PDA

View Full Version : அசபை



நாகரா
23-02-2009, 09:54 AM
"ஸ" என்றே இயங்கும் தயவாய் வெளியேறி
அன்பில் நின்று
"ஹ" என்றே விளங்கும் அருளாய் உள்ளேறி
அன்பில் நின்று
ஜகத்தைக் காக்கும் அல்லாவை
மெய்க்குள் காட்டும் "அசபை"யை
கவனமாய் நீ வாசிக்கும்
ஸஹஜ மார்க்கம் கைக்கொள்!
உன் வெளி மூச்சு
அன்பே சிவமாம் அல்லா
தயவாய் ஜகத்தில் இயங்கும்
கர்ம மார்க்கம்!
உன் உள் மூச்சு
அன்பே சிவமாம் அல்லா
அருளாய் ஜகத்தில் விளங்கும்
ஞான மார்க்கம்!
வெளி மூச்சின் முடிவிலும்
உள் மூச்சின் முடிவிலும்
அன்பில் நிற்றல்
அன்பே சிவமாம் அல்லா
ஜகத்தைத் தன் மகவாய் நேசிக்கும்
பக்தி மார்க்கம்!
மூச்சை வெளிவிட்டு
நின்றுப் பின்
மூச்சை உள்ளிழுத்து
நிற்கும்
ஒரு சுற்றில்
மும்மார்க்கமும் முடிந்த
ராஜ மார்க்கம்!
இதுவே
நனி மிக எளிய
ஏக ஸஹஜ மார்க்கம்!
அன்பே சிவமாம் அல்லாவின்
எளிமை விட்டு
நீ
பற்றி இருப்பதோ
ஸஹஜம் நழுவும்
பேத அவ மார்க்கம்!
இம்மூர்க்கம் விட்டாலன்றி
எப்படிச் சொல்வாய்
ஸஹஜ சமரச சன்மார்க்கத்துக்குச்
சம்மதம்?!
வாசியைக் கவனமாய் வாசிக்க
உனக்கேது அவகாசம்?!
வாசிக்க வேண்டியதை
வாசிக்கச் சொன்னால்
நீ என்னைச் செய்வாய்
கேலியாய்ப் பரிகாசம்!
இருந்தாலும்
அன்பின் மிகுதியால்
நான் உனக்குச் சொன்னேன்
உன்னுள் நிகழும்
"அசபை" என்னும்
ஜபியா உபதேசம்!
உபதேசம் விளங்கியே
உன் மெய்யாம்
உண்மைப் பிரதேசம்
தங்கமாய் ஜொலி ஜொலிக்க
இகமாம் இஜ்ஜகத்தில்
நிறுவு நீ
உத்தமப் பரதேசம்!

நாகரா
23-02-2009, 09:55 AM
உன்னுள்ளே எப்போதும்
உண்டே
அல்லாவின் "ஸ-ஹ"வாசம்!
வாசியாமல் விட்டால்
நாசியை எட்டுமோ
அவர் அருள் வாசம்!
நேசித்தே கேட்பாய்
நீ
குருநபியின் அசபைத்
திரு வாசகம்!
வாசியை அலட்சியம் செய்ததால்
வந்ததே உனக்கு
வருத்தும் வனவாசம்!
வாசியில் இலட்சியம் வைத்தால்
வந்திடுமே உனக்கு
வளமான சுகவாசம்!

நாகரா
25-02-2009, 11:34 AM
உள் மூச்சில்
மனங் கனிந்து
இருதய பூமியில் வீழும்!
வெளி மூச்சில்
பெருவாழ்வின் விதைகள்
உயிர்த்திரளில் புதையும்!
மூச்சின் முடிவில்
நிற்குங் கணங்களில்
அன்பே சிவத்தின்
திருவிளையாடல்கள் புரியும்!
அசபையை வாசிக்க
அல்லாவின் சபை
என்னில் விளங்கும்!