PDA

View Full Version : வேர்ட் ஸ்டேட்டஸ் பார்



நூர்
18-02-2009, 05:15 AM
வேர்ட் ஸ்டேட்டஸ் பார்
வேர்ட் தொகுப்பில் பணியாற்றுபவர்கள் டாகுமெண்ட்டின் கீழாக வேர்ட் ஸ்டேட்டஸ் பார் ஒன்றைக் காணலாம். இதில் தான் பக்க எண், மொத்த பக்கங்களின் எண்ணிக்கை, கர்சர் எங்கு உள்ளது போன்ற பல தகவல்களைக் காணலாம். இந்த தகவல்கள் பலருக்குப் பயன்படுவதால் பலர் இந்த தகவல்களின் அடிப்படையிலேயே டாகுமெண்ட்டை நிர்வாகம் செய்வார்கள். ஆனால் ஒரு சில வாசகர்கள் இந்த ஸ்டேட்டஸ் பார் தங்களின் கம்ப்யூட்டரில் வரவில்லை என்று கேள்விகள் எழுப்பி கடிதங்களை அனுப்பி உள்ளனர். பலர் அது எப்படி என்னுடைய கம்ப்யூட்டரில் மட்டும் காணோம்? காணோம் என்றால் அது எங்கு சென்று மறைந்து நிற்கிறது? அதனை எப்படி டாகுமெண்ட்டின் கீழாகப் பெறுவது? என்றும் கேட்டுள்ளனர். அவர்களுக்கான குறிப்பு இங்கு தரப்படுகிறது. ஸ்டேட்டஸ் பாரினை எளிதாக அனைவரும் பெறலாம். முதலில் ஆப்ஷன்ஸ் விண்டோவிற்குச் செல்லுங்கள்.
இதற்கு டூல்ஸ் (Tools) மெனு சென்று அங்கு Options பிரிவில் கிளிக் செய்திடுங்கள். அங்கு உள்ள View டேப்பில் மறுபடியும் கிளிக் செய்திடவும். இந்த விண்டோவில் கிடைக்கும் நான்கு பிரிவுகளில் முதலாவதாக உள்ள Show என்னும் பிரிவினைக் காணவும். இதன் எதிரே உள்ள சிறிய கட்டம் காலியாக இருந்தால் அதில் மவுஸ் கர்சரைக் கிளிக் செய்து ஒரு சிறிய டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும். பின்னர் வரிசையாக ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி உங்கள் வேர்ட் டாகுமெண்ட்டின் கீழாக ஸ்டேட்டஸ் பார் கிடைக்கும். அதில் நீங்கள் விரும்பும் தகவல்களும் காட்டப்படும்.
நன்றி.தினமலர்.