PDA

View Full Version : அசூஸ் டச் ஸ்கிரீன் கம்ப்யூட்டர்



நூர்
18-02-2009, 05:40 AM
அசூஸ் டச் ஸ்கிரீன் கம்ப்யூட்டர்
பிப்ரவரி 16,2009

15 அங்குல டச் ஸ்கிரீன் திரையுடன் கூடிய மானிட்டருடன் அசூஸ் நிறுவனத்தின் Asus Eee Top ET1602 கம்ப்யூட்டர் விற்பனைக்கு விரைவில் அறிமுகப்படுத்த இருக்கிறது. இதில் Intel Atom N270 ப்ராசசர் மையமாக இயங்குகிறது. முதன் முதலாக கம்ப்யூட்டர் பயன்படுத்துபவரை முன்னிறுத்தி இந்த கம்ப்யூட்டரை விற்பனைக்கு அறிமுகப்படுத்தி உள்ளதாக அசூஸ் அறிவித்துள்ளது. ஆனால் விலையோ ரூ. 44,000 ஆக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது. HP TouchSmart PC, Sony VAIO JS190J, மற்றும் Lenovo IdeaCentre A600 ஆகிய கம்ப்யூட்டர்களுக்குப் போட்டியாக இந்த கம்ப்யூட்டர் மார்க்கட்டில் வலம் வரலாம்.

இதில் 1 ஜிபி டி.டி.ஆர் மெமரி சிப் மற்றும் 150 ஜிபி சடா ஹார்ட் டிஸ்க் இணைக்கப்பட்டுள்ளது. மற்றவற்றில் இல்லாத ஆன் போர்டு கிராபிக்ஸ் வசதி இதில் தரப்பட்டுள்ளது. 1.3 மெகா பிக்ஸெல் கேமரா, ஜிகாபிட் ஈதர்நெட், இரண்டு யு.எஸ்.பி. போர்ட், மூன்று ஆடியோ போர்ட், 5.1 சேனல் கனெக்ஷன் மற்றும் வை–பி இணைப்பு வசதிகள் தரப்பட்டுள்ளன.