PDA

View Full Version : வீடியோ எடிட்டிங் மென்பொருள் எங்கு கிடைக்கும் ?



balakumar
24-02-2009, 10:53 AM
வீடியோ எடிட்டிங் மென்பொருள் எங்கு கிடைக்கும் ?

praveen
25-02-2009, 06:48 AM
நண்பரே இப்படி ஒருவரியில் கேள்வி கேட்டால், நீங்கள் என்ன கேட்க வருகிறீர்கள் என்று தெரியவில்லை.

பொதுவாக வீடியோ எடிட்டிங் மென்பொருட்கள் சாப்ட்வேர் விற்கும் கடைகளில் கிடைக்கும், ப்ரிவேர் மாதிரி பணம் கொடுக்காமல் வாங்க வேண்டும் என்றால் பிரபலமான இலவச பைல் வழங்கும் தளம் (download.com)சென்று "விடியோ எடிட்டிங் ப்ரிவேர்" என்று இட்டு தேடினால் கிடைக்கும்.

நீங்கள் வன்பொருள் (சி.டி ரைட்டர் அல்லது மதர்போர்டு அல்லது கிராபிக்ஸ் கார்டு) வாங்கினால் அதனுடன் கொடுக்கும் சீடியில் தருவார்கள்.

உங்களுக்காக ஒரு ப்ரிவேர் தந்திருக்கிறேன். அதை பார்த்து பின் உங்கள் கருத்தை சொல்லுங்கள்.

Avidemux என்ற இந்த இலவச மென்பொருள் வீடியோக்களை எளிதில் வெட்ட ஒட்ட நீக்க, வடிவங்கள் மாற்ற பயன்படும். இது கீழே கண்ட அநேக வடிவங்களில் உள்ள வீடியோவுடன் ஒத்திசையும்.
DVD, VOB, AVI, DivX, XviD, WMV, MPG, MP4, AVI, MOV, MKV, DV, FLV.

http://www.videohelp.com/toolsimages/thumb_avidemux_510.jpg (http://www.videohelp.com/toolsimages/avidemux_510.jpg)

ஒரிஜினலாக புரோகிரம் உள்ள தளம்
http://avidemux.sourceforge.net/download.html

Mirror - direct link ரைட் கிளிக் செய்து சேவ் அஸ் என்று கொடுத்தல் போதும்
http://www.videohelp.com/download/avidemux_2.4.4_win32.exe

இளசு
25-02-2009, 06:59 AM
பாராட்டுகள் ப்ரவீண்.

நண்பர் பாலகுமார் அவர்களே

ஒற்றை வரியில் நீங்கள் பதிந்ததற்கு
எத்தனை சிரத்தையுடன் பதில் கிடைத்திருக்கிறது -பாருங்கள்..

ப்ரவீண் சொன்னதை முயற்சித்து உங்கள் பதிலை அளியுங்கள்..நன்றி.

balakumar
27-02-2009, 12:52 AM
மிக்க நன்றி பிரவீன் அவர்களே ,
ஒற்றை வரியில் கேட்டது தப்புதான் ,மன்னிக்கவும். பிறந்தநாள் நிகழ்ச்சிகளை வீடியோ எடிட் செய்யத்தான் கேட்டேன் .

gans5001
27-02-2009, 10:52 AM
நன்றி ப்ரவீன். நீண்ட நாட்களாக எனது மறைந்த மகனின் சில விடியோ பதிவுகளை எடிட் செய்து (பல நண்பர்களின் வீட்டு நிகழ்வுகளில் கலந்து கொண்ட வீடியோக்கள்.. சில நிமிடங்களே வருவான்) நீண்ட பதிவாக்க முயன்று தோற்ற எனக்கு இது மிக உதவும் என நினைக்கிறேன். நன்றிகள் பல.

பாரதி
27-02-2009, 02:35 PM
நல்ல மென்பொருளைத் தந்த பிரவீணுக்கு நன்றி.

கன்ஸ்.... எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. உங்கள் பதிவிலிருந்து நடந்த துயர நிகழ்வை அறிந்து மிகவும் வருந்துகிறேன். உங்களின் துயரில் இருந்து மீள உங்கள் மகனே உதவுவார்.

நண்பர்களே,
கீழ்க்கண்ட மென்பொருட்களும் ஒருவேளை உங்களுக்கு உதவக்கூடும். இவை இரண்டும் இலவச மென்பொருட்கள்தாம்.

1. விர்ச்சுவல் டப்
பதிவிறக்கச்சுட்டி: http://virtualdub.sourceforge.net/[/URL]

2.Zwei-Stein Video editor
பதிவிறக்கச்சுட்டி: [URL]http://www.zs4.net/ (http://www.virtualdub.org/)

இளசு
27-02-2009, 06:16 PM
அன்புள்ள தோழன் கண்ஸுக்கு

ஆழப்புதைந்த உன் மனவலியை நாங்களும் பகிர்கிறோம் தோழனே...

படக்காட்சிகளைக் கோர்த்துப் பார்க்க இம்மென்பொருள் உதவட்டும்..
உன் விழிகளால் நானும் பார்த்து உன் பாரத்தை பங்குபோடுவேன்..

- நண்பன் இளசு

balakumar
28-02-2009, 10:47 AM
எனது மூத்த மகன் பிரியதர்ஷன் பிப்ரவரி 1ஆம் தேதி 2007 இறந்து விட்டான் .நண்பருக்கு நேர்ந்தது போலவே நானும் அதற்காகவே கேட்டேன் .

பாரதி
28-02-2009, 12:20 PM
அன்பு பாலகுமார் அவர்களே,
இந்தத்திரியிலேயே இரண்டாவது துயரச்செய்தி...
உங்கள் பிரிய மகன் பிரியதர்ஷனின் ஆத்மா சாந்தி அடைவதாக.

உங்கள் அசைபட முயற்சியில் மேற்கொண்டு ஏதேனும் உதவிகள் தேவையெனில் கூறுங்கள் நண்பரே.

praveen
28-02-2009, 02:42 PM
@ கன்ஸ்5001
@ பாலகுமார்

உங்கள் பதிவுகளை கண்டவுடன் என்னால் என்ன பதில் பதிப்பதென்று இயலவில்லை. இந்த திரியை நான் சாதாரணமாக மன்ற சகோதரர்கள் தங்கள் உபயோகத்திற்கு கேட்கும் மென்பொருள் பற்றியது என்றே நினைத்திருந்தேன்.

ஆனால் அது பயன்படப்போகும் விசயத்தை நினைத்தால் மனது கனக்கிறது. ஒருவரியில் கேட்டிருந்தீர்கள் என்று குறைபட்டு கொண்டேன். ஆனால் இப்போது நீங்கள் பதிந்திருக்கும் ஒரு வரி துயரத்தை தாங்க முடியவில்லை.

உங்கள் மனம் இந்த மென்பொருள் உதவியால், இனி அமைதி பெறட்டும்.

நூர்
28-02-2009, 05:17 PM
மிக்க நன்றி பிரவீன் அவர்களே.

balakumar
01-03-2009, 06:10 AM
மிக்க நன்றி பிரவீன் அவர்களே ,
தமிழ்மன்றத்தின் உதவியால் மேற்கூறிய மென்பொருள் என் மகன் பிரியதர்ஷன் கலந்து கொண்ட நிகழ்ச்சிகளை எடிட் செய்து எனக்கு என் மகன் என்னுடன் இருப்பது போலவே நினைத்துக்கொள்வேன் .பாலகுமார் ,பெங்களூரு .

AARUL
08-03-2009, 03:34 PM
நன்றி அண்ணா தமிழ் தட்டச்சு சைவது கடினமா உள்ள்து சுலபமான வெளக்கம் அள்ளிகவும்

balakumar
12-03-2009, 11:19 AM
http://www.google.com/transliterate/indic/Tamil
மேற்கண்ட தளத்தில் இதில் முயற்சி செய்யவும் .பாலகுமார் , பெங்களூரு

ராசராசன்
12-03-2009, 04:02 PM
நீங்கள் புதிதாகவோ இல்லை கடினமில்லாமல் யாரும் எளிதாக நம்முடைய சொந்த விடியோ படங்களை எடிட்டிங் செய்து கைதேர்ந்த நிபுணர்கள் செய்தது போலவே டிவிடியில் பதிந்துகொள்ள மிக எளிதான மென்பொருள் யூளிட் வீடியோ ஸ்டுடியோ-11(Ulead Video Studio 11 Plus) பயன்படுத்தலாம்.

நீங்கள் ஈமுல்(eMule) P2P பின்னல் மூலம் இம்மெபொருளை இலவசமாக தரவிறக்கம் செய்துகொள்ளலாம். சிலசமயம் அதனுடன் வைரஸும் வரலாம். சிறிது முன்னெச்சரிக்கை தேவை!