக்கு”

“செமயா போகுதுடா. பேச வருது. இப்போ பாரேன். ஆம், அனார், இலாயச்சி, மா, பிதா, பாப், தேரே, மேரே, ப்யார், மொஹபத், இஷ்க், ஷாதி… எப்படி என் ஹிந்தி..?”

“சூப்பர்டா.. போற போக்க பாத்தா நாளைக்கே கவிதையெல்லாம் எழுதுவே போலிருக்கே.” நக்கலடித்தான் கணேஷ்.

“நீங்க வேற. இவராவது ஹிந்தியில கவிதை எழுதறதாவது. ஆமா. நீங்க எப்படி ப்ரப்போஸ் பண்ணனும்னு தெரிஞ்சுக்கிட்டீங்களா?” – இது ஹரீஷ்.

“ஓ.. அது தான் டா முதல்ல கத்துக்கிட்டேன். I love you க்கு ஹிந்தியில மேம் தும்ஸே ப்யார் கர்த்தா ஹூம்”

“சூப்ப்பர். கலக்கிட்ட போ. ஆமா என்னிக்கு ப்ரப்போஸ் பண்ணப்போற”

“அதான் டா தெரியல. பயம்ம்ம்ம்மா இருக்கு. எப்படி பண்றதுனு?”

“தூ… மானம் கெட்டவனே. என்னைப்பாரு எனக்கு அவ்ளோ தைரியமில்லேன்னு தானே எந்தப் பொண்ணையும் பார்க்காம இருக்கேன்”

இதற்கிடையில் அவளும் இட்லி வாங்கிக் கொண்டு இவர்கள் அமர்ந்திருந்த இடத்திற்கு இரண்டு பெஞ்ச் தள்ளி அமர்ந்தாள். தோழியும் பக்கத்தில் அமர்ந்தாள். கவனித்துக் கொண்டே சாப்பிட்ட அருண் சட்டென துணுக்குற்றான்.

‘யார்டா இவன்…’

‘என்றைக்கும் இல்லாத அதிசயமாய். புதிதாய் எவனோ அவள் பக்கத்தில் வந்தமர்வது.’ யாரோ ஒருவன் அழகாய் செக்கசெவேலென்றிருந்தான். தேவதையின் முன் அமர்ந்து சிரிக்க சிரிக்க பேசிக்கொண்டிருந்தான்.

‘இதுவரை இவனைப் பார்த்ததில்லை. ஒரு வேளை ஒரே காலேஜாய் இருக்குமோ?’

மனம் பல்லாயிரம் கணக்குகளில் ஈடுபட இதைக் கவனித்துவிட்ட கணேஷும் ஹரீஷும் இவன் பக்கம் திரும்பினார்கள். ஒரு மாதிரியாக முகத்தை வைத்துக் கொண்டு கணேஷ்

“யார்ரா இவன். இப்படி பேசறான். தெரிஞ்சவனா இல்ல லவ்வரா? மச்சான் காத்திருந்து காத்திருந்து கவுந்திட்டேயேடா..”

“அட.. ஆமாங்க. பாத்தா லவ்வர் மாதிரி தான் தெரியுது. கடைசியில உங்க கதை இப்படி சோகத்திலேயா முடியணும்.”

எரிகிற தீயில் நெய்யை ஊற்றினான் ஹரீஷ்.

“டேய்.. கொஞ்சம் சும்மா இருங்கடா. நானே டென்ஷன்ல இருக்கேன். நீங்க வேற எரிச்சல கிளப்பிக்கிட்டு…” பதட்டமாய் தான் இருந்தான் அருண். ‘எல்லாம் நல்லபடியா போய்கிட்டு இருக்குன்னு நெனைக்கிறப்போ வில்லன் வேற வந்துட்டானே. ஏன் எனக்கு மட்டும் இப்படி நடக்குது.’ தன் விதியை தானே நொந்துக் கொண்டான்.
முகத்தில் சோகம் அப்பட்டமாய் அப்பிக் கொள்ள காண சகிக்காத முகத்துடன் இருந்த அருணை கணேஷும் ஹரீஷும் தேற்றலானார்கள்.

“மச்சான். விடுடா. போனா போகுது. இவ இல்லேன்னா இன்னொரு பொண்ணு. உனக்கு என்ன ஆளா கிடைக்காது.” வருத்தத்துடன் கணேஷ்.

“ஆமாங்க. விட்டுத் தள்ளுங்க. அவங்களுக்கு கொடுத்து வச்சது அவ்ளோ தான். ஸோ.. உங்க காதல் சோகத்துல முடிஞ்சதுனால இன்னிக்கு அத கொண்டாடறோம். ட்ரீட் உண்டு தானே.”

நேரம் காலம் தெரியாமல் விளையாடினான் ஹரீஷ்.

“ச்சும்மா இருடா. அவனே நொந்து போயிருக்கான். சரி. சீக்கிரம் சாப்பிட்டுட்டு கிளம்பற வழியப்பாரு” அவன் மூடை மாற்றும் முயற்சியில் கணேஷ். அரை மனதாய் சாப்பிட்டுவிட்டு இடத்திற்கு போய் மெயில் செக் பண்ணிவிட்டு கிளம்பினான் அருண்.

இறங்கும் வழியில் தான் கவனித்தான் அவளுடன் பேசிக் கொண்டிருந்த பையன் இன்னொரு பெண்ணிடம் சிரித்து சிரித்து பேசிக் கொண்டிருப்பதை. ‘அடச்சே.. இதுக்காகவா இவ்ளோ டென்சன் ஆனேன். அவன் ஃப்ரண்டா இருப்பான் போல.’ தன்னைத் தானே நொந்துக் கொண்டு ஆறாம் மாடிக்குச் சென்றான்.

விதி வலியது. மறுபடியும் லிஃப்ட் சிங்க். ஷ்ரதாவும் அவள் தோழியும். தோழி இப்போது குறுகுறுப்புடன் நக்கலாய் சிரித்தாள். அவமானமாய் இருந்தது அருணுக்கு. இது மாதிரியெல்லாம் அவன் வாழ்க்கையில் நடந்ததில்லை. என்ன நடந்தாலும் நடக்கட்டுமென்று லிஃப்டில் ஏறிவிட்டான். லிஃப்ட் இறங்கத் தொடங்கியது. அதுவரை தலையைத் தாழ்த்தியிருந்த அருண் என்ன ஆனாலும் பரவாயில்லையென்று மெல்ல தலையை தூக்கினான். அவள் பாதங்களைப் பார்த்துக் கொண்டிருந்த அவன் கண்கள் மெல்ல மேலேறி செல்கையில் அவள் அணிந்திருந்த பேட்ச் தட்டுப்பட்டது. இதுநாள் வரை பார்க்க இயலாமல் இருந்த அவள் அடையாள அட்டை அது. பார்த்ததும் ஆயிரம் வாட்ஸ் அதிர்ச்சிக்குள்ளானான் அருண். ‘எப்படி இது சாத்தியம்?’
விஞ்ஞானிகளை விடவும் அவன் மூளை குழம்பியது.

ஆம். அங்கு அவன் பார்த்த பெயர் ஷ்ரதா இல்லை. ஷ்ரேயா. Shreya, ஷ்ரேயா ஜெயராமன்.

‘என்னாது… ஜெயராமனா..?? தமிழ் பொண்ணா…????’ லிஃப்டுக்குள் அவன் உலகமே சுழன்ற மாதிரி இருந்தது. ‘இவ்ளோ நாளும் ஹிந்திப் பொண்ணுன்னு நெனச்சிட்டு இருந்தது தமிழ் பொண்ணா?’ நம்பவே முடியவில்லை அவனால். ‘வாழ்க்கையில் இப்படியா அனர்த்தங்கள் நடக்கும். எதையுமே விசாரிக்காமல் எல்லாத்தையும் அனுமானித்து நாமே முடிவு பண்ணினா எல்லாம் தலைகீழா இருக்குதே’. சத்தியமாய் அவனுக்குப் புரியவில்லை. எப்படி தப்பாச்சு?

நிமிர்ந்து அவள் முகம் பார்த்தான். அவளோ தரையைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

வெளியே வந்ததும் முதல் வேலையாய் கணேஷுக்கு போன் பண்ணினான். “மச்சான்.. தப்பு நடந்து போச்சுடா. அவ பேரே வேற. நாம தான் அவ ஹிந்திப் பொண்ணுன்னு நெனச்சுட்டு இருக்கோம். ஆனா உண்மையிலேயே அவ தமிழ் பொண்ணு போல”

“என்னடா உளர்ற.. தெளிவா சொல்லு.”

“ஆமாடா. அவ பேர் ஷ்ரேயா ஜெயராமன். எஸ்-ல ஆரம்பிச்சு எ-ல முடியும்னு மட்டும் பாத்துட்டு தப்பா நெனச்சோம்டா.”

“அடப்பாவமே. ஆனா அதெப்படிடா ஷ்ரதா awayல இருக்கும் போது இவ காஃபிட்டேரியா வந்தா.”

“அதாண்டா எனக்கும் புரியல. கொஞ்ச நேரம் இரு. வந்துடறேன்”

வேலையை அவசர அவசரமாக முடித்துவிட்டு இடத்திற்கு ஓடினான். ஆச்சர்ய முகங்களோடு கணேஷும் ஹரீஷும்.

“என்னங்க சான்ஸே இல்லாத மேட்டர்ல்லாம் நடக்குது. அந்த பொண்ணு பேர் ஷ்ரதா தாங்க..” ஹரீஷ் தெளிவாய் சொன்னான்.

“இல்லேடா. நான் பாத்தேன். இரு ஒரு நிமிஷத்துல கண்டுபிடிச்சுடலாம்”

மறுபடியும் வலைதளத்தினுள் நுழைந்தார்கள். ஷ்ரேயா பேரை கொடுத்தவுடன் தெளிவாய் சொல்லியது ட்ரெயினி என்று. ஆயினும் ப்ராஜக்ட் ட்ரெயினியாதலால் எல்லா விவரங்களும் ஏற்றப்பட்டிருக்கவில்லை.

ஷ்ரதா பேரை கொடுத்தவுடன் விவரங்கள் வந்தது. கணேஷ் முகம் பிரகாசமாகியது.

“ஹே.. மச்சான். கண்டுபுடிச்சிட்டேன் டா. ஷ்ரேயா தான் உன் ஆளு பேரு. ஷ்ரதா அவ ஃப்ரண்டு. ரெண்டு பேரும் எப்பவும் சேர்ந்தே வர்றதால அந்தப் பொண்ணு ஸ்டேடஸ் மெசேஜ பாத்துட்டு இந்தப் பொண்ண ட்ராக் பண்ணிருக்கோம். ரொம்ப சிம்பிள்…”

பிளந்த வாயை மூடவில்லை அருண். ‘அடச்சே. இப்படி மோசம் போயிட்டோமே..’

“கணேஷ். ஒரு நிமிஷம். எனக்குத் தெரிஞ்ச ஹெச் ஆர்கிட்ட கேட்டுடலாம்.”

அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் அனைத்து விவரங்களும் வந்திருந்தது. பெயர்: ஷ்ரேயா ஜெயராமன். ஊர்: ஸ்ரீரங்கம். தெரிந்த மொழிகள்: ஆங்கிலம், தமிழ். படிப்பது: பொறியியல்.

“சுத்தம்டா.. இந்த மேட்டர்காக இம்புட்டு தூரம் அலைஞ்சோம்..” கணேஷ். எதுவுமே பேசாமல் இருந்த அருணின் முகவாட்டத்தைக் கண்டு

“என்னடா என்னாச்சு..?”

“ஒன்னுமில்லேடா. இன்னிக்கு அநியாயத்துக்கு நடக்குது. மொதல்ல அந்த பையன வச்சு சந்தேகப்பட்டோம்…”

“ஆமால்ல.. அவளுக்கு ஏற்கனவே ஆளிருக்குல.. இதுல அத மறந்துட்டேன் பாரு..”

“இல்லேடா. அவன் அவ ஆளில்ல. அவன் எல்லா பொண்ணுக்கிட்டேயும் இதே மாதிரி தான் சிரிச்சு சிரிச்சு பேசிட்டு இருக்கான். பிரச்சனையே வேற..”

“இனி என்னடா பிரச்சனை..?”

“இல்லேடா… எல்லாம் என் தப்பு தான். ஒரு பொண்ண பாத்தோமா போனோமான்னு இல்லாம அவளைப் பாத்ததும் ரொம்ப புடிச்சுப் போய் தப்புத் தப்பா பேர் பாத்து, தப்புத் தப்பா ஹிந்தி பொண்ணுன்னு நெனச்சு, அதுக்காக காலர் ட்யூன் மாத்தினது, ஹிந்தி ட்யூசன் போனது, அது இதுனு ஏக களேபரம் பண்ணினது, கடைசியில அவ தமிழ் பொண்ணுன்னு தெரிஞ்சப்போ என்னமோ தெரியல மனசு ஒருமாதிரியா இருக்கு. நாம வேற அவளுக்குத் தமிழ் தெரியாதுன்னு அவ முன்னாடியே கன்னாபின்னானு பேசியிருக்கோம். என்ன பேசினோம்னே தெரியல. எந்த முகத்த வச்சுக்கிட்டி அவகிட்ட போய் பேசறது. எல்லாத்தையும் விட இந்த ஹிந்தி மேட்டர் தான் ரொம்பவே உறுத்துது. இப்படியா போய் அசிங்கப்படறது. வேண்டாம் டா. இப்ப தான் கொஞ்சம் தெளிஞ்ச மாதிரி இருக்கு. என்னவோ இவ்ளோ நாள் பைத்தியம் புடிச்சு இருந்த மாதிரி ஒரு ஃபீல். இனி அந்தப் பொண்ணுக்கிட்டேர்ந்து ஒதுங்கி இருக்கலாம்னு இருக்கேன் டா. வீட்ல அம்மா அப்பா ரொம்ப சந்தோஷப்படுவாங்க. அவங்க பாக்கற பொண்ணையே கல்யாணம் பண்ணிக்கறேன்”

“என்னடா சொல்ற… இவ்ளோ தூரம் நாய் பேயா அலைஞ்சு.. இப்போ வேணாங்கற.. என்னாச்சு உனக்கு”

“ஆமாண்டா… சில விஷயங்கள் சீச்சி இந்தப் பழம் புளிக்கும் மாதிரி ஆயிடுது. இவ்ளோ நாள் எனக்கு இந்தக் காதல்னா எப்படி இருக்கும்னே தெரியாம இருந்தது. இப்பவும் இருக்கு ஒரு போதை மாதிரி. ஒரு சின்ன தயக்கம். பிரமிப்பு. இப்படிப்பட்ட பொண்ணான்னு ஆச்சர்யம். எல்லாமே இருக்கு. ஆனா எனக்கு இந்த ஃபீலே போதும்டா. நெனச்சுப்பாத்தா பொறுக்கி மாதிரி அந்தப் பொண்ணு பின்னாடி சுத்துனோமான்னு வெட்கமாயிருக்கு. விடுங்கடா..”

சவக்கலை தாண்டவமாட அந்த இடத்திலிருந்து நகர்ந்தான் அருண். பெரிய பிரசங்கத்தை கேட்ட மாதிரி கணேஷும் ஹரீஷும் சிலையாகி நின்றனர்.

மாலை 4 மணி

அருணின் மேஜையிலிருந்த தொலைப்பேசி அடித்தது.

“ஹலோ.. அருண் ஹியர்.!”

மறுமுனை ஆங்கிலத்தில் பேசியது.

“ஹலோ. நான் ஷ்ரேயா ஜெயராமன். இங்க ப்ராஜக்ட் ட்ரெயினியா இருக்கேன். என் ப்ராஜக்ட் சம்பந்தமா உங்ககிட்ட டிஸ்கஸ் பண்ண சொல்லி இங்க இருக்கற மேனேஜர் சொன்னாங்க. உங்க மெயில் ஐடி சொன்னீங்கன்னா டீடெயில்ஸ் அனுப்பறேன். பை த வே நீங்க கொஞ்சம் ஃப்ரீயா இருந்தீங்கன்னா ஏதாச்சும் கான்ஃப்ரன்ஸ் ரூம்ல சந்திக்கலாமா….”

அவள் பேசிக்கொண்டே போக இன்ப அதிர்ச்சியில் சிலையாகிக் கொண்டிருந்தான் அருண். சற்று நேரத்தில் அவனை காஃபிக்கு கூப்பிட கணேஷும் ஹரீஷும் வந்த போது அவன் அங்கிருக்கவில்லை.

பின்ன… "காதல்ன்னா சும்மாவா…?"

மதி
23-04-2009, 05:08 AM
பி.கு : இந்தக் கதையில் வந்த பெயர்களும் சம்பவங்களும் கற்பனையே. யாரையும் எதையும் குறிப்பிடுவன அல்ல. :)

சிவா.ஜி
23-04-2009, 05:32 AM
அசத்தல்....விரிவான பின்னூட்டம் பிறகு....

அன்புரசிகன்
23-04-2009, 05:32 AM
அவள் பேசிக்கொண்டே போக இன்ப அதிர்ச்சியில் சிலையாகிக் கொண்டிருந்தான் அருண். சற்று நேரத்தில் அவனை காஃபிக்கு கூப்பிட கணேஷும் ஹரீஷும் வந்த போது அவன் அங்கிருக்கவில்லை.

பின்ன… "காதல்ன்னா சும்மாவா…?"

அடப்பாவி.... லெக்ச்சர் எல்லாம் அடிச்சிட்டு கடைசியில கவுந்துட்டானா???

அது சரி அவன் மட்டும் விதிவிலக்கா என்ன???
காதல் என்றாலே இப்படித்தானா???


பி.கு : இந்தக் கதையில் வந்த பெயர்களும் சம்பவங்களும் கற்பனையே. யாரையும் எதையும் குறிப்பிடுவன அல்ல. :)

நான் நம்பீட்டன்...

மதி
23-04-2009, 05:41 AM
நன்றீ..... சிவாண்ணா மற்றும் அன்பு.

கதை முடிவு இப்படி தான் இருக்கணும்னு.. ஆளாளுக்கு ஒன்னு சொல்ல... வெறும் லெக்சரோட முடிச்சா சப்புன்னு இருக்கும்னு நெனச்சு.. இறுதியா சேர்த்தது அது.

எல்லா கதையும் நல்லவிதமா முடியணும்னு ஒரு நல்ல எண்ணம் தான். நீ நம்புனாலும் நம்பாட்டியும் உண்மைய தானே சொல்ல முடியும். அருண் நட்பைத் தொடர பிகு குடுக்க வேண்டியதா போச்சு.

அன்புரசிகன்
23-04-2009, 05:43 AM
அதுசரி.. உங்க பெயர் கதையில் வரலயா இல்ல நீங்க தான் ஹரீஷ்ஷா????

மதி
23-04-2009, 05:47 AM
நான் இந்த கதையில இல்லவே இல்ல. எல்லாம் அருண் சொல்லி கேட்டது. உண்மை சம்பவம் சில தவிர்த்து மத்ததெல்லாம் என் பில்டப்பு..:D:D:D:D:D:icon_ush::icon_ush::icon_ush::icon_ush::icon_b:

தாமரை
23-04-2009, 06:22 AM
நான் இந்த கதையில இல்லவே இல்ல. எல்லாம் அருண் சொல்லி கேட்டது. உண்மை சம்பவம் சில தவிர்த்து மத்ததெல்லாம் என் பில்டப்பு..:D:D:D:D:D:icon_ush::icon_ush::icon_ush::icon_ush::icon_b:

உன்னை இழந்த பின்னால்தானே இந்தக் கதையே ஆரம்பம்.. அப்புறம் நீ எப்படி இதில் இருக்க முடியும்?

மதி
23-04-2009, 06:34 AM
உன்னை இழந்த பின்னால்தானே இந்தக் கதையே ஆரம்பம்.. அப்புறம் நீ எப்படி இதில் இருக்க முடியும்?
சத்தியமா புரியல... தன்னை இழந்த பின் தான் காதல்னு சொல்றீங்களா...:D:D:D

பூமகள்
23-04-2009, 06:54 AM
நான் இந்த கதையில இல்லவே இல்ல. எல்லாம் அருண் சொல்லி கேட்டது. உண்மை சம்பவம் சில தவிர்த்து மத்ததெல்லாம் என் பில்டப்பு..:D:D:D:D:D:icon_ush::icon_ush::icon_ush::icon_ush::icon_b:
அப்படியா...?? நிஜமாவா?? :lachen001::lachen001:

அன்பு அண்ணா..

அருண் என்ற கதா நாயகரே இவர் தான்.. அதப் புரிஞ்சிக்காம ஹரீஷான்னு கேக்கறீங்களே...??!! :rolleyes::icon_b:

மதி..

எல்லாப் பாகமும் வந்த பின் விமர்சிப்போம்னு இருந்துட்டேன்..

சும்மா சொல்லக் கூடாது.. சும்மா வளைச்சி வளைச்சி மொக்கை கதை எழுதினாலும்... இண்டரஸ்டிங்காவே இருக்கு.... என்ன... கொஞ்சம் கதா நாயகி பார்த்து பொறாமையா இருந்துச்சு... :rolleyes: பின்னே... அந்த பொண்ணை உலக மகா அழகியா சித்தரிச்சா மத்த பொண்ணுக காதுல புகை வராம இருக்குமா என்ன... :aetsch013::wuerg019:

எப்படியோ காதல்.. கல்யாணத்துல முடிஞ்சி நல்லபடியா செட்டில் ஆனா சரி தான்...

ஆல் தி பெஸ்ட் மதி(அருண்)..!! :cool:

அன்புரசிகன்
23-04-2009, 06:58 AM
அன்பு அண்ணா..

அருண் என்ற கதா நாயகரே இவர் தான்.. அதப் புரிஞ்சிக்காம ஹரீஷான்னு கேக்கறீங்களே...??!! :rolleyes::icon_b:

ஒரு பொண்ணு மதிக்கு போன் பண்ணியிருக்க வாய்ப்பே இல்லை...........:)

தாமரை
23-04-2009, 07:01 AM
இதுல பார்ட் டூ எழுதறத்துக்கு சூப்பர் ஸ்கோப் இருக்கு...

பரவாயில்ல பரவாயில்லை..

அடுத்த கதை சீக்கிரமா எழுதுங்க.. நானே தலைப்பு தர்ரேன்

"நம்பிக்கை இருக்கு மச்சான்"

மதி
23-04-2009, 07:17 AM
ஒரு பொண்ணு மதிக்கு போன் பண்ணியிருக்க வாய்ப்பே இல்லை...........:)
அப்படியிருக்க அருண் எப்படி மதியாவான்...??
இந்த பூமகளுக்கு ஒன்னுமே தெரியல..

மதி
23-04-2009, 07:19 AM
எப்படியோ காதல்.. கல்யாணத்துல முடிஞ்சி நல்லபடியா செட்டில் ஆனா சரி தான்... :cool:
இந்த கதையில அதெல்லாம் நடக்க வாய்ப்பே இல்லே..
:D:D:D

மதி
23-04-2009, 07:20 AM
இதுல பார்ட் டூ எழுதறத்துக்கு சூப்பர் ஸ்கோப் இருக்கு...

பரவாயில்ல பரவாயில்லை..

அடுத்த கதை சீக்கிரமா எழுதுங்க.. நானே தலைப்பு தர்ரேன்

"நம்பிக்கை இருக்கு மச்சான்"
இந்த தலைப்பு நான் சொன்னது... :eek::eek::eek:

பார்ட் டூ எழுதலாம். ஆனா.. நம்பிக்கை இருக்கு மச்சான் வேற கதைல..

மதி
23-04-2009, 07:22 AM
மதி..

என்ன... கொஞ்சம் கதா நாயகி பார்த்து பொறாமையா இருந்துச்சு... :rolleyes: பின்னே... அந்த பொண்ணை உலக மகா அழகியா சித்தரிச்சா மத்த பொண்ணுக காதுல புகை வராம இருக்குமா என்ன... :aetsch013::wuerg019:
:cool:
அந்தளவுக்கா ஓவரா எழுதிட்டேன்.. அருண் கோச்சிக்காம இருந்தா சரி தான்..

தாமரை
23-04-2009, 07:32 AM
ஒரு பொண்ணு மதிக்கு போன் பண்ணியிருக்க வாய்ப்பே இல்லை...........:)

அன்பு, நீங்க இவ்வளவு அப்பாவியா?:rolleyes::rolleyes::rolleyes:

அமரன்
23-04-2009, 07:48 AM
மதியும் அருணும் ஃபுல் ஃபார்மில இருக்காங்க. :D ஜாதகத்தில் சொல்லாமலே சட்டென்று சலனம் வரலாம். ஆனால் சட்டென்று எப்படி யூ டர்ன் அடிச்சு திரும்பும்னு நினைச்சேன் அருணின் லெக்சரைக் கேட்டப்போ. ஆச்சு..

பாரதி
23-04-2009, 12:34 PM
நல்ல விறுவிறுப்பு!
கடைசியில் முடித்த விதமும் மிக நன்றாக இருந்தது.
வெற்றிகரமாக கதையை ஆரம்பித்து, இதுவரை தொடர்ந்த விதத்திற்கு பாராட்டு.
மீதிக்கதை சுபமாய் தொடரவும் வாழ்த்து மதி!!

மதி
23-04-2009, 02:12 PM
நன்றி அமரன்...
நீங்க மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போட்ட விதம் அருமை.

பாரதிண்ணா...
கதை.. முடிந்தது.. :)

பாரதி
23-04-2009, 04:13 PM
நன்றி அமரன்...
பாரதிண்ணா...
கதை.. முடிந்தது.. :)

மதி, நீங்கள் மன்றத்தில் எழுதிய இந்தக்கதையை சொல்லலை...:)

மதி
24-04-2009, 02:34 AM
மதி, நீங்கள் மன்றத்தில் எழுதிய இந்தக்கதையை சொல்லலை...:)
நானும் இந்தக் கதையை சொல்லல.. :D:D:D

ஆதவா
24-04-2009, 03:29 AM
முழுமூச்சா படிச்சு முடிச்சுட்டேன்... விரிவான பின்னூட்டம் பிறகு!!

samuthraselvam
24-04-2009, 05:45 AM
பி.கு : இந்தக் கதையில் வந்த பெயர்களும் சம்பவங்களும் கற்பனையே. யாரையும் எதையும் குறிப்பிடுவன அல்ல. :)

இப்படி குறிப்பிடறதே ஏதோ குறிப்பிடுதே....?:confused::confused: ஒரு பழமொழி நினைவுக்கு வருகிறது.... எங்கப்பன் ............................. இல்லை!!! :icon_ush::icon_ush:

மதி
24-04-2009, 05:50 AM
இப்படி குறிப்பிடறதே ஏதோ குறிப்பிடுதே....?:confused::confused: ஒரு பழமொழி நினைவுக்கு வருகிறது.... எங்கப்பன் ............................. இல்லை!!! :icon_ush::icon_ush:
அட நீங்க.. வேற குடும்பத்துல குழப்பத்தை உண்டு பண்ணிடுவீங்க போல.. :eek::eek::eek:

பாரதி
24-04-2009, 07:10 AM
மதி, நீங்கள் மன்றத்தில் எழுதிய இந்தக்கதையை சொல்லலை...:)


நானும் இந்தக் கதையை சொல்லல.. :D:D:D

சுபம்.:icon_b:

ஆதவா
24-04-2009, 07:23 AM
முதலில் எவண்டா இந்த தொடர்கதையை விடாம படிச்சு மனசில ஏத்திக்கிறதுன்னு பயந்துட்டுத்தான் வரலை.

----------------

ஐடி கம்பனியில் நடப்பதாக கதைக்களம் இருந்தாலும், ரொம்பவும் டெக்னிகல் வார்த்தைகளை உபயோகப்படுத்தாமல் எது தேவையோ அதை மட்டும் கச்சிதமாக கொடுத்திருக்கிறீர்கள். சமவயது என்பதாலோ என்னவோ முதல் பாகத்தில் இருந்தே ரசிக்கத் தொடங்கிவிட்டேன். அதைவிட, அருண் இடத்தில் "மதி" யை வைத்துப் படிக்க ஆரம்பித்துவிட்டேன்..

சிறப்பான கதை. அது நடந்திருக்கிறதோ நடக்கவில்லையோ அது பிரதானமல்ல. சொல்லப்படும் விதத்தின் லயிப்பு மாறாமல் ஒவ்வொரு பாகமும் அருமையாக எடுத்துச் செல்லப்படுகிறது. பாராட்டுக்கள் மதி.

இப்படி எழுதுவீர்கள் என்று நான் வியக்கவில்லை. ஏனெனில் இப்படி எழுதுவீர்கள் என்பது முன்பே அறிந்ததுதானே!

வாழ்த்துக்கள் மதி!!! (பொண்ணு பேர் ஸ்ரேயாவா??? நல்லா இருக்கு!!!)

மதி
24-04-2009, 09:12 AM
ஆதவன்கிட்டேர்ந்து விமர்சனமா..? நம்பமுடியவில்லை. நிறைய பேர் இப்படி தான் அருண் இடத்தில் மதியை வைத்துப் பார்க்கிறார்கள். அதையே இந்தக் கதையின் வெற்றியாக கருதுகிறேன்.

இறுதியாக அந்தப் பொண்ணு பேர் ஸ்ரெயா இல்லை. ஹிஹி

சிவா.ஜி
24-04-2009, 10:07 AM
நிஜமாவே மனசாரப் பாராட்டுறேன் மதி. முதல் பாராட்டு...சிரத்தையாக, சிரமம் பார்க்காமல் மள மளவென்று எழுதி அழகாய் முடித்ததற்கு.

இரண்டாவது.....அருமையான கதையோட்டத்துக்கு. மிகவும் சரளமாக, சற்றும் போரடிக்காமல், அழகான, அளவான உரையாடல்களுடன் பயணப்பட்டது.

மூன்றாவது....சின்னச் சின்ன நிகழ்வுகளைக்கூட சுவாரசியமாய் சொன்னதற்கு.

இறுதியாக....ஆனால் சிறப்பான பாராட்டு கதையின் எதிர்பாரா முடிவுக்கு. இரண்டு எழுத்தை வைத்துக்கொண்டு...இவளாய்த்தானிருக்குமோ என அருணை மட்டுமல்லாமல் வாசிப்பவர்களையும் நம்பவைத்து, அவளில்லை எனக் காட்டியிருப்பது அருமை. அதிலும் கடைசி வரியில் இளமைக் குறும்பு....சூப்பர்.

மனமார்ந்த பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துகள் மதி.

மதி
24-04-2009, 10:15 AM
அட.. அட.. அட....
போதையேறினா இப்படித் தானிருக்குமோ.. உண்மையிலேயே அப்படி இருக்கிறது. இதுவரை எழுதினாலும் அதிகமாக பின்னூட்டங்களை எதிர்பார்த்ததில்லை. ஏனெனில் என் எழுத்தின் தரத்தைப் பற்றிய என் அபிப்பிராயம்.
மேலும் என்ன தான் எழுதினாலும் மொக்கையா முடியுமோன்னு பயம். :) ஆனால் உங்கள் பாராட்டைப் பார்த்து தான் இப்படியெல்லாம் இருக்குமோ என திரும்பிப் பார்க்கிறேன்.

இது மாதிரியான பாராட்டெல்லாம் என்னை அதிகமாக எழுதச்சொல்லி மேலும் பல மக்களை துன்புறுத்துமோ என்று பயமாக உள்ளது. மிக்க நன்றி சிவாண்ணா..

சிவா.ஜி
24-04-2009, 10:19 AM
இது மாதிரியான பாராட்டெல்லாம் என்னை அதிகமாக எழுதச்சொல்லி மேலும் பல மக்களை துன்புறுத்துமோ என்று பயமாக உள்ளது. மிக்க நன்றி சிவாண்ணா..

துன்பத்தைத் தாங்கிக்க நாங்க ரெடி.....தர நீங்க ரெடியா?:lachen001:

மதி
24-04-2009, 10:30 AM
துன்பத்தைத் தாங்கிக்க நாங்க ரெடி.....தர நீங்க ரெடியா?:lachen001:
ரொம்ப கஷ்டம்.... :rolleyes::rolleyes::rolleyes::rolleyes:

arun
25-04-2009, 06:55 AM
அனைத்து பாகங்களையும் திரும்ப ஒரு முறை முழு மூச்சில் படித்தேன்

கதையை பற்றி சொல்ல வேண்டும் என்றால் மதியையும் அருணையும் மாறி மாறி பார்க்க முடிந்தது!!!!!!!!!! :D

அழகாக கோர்வையாக கதையை ரசிக்கும்படி எதார்த்தமாக கொடுத்துள்ளீர்கள் அதுவே தங்களது கதைக்கு முழு பலம்

தங்களுக்கு எனது பாராட்டுக்கள் ஆனால் பெயர் மேட்டர் தான் கொஞ்சம் இடிக்கிறது

Shrada sinhA
Shreya jayaramaN

மற்றபடி சூப்பர் சூப்பர்

மதி
25-04-2009, 09:09 AM
அனைத்து பாகங்களையும் திரும்ப ஒரு முறை முழு மூச்சில் படித்தேன்

கதையை பற்றி சொல்ல வேண்டும் என்றால் மதியையும் அருணையும் மாறி மாறி பார்க்க முடிந்தது!!!!!!!!!! :D

அழகாக கோர்வையாக கதையை ரசிக்கும்படி எதார்த்தமாக கொடுத்துள்ளீர்கள் அதுவே தங்களது கதைக்கு முழு பலம்

தங்களுக்கு எனது பாராட்டுக்கள் ஆனால் பெயர் மேட்டர் தான் கொஞ்சம் இடிக்கிறது

Shrada sinhA
Shreya jayaramaN

மற்றபடி சூப்பர் சூப்பர்
நன்றி அருண்.... மிக்க நன்றி..

அந்த பேர் மேட்டர் என்னன்னா..?

Shreya
Shrada செகண்ட் நேம் இல்லே..
:D:D:D:D

arun
01-05-2009, 07:20 AM
நன்றி அருண்.... மிக்க நன்றி..

அந்த பேர் மேட்டர் என்னன்னா..?

Shreya
Shrada செகண்ட் நேம் இல்லே..
:D:D:D:D

ஆம் செகன்ட் நேமை மறந்துவிடலாம் :)

ஐரேனிபுரம் பால்ராசய்யா
01-05-2009, 09:08 AM
முழுக்க முழுக்க வர்ணனைகளை வாரி இறைத்து ஆங்காங்கே நையாண்டி செய்து நல்ல கலகலப்பாக எழுதிச்சென்றது படிக்க சுறுசுறுப்பாகவும் விறுவிறுப்பாகவும் இருந்தது.

மதி
01-05-2009, 05:40 PM
மிக்க நன்றி பால்ராசய்யா..

kathiparakumar
06-05-2009, 05:34 AM
அருமை அருமை !!

மதி
06-05-2009, 06:44 AM
நன்றி கத்திப்பாரா குமார். உங்க பேர் நல்லா இருக்கே.. காரணம் அறியலாமோ??