PDA

View Full Version : விடுதலை புலிகளின் இருவிமானங்கள் கொழும்பு நகரில் தாக்குதல்



புதியவன்
20-02-2009, 04:28 PM
தமிழீழ விடுதலை புலிகளின் இரு விமானங்கள் கொழும்பு நகருக்குள் நுழைந்துள்ளதாக பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
இன்று வெள்ளிக்கிழமை இரவு 9.10 மணியளவில் விடுதலை புலிகளின் இருவிமானங்கள் கொழும்பு நகருக்குள் உள்நுழைந்ததையடுத்து கொழும்பு நகரில் பொருத்தப்பட்ட வான்காப்பு பொறிமுறைகள் தானாகவே இயங்கத் தொடங்கியுள்ளன.

இதனைத் தொடர்ந்து கொழும்பு நகரில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதுடன் தொலைபேசி அழைப்புக்கள் அனைத்தும் தடைசெய்யப்பட்டள்ளது.

விடுதலைபுலிகளின் விமானங்கள் கொழும்புக்குள் வந்துள்ளதை உறுதிப்படுத்திய பாதுகாப்பு தரப்பினர் தாக்குதல் தொடர்பான எந்த தகவல்களையும் வெளியிடவில்லை.

எனினும் கொழும்பு துறைமுகம், மற்றும் முக்கிய இடங்களிலிருந்து வானத்தை நோக்கி துப்பாக்கி வேட்டுக்கள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலதிக தகவல்களை எதிர்பார்க்கவும்

நன்றி தமிழ்வின்

தூயவன்
20-02-2009, 04:35 PM
முழுமையான செய்திகளுக்காக காத்திருக்கிறேன்

அறிஞர்
20-02-2009, 04:50 PM
இராணுவ இடத்தை தாக்கியதாக செய்திகள் கூறுகின்றன..
http://ibnlive.in.com/news/ltte-planes-attack-army-hq-in-colombo/85906-2.html
http://www.ndtv.com/convergence/ndtv/story.aspx?id=NEWEN20090084242&ch=2/20/2009%2010:58:00%20PM
http://uk.reuters.com/article/worldNews/idUKTRE51J4T720090220
http://news.bbc.co.uk/2/hi/south_asia/7902392.stm

தூயவன்
20-02-2009, 04:53 PM
ஒரு விமானம் சுட்டு வீழ்த்தியதாக அரசு கூறுகிறது....உண்மை பொய் தெரியவில்லை

ஓவியன்
21-02-2009, 03:38 AM
இரு விமானங்களும் கொழும்பு நகரில் தாழப் பறந்து உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் மீது குண்டுகளை வீசி விட்டு, ஒன்று விமானப் படைத் தலமையகம் இருந்த கட்டத் தொகுதியின் மீதும், மற்றையது கட்டுநாயகா விமானத் தளத்தின் மீதும் வீழ்ந்து வெடித்துள்ளதாகத் தெரிகிறது.....

இந்த இரு இடங்களிலும் ஏற்பட்ட இழப்புக்கள் பற்றி சுயாதீனமான தகவல்கள் வெளிவரவில்லை....

இது தொடர்பாக விடுதலைப்புலிகள் வெளியிட்ட அறிக்கையில் இந்த தாக்குதல்கள் வான்கரும்புலித் தாக்குதல்களென அறிவித்து வீரச்சாவடைந்த வீரர்களின் பெயர்களையும் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளனர்...

இதில் கேணல் ரூபன், லெப்.கேணல் சிரித்திரன் இருவரும் வீரச்சாவடைந்துள்ளதாக விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ளனர்....

rajasi13
21-02-2009, 04:26 AM
புலிகளின் விமானத்திற்கு ஓடுபாதை தேவையில்லயோ?..

நிரன்
21-02-2009, 02:33 PM
நேற்றைய தினம் நானும் இச்செய்தியை அறிந்தேன்!!

வீரச்சாவடைந்த வான்கரும்புலி ஒருவரின் உடலும் வீடியோக் காட்சியில் (http://uk.video.yahoo.com/watch/4531105/12138254) பார்த்தேன். ஆனால் இலங்கை அரசிற்கு ஏற்பட்ட சேத விபரங்கள் எதுவும் வெளியாகவில்லை. ஒரு வேளை இலங்கை அரவு அதற்கு தடை விதித்திருக்கக்கூடும்.

முதன் முறையாக வான்கரும்புலிகள் வீரச்சாவு நேற்றைய தினம்
நடைபெற்றுள்ளது.


அஞ்சலிகளுடன்
°°நிரன்

அமரன்
21-02-2009, 09:06 PM
வன்னிக்குள்ளேயே இலங்கை இராணுவத்துக்கு பேரழிவு ஏற்படுத்தவல்ல இலக்குகள் இருக்க பன்னாடுகள் கொடுக்கும் உதவிகள் தெனாவெட்டாக உட்கார்ந்திருக்கும் கொழும்பில் இலக்கு நிர்ணயம் எதுக்கு? இந்தக்கேள்விக்கு விடை தேடிக்கொண்டே இந்த தாக்குதல் வெற்றியா தொல்வியா என்ற கேள்விக்கு விடையை இங்கே காணுங்கள். காணமுடியவில்லை என்றால் கொழும்பைத் தெரிந்தவர்களை உதவிக்கு அழையுங்கள்.

http://thileep.free.fr/site/tamil%20tigre.wmv

praveen
22-02-2009, 04:37 AM
ஒரு விமானம் சுட்டு வீழ்த்தியதாக அரசு கூறுகிறது....உண்மை பொய் தெரியவில்லை

கீழே விழுந்தும் மீசையிலே மண் ஓட்டவில்லை என்பது போன்ற பேச்சு தான். 300 கி.மி தூரத்தில் இருந்து பறந்த வந்த போது இவர்கள் இராணுவத்திற்கு சுட்டு விழ்த்த தெரியவில்லை.


[COLOR="DarkRed"]இரு விமானங்களும் கொழும்பு நகரில் தாழப் பறந்து உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் மீது குண்டுகளை வீசி விட்டு, ஒன்று விமானப் படைத் தலமையகம் இருந்த கட்டத் தொகுதியின் மீதும், மற்றையது கட்டுநாயகா விமானத் தளத்தின் மீதும் வீழ்ந்து வெடித்துள்ளதாகத் தெரிகிறது.....
இது தான் சரியான செய்தி, விமானத்தை வைத்தே கட்டிடத்தில் வெடிபொருட்களுடன் நேரிடையாக மோதி தாக்குதல் நடத்தும் நோக்கில் தான் சென்று அதனை வெற்றிகரமாக முடித்திருக்கின்றனர். எந்த வித நவின கருவிகளும் இல்லாமால் டார்ச் லைட் உதவியுடன் கட்டிடத்தை(விமானம் வந்தவுடன் அனைத்து இராணுவ வீரர்களும் நகர் முழுதும் மின்சாரத்தை துண்டித்து விட்டு ஓடி ஒளிந்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்) இனங்கண்டு அதனை மோதி தகர்த்து உயிர் நீத்திருக்கிறார்கள்.


புலிகளின் விமானத்திற்கு ஓடுபாதை தேவையில்லயோ?..
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்பது போல, இந்த விமானங்களை இயக்கி மேலெழும்ப தேசிய நெடுஞ்சாலைகளே போதும் என்று முன்பு ஒருமுறை இலங்கை ராணுவ அதிகாரி ஒருவர் தொடை நடுங்க கொடுத்த பேட்டியில் படித்திருக்கிறேன்.

anna
22-02-2009, 05:15 AM
விடுதலைப்புலிகளுடான போர் இறுதிக்கட்டத்தை அடைத்துவிட்டது, அழித்து விட்டோம் என்று கொக்கரித்த ராஜபக்ஷேவுக்கு வைச்சான்ல ஆப்பு.ஆப்புனுன இது தான் ஆப்பு. கீழ விழுந்தாலும் மீசையில மண் ஒட்டல என்ற பாணிய தான் கடைபிடிக்கிறது போல் இலங்கை அரசு. பிரபாகரனை தமிழீழ தேசிய தலைவர் என்கிறனர். ஆனால் அவரை பயங்கரவாதி என்கிறது இலங்கை அரசு. இதையும் ஆதரிக்கிறது நமது இந்திய அரசு. நமது தமிழினம் அழிவதற்காகவா நமது இந்திய அரசு. என்ன கொடுமை.

சூரியன்
22-02-2009, 10:15 AM
இந்த நிகழ்வின் மூலம் இலங்க அரசுக்கு எதிராக புலிகள் இன்னும் தாக்குதல் நடத்துவார்கள் என தெரிகின்றது

அய்யா
24-02-2009, 05:39 PM
புலிகளிடம் வேறு விமானங்கள் இன்னும் இருக்கின்றனவா?

அமரன்
24-02-2009, 08:47 PM
புலிகளிடம் வேறு விமானங்கள் இன்னும் இருக்கின்றனவா?

புலிகள் ஏதோ ஒரு நாட்டிலிருந்து ஆறு வானூர்திகளை தயாரிக்கக் கூடியளவு உதிரிப்பாகங்களை தருவித்துள்ளார்கள் என்று இலங்கை அரசு கூறி உள்ளது. எதுவானாலும் அது புலிகளுக்கே வெளிச்சம்.

ஓவியன்
25-02-2009, 01:16 PM
புலிகளிடம் வேறு விமானங்கள் இன்னும் இருக்கின்றனவா?

முன்னர் நடந்த புலிகளின் விமானத்தாக்குதல்களின் போது, வெவ்வேறாக இரண்டு விமானங்களை தாம் சுட்டு வீழ்த்தியதாக இலங்கை பாதுகாப்பு அமைச்சக உத்தியோகபூர்வ தளம் கூறியது....

அதற்கு முன்னர் நாச்சிக்குடாவில் விமானம் ஒன்று வீழ்ந்து நொருங்கிய சிதைவுகள் மீட்கப்பட்டதாக அதே தளம் கூறியது...

பின்னர் இறுதியாக இந்த கொழும்பு தாக்குதல்களுக்கு முன்னைய தினம் புலிகளின் இரண்டு விமானங்களின் எரிந்து மீதமான பகுதிகளைப் புதுக்குடியிருப்பில் கைப்பற்றியதாக அதே தளம் கூறியது....

அதன் பின்னர் இப்போது, இரண்டு விமானங்கள் வந்து மோதியுள்ளன...

இந்த தகவல்களை வைத்துக் கொண்டு, இப்போது நீங்களாகவே கணக்குப் போட்டுக் கொள்ளுங்களேன்....!! :icon_rollout:

அய்யா
25-02-2009, 01:52 PM
2+1+2+2=7.

இதுவரைக்கும் ஏழு.

நான் கேட்டது இன்னும் இருக்கான்னு!

:)

அய்யா
25-02-2009, 01:53 PM
புலிகள் ஏதோ ஒரு நாட்டிலிருந்து ஆறு வானூர்திகளை தயாரிக்கக் கூடியளவு உதிரிப்பாகங்களை தருவித்துள்ளார்கள் என்று இலங்கை அரசு கூறி உள்ளது. எதுவானாலும் அது புலிகளுக்கே வெளிச்சம்.

நன்றி அண்ணா!

ஓவியன்
25-02-2009, 02:01 PM
2+1+2+2=7.
இதுவரைக்கும் ஏழு.

நான் கேட்டது இன்னும் இருக்கான்னு! :)

இது போல இலங்கைப் பாதுகாப்பு அமைச்சக தளம் இன்னொருதடவை கூறினால் இன்னும் இருக்குனு உறுதியாயிடும்...!! :):D:)

________________________________________________________________________________________________

ஆனால், அமரன் கூறியதுதான் உண்மை அய்யா...
எல்லாமே அவர்களுக்கு மட்டுமே வெளிச்சம்..!!

கடந்த நாட்களாக புதுக்குடியிருப்பில் கடும் சமராடியிருக்கிறார்கள், பெரிய எண்ணிக்கையில் (ஆயிரக் கணக்கில்) இராணுவத்தினர் கொல்லப்பட்டிருக்கலாமென புலிகளது உத்தியோகபூர்வ வானொலியான புலிகளின் குரலின் நேற்றைய இரவுச் செய்தியில் கூறப்பட்டது.

ஆனால், உத்தியோக பூர்வமாக முழுமையான விபரங்களேதும் இன்னமும் வெளிவிடப்படவில்லை...

அறிஞர்
25-02-2009, 02:03 PM
கடந்த நாட்களாக புதுக்குடியிருப்பில் கடும் சமராடியிருக்கிறார்கள், பெரிய எண்ணிக்கையில் (ஆயிரக் கணக்கில்) இராணுவத்தினர் கொல்லப்பட்டிருக்கலாமென புலிகளது உத்தியோகபூர்வ வானொலியான புலிகளின் குரலின் நேற்றைய இரவுச் செய்தியில் கூறப்பட்டது.

ஆனால், உத்தியோக பூர்வமாக வெளியே இன்னமும் எந்த அறிக்கையையும் அவர்கள் வெளிவிடவில்லை... புதிய செய்தியாக உள்ளது. இப்படி பதிலடி உடனுக்கு உடன் கொடுத்தால்.. யுத்தம் நீடிக்குமே.
சாதாரண மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதே எம் விருப்பம்.

ஓவியன்
25-02-2009, 02:10 PM
புலிகளின் குரல் வானொலியின் நேற்றைய இரவு செய்தி அறிக்கையின் அடிப்படையிலானது இந்த செய்தி(இணையத்தில் இன்னமும் அதிகார பூர்வ அறிக்கையினை புலிகள் வெளிவிடவில்லை), புதுக்குடியிருப்பை ஐந்து முனையிலிருந்து வல்வளைப்பு செய்ய முனையும் இராணுவத்தினருக்கெதிராக புலிகள் கடும் சமர் தொடுத்துள்ளனரெனத் தெரிகிறது.

அய்யா
25-02-2009, 02:12 PM
புதிய செய்தியாக உள்ளது. இப்படி பதிலடி உடனுக்கு உடன் கொடுத்தால்.. யுத்தம் நீடிக்குமே.
சாதாரண மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதே எம் விருப்பம்.

எம் விருப்பமும் அதுவே!

வீரத்தைக் காட்டுமிடத்து, அண்டியுள்ளோருக்கு மேலும் தீங்கு ஏற்படாவகையில் பார்த்துக்கொள்ள வேண்டும்.

அமரன்
25-02-2009, 06:16 PM
எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும். இலக்கை அடைய முன்னர் சுட்டு வீழ்த்தினோம் என்று இலங்கை அரசு சொல்கிறது. ஆனால் நான் இதுவரை ஒரு வானூர்தியின் சிதைந்த உடலங்கைளை மட்டும்தான் ஊடகங்களில் கண்டுள்ளேன். அப்படியெனில் மற்றது எங்கே. அதுதான் இது என்ற அரசாங்கம் காமெடி பண்ணுமோ அல்லது மற்ற வானூர்தியின் உடலச்சிதைவுகளை நான் கண்ணுறவில்லையோ.

நிரன்
25-02-2009, 06:52 PM
புலிகளின் குரல் வானொலியின் நேற்றைய இரவு செய்தி அறிக்கையின் அடிப்படையிலானது இந்த செய்தி(இணையத்தில் இன்னமும் அதிகார பூர்வ அறிக்கையினை புலிகள் வெளிவிடவில்லை), புதுக்குடியிருப்பை ஐந்து முனையிலிருந்து வல்வளைப்பு செய்ய முனையும் இராணுவத்தினருக்கெதிராக புலிகள் கடும் சமர் தொடுத்துள்ளனரெனத் தெரிகிறது.


கடந்த மூன்று நாட்களாக இந்த ஐந்து முனை முன்னேற்றத்தை எதிர்கொண்டு விடுதலைப் புலிகள் நிகழ்த்தும் உக்கிர சண்டையில் இதுவரை ஆகக்குறைந்தது 1,000 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 3,000-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர் என விடுதலைப் புலிகளின் சமர்-கட்டளைப் பீட வட்டாரங்கள் புதினத்திடம் தெரிவித்தன

இது உத்தியோக பூர்வமான தகவல் இல்லையா:confused:

தூயவன்
26-02-2009, 02:33 AM
எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும். இலக்கை அடைய முன்னர் சுட்டு வீழ்த்தினோம் என்று இலங்கை அரசு சொல்கிறது. ஆனால் நான் இதுவரை ஒரு வானூர்தியின் சிதைந்த உடலங்கைளை மட்டும்தான் ஊடகங்களில் கண்டுள்ளேன். அப்படியெனில் மற்றது எங்கே. அதுதான் இது என்ற அரசாங்கம் காமெடி பண்ணுமோ அல்லது மற்ற வானூர்தியின் உடலச்சிதைவுகளை நான் கண்ணுறவில்லையோ.

அண்ணா அது தான் இறை வரி திணைக்களத்தின் 13வது மாடியில் சிக்கி கிடந்ததே.
கெகலிய இந்த காமடியை அடித்தாலும் அடிபார் :D

ஓவியன்
26-02-2009, 04:53 AM
இது உத்தியோக பூர்வமான தகவல் இல்லையா:confused:

அது செய்திதான் நிரன், முழுமையான அறிக்கையல்ல, உண்மையில் புலிகளின் குரல் வானொலியில் கூறப்பட்ட அதே தகவல்களைத் தவிர மேலதிகமாக எதனையும் புதினம் வெளிவிடவில்லை. அடுத்து புலிகளின் தாக்குதல்கள் தொடர்பான முழுமையான அறிக்கைகள் முதலில் தமிழ்நெட் தளத்தில் வருவதுதானே வழமை....

வசீகரன்
26-02-2009, 05:17 AM
அடிச்சா கேக்க நாதியில்ல என்று ஒரேயடியாக ஆணவ ஆட்டம் ஆடிக்கொண்டிருக்கும்
சிங்களனுக்கு இவ்வளவு இன்னல்கலிடேயும்... கழுத்துநெரிப்பு சோதனைகளிலும் புலிகளின் இந்த வான்தாக்குதல் அவனுக்கு நெத்தியடியாய் இருந்திருக்கும்....

ஓவியன்
28-02-2009, 06:21 AM
http://www.youtube.com/watch?v=yZ7RqPBoep0