PDA

View Full Version : முதல்வர் கலைஞருக்கு ஓர் கடிதம்!



இறைநேசன்
19-02-2009, 04:22 AM
(மிக அருமையான வரிகளில் அழகுதமிழில் உள்ளது விரும்பியவர்கள் படிக்கலாம் வேண்டாம் என்றால் நீக்கிவிடலாம்)


பல்கோடித் தமிழினத்தின் தன்நிகரில்லாத் தலைவனே! நீர் வாழ்க. தமிழ்த்தாயின் மானத்தினைக் காத்திடும் தரணிபோற்றும் தனயனே! வாழ்க நீடூழி. தமிழினம் இதுவரைநாள் கண்டிராத, கேட்டிராத, சரித்திரத்தின் நாயகனே பல்லாண்டு வாழ்ந்திடுவீர். நீர் தமிழின்பாலும் தமிழரின் சுயகௌரவத்தின்பாலும் அவர்களின் வருங்கால சந்ததியினரின் மானத்தின்பாலும் காட்டிவரும் ஊக்கத்தினையும் உழைப்பினையும் நான் என்னென்று சொல்வேன் தலைவா. உம்மை தமிழினத்தின் தங்கத் தலைவன் என்பதா? சங்கம்காத்த சிங்கத் தமிழன் என்பதா?. சீதையை வர்ணிக்க முடியாமல் கம்பனோ "ஐயகோ" என்றதுபோல், உம்மையும் என்னால் வர்ணிக்க முடியவில்லையே தலைவா!.

தமிழ்த்தாயின் தலைமகனே! உம்மைப் புகழ்ந்துவிடக்கூடிய அந்தத்தமிழுக்காக ஏங்கித்தவிக்கும் இந்த ஏழைக்கு உமது நாவில் மட்டுமே விளையாடும் அந்த இனிய தமிழினைத்தான் தந்துதவி செய்திடுவீர். இவ்வாறெல்லாம் தலைவரே உம்மைப் புகழ்ந்திடவும் வாழ்த்திடவும் என்மனமோ ஏங்கி நிற்கின்ற வேளையில்.. உண்மைக்கு மாறாக வாழ்த்திடவும் தயங்கி நிற்கின்றது.

நம் முன்னோர்கள் கட்டிக்காத்த எம்மினத்தின் கௌரவத்திற்கு உம் ஆட்சியானது இன்று ஒரு மாபெரும் பங்கத்தையும் அந்த ஏழரைக்கோடிக்கொரு ஏழரைச்சனியனாகவுமே உள்ளதுவே தலைவா. வரலாற்றை தேடித்தேடி படைத்தார்கள் நம் பொறுப்புள்ள முன்னோர்கள். இன்று உமக்காக ஒரு வரலாறு ஈழத்திலே ஏங்கித் தவித்துக் கொண்டிருக்கின்ற சமயத்தில் உம்சுயநலத்தை எண்ணுகின்றீரே. ஊரறியக்கூடிய மூன்று முனைகளிலே உருவாகியுள்ள உம் மக்களின் நலங்களையே எண்ணுகின்றீரே.


புகழின் மயக்கம் மக்களின் பாராட்டில் வரவேண்டும் தலைவரே. அதுவே உம் சந்ததி உட்பட எவருக்கும் சிறந்ததும் நேர்மையானதும் வீரமானதும் நிலையானதுமாகும.; "எவ்வளவு காலம் ஒருவன் வாழ்ந்தான் என்பது முக்கியமல்ல தலைவரே அவன் எப்படி வாழ்ந்தான் என்பதே முக்கியமானது" என்பது ஒரு முதுமொழியாக இருந்தாலும் வள்ளுவனின் குறளைப்போன்று எப்போதும் அது புதுமையானது என்பதில் யாருக்கும் ஐயமில்லை. இது அரசியலிலேயே வாழ்நாட்களை அர்ப்பணித்துக் கொண்டு மக்களையே நம்பிவாழும் தங்களைப்போன்ற மனிதர்களுக்கு மிகவும் பொருத்தமாகும்.

என் அரசியல் வாழ்க்கைக்கு இப்பொழுது ஐம்பது வயதாகிறது என்றும் அறுபது வயதாகிறது என்றும் மார்தட்டிக் கொள்ளும் நேரங்களில் என் மக்களுக்கும் என் நாட்டிற்கும் அவைகளின் வருங்கால நன்மைகள் கருதியும் நான் என்ன செய்து விட்டேன் என்றும் அந்த ஆசைநெஞ்சைக் கேட்டுக் கொள்ளுங்கள். அதற்கான பதில்களை நீங்களே நினைத்துக் கொள்ளாமல் அதனையே சுயமாக கூறவிடுங்கள். பேரறிஞர் அண்ணா அவர்கள் சரியாக இரண்டு வருடங்கள்கூட ஆட்சியில் அமர்ந்ததில்லை. ஆனால் இன்று மட்டுமல்ல என்றும் இதுபோன்ற புகழுடன்தான் அவர் வாழ்ந்து கொண்டிருப்பார். தமிழக மக்களின் நன்மை கருதிய அவர் ஆட்சியும் தான் ஒரு முதலமைச்சர் என்ற பெருமை இல்லாமலும் அதனால் அடைந்திருக்கக் கூடிய நேர்மையான குறுக்குவழியிலான நன்மைகளை பொருட்படுத்தாமலும் ஆனால் தன் குடும்பத்திற்கு வறுமையை மட்டுமே காட்டி வாழ்ந்ததுவே தான் அண்ணாவின் என்றும் புகழின் இரகசியம்.

இதைவிடுத்து அரசியலில் மாற்றானுக்கு கைகட்டி நின்றும் அவன் விருப்பமே உம்விருப்பம் என்றும் தமிழினத்தை கேவலமாக எண்ணும் அவனின் நினைப்பிற்கு உதவிபுரிந்தும் உம்மக்கள் நலம் ஒன்றேதான் என்றும் எண்ணி தமிழினத்தின் முன்னோர் காத்த கௌரவத்தினை தட்டினிலே போட்டு விற்றுக் கொண்டும் காலம் கழிக்கும் துரோகச்செயலை என்றுமே தமிழினம் மன்னிக்காதது மட்டுமலல இதற்கான ஆண்டவனின் தண்டனை உம்மையும் உம் அன்புச் செல்வங்களையும் அடைந்தே தீரும்.

எத்தனையோ பிஞ்சுகள் சிறுவர்கள் பெண்கள் இளைஞர் வயோதிபர் என்று சிங்கள —– அரசாங்கத்தினாலும் இந்திய ——- அரசினாலும் திட்டமிட்டு கொடூர முறைகளில் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கும் போது தமிழக அரசியலில் ஒரு பொறுப்பான பதவியிலிருந்தும் இதனை கண்டு கொள்ளாமலும் உமதும் உம் இச்சையின் செல்வங்களுக்கும் நன்மையென கருதி உம் குடும்பமே பழிகளை சுமந்து கொண்டிருப்பதனை அறியாமலிருக்கின்றீர். ஏழைகளின் கண்ணீரும் கம்பலையும் துன்பமும் துயரும் உம் செல்வங்களை எதிர்காலம் வாழவைக்குமென்று நீர் எண்ணுவீராகவிருப்பின் இயற்கையினதும் கடவுளினதும் கூத்துக்களையும் மற்றும் கடந்த காலத்தில் உம்மைப் போன்றவர்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களையும் அறியாத ஒரு பாவியாகவே நீர் இருந்து கொள்கிறீர்.

சரித்திரங்கள் என்பவை சந்தைகளில் கிடைப்பனவுமல்ல அவைகள் சாமான்ய பொருட்களும் அல்ல கலைஞரே. உண்மையான நேர்மையான சத்தியங்களால் உருவாக்;கப்பட்டு எத்தனையோ தியாகங்களால்
பெறப்படுபவைகளே சரித்திரங்கள். சரித்திர நாயகர்களின் முதல் எதிரி
சுயநலமாகும். சுயநலத்தையும் காக்க வேண்டும் அத்தோடு ஒரு சரித்திரத்தையும் படைத்திட வேண்டும் என்று விரும்பிய எண்ணிலடங்கா மானிடர்களில் எவரும் வென்றதாகவுமில்லை கடையில் அவர்கள் மக்கள் மத்தியில் அழிந்து போனதே வரலாறுகள் தரும் உண்மை.

சரித்திரங்களுக்காக தம் இன்னுயிர்களை அர்ப்பணித்தோரோ ஏராளம். ஆனால் இன்று ஈழத்திலோ உமக்காக ஓரு சரித்திரம் ஏங்கிக் கொண்டிருக்கின்றது. பேரறிஞர் அண்ணா அவர்கள் ஒருமுறை
விவசாயப்பெருங்குடி மக்கள் மத்தியில் பேசுகையில்.. "விதை செத்துத் தான் பயிர் முளைக்கின்றது. விதை சாகாமல் பயிர் முளைப்பதில்லை. விதையை நாம் அப்படியே உண்டு விட்டோமானால் எதிர்கால சந்ததியினருக்கு அது தீங்காகி விடும்" எனக்கூறினார். எதிர்கால பிள்ளைகளுக்காக நாம் இக்காலத்தில் தியாகங்களைச் செய்ய வேண்டியிருப்பதனை விவசாயிகள் மத்தியில் விதையை வைத்து உதாரணம் காட்டினார் அண்ணா. அந்த தெய்வங்கள் வாழ்ந்த பூமி எங்கே?

இன்று

சுயநலத்தின் கும்பல்கள் வாழும் பூமி இங்கே!! அண்ணாவின் அறிவிற்கும் அவர் செல்வாக்கிற்கும் சுயநலம் என்ற ஒன்றை அவர் விரும்பியிருந்தால் எப்படியோ வாழ்ந்திருக்கலாம். அண்ணா மட்டுமல்ல தந்தை பெரியாரும் வசதியுள்ள குடும்பத்தில் வாழ்ந்தவரே. கட்சித்தலைவர் என்றொரு பதவியன்றி வேறொரு பதவியுமில்லாமல் தன்வாழ்நாள் முழுதும் உழைத்த மேதையவர். உண்மையான தலைவன் மக்கள் மத்தியில் எப்போதும் வாழ்வான் என்பதற்கு பெரியார் ஓர் நல்ல உதாரணமாகும். குழந்தைச் செல்வங்கள் உட்பட அனைத்து தமிழ் உள்ளங்களிலேயும் ஆழமாக பதிந்துவிட்ட மகாகவி பாரதியார் மட்டுமென்ன இளைத்தவரா?. தனக்குத் தெரிந்த தமிழுக்கும் ஆங்கிலத்திற்கும் அவர் சுயநலம் என்ற ஒன்றை எண்ணியிருந்திருந்தால் தன்னுடைய குடும்பத்தை வறுமை நெருங்காமலே வாழ்ந்திருக்கலாம். ஆனால் அவர் தமிழை நினைத்தார். அதன் எதிர்காலத்தைப் பற்றி கவலைப்பட்டார். அதன் பதில் இன்றும் என்றும் தமிழ் உள்ளங்களில் வாழ்கின்றார். சாகாவரமும் பெற்றுவிட்டார்.

இதேபோன்று அன்னியனுக்கு அடிபணியாத கட்டப்பொம்மன் இன்றும் வாழ்வது ஏன்?. அன்று அவன் தன்னைப்பற்றியே சிந்தித்திருந்தால் இன்று இருநூறு ஆண்டுகளின் பின்பும் வாழ்ந்து கொண்டிருப்பானா?. சிந்தித்துப்பாரும் கலைஞரே. ஏன்! மிக அண்மையில் வாழ்ந்த புரட்சித்தலைவர் எம்.ஐp.ராமச்சந்திரன் மட்டும் எதில் குறைந்து விட்டார். இந்தியாவின் வரலாற்றில் மிகவும் பலமானவரும் இராஐதந்திரியுமான இந்திராகாந்தி அம்மையாரையே தன் விடாப்பிடியாலும் தன்
வலிமையினாலும் தன்வசப்படுத்தி வைத்திருந்த மாமேதை. ஒரு மாபெரும் நடிகராகவிருந்தாலும் அரசியலில் நடிக்காமலும் தமிழினை மதித்தும் வாழ்ந்த அந்த அற்புத மனிதரையும் தமிழினம் மறந்திடுமோ?.

எளிமையின் நாயகன் காமராஐர் இன்றும் பசுமையாக தமிழ் உள்ளங்களில் இருப்பதன் இரகசியம் என்ன?. அவர் முதலமைச்சராக இருந்த சமயத்தில் ஒருமுறை தன் தாயாரைக்காண ஊருக்குச் சென்றார். அப்போது தாயார் கேட்டாராம் "டேய்! நீ மெட்ராஸ்ல என்ன தொழில் பண்ணிக்கிட்டிருக்கே" என்று. தாயாருக்கே தெரியாமல் முதலமைச்சர் வாழ்ந்த பூமியிலே இன்று தொலைக்காட்சி மூலம் விளம்பரம் நடத்தும் சண்டாளக்கூட்டம் சதிராடிக் கொண்டிருக்கறது. தமிழ்நாட்டின் பொதுவுடமைக்கட்சித் தலைவர் திரு.ஐPவானந்தம் வாழ்ந்த அற்புத பூமியல்லவா தமிழகம்.

ஓருமுறை முதலமைச்சர் காமராஐர் அவர்கள் ஒரு கூட்டத்திற்காக ஐPவா அவர்களின் ஊருக்கு சென்றிருந்த சமயத்தில் அவரையும் அழைத்தும் செல்லும் நோக்கோடு அவரின் வீட்டுக்குச் சென்றாராம். அப்போது ஒரு துவாய் மட்டுமே கட்டிக் கொண்டிருந்த ஐPவா அவர்கள் காமராஐரிடம் நீங்கள் செல்லுங்கள் அப்புறம் வருகின்றேன் என்றாராம். விடாப்பிடியாக நின்ற காமராஐரிடம் ஐPவா அவர்கள் இரகசியமாகக் கூறினாராம் "உள்ள ஒரேயொரு வேட்டியை தோய்த்து உலர வைத்து விட்டேன் காய்ந்ததும் உடுத்திட்டு வந்து விடுகிறேன் நீங்கள் செல்லுங்கள்"என்று. ஐயகோ! அவர்களை எல்லாம் தலைவர்கள் என்று அழைப்பதானால் இன்றுள்ள சண்டாளத் துரோகிகளை எப்படியழைப்பது??

கலைஞரே! தமிழ்நாட்டிலும் சரி தமிழ்ஈழத்திலும் சரி. இன்று தமிழ்த்தாய்க்கொரு சோதனைக்காலம். நடக்க வேண்டியதோ ஒரு சாதனைக் காலம். ஆனால் நடப்பதோ உம் மக்கள் செல்வங்களின் எதிர்காலச் சிந்தனை. காலங்களுக்கு தாயைப் போன்று தாங்கிக் கொள்ளும் பொறுமையும் உண்டு தலைவனே அதேநேரம் அதனால் தாங்கிக் கொள்ளவே முடியாத தண்டனையும் உண்டு என்பதனை மறந்துவிட வேண்டாம். பழிகள் பாவங்கள் என்பவை இயற்கையின் நியதிகள். இதிலிருந்து யாரும் தப்புவதும் இல்லை தப்பியவரும் இல்லை.

அப்பாவி ஈழமக்களின் அலறல்கள் ஏங்கும் ஏக்கங்கங்கள் சிந்தும்
இரத்தங்கள் உம்மையும் உம் செல்லக்குழந்தைகளையும் எவ்வண்ணம் பாதிக்கின்றது என்பதை இந்தத் தமிழகமும் தமிழ்ஈழமும் பார்க்கத்தான் போகின்றன. உள்ளம் குமுறி பொங்கியெழுந்த தமிழக நல்நெஞ்சங்களின் போராட்டத்தினை நயவஞ்சகமாக மத்திய அரசுடன் இணைந்து அழித்தொழித்த பாதகச்செயலுக்கு சரியானதொரு பாடம் காத்திருக்கின்றது. திரும்பிப்பாரும் கலைஞரே திரும்பிப்பாரும். கடந்து போன சம்பவங்களாயினும் இன்றும் திருந்த நினைப்பவர்க்கு பாடமாகவும் திருந்த விரும்பாதவர்க்கும் விளங்க முடியாதவர்க்கும் எச்சரிக்கைகளாவிருக்கும் அன்றைய சம்பவங்களை திரும்பிப்பாரும்.

கட்டப்பொம்மனுக்கொரு எட்டப்பன் பண்டாரவன்னியனுக்கொரு காக்காய்வன்னியன் பிரபாகரனுக்கொரு —— என்றெல்லாம்
தங்களினதும் தங்கள் வருங்கால எத்தனையோ சந்ததிகளுக்கெல்லாம் நீங்கமுடியாத களங்கம் கற்பித்துவிட்ட அந்த பாவிப்பிறப்புக்களை எண்ணிப்பாரும். கட்டப்பொம்மனை எண்ணும்போது எப்படி எட்டப்பனை எண்ணமுடியாமல் இருக்கமுடியுமோ அதேபோன்று வருங்காலத்தில் தமிழகத்தையும் அதன் ஈடுஇணையற்ற தலைவர்கள் பெரியார் காமராஜர் அண்ணா எம்.ஜி.ஆர் போன்றோரை எண்ணும் சமயங்களில் உம்மையும் எண்ண வேண்டுமென்ற நிலைமையினை உருவாக்கி விடாதீர்கள்.

கலைஞரே! எண்பத்தைந்து வயதினையடையும் நீர் இன்னும்
எதனைத்தான் சாதித்துவிடப் போகின்றீர். உமது கடந்துபோன ஆட்சிக்காலத்தில் ஏற்பட்டுள்ள களங்கங்களுக்கும் மற்றும் தவறவிட்ட நல்ல சந்தர்ப்பங்களுக்கும் ஈழத்தமிழ் மக்களின் பிரச்சனையைத் தீர்த்துவைத்து அவைகளுக்கான பாவங்களையும் கவலைகளையும் தீர்த்துக் கொள்வதோடு தியாகி என்ற மாபெரும் புகழையும் அடையும் பாக்கியம் இன்னும் உம்மைவிட்டு விலகவில்லை. இதனையும் நீர் இழப்பீரேயாகில் கலைஞரே உமக்கும் உம் சந்ததிக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

அப்பாவி கோவலன் கொலையால் மதுரைக்கு நேர்ந்த கதி என்ன?. அம்பிகாபதி கொலையால் குலோத்துங்கனுக்கு ஏற்பட்ட கதியென்ன?.
இதுபோல் சாட்சியங்கள் ஏராளம் இருக்கும்போது தனக்கென்றொரு தகுதியை வைத்துக் கொண்டு சொந்தப்பிள்ளைகளின் நலம்தேடியும் தமிழ்க்கொலையை வேடிக்கை பார்த்தும் நிற்கும் கலைஞரே.. பாவம் பழி என்ற இரண்டும் தலைமுறை வரையில் என்பதனை மறந்திட வேண்டாம். இதற்கான பழிகளைச் எவரும் சுமந்தே தீரவேண்டும். இது என் சாபம் அல்ல. இயற்கையின் நியதி.. ஆண்டவனின் தண்டனை. இன்றே பாவமன்னிப்பு கேளும்.

சுயநலங்களை மறந்து தாய்த்தமிழுக்காக அரும்பாடுபட்ட முன்னைய தலைவர்களை சிந்தியுங்கள். ஓர் உண்மைத் தமிழனாக மாறும். இதுவே
தமிழத்தாய்க்கு ஒரு தலைமகனின் கடன். இதுவே தற்போதுள்ள ஓரெயொரு மாற்றுவழி.

சுட்டது http://www.mkstalin.net/viewcomments.php



http://www.mkstalin.net/viewcomments.php

agniputhiran
22-02-2009, 05:41 AM
தர்மத்தின் வாழ்வுதனைச் சூது கவ்வும். தர்மம் மறுபடியும் வெல்லும்!

இலங்கைத் தமிழர்ப்பிரச்சினையில் கலைஞர் மீது குறை கூறவும் அவர் உலகத்தமிழர்களுக்கு எதிரானவர் என்பது போலவும் ஒரு மாயப்பிம்பத்தை உருவாக்க இலங்கைப்பிரச்சினையைக் கையில் எடுத்துக்கொண்டு தற்போது ஆளாளுக்குக் கட்டுரை எழுதிக் குவித்து வருகிறார்கள். (இவர்கள் எப்போதும் கலைஞரை குறை கூறும் நபர்கள்தாம்! இப்போது இவர்களுக்கு இவ்விவகாரம் கைகளில் கிடைத்திருக்கிறது. தற்போதைய அசாதாரணச் சூழலைச் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள மிகவும் தந்திரமாக முயலுகிறார்கள்)

திமுகவிடமும் கலைஞரிடமும் இப்பிரச்சினையில் இவர்கள் என்னதான் எதிர்பார்க்கிறார்கள் என்பதை தெளிவாகக் கூற வேண்டும்.

திமுகவின் அண்மைய கால நடவடிக்கைகளான

1. சர்வகட்சிக்கூட்டம்

2. மத்திய அரசுக்குக் கெடு

3. கொட்டும் மழையில் மனிதச் சங்கிலி போராட்டம்

4. எம்.பிக்கள் ராஜினாமா மிரட்டல்

5. நிதி வசூலித்து உணவுப்பொருட்கள் அனுப்பிவைக்க மேற்கொண்ட அணுகுமுறைகள்

6. நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரைச் சந்தித்து கோரிக்கையளித்தது அதனைத் தொடர்ந்து சர்வ கட்சித் தலைவர்களோடு கலைஞர் பிரதமரைச் சந்தித்து கோரிக்கையளித்தது

7. சட்டமன்றத்தில் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாகத் தீர்மானங்கள் இயற்றியது

8. இந்திய மைய அரசை நிர்ப்பந்தப்படுத்தி இந்திய பிரதிநிதிகளை இலங்கைக்கு அனுப்பி வைக்க கடும் முயற்சி மேற்கொண்டது

9. இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரவை உருவாக்கிச் செயல்படுவது என்று எல்லா நிலைகளிலும் கலைஞர் தன்னால் முடிந்தவரை செயல்பட்டிருக்கிறார். உடற்நலக்குறைபாட்டையும் கவனத்தில் கொள்ளாது செயல்பட்டுக்கொண்டும் இருக்கிறார்.

அதிமுக தலைவி செல்வி ஜெயலலிதா இதுவரை இலங்கைப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் ஒரு சிறு துரும்பையாவது கிள்ளிப்போட்டு இருப்பாரா? இவரைதான் ஆட்சியில் அமர்த்த வைகோ துடிக்கிறார், தா.பாண்டியன் தாவிக்குதிக்கிறார், ராமதாசு ராக்கெட் வேகத்தில் அறிக்கை விட்டுத் தூள் கிளப்புகிறார். திருமா திண்டாடித் திணறுகிறார். திமுகவிற்கு மாற்று என்றால் இன்றைய சூழலில் அதிமுகதான் என்பது ஊரறிந்த விஷயம். திமுகவைப் பலவீனப்படுத்தப் படுத்த அதன் பயன் அதிமுகவிற்கே போய் சேரும் என்ற உண்மை எல்லாம் இந்த கபடவேடதாரிகளும் அறியாதவர்கள் அல்ல. இலங்கைத் தமிழர் பிரச்சினையில் ஒத்த கருத்து உடைய திமுகவை எதிர்க்கிறார்கள். அதே சமயம் மாற்றுக் கருத்துக் கொண்ட அதிமுகவை ஆதரித்து கூட்டணி கொள்கிறார்கள். என்னே அரசியல் விநோதம்?

கலைஞர் அவதூறுப்பிரச்சாரக் கட்டுரையாளர்களிடம் என்னதான் எதிர்பார்ப்புகள் இருக்கக்கூடும்?

1. மத்திய அரசுக்கு கொடுக்கும் ஆதரவை திமுக வாபஸ் வாங்கி மத்திய அரசைக் கவிழ்த்து விடுவோம் என்று மிரட்ட வேண்டும்.

அல்லது

2. இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாகத் திமுக ஆட்சியை விட்டு இறங்கிப் போராட வேண்டும். இவைதாம் இவர்கள் அதிகபட்சமாகத் திமுகவிடமும் கலைஞரிடமும் எதிர்பார்ப்பவையாக இருக்கக்கூடும். சரி, இப்படி நடந்தால் என்ன நடக்கும்?

மத்திய அரசு பதவிக்காலம் முடியும் இத்தருணத்தில் ஆதரவு வாபஸ் என்ற மிரட்டல் எல்லாம் இனி எடுபடாது. இன்னும் ஓரிரு மாதங்களில் நாடாளுமன்றத்தேர்தல் வர உள்ள இந்த நிலையில் காங்கிரஸை பகைத்துக்கொள்ள நேரிடும். திமுக இடத்தை தட்டிப்பறிக்க அதிமுகவின் தலைவி செல்வி ஜெயலலிதா தவமாய்த் தவம் கிடக்கிறார். கூட்டணி மாற்றத்துக்குத்தான் இது வாய்ப்பளிக்கும்.

தினம் தினம் அறிக்கை விட்டு இலங்கைப்பிரச்சினையில் சூடு கிளப்பும் ஐயா இரமாதாஸ் அவர்கள் தமது அன்பு மகன் அன்புமணியை இன்னும் மத்தியில் அமைச்சராக நீடிக்க வைத்திருப்பது கூர்ந்து கவனிக்கத்தக்து. ஒரு இரண்டு மாதம் காலம் கூட பதவியை இழக்க விரும்பாமல் கடைசி வரை பதவிச்சுகம் அனுபவிக்க ஆசைப்படும் நிலையில் இலங்கைத் தமிழர்ப்பிரச்சினையில் நீலிக் கண்ணீர் வடித்து அறிக்கையும் அறிவிப்பும் வெளியிடுவது அப்பாவித் தொண்டர்களை வேண்டுமானால் ஏமாற்றலாம் நடப்பு அரசியலை நன்கு புரிந்து வைத்திருக்கும் நமது மக்களை ஏமாற்ற முடியாது. கடைசி வரை காங்கிரஸ் வசம் ஒட்டிக்கொண்டு இருந்து விட்டு அப்படியே காங்கிரஸை அதிமுகவிடம் ஓட்டிக்கொண்டு போவது மருத்துவரின் மகா மெகத் திட்டமாக இருக்கக் கூடும்.

இவர் கதை இப்படி என்றால் “புரட்சிப்புயல்” வைகோ கதையோ வேறு நிலையில் செல்லுகிறது.

“போர் என்றால் பொதுமக்கள் சாகக்தான் செய்வார்கள், அந்நிய நாட்டுப்பிரச்சனையில் நம் தலையீடு கூடாது.” அதிமுக தலைவியின் அகங்காரக் கூற்றாக அண்மையில் நாளிதழ்களில் வெளிவந்த செய்தி இது. இந்தத் தலைவிக்குத்தான் “புரட்சிப்புயல்” வெஞ்சாமரம் வீசி, அவரை அடுத்து ஆட்சி பீடம் ஏற்றுவதற்குப் பம்பரமாய்ச் சுற்றிச்சுழகிறது.

அப்படியே எதிர்பாராதவிதமாக ஏதோ ஒரு சூழலில் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் புரட்சிப்புயல் வைகோ மீண்டும் உள்ளே செல்லத்தான் அதிக வாய்ப்புள்ளது. இத்தனை ஆண்டுகள் அரசியல் செய்தும் இப்படி ஒரு அரசியல் மாமண்டூகமாகப் புரட்சிப்புயல் திரிவதுதான் வேதனையிலும் வேதனை! வேடிக்கையிலும் வேடிக்கை!

அடுத்து இவர்கள் அனைவரின் எதிர்பார்ப்பும் என்னவாக இருக்கக்கூடும்?

இலங்கைப் பிரச்சினையைக் காரணம் காட்டி திமுக அரசு பதவி விலக வேண்டும் என்பதே!

சரி ஆட்சியை திமுக கைவிட்டுவிட்டால் மட்டும் இப்பிரச்சினையில் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து இலங்கைப்பிரச்சினையைத் தீர்த்துவிடுமா? அப்படியே இந்தியா தலையிட்டாலும் இனவாத இலங்கை அரசு பணிந்து விடுமா? இப்படி பல்வேறு பிரச்சினைகள் சிக்கிக் தவிக்கும் இப்பிரச்சினையில் கலைஞரை மட்டும் குறை கூறுவதே இலட்சியமாகக் கொண்டு கட்டுரை புனைவதும் அவரைத் திட்டி தீர்ப்பதையும் நடுநிலை மக்கள் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். திமுக தமிழகத்தில் ஆட்சியில் இருப்பதால்தான் இந்த அளவுக்காவது இலங்கை இனவாத அரசு அடக்கி வாசிக்கிறது என்று இலங்கைத் தமிழர்களே கூறுகிறார்கள்.

சரி திமுகவிடம் இருந்து ஆட்சி மாறி அதிமுகவிடம் சென்றால் மட்டும் கலைஞரை விட செல்வி ஜெயலலிதா இப்பிரச்சினையில் அதிக அக்கறை காட்டி தமிழர்களைக் காப்பாற்றி விடுவாரா?

யார் யாரைவிட தமிழர் நலனில் அக்கறை மிகுந்தவர்கள் என்பதை நாடு நன்கு அறியும்.

இலங்கைப்பிரச்சினையில் அரசியல் ரீதியாக பல முறை பலத்த பாதிப்புக்குள்ளான இயக்கம் திமுகதான் என்பதை மனசாட்சியுள்ளவர்கள் மறுக்க மாட்டார்கள். மறைக்கவும் மாட்டார்கள். இவர்களின் உள்நோக்கம் இலங்கைப் பிரச்சினையைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு திமுகவையும் கலைஞரையும் பலவீனப்படுத்த வேண்டும் என்பதே!

தர்மத்தின் வாழ்வுதனைச் சூது கவ்வும். தர்மம் மறுபடியும் வெல்லும்!

- அக்னிப்புத்திரன்

anna
22-02-2009, 06:29 AM
“போர் என்றால் பொதுமக்கள் சாகக்தான் செய்வார்கள், அந்நிய நாட்டுப்பிரச்சனையில் நம் தலையீடு கூடாது.” அதிமுக தலைவியின் அகங்காரக் கூற்றாக அண்மையில் நாளிதழ்களில் வெளிவந்த செய்தி இது. இந்தத் தலைவிக்குத்தான் “புரட்சிப்புயல்” வெஞ்சாமரம் வீசி, அவரை அடுத்து ஆட்சி பீடம் ஏற்றுவதற்குப் பம்பரமாய்ச் சுற்றிச்சுழகிறது.

அப்படியே எதிர்பாராதவிதமாக ஏதோ ஒரு சூழலில் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் புரட்சிப்புயல் வைகோ மீண்டும் உள்ளே செல்லத்தான் அதிக வாய்ப்புள்ளது. இத்தனை ஆண்டுகள் அரசியல் செய்தும் இப்படி ஒரு அரசியல் மாமண்டூகமாகப் புரட்சிப்புயல் திரிவதுதான் வேதனையிலும் வேதனை! வேடிக்கையிலும் வேடிக்கை!

அடுத்து இவர்கள் அனைவரின் எதிர்பார்ப்பும் என்னவாக இருக்கக்கூடும்?

இலங்கைப் பிரச்சினையைக் காரணம் காட்டி திமுக அரசு பதவி விலக வேண்டும் என்பதே!

சரி ஆட்சியை திமுக கைவிட்டுவிட்டால் மட்டும் இப்பிரச்சினையில் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து இலங்கைப்பிரச்சினையைத் தீர்த்துவிடுமா? அப்படியே இந்தியா தலையிட்டாலும் இனவாத இலங்கை அரசு பணிந்து விடுமா? இப்படி பல்வேறு பிரச்சினைகள் சிக்கிக் தவிக்கும் இப்பிரச்சினையில் கலைஞரை மட்டும் குறை கூறுவதே இலட்சியமாகக் கொண்டு கட்டுரை புனைவதும் அவரைத் திட்டி தீர்ப்பதையும் நடுநிலை மக்கள் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். திமுக தமிழகத்தில் ஆட்சியில் இருப்பதால்தான் இந்த அளவுக்காவது இலங்கை இனவாத அரசு அடக்கி வாசிக்கிறது என்று இலங்கைத் தமிழர்களே கூறுகிறார்கள்.

சரி திமுகவிடம் இருந்து ஆட்சி மாறி அதிமுகவிடம் சென்றால் மட்டும் கலைஞரை விட செல்வி ஜெயலலிதா இப்பிரச்சினையில் அதிக அக்கறை காட்டி தமிழர்களைக் காப்பாற்றி விடுவாரா?

யார் யாரைவிட தமிழர் நலனில் அக்கறை மிகுந்தவர்கள் என்பதை நாடு நன்கு அறியும்.

இலங்கைப்பிரச்சினையில் அரசியல் ரீதியாக பல முறை பலத்த பாதிப்புக்குள்ளான இயக்கம் திமுகதான் என்பதை மனசாட்சியுள்ளவர்கள் மறுக்க மாட்டார்கள். மறைக்கவும் மாட்டார்கள். இவர்களின் உள்நோக்கம் இலங்கைப் பிரச்சினையைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு திமுகவையும் கலைஞரையும் பலவீனப்படுத்த வேண்டும் என்பதே!

தர்மத்தின் வாழ்வுதனைச் சூது கவ்வும். தர்மம் மறுபடியும் வெல்லும்!

- அக்னிப்புத்திரன்

சபாஷ் அக்னிபுத்திரா அருமை, சரியான சவுக்கடி கொடுத்துள்ளீர்கள். உண்மை இது தான். கலைஞர் சொன்னது போல் ஆட்சியில் இருப்பதால் தான் இதுவாது செய்ய முடிகிறது என்றார்.இதில் 100க்கு 100 எதார்த்தம் இருப்பதை உணர முடிகிறது. கலைஞர் திமுக செயற்குழுவில் பேசியது போல் அண்ணனும் சாவமாட்டான் திண்ணையும் காலியாகது என்பதிலும் 100க்கு 100 எதார்த்ததை உணர முடிகிறது. உண்மை இப்படி இருக்க தமிழினத்திற்கே எதிரிபோல் கலைஞரை கட்டுரை புனைவது புனைவருக்கு வேண்டுமானால் விளம்பரம் தேடித்தரலாம்.

மற்றபடி ஒண்ணும் ஆகிவிடப்போவதில்லை. இப்போது தமிழினத்துக்கு நாங்கள் தான் ஏஜென்ட் என தன்னை கூறிக்கொள்ளும் வைகோ,ராம்தாஸ் போன்றார்கள் யாரிடம் கூட்டு வைத்துள்ளனர். போர் என்றால் உயிரிழப்பு ஏற்படுவது தவிர்க்க முடியாதது என பேட்டி கொடுத்த தமிழினத்துரோகி ஜெயலலிதாவிடம் இது எப்படி உள்ளது என்றால் ஆட்டிற்கு ஓநாய் காவல் என்பது போல் உள்ளது தவறுக்கு மன்னிக்க ஜெயலலிதா தான் தமிழரே இல்லையே.

இதுவெல்லாம் மக்களுக்கு தெரியாது என 1985ல் பேசுறது மாதிரி பேசுவது இனிமே நடக்காது. மக்கள் யார் யாரென அளந்து வைச்சு தான் ஒட்டு போடுறான் என்பது இவர்களுக்கு தெரியாது. உதராணம் சமீப காலங்களில் நடந்து முடிந்த தேர்தல்களே இதற்கு போதும்.

போற்றுவார் போற்றலும், தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கிருஷ்ணணுக்கே என சொல்லிவிட்டு தம் பணியை செவ்வனெ செய்து கொண்டிருக்கும் கலைஞரின் முன்னால் இவர்கள் எல்லாம் ஒரு தூசு கூட கிடையாது அதற்கும் கீழ் தான்.

இறைநேசன்
23-02-2009, 12:45 PM
அன்பர்களே!

இலங்கை பிரச்சனையை பொறுத்தவரை கலைஞருக்கு மாற்று அம்மா அல்ல என்பது எல்லோருக்கும் தெரியும். கலைஞர் அவர்கள் இலங்கை தமிழருக்காக ஒருவேளை பதவியை ராஜினாமா செய்தால் அம்மாதான் ஆட்சிக்கு வருவார்கள் என்று எப்படி சொல்லமுடியும்? கொதித்துபோய் இருக்கும் இத்தனை கோடி தமிழ் மக்கள், இந்த இக்கட்டான சூழ்நிலையில் அவர் இலங்கை தமிழருக்கென்று பதவியை ராஜினாமா செய்ததை மறந்துவிடுவார்களா என்ன?

மைனாரிட்டி ஆட்சிபோய் மெஜாரிட்டி ஆட்சியே வருமேயன்றி அம்மா ஆட்சிக்கு வரும் நிலை ஒருகாலும் நடக்காது. இதனால் கலைஞர் மதிப்பு கூடுமேயன்றி ஒருகாலும் குறையாது என்றே நான் கருதுகிறேன்.
ஆனால் இப்பொழுது பல பரம்பரை திமுககாரர்களே இனி நான் ஒருபோதும் திமுகவுக்கு ஓட்டு போடமாட்டேன் என்று நேரடியாக ஸ்டாலின் தளத்தில் தெரிவித்திருப்பதை படிக்க முடிகிறது.

praveen
23-02-2009, 01:24 PM
மைனாரிட்டி ஆட்சிபோய் மெஜாரிட்டி ஆட்சியே வருமேயன்றி அம்மா ஆட்சிக்கு வரும் நிலை ஒருகாலும் நடக்காது. இதனால் கலைஞர் மதிப்பு கூடுமேயன்றி ஒருகாலும் குறையாது என்றே நான் கருதுகிறேன்.

ஆமாம் முழு மெஜாரிட்டிய்யில் கலைஞர் ஆட்சியை பிடித்ததும் தமிழ்நாடு போலிசை அனுப்பி இலங்கை ராணுவத்துடன் போர் புரிந்து தமிழ்ஈழம் பெற்று தந்து விடுவார். :). இவரால் செய்ய முடிந்த ஒரே ஒரு நண்மை அங்கே முற்றுகை இட்டிருந்த இந்திய ராணுவத்தை அப்போதைய பிரதமர் காலஞ்சென்ற வி.பி.சிங் மூலம் திரும்ப பெற்றது தான்.

இப்போது இவர் ஆட்சியில் இருப்பது காங்கிரஸ் தயவில் அதனால் தான் அவர் நடவடிக்கை எடுக்க தயங்குகிறார் என்பது போல இருக்கிறது உங்கள் வாதம்.

அவர் இதற்கு முன் சிலமுறை இலங்கைபிரச்சினையால் ஆட்சியை இழந்து திரும்ப அடுத்த தேர்தலில் ஜெயித்து வந்ததாக சரித்திரம் இல்லை.

மறுபடியும் ஜெ.. வந்து போராட்டம் நடத்துபவர்களை எல்லாம் உள்ளே தள்ளியதும் தான் கலைஞர் நியாபகம் வரும். அதுவரை இவர் நிழலின் அருமை போராடுபவர்களுக்கு தெரியாது.

அய்யா
24-02-2009, 03:27 PM
அக்னிபுத்திரனின் ஆணித்தரமான வாதங்கள் பல உண்மைகளைத் தெளிவுபடுத்தியுள்ளன.

பாராட்டுக்கள்!!

தாமரை
24-02-2009, 04:08 PM
ஒருவரை குறைசொல்லுவதோ கண்ணை மூடிக் கொண்டு புகழ்வதோ மிக மிக எளிதான ஒன்றாகும்.

உழைப்பால் உயர்ந்து வாழ்ந்து காட்டிய உத்தமர்களைக் காட்டி மற்றவரை நோக்கி விரல் ஒரு சுட்டு விரல் நீளும் பொழுது, நம்முடைய மூன்று விரல்கள் நம்மைச் சுட்டுகின்றன,

கலைஞர் மட்டுமல்ல, ஒவ்வொரு மனிதனாலும் காமராஜராக, அண்ணாவாக, பெரியோராக வாழ முடியும். எத்தனை பேர் முயற்சிக்கிறோம்?

நாமே முயற்சிக்காத பொழுது அடுத்தவரை குறைசொல்வதில் என்ன பயன்? முயற்சி செய்யுங்கள் என்றால் பணபலம், படைபலம், நாவன்மை என்று ஆயிரம் சாக்குபோக்கு வருமேயன்றி, அதை எல்லாம் இல்லாமல்தானே அவர்கள் மேலே வந்தார்கள் என்று எண்ணிப்பார்க்கத் தோணாது. அடுத்து பொது மக்கள் சமுதாயம் என விரல் நீளும்.. நம்மால் நேர்மையாக ஜெயிக்க முடியாத மக்கள் உள்ளங்களை அடுத்தவர் மட்டும் நேர்மையாக வெல்ல வேண்டும் என்று சொல்வது தவறு.

என்ன செய்யவேண்டும்? என்ன என்ன வழிகள் உள்ளன? என்ன என்ன தடைகள் உள்ளன? அவற்றை எதிர்கொள்ளும் வழிகள் என்ன என்று ஆக்கப்பூர்வமாய் எழுதுபவர்கள், பேசுபவர்கள் குறைந்து கொண்டே வருவது மிகப் பெரிய இழப்பாகும்.

இன்னொரு பார்வையில் பார்த்தால்....

கலைஞரே உம்மால் மட்டுமே இதைச் செய்ய முடியும், எங்களால் முடியாது என்று மறைமுகமாக ஒப்புக் கொண்டிருக்கிறார் கட்டுரையாளர், அதற்காவது நன்றி சொல்லித்தான் ஆகவேண்டும்.

என்ன தாமரை கலைஞரை ஆதரிக்கிறாரா என்று எண்ண வேண்டாம். வெறுமனே அடுத்தவரைக் குறைகூறும் எந்த பதிவிற்கும் என் பதில் இதுதான்,

தயவு செய்து அது தவறு இது தவறு என்று குற்றம் சுமத்துவதைக் குறைத்துக் கொண்டு... இதுதான் சரியான வழி,, இதில் நான் ஈடுபடுவேன் என்று நம்முடைய செயல்களைப் பற்றி யோசித்து பேசி செயல்பட ஆரம்பித்தால்தான் நமக்கு முன்னேற்றம் கிடைக்கும்..

அவன் திருடினான் அதனால் எனக்கு பரிசு குடுங்க என்று கேட்பதில் ஒரு நியாயமும் இல்லை. நான் திருடவில்லை என்று சொன்னாலும் பரிசு கிடைக்காது.

இது என் உழைப்பு.. இதன் பலன் இது. என்று எடுத்துக் காட்டுபவருக்கு மட்டுமே பரிசு உண்டு...

இறைநேசன்
25-02-2009, 03:11 AM
ஒருவரை குறைசொல்லுவதோ கண்ணை மூடிக் கொண்டு புகழ்வதோ மிக மிக எளிதான ஒன்றாகும்.

உழைப்பால் உயர்ந்து வாழ்ந்து காட்டிய உத்தமர்களைக் காட்டி மற்றவரை நோக்கி விரல் ஒரு சுட்டு விரல் நீளும் பொழுது, நம்முடைய மூன்று விரல்கள் நம்மைச் சுட்டுகின்றன,...

எல்லோரையும் சிந்திக்க தூண்டும் தாமரை அவர்களின் கருத்து மிக அருமை. நேர்மையாக முயன்றால் மேன்மையான நிலயை அடைய முடியும் என்பது சர்வ நிச்சயம்.



கலைஞரே உம்மால் மட்டுமே இதைச் செய்ய முடியும், எங்களால் முடியாது என்று மறைமுகமாக ஒப்புக் கொண்டிருக்கிறார் கட்டுரையாளர், அதற்காவது நன்றி சொல்லித்தான் ஆகவேண்டும்.


தற்போது இருக்கும் சூழ்நிலையில் யார் பொறுப்பில் இருக்கிறார்களோ அவர்கள்தானே நடவடிக்கை எடுக்க முடியும். இன்று பொறுப்பில் இருக்கும் சோனியா காந்தி அவர்கள் செய்ய வேண்டிய வேலையே உடனே செய்யாமல் விட்டு விட்டு, ஆயிரக்கணக்கில் மக்கள் அழிந்தபிறகு நாளை இன்னொருவர் நேர்மையாக நடந்து முன்னுக்கு வந்து அன்று தனி ஈழம் வாங்கி தந்தாலும் இழப்பு இழப்பு தானே!

இன்றைய நிலையில் செய்யவேண்டியதை இன்றுள்ளவர்கள் தானே செய்ய முடியும்? இந்நிலையில் அவர்களுக்கு ஏற்ற முறையில் சுட்டிகாட்டுவது தவறாகிவிடுமா?

தாமரை
25-02-2009, 03:41 AM
தற்போது இருக்கும் சூழ்நிலையில் யார் பொறுப்பில் இருக்கிறார்களோ அவர்கள்தானே நடவடிக்கை எடுக்க முடியும். இன்று பொறுப்பில் இருக்கும் சோனியா காந்தி அவர்கள் செய்ய வேண்டிய வேலையே உடனே செய்யாமல் விட்டு விட்டு, ஆயிரக்கணக்கில் மக்கள் அழிந்தபிறகு நாளை இன்னொருவர் நேர்மையாக நடந்து முன்னுக்கு வந்து அன்று தனி ஈழம் வாங்கி தந்தாலும் இழப்பு இழப்பு தானே!

இன்றைய நிலையில் செய்யவேண்டியதை இன்றுள்ளவர்கள் தானே செய்ய முடியும்? இந்நிலையில் அவர்களுக்கு ஏற்ற முறையில் சுட்டிகாட்டுவது தவறாகிவிடுமா?

ஆனால் நீங்கள் செய்யுங்கள் என்று சொல்வது நல்லது அல்லவே.

நன்கு ஆராய்ந்து படித்துப் பாருங்கள்..

ஈழ மக்கள் பிரச்சனைகளைத் தீர்த்து உங்கள் பாவங்களை தீர்த்துக் கொள்ளுங்கள் என்ற ஒற்றை வரியைத் தவிர உபயோகமான ஒரு தகவலும் இல்லை அல்லவா. மற்றவை வெறும் மேடைப்பேச்சுகள் தான்.

கலைஞரின் தவறுகளை, உதாரணங்களை யோசிக்க எடுத்துக் கொண்ட நேரத்தில் இப்பிரச்சனைக்கு என்ன தீர்வுகள், நடவடிக்கைகள் தேவை என ஆலோசித்திருக்கலாம். அதை எழுதி இருக்கலாம்.

இன்ன பிரச்சனை. இன்னின்ன வழிகள் உள்ளன. கலைஞரே இவற்றில் ஒன்றை செயல்படுத்துங்கள் எனற செயல் திட்டமா உள்ளது இந்த வாதங்களில்?

சில அரசியல் தலைவர்களாவது இலங்கைக்கு ஆயுதம் தரவேண்டாம், இராணுவ நடவடிக்கைக்கு கண்டணம் தெரிவியுங்கள். தமிழ் தலைவர்கள் மற்றும் மத்தியக் குழுவினரை அனுப்பி சமாதானப் பேச்சை ஆரம்பித்து வையுங்கள். அதற்காக புலிகளின் மீதான தடைய தற்காலிகமாக நீக்கி பேச்சு வார்த்தைகளுக்கு ஒரு மேடை அமைத்துத் தாருங்கள் (சரத்குமார்) என்ற ஆலோசனைகளோடு குரல் கொடுக்கின்றனர்.

யோசித்துப் பாருங்கள். அவர் பாவியாகவே இருக்கட்டும். ஆயிரம் குற்றங்களைச் சுமத்தி பின்னர் ஒரு காரியம் செய்யுங்கள் என சொல்வதின் மூலம் அவர் மனது இன்னும் கல்லாகலாமே. அது ஈழ மக்களுக்கு செய்யும் துரோகமல்லவா?

ஆக இதை எழுதியதன் உள்நோக்கம் ஈழப்பிரச்சனை தீரவேண்டும் என்பதல்ல. தன்னை புகழ்படுத்திக் கொள்ள என இருப்பதுதான் வேதனை.

உனர்ச்சிகளை தூண்டுவதாக இல்லாமல் சிந்தனைகளை தூண்டுவதாக எழுத்துக்கள் அமைய வேண்டும். அதுதான் நல்லது.

எதாவது செய்யுங்க என்று குரல் கொடுப்பவனுக்கு குற்றம் சொல்ல கிஞ்சித்தும் உரிமை இல்லை.

நதி
25-02-2009, 09:15 AM
ஈழத்தில் நடைபெறுவது வாழ்வாதாரப் போராட்டம், உரிமைப்போராட்டாம் என்பதை மறந்து அதனை ஒரு அரசியல் போராட்டமாக சித்தரிப்போர் எழுத்துகள் இபடித்தான் இருக்கும். ஈழமக்கள் மீது பற்றுள்ளவர்களின் எழுத்துகள் அவர்கள் அவலங்களை, உரிமை மறுக்கப்பட்டதை, வாழ்வாதாரம் சிதைக்கப்பட்டதை வெளிக்காட்டும் முகமாக இருத்தலே ஈழமக்களுக்கு செய்யும் உதவி.

இறைநேசன்
25-02-2009, 11:58 AM
ஈழத்தில் நடைபெறுவது வாழ்வாதாரப் போராட்டம், உரிமைப்போராட்டாம் என்பதை மறந்து அதனை ஒரு அரசியல் போராட்டமாக சித்தரிப்போர் எழுத்துகள் இபடித்தான் இருக்கும்..

எழுதியிருப்பவர் அது எவ்வகை போராட்டம் என்று குறிப்பிடாமல்

"எத்தனையோ பிஞ்சுகள் சிறுவர்கள் பெண்கள் இளைஞர் வயோதிபர் என்று சிங்கள —– அரசாங்கத்தினாலும் இந்திய ——- அரசினாலும் திட்டமிட்டு கொடூர முறைகளில் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கும் போது தமிழக அரசியலில் ஒரு பொறுப்பான பதவியிலிருந்தும் இதனை கண்டு கொள்ளாமலும்"

என்ற வரிகள் அங்கு நடக்கும் அவலத்தை எடுத்துரைத்து ஏதாவது ஒரு வழியில் தீர்வு காணுங்கள் என்று வேண்டுவதாகவே அமைந்துள்ளது. ஒரு சாமான்யனால் செய்ய முடிந்தது தன் தலைவனை நோக்கி கேஞ்சுவதே


ஈழமக்கள் மீது பற்றுள்ளவர்களின் எழுத்துகள் அவர்கள் அவலங்களை, உரிமை மறுக்கப்பட்டதை, வாழ்வாதாரம் சிதைக்கப்பட்டதை வெளிக்காட்டும் முகமாக இருத்தலே ஈழமக்களுக்கு செய்யும் உதவி.

ஆம் சரியாக சொன்னீர்கள்! ஆனால் எழுத்தைவிட அதிக வலுவுள்ள பிரபலமான தொலைகாட்சி ஊடகங்கள் அந்த வேலையை சரியாக செய்கின்றனவா? இலங்கை தமிழை பற்றிய செய்திகளை எவ்வளவு சுருக்க முடியுமோ அவ்வளவு சுருக்கி சொல்லி கடந்துபோகின்றனவே!

தாமரை
25-02-2009, 12:23 PM
ஒரு தலைவனுக்கு வேண்டுகோள், அறிவுரை, இடித்துரைத்தல், நலமுறைத்தல், ஆலோசனை சொல்லுதல் போன்றவை எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு இக்கடிதத்தை உதாரணமாக கூறலாம், அந்த வகையில் இந்தக் கடிதம் ஒரு பயன் தரும்.

இறைநேசன்
25-02-2009, 01:10 PM
ஒரு தலைவனுக்கு வேண்டுகோள், அறிவுரை, இடித்துரைத்தல், நலமுறைத்தல், ஆலோசனை சொல்லுதல் போன்றவை எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு இக்கடிதத்தை உதாரணமாக கூறலாம், அந்த வகையில் இந்தக் கடிதம் ஒரு பயன் தரும்.

அதாவது முந்தய வரலாற்றை சுட்டிகாட்டி இடித்துரைக்கும் அளவுக்கு ஒரு தொண்டன் தலைவனைவிட அறிவாளியாகவோ, ஒரு உன்னத இடத்தை அடைய வழியை சுட்டிகாட்டுபவனாகவோ இருக்ககூடாது என்று சொல்கிறீர்களா?

சில ஒத்துதுபவர்களை போல் தலைவர் சொல்வதை கேட்டு தலையாடுவதுதான் நல்லதா?

ஒரு அனுபவம் வாய்ந்த தலைவனை நீர் இப்படி எதாவது செய்யும் என்று என்று ஆலோசனை சொல்வது வேண்டுமானால் தவறாக இருக்கலாம். ஆனால் "தமிழ் குலம் அழிகிறதே தலைவரே எதாவது செய்யுமே" என்று வேண்டுவது தவறா?

தாமரை
25-02-2009, 01:54 PM
இடித்துரைப்பதற்கும் திட்டுவதற்கும் வெகு வித்தியாசம் உண்டு இறைநேசரே!

எழுதிய கடிதம் ஈழத்தமிழர்களுக்காக கலைஞர் முனைப்புடன் செயல்பட வேண்டும். அப்படி செயல்பட்டால் வரலாற்றில் உன்னத இடம் பெறும் அரிய வாய்ப்பு இருக்கிறது. அந்த வாய்ப்பு யாருக்கும் கிட்டாத அரிய வாய்ப்பு.
இதைப் பயன்படுத்தினால் இரட்டை இலாபமுண்டு. நம் தமிழினம் வாழும். காந்தி, ராஜாஜி, காமராஜர் போன்ற பெருந்தலைவர்கள் வரிசையில் அவர்களுக்குச் சமமாக ஒரு இடமும் கிட்டும்.


என்பதாக மட்டும் இருந்திருந்தால் பாராட்டி இருப்பேன்.
அதுதான் ஒரு உன்னத இடத்தை அடைய வழியை சுட்டிகாட்டுபவனாக இருத்தல்.

தொண்டன் தலைவனை தனிமையில் இடித்துரைப்பான்.. பலர் முன் வாழ்த்துவான். ஆகவே இவர் ஒரு தொண்டர் என்று சொல்லுவதை தயவு செய்து தவிர்த்து விடுங்கள்.

ஆனால்

கலைஞர் மீது புழுதி வாரி இறைத்து, நீர் பாவி, ஒழுங்காக பரிகாரம் செய்யுங்கள் இல்லையென்றால் பாழாய்ப் போவீர்கள் என்று சொல்லுவது தொண்டன் தலைவனுக்கு மட்டுமல்ல, யாரும் யாருக்கும் சொல்லக் கூடாத முறையாகும்.

தலைவரைப் புகழ்ந்து கேளுங்கள் என்று சொல்லவில்லை,
தலைவரை இகழ்ந்து கேட்பதை தவிர்க்க வேண்டும் என்கிறேன்.

சரத்குமார் உதாரணம் அதற்காகவே கொடுத்தேன். வேண்டுகோள்கள், வலியுறுத்தல்கள் என வரும்பொழுது அந்த ஒரு விஷயம் பற்றித்தான் பேசவேண்டுமே தவிர சம்பந்தமில்லாமல் சுயநலவாதி, குடும்பத்தை மட்டும் கவனிப்பவர், என அடுக்கடுக்காக குற்றம் சுமத்துவது எதற்கு?

யாருக்காக இக்கடிதம் எழுதப்பட்டதாக சொல்லப் படுகிறதோ அந்த ஈழமக்களே மனம் புண்படக்கூடிய அளவிற்கு அல்லவா தூற்றல்கள் உள்ளன,

ஒரு கடிதத்தில் தமிழே இல்லாமல் கூட இருக்கலாம். பண்பாடு இல்லாமல் இருக்கக் கூடாது..

arun
25-02-2009, 05:01 PM
அக்னிபுத்திரன் தங்களது கருத்துக்களை அழகாக சொல்லி சில விஷயங்களை தெளிவாக புரிய வைத்துள்ளீர்கள் சூப்பர் :icon_b: