PDA

View Full Version : புதிதாய் ஒரு பூமி...

சசிதரன்
23-02-2009, 05:44 PM
என் இரவுகளின் ரகசிய கனவுகளில்...
தினம் தினம் நான் பயணம் போகிறேன்...
பூக்களும் புன்னகைகளும் வரவேற்கும்
ஓர் அழகிய உலகத்திற்கு..

இங்கு எல்லாமே அதனதன் இயல்புகளோடு இருக்கிறது...
பூக்களை ரசிக்க முடிகிறது...
மழையில் நனைய முடிகிறது...
நினைத்தால் சிரிக்க முடிகிறது...
நான் நானாய் வாழ முடிகிறது.

இந்த உலகத்தின் இரவுகள்....
நான் விழிக்கும் வரை விடிவதேயில்லை....
என் கனவுகளை கலைக்கும் உரிமை...
எனக்கு மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது.

பாதையோர பூக்களுக்காய் வழி விட்டு...
வளைந்து போகிறது தண்டவாளங்களும்.

பேசும் வார்த்தைகளிலே வழிந்தோடும் அன்பு...
பார்க்கும் கண்களிலே கறையில்லாத காதல்...
கடந்து போகும் முகத்திலெல்லாம் களங்கமில்லா சிரிப்பு...
பறிக்கபடாத பூக்களில்... நுகரப்படாத வாசம்...

இங்கு.. பூமியின் பாதையெங்கும் சிதறியிருக்கிறது...
நாம் ஒவ்வொருவரும் வாழ மறந்த அல்லது...
வாழ மறுத்த வாழ்க்கை.

இந்த உலகின் நுழைவுவாயில் உங்கள் கனவுகள்...
நேரமிருந்தால் வந்து பாருங்கள்.... உங்களை வரவேற்கும்...
பூக்களும் புன்னகைகளும் மட்டுமே...
இந்த புதிய பூமியெங்கும் சிதறி கிடக்கும்...
காதல் காதல் காதல் மட்டுமே...

இது நான் கவிதை போட்டியில் பதிந்த கவிதை. உங்கள் விமர்சனங்களை எதிர்பார்த்து இங்கு பதிகிறேன்...:)

இளசு
23-02-2009, 05:52 PM
ஈடன்.. யுதோப்பியா
மனம் சமைத்த பூசொர்க்கங்கள் உண்டு..

நிதர்சனத்தில் -
மெய்நிகர் சொர்க்கபூமி
காதலால் மட்டுமே சாத்தியம்..

பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும்
இறைவனை நம்பவைக்கும்..

துளிர்க்கும் ஒவ்வொரு தூயக் காதலும்
இப்புதிய பூமியை மலரவைக்கும் -
(அந்தந்த நெஞ்சங்களில்..)

வளைந்த தண்டவாளம் - இக்கவிதையின் உச்சம்!

பாராட்டுகள் சசி!

வசீகரன்
24-02-2009, 09:48 AM
நினைத்தேன் சசி இந்த கவிதையை நீங்கள்தான் எழுதிஇருப்பீர்கள் என்று கவிதை போட்டியில் எனது கவிதையை அடுத்து இந்த கவிதைக்கு தான் சாட்சாத் நான் வாக்கு அளித்திருந்தேன்..
அழகழான வரிகளை பார்க்கும் போதே எண்ணினேன் இது சசியின் கவிதையாகதான் இருக்கும் என்று...
அற்புதமான மன அழகை வெளிக்காட்டும் கவிதை இது....
இப்படிஒரு கவிதையை நான் கவிதை போட்டியில் நாம் எழுதவில்லையே
என்று வருத்தப்பட்டேன்... மிகுந்த அமைதியையும் இதமான சூழலையும்
மனதில் நிலைநிறுத்துகிறது இந்த கவிதை....
அந்த கவிதை போட்டியின் முடிவே மன்றத்தில் இன்னும் அறிவிக்கபடவில்லை நிச்சயமாக இந்த கவிதைதான் வெற்றிக்கவிதை சசி...
நல்ல கவிதை... அழகான வர்ணனை...'
தொடர்ந்து இது போன்று அழகு கவிதைகளை மன்றத்தில் எழுதவேண்டும் சசி....
எனது பாராட்டுக்கள்...!

சிவா.ஜி
24-02-2009, 10:41 AM
அழகான கவிதை. ஒவ்வொரு வரியிலும் உற்சாகம் கொப்பளிக்கிறது. காதலால் இத்தனை மாற்றம் நிகழுமென்றால்....வாழ்நாள் முழுதும் காதல் செய்வோம்.

இளசுவுக்குப் பிடித்த வரிகளே என்னையும் வசீகரித்தது. அதை வாசிக்கும்போதே மனம் சில்லென்றானது.

அருமையான வரிகள் சசி. வாழ்த்துகள்.

சசிதரன்
25-02-2009, 09:35 AM
ஈடன்.. யுதோப்பியா
மனம் சமைத்த பூசொர்க்கங்கள் உண்டு..

நிதர்சனத்தில் -
மெய்நிகர் சொர்க்கபூமி
காதலால் மட்டுமே சாத்தியம்..

பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும்
இறைவனை நம்பவைக்கும்..

துளிர்க்கும் ஒவ்வொரு தூயக் காதலும்
இப்புதிய பூமியை மலரவைக்கும் -(அந்தந்த நெஞ்சங்களில்..)

வளைந்த தண்டவாளம் - இக்கவிதையின் உச்சம்!

பாராட்டுகள் சசி!

பாராட்டுக்கு மிக்க நன்றி இளசு அண்ணா... உங்கள் வரிகளில் அழகாக சொல்லியிருக்கிறீர்கள்...:)

சசிதரன்
25-02-2009, 09:38 AM
நினைத்தேன் சசி இந்த கவிதையை நீங்கள்தான் எழுதிஇருப்பீர்கள் என்று கவிதை போட்டியில் எனது கவிதையை அடுத்து இந்த கவிதைக்கு தான் சாட்சாத் நான் வாக்கு அளித்திருந்தேன்..
அழகழான வரிகளை பார்க்கும் போதே எண்ணினேன் இது சசியின் கவிதையாகதான் இருக்கும் என்று...
அற்புதமான மன அழகை வெளிக்காட்டும் கவிதை இது....
இப்படிஒரு கவிதையை நான் கவிதை போட்டியில் நாம் எழுதவில்லையே
என்று வருத்தப்பட்டேன்... மிகுந்த அமைதியையும் இதமான சூழலையும்
மனதில் நிலைநிறுத்துகிறது இந்த கவிதை....
அந்த கவிதை போட்டியின் முடிவே மன்றத்தில் இன்னும் அறிவிக்கபடவில்லை நிச்சயமாக இந்த கவிதைதான் வெற்றிக்கவிதை சசி...
நல்ல கவிதை... அழகான வர்ணனை...'
தொடர்ந்து இது போன்று அழகு கவிதைகளை மன்றத்தில் எழுதவேண்டும் சசி....
எனது பாராட்டுக்கள்...!

உங்கள் விமர்சனம் படிக்கும்போது எனக்கு இந்த கவிதையை எழுதியதற்காக மகிழ்ச்சியாக இருக்கறது வசீகரன்... மிக்க நன்றி நண்பரே... தொடர்ந்து விமர்சியுங்கள்...:)

சசிதரன்
25-02-2009, 09:41 AM
அழகான கவிதை. ஒவ்வொரு வரியிலும் உற்சாகம் கொப்பளிக்கிறது. காதலால் இத்தனை மாற்றம் நிகழுமென்றால்....வாழ்நாள் முழுதும் காதல் செய்வோம்.

இளசுவுக்குப் பிடித்த வரிகளே என்னையும் வசீகரித்தது. அதை வாசிக்கும்போதே மனம் சில்லென்றானது.

அருமையான வரிகள் சசி. வாழ்த்துகள்.

மிக்க நன்றி சிவா அண்ணா... அனைவரும் காதல் செய்ய வேண்டும் அண்ணா... இந்த புதிய பூமியை அடையும் பாதை அது மட்டுமே...:)

பூமகள்
27-02-2009, 05:53 AM
புதிய உலகிற்கு
மீண்டுமொரு பயணக் கவிதை..

பூக்களின் செறிவில்
மழையின் சிலிர்ப்பில்..
எதிர்படும்
புன்னகை தேசத்தவர்கள்..

இயல்பு திரியாத
இதயமும்
இன் முகமும்
இன்னும் வேண்டுமென
ஏங்க வைத்த கவிதை..

இத்தனைக்கும் காரணம்
காதலா?
இல்லை
பிள்ளையுள்ளத்தின்
அன்பா?

எப்படியாயினும்
அன்பெனும்
அம்பெய்து
மனங்கள் கவர்ந்தால்
இவ்வகை உலகங்கள்
பல நூறு உருவாகுமன்றோ??!!

________________________

மிக அழகான வரிகள் சசி.. உங்கள் வரிகளில் பயணிக்கையில்.. அவ்வுலகத்தில் உலவிய ஓர் பரவச சில்லிப்பு மனமெங்கும் பரவுகிறது..

இப்படியான இதமிக்க கவிதை பல படைக்க வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

பெரியண்ணாவின் பின்னூட்டம் தித்திக்கும் தேன் துளியாக... கவிதைக்கு மகுடமாக.. வார்த்தைச் சுருக்கம்.. சொற்கட்டில் உங்களை அடிக்க ஆள் இல்லை பெரியண்ணா.. நெகிழ்ந்தேன்..

சசிதரன்
27-02-2009, 02:42 PM
மிக இனிமையான விமர்சனம் தந்து பாராட்டியமைக்கு நன்றி பூமகள் அவர்களே...:)

அறிஞர்
27-02-2009, 02:47 PM
அருமையான காதல் கவிதை சசி...
காதல் உலகின் நுழைவுவாயில் கனவுகள்.
அது என்றும் நிஜமானால்... இன்பமே...
வாழ்த்துக்கள் சசி..

சுகந்தப்ரீதன்
28-02-2009, 09:12 AM
ரொம்ப சந்தோசமா இருந்துச்சு சசி.. நீங்க சொன்ன அந்த உலகத்தை கனவுல கண்டபோது..!!
ஆனா முழுச்சி பார்த்தா எதார்த்தம் என்னெதிரே நின்று என்னைப் பார்த்து கேலியா சிரிக்குது..!!

எல்லோருக்கும் இருக்கும் இந்த ஏக்கத்தை கவிதையில் கட்சிதமாய் வடித்து அந்த புதிய பூமிக்கு அனைவரையும் அழைத்த உங்களுக்கு என் நன்றியும் வாழ்த்தும் நண்பரே..!!

ஷீ-நிசி
03-03-2009, 12:07 AM
வாவ்!

இப்படி ஒரு பூமியில் வாழ யாருக்குத்தான் ஆசைகள் இராது....

இந்த உலகத்தின் இரவுகள்....
நான் விழிக்கும் வரை விடிவதேயில்லை....
என் கனவுகளை கலைக்கும் உரிமை...
எனக்கு மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது.

இந்த கனவுகளை கலைக்கும் உரிமை நமக்கு மட்டுமே இருந்தாலும், ஒரு நாளும் நாம் கலைக்கமாட்டோம் என்பதே நிச்சயம்...

வாழ்த்துக்கள் சசி!

அக்னி
07-03-2009, 11:07 AM
புதிதாய் ஒரு பூமி...
எங்கிருந்து வரவேண்டும்..?

பூமியில் வாழக்கிடைத்தது மனிதனுக்கு வரம்...
மனிதன் வாழவந்தது பூமிக்குச் சாபம்...

பூமியை உறைய வைத்துவிட்டு,
உறக்கக் கனவுகளில்
உன்னத உலகைத் காணும் மனிதன்,
புதிய பூமிக்காகச் சிருஷ்டிக்கத் தேவையில்லை.
இருக்கும் பூமியைச் சிதைக்காவிட்டாலே போதும்.
பூமி என்றும் புதியதாய் இருக்கும்.

பாராட்டுக்கள் சசிதரன் அவர்களே...
உங்கள் இரகசியக் கனவுகள் பரகசியமானதில் கிடைத்தது அழகிய கவிதை.
இந்தக் கவிதையின் உலகில் வாழக்கிடைத்தால், கனவே தேவையில்லை.

சசிதரன்
08-03-2009, 01:48 PM
அருமையான காதல் கவிதை சசி...
காதல் உலகின் நுழைவுவாயில் கனவுகள்.
அது என்றும் நிஜமானால்... இன்பமே...
வாழ்த்துக்கள் சசி..

மிக்க நன்றி அறிஞரே...:)

சசிதரன்
08-03-2009, 01:48 PM
ரொம்ப சந்தோசமா இருந்துச்சு சசி.. நீங்க சொன்ன அந்த உலகத்தை கனவுல கண்டபோது..!!
ஆனா முழுச்சி பார்த்தா எதார்த்தம் என்னெதிரே நின்று என்னைப் பார்த்து கேலியா சிரிக்குது..!!

எல்லோருக்கும் இருக்கும் இந்த ஏக்கத்தை கவிதையில் கட்சிதமாய் வடித்து அந்த புதிய பூமிக்கு அனைவரையும் அழைத்த உங்களுக்கு என் நன்றியும் வாழ்த்தும் நண்பரே..!!

வாழ்த்துக்கு மிக்க நன்றி நண்பரே...:)

சசிதரன்
08-03-2009, 01:49 PM
வாவ்!

இப்படி ஒரு பூமியில் வாழ யாருக்குத்தான் ஆசைகள் இராது....

இந்த கனவுகளை கலைக்கும் உரிமை நமக்கு மட்டுமே இருந்தாலும், ஒரு நாளும் நாம் கலைக்கமாட்டோம் என்பதே நிச்சயம்...

வாழ்த்துக்கள் சசி!

மிக்க நன்றி ஷீ-நிசி...:)

சசிதரன்
08-03-2009, 01:50 PM
புதிதாய் ஒரு பூமி...
எங்கிருந்து வரவேண்டும்..?

பூமியில் வாழக்கிடைத்தது மனிதனுக்கு வரம்...
மனிதன் வாழவந்தது பூமிக்குச் சாபம்...

பூமியை உறைய வைத்துவிட்டு,
உறக்கக் கனவுகளில்
உன்னத உலகைத் காணும் மனிதன்,
புதிய பூமிக்காகச் சிருஷ்டிக்கத் தேவையில்லை.
இருக்கும் பூமியைச் சிதைக்காவிட்டாலே போதும்.
பூமி என்றும் புதியதாய் இருக்கும்.

பாராட்டுக்கள் சசிதரன் அவர்களே...
உங்கள் இரகசியக் கனவுகள் பரகசியமானதில் கிடைத்தது அழகிய கவிதை.
இந்தக் கவிதையின் உலகில் வாழக்கிடைத்தால், கனவே தேவையில்லை.

மிக அழகாய் சொல்லியிருக்கிறீர்கள் அக்னி அண்ணா... மிக்க நன்றி...:)

ஆதவா
11-03-2009, 07:10 AM
அடடா... இதுவன்றோ கவிதை..

மீண்டும் உங்களின் பயணம்.. கனவுகளில்.. கனவுகளுல்.. கனவின் வழி.

இங்கே நிறைந்திருக்கும் பின்னூட்டப்பூக்கள் உங்கள் மாமழையின் ஆரம்பத்தை உணர்த்துகின்றன..

வாழ்த்துக்கள்.

சசிதரன்
11-03-2009, 02:55 PM
நன்றி ஆதவா...:)