PDA

View Full Version : கடல்கொலை....!!



சிவா.ஜி
23-02-2009, 09:14 AM
பேய்மழை, பெருங்காற்று
சூறாவளி, சுறாத்தாக்கு
படகுசேதம், பேரலை
இவை மட்டுமே இதுவரை
கடலேகும் எங்களுக்கு
கண்டங்களாய் இருந்தன....
இப்போது இவற்றுடன் இன்னொன்று
இவற்றைவிடக் கொடியதாய்....
இலங்கை கடற்படை.....!!!

இயற்கையால் அழிதல் இயல்பானதே
இவர்களால் அழிதல்....???
தமிழனை தரையிலும் கொன்று
தண்ணீரிலும் கொல்லும்
இந்த வெறியர்களை எவர் தடுப்பது?

எங்கள் அவலக்குரல்
அலைகளின் இரைச்சலில்
ஆண்டவனையும் எட்டவில்லை
ஆள்பவர்களையும் எட்டவில்லை
பாடு பார்க்கப்போகும் நாங்கள்
பாடையேறி போவதுதான் விதியா?

samuthraselvam
23-02-2009, 10:03 AM
நல்ல உணர்ச்சி மற்றும் வருத்தம் தரும் வேதனையை கவிதையாக தந்த அண்ணனுக்கு வாழ்த்துக்கள். நிச்சயம் இதற்கெல்லாம் நல்ல தீர்வு கூடிய விரைவில் கிடைக்கும். அதர்மம் இன்று வேண்டுமானால் ஆளலாம்... ஆனால் தர்மம் நின்று வெல்லும். அதற்குள் நடக்கும் இழப்புகளுக்கும் சேர்த்து அவர்கள் விலை கொடுக்க வைக்கும் காலம்.

ஆதவா
23-02-2009, 10:27 AM
இதில் அரசு மெத்தனம்தான் ரொம்ப கேவலமானது.!! குற்றத்தை தடுக்காமல் இருப்பது, குற்றம் செய்வதற்குச் சமானமானது! அதைத்தான் ஒவ்வொரு தமிழக அரசுகளும் செய்து வருகின்றன.

இயற்கை மரணத்திற்கு அழைத்தால் சென்றுவிடலாம்.
இலங்கை அழைத்தால்???

கொல்லுதல் பாவமென்று பாவம் புத்தம் பரவியிருக்கும் இலங்கை வீரர்கட்குத் தெரிவதில்லை.. உயிர் வலியை உணர்ந்தவர்களாக அவர்கள் பிறப்பதில்லையோ?? அய்யா.... தமிழனைக் கண்டால் ஏன் இவ்வளவு கோபம்??

சிவா.ஜி அண்ணா.. உங்கள் ஆதங்கம் நன்கு வழிகிறது கவிதையில்... இதை அப்படியே கடலின் கோணத்தில் எழுதியிருந்தால் எப்படியிருக்கும்??

(யாரேனும் முயற்சிப்பார்கள் என்று விட்டுச் செல்கிறேன்...)

சிவா.ஜி
23-02-2009, 11:05 AM
ஆனால் தர்மம் நின்று வெல்லும். அதற்குள் நடக்கும் இழப்புகளுக்கும் சேர்த்து அவர்கள் விலை கொடுக்க வைக்கும் காலம்.

ரொம்ப சரியா சொன்னம்மா. கண்டிப்பா இதற்கான விலையை அவர்கள் கொடுத்தே ஆகவேண்டும். எத்தனை இடர்களைத்தான் நம் மீனவர்கள் தாங்குவார்கள்.

ரொம்ப நன்றி லீலும்மா.

சிவா.ஜி
23-02-2009, 11:10 AM
இதில் அரசு மெத்தனம்தான் ரொம்ப கேவலமானது.!! குற்றத்தை தடுக்காமல் இருப்பது, குற்றம் செய்வதற்குச் சமானமானது! அதைத்தான் ஒவ்வொரு தமிழக அரசுகளும் செய்து வருகின்றன.

இயற்கை மரணத்திற்கு அழைத்தால் சென்றுவிடலாம்.
இலங்கை அழைத்தால்???

கொல்லுதல் பாவமென்று பாவம் புத்தம் பரவியிருக்கும் இலங்கை வீரர்கட்குத் தெரிவதில்லை.. உயிர் வலியை உணர்ந்தவர்களாக அவர்கள் பிறப்பதில்லையோ?? அய்யா.... தமிழனைக் கண்டால் ஏன் இவ்வளவு கோபம்??

சிவா.ஜி அண்ணா.. உங்கள் ஆதங்கம் நன்கு வழிகிறது கவிதையில்... இதை அப்படியே கடலின் கோணத்தில் எழுதியிருந்தால் எப்படியிருக்கும்??

(யாரேனும் முயற்சிப்பார்கள் என்று விட்டுச் செல்கிறேன்...)

ஆள்பவர்களும் தமிழர்கள்தானே....ஏன் அவர்களுக்கு இந்த பாவப்பட்டவர்களின் மீது பரிதாமெழவில்லையென்று தெரியவில்லை. இறந்தவர்கள் குடும்பத்துக்கு நிவாரணம் மட்டும் வழங்கிவிட்டால் போதுமா? அவர்களின் உயிருக்கு உத்திரவாதமில்லையே. அதை எந்த அரசு கொடுக்கும்?

மாநிலமும் கைவிட்டு, நாடும் கைவிட்டால் இவர்களுக்கு நாதி எங்கே?

தங்களைவிட அனைத்திலும் உயர்ந்தவர்களைப் பார்த்து ஏற்படும் பொறாமைதான் அந்த வெறுப்புக்குக் காரணம் ஆதவா. புத்தன் அந்த நாட்டில் செத்துவிட்டான் என்று நீங்கள் சொன்னது சரிதான்.

(கடலின் கோணம்.....இதுவும் நன்றாக இருக்கிறதே....யாரேனும் முயற்சிக்கட்டும்)

நன்றி ஆதவா.

செல்வா
23-02-2009, 11:50 AM
10 வழக்கறிஞர்கள் ஈழத்தமிழருக்கு ஆதரவாக முல்லைத்தீவில் சென்று போராடப் போகிறோம் என்றதும் ஓடி வந்து கைது செய்த கடற்படை....
இலங்கைக் கடற்படையால் இந்திய மீனவர்கள் படும் பாட்டை எத்தனையோ எடுத்துச் சொல்லியும் போராட்டங்கள் நடத்தியும் கண்டுக்காமல் இருப்பது... எத்தனை கேவலமானது.
இவர்கள் உண்மையிலேயே இந்திய அரசாங்கத்திற்குத் தானா வேலை செய்கிறார்கள்.
போராட்டம் செய்யப் போனவர்களை கைது செய்யப் பறந்து சென்றவர்கள்... அடிபட்டு அவமானப்பட்டு வீழும் மீனவர்களை மீட்காது எந்தக் கடலில் நங்கூரம் போட்டுக்கொண்டிருந்தார்களோ...?
இந்தியாவில் இந்தியனுக்கு இல்லை இல்லை தமிழனுக்கு மதிப்பு கிடையாது. தமிழனது உயிருக்கும் விலைகிடையாது.

இளசு
23-02-2009, 05:47 PM
மன ஆதங்கத்தை
பொங்கும் இயல்பு தமிழில்
செம்மையாக வடித்த திறம் -
சிவாவுக்கே உரியது!

சங்குகள் முழங்கிக்கொண்டே இருப்போம் -
விடியல் வரும் விரைவில் என்ற நம்பிக்கையில்!

செவிடர்களா..கயவர்களா..
எவர் காதுக்கு இந்தச் சங்கொலிகள்?

காலம் பதில் சொல்லும்!

பாரதி
24-02-2009, 12:36 AM
பலருக்கும் இருக்கும் ஆதங்கம் உங்கள் வரிகளில் தெரிகிறது சிவா. அரசில் இருப்பவர்கள் யாருக்கேனும் இதைத்தடுக்க கொஞ்சமாவது எண்ணம் வராதா..?

கடலில் நடக்கும் கொடுமைகள் மட்டுமன்றி, தரைக்கு வந்து கடலில் நடந்த வேதனையைக் கூறுபவர்களை "ஏன் கூறுகிறாய்?" என குண்டாந்தடிகள் கொண்டு கோலோச்சுகிறார்கள்.

முன்பு எப்போதாவது என்றிருந்த நிகழ்வுகள், இப்போதெல்லாம் தினசரி நடப்பதைக் கண்டும், வாழாவிருக்கும் நமக்கு கடற்படை அவசியமா என்ற சந்தேகம் வலுக்கிறது.

சிவா.ஜி
24-02-2009, 05:26 AM
செல்வா....இந்தியாவின் மத்திய அரசுக்கு தமிழர்கள் அந்நியர்களே. உத்தரபிரதேசத்திலும், பீகாரிலும் இருப்பவர்கள்தான் அவர்களைப் பொறுத்தவரை இந்தியக் குடிமக்கள். காலங்காலமாய் நாம் பார்த்துவரும் இந்த அலட்சியப்போக்கு என்றுதான் மாறப்போகிறதோ?

சிவா.ஜி
24-02-2009, 05:30 AM
சங்குகள் முழங்கிக்கொண்டே இருப்போம் -
விடியல் வரும் விரைவில் என்ற நம்பிக்கையில்!

செவிடர்களா..கயவர்களா..
எவர் காதுக்கு இந்தச் சங்கொலிகள்?

காலம் பதில் சொல்லும்!

தூங்குவதைப்போல நடிப்பவரை எழுப்ப முடியாது என்பதைப்போல இந்த அரசாங்கங்களையும் எழுப்ப முடியாது. நிவாரணங்களிலும் காசு பார்க்கும் அரசியல்வாதிகள் ஏழைகளின் உயிரைப்பற்றிக் கவலைப்படப்போவதில்லை.

நீங்கள் சொன்னதைப்போல காலம்தான் பதில்சொல்லும்.

நன்றி இளசு.

சிவா.ஜி
24-02-2009, 05:34 AM
முன்பு எப்போதாவது என்றிருந்த நிகழ்வுகள், இப்போதெல்லாம் தினசரி நடப்பதைக் கண்டும், வாழாவிருக்கும் நமக்கு கடற்படை அவசியமா என்ற சந்தேகம் வலுக்கிறது.

உண்மைதான் பாரதி. கடற்படை என்ன செய்கிறார்கள்? கொல்லப்படுபவர்கள் நமது தேசத்தின் குடிமக்கள் என்ற உணர்வே இல்லாமல் இருக்கிறார்களே. என்ன கொடுமை இது?

உரத்துக்குரல் கொடுக்கவேண்டிய அரசியல்வாதிகளே வாளாவிருக்கிறார்கள்.
ஏழையின் அவலக்குரல் எஜமானர்களின் காதுகளில் எப்போது விழுமோ?

பின்னூட்டக்கருத்துக்கு நன்றி பாரதி.

ரங்கராஜன்
24-02-2009, 05:39 AM
எங்கள் அவலக்குரல்
அலைகளின் இரைச்சலில்
ஆண்டவனையும் எட்டவில்லை
ஆள்பவர்களையும் எட்டவில்லை

அருமையான வரிகள் அண்ணா, கடவுள் தான் கண் திறக்க வேண்டும்.

சிவா.ஜி
24-02-2009, 05:44 AM
நம்பிக்கை வைப்போம் நல்லது நடக்கட்டும். நன்றி தக்ஸ்.

அக்னி
24-02-2009, 12:18 PM
வலை எறியும் கரம்
குண்டு எறியாதென்ற தைரியம்...
துடுப்புப் பிடிக்கும் கரம்
துப்பாக்கி ஏந்தாதென்ற துணிச்சல்...

எல்லாவற்றுக்கும் மேலாகத்,
தமிழன் என்பதால் எழும் வன்மம்...

கொலைக்கலங்களை
மூழ்கடிக்க
அலைக்கரங்களுக்கும்
உணர்வில்லையா...

கொலையாளிகளைச்
சாவடிக்க
ஆழிக்கும்
மனமில்லையா...

இந்து மா சமுத்திரமே...
இனியாவது,
நீயாவது,
இந்த அரக்கர்களை
விழுங்கிடச்,
சுனாமியாகச், சுழியாகப், புதைகுழியாக
அவதரித்திடாயோ...

ஆற்றாமை, சீற்றம் பெற்றால்...

வசீகரன்
25-02-2009, 04:41 AM
இங்கே தினம் தினம் இந்த பிரச்சினைகளை வைத்து அரசியல்வாதிகளுக்கு அரசியல் ஆதாயம் தேடுவதர்க்கே நேரம் சரியாக இருக்கிறது...
தினம் தினம் மனித சங்கிலிகள்.... மேடை முழக்கங்கள்.... பொது கூட்டங்கள்... பேரணிகள்...!!!
தமிழர் பிரச்சினையில் ஐ நா சபை... இந்தியா.. உலக நாடுகள்...
என்று அனைவரையும் பார்த்தாயிற்று....
இனி எந்த சொற்பொழிவுகளையும் உபதேசங்களையும்
நாம் கேட்க வேண்டாம்
தமிழன் கடைசிவரை
அடிபட்டே சாகவேண்டும் என்பதே விதி...

சிவா.ஜி
25-02-2009, 05:40 AM
வலை எறியும் கரம்
குண்டு எறியாதென்ற தைரியம்...
துடுப்புப் பிடிக்கும் கரம்
துப்பாக்கி ஏந்தாதென்ற துணிச்சல்...


ஆற்றாமை, சீற்றம் பெற்றால்...

அதே கரங்கள் துடுப்பைவிட்டு துப்பாக்கி ஏந்தவேண்டிய அவசியமேற்படும். அன்று தெறித்து ஓடுவார்கள் இந்த கோழைகள்.

அழகான பின்னூட்டக்கவிதையால் இந்தக்கவிதையின் கனத்தை அதிகரித்த அக்னிக்கு மிக்க நன்றி.

சிவா.ஜி
25-02-2009, 05:42 AM
விரக்தி வேண்டாம் வசீ. நமக்கும் ஒரு காலம் வரும். தமிழன் தலை கொய்தல் தடைபடும். நம் காலடியில் அவர்களின் தலைகள் கிடக்கும்.

சுகந்தப்ரீதன்
25-02-2009, 06:24 AM
"தரைமேல் பிறக்க வைத்தான் எங்களை
தண்ணீரில் பிழைக்க வைத்தான்" - என்பதை இனி மாற்றி

"தமிழ்நாட்டில் பிறக்க வைத்தான் எங்களை
தண்ணீரில் மிதக்க வைத்தான்" - என்று பாடணும் போலிருக்கு..!!

அண்ணா.. செல்வாவின் பதிவிலிருந்தே நாம் தெளிவாக அறிந்துக்கொள்ளலாம்.. இதற்கு காரணம் இலங்கைபடை அல்ல.. இந்தியப்படைத்தான் என்று..!! அவர்களை பொறுத்தவரை தமிழகம் இந்தியாவின் எல்லைக்கோட்டுக்கு வெளியேத்தானே இருக்கிறது..?!

தமிழக மீனவர்களின் சுமைதாங்கி வந்த நல்லதொரு கவிதை.. நன்றி அண்ணா..!!

சிவா.ஜி
25-02-2009, 06:35 AM
ஆமாம் சுபி. இந்தியக்கடற்படையின் அலட்சியப்போக்குதான் அந்த வெறியர்கள் ஆட்டம் போட காரணமாய் இருக்கிறது. இனி நாமாகத்தான் நம்மைக் காத்துக்கொள்ளவேண்டும் போலிருக்கிறது.

நன்றிப்பா.

செல்வா
25-02-2009, 07:26 AM
விரக்தி வேண்டாம் வசீ. நமக்கும் ஒரு காலம் வரும். தமிழன் தலை கொய்தல் தடைபடும். நம் காலடியில் அவர்களின் தலைகள் கிடக்கும்.
வேண்டம் அண்ணா ......
யாருடைய தலையும் யாருடைய காலடியிலும் கிடக்க வேண்டாம் என்பதே
நம் எண்ணங்களாக இருக்கட்டும்.

செல்வா
25-02-2009, 07:27 AM
"தமிழ்நாட்டில் பிறக்க வைத்தான் எங்களை
தண்ணீரில் மிதக்க வைத்தான்" -
தண்ணீரில் அல்ல சுபி...
கண்ணீரிலும்
செந்நீரிலும்...

ஆதி
25-02-2009, 08:03 AM
இந்திய பெருங்கடல்
இளவானச் சிவப்பால்
செங்கடல் ஆனாதை காட்டிலும்
தமிழனின் செம்புனலால் சிவந்ததுதான்
அதிகம்..

*

இதிகாசத்தில் படித்ததை
இன்று நேரிடையாகவே கண்கிறோம்
இலங்கையில் அரக்கர்கள் இருக்கிறார்கள்..
*

அஹிம்சை நிலவுகள் நாங்கள்
அர்புத விளக்கும் கூட
தேய்க்க நினைக்கிறீர்
திறந்து கொண்டு பூதம் வர
திண்டாட போகிறீர்..
*

தாழ்ந்திருப்பதற்கும்
தன்னடக்கத்திர்க்கும் வேறுபாடுண்டு
தன்னடங்கிதான் இருக்கிறோம்
தாழ் திறந்துவிடின்
தனக்கும் அடங்க மாட்டோம்..
*

சிவா.ஜி
25-02-2009, 08:59 AM
தாழ்ந்திருப்பதற்கும்
தன்னடக்கத்திர்க்கும் வேறுபாடுண்டு
தன்னடங்கிதான் இருக்கிறோம்
தாழ் திறந்துவிடின்
தனக்கும் அடங்க மாட்டோம்..
*

அப்படி சொல்லுங்க ஆதி....

தாழ் திறக்கும் நாள் வரும்
யாழ் பிறக்கும் காலம் வரும்
அங்கும் இங்கும் தமிழனாள
இடையில் சிக்கி இல்லாமலாவர்கள்
இலங்கை சிங்களவர்கள்....

நன்றி ஆதி.

சசிதரன்
25-02-2009, 09:29 AM
நல்ல வரிகள் சிவா அண்ணா. எல்லோருக்கும் இருக்கும் ஆதங்கம்தான். என்னதான் செய்ய முடியும் இதற்கு... எத்தனை முறை கேள்விகள் கேட்டாலும், பதில் கேள்விக்குறிதானோ...

சிவா.ஜி
25-02-2009, 11:45 AM
வாழ்க்கையே கேள்விக்குறியாகிவிட்டவர்களின் கேள்விகளுக்கும் பதிலாய் கிடைப்பது மற்றொரு கேள்வியே....
“நீங்கள் வாழத்தான் வேண்டுமா?”
என்ற கேள்வி.

என்ன செய்வது ஏழையாய் பிறந்துவிட்டார்கள் அதிலும் தமிழனாய் பிறந்துவிட்டார்கள்.

நன்றி சசி.

ஷீ-நிசி
27-02-2009, 12:54 AM
இவையாவும், தெரிந்து நடக்கிறதா... தெரியாமல் நடக்கிறதா என்று மட்டும் புரியவில்லை...

அழுத்தமான வரிகள் சிவா.ஜி