PDA

View Full Version : பெருமைக்குரிய மனித இனமே (சிறுகதை-29)ரங்கராஜன்
19-02-2009, 08:30 AM
பெருமைக்குரிய மனித இனமே

2099 பசுமையான மூங்கில் காட்டுக்கு நடுவில் கட்டப்பட்ட இதயவடிவில் ஆன மிகப்பெரிய கட்டிடத்தின் வாசலில் கூட்டம் நிரம்பி வழிந்தது (வழக்கம் போல), கட்டிட நுழைவாயிலில் அனைவரும் கனத்த மெளனத்துடன் நின்றுக் கொண்டு இருந்தனர். அந்த கட்டிடத்தின் முகப்பில் ”டி.சி (DC) ஹவுஸ்” என்று பெரிய எழுத்து மின்னியது, தன்னுடைய முறைக்காக வாசலில் காத்துக் கொண்டு இருந்தாள் ஜெனி #99,அவளுடைய முறை வந்தது, வாசலில் இருந்த இயந்திர மனிதன் இன் முகத்துடன் அவளை அழைத்தான்.

“வாங்க பெருமைக்குரிய மனித இனமே, உங்களின் வலது காலின் கட்டைவிரலையும், இடது கையின் சுண்டு விரலையும் கீழே அம்பு குறி எரியும் இடத்தில் ஒரே நேரத்தில் வைக்கும்படி தாழ்மையுடம் கேட்டுக் கொள்கிறேன்” என்று இயந்திரன் காத்துக் கொண்டு இருந்தான். ஜெனியும் அதே போல தன்னுடைய கால் விரலையும், கை விரலையும் இயந்திரத்தில் பொருத்தினாள்.

“நன்றி மிஸஸ். ஜெனி #99, உங்களுக்கு ஒதுக்கப்பட்ட அறை 999, தெய்வதின் பெயர் ராம்பால். நன்றி. நீங்கள் வந்த காரியம் வெற்றி அடைய வாழ்த்துகிறேன்” என்ற இயந்திரன் அடுத்த
பார்வையாளரிடம் இதே வார்த்தைகளை ஒப்பிக்க போனான்.

ஜெனிக்கு ராம்பால் என்றதும் சந்தோஷம் அளவு கடந்து போனது, அவசரம் அவசரமாக அறை எண் 999 க்குச் சென்றாள், கதவை திறந்ததும் டாக்டர். ராம்பால் அமர்ந்து இருந்தார். ஜெனி அவரை நெருங்கினாள்.

”வாங்க மிஸஸ் ஜெனி #99, நீங்கள் எந்த விஷயமாக வந்து இருக்கிறீர்கள் என்று எனக்கு நீங்கள் ரிப்போர்டு முன்பே அனுப்பி இருக்க வேண்டும். ஆனால் நீங்கள் செய்யவில்லை அதனால் உங்களின்
இந்த சந்திப்பை நான் ரத்து செய்கிறேன், நன்றி” என்று கூறிவிட்டு தன்னுடைய அறையில் இருந்த இயந்திரனை பார்த்தார், அது உடனே இவளிடம் வந்து நின்றது இயந்திரத்தின் வயிற்று பகுதியில் நம்பர் 10 நொடியில் இருந்து குறைய ஆரம்பித்தது. 9 ....8....7...

ஜெனி பதட்டத்துடன் “தெய்வமே, நீங்கள் என்னை மன்னிக்கவும், உங்களிடம் நான் தனியாக பேச வேண்டும் என்று எண்ணித்தான் நான் ரீப்போர்டை அனுப்பவில்லை. அதுவும் இல்லாமல் இது மிகவும் அவசரமான விஷயம், இது என்னுடைய உயிர் சம்பந்தமான விஷயம் தெய்வமே காப்பாத்துங்கள்” என்று கதறினாள், ஆனால் கண்களில் இருந்து ஒரு சொட்டு கண்ணீர் வரவில்லை.

“மிஸஸ்.ஜெனி #99, நீங்கள் எவ்வளவு முயற்சித்தாலும் கண்ணீர் வரப் போவது இல்லை, அந்த சுரபியை இங்கு வந்தவுடனே உங்கள் கண்ணில் இருந்து நீக்கிவிட்டனர், நல்லவேலையாக!. நீங்கள் கிளம்பலாம்” என்றார்.

3...2...1.

இயந்திரன் ஜெனியை அப்படியே தூக்கினான் “மன்னிக்க வேண்டும் பெருமைக்குரிய மனித இனமே, விதிகளை மீறுவது சட்டப்படி குற்றம், உங்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று எனக்கு பெருமைக்குரிய தெய்வத்திடம் இருந்து கட்டளை வந்து இருக்கிறது” என்று அவளை தூக்கிக் கொண்டு வெளியே சென்றது.

“ஏய் முட்டாள் சனியனே, நீ யார் எங்களுக்கு நடுவில், என்னை தெய்வத்திடம் கொண்டு விடு, நான் இன்னும் கொஞ்ச நேரத்தில் சாகப்போறேன், விடு என்னை” என்று தன் கை கால்களை உதைத்தாள்.

“நீங்கள் சொன்ன முதல் மூன்று வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரியவில்லை. உங்களை இங்கு விட எனக்கு அனுமதி இல்லை, வாசலில் சென்று விட தான் அனுமதி, ஒத்துழையுங்கள் பெருமைக்குரிய மனித இனமே”

டாக்டர்.ராம்பால் ஜெனி சொன்ன வார்த்தைகளை கேட்டு தன்னுடைய அறையில் இருந்து வெளியே வந்தார்.

“மிஸஸ்.ஜெனி #99 நீங்கள் கூறுவது உண்மையா” என்றார்

“நம்முடைய முன்னோர்கள் மீது ஆணையாக தெய்வமே” என்றாள்.

டாக்டர். ராம்பால் இயந்திரனை நோக்கி “கேன்ஸல் கமெண்ட் 087” என்று ஆணை பிறப்பித்தார். இயந்திரன் சற்றென்று நின்றான், மின்னல் வேகத்தில் திரும்பி ஜெனியை தூக்கிய நாற்காலியிலே அமர்த்தி விட்டு ஓரத்தில் போய் நின்றுக் கொண்டான்.

“என்ன மிஸஸ்.ஜெனி #99, இந்த டேத் கவுஸலிங் ஹவுஸின் விதிமுறை தெரியுமா உங்களுக்கு?, இறப்பதற்கு மூன்று மாசம் முன்பே இங்கு நீங்கள் பதிவு செய்திருக்க வேண்டும், நீங்கள் இறப்பதற்கு சில நொடிப் பொழுதுக்கு முன் வந்து இங்கு காப்பாற்ற சொல்லி கூறுவது விதிகளுக்கு புறம்பானது.

“இல்ல தெய்வமே நான் இங்கு இருக்க விரும்பவில்லை, அதனால் தான் வைரஸை சாப்பிட்டு விட்டேன்” என்றாள்.

“மிஸஸ்.ஜெனி #99 நீங்கள் என்னை குழப்புகிறீர்கள், வைரஸை சாப்பிட்டு விட்டு, ஏன் இப்பொழுது உங்களை காப்பாற்ற சொல்லி என்னை வற்புருத்துகிறீர்கள்” என்றார் ராம்பால் புருவத்தை தேய்த்தப்படி.

“இல்ல தெய்வமே, நான் என்னை காப்பாற்ற சொல்லி உங்களிடம் வந்ததுக்கு காரணம், இன்று காலை தான் எனக்கு பூமிக்கு மாற்றுதல் வந்து இருக்கு, அடுத்த வாரம் நான் பூமிக்கு சென்று விட வியாழன் கிரகத்தில் அனுமதி அளித்து விட்டனர். நான் பல வருஷமாக எதிர்பார்த்துக் கொண்டு இருந்த வாய்ப்பு இது, என்னுடைய குழந்தைகள், கணவன் எல்லாரும் அந்த பூமி கிரகத்தில் தான் இருக்கிறார்கள். அங்கு திரும்பி செல்லாமல் இறந்துவிடுவேனோ என்ற வெறுப்பில் தான், நான் வைரஸ் சாப்பிட்டேன். ஆனால் இப்ப அந்த வாய்ப்பு கிடைத்து விட்டது, அதனால் தயவு செய்து என்னை காப்பாற்றுங்கள், நான் வாழ விரும்புகிறேன், என் குழந்தைகளிடம் ஒரே ஒரு முத்தம் வாங்கி விட்டு உயிர் துறந்தால் கூட போதும்” என்று கண்ணீர் வராமல் அழுதாள்.

“சரி என்ன வைரஸ் சாப்பிட்டீர்கள், எப்பொழுது சாப்பிட்டீர்கள்” என்று வினாவினார் ராம்பால் பெருமூச்சுடன்.

“ஹாண்டா வைரஸை சாப்பிட்டு இருக்கிறேன், சாக்லெட்டில் கலந்து” என்றாள்.

“அது எலிகளால் உண்டாகும் வைரஸ் ஆச்சே, அது தடை செய்யப்பட்ட வைரஸ் ஆச்சே, எலிகள் நம்ம கிரகத்தில் கிடையாது ஆச்சே, எப்படி உங்களுக்கு கிடைத்தது”

“நான் ஒரு வைரஸ் வியாபாரி, என்னிடம் அனைத்து விதமான நல்ல மற்றும் கெட்ட வைரஸும் கிடைக்கும், பூமி அரசின் மேற்பார்வையில் வியாபாரத்திற்கு இங்கு வந்தேன்....... இப்பொழுது பேச நேரம் இல்லை. என்னை காப்பாற்றுங்கள்”

“மன்னிக்கனும் அதற்கான மருந்து எங்களிடம் இல்லை. அதுவும் இல்லாமல் இது சட்ட விரோதம், என்னால் எதுவும் செய்ய முடியாது” என்று இயந்தரனை டாக்டர் ராம்பால் ஒரு பார்வை பார்த்தார்.

உடனே ஓரத்தில் இருந்த இயந்திரன் ஜெனியை அப்படியே தூக்கிச் சென்று வெளியில் விட்டான். ஜெனியும் தன்னுடைய உடம்பில் கொஞ்சம் கொஞ்சமாக வைரஸ் ஏறி இறக்கும் தருவாயில்

“என்னுடைய குழந்தைகளை பார்க்காமால் செல்கிறேனே, ஐ லவ் யூ மக்கி, ராக்கி” என்று கூறிக் கொண்டு கீழே சரிந்தாள்.

பீப் பீப் பீப் பீப் என்று ஃப்யுச்சர் டிடக்டிங் மஷினில் (future detecting machine) இருந்து சத்தம் வந்தது. அதில் இருந்து வெளியே வந்தாள் ஜெனி #99, கண்களின் ஓரத்தில் லேசாக கண்ணீர் இருந்தது. அந்த இயந்திரத்தை விட்டு வெளியே வந்த ஜெனியை நெருங்கிய ஒரு இயந்திரன்

“மிஸஸ். ஜெனி #99 எங்களை மன்னிக்க வேண்டும், நீங்கள் வியாழன் கிரகத்துக்கு செல்ல தகுதி இல்லாதவர் என்று நிருபிக்கப்பட்டு விட்டது. நீங்கள் இன்னும் மனிதனுடைய பாசம் என்னும் கொடூர குணத்துடன் இருப்பதாலும் பத்து வருடம் கழித்து வியாழன் கிரகத்தில் சட்டம் ஒழுங்கை மீறப்போவதாலும் உங்களை வருங்கால குற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவு இடுக்கிறேன். நன்றி பெருமைக்குரிய மனித இனமே” என்றான் அந்த இயந்திரன்.

arun
19-02-2009, 05:34 PM
கதை அருமையாக இருக்கிறது தக்ஸ் சொல்ல வந்த கருத்தை அழகாக சொல்லி உள்ளீர்கள் பாராட்டுக்கள்

அமரன்
19-02-2009, 08:17 PM
அருணின் கருத்தை ஆமோதிக்கிறேன் தக்ஸ்.

முதல் வார்த்தையிலிருந்தே வாசகனை கட்டிப்போடும் வகையில் கதையை நகர்த்தி உள்ளீர்கள். எனக்குப் பிடித்தமான அறிவியல்+எதிர்கால விருந்து படைத்துள்ளீர்கள். நன்றியும் பாராட்டும்

Khadalan
19-02-2009, 08:31 PM
கதை என்ற விதத்தில் நன்றாக உள்ளது. எதிர்காலத்தில் அன்பு இருக்காது எனும்பொழுது மனது வலிக்கிறது. நண்பரே..!!!!!!

ரங்கராஜன்
20-02-2009, 02:55 AM
ரொம்ப நன்றி அருண், நீங்க தொடங்கி வச்சீங்க. அமரனிடமே பாராட்டு கிடைத்து விட்டது. நன்றி அமரன். நன்றி காதலன் எனக்கு வலித்தது தான், எனென்றால் பாசங்கள் கொஞ்சம் கொஞ்சமாக இப்பொழுதே மறைந்து விருக்கிறது, எதை காரணம் காட்ட அறிவியளா?, பணமா? பயமா? சுயநலமா? பிற்காலம் நமக்கு மிக மிக கடினமாக இருக்கும் பழைய படி வாழ.

நன்றி பாசமலரே
இப்பொழுதே பாசத்தின் மதிப்பு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துக் கொண்டே தான் வருகிறது, பிற்காலத்தில் பாசமாக இருப்பவர்கள் சிறையில் அடைக்கப்படலாம், தீண்டதகாதவராய் அடைக்கப்படலாம். என்ன செய்வது தனியாக ஒரு அறையில் அழுதுக் கொள்ள வேண்டியது தான்.

samuthraselvam
20-02-2009, 06:04 AM
அண்ணா எதிர் காலத்தில் இப்படியெல்லாம் நடக்குமா? பாசமே இல்லாமல் போகுமா? மனிதனுக்கு மதிப்பு இல்லாமல் போனால்.....பாசமும் இல்லாமல் போகும் இல்லையா? இயந்திரத்துடன் வாழ வேண்டிய நிர்பந்தம் ஏற்படும் போது கண்டிப்பாக பாசத்திற்கு பதில் இயந்திரத்தனம் தான் வரும். கதை ராஜேஷ்குமார் நாவல் படித்த மாதிரி இருந்தது. அறிவியல் சம்பந்தப்பட்ட கதைகள் படிப்பதே ஒரு சுவாரசியம். சூப்பர் அண்ணா...

மதி
20-02-2009, 08:05 AM
அசத்தலாய் தக்ஸின் கதை... கண்முன்னே காட்சி விரிகிறது. சொல்லப்போனால் சுஜாதாவின் சாயல் நிறையவே தெரிகிறது.
வாழ்த்துக்கள் தக்ஸ்.

ரங்கராஜன்
20-02-2009, 08:32 AM
அசத்தலாய் தக்ஸின் கதை... கண்முன்னே காட்சி விரிகிறது. சொல்லப்போனால் சுஜாதாவின் சாயல் நிறையவே தெரிகிறது.
வாழ்த்துக்கள் தக்ஸ்.

நன்றி மதி
நீ கூறுவது உண்மை தான் மதி, சுஜாதா ஐயா நிறைய விஞ்ஞான கதைகளை எழுதி தள்ளி விட்டார், இப்போ நாம் என்ன தான் எழுதினாலும் அவருடைய சாயல் வரத்தானே செய்யும், அதுவும் அவரின் தீவிர வாசகனான என்னிடம் அந்த சாயல் இருப்பது ஆச்சர்யம் இல்லை, என்ன சொல்றீங்க???????:icon_b::icon_b:

ரங்கராஜன்
20-02-2009, 08:33 AM
அண்ணா எதிர் காலத்தில் இப்படியெல்லாம் நடக்குமா? பாசமே இல்லாமல் போகுமா? மனிதனுக்கு மதிப்பு இல்லாமல் போனால்.....பாசமும் இல்லாமல் போகும் இல்லையா? இயந்திரத்துடன் வாழ வேண்டிய நிர்பந்தம் ஏற்படும் போது கண்டிப்பாக பாசத்திற்கு பதில் இயந்திரத்தனம் தான் வரும். கதை ராஜேஷ்குமார் நாவல் படித்த மாதிரி இருந்தது. அறிவியல் சம்பந்தப்பட்ட கதைகள் படிப்பதே ஒரு சுவாரசியம். சூப்பர் அண்ணா...

நன்றி பாசமலரே

அமரன்
20-02-2009, 10:19 AM
நன்றி பாசமலரே
இப்பொழுதே பாசத்தின் மதிப்பு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துக் கொண்டே தான் வருகிறது, பிற்காலத்தில் பாசமாக இருப்பவர்கள் சிறையில் அடைக்கப்படலாம், தீண்டதகாதவராய் அடைக்கப்படலாம். என்ன செய்வது தனியாக ஒரு அறையில் அழுதுக் கொள்ள வேண்டியது தான்.

தக்ஸ்.

முக்காலத்திலும் தேவையான அளவில் பாசம் கிடைத்தால் போதும். அளவு கடந்த பாசம் கைதியாக்கும். கதை நடந்த களத்திலும் அதுவே நடந்தது.

காதலன் எண்ணமே கதை படித்த கணத்தில் என்னுள்ளும் ஓடியது. கொஞ்ச நேரம் யோசித்ததும் அந்த எண்ணம் ஒடிப் போய்விட்டது.

சிவா.ஜி
23-02-2009, 08:18 AM
நல்ல கதை தக்ஸ். பாசம் என்பது எதிர்காலத்தில் தேவைப்படாத ஒன்று என சொல்லியிருப்பது சற்றே வருத்தமாக இருந்தாலும் எதார்த்தம் சுடுகிறது.

நடை பிரமாதம். ரொம்ப நல்ல முன்னேற்றம். அருமையான கதைக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் தக்ஸ்.